Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

கிருபன் ராஜ் முருகா (S6)

இவனா தமிழன்? கவிதை பகுப்பாய்வு.

மலேசிய மரபுக்கவிதைகள் எழுதும் முன்னோடிகளில் மிகவும் முக்கியமான இடம்


பெற்றுள்ளவர்களுள் ஒருவர் கவிஞர் செ. சீனி நைனா முகம்மது ஆவார். கவிதைக்கான
இலக்கணத்தை முழுமையாகக் கற்றுத் தேர்ந்து அதை பலருக்கும் கற்றுக் கொடுத்து கவின்
கலை மலேசிய மண்ணில் காத்தவர் இவர். இவரால் இயற்றப்பட்ட மரபுக்கவிதைகள்
ஏராலம். அதில் ‘தேன்கூடு’ எனும் தொகுப்பில் இவனா தமிழன்? எனும் தலைப்பில் இவர்
இயற்றிய கவிதை மிகவும் சிறப்பான ஒரு கவிதையாகும். இக்கவிதையின்
கருப்பொருளானது தமிழால் வாழ்ந்து, வளர்ந்து, உயர்ந்தவர்களானவர் அத்தமிழுக்கு
இழைக்கும் இன்னல்களை தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது. முதல் கண்ணியில்
கவிஞர் தமிழனைத் தமிழினத்திற்கே இழுக்கு என்றும் அவனது கோழைத்தனத்தை காட்டும்
வகையில் ‘இங்கு யானைக்கு பூனை பிறக்காது’ என்று உவமைப்படுத்துகிறார். இரண்டாம்
கண்ணியில் தமிழன் தமிழால் வளர்ந்து தமிழ் எதிரிகளோடு இணைந்து தமிழைப்
புறக்கணிக்கிறான் என்பதனைக் குறிப்பிடுகிறார். மூன்றாம் கண்ணியில் கவிஞர் தமிழனை
மொழி கலப்பிற்கு ஆதரவு கொடுக்கும் மொழி துரோகி என்று சாடுகிறார். நான்காம்
கண்ணியில் தமிழனை கற்றோர் சான்றோர் கூறும் விடயங்களை ஏர்க்க மறுக்கும் குணம்
படைத்தவன் என்று குறிப்பிடுகிறார்.

அடுத்தபடியாக, இக்கவிதையின்வழி கவிஞர் மக்களுக்கு உணர்த்தும்


நன்னெறிப்பண்பானது தன்னலம் கொண்டு செயல்படக்கூடாது என்பதாகும். இதற்கு
சான்றாக கவிஞர் ‘தமிழ்ப்பகை கூடி தன்னலம் நாடி தமிழ்மர பெல்லாம் மீறுகிறான்’
தன்னலம் நாடி தமிழன் தமிழுக்கு இழைக்கும் இன்னலைக் குறிப்பிடுகிறார். தன்னலம்
கருதாமை என்பது ஒவ்வொரு மனிதரிடமும் இருக்க வேண்டிய அவசியமான குணமாகும்
; இப்பண்பே மனிதர்களிடம் இருக்கும் மனிதநேயத்தைக் குறிக்கும் ஒரு முதன்மையான
பண்பாக கருதப்படுகிறது. இதனை தொடர்ந்து இக்கவிதையின் வழி கவிஞர் மக்களுக்கு
உணர்த்தவரும் நன்னெறியானது நன்றி மறவாமை என்பதாகும். இதற்குச் சான்றாக கவிஞர்
நன்றி மறந்த தமிழனின் செயல்பாடுகளை காட்டுகின்றார். காட்டாக, ‘தமிழ்நலம் கொன்றே
பிழைப்பவனும் தமிழுக்குத் தீங்கே இழைப்பவனும் அமிதென நஞ்சை அருந்துவர் போலே’
என்று குறிப்பிடுகிறார்.

அடுத்தபடியாக, ‘இவனா தமிழன்?’ எனும் இக்கவிதையானது எளிமையான


மரபுக்கவிதையாக இருந்தாலும் இங்கு கவிஞரால் பல நல்ல கலைச்சொற்கள்
பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். காட்டாக, கவிஞர் களங்கம் – குறைப்பேறு,
கிருபன் ராஜ் முருகா (S6)

கடுமையான மொழி – கடுமொழி, கனிச் சுவை தமிழ் – கனித்தமிழ், படித்தவர் –


தகுந்தவர், காலம் – தவணைகள் என்றே பல அருமையான கலைச்சொற்களைப்
பயன்படுத்தியுள்ளார். கலைச்சொற்களையடுத்து இக்கவிதையானது அனைவரையும் ஈர்க்கும்
வண்ணம் அமைய முக்கிய காரணமாக திகழ்வது இக்கவிதையின் மொழிநடையாகும்.
இக்கவிதையானது முழுமையாக ஒரு மரபுக்கவிதை பாணியைச் சார்ந்ததாகும். ஆகையால்
இங்கு எதுகை, மோனை, சந்தம் ஆகிய கூறுகளின் வெளிப்பாடு மிகவும் தெளிவாகத்
தெரிகிறது. காட்டாக, எதுகை என்று பார்த்தோமானால் வடமொழி, கடுமொழி, தானும்,
தானெனும், இவனுக்கு, தவனைகள் என்ற சொற்களைப் பொருத்தியுள்ளார். மோனை என்று
பார்த்தோமானால் தமிழால், தமிழ்ப்பகை, தமிழ்மரபெல்லாம், தடுத்தால் என்ற சொற்களை
எவ்வித சிக்கலுமின்றி கோர்வையாக நுழைத்துள்ளார். மேலும் சந்தம் என்று பார்க்கையில்
ஒவ்வொரு அடியும் கோர்வையான முறையில் இணைக்கப்பட்டுள்ளது. காட்டாக,
படிப்பதில்லை, எடுப்பதில்லை, நடப்பதில்லை, பிடிப்பதில்லை போன்ற சொற்கள் பரவலாக
பயன்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இக்கவிதையானது மரபுக்கவிதையாக
இருந்தாலும் இதில் கையாளப்பட்டுள்ள சொற்கள் யாவும் எளிமையாக அனைத்து
பாமரர்களுக்கும் புரியும்படியான எளிமையான சொற்களாகும். இதுவே இக்கவிதை
சிறப்புறவும் அனைவராலும் படித்து புரிந்துக்கொள்வதற்கும் துணையாக நிற்கின்றது.

You might also like