Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

தோழிக்கு கடிதம்-Tholiku Kaditham in

Tamil
November 26, 2021 by radangfx

தோழிக்கு கடிதம்-Tholiku Kaditham in Tamil :- தோழிக்கு கடிதம்


எழுதும்போது முறைசாரா (Informal Letter) முறைப்படி எழுத
வேண்டும் ,எழுதுபவர் பற்றிய அல்லது பெறுபவர் பற்றிய
தெளிவான முன்னுரை தேவையில்லை,மேலும் மரியாதை
நிமித்தமாக சேர்க்க படும் பண்பாட்டு வாக்கியங்கள் இடம்
பெற தேவையில்லை ,அப்படி எழுதப்பட்ட கடிதம் கீழே
கொடுக்க பட்டுள்ளது,இதனை உதாரணமாக கொண்டு
உங்கள் தோழிக்கு கடிதம் எழுதவும் ,இந்த அறிவியல் மகா
யுகத்தில் கடித்த போக்குவரத்து குறைந்திருந்தாலும்
ஈமெயில் போன்ற வசதிகள் மூலம் கடிதம் அனுப்பவும்
,கடிதம் பெரும் ஒருவருக்கு அது எவ்வளவு
புத்துணர்ச்சியை தரும் என்பதை நாம் அனைவரும்
அறிந்ததே

கல்லூரியில் சேர்ந்த தோழிக்கு கடிதம்


அன்புடைய தோழிக்கு,

வணக்கம் ,எனது நலமும் எனது குடும்பத்தாரின் நலமும்


சிறப்பாக உள்ளது ,அதுபோல் உனது மற்றும் உனது
குடும்பத்தாரின் நலம் அறிய ஆவலாக உள்ளேன் ,சென்ற
ஆண்டு பள்ளி படிப்பை முடித்த நாள் முதல் உன்னை
பிரிந்து வாழுகின்றேன் ,நீ எடுத்த மாவட்ட அளவிலான
மதிப்பெண் நான் அறிவேன் ,நீ மேல் படிப்பிற்கு சிறந்த
கல்லூரியை தேர்வு செய்வாய் என்பதும் நான் மிக
நன்றாக அறிவேன் ,அதன்படி நீ சென்னையில் உள்ள
அரசு கல்லூரியில் இளங்கலை பட்ட படிப்பில் சேர்ந்து
விட்டாய் என்பதையும் நமது தோழிகள் சிலரது கடிதம்
மூலம் அறிந்தேன் ,
எனக்கு வியப்பாக இருக்கிறது உனது குடும்பத்தார் பெண்
பிள்ளைகளை எப்போதும் கவனமாக கையாண்டு வெளி
மாவட்டங்களுக்கு படிக்க அனுப்ப மாட்டார்கள் என்று நீ
கூறிவந்தாய் ,ஆனால் நாம் பெற்ற மதிப்பெண் அவர்களது
எண்ணத்தை மாற்றியிருக்க கூடும்.எனது குடும்பத்தாரும்
எனது மதிப்பெண் அட்டவணையை கண்டு எனது
தன்னம்பிக்கை வளர்ந்துள்ளதை பாராட்டினார்கள் ,அதன்
காரணமாகவே எனக்கு வெளி மாநிலத்தில் கல்லூரி இடம்
கிடைத்தவுடன் தைரியமாக எல்லா இடங்களுக்கும் செல்ல
அறிவுறுத்தி ,எனது தன்னம்பிக்கையை இரட்டிப்பாகி
உள்ளனர் ,
இதனை உனக்கு சொல்வதற்கான காரணம்
என்னவென்றால் பெண்கல்வி ,பெண் பாகுபாடு என்று
பழைய புராண காலத்து செய்திகள் மற்றும்
கட்டுப்பாடுகளை நாம் இனி வரும் காலங்களில்
வார்த்தைகளில் கூட காண கூடாது ,உனது கல்லூரி
வாழ்கை பற்றி எனக்கு கடிதம் எழுதவும் , படிப்போடு
மட்டும் நின்று விடாமல் உனது திறமையை உலகிற்கு
எடுத்துரைக்கும் செயல்களில் ஈடுபாடு ,மென் மேலும்
உனது வளர்ச்சிக்கு பிரார்த்திக்கும் உனது தோழி

பெயர்

You might also like