சகலமும் பெற சொர்ண பைரவ வழிபாடு

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

சகலமும் பெற சொர்ண பைரவ வழிபாடு

வாழ்வில் துன்பங்கள் குறைய செல்வங்கள் நிறைய பைரவர்


வழிபாடு

(வட்டில்
ீ செய்யும் சுலப முறை) :

தேவையானவை:

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் படம்,கொஞ்சம் சந்தனம்,சந்தன


ஊதுபத்தி ஒரு பாக்கெட்,இரண்டு கிண்ணங்கள்,தாமரை தண்டுத்திரி,
அகல்விளக்கு எனப்படும் மண்
விளக்கு,கலப்படமில்லாத,பாக்கெட்டில் அடைக்கப்படாத
நெய்(இவற்றை ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவருக்கு மட்டுமே
பயன்படுத்திட வேண்டும்)

தினமும் காலையில் குளித்துமுடித்துவிட்டு,அகல்விளக்கில்


நெய்யை நிரப்பி தாமரைநூல் திரியை வைத்து தீபம் ஏற்றிட
வேண்டும்.அப்படி ஏற்றிவிட்டு,ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின்
படத்தின் முன்பாக வைக்க வேண்டும்.இந்த தீபம் தினமும் சுமார் 30
நிமிடம் மட்டும் எரிந்தால் போதுமானது. பின் 108 முறை ஒம் ஸ்ரீ சாயி
ஓம் ஸ்ரீம் க்லீம் மஹா பைரவாய நமஹ எழுதவும்

தீபம் ஏற்றியப்பின்னர், வட்டில்


ீ சமைத்த உணவில் முதல்
கரண்டியை எடுத்து,ஒரு கிண்ணத்தில் இவரது படத்தின்முன்பாக
வைக்கவேண்டும்.சோறு எனில் ஒரு கரண்டி எடுத்து ஒரு
கிண்ணத்தில் வைத்து அந்த உணவின்மீ து தாளித்த தயிர் அல்லது
வெல்லம் தூவ வேண்டும்.பிறகு,சந்தனத்தை நீரில் கரைத்து,சொர்ண
ஆகர்ஷண பைரவரின் நெற்றியிலும்,பைரவியின் நெற்றியிலும்
வலது மோதிர விரலால் வைக்க வேண்டும்.அப்படி
வைக்கும்போது,சந்தனம் பைரவர்,பைரவியின் கண்களை மறைக்கக்
கூடாது;பிறகு,சொர்ண ஆகர்ஷண பைரவரின் பாதத்தில்
இதேபோல்,சந்தனத்தை வைக்க வேண்டும்.

பிறகு,சந்தன பத்தியால் மூன்றுமுறை ஆராதிக்க வேண்டும்.அப்படி


ஆராதித்தப்பின்னர்,கீ ழ்க்காணும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின்
தினம் ஒரு முறை, தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் 33
முறையும் கூறவும்.

ஓம் ஸ்ரீம் தனவயிரவா போற்றி 


ஓம் ஸ்ரீம் தத்துவ தேவா போற்றி 
ஓம் ஸ்ரீம் தயாளா போற்றி 
ஓம் ஸ்ரீம் தனநாதா போற்றி 
ஓம் ஸ்ரீம் தனத்தேவா போற்றி 
ஓம் ஸ்ரீம் குலதேவா போற்றி 
ஓம் ஸ்ரீம் குருநாதா போற்றி 
ஓம் ஸ்ரீம் குண்டலினி தேவா போற்றி 
ஓம் ஸ்ரீம் குபேரா போற்றி 
ஓம் ஸ்ரீம் குணக்குன்றே போற்றி 
ஓம் ஸ்ரீம் வயிரவா போற்றி 
ஓம் ஸ்ரீம் வளந்தருவாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் வற்றாத தனமே போற்றி 
ஓம் ஸ்ரீம் வனத்துறை வாழ்வே போற்றி 
ஓம் ஸ்ரீம் திருவுடைச் செல்வா போற்றி 
ஓம் ஸ்ரீம் தினந்தினங்காப்பாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் திருமண தேவா போற்றி 
ஓம் ஸ்ரீம் திருவருள்திரண்டாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் திருவடி காட்டுவாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் சித்தர்கள் வாழ்வே போற்றி 
ஓம் ஸ்ரீம் சித்தருக்குச் சித்தா போற்றி 
ஓம் ஸ்ரீம் சித்திகள் எட்டே போற்றி 
ஓம் ஸ்ரீம் சித்தாந்த வடிவே போற்றி 
ஓம் ஸ்ரீம் சித்திகள் முடித்தாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் முழுநிலவானாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் முனிவர்கள் மருந்தே போற்றி 
ஓம் ஸ்ரீம் முழு தனம் தருவாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் முடியாதன முடிப்பாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் முகிழ் நகை வயிரவா போற்றி 
ஓம் ஸ்ரீம் இரும்பைப் பொன்னாக்கினாய் போற்றி
ஓம் ஸ்ரீம் இருந்தருள் செய்ய வந்தாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் இலுப்பைக்குடி வயிரவா போற்றி 
ஓம் ஸ்ரீம் சொர்ண வயிரவா போற்றி போற்றி போற்றி.

இத்துடன்,ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாடு


நிறைவடைந்தது.இரவு 7 மணிக்கு மேல் 10 மணிக்குள் காலையில்
நிவேதனமாக வைத்தோமே? அந்த காலை உணவை
எடுத்து,நமதுவட்டின்
ீ வெளிப்புறம்,சற்று உயரமான
இடத்தில்(கல்லில்!) ஒரு வாழை இலையில் அல்லது கிண்ணத்தில்
அந்த உணவை வைக்க வேண்டும்.இப்படி தினமும்
செய்துவரவேண்டும்.
இந்த தினசரி வழிபாட்டினால்,ஓரிரு நாள் அல்லது ஓரிரு
வாரங்களில் நாம் இரவு வட்டுக்கு
ீ வெளியே உணவை வைக்கும்
போது,ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ,பைரவர் வடிவத்தில் சாப்பிட
வருவார்.

You might also like