Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

பரம்பொருள் நீயானாய்..எனக்குள்ளே உயிரானாய்..

என் விழி ஒளியானாய் நமச்சிவாய..

ஒவ்வொரு தினமும் நான்.. ஒவ்வொரு கனமும் நான்..

உனைப்பாடி மகிழ்வேன் நான்...நம்ச்சிவாய

புவியெனும் மேடையிலே தினம் ஒரு வேடம் தந்து

எனை நீ வாழ வைத்தாய், தேவா.. எனை நீ வாழ வைத்தாய்..

உன் வழி நான் நடந்தேன்..உன் நிழல் போல் கிடந்தேன்..

உன் முகம் காண்பதற்கே..இறைவா.. உன் முகம் காண்பதற்கே..

கருவினில் நான் அறிந்தேன்.. கவலைகள் நான் மறந்தேன்..

கண்டதும் நான் நிறைந்தேன்...உன்னை.. கண்டதும் நான் நிறைந்தேன்

நான் எனும் சொல்லை..நான் சொன்னதில்லை

நீயின்றி எதுவும் உருப்பெற்றதில்லை..

அணுவிலும் நீயே இருப்பாய்..... அன்பெனும் வேதம் சொல்வாய்..

நாவினில் வார்த்தை தந்தாய்.. நாசியில் உயிரைத் தந்தாய்..

வாழ்வையும் நீயே தந்தாய்..தேவா.. வாழ்வையும் நீயே தந்தாய்..

விழிகளில் ஒளியைத் தந்தாய்... எனக்கான வழியைத் தந்தாய்..

உணர்வையும் நீயே தந்தாய் தேவா.... உணர்வையும் நீயே தந்தாய்..

வாழ்க்கையில் அருளும் தந்தாய்.. வாழ்விலும் இன்பம் தந்தாய்..

எனக்கான தேவை என்ன நீ செய்ய புரிந்து கொண்டேன்..

உனக்கென என்ன செய்தேன்....இறைவா...உனக்கென என்ன செய்தேன்???


திருநீ ர் என்னை காக்கும் வடிவேலவா

வடிவேல் எந்தன் துணையே வேல் முருகா.

வடிவேல் என்னை காக்கும் வடிவேலவா

உந்தன் நாமம் என்னை நாடும் வேல் முருகா

ஓம் முருகா ஓம் முருகா சரவண பவ குக வடிவேலவா.

சிவபெருமான் உந்தன் தந்தை அல்லவோ

பார்வதி அம்மா உன் தாய் அல்லவோ

ஸ்ரீ கணேஷ உந்தன் அண்ணன் அல்லவோ

இங்கு பாடும் இந்த உயிர் உந்தன் பிள்ளை அல்லவோ.

ஓம் முருகா ஓம் முருகா சரவண பவ குக வடிவேலவா.

கண்கள் உன்னை நாடும் வடிவேலவா

எந்தன் கண்ண ீர் உந்தன் அபிஷேகம் வேல் முருகா.

ஓம் முருகா ஓம் முருகா சரவண பவ குக வடிவேலவா.

You might also like