Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 11

நெஞ்சாங்கூடு ஏங்குதடி

அத்தியாயம் - 2

உணர்வுகள் உயிர்த்தெழுவதும் உன்னால்........

மரித்துப் போவதும்

உன்னால்......

சில மாதங்களுக்குப் பிறகு,

வி.கே.குரூப்ஸ் கம்பெனிஸ் என்று பொறிக்கப்பட்ட அந்த மாபெரும்


கட்டிடத்தின் உள்ளே அவுடி கார் ஒன்று புயல் வேகத்தில் வந்து நின்றது. காரிலிருந்து
வில்லென புறப்பட்ட நாண் போல் அவன் உள்ளே செல்ல அந்த இறுகிய முகத்தோற்றமும்,
சீறிவரும் நடையும், அவன் கண்களில் தோன்றும் கடுமையும், பார்ப்பவரை அச்சுறுத்தும்
என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. எப்பொழுதும் இருக்கும் தோற்றம் தான் என்றாலும்
முகம் பாறையாக இறுகி இருந்தது. இதனைப் பார்த்த அந்தப் பணியாளர்கள் இன்னைக்கு யார்
மாட்ட போறாங்களோ??? என்று தனக்குள் புலம்பிக்கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட
வேலையினை வெகு சிரத்தையாக செய்ய ஆரம்பித்தனர். ஏனென்றால் அந்த பலியாடு நாமாக
இருந்தால் என்னாகும் என்ற அச்சம்தான்.

உள்ளே சென்றவன் ரிசிவரை எடுத்த அடுத்த நொடி அவனது பி.ஏ. பவ்யமாக வந்து
நின்றாள்.இன்றைக்கு செய்ய வேண்டிய பணியினை அவன் அடுக்கிக்கொண்டே
போக......எப்பொழுதும்போல் இப்பொழுதும் அவன் கம்பீர தோரணை அவளை மயக்க........
மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அதனைப் பார்த்த அவனுடைய முகம் இறுகி, வாட்
ஹேப்பெனிங் ஹியர் என்று அவன் உரத்த குரலில் கத்த........ மாய வலையில் இருந்து
வெளியே வந்தவள்.

பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு பேந்த பேந்த விழித்துக்கொண்டு


நிற்க......
இவள்தான் இப்பொழுது ரசனையுடன் பார்த்தவளா என்று என்னும் அளவிற்கு முக
பாவனையை மாற்ற.....

அதனை பார்த்தவன் பெண்கள் என்றாலே நடிப்பவர்கள் தான் என்ற அலட்சிய


பாவத்துடன், அவளை உறுத்து விழித்து ஆர் யூ லிசனிங் என்று கேட்க.......

எஸ் சார்....... என்று அவள் தடுமாற்றத்துடன் கூற........

ஓகே டேக் நோட்ஸ்....... என்று அவன் கூற கூற இன்றைக்கு செய்ய வேண்டிய பணியை
அவள் பதிவிறக்கம் செய்து கொண்டிருந்தாள்.

பணியினையும் கொடுத்துவிட்டு அவளை நிமிர்ந்து பார்க்க..........

அவள் அதே ரசனை மாறா முகத்துடன் அவனை நோக்க..........

அவன் முகம் கடுமையாக மாறி யூ ஸ்டுபிட் வாட் என்று மேசையை தட்டி ஆவேசத்துடன்
கேட்க......

' அவள் கையில் வைத்திருந்த நோட்ஸ் தவறிக் கீ ழே விழ....... நத்திங் சார் என்று
பயத்துடன் கூறிக்கொண்டே அதனை எடுக்க...... தென் கோ டூ யுவர் சீட் நவ்........ அவன் கூற

தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவள் வெளியே செல்ல போக .......

அனிதா ஸ்டாப்..........

அவள் மலர்ந்த முகமாய் திரும்பி பார்க்க ...

அவன் அதே கடுமையான முகத்துடன் டுடே இன்டர்வியூ மை கண்ட்ரோல் ஓகே. கார்த்திக்


சார் அவுட் ஆப் ஸ்டேசன் .

ஓகே சார் என்று அவள் வாடிய முகத்துடன் செல்ல.........

சிறிது நேரம் அவள் போன திசையை வெறித்தவன் பின்பு அலட்சிய பாவத்துடன் அவன்
வேலையை தொடர்ந்தான்.

அனிதாவின் கைபேசி ஐந்தாவது முறையாக ரிங் ஆகிக்கொண்டே இருக்க......

அவள் அதனை எடுத்து எங்கடி இருக்க....

சாரி அனி செல்லம் டிராபிக்கை மாட்டிக்கிட்டேன்.

இன்னும் டென் மினிட்ஸ் தான் இருக்கு மொழி அப்புறம் என்ன ஆனாலும் எனக்கு தெரியாது.
ஓகே....... ஓகே....... கூல் பேபி நான் எப்படியாவது வந்துடறேன்.....

ஓகே சீக்கிரம் என்று தொலைபேசியை அணைத்தவள். தலைமேல் விழுந்த அடுக்கடுக்கான


வேலையினை தொடர்ந்தாள்.

அடுத்த பத்து நிமிடத்தில் அவன் அழைக்க....

தானாக முகத்தில் வந்து ஒட்டிக்கொண்ட புன்சிரிப்புடன் அவன் அறையை அடைய...

அவன் எந்த உணர்ச்சியையும் காட்டாது கடமையே கண்ணாக வேலை செய்து


கொண்டிருந்தான்.

பெருமூச்சு ஒன்றை வெளியே விட்டவள் எக்ஸ்க்யூஸ் மீ சார்....

எஸ்..... இன்டர்வியூக்கு எல்லாம் ரெடியா..... ஸ்டார்ட் பண்ணலாமா......

யா சுயர் சார்......

குட்...... நீங்க லிஸ்ட் எடுத்துட்டிங்களா...... டோட்டல் அவ் மெனி மெம்பர்ஸ்......

டோட்டல் டென் சார்.

ஓகே....... யூ கோ...

அவள் சிறு தலைசைப்புடன் வெளியே செல்ல..... அங்கு அவள் தோழியை கண்டவுடன்


முகமலர்ச்சியாக கட்டை விரலை உயர்த்தி காட்ட.....

அதற்கு அவளும் ஒரு கண்ணடித்த்படியே விரலை தூக்கி காட்டினாள்.

இவர்களின் சேட்டையை பார்த்த இன்டர்வியூ வந்தவர்களின் ஒருவன் கிண்டல் சிரிப்புடன்


மொழியை நோக்க......

அதனை பார்த்த மொழி ஒற்றை புருவத்தை உயர்த்தி முறைக்க....

அவன் சிறு சிரிப்புடன் வாயை மூடி சமாதானம் என்பது போல் சைகை செய்ய.......

அது...... என்ற அஜித் வசனத்தை உச்சரித்து கம்பீரமாக அவன் அருகில் உள்ள இருக்கையில்
அமர,

ஹாய் ஐ அம் அர்ஜுன்.

நைஸ் நேம்.

உங்க நேம் சொல்லலையே.

அவசியம் சொல்லனுமா.
அவன் தோள்களைக் குலுக்கி பிரண்ட்ஸ்.

ம்ம்ம்..........அப்ப சொல்லலாம் தேன்மொழி.

ஸ்வட்
ீ நேம்.

தேங்க்யூ.

நெடுநெடுவென்று வளர்ந்த உருவம் ஒன்று தனது கம்பீர நடையுடன் அந்த கம்பெனியின்


நுழைவுவாயிலில் நுழைந்த நொடி இந்த சம்பாஷனைகள் அனைத்தையும் கவனித்தபடி
கோபத்துடன் உள்ளே நுழைய.....

குட் மார்னிங் சார்..... என்ற வரவேற்பாளினியின் வணக்கத்திற்கு பதில் வணக்கம் எதுவும்


கூறாமல் இறுகிய முகத்தையே பரிசாக அளிக்க,......

கார்த்திக்கை பார்த்த வரவேற்பாளினி சிறு குழப்பத்துடன் நின்றாள்.

ஆம் அவன் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பவன் பணியில் எந்த சந்தேகம்


என்றாலும் சிறு முகச்சுளிப்பு இல்லாமல் பொறுமையாக நிதானமாக எடுத்துரைப்பதில்
வல்லவன் என்று கூறலாம். அப்படிப்பட்ட கார்த்திக் இன்று கோபமாக செல்வது என்றால்
யாராக இருந்தாலும் குழப்பம் வர தானே செய்யும். அதுபோல் அனைவரிடமும் அன்பாக
பழகுவன்.

ஆனால் அதற்கு நேர்மார் கதிர் அனைவரிடமும் கடுமையாக நடந்து கொள்வான் முக்கியமாக


பெண்களை கண்டால் அவனுக்கு ஆகவே ஆகாது எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வருமோ
என்று நமக்கே தெரியாது. அவனுடைய பார்வையே எதிரில் இருப்பவர்களை இரண்டடி தள்ளி
நிற்க வைக்கும். கார்த்திக் அன்பானவன். கதிர் முரடன்.

இப்படி இருவேறு குணாதிசயங்கள் கொண்ட இருவரையும் இணைத்தது எது??.


அனைவருக்கும் ஆச்சரியம் தான் இவர்கள் நட்பு.

கோப முகத்துடன் உள்ளே வந்து கார்த்திக்கை பார்த்து கதிருக்கு ஆச்சர்யம் தான். ஏனென்றால்
கார்த்திக் அவ்வளவு எளிதில் கோபம் கொள்ள மாட்டான் அவனையே கோபம் கொள்ள
செய்தது எது.

டேய் மச்சான் என்னடா........

என்ன.........

ஓய் உன்ன நான் குப்தா கம்பெனிக்கு ஆர்டர் எடுக்க தான் அனுப்பினேன். இங்கே என்னடா
பண்ணிட்டு இருக்க........
அப்படி வந்ததுனால தான பல விஷயம் தெரிஞ்சது.

என்ன விஷயம் உனக்கு தெரிஞ்சது.

அது உனக்கு எதுக்கு.

ஏ லூசு எதுக்கு வந்ததிலிருந்து சம்பந்தமே இல்லாம பேசிட்டு இருக்க...

சம்பந்தப் படுத்த முடியாமல் தான் பேசிட்டு இருக்கேன்.

சரி ஓகே நீ ரூம்ல ரெஸ்ட் எடு நான் போய் எலுமிச்சம்பழம் எடுத்துட்டு வந்துடுறேன்.

கோபத்தினை கைவிட்டவன் குழப்ப ரேகையுடன் நண்பனை நோக்கி எலுமிச்சம்பழம் எதுக்கு.

உனக்கு தான் மச்சான். கொஞ்சம் மரகளண்ட மாறி பேசிகிட்டு இருக்கியா அதுதான் எலுமிச்சம்
பழத்தை ரெண்டா வெட்டி உச்சந்தலையில் வைத்து நர நரனு தேச்சா எல்லாம்
கிளியராயிடும் மச்சான்.

கொலைவெறியுடன் கார்த்திக் கதிரை நோக்க.....

கதிர் விழுந்து விழுந்து சிரிக்க,

ஆட்களை உள்ளே அனுப்பலாமா என்று கேட்க வந்த அனிதா.......தன்னவனின் சிரிப்பில்


அவனை ரசனையுடன் நோக்கிக்கொண்டு இருக்க......

கதிருக்கு உள்ளுணர்வு ஏதோ தோன்ற திரும்பி கதவை பார்க்க......

அனிதாவை பார்த்தவன் சிரிப்பு இருந்த இடம் தெரியாமல் முகத்தை கடுமையாக வைத்துக்


கொண்டான். என்ன வேணும்.

சார் ஆட்களை அனுப்பலாமா....

எஸ் என்றவன் கம்பீர குரடலுடன் கூற.....

வாடிய முகத்துடன் அவளும் சென்றுவிட்டாள்.

அவளைப் பார்த்த கார்த்திக்கிற்கே மிகவும் பாவமாக இருந்தது. ஏன்டா இப்படி பண்ற அவ


பாவம் தானே.

அதுக்கு நான் என்ன பண்ண முடியும் மேன்.


எனக்கு தெரிஞ்சு அனிதா நல்ல பொண்ணு தாண்டா . உன் வாழ்க்கை நல்லா இருக்கும் நீ
அனிதாவ சூஸ் பண்ணா.

ஸ்டாப்பிட் கார்த்திக் உன்கிட்ட பல தடவை சொல்லிட்டேன் இந்த டாபிக் என்கிட்ட


பேசாதனு.

எவ்ளோ நாள் நீ இப்படி இருக்க போறதா உத்தேசம்.

நீ எவ்ளோ நாள் இருக்க போற.... அதுக்கு கார்த்திக்கிடம் பதில் இல்லை. அவனது வாழ்வு
எதை நோக்கி செல்கிறது என்று அவனுக்கே தெரியவில்லை ஆனால் இப்பொழுது அவளை
கண்டவுடன் அவனுக்கு ஏதோ ஒரு பிடிப்பு வந்த உணர்வு ஆனால் அதை யாருக்கும்
தெரியப்படுத்தவும் விரும்பவில்லை.

கார்த்திக்கின் அமைதியை கண்ட கதிரும் சரி விடு மச்சான் கடைசி வரைக்கும் எனக்கு நீ
உனக்கு நா என்று அவனை இறுக்கமாக கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட........

அட ச்சீ..... நகுந்து போ என்ற அவனை தள்ளிவிட.....

என்ன மச்சான் இப்படி பண்ணிட்டியே என்று அவன் நமுட்டு சிரிப்புடன் கூற......

கதிரை முறைத்துப் பார்த்த கார்த்திக்கும் அவனது முகபாவனை கண்டு சிரித்து விட்டான்


அனைவரிடமும் கடுமையான முகத்துடன் நடந்து கொள்ளும் கதிர் கார்த்திக்கிடம் மட்டும்
அவனது குழந்தைத்தனம் வெளிப்படுவது ஏன்???? அவனிடம் மட்டும் சகஜமாக இருப்பது
ஏன்????? இத்தனைக்கும் கார்த்திக்கு என்ன செய்துவிட்டான் இவனுக்கு??????

அடுத்த நிமிடம் வாடா நீயும் இன்டர்வுயு ல ஜாயின் பண்ணிக்கோ சேர்ந்து செலக்ட்


பண்ணுவோம்.

கண்டிப்பா மச்சான் என்று அவன் காரணத்துடன் கூற இன்டர்வியூ நடக்க ஆரம்பித்தது.

அதில் வந்த எவரையும் கதிருக்கு பிடிக்கவில்லை கார்த்திக் அவர்கள் யாரையும்


கண்டுகொள்ளவே இல்லை அவனுடைய இலக்கு யார் என்று நமக்கே தெரியும்.

அவளின் வரவுக்காக தான் அவன் காத்திருந்தான் எப்பொழுதும் போல கடைசியாக அவளும்


நுழைந்தாள்.

மே ஐ கம் இன் சார்.

அவள் குரல் வந்த மறுநொடி கார்த்திக்கின் முகம் கடுமையை பூசிக்கொண்டது.

ஆனால் கதிர் எப்பொழுதும் பெண்களை கண்டாலே வெறுப்பவன் இவளை கண்டவுடன் அவன்


முகத்தில் ஒரு கனிவு ஏன் என்று அவனுகுமே தெரியவில்லை. அமைதியாக யெஸ் கம்
இன் என்று கூறியவன் அமர சொல்ல.
அவள் உள்ளே வந்து அமரும் வரை குனிந்தபடியே இருந்தவன் அப்பொழுதுதான் நிமிர்ந்தான்.

அவனை கண்ட அடுத்த நொடி அவள் அதிர்ச்சியுடன் மிரண்ட விழிகளுடன் அவனை


நோக்கினாள். பின்பு தன்னை சமன் செய்து தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,
சர்டிபிகேட்டை கதிரிடம் நீட்ட.....

அதனை பார்த்தவன் கேள்வி கேட்க விளையும் பொழுது கார்த்திக் கதிரின் கையை பிடித்து
தான் பார்த்துக் கொள்வதாக சைகை செய்துவிட்டு அவன் அவளிடம் கேள்வி கேட்க
தொடங்கினான்.

உங்க பெயர் என்ன??? என்று கேட்க....

( அது தெரியாம தான் சிஸ்டர்கிட்ட என் பேர் சொல்லி கேட்டானா லூசு லூசு......என்று
தனக்குள் புலம்பிக்கொண்டு)

தேன்மொழி சார் என்று அவள் சிறு சிரிப்புடன் கூற.....

பேரு தானே கேட்டேன் அதுக்கு எதுக்கு இப்படி இளிச்சுட்டு இருக்கீ ங்க....

தேன்மொழிக்கு சுறுசுறுவென்று கோபம் வேற கண்ணை மூடி தன்னை சமன் செய்து


கொண்டாள்.

ஓகே என்ன படிச்சு இருக்கீ ங்க......

பிஎஸ்சி கம்ப்யூட்டர் சார்.

உங்க அம்மா அப்பா என்ன பண்றாங்க......தெரிந்தும் கேட்டான்.

சிறிதும் சலனமில்லாமல் ஐ டோண்ட் ஹவ் பேரண்ட்ஸ் சார்.

அவள் ஒவ்வொரு பாவனையையும் பார்த்து கொண்டு இருந்தவன். அப்பொழுது தான் மேல்


நெற்றியில் உள்ள குங்குமத்தை பார்த்தவன். கல்லாய் இறுகி போனான்.

திருமணமானவள் என்ற நினைவே அவனுக்கு கசந்தது.

ஆர் யூ மேரிட்?? இன்று அவன் கரகரப்பான குரலில் கேட்க........

அவள் முகத்தில் எந்த மாறுதலும் இல்லாமல் எஸ் சார். என்று கூற

இதற்கு மேல் அவனால் எந்த கேள்வியும் கேட்க முடியவில்லை.

யூ ஆர் அப்பாயின்டட்...... நாளைக்கு வந்து ஜாயின் பண்ணிக்குங்க.

அவள் நம்ப முடியாத அதிர்ச்சியுடன் சார்.


யூ மே கோ நவ் மிஸஸ் தேன்மொழி.

அவள் முகத்தில் மலர்ந்த சிரிப்புடன் இருவரிடமிருந்து விடைபெற்றாள்.

ஆனால் கார்த்திக்கால் சிரிக்க முடியவில்லை அமைதியாக அந்த இடத்திலேயே


அமர்ந்திருந்தான்.

கதிர் தன் தொண்டயினை செரும........... அப்பொழுதுதான் கதிர் என்ற ஒருவன் அங்கு


இருப்பதையே அவன் உணர்ந்தான் திரும்பி அவனைப் பார்க்க அவன் இவனை தான்
கூர்மையான விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

இவன் பேச வாய் எடுக்க முன் சோ இவுங்கதா அந்த தேன்மொழியா????

அவன் கசந்த புன்னகை ஒன்றை சிந்த...........

இனிமே நீ வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு


புரிஞ்சுதா உனக்கு எதுக்கு நீ அவங்களுக்கு அப்பாயின்மென்ட் கொடுத்த...... தினமும் பார்த்து
பார்த்து இப்படி ஃபீல் பண்ணிட்டு இருக்க போறியா...... இதையெல்லாம் என்னால பார்க்க
முடியாது. தயவு செஞ்சு அவங்க அப்பாயின்மென்ட் ஃபர்ஸ்ட் கேன்சல் பண்ணு.

அவன் முகத்தில் கஷ்டப்பட்டு சிரிப்பை வரவழைத்து கொண்டு,அவகிட்ட நா தப்பான


எண்ண்தோடு பேச மாட்டேன் போதுமா. ஆனா அவளோட முகத்த பார்த்தா எனக்கு நிம்மதி
கிடைக்குது அந்த சான்ஸ் நான் கெடுக்க விரும்பல.

கதிர் முகத்தில் கனிவுடன் ஓகே மச்சான். அப்புறம் ஏன் ஃபீல் பண்ற. நீ இப்படி இருந்தா
appointment ஆர்டர் கேன்சல் பண்ணிடுவேன் என்று கோபமாக இருப்பது போல் அவன்
கூற...... அவன் கழுத்தை இறுக்கி அணைத்துக் கொண்டான் கார்த்திக். ஆனா முடியல மச்சான்
ரொம்ப வலிக்குது.

நண்பனுக்கு வாழ்க்கையை நினைத்த கதிரும் எதுவும் பேசத் தெரியாமல் நண்பனின்


முதுகை தடவி இதுதான் வாழ்க்க மச்சான் ஏத்துக்க பழகிக்கோ.

அவன் மீ து நேரம் கதிரின் அணைப்பிலே இருக்க இது சரிப்பட்டு வராது என்று நினைத்தவன்
மச்சான் ஒரு கிஸ் பண்ணவா.....

ச்சீ....என்று அவன் அணைப்பிலிருந்து விலகி அவன் முதுகில் சரமாரியாக அடி வைக்க....

சரி வா வா மச்சான் நம்ம திரும்பவும் கட்டிக்கலாம் நீ தான் கஷ்டமா இருக்குன்னு சொன்னல


வாடா மச்சான் என்று கதிர் கார்த்திக்கை நெருங்க....

டேய் பக்கத்துல வந்த கொன்றுவேன் அங்கேயே இரு என்று அவன் தப்பித்து கதவை நோக்கி
ஓட .........
அங்கு வழக்கம் போல் அனித்தா நின்றுகொண்டிருக்க.........

அதைப்பார்த்த கார்த்திக் எஸ் கமின் அனிதா.......என்று கூறிக் கொண்டே கதிர் அருகில்


அமர.....

என்னடா மச்சான் பக்கத்தில வந்துட அப்ப உனக்கு ஓகே வா மச்சி.....

டேய் அனிதா வந்துருக்காடா......

என்ன மச்சான் எஸ்கேப்பா என்று குறும்பு சிரிப்புடன் அனிதா பக்கம் திரும்பி, எஸ் அனிதா
சொல்லுங்க என்று அவன் சிரிப்பு மாறாமல் கேட்க,

எங்கே அவளுக்கு வார்த்தை வரும் முதன் முதலாக தன்னை பார்த்து சிரிப்புடன் பேசியது
தன்னவன் தானா ......இல்லை நான் கனவுலகத்தில் எங்காவது இருக்கிறேனா........ என்று ஃபிரீஸ்
ஆகி அவள் நிற்க,

அதை கவனித்த கதிர்...... முகத்தை மாற்றிக் கொண்டு டேபிளை ஓங்கி தட்ட....

அதில் மோன நிலையை கலைந்தவள். திருதிருவென்று முழிக்க...... அவள் முழித்த முழியில்


கதிர் இதழோரத்தில் குறுநகை வந்ததோ.....

சார் லஞ்ச்.........

ஓ... ஒகே நீங்க போங்க.......

அவள் மந்திரித்த கோழி போன்று அறையைவிட்டு வெளியேற.....

ஏன்டா அந்த பொண்ண போட்டு இந்த பாடு படுத்துற..

நா என் வேலைய தான் செய்றேன்.

ம்க்கும்...... கொஞ்சம் அன்பா பேசுனா தான் என்ன......

ஏன்டா உன்ன மாறி நானும் பைத்தியம் புடிச்சி அழையனுமா........ இந்த காதல் கன்றாவிலாம்
என்ன நெருங்க நா விடமாட்டேன் காட் இட்.

மச்சான் எனக்கு என்னமோ நீ சீக்கிரமாவே காதல் நோயாள அட்டாக் ஆகப் போறனு பச்சி
சொல்லுது.

என்ன மச்சான் பசி வந்தா சொல்லுடா இப்புடி பஜ்ஜி சொல்லுது வட சொல்லுதுனு. என்ன
கலாய்க்காதடா என்று அவன் உரக்க சிரிக்க.......

கார்த்திக் தான் தலையில் அடித்துக் கொண்டான்.

இப்படியே இனிமையாக அவர்களது அன்றைய பொழுது கழிய .....


மறுநாள்........

டிப்டாப் ஆக உடை அணிந்து 7 மணிக்கே ரெடியாகி நின்றுகொண்டிருந்த கார்த்திக்கை......


வழிவிரித்து கதிர் நோக்க...

என்ன மச்சான் டிசர்ட் ஓட சுத்திட்டு இருக்க....... உனக்கு வேலையில கொஞ்சம் கூட


சின்சியாரிட்டி இல்லயே மச்சான் என்று அவன் கவலைப்படுவது போல் தாடையை வருட_.....

அட நாயே காலங்காத்தால ஏன் பீபி ஏத்தவே இப்புடி சுத்திட்டு இருக்கியா என்று அவன்
கையில் கிடைத்த பொருட்களை தூக்கு அவன் மேல் வச.....

டேய் கொலகாரி பாவி........ என்ன விட்டுடா -.... என்று அவன் ஓடிச்சென்று கார் நிற்கும்
இடத்தை அடைந்தான். ஏதோ உற்சாகம் அவன் மனதில் ஊற்றாக பெருக... அதே வேகத்துடன்
அவன் காரினை இயக்கினான்.

இன்று அவனுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது என்பதை அவன் அறியவில்லை.

கொட்டும் மழை காலம்

உப்பு விக்க போனே .........

காத்தடிக்கும் நேரம் மாவு

விக்க போனே ............

தப்புக்கணக்கைப் போட்டு தவித்தேன்

தங்கமே ஞான தங்கமே.........

(திரைப்படம் - அபூர்வ சகோதரர்கள்)

(பாடல் - உன்ன நெனச்சேன)

- தொடரும்

You might also like