Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

அரவிந்தன் கணேசன்

எஸ் 6
நாள் : 23/04/2020
நேரம் : 10.30-11.30 காலை

காவிய நாயகி நாடகத்தில் பொன்னியைக் காவிய நாயகியாக படைப்பதில் ஆசிரியர்


வெற்றிக் கண்டுள்ளார் என்ற கருத்தினை மதிப்பிட்டு எழுதுக.

பொன்னிதான் காவிய நாயகி நாடகத்தின் முதன்மைக் கதைப்பாத்திரம் ஆவாள். கதையின்


நாயகியாக இருக்க பல கூறுகள் வேண்டும். அக்கூறுகளை கதையாசிரியர் பொன்னிக்கு
வழங்கியுள்ளார்.

முதலில் பொன்னியை வீரம் நிரைந்தப் பெண்ணாகக் காட்டியுள்ளார். பொன்னி வீரம்


கொண்ட பெண்ணாவாள். பொன்னி என்ற பெண் புலவர் மன்னனைக் காண வந்தாள். அக்கவிஞர்
வெண்ணிப் பறந்தலையில் குயவர் குலத்தில் பிறந்தவள். பொன்னி தலையில் பூவின்றி, நெற்றியில்
பொட்டின்றி விதவைக்கோலத்தில் கரிகாலனை விரக்தியோடுவாழ்த்தினாள். வெண்பட்டாடையும்
வெள்ளைத் தாமரையும் கலைமகளுக்கு மங்களம் என்பதை உணர்ந்து அந்தக் கலைமகளைப்
போன்றே தானும் காட்சிக்கு எளியவளாக வந்திருப்பதாகக் கூறினாள். “எளிமையைப் பாராட்டாமல்
அமங்கலம் என்று சொல்வது அழகல்ல” என்கிறாள். அவையினரை நோக்கி “தான் வெண்ணிப்
பறந்தலை என்ற இடத்தில் பிறந்ததாகவும், தாயார் தான் பிறந்தவுடன் இறந்து விட்டதாகவும்,
தன்னைத் தந்தையார் தான் வளர்த்தார்” என்றும் கூறினாள். அரசவையில் நுழைந்து மன்னரை
நேருக்கு நேராக எதிர்க்கும் காட்சிப் பொன்னியின் வீரத்தைக் காட்டுகிறது.

இது ஒரு தமிழ் காவியமாகும். எனவே கதையின் முதன்மைக் கதைப்பாத்திரம் தமிழ்ப்


பற்றாளராக இருப்பது சிறப்பாகும். அவ்வாரே பொன்னியையும் ஆசிரியர் காட்டியுள்ளார்.
தந்தையின் உதவியால் தான் தமிழில் சிறந்து விளங்குவதாகக் கூறிய அவள் தன்னுடைய
தகப்பனார் அண்மையில் இறந்து விட்டதாகவும் கூறினாள். தன்னுடைய உண்மைப் பெயர் பொன்னி
என்றும் வெண்ணிக் குயத்தியார் என்பது தனக்குத் தானே இட்டுக் கொண்ட பெயர் என்கிறாள்.
தன்னால் மண்பாண்டங்கள் செய்ய முடியும். அதே மண்ணைக் கொண்டு மனித பொம்மைகளையும்
படைக்க முடியும் என்றாள். “கற்பனை என்பது அவரவர்களின் அறிவிற்கும் ஆர்வத்திற்கும் ஏற்ப
வளர்வது என்றும் தமிழ் மீது ஏற்பட்ட ஆர்வமே தன்னைப் புலவராக்கியது” என்றாள். மன்னனை
நோக்கி, தான் ஒரு கவிதையை எழுதியிருப்பதாகக் கூறி கவிதையைப் பாடுகிறாள். இதன் வாயிலாக
பொன்னி தமிழாளர் என்பது துள்ளியமாகிறது.

பெண்மையே நல்வாழ்வின் மேன்மை. பெண்மை உண்மைக் காதல் கொள்வது


நயன்மையாகும். அவ்வகையில் ஆசிரியர் பொன்னியை ஒழுக்கவாதியாகக் காட்டியுள்ளார். பொன்னி
தான் தங்கியிருக்கும் சிற்றூரின் அழகை இரசித்துக்கொண்டிருக்கிறாள். மாறுவேடத்தில் வந்த
சேரனிடம் தன்னுடைய கவிதைச் சுவடிகளைக் கேட்க, சேரனும், “அவளுடைய கவிதையைச் சேர
மன்னன் பெரிதும் குறை கூறினார்” என்று சொன்னான். அது கேட்ட பொன்னி, “சேர மன்னனைச்
அரவிந்தன் கணேசன்
எஸ் 6
நாள் : 23/04/2020
நேரம் : 10.30-11.30 காலை

சந்திக்க முடியுமா” என்று கேட்க சேரனும், “மன்னருக்குப் பெண்களே பிடிக்காது. மேலும்


அவர்களைச் சந்திக்க விரும்புவதில்லை” என்கிறான். பொன்னியிடம் அவளுடைய கவிதைச்
சுவடிகளோடு தன்னுடைய உள்ளத்தையும் ஒப்படைத்தான். பொன்னியின் மனமும் அவனை
விரும்புகிறது. இருவரும் வெவ்வேறு நாடுகளைச் சார்ந்தவகளாயிற்றே என்று பொன்னி கூற,
சேரனும் முறையாக அவளுடைய தந்தையிடம் பெண் கேட்டு மணம் புரிவதாக வாக்களித்தான்.
பொன்னி சேரன் மீது அளவுகடந்த அன்பைச் செலுத்துகிறாள். பொன்னியின் தந்தைக்கும்
இவர்களது அன்பு தெரிய வருகிறது. முறையாகப் பெண் கேட்டு திருமணம் புரிந்து கொள்வதாகச்
சேர கூற, பொன்னியின் தந்தை பெரிதும் மகிழ்வடைகிறார். உண்மை காதலின் உச்சமாக பொன்னி
சித்தரிக்கப்படுகிறாள்.

ஆசிரியர் பல கோணங்களில் பொன்னியைக் காவிய நாயகியகாக் காட்டுவதில் வெற்றி


அடைந்துள்ளார். அதில், வீரம், தமிழ்ப்பற்று, உண்மை காதல் எனும் வாயிலாக பொன்னிக்
காவியத்தின் நாயகியெனக் கட்டப்பட்டுள்ளது. நன்றி.

You might also like