Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

குயில் பாட்டு

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட


வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.
பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு
முன்னோடியாகத் திகழ்ந்தார். இவர் குயில் பாட்டு,கண்ணன் பாட்டு ,விடுதலை பாடல்கள் என பல பாடல்களை
இயற்றியுள்ளார். குயில் பாட்டு பாரதியின் கற்பனை ஆற்றலையும் தத்துவ மேன்மையையும்
உணர்த்தும் சிறப்பு வாய்ந்த கவிதை ஆகும்.அனைத்து உயிர்களின் இடத்திலும் இருக்கும்
ஆன்மாவின் பொதுத்தன்மையின் சிறப்பை உலகிற்கு உணர்த்தவே இக்கவிதையை அவர்
எழுதினார். ஒரு இனிய காலை பொழுதில் சூரிய கதிர்கள் வீச இருக்கும் அழகிய செந்தமிழ்ப்
புதுவை நகர் ஆகும்.மேற்கே சிறிது தூரத்தில் மாஞ்சோலை ஒன்று அமைந்துள்ளது.
அச்ச்சோலையில் இருக்கும் பறவைகளை சுடுவதற்கு நான்கு திசைகளிலும் இருந்து வேடர்கள்
வருவது வழக்கம்.அன்று வேடர்கள் யாரும் வராத அழகிய காலை பொழுது அது.மோஹினியே
பெண் உருவம் எடுத்து வந்தது போலே அவ்வளவு அழகான குயில் ஒன்று தனது இனிமையான
குரலில் பாடி கொண்டிருந்தது.இதைப் பார்த்தே நமது கவிஞர் குயிலின் அழகிலும் குரலிலும்
உடனே மயங்கி விட்டார்.சட்டென்று ஒரே அமைதி அதுவரை இனிமையாக பாடியே குயில்
திடிரென்று முகம் வாடி சோகமாக பாடியது.இதனைக் கண்டவுடன் நமது கவிஞர் குயிலை நெருங்கி
இவ்வளவு அறிவும் அழகும் இருக்கும் உனக்கு என்ன சோகம் என்று வினவினார். உடனே
குயிலோ வெட்கத்தோடு தன் கதையை கூறியது.என்ன தான் அது குயிலகே சிறிய உருவில்
இருந்தாலும் தேவர்களின் ஆசியால் அறிவும் மனிதர்கள் பேசுவதை புரிந்து கொள்ளும்
ஆற்றலையும் பெற்றேன் என்று கூறியது.பின்னர் குயில் நமது கவிஞரை விரும்புவதாகவும்
கூறியது.தனது காதலை கவிஞர் ஏற்காதே பட்சத்தில் தனது உயிரை விடுவேன் என்று கூறியது.
மீண்டும் நான்கு நாட்கள் கழித்து தன்னை மீண்டும் இதே இடத்தில் சந்திக்குமாறு கூறி குயில்
மறைந்தது.நமது கவிஞருக்கு ஒரு நாளை கழிக்கவே மிகவும் கடினமாக இருந்தது.குயிலை பிரிந்து
அவரால் இருக்கே இயலவில்லை.அவ்வளவு காதல் குயிலின் மீது.நான்கு நாட்கள் கழித்து அங்கே
சென்ற நமது கவிஞருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.குயில் அங்கே கவலையாக கண்ணில்
நீர் வழியே ஒரு ஆன் குரங்கோடு பேசிகொண்டிராதது.இதைக் கண்ட கவிஞருக்கு ஒரே
கோவம்.உடனே தனது வாளை வீசி இருவரையும் கொலை செய்யே நினைத்தார்.ஆனால் குயில்
குரங்கிடம் என்ன பேசுகிறது என்பதை கேட்க நினைத்து அருகில் சென்றார். அங்கே குயில்
குரங்கை மனிதனோடு ஒப்பிட்டு குரங்கின் அழகையும் ஆற்றலையும் வர்ணித்து
கொண்டிருந்தது.மேலும் குயில் குரங்கை காதலிப்பதாகவும் கூரியது.இதை கேட்டு மனமுடைந்து
சினமடைந்தே கவிஞர் தனது வாளை குரங்கை நோக்கி வீசினர்.குரங்கு எப்டியோ
தப்பித்துவிட்டது.இதை பார்த்த குயிலும் பறந்து சென்று விட்டது.இது கனவா நினைவா என்று
அறியாமல் குழப்பத்தில் கவிஞர் தடுமாறி அச்ச்சோலை முழுவதும் தன்னை ஏமாற்றிய குயிலை
தேடி அலைந்தார்.ஆனால் அவரால் குயிலை கண்டுபிடிக்க இயலவில்லை.

You might also like