Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 13

நெஞ்சாங்கூடு ஏங்குதடி

அத்தியாயம் - 3

- தனுசஜ்ஜு

காலங்கள் ஓடும்

இது கதையாகி போகும்

என் கண்ண ீர் துளியின்

ஈரம் வாழும்....

தாயாக நீ தான் தலைகோத வந்தாலும்,

உன் மடிமீ தும் மீ ண்டும் ஜனனம் வேண்டும்.

என் வாழ்க்கை நீ இங்கு தந்தது.

அடி உன் நாட்கள் நான் எங்கு வாழ்வது.


காதல் இல்லை...... இது காமம் இல்லை....... இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை.

காதல் கொண்டேன் திரைப்படத்தின் அருமையான பாடல் எஃப் எம்-ல் ஒலித்துக்கொண்டிருக்க


அந்த பாடலுக்கு ஏற்றவாறு வாயசைத்து அவனும் உற்சாகமாக பாடிக்கொண்டிருந்தான்.
அப்பொழுதுதான் அவன் கவனித்தான். இந்த பாடலின் கடைசி வரியை தன் வாழ்க்கை எதை
நோக்கி பயணிக்கிறது. இன்னொருத்தவரின் மனைவி என்று தெரிந்தும் நான் ஏன் அவளை
பற்றிய சிந்தனையில் உள்ளேன். காரை ஒரு ஓரமாக நிறுத்தினான். இரண்டு கையையும்
தலையில் வைத்து ஸ்டியரிங்கில் தலைகவிழ்த்துவிட்டான். அவனுக்கு தலைவலி
உயிர்போனது. காலையில் நான் இருந்த மனநிலை என்ன??? இப்பொழுது நான் இருக்கும்
மனநிலை என்ன??? நான் என்ன நினைப்பில் இப்புடி டீன் ஏஜ் பாய் மாறி குதிச்சிட்டு
இருக்கேன். அந்த அளவா என் மனம் தறிக்கெட்டு திரிகிறது. நோ... நா இப்புடி இருக்குறது சரி
கிடையாது. தப்பு நா செய்றது தப்பு...... அவளை நான் சாதாரணமா பார்க்க முயற்சி பண்ணனும்.
அது என்னால முடியுமா???? இந்த அளவா நான் தேன்மொழி-ய லவ் பண்ணிருக்கேன் ஓ மை
காட் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது. இந்த பாழாய் போன காதல் எனக்கு எதுக்கு
குடுத்த..... என்னால இதுல இருந்து வெளிய வரவும் முடியல..... உள்ள போகவும் முடியாம
கொடுமையா இருக்கு......என்று அவன் மனதளவில் கதறிக் கொண்டிருந்தான்.

அந்த நேரத்தில் அவன் அலைபேசி அலறியது.

யாரென்று பார்த்தவன் உடனே தன்னை சமநிலை படுத்தி நீண்ட பெரு மூச்சை வெளியேற்றி
விட்டு, செல்பேசியை அட்டன் செய்து காதில் வைத்தான்.

எதிர்புறம் என்ன கூறப்பட்டதோ. ஐல் பி தேர் இன் ஃபைவ் மினிட்ஸ் என்று கூறி விட்டு,
மின்னல் வேகத்தில் காரை இயக்கி அந்த பள்ளி வளாகத்தின் முன் வண்டியை நிறுத்தினான்.

அங்கு அவனுக்காக காத்திருந்த ஐம்பது வயது பெண்மணியை நோக்கி முகம் மலர


வேக எட்டுக்கள் போட்டு அவரை அடைந்தான்.

அந்த பெண்மணி அங்குள்ள சிறு குழந்தைகளின் உயரத்திற்கேற்ப குனிந்து


பேச்சுக்கொடுத்துக்கொண்டே, கார்த்திக்-கை பார்த்துவிட்டார்.

அங்க பாருங்க கார்த்திக் அங்கிள் வந்துட்டாங்க.

ஐ கார்த்திக் அங்கிள்.....என்று பூஜா அவனிடம் ஓடி வர......

ஏய் செல்லக் குட்டி எப்புடி இருக்கிங்க என்று அவன் பூஜாவை தூக்கி சுற்ற...... மற்ற
மழலைகளும் அவனை சுற்றி கொண்டனர். அவன் மிகுந்த உற்சாகமாக அவர்களிடம் பேசி
சிரித்துக் கொண்டிருந்தான்.

மழலைகளை கண்டவுடன் நம் துன்பங்கள் அனைத்தும் எங்கு தான் ஓடி ஒளிந்து


கொள்கிறதோ....... இவ்வுலகில் மழலை சிரிப்பில் மயங்காதவர் உண்டோ.......
கார்த்திக் அந்த பூங்குவியலில் தன்னை மூழ்கடித்து கொண்டு அவர்களுக்கு இணையாக பேச
......

அதில் பூஜா என்னும் பட்டு குட்டி..... கார்த்திக் அங்கிள் இவ்ளோ நாள் எங்க போனிங்க...
என்ன பார்க்க ஏன் வரல என்று குற்றப்பத்திரிக்கை வாசிக்க...... அதில் அவன் புன்னகை
பெரிதாக....

அங்கிள் ஆஸ்திரேலியா போயிருந்தனா அதா பூஜா குட்டிய பாக்க வர முடில....... சாரி......


இனிமே பூஜா குட்டிய பார்க்க கரெக்டா வந்துடுவனா சரியா செல்லம்.

ம்ம்..... சரி அங்கிள் என்று பூஜா சிரிக்க..... அவனும் அவர்களுடன் விளையாடிவிட்டு..... அந்த
பள்ளியின் கரஸ்பாண்டட் அறையை நோக்கி நடையை போட்டான்.

அங்கு அபிராமி கரஸ்பாண்டன் - கே உரிய தோரணையுடன் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.


கதிருக்கு எங்கிருந்து கதிருக்கு இவ்வளவு கம்பீரம் வந்தது என்பதை கார்த்திக் நன்கு
உணர்ந்து கொண்டான்.

நீங்க யோசிக்கிறது கரெக்ட் தான் நண்பர்களே அபிராமி தான் கதிரோட அம்மா. மிகவும்
அன்பானவர். ஆனால் நிர்வாகத் திறமை அதிகம் கொண்டவர். சரி வாங்க அவங்க இப்ப என்ன
பேசுறாங்கன்னு கேட்போம்.

மே ஐ கம் இன் அபிம்மா.....

எஸ் கம் இன் மை சன்....

கார்த்திக் சிரித்த முகத்துடன் அவருக்கு எதிரே அமர்ந்து எப்படி இருக்கீ ங்க அபிம்மா..

என்ன பாத்தா எப்படி தெரியுது.

ம்ம்...... என்று யோசிப்பது போல் பாவனை செய்து அவரைக் கூர்ந்து கவனித்து இளச்சி
போயிட்டீங்க அபிம்மா....
டேய் .........

கண்ணை சுற்றி கருவளையம் வந்துடுச்சா அபிம்மா....... நீங்க தூங்குறீங்களா இல்லையா.

அவன் விளையாட்டாக கேட்கிறான் என்று எண்ணிக்கொண்டிருந்த அபிராமியும் அவன்


கடைசியில் கவலையுடன் முடித்ததில் சிறு கசப்பான சிரிப்பை உதிர்த்தார்.

எல்லாம் ஒன்னோட ஃபிரெண்ட் பத்தின கவலை தான்டா.

அவனுக்கு என்ன அபிம்மா நல்லா ஜம்முனு ஊர் சுத்திட்டு இருக்கா....... சமைச்சு


போடுறதுக்கு நான் இருக்கேன். நீங்க எதுக்கு கவலைப் படுகிறீங்க..

அது சரி உன்கிட்ட போய் சொன்னேன் பாரு. நீயும் ஒன்டிகட்டயா தான சுத்திட்டு இருக்க.......
ரெண்டு பேரும் எப்ப கல்யாணம் பண்றதா உத்தேசம். வயசு ஏறிட்டே போகுதில்ல....

என்ன அபிம்மா .... எங்களுக்கு இப்ப என்ன வயசு ஆகி போயிருச்சுன்னு நீங்கள்
கல்யாணத்தை பத்தி பேசறீங்க.

என்ன வயசு ஆகி போயிடுச்சா இன்னும் ரெண்டு வருஷத்துல ரெண்டு பேரும் அரைக் கிழவன்
ஆகிடுவிங்கடா.

கார்த்திக் அவரை போலியாக முறைக்க அதில் அபிராமி சிரித்து விட்டார்.

போதும் கார்த்திக் விளையாண்டதெல்லாம் எப்ப கல்யாணம் பண்ணிக்க போறீங்க. ரெண்டு


பேருக்குமே நான் பொண்ணு பார்த்துறவா.
ஐயோ அபிம்மா என்ன விட்டுருங்க. வேணும்னா கதிருக்கு நீங்க பொண்ணு பாருங்க அவனை
பேசி நா சரி பண்ணிடுறே... டீல் ஆ....என்பது போல் வலது கை கட்டை விரலை உயர்த்திக்
காட்ட.

சிறிது நேரம் யோசனையில் மூழ்கி இருந்த அபிராமி கார்த்திக்கும் நாம பையன் தான்
இவனை விட்டுட்டு எப்படி நாம கதிருக்கு பார்க்கிறது. கதிருக்கு கல்யாணம் பண்ணா
ஆட்டோமேட்டிக்கா கார்த்திக்கும் கல்யாணம் பண்ணிக்குவான் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா
என்பதுபோல் அவர் திட்டம் தீட்ட..........முகத்தில் மென்னகை படர சரி ஓகே டில்..... என்பது
போல் அவரும் தன் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்.

குட் அபிம்மா...... மனதிற்குள் நல்லவேளை நான் தப்பிச்சேன்.

இன்னொரு முக்கியமான விஷயம் அபிம்மா உங்களுக்கு பொண்ணு தேடுற கஷ்டமான


வேலையை நான் கொடுக்கல..... ஏன் னா நம்ம ஆபீஸ்ல வொர்க் பண்ற அனிதா கதிர ஒரு
ஏழு வருஷமா லவ் பண்ணிட்டு இருக்கா...... பேசாம நீங்க அவுங்க வட்டுக்கு
ீ போய் பேசி
பாருங்க---- அனிதா ரொம்ப நல்ல பொண்ணு .... நான் பார்த்தவரை அனிதா கதிருக்கு
பொருத்தமா இருப்பா. பொறுமையும் ஜாஸ்தி நீங்க போய் பாருங்க பார்த்துட்டு உங்களுக்கு
ஓகேன்னா சொல்லுங்க அபிம்மா.

என்னது கதிர லவ் பண்ற பொண்ணா!!!!!

நீங்க எதுக்கு மா இவ்வளவு ஷாக் ஆகுறீங்க. ஏன் என் நண்பனுக்கு என்ன குறைச்சல்
அழகில்லையா???? அறிவில்லையா????

அது எல்லாம் இருக்கு தான். ஆனா யார்கிட்டயாவது சிரிச்சு பேசுறானா சரியான உம்மனா
மூஞ்சு. இந்த உம்மனா மூஞ்சியும் லவ் பண்றானா... அந்த பொண்ணு ரொம்ப தங்கமா இருப்பா
போலயே......அவர் கேலி போல பேச....
அம்மா உங்களுக்கே இது நியாயமா தெரியுதா... உங்க பையனையே நீங்க குறை
சொல்றீங்களே.

எல்லா பசங்க மாதிரியே நீங்களும் இருந்துட்டா..... நான் ஏண்டா இப்படி பேச போறேன். நீங்க
வயசு பசங்க மாதிரியா இருக்கீ ங்க. அவனவன் இருபது வயதிலேயே கல்யாணம் பண்ணி
குழந்தை குட்டியை பெத்து லைஃப் என்ஜாய் பண்ணிட்டு இருக்கானுக. நீங்க என்னன்னா
அரைக் கிழவன் ஆயிட்டீங்க. இன்னமும் கல்யாணம் என்ற பேச்சு எடுத்தாலே தலைதெறிக்க
ஓட்டுறீங்க.

கார்த்திக் பதில் சொல்ல வாய் எடுக்கும் முன் அவன் அலைபேசி அவனை அலைக்க.
எடுத்தவன் உங்க பையன்தான் கூப்பிடுறான் மா.

ஹலோ கதிர்....

எங்கடா இருக்க...

ஸ்கூல்ல

அங்க என்ன உனக்கு வேலை காலையிலேயே டிப் டாப்பா ட்ரெஸ் பண்ணி அங்க தான் நீ
போனியா...... கம்பெனி வந்துருப்பனு வந்து பார்த்தால் ஆளைக் காணோம் சீக்கிரம் வந்து
தொலைடா என்று அவன் வார்த்தைகளை கடித்து திப்ப....

சரிடா மச்சான் என்ன ரொம்ப புகழாத நான் வந்துட்டே இருக்கேன். இன்னும் 5 மினிட்ஸ்ல
உன் முன்னாடி இருப்பேன்.

காது பஞ்சர் ஆயிடுச்சி மா என்று அவன் காதை தேய்த்துக் கேட்டுக்கொண்டே கூற,


அபிராமி சிரித்துக் கொண்டே இந்தத் திட்டு திட்டுறான் உனக்கு கோபமே வராத டா.....

என் நண்பன் என்கிட்ட பாசமா பேசுறான். அது உங்களுக்கு பொறுக்கலையாமா.....

சரி சரி ஏன் காலையிலே இப்படி ஒன்ன வறுத்து எடுக்குறான்.

வேற என்ன அனிதா வந்திருக்கும். அதனாலதான் அப்படி.

ஓ...... இது ரொம்ப நாளா நடந்துட்டு இருக்கு போலயே.

ஆமாம்மா உங்க கிட்ட சொல்லனும்னு நினைச்சேன். ஆனா நான் நினைச்ச அளவு எந்த
முன்னேற்றமும் இல்ல. அப்படியேதான் போய்ட்டு இருந்துச்சு அதனால சொல்லல........ சரி
நீங்க பொண்ணு பாக்கப் போறேன் சொன்ன ீங்களா.. உயிருக்குயிரா ஒருத்தி லவ் பண்ணும்
போது நீங்க வேற பொண்ண கீ து பாத்துரக்கூடாது இல்லையா.... அதுக்காகதான் சொன்னேன்.
ஆனா உங்க பையன் ஒத்துக்க வைக்கிறது அந்த கடவுள் கையில் தான் இருக்கு.

என்னடா இப்படி சொல்ற இப்பதான் நீ கன்வின்ஸ் பண்றேனு சொன்ன.... அது 50% தான்மா
ஒர்க்அவுட் ஆகு மீ திய அந்த ஆண்டவன் தான் பார்த்துக்கனும்.

சரிமா நான் கெளம்புறேன்.

இரு கார்த்திக் இதை எடுத்துட்டு போ.

என்னதுமா இது. கதிருக்கு பிடித்த பால் பாயசமும் கார்த்திக்கிற்கு பிடித்த பணியாரமும்


அதிலிருந்தது. இது எப்பொழுதும் நடக்கும் ஒன்றுதான் என்று கார்த்திக் அதை
எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
அவன் விடை பெற்று அந்தப் பள்ளியின் வளாகத்தில் இருந்து வெளியேறும் பொழுது ஒரு
குட்டிப்பெண் அழுதுகொண்டே இருந்தாள். அதனைப் பார்த்த நம் கார்த்திக்கிற்கு எப்படி
வெளியேற முடியும்.

அந்தக் குட்டிப் பெண் அருகில் போய் அமர்ந்து கொண்டவன். பாப்பாக்கு என்ன வேணும்.

அந்த சின்ன சிட்டு கார்த்திக் கேட்டவுடன் இன்னும் தேம்பித் தேம்பி அழுக.......

அவன் சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு அவளை விட்டு செல்வது போல் பாவனை


செய்ய........

அந்த குட்டி அதனை பார்த்து அம்மா....... என்று அழுக......

அவன் முகம் மலர சிரிப்புடன் திரும்பி துள்ளலுடன் ஓடிவந்து, அவளை தூக்கி சுற்றி அம்மா
வேணுமா உங்களுக்கு அம்மாகிட்ட போலாமா....... அழுக கூடாது. அம்மா இப்ப
வந்திடுவாங்க எங்க சிரிங்க பார்ப்போம் என்று அவன் தூக்கி சுற்றிக்கொண்டே கூற அந்த
குதூகலத்தில் அந்த குட்டி வாண்டு கிளுக் என்று சிரித்தது.

அதனைக் கண்ட கார்த்திக்கும் குதுகலத்துடன் விளையாட்டு காட்ட...சின்ன வண்டு


அழுகையை மறந்து சிரித்துக் கொண்டிருந்தது. குழந்தைகள் உலகம் தான் என்ன ஒரு
அருமையான உலகம் இல்ல......

சிறுது நேரம் விளையாட்டு காட்டியவன் அவளைக் கீ ழே இறக்கி தன் மடியில் அமர வைத்து,
எந்த ஸ்டாண் படிக்கிறீங்க..... அந்த குட்டிப்பெண் பேந்த பேந்த முழிக்க..... அதில் தன்னைத்
தொலைத்தவன். குட்டிப்பெண் கன்னத்தில் அழகாக முத்தமிட்டான்.

என் பேரு கார்த்திக். உங்க பேர் என்ன???


ச்சாலினி என்று அவள் மழலை குரலில் அழகாக கூற,

ஓ...... ஷாலினியா ஸ்வட்


ீ நேம்.

கார்த்திக்கிற்கு ஷாலுக்குட்டியைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு உணர்வு அவன் அடி மனதில்


தோன்றியது. அது என்ன மாதிரி உணர்வு என்று அவனால் பிரித்தறிய முடியவில்லை. இந்த
முகத்தை எங்கோ பார்த்தது போன்ற ஒரு மாயை. காலம் காலமாக ஷாலுவுடன் இருந்தது
போன்ற ஒரு நினைவு. ஏன்??? இப்படி தோன்றுகிறது என்று தனக்குள் யோசித்துக்
கொண்டிருந்தபோது, அவன் அருகிலிருந்த ஷாலு குட்டி அவனை மீ றி பின்னால் பார்வையை
செலுத்தி, அம்மா... அம்மா... அம்மா..... என்று குதூகலமாக கூற அவன் திரும்பி பார்த்து ஷாக்
அடித்ததுபோல் அதிர்ந்து நின்று விட்டான்.

அது வேறு யாருமில்லை நம் தேன்மொழி தான்.

கல்யாணம்தான் ஆகிவிட்டதே என்று நினைத்தால் குழந்தையும் இருக்கா... என்ற யோசனையுடன் அவளையே


அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

தேன்மொழியும் கார்த்திக்கை தான் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் அவள் பார்வையில் ஆச்சரியம் மட்டுமே


நிறைந்திருந்தது.

ஹாய் சார் இங்க என்ன பண்றீங்க,

ஷாலு குட்டி அம்மாவை ஓடிவந்து அணைத்துக் கொண்டது. அவளை தூக்கி வைத்துக்கொண்டே... திரும்பவும்
அவனை நோக்கி சார் என்று கூப்பிட...

மாயையிலிருந்து விடுபட்டவன் போல் சொல்லுங்க...என்று தடுமாற்றத்துடன் கூற,


நீங்க இங்க எப்புடி??? சார்.

கதிர் சாரோடது தான் இந்த ஸ்கூல் தேன்மொழி என்று அவன் விரைப்புடன் கூற,

ஓ அப்புடியா... என்று அவள் ஆச்சர்யமாக பார்க்க.....

ம்ம்.....

தேன்மொழியிடம் அவன் சில கேள்விகள் கேட்டு சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள சரியான சந்தர்பத்திற்கு காத்திருந்தான்.
அவனுக்கு இதற்கு மேல் பொறுமை இல்லை இன்றே அனைத்தையும் சந்தேகத்தையும் தீர்த்து விட வேண்டும் என்ற
வெறி அவனுள் எழுந்தது.

அவளும் ஷாலுவை சமாதனபடுத்தி ஆசிரியரிடம் ஒப்படைத்துவிட்டு, விடைபெற பார்க்கிங் ஏரியாவை அடையும்


போது

தேன்மொழி.....

அவள் திரும்பி பார்க்க கார்த்திக் தீவிர முகபாவனையுடன் நின்று கொண்டிருந்தான்.

எஸ் சார்.....

உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.

சார்...
எஸ் தேன்மொழி கொஞ்சம் இம்பார்ட்டண்ட்...

ஓகே சார். இங்க எப்படி என்று தயங்கி கொண்டே கேட்க....

பக்கத்துல காஃபி ஷாப் இருக்கு என்று அந்த ஷாப்பின் பெயரை குறிப்பிட,

அவளும் சம்மதமாக தலையசைக்க...

அடுத்த ஐந்து நிமிடத்தில் காஃபி ஷாப்பில் இருவர் மட்டும் அமரும் இருக்கையில் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்.

அவள் குழப்பரேகையுடன் அவனை நோக்க...

அவன் பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று தடுமாற,

இதற்கு இடையில் பேரர் வந்துவிட, வேறு வழி இல்லாமல் இருவரும் இரண்டு கேப்பச்சினோவை ஆர்டர் செய்தனர்.

அடுத்த நொடியில் தேன்மொழி கேட்ட கேள்வியில் அவன் ஞே என்று விழித்தான்.

அப்புடி என்ன கேட்ருப்பா. 🤔🤔

ரொம்ப யோசிக்காதிங்க நண்பர்களே. அவ உங்க பேர் என்ன சார்னு தா கேட்டா😆😆


சாரி சார் எனக்கு கதிர் சார் பத்தி தா அனிதா சொல்லிருக்கா. இன்டர்வியூ அப்பகூட உங்க நேம் தெரியறதுக்கான
சூழ்நிலை அமையலயா. இப்ப திடீர்னு எங்கிட்ட பேசனும் காஃபி ஷாப் வர கூட்டி வந்துருக்கீங்க, அது தான் என்று
அவள் அசடு வழிய.......

அவன் அவள் செய்கையில் தன்னை தொலைத்தவனாய், சிறு மென்கையுடன்

கார்த்திக் என்று கூற,

அவள் இப்பொழுது என்ன மாதிரி உணர்ந்தாள் என்று தெரியவில்லை. கார்த்திக்கா..... என்று சிறிது தடுமாற்றத்துடன்
கூற,

எஸ் தேன் மொழி.

தன்னை சமநிலை படுத்தியவள். ஓகே சார் என்ன எங்கிட்ட பேசனும் என்று அவள் நேரடியாக விஷயத்திற்கு வர ,

எப்படி ஆரம்பிப்பது என்று தைரியம் வராமல் இருந்தவன். அவள் கேட்ட தோனியில், எதாவது கேட்க வேண்டும்
என்ற அவசரத்தில் சற்றும் சிந்திக்காது.

உங்க ஹஸ்பெண்ட் நேம் என்ன?? என்று கேட்டுவிட்டு தன்னையே நொந்துக் கொண்டான். எதையும் தெளிவாக
பேசாமல் நேரடியாக ஹஸ்பெண்ட் நேம் கேட்டுவிட்டோமே ஏதாவது தப்பாக எடுத்துக்கொள்வாளா என்று அவன்
யோசித்து முடிப்பதற்குள், அவள்

மை ஹஸ்பண்ட் நேம் இஸ் கார்த்திக் என்று எந்த சலனமும் இல்லாமல் அவள் கூறினாள்.

- தொடரும்

ஹாய் மை டியர் ஃபிரண்ட்ஸ் என்னுடைய முதல் கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு மிக்க நன்றி. ஃபர்ஸ்ட் டைம்
எழுதுறனே எத்தன பேருக்கு நம்ம கதை புடிக்கும்னு ஒரு மனநிலைல தான் இந்த கதைய ஸ்டார்ட் பண்ணே ஆனா 700
மெம்பர்ஸ் படிச்சிருக்காங்கனு நினைக்கும்போது அவ்ளோ HAPPY. கதைய படிச்சிட்டு அதோட நிறை குறைகள
கமெண்ட்-ல சொன்னா எனக்கு ரொம்ப உதவியா இருக்கும் மக்களே. மறக்காமல் கமெண்ட் பண்ணுக ஃபிளீஸ்.
இதுவரை கமெண்ட் பண்ணி என்ன ஊக்கபடுத்துன நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றி💖.

You might also like