Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 13

பாஞ்சாலி சபதம்

1. கவிதையை வாசித்து பொருளறிக.


2. கதாபாத்திரங்களை அடையாளம் காண்க.

3. துரியோதனின் சூழ்ச்சியை ஆராய்க.


திருதராட்டிரனோ பதில் சொல்ல முடியாமல் வீற்றிருக்கிறான். துரியோதனன் பதில் பேசுகிறான்.
விதுரனைத் திட்டுகிறான்; பழிக்கிறான். இதனால் விதுரனும் வாய்மூடித் தலைகுனிந்து அமர்கிறான்.
தருமன் தன் நாட்டைப் பணயமாக வைத்து இழக்கிறான். மீண்டும் சகுனி, தருமனைப் பார்த்துத்,
தம்பியர் நால்வரையும் பணயமாக வைத்துச் சூதாடினால், இழந்த அனைத்தையும் பெற்றுவிடலாம் என்று
சொல்கிறான். தன்னுடைய நாட்டினைப் பணயப் பொருளாக வைத்திழந்த தருமனைப் பார்த்துச் சகுனி,
தருமனே! செல்வத்தையும் நாட்டையும் இழந்துவிட்டாய். இனி எப்படிப் பிழைப்பாய். உனது தம்பியர்
நால்வரையும் பணயம் வைத்துச் சூதாடினால் இதுவரை இழந்ததை எல்லாம் மீட்டு விடலாம் என்றான் .
துரியோதனனும் அவ்வாறே சொன்னான். தம்பியர் முகத்தில் கவலை படரத் தொடங்கியது. வீமன்
கடுங்கோபம் கொண்டான். தருமன், தம்பியரைப் பணயப்பொருளாக வைத்து விளையாடத் தொடங்கி
முதலில் நகுலன், சகாதேவனை வைத்து இழக்கிறான். அடுத்த நிலையில் தருமன் மிகுந்த
மனவேதனைப்படுகிறான். சூதாட்டத்தை இத்துடன் நிறுத்திவிடலாம் என நினைக்கிறான்.

அந்நேரத்தில் சகுனி, தருமனைப் பார்த்து, தருமனே! "நகுலனும் சகாதேவனும் வேறொரு


தாய்க்குப் பிறந்தவர்கள். அதனால் அவர்களைச் சூதாடி இழந்துவிட்டாய். வீமனும் அருச்சுனனும்
உன்னைப் போன்று குந்தியின் பிள்ளைகள் என்பதால் அவர்களைப் பணயப் பொருளாக
வைக்கவில்லையா? என்று கேட்கிறான். அதனைக் கேட்ட தருமனுக்குக் கோபம் வந்தது. “சூதாட்டத்தில்
தான் இழந்துள்ளோம்; ஒற்றுமையை நாங்கள் இழந்துவிட வில்லை" என்று சொல்லி இருவரையும் பணயப்
பொருளாக வைத்து விளையாடச் சம்மதித்து இழக்கிறான்.

அவன் தன்னையும் இழந்த பின்னர், பாஞ்சாலியையும் பணயமாக வைத்து இழந்து விடுகிறான்.


தனது ஆசையை நிறைவேற்றிய மாமன் சகுனியைக் கட்டிப் பிடித்து மகிழ்ச்சியால் துரியோதனன்
கூத்தாடினான்

4. விதுரனின் அறிவுரையை விவாதித்திடுக.


மன்னன் திருதராட்டினனுக்குத் தம்பியாக இருந்தாலும், அமைச்சர் பொறுப்பு ஏற்றவன். நீதிநெறி
கற்றவன். நீதியை நிலை நாட்டுவதில் உறவு முறைகளைப் பார்க்காதவன். அதனாலேயே துரியோதனனால்
வெறுக்கப்பட்டவன்.

சூதாட்ட மன்றத்தில் தருமனிடம் உள்ள செல்வம் அனைத்தையும் சகுனி வென்று விடுகிறான்.


அதன்பிறகு நாட்டைப் பணயமாக வைத்து விளையாடலாம் எனச் சகுனி சொல்கிறான். இதனைக் கேட்ட
் ியடைந்து, 'இதனால் கெளரவர் குலம் அழியும்' என்று குறிப்பிட்டான். சூதாட்டம் இனித்
விதுரன் அதிர்சச
தேவையில்லை, நிறுத்த வேண்டும் என்றான். தன்னுடைய அண்ணன் திருதராட்டிரனுக்கும்
தெரிவித்தான். இதனைக் கேட்ட துரியோதனன், கண்களில் தீபப ் ொறி பறக்க மிகவும் கோபம் கொண்டு
விதுரனைத் திட்டுகிறான்.

'எங்களிடத்தில் உள்ள செல்வத்தை அனுபவித்துக் கொண்டு; பாண்டவருக்காகப் பரிந்து


பேசுகிறாயே? உன்னைச் சபையில் வைத்ததே பெருங்குற்றம்' என்றான். அன்பில்லாத பெண்ணுக்கு
எவ்வளவுதான் நன்மை செய்தாலும் வாய்ப்பு வரும் பொழுது கணவனை விட்டு அகன்று விடுவாள் .
அதுபோல நீ இருக்கிறாயே என்று துரியோதனன் பழித்தான்.

அதற்கு விதுரன், 'உன்னை நல்வழிப்படுத்த முயன்றேன். உன் அவையில் என்னைப் போன்றவர்கள்


இருத்தல் கூடாது. குலம் கெட்ட நீசர்கள், மூடர்கள், பித்தர் போன்றோர் மட்டுமே இருத்தல் முடியும். உன்
சாவைத் தடுத்திடவே உரைத்தேன். இனி எவ்விதப் பயனும் இல்லை' எனத் தன் தலைகவிழ்ந்தபடி
இருந்தான்.

5. பாஞ்சாலியின் கூற்றினை மதிப்பிடுக.


அடிமையாக்கப்பட்ட பாஞ்சாலியைத் துச்சாதனன் பலர் இருக்கும் அவையில் இழுத்துவந்து ஆடையைக்
களைய முற்படுகிறான். அந்நேரத்தில், அனைவராலும் கைவிடப்பட்ட, காப்பாற்றப்படாத சூழ்நிலையில்
பாஞ்சாலி கண்ணனை இறைஞ்சி வேண்டுகிறாள். கண்ணன் அருள் புரிந்தான்.அந்நேரத்தில்
துச்சாதனன், பாஞ்சாலியின் துகிலை உரிய உரிய அவளுக்குத் துகில் மலைபோலக் குவிந்து கொண்டே
இருந்தது. அவனால் முடியாமல் மயங்கிக் கீழே விழுந்தான்

இறுதியில் பாஞ்சாலி சபதம் செய்தாள்.

“ஆம் பராசக்தி மீது ஆணையிடுகின்றேன். பாவி துச்சாதனனை என் கணவன் வீமன் கொன்ற பின்னர்
அவன் உடம்பிலிருந்து ஊறியெழும் ரத்தத்தையும் பாழ்பட்டுப் போன துரியோதனன் உடம்பு ரத்தத்தையும்
கலந்து என் கூந்தலில் பூசுவேன். அதன் பின்னரே என் கூந்தலில் நறுநெய் பூசி என் கூந்தலை முடிப்பேன்.
அதுவரையில் என் கூந்தலை முடிக்கமாட்டேன்”,

என்பது பாஞ்சாலியின் சபதம்.


25/03/2020 (காலை 8.00 முதல் காலை10.00 வரை)
துரியோதனனின் செயல்பாடுகளைப் பற்றிய உமது கருத்துகளை எழுதுக.

பாண்டவர்களின் செல்வ வளத்தைக் கண்ட துரியோதனன் அவர்கள் மீது பொறாமைக் கொண்டான் .


அவர்களின் செல்வத்தைப் பறிக்கவும் அழிக்கவும் சதி செய்தான். அதற்காகச் சூதாட்டத்தைப்
பயன்படுத்துகிறான். துரியோதனன், சகுனியை அனுப்பி பாண்டவர்களை அழைத்து வரச்
செய்கின்றான். சகுனியின் அழைப்பை தருமன் மறுத்தாலும், சகுனியின் சூழ்ச்சியால் பின் தருமன்
சூதாட ஒப்புக் கொள்கின்றார். தருமன் அனைத்து செல்வங்களையும் இழக்கிறான், நாட்டையும்
இழக்கிறான், தன் உடன் பிறப்புகளையும் இழக்கிறான். சகுனியின் சூழ்ச்சியாலும் துரியோதனின்
சூழ்ச்சியாலும் பாண்டவர்களின் சொல்வம் பறிக்கபடுகின்றது. துரியோதனன் மகிழ்ச்சி அடைகிறான்.
தன் மாமன் சகுனியைப் போற்றுகிறான்.
இந்நிலையில் துரியோதனன் பாஞ்சாலியை மன்றத்துக்கு அழைத்துவரச் சொல்லித்
தேர்ப்பாகனை அனுப்புகிறான். அவள் வர மறுக்கிறாள். பின்பு, துச்சாதனனை அனுப்பி இழுத்து வரும்படி
சொன்னான் துரியோதனன். துச்சாதனன் சென்று பாஞ்சாலியை அழைத்தான். கடும் கோபத்துடன்
பேசினாள். உடனே கூந்தலைப் பற்றி இழுத்து வந்தான். சபையில் நின்றிருந்த ஐவரையும் பார்தது
் க்
கடுமையாகப் பேசினாள் பாஞ்சாலி. அந்நேரத்தில், பாஞ்சாலியின் சேலையைப் பற்றி இழுக்குமாறு
கர்ணன் துச்சாதனனுக்குச் சொல்ல, துச்சாதனன் பாஞ்சாலியின் ஆடையைக் களைந்தான். பின்
கண்ணனின் உதவியால் திரௌபதி காப்பாற்றப்படுகிறாள்.

துரியோதனின் செயல்கள் முற்றிலும் தவறானவை. முதலில், ஒருவருடைய வளர்ச்சியைக்


கண்டு பொறாமை கொள்ள கூடாது. மாறாக, அந்நிலையை அடைய சுயமாக முயற்சி செய்ய வேண்டும்.
இச்சூழலில், துரியோதனன் தன் செல்வத்தையும் புகழையும் பெருக்குவதற்காக எந்தவொரு
முயற்றியையும் எடுக்கவில்லை. ஆனால், பாண்டவர்களின் செல்வத்தை அழிப்பதற்காகத் தன் மாமன்
சகுனியுடன் இணைது செயல்படுகிறான்.

அடுத்ததாகத், தருமன் சூதாட்டத்திற்கு வர மறுப்பான் என்றறிந்த துரியோதனன், சூழ்ச்சி


செய்வதில் அரசனான சகுனியை அனுப்புகின்றான். பின், சூதாட்டத்தின் போது ஒவ்வொரு
செல்வமாகத் தருமன் இழக்கும் போது, சகுனி சூழ்ச்சி செய்து இருக்கும் செல்வத்தைப்
பகடைக்காய்யக வைக்க சொல்கிறான். இப்படிப்பட செயல் தவறானதாகும். ஒருவர் தன் நிலையில்
இல்லாத போது அவரைக் குழப்பி ஒரு விளையாட்டில் ஈடுபட வைப்பது சரியல்ல.

அதனைத் தொடர்ந்து, பாண்டவர்கள் அனைத்தையும் இழக்கின்றனர். துரியோதனன் மகிழ்ச்சி


அடைகிறான். கொண்டாடுகிறான். நாம் என்றும் ஒரு மனிதனின் வீழச ் ியைக் கண்டு சந்தோஷம்
கொள்ளக் கூடாது. அது சரியான நடவடிக்கை அல்ல. மேலும், துரியோதனன், தொரௌபதியை
அவமானம் செய்யும் வகையில் அவளிக் கூந்தலைப் பிடித்து இழுத்து வரும் மாறு கட்டளை இடுவான்.
ஒரு பெண்ணை அவமானம் செய்வது இழிவான செயலாகும். சீதையைக் கடத்திய ராவணனுக்கும்
திரௌபதியின் மானம் இழக்கச் செய்த துரியோதன்னுக்கும் இறப்பு ஒரு தண்டனையாக அமைந்தது.

பாஞ்சாலி சபதத்தில் துரியோதனின் செயல்கள் யாவும் தீயவையாகும். அவன் பிறரை


ஏமாற்றியும், கொடுமை செய்தும், அவமானம் செய்தும் மகிழ்ச்சி அடைந்தான். பிறர் மீதும், அனைத்து
உயிரினங்களின் மீதும் அன்பு செலுத்துவதான் சிறந்த மனிதனுக்கு இலக்கணம் . அவ்வகையில்
துரியோதனன் மனித இலக்கணத்தை மீறியுள்ளான். அவனின் செயல்கள்யாவும் மிருகத்திற்குக் கூட
ஒப்பாகக் கூற முடியாது.

26.03.2020 (காலை 10.30 முதல் 11.30 காலை வரை)


பாஞ்சாலியின் நிலையைப் பற்றிய கருத்துகள்.
திரௌபதி பக்திக்கும் கற்பு நெறிக்கும் உதாரணமாக விளங்கியவர். அவர் ஓர் அரசியும் கூட. ஆனால்,
திரௌபதியின் வாழ்க்கை துயரங்களும் துன்பங்களும் நிறைந்தது. அவற்றில் மிகவும் கொடுமையானது:
துரியோதனனின் ஆணைப்படி குரு வம்சத்தினரின் அரசவைக்கு துச்சாதனனால் இழுத்து
வரப்பட்டதாகும். எல்லோர் எதிரிலும் அவளது புடவையை இழுத்து அவளை நிர்வாணமாக்க துச்சாதனன்
முயற்சி செய்தான். தன்னைக் காப்பாற்ற தன்னால் முடியாது என்பதை அறிந்த உடன், அவள் தனது இரு
கைகளையும் உயர்தத ் ி கிருஷ்ணரிடம் கதறினாள்.

எந்த தவறும் செய்யாத திரௌபதி, தர்மனின் சூதாட்ட ஏமாற்றத்துற்குப் பலியானாள்.


இருப்பினும், கிருஷ்ன பகவானின் அருளால், அவளின் காப்பாற்றப்பட்டால். இருந்தாலும், அவளின் மனம்
ஆறுதல் அடையவில்லை. பாண்டவர்களை ஏமாற்றி செல்வ வளங்களையும், தன்னை அவமானம் செய்த
துரியோதன் மீது தன் கணவன்கள் போர் தொடுப்பார்கள் என சபதம் செய்தால். அதுதான் பாஞ்சாலி
சபதம்.

“ஆம் பராசக்தி மீது ஆணையிடுகின்றேன். பாவி துச்சாதனனை என் கணவன் வீமன் கொன்ற பின்னர்
அவன் உடம்பிலிருந்து ஊறியெழும் ரத்தத்தையும் பாழ்பட்டுப் போன துரியோதனன் உடம்பு ரத்தத்தையும்
கலந்து என் கூந்தலில் பூசுவேன். அதன் பின்னரே என் கூந்தலில் நறுநெய் பூசி என் கூந்தலை முடிப்பேன்.
அதுவரையில் என் கூந்தலை முடிக்கமாட்டேன்”,

என்பது பாஞ்சாலியின்சபதமாகும்.

திரௌபதியின் நிலை கவலையை உண்டாக்கும் வண்ணம் அமைகிறது. ஒரு பெண்னுக்கு


ஏற்படக்கூடாத நிலை திரௌபதிக்கு ஏற்பட்டது. மிகப் பெரிய அவையில் அவள் இழிவுப்படுத்தப்பட்டாள்.
பல அறிஞர்கள், மன்னர்கள், அமைச்சர்கள், காவலாளிகளுக்கு முன் அவள் இழிவுக்குள்ளானாள்.
பலரிடம் அழுது கெஞ்சிய போது யாரும் அவளுக்கு உதவ முன் வரவில்லை. இந்நிலை எவருக்கும்
ஏற்படக்கூடாது. ஐந்து கணவர்களாளும் அவளுக்கு உதவ முடியாத நிலை.
01/04/2020 – 8.00 காலை முதல் 10.00 காலை வரை
1. ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் எழுத்து நடையினை ஆராய்க.
ரா.பி சேதுப்பிள்ளளவர்கள் ஒரு பேரறிஞர். அவர் எழுத்து, பேச்சு, இலக்கியம் போன்ற பல
துறைகளில் கைத்தேர்ந்தவர். தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்தவர். இவரின்
பேச்சில் சென்னை மக்களைத் தன் வயம் இழுத்தவர். ஒருவரின் பேச்சு என்பது பிறர் மனதைக்
காயப்படுத்தும் வகையிலும் இருந்தாலும் அல்லது கருத்தின்றியும், நல்ல சொல் பயன்பாடு
போன்ற கூறுகள் இல்லாமல் இருந்தாலும் கேட்பவர்களுக்குச் சளிப்புத் தட்டிவிடும். இவரின்
பேச்சில் சிறந்த கருத்துகளும் நல்ல மொழிவளம் இருந்திருக்கு என்பதால்தான் அவரின்
எழுச்சியான பேச்சு உரைநடையாக மாற்றம் கண்டுள்ளது.
மேலும், இவர் பல புத்தகங்கள் வெளியீடுக்கான துணையாக இருந்தது மட்டுமில்லாமல்,
பல நூல்களையும் இயற்றியுள்ளார். அவை மக்கள் மனதை கவர்ந்துள்ளது என்றால்
மிகையாகாது. இவரின் துணையுடன் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவர் வையாபுரி அவர்கள்
தமிழ் பேரகராதி ஒன்றினை தொகுத்து வெளியிட்டுள்ளார். அதனைத் தவிர்த்து, ரா.பி.
சேதுப்பிள்ளை அவர்களின் உதவியுடன் திராவிட பொது சொற்கள், திராவிட பொது பழமொழிகள்
எனற இரு புத்தகம் வெளியீடுக் கண்டது. பெரும் ஜாம்பவான்களுக்குத் துணைநின்று
புத்தகங்கள் உருவாக உதவிய இவரின் எழுத்து நடையினை இடைப்போட முடியாது. காரணம், பல
பொருள்களையும் காட்டுகளையும் புதிய சொற்களையும் கொன்ட அகராதியைத் தொடுக்க
உதவிய இவரின் எழுத்து நடை கண்டிப்பாகச் சிறந்ததாகத்தான் அமைந்திருக்கும்.
இவர் பல விருதுகளுக்குச் சொந்தக்காரர் என்பதில் ஐயமில்லை. இவரின் எழுத்தும்
பேச்சும் இவருக்கும் பல விருதுகள் பெற்றுத் தந்துள்ளன. அவற்றுள், இவர் கைவண்ணத்தில்
வெளிவந்த ‘தமிழின்பம்’ என்ற நூலுக்குத் தமிழக அரசு விருது வழங்கியது. அதே சமயம்,
இவர் இயற்றிய பல நூல்கள் தமிழகத்தின் பொது உடமையாக்கப்பட்டுள்ளது. ஒரு
எழுத்தாளருக்கு இதை விட பெரிய விருது எதுவும் இல்லை. இவரின் எழுத்து சிறப்பு வாந்ததாக
இருந்ததால் தான் அவை தமிழகப் பொதுவுடமையாக்கப்பட்டுள்ளது. பருக்கும் நன்மை பயக்கும்
நூலை அனைவரும் எளிதில் பெற்றுக்கொள்ள தமிழக அரசின் முடிவாகத்தான் இருக்கும்.
அதனை தொடர்ந்து, இவர் உரைநடையில் ஒரு புதுமையை ஏற்படுத்தியவர் என்றால் அது
பொய்யாகாது. அடுக்குமொழி, எதுகை, மோனை, இலக்கியத் தொடர், இயைபு, முறண்
இவற்றை உரைநடையில் கொண்டு வந்தவர் சேதுப்பிள்ளை அவர்களே. இவர் இயற்றிய நூல்கள்
பல. அவற்றுள் உரைநடை நூல்கள் 20 மேற்பட்டவை, 14 கட்டுரை நூல்கள், 3 வாழ்க்கை வரலாறு
நூள்கள் இவரால் எழுதப்பட்டவை. இவரின் எழுத்துத் திறமையும் பேச்சுத் திறமையும் இவருக்கு
வாங்கி தந்த பட்டம் தான் ‘சொல்லின் செல்வர்’ என்பதாகும்.

02/04/2020 – 10.30 காலை முதல் 11.30 காலை வரை


2. ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் எழுத்தாற்றலையும் சிறப்புத்தன்மையையும் ஆராய்க.
ரா.பி சேதுப்பிள்ளை அவர்கள் சிறந்த பேச்சாளர் மட்டுமின்றி எழுத்தாளரும் கூட. இவரின் பேச்சு
திறன் தான் நாளடைவில் உரைநடைகளாக மாரின. உதாரணத்திற்கு, இவரின் எழுச்சியான
மேடை பேச்சுகள் உரைநடைகளாக மாற்றம் கண்டு புத்தகங்களாக விற்பனைக் கண்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, இவர் சில மாபெரும் புத்தகங்கள் வெளியீடுக் காண
பேருதவியாக இருந்திருக்கிறார். எடுத்துக்காட்டாக, தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவர்
வையாபுரி அவர்கள் தமிழ் பேரகராதி ஒன்றினை தொகுத்து வெளியிடவும், திராவிட பொது
சொற்கள், திராவிட பொது பழமொழிகள் என இரு புத்தகம் வெளியீடுக் காணவும் துனையாக
இருந்திருக்கிறார். இவ்விரு புத்தகங்களும் தமிழகத்திலும் தமிழுக்கும் மாபெரும் சொத்து
எனலாம். அகராதி தொடுப்பது சுலபமான
அவ்வகையில் இவர் உதவியுடன் வெளியீடுக்கண்ட இவ்விரண்டு புத்தகங்களே இவரின்
எழுத்தாற்றலையும் சிறப்புத்தன்மையையும் விளக்கும் வகையில் அமைகிறது.
தொடர்ந்து, ருவரின் எழுத்து சிறப்பாக இல்லை என்றார் ஆவர் வெளியீடும்
புத்தகங்களை மக்கள் வாங்க மாட்டார்கள். இவர் எழுதிய நூல்கள் பல
வெளியீடுக்கண்டுள்ளது; மக்களால் விரும்பி வாசிக்கப்பட்டுள்ளது. இவர் இயற்றிய நூல்கள்
பல. அவற்றுள் உரைநடை நூல்கள் 20 மேற்பட்டவை, 14 கட்டுரை நூல்கள், 3 வாழ்க்கை வரலாறு
நூள்கள் இவரால் எழுதப்பட்டவை. அதனை அடுத்து, இவரின் எழுத்தின் சிறப்புத்தன்மை
என்றால் யாரும் சேர்க்காத வற்றை இவரின் எழுத்தில் சேர்த்துள்ளார்.
முதன் முதலில், அடுக்குமொழி, எதுகை, மோனை, இலக்கியத் தொடர், இயைபு, முறண்
இவற்றை உரைநடையில் கொண்டு வந்தவர் சேதுப்பிள்ளை அவர்களே. இக்கூற்றே இவரின்
எழுத்தாற்றலையும் சிறப்புத்தன்மையையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. பிறகு,
இவரினெழுத்தாற்றலைப் பாராட்டும் வண்ணம் இவரின் ‘தமிழின்பம்’ என்ற நூலுக்குத் தமிழக
அரசு விருது வழங்கியது. அதே சமயம், இவர் இயற்றிய பல நூல்கள் தமிழகத்தின் பொது
உடமையாக்கப்பட்டுள்ளது. . இவரின் எழுத்துத் திறமையும் பேச்சுத் திறமையும் இவருக்கு வாங்கி
தந்த பட்டம் தான் ‘சொல்லின் செல்வர்’ என்பதாகும்.

08/04/2020 – 8.00 காலை முதல் 10.00 காலை வரை


1. அழகான மௌனம் நாவலில் காணப்படும் கதாப்பாத்திரங்களை ஆராய்ந்திடுக-அழகம்மாள்
அழகான மௌனம் என்ற நாவல் தொட்டப்புற தமிழ் மக்களின் வாழ்க்கையினைச் சித்தரிக்கும் வகையில்
அமைந்துள்ளது. இந்நாவலில் அழகம்மாள் என்ற பெண்ணின் குடும்பத்தைப் பற்றியும் அவர்களின்
வறுமை மற்றும் வளர்ச்சியினை எழுத்தாளர் எழுதியுள்ளார். அழகம்மாள் என்ற பெண், பெரிய
குடும்பத்தில் வாழ்ந்தவள். தமிழ்நாட்டிலிருந்து தன் மாமனைத் திருமணம் செய்து மலயாவுக்கு வந்தாள்.
தன் கணவனை மதிப்பவள். தன் குடும்பத்திற்காக அனைத்தையும் அர்பப் ணிப்பவள். அழகம்காளின்
கணவன் நோய்வாய்ப் பட்டிருக்கும் பொழுது குடும்ப பொறுப்பை ஏற்றாள். மரம் வெட்டுவது மட்டுமின்றி
குடும்ப நலனுக்காக, வெற்றிலை கொடி, காய்கறி போன்றவற்றி வளர்த்தாள்; சிறப்பாக பராமறித்தாள்.
தன் கணவன் வாங்கிய மாட்டையும் அதன் கன்றுகளையும் அன்பாகப் பார்த்துக் கொள்ளும் மனம்
படைத்தவள். அழகம்மாள் சிறந்த உழைபாளி. தன் குடும்பத்திற்காகப் பாடுப்பட்டாள்.

அடுத்ததாக, அழகம்மாள் இளகிய மனம் படைத்தவள். ஒரு முறை அவள் மூத மகளை மாடு
முட்டிய போது, கொஞ்சம் கோபப்பட்டாலும் பின் அதனிடம் பாசமாகவே நடந்து கொண்டாள்.
மனிதர்களை மட்டுமின்றி மிருகங்களின் மீது அன்பு கொண்டவள். அதனைத் தவிர்த்து, அவள் பக்கத்து
வீட்டில் வசிக்கும் பெண்ணிடமும் பாசமாக இருந்தாள். அனுமியின் குழந்தைக்கு பல முறை உணவும்
கொடுத்திருக்கிறாள். அனுமி சிறு வயதிலேயே கணவனை இழந்தவள். ஆகையால், அவளுக்கு
அழகம்மாள் வற்றாத பசம் கொடுத்து காவனித்தாள். மேலும், அழகம்மாள் எல்லேரிடமும் அன்பாக நடந்து
கொள்வாள். அக்கா, அண்ணன் என்றே பிறரை அழைப்பால். மிகவும் மரியாதையானவளும் கூட.
இவளின் அன்பும் மரியாதையும் தான் பலர் இவல் மீது அன்பு வைத்ததின் காரணம். உதாரணத்திற்கு
தண்டல் அவர்கள். தோட்ட மக்கள் தண்டலைக் கண்டு அஞ்சினாலும், தரைக் குறைவாகப் பேசினாலும்
அவர் அழகம்மாளை தன் மகள் போன்றே பார்தத ் ார். அவரைத் தவிர்த்து, ஆசிரியர், ஆசிரியரின்
துணைவி, மருத்துவர் என எல்லாரும் அவள் மீது அன்பு செலுத்தினர். அவளுக்கு எப்பொழுதும் உதவ
முன் வந்தார்கள்.

தொடர்ந்து, அழகம்மாள் முன்நோக்குச் சிந்தனை உடையவள். தனக்குக் கிடைக்கும்


வருமானத்தைச் சிக்கனம் செய்து வைப்பாள். காய்கறி விற்றல், வெற்றிலை, விற்றல், பால்,
விற்றலிலிருந்து கிடைக்கும் வருமானத்தை சேர்த்து வைப்பாள். இதுவே, அவள் கணவன் இறக்கும் முன்
தமிழ் நாடிற்கு போய் வர உதவியாக இருந்தது. மேலும், தோட்ட துண்டாடல் சிக்கல் வந்த பொழுது,
தோட்ட மக்கள் பீதியில் இருந்த பொழுது சேமித்த பணம் கையில் இருந்ததால், அழகம்மாவாள் தன்
பிள்ளைகளைக் காப்பாற்ற முடிந்தது. நல்ல உணவும் உடையும் படிப்பும் தன் பிள்ளைகளுக்கு வழங்கும்
அளவு அழளிடம் பணம் இருந்தது. அழகம்மாள், தேவைஅற்ற பொருள்களையும் வாங்கமாட்டாள். அதே
சமயம், பிறரிடம் கடன் வாங்கவும் கடன் வைத்து பொருள் வாங்கியது இல்லை. இதுவே, அழகம்மாள்
பணத்தைச் சிக்கனம் செய்ததையும் அதனை புத்திசாலிதனமாகப் நிர்வகித்ததையும் காட்டுகிறது.
தோட்டத்துண்டாடலின் போது அவள் சேமித்த பணத்தைக் கொண்டு நிலம் வாங்கினாள்.

அழகம்மால் படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவல் என்றால் அது மிகையாகாது.


சாதாரன தோட்ட தொழிலாளியாக இருந்தாலும் தன் பிள்ளைகளுக்குப் படிப்பு முக்கியம் என உணர்ந்து
அனைவரையும் பள்ளிக்கு அனப்பினார். ஆனால், அவர்களுள் முதல் மகள் படிபறிவு இல்லை என்பதால்
சுய தொழில் செய்தான். இரண்டாவது மகன் மருதுவர் ஆவான். நஞ்சிதம் என்ற மகள் சிறப்பாகப் படித்து,
ஆசிரியர் ஒருவரை மணந்து கொள்வாள். தன் பிள்ளைகளைச் சிறப்பான முறியில் வளர்த்து நல்வாழ்வு
அமைத்து தந்திருப்பாள் அழகம்மாள். ஆனால், சரசு மட்டு வழி தவறி சென்றிருபாள். காதலுக்காக
வீட்டை விட்டு ஓடிருபாள்.

அழகம்மாள் சிறந்த பெண், துணைவி, தாய், உழைப்பாளி என்று அவளின் பெறுமைகளைச்


சொல்லிக்கொண்டே போகலாம். பெருமாள் இறந்த பிறகும் துவன்டு விடாமல், தன் பிள்ளைகளின் சிறந்த
எதிர்காலத்திற்காக உழைத்தார் என்றால் அது மிகையாகாது.
14/04/2020 – 8.00 காலை முதல் 10.00 காலை வரை
1. அழகான மௌனம் நாவலில் காணப்படும் தோட்டப்புறச் சிக்கல்.

அழகான மௌனம் நாவலில் வரும் தோட்டடத்திலும் பிற தோட்டம் எதிர்நோக்கிய அனைத்து


சிக்கலையும் எதிர்நோக்கியது. நாவலாசிரியர், முதல் கதாப்பாதிரம் முதல் அவரைச் சுற்றி இறுக்கும்
அனைத்து கதாப்பத்திரம்மும் எதிர்நோக்கும் சிக்கலை அழகாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார் .
முதல் சிக்கலாகவும், தோட்டப்புறத்தில் பரவலாகக் காணப்படும் சிக்கல் என்னவென்றால், மதுவுக்கு
அடிமையாகுதல். தொட்ட மக்கள் உழைப்பாளிகள், அவர்களை அடிமைப்படுத்த வெள்ளையர்கள் மதுவை
அறிமுகம் செய்தனர். தோட்டத் தமிழர்கள் மதுவிற்கு அடிமையாகியே தங்கள் வாழ்க்கையை
சீரழித்தனர் என்றால் அது மிகையாகா . இக்கூற்றுக்குச் சிறந்த உதாரணம் அழகம்மாளின் கணவன்
பெருமாளே. அதிகமாக மது அருந்தியதாலும் புகை பிடித்ததாலும் நோய் வாய்ப்பட்டு இறந்தான் . மது
தோட்டப்புற மக்களிடையே பெரும் சிக்கல் என்பதை நாவலாசிரியர், இரண்டாவது தண்டல் தோட்ட
மக்களிடையே தனக்கு வாக்களிக்கக் கூறவும் தனக்கு சாதகமாகத் தோட்ட மக்களைப் பயன்[அடுத்திக்
கொல்ளவும் ஆளுக்கு ஒரு மது புட்டி வாங்கித் தந்தார்.

அடுத்ததாக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது. மாரி தண்டல் வந்த பிறகு


தோட்ட மக்கள் பல சிக்கலை எதிர்நோக்கினர். மாரி தண்டல் தோட்ட தொழிழாளிகளிடம் கடுமையாக
நடந்து கொள்வார். அவர் செய்யும் தவறுகளைச் சுட்டி காட்டுபவர்களை தோட்ட மக்களின் முன்
தவறானவர்களாகக் காட்டுவார். மேலும், பதவி ஆசையால் பல தீமைகள் செய்துள்ளார். தன்னை
எதிர்பவர்களைப் பலி வாங்க, சிலரைத் தெரிவு செய்து மது வாங்கித் தந்து அவர்கள் மீது குற்றம் செல்ல
செய்தார். அதனைத் தவிர்த்து, தனது பதவியை மற்றும் வேறு உயர் பதவிகளைத் தன்
குடும்பத்தினருக்கு மட்டும் கொடுக்க விரும்பினார். தோட்ட முதலாளியின் சொல்லுக்குக் கட்டுப்பட்ட
தோட்ட மக்களை அடிமையாக எண்ணினார். எனவே, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது
தோட்டபுறத்தில் சிக்கலாகவே அமைந்தது.

தொடர்ந்து, கடன் வாங்குதல். ஒவ்வொரு முறை சம்பளம் போடும் பொழுதும் தொட்ட


மக்கள் ரொட்டி பாய், மலிகைக் கடைச் சீனன், துனி விக்கும் பாய் போன்றவர்களின் கடனை அடைப்பர்.
அட்தே கணம், சிலர் புதிதாகக் கடன் வாங்கி புதிய பொருள்கள் வாங்குவர். இதற்கு காரணம்
சிக்கனமின்னை, ஏழ்மை, குறைந்த வருமானம் என்று அடுக்கி கொண்டே போகலாம். எவரும்
அழகம்மாளைப் போல் காய்கறி நட்டும் பால் விற்றும் பணம் சேர்கவில்லை. சம்பளம் கிடைத்தவுடன் கடன்
கொடுத்தவர் வீட்டின் முன் வந்து நிப்பர். வேறு சிக்கல் என்று பார்த்தால், ஒழுகமின்மை. சில தோட்ட
மக்கள் குறிபாக ஆண் வர்கத்தினர் அதிகமான மது அருந்துவர் . இதனால், வீட்டிற்கு வந்து
குடும்பத்தினரையும் மனைவியையும் அடித்து துன்புறுத்துவர். சில இலையோர்கள் காதல் மோகத்தால்
வீட்டை விட்டு ஓடிவிடுவர். இதற்குச் சிறந்த உதாரணம் அழகம்மாளின் மகள் சரசு . இது ஒழுக்கமற்ரச்
செயலாகும்.

பிறகு, சிக்கல் என்று பார்த்தால், தோட்ட மக்கள் அதிகம் படிதவர்களாக இல்லாத


காரணத்தால் நாட்டு நடப்புகளை அறிந்திருக்கமாட்டார்கள். அதிகாரத்தில் உள்ளவர்களும் சரியான
தகவலை வெளியிடமாட்டார்கள். தங்களைச் சம்மந்தம் படுத்திய தகவலைக் கூட முழுமையாகத்
தெரிந்து வைத்திருக்கமாட்டார்கள். இதுவும் ஒரு சிக்கலே. காட்டாக, தோட்ட துண்டாதலின் போது
தோட்டப்புற மக்கள் அதனை பற்றிய முழு அறிவு இல்லாமல் இருந்தார்கள். அதனாலெ இவர்களை மாரி
தண்டல் போன்றவர்கள் சுலப்பமாக ஏமாற்றினார்கள். தோட்டப்புற மக்களின் அறியாமையும் அதிக
நம்பிக்கையும் ஒரு சிக்கல் தான். தோட்டத் துண்டாதலின் போது தங்கள் துறையான தோட்ட முதளாலி
தங்களுக்குத் தீமை செய்யமாட்டர் என்றும், தோட்டத்தை விற்க மாட்டார் என்றும் நம்பிக்கையாக
இருந்தார்.

தோட்டப்புறதில் காணப்படும் பல சிக்கலை அழகான மௌனம் என்ற நாவலில் நாவலாசிரியர்


அழகாக வெளிப்படுத்தியுள்ளார் என்பதில் ஐயமில்லை.

22/04/2020 – 8.00 காலை முதல் 10.00 காலை வரை


1. காவிய நாயகி நாடகத்தில் காணப்படும் கதாபாத்திரங்களை அடையாளம் கண்டு எழுதுக.

2. ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றியும் ஆராய்ந்து எழுதுக.


் 2 பக்கத்திற்குள் எழுதவும்.
ஆராய்நது

இக்காவிய நாயகி நாடகத்தின் முதன்மைக் கதாப்பாத்திரமாகக் கருதப்படுவது பொண்ணி. இவர்


அகுயவர் வம்சத்தில் பிறந்தஇருந்தாலும், கல்வி கற்றவர். கவியதைகளை மிக அருமையகப் புனைவார்.
பொண்ணியைக் கற்புகரசி என்றும் கூறலாம். அவர் பெருஞ்சேரலாதனை ஒழுக்கத்துடன் காதலித்தார்.
இறுதியாக, அவர் இறக்கும் முன் திருமணம் செய்துக் கொன்டு, அவர் இறந்த பிறகு உண்மையை
நிலைநாட்டினாஎ. பெருஞ்சேரலாதனின் இறப்புக்கு நியாயம் கேட்டார். துணிமிக்க பெண் பொன்ணி
என்றால் அது மிகையாகா. பெருஞ்சேரலாதன் தன் நாட்டின் மீது போர் தொடுக்க வந்த போது, வேறு
நாட்டு மன்னர் என்ற பயமின்றி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினால். அதைப் போலவே, தன் கணவன்
இறப்புக்காக நியாயம் கோறி கரிகாலனின் சபையில், கரிகாலனையே வசைப்பாடினாள். அடுத்ததாக,
நாடின் மீது பற்றுக் கொன்டவள். தன்நாடிற்காக எதிர் நாட்டு மன்னரின் கூடாரத்தின் முன் நின்று
வசைப்பாடினாள்.

தொடர்ந்து, கரிகாலன். இவர் வீரனாவார். சென்ற போரில் எல்லாம் வெற்றியைத் தவிர வேறு
எதையும் சந்தித்ததில்லை. அதே கணம், கருணை உள்ளமும் மனிதாவிமானமும் படைத்தவர். அவர் போர்
தொடுக்க விரும்பும் நாட்டு அரசர்கள் சமாதம் பேசினால், அந்த நாட்டை அவ்வரசர்கலுக்கே
தந்துவிடுவார். நாட்டு மக்களையும் துன்புறுத்த மாட்டார். கரிகாலன் பக்தியுடையவர். அவர்
பெருஞ்சேரலாதன் மீது போர் தொடுப்பதற்கு மூல காரணமே கோவிலும் கடவுளும் தான். அதனை
அடுத்து, சிறந்த முடிவெடுக்கும் தன்மை கொண்டவர். களிங்கராயரும் தலபதியும் பொண்ணியைப் பற்றி
தவறாகவும், அவரைத் தூக்கிலிட வேண்டும் என்ற போது அவர் அந்த முடிவு எடுக்வில்லை . மாறாக,
நன்றாகச் சிந்தித்து, இச்சிக்கலை ஆராய்ந்தார். துறவி வேடமிட்டு பொண்ணியை விசாரித்தார்.
நேர்மையாக நீதிக்கு வழி கொடுத்தார். நீதி வெல்ல போராடினார். இவர் தன் மனைவி மீதும் பாசம்
கொண்டவர்.

பிறகு, பெருஞ்சேரலாதன். இவர் நாட்டின் மூதும் மொழியின் மூது பற்று கொன்டவர்.


மக்களின் சிக்கலை நேரடியாகக் கண்டு தெரிந்து கொள்ள, காவர் வேடமிட்டு நாட்டைச் சுற்றிப் பார்பார்.
மக்களின் நிலையை நேரே சென்று கண்ணோடமிடுவார். மேலும், கரிகாலன் தன் நாட்டின் மீது போர்
தொடுக்க வேண்டும் என்ற போது அதற்கும் தயாரானார். மதான் ஒரு வீரன் என்பதை நாட்டிற்கும்
உலகத்திற்கும் நிறூபிக்க பொண்னியின் உதவியை நாடினார். இவரும் வீரர் தான். இவரைக் காதன்
மன்னர் என்றும் விவரிக்கலாம். காரணம், முதலில் பொண்னியின் அழகிலும் பேச்சு திறனிலும் மயங்கிய
இவர், அவலிடம் காதல் மொழி பேசினாள். இவர் ஒரு மன்னராக இருந்தாலும் பாமர மக்களான
பொண்னியை மனம்முடிக்க உறுதியாக இருந்தார். இறக்கும் முன் பொன்ணியைத் தன்
துணைவியாகினார்.

வேண்மாள் கதாப்பாத்திரத்தை எடுத்துக் கொண்டால், இவர் தன் கணவன் மீது அதிக


அன்பும் மரியாதையும் உடையவர். சிறந்த இலக்கியவாதியும் கூட. தன் கணவனிடம் நாட்டுச் சுக்கலைப்
பற்றி கலந்துரையாடுவார்; சில வேலை ஆறுதலும் தீர்வும் கொடுப்பார். அவரைத் தொடர்நது ் ,
கரிகாலனுக்கு மிக முக்கியமான உறவு அவரின் மாமா, இரும்பிடதலையார். இவர், கரிகாலனுக்குச் சிறந்த
ஆலோசகராகவும் வேண்மளுக்கு நல்ல தந்தையாகவும் இருந்தார். நாட்டுச் சிக்கலுக்குத் தீர்வுக் காண
கரிகாலனுக்கு உதவினார். இருப்பினும், பிறர் பேச்சின் மீது அதிக நம்பிக்கை வைப்பார் உதாரணமாக ,
காளிங்கராயன் மற்றும் தலபதியாரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள வில்லை. மருதவானன்
கதாப்பாத்திரமான பொண்ணியின் அப்பாவையும் விட்டுவிட முடியாது. காரணம் பொண்ணி பெண்ணாக
இருந்தாலும் தரமான கல்வியும் துணிவையும் ஊட்டி வளர்த்திருக்கிறார். பொண்ணியின் காதலுக்கும்
இவர் முட்டுக்கட்டையாக நிற்கவில்லை. திருமணம் வரை இருவரையும் ஒழுக்கத்துடன் இருக்க
கோரினார்.

இக்காவிய நாயகி நாடகத்தில் எதிர் கதாப்பாத்திரமாக இருந்தவர்கள் கரிகாலனின்


அமைச்சரான காளிங்கராயரும் அவரைன் எடுபடியாக இருந்த தலபதியும். எல்ல சிக்கலுக்கும் இவர்களே
காரணம். பாண்டியர்களுடன் இணைந்து கரிகாலனின் நாட்டைக் கவிக்க திட்டமிட்டார். அது மட்டுமின்றி,
கரிகாலனின் குடும்பத்திலும் குழப்பம் உண்டாக்கினார். மேலும், பொண்ணியைக் கொள்வதர்கும்
துறவியைக் கொள்ளவும் திட்டமிட்டார்கல். அவர்களின் திட்டம் துறவியால் முறியடிக்கப்பட்டது.
இறுதியாக, இந்நாடகத்தில் நகச்சுவையைப் புகுத்தும் படி, அம்மாவாசை தீவட்டியின் கதாப்பாத்திரங்கள்
அமைந்துள்ளன. இருவரும் முட்டாள் தன்மாகப் பேசிக்கொண்டும் சண்டை இட்டும் கொண்டிருந்தாலும்,
இவர்களின் ஒவ்வொரு உரையாடலையும் கேட்டு துறவி சிக்கல்களையும் காளிங்கராயரின்
சூழ்ச்சிகளையும் அறிந்து கொண்டார். இவர்கள் இருவரும் கொடுக்கும் தகவல் கரிகாலன தனது
நாட்டையும் பொண்னியையும் காப்பாற்ற பேருதவியாகவே அமைந்தது.

You might also like