Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அபூர்வ ராமாயணம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
1.)உண்மையான கவிதார்க்கிக சிங்கம் யார் ?
2.)28 வியாசர்களா அல்லது ஸ்வாமி நம்மாழ்வாரா ?
3.)ஸ்வாமி மணவாள மாமுனிகளை வால்மீகிபகவானுடன் ஒப்பிடலாமா ?
4.)மாணிக்கவாசகருக்கு ரோல்மாடல் யார்?
5.)திருஞானசம்பந்தர் செய்த தோஷங்கள் யாவை ?
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஸ்வாமி மணவாள மாமுனிகளின் மீது ஸ்ரீமத் ராமாயணத்தின் 24000 ஸ்லோகங்களை ஏற்றிப் பாராட்டி
புதுவிதமாக எழுதலாம்.
பெரிய ஜீயரையே சக்கரவர்த்தி திருமகனாக வைத்தும் எழுதலாம். அல்லது ஸ்வாமி நம்மாழ்வாரை
ஸ்ரீராமராக வைத்து பெரியஜீயரை வால்மீகி பகவானாக்கியும் பேசலாம்.
இரண்டாவது பட்சத்தை அடிப்படையாக வைத்து இக்கட்டுரையை எழுதுகிறேன். இதனை மிகைப்படுத்தல்
என்று நினைப்போர் உள்நோக்கம்-கொண்டோர் என்னலாம்.

ஹஸிதம் பாஷிதம் சைவ கதிர் யா யஶ்ச சேஷ்டிதம் |


தத்ஸர்வம் தர்மவீர்யேண யதாவத் ஸம்பர் பஶ்யதி || -பாலகாண்டம்-3-4

இதன் பொருள் யாதெனில் “ஸ்ரீராமர் உரையாடியதும், சிரித்ததும், நடந்ததும் என்று அனைத்து


நிகழ்ச்சிகளும் வால்மீகி பகவானுக்கு துல்லியமாக படம் பார்ப்பது போலத் தெரிந்தது” என்பது தான்.
அதேபோல ஸ்வாமி நம்மாழ்வார் குருகூரில் திருப்புளிய மரத்தில் அமர்ந்திருக்கிறார் . அவர் திருவாய்மொழி
அருளிச்செய்கையில், அவருக்கு ஏற்பட்ட எண்ண ஓட்டங்களை உள்ளபடி அறிந்தார் பெரியஜீயர் என்பதே
இந்த ஸ்லோகத்தின் பொருள். இது அடியேனது வாதம்.

சரி ! இதுவரை நடந்த 28 சதுர்யுகங்களில் , 28 வேதவியாசர்கள் ஆளுக்கொருவராக அந்தந்த


கலியுகங்களில் ப்ரஹ்மசூத்ரங்கள் அருளியிருக்கிறார்கள். ஸ்வாமி நம்மாழ்வாரும் அதே
ப்ரஹ்மசூத்திரத்தினை தற்பொழுது நடக்குல் கலியுகத்தில் தமிழில் செய்தார். ஆயினும் 28 வியாசர்கள்
பார்க்காதவற்றை, சொல்லாதவற்றை (100 Different Angles and Perspectives) 100 விதமான
கோணங்களில்-நோக்கங்களில் நேரே மாமுனிகள் கண்டு எழுதியதே “திருவாய்மொழி நூற்றந்தாதி” ஆகும்.
உதாரணமாக 5 பாசுரங்களை இங்கே விளக்குகிறேன்.
1.)
வளமிக்க மால்பெருமை மன்னுயிரின் தன்மை என்னும் பாடலில் “நீங்கநினை மாறன்” என்று ஆழ்வாரின்
நைச்யானுசந்தானம் என்னும் நிலையினை படம்பிடிக்கிறார் பெரியஜீயர்.
இது 28 வியாசர்களும் எழுதாத கோணம். இதுவே “ஹஸிதம் பாஷிதம்”

2.)
அஞ்சிறைய புட்கள் தமை ஆழியானுக்கு என்னும் பாடலில் “மாறன் இங்கே நாயகனைத் தேடி” என்றபடி
ஆணான ஆழ்வார் பெருமாள் மீது மாலுற்று தலைவியாக ஆன நிலையினை படம் பிடிக்கிறார் பெரியஜீயர்.
இது 28 வியாசர்களுக்கும் ஏற்படாத நிலை. இதுவே “ஹஸிதம் பாஷிதம்”

3.)
”கையாரும் சக்கரத்தோன் காதல் இன்றிக்கே இருக்க” –“பொய்யாகப் பேசும் புறனுரைக்கு” என்றபடி
ஆழ்வார் தமக்கு எம்பெருமானிடம் நித்யமுக்தர்கள் அளவிற்கு மெய்யான காதல் இல்லை என்றும் தான் ஒரு
பொய்யன் என்றும் பாடுகிறார். இது 28 வியாசர்களும் ஒத்துக் கொள்ளாதது. இதனை படம் பிடிக்கிறார்
பெரியஜீயர். இதுவே “ஹஸிதம் பாஷிதம்”.
இதையே “ந தர்மநிஷ்டோஸ்மி ந ச ஆத்மவேதி, ந பக்திமான் த்வத் சரணாரவந்தே” என்றார் ஸ்வாமி
ஆளவந்தார். இதையே “நாடகத்தார் உன் அடியார் போல நடித்து” என்று பின்னாளில் ரோல்மாடலாக ஆழ்வார்
வழியில் பாடினார் மாணிக்கவாசகர்.
4.)
“மையார்கண் மாமார்பில் மன்னும் திருமாலை” என்னும் பாடலில் “மெய்யான காதலுடன் கூப்பிட்டுக்
கண்டுகந்த மாறன்” என்று ஆழ்வாருக்கு பக்தி மெய்யாக -அதாவது நித்யமுக்தர்கள் அளவிற்கு
பரிணமித்ததை கண்டு வியக்கிறார் பெரியஜீயர். இது 28 வியாசர்களும் ஒத்துக் கொள்ளாதது. இதனைப்
படம் பிடிக்கிறார் பெரியஜீயர். இதுவே “ஹஸிதம் பாஷிதம்”
5.)
”உயர்வே பரன்படியை உள்ளதெல்லாம் தான் கண்டு” என்ற பாடலில் “மனனக மலமற மலர்மிசை எழுதரும்
மனனுணர்வு அளவு இலன்” என்ற இடம் வரும். ஜீவன்-பரமனுக்கு இருக்கும் வேறுபாட்டினை விளக்கும்
இடமிது.
ஜீவாத்மாவும் அஷ்டாங்கயோகத்தால் ஸாக்ஷாத்கரிக்கலாம். பரமனான ஸ்ரீமந் நாராயணனையும்
ஸாக்ஷாத்கரிக்கலாம். ஜீவனை முழுமையாகவும் தான் விரும்பும் சமயத்தில் எல்லாம் ஸாக்ஷாத்கரிக்கலாம் .
ஆயினும் பரமனை அவர் விரும்பும் சமயத்தில் மட்டுமே, அதுவும் ஏதோ ஒரு அம்சம் மட்டுமே ஸாக்ஷாத்காரம்
ஆகும் என்பது 28 வியாசர்கள் தரும் நேரடிப் பொருள்.
இப்படி ஆயிரம் வேறுபாடு சொன்னாலும் ஒரு பெருங்குறை நேரிடும். திருஞானசம்பந்தர் பரமசிவனையும்
ஸ்ரீராமரையும் ஒப்பிடுகிறார். “செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடு

சேதுபந் தனஞ்செய்து” என்னும் தேவாரப்பாடலில்(2675) ராவணனை ஒரே அமுக்காக அநாயாசமாக


அமுக்கியது சிவபெருமான் தான். ஆனால் ஸ்ரீராமரோ வனத்திலே அலைந்து, குரங்களை உதவியாகக்
கொண்டு, சமுத்திரத்திலே அணைகட்டி பலநாள்கள் போரிட்டு” நாட்டில் பிறந்து படாதனபட்டு”
ஜெயித்ததாக பரிஹசிக்கிறார்.

இங்கே ஒன்றினை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதாவது 28 வியாசர்களும் ஜீவன்-பரமன்


வேறுபாடுகளை சொன்னதில் ஒரு பெரிய குறை உண்டு. திருஞானசம்பந்தர் கூறியதிலும் ஒரு குறை
உண்டு. இதை தர்கத்தில் அதிவ்யாப்தி என்பர். அதாவது ஒரு பசுமாட்டிற்கு லக்ஷணம் சொல்ல வேண்டும்.
அந்த புலவன் தனது வீட்டில் காணும் வெள்ளை மாட்டின் மீது கொண்ட அபிமானத்தால் –“பசு வெள்ளை
நிறமுள்ளது” என்று சொன்னால் என்னாகும் ? வெள்ளைப்புலியும் உண்டு, வெள்ளை நிறத்தில் நாய்-
குதிரை-பூனைகளும் உண்டு. எனவே ஒரு லக்ஷணமானது தான் சொல்லவந்த பொருளை மட்டுமே
வியாபிக்காமல் மற்றவற்றையும் வியாபித்தால் அது அதிவியாப்தி எனும் தோஷம் ஆகும்.

28 வியாசர்களும் ஜீவனையும்-பரமனையும் யோகமுறை கொண்டு ஸாக்ஷாத்கரிக்கலாம் என்று


சொன்னார்கள். அதிலும் ஒரு தோஷமுண்டு.

ஒரு கோஹினூர் ரத்னக்கல் இருக்கிறது என்று வையுங்கள். அதனுடன் ஒரு சாணி உருண்டையை
ஒப்பீடு சொல்லலாம். என்னதான் “பளபளப்பு, விலை, அருமை, நறுமணம், நிறம்” என்று ஆயிரம்
காரணங்கள் சொல்லி வைரக்கல்லே சிறந்தது என்று வாதிட்டாலும், இறுதியாக ஒரு தோஷம் தட்டும்.
“பூ!! இதென்ன ரத்னம் உலகில் இல்லாத ரத்னம்?” இந்த சாணி உருண்டையை பார்த்த அதேகண்ணால்
இந்த ரத்னமும் பார்க்கமுடிகிறதே” என்று ஒருவன் சொல்லிவிடலாம். இதனை தர்கத்தில் “ஏகேந்த்ரிய
க்ஞப்ய விஷயம்” என்பர்.

அப்படியன்றி யோகத்தினாலும் பரமனை அறியமுடியாது என்றபடி –“மனனுணர்வு அளவிலன்” என்று


லக்ஷணம் சொன்னார் ஆழ்வார்.
அடுத்ததாக திருஞானசம்பந்தர் ராவணனை அநாயாசமாக அமுக்கியது சிவபெருமான் தான் என்றார்.
அப்படியானால் வாலியும், கார்த்த்வீர்யனும் கூடத்தான் அதே ராவணனை அநாயாசமாக அமுக்கினார்கள்.
எனவே பரமசிவனாரின் வீர்யம் வாலி மற்றும் கார்தத ் வீர்யனுடன் சமம் என்றாகிப் போகும்.
சிவனுக்கு ஒத்தார்களும் இல்லை மிக்கார்களும் இல்லை என்று ஏற்கனவே சம்பந்தர் பாடிய பாசுரங்களுக்கும்
இது விரோதிக்கும். இது விருத்தம் எனும் அடுத்த தோஷம். எனவே தோஷங்களுடன் இப்படி எழுதக்கூடாது.

தான் பாடிய “ஒத்தார் மிக்காரை இலையான மாமாயன்”, ”தன்னொர்பப் ார் இல்லப்பன்” என்னும்
லக்ஷணங்களுக்கும் விரோதிக்காமல் ஆழ்வார் தர்க்கத்திலே இதுவரை 28 வியாசர்களும் தராத புதியதொரு
லக்ஷணம் அருளினார். [மனனுணர்வு அளவிலன் பொறியுணர்வு அவையிலன்]
இதைத்தான் பெரியஜீயரும் உள்ளபடியறிந்து –“உயர்வே பரன்படியை உள்ளதெல்லாம் தான் கண்டு” என்று
படம்பிடிக்கிறார். இதுவே “ஹஸிதம் பாஷிதம்”

இப்படி 100 “ஹஸிதம் பாஷிதம்” தர்க்கங்கள் சொல்லலாம்.


-தொடரும்
ஸ்ரீஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

You might also like