Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

பெறுனர்:

The Secretary,
Tamil Nadu Electricty Regulatory Commission
Chennai-32

பொருள்: நலிவடைந்து வரும் தமிழக அரிசி ஆலைத் தொழில் – மின்


கட்டண உயர்வில் இருந்து விளக்கு கோருதல் - தொடர்பாக

அன்புடையீர் , வணக்கம்,

அரிசி தமிழக மக்களின் அத்தியவாசிய உணவாகும். தமிழக மக்கள் விரும்பி


உண்ணும் சன்ன ரக அரிசிக்கான நெல்லுக்கு நாங்கள் அண்டை மாநிலங்களான
கர்நாடக, ஆந்திரா மற்றும் தெலுங்கான ஆகியவற்றையே சார்ந்துள்ளோம். நெல்லை
அம்மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து கொண்டு வருவதால் அரிசியின்
அடக்க விலையும் அதிகரிக்கிறது. மேலும் அம்மாநில அரிசி ஆலைகளும் தங்கள்
தயாரிப்பை பெரும் அளவில் ( In large quantity) விலை குறைவாக தமிழகத்திலேயே
சந்தைப்படுத்துகின்றன. இதனால் எங்கள் அரிசி ஆலைத்தொழில் நலிவடைந்து
வருகின்றது.

இச்சூழ்நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO)


அரிசி ஆலைகள் உபயோகித்து வரும் LTCT(IB) இணைப்புகளுக்கு கீ ழ்க்கண்ட
வகையில் மின்சார கட்டணத்தில் மாற்றம் செய்ய உத்தேசித்துள்ளது.

1. LT இணைப்புகளுக்கான நிலை கட்டணம் KW ஒன்றிற்கு ரூ:35 என்று உள்ளதை


0.50 KW ரூ:100, ABOVE 50-100W ரூ:325, ABOVE 100 KW ரூ:600 என்ற வகையில் உயர்த்த
உத்தேசிக்கப்பட்டுள்ளது.
2. LT இணைப்பிற்க்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றிற்கு ரூ:6.35-ல் இருந்து
ரூ:7.50 ஆக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
3. LT இணைப்புகளில் PEAK HOURS-ல் பதிவாகும் மின்சார பயன்பாட்டிற்கு
கூடுதலாக 25% கட்டணம் வசூலிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட விதத்தில் மின் கட்டணம் மாற்றம் செய்யப்பெற்றால் பருவ


காலத்தை சார்ந்து இயங்க கூடிய அரிசி ஆலை தொழில் மிகவும்
பாதிப்படையும் அரிசி ஆலை தொழில் பருவ காலத்தை சார்ந்து
இயங்குவதாகும். வருடம் முழுவதும் ஒரே அளவிலான தயாரிப்பை (CONSTANT
PRODUCTION) எங்களால் செய்ய இயலாது. வருடத்தில் 3 மாதங்கள் மட்டுமே
நெல் அறுவடை காலம் முழுமையாக இயங்கக் கூடிய எங்கள் தொழிலுக்கு
நிலை கட்டணத்தை பல மடங்காக உயர்த்தினால் எங்கள் தொழிலை
விவசாயத்தின் நீட்சியாக கருதி எங்கள் தொழிலுக்கென ஒரு
வரையறையை (CATEGORY TANGEDCO)-வில் நிரந்தரமாக ஏற்படுத்தி தருமாறு
கேட்டுக் கொள்கிறோம்.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மிகுதியான வாராக்கடனை
எங்கள் தொழில் எதிர்கொண்டதால் வங்கியில் நாங்கள் பெற்ற கடன்
தொகைக்கே மாத தவணையை செலுத்த இயலாத சூழ்நிலையில்
உள்ளோம். இந்த நிலையில் இயங்காத மாதத்திற்கும் நிலை கட்டணமாக,
ஏற்கனவே செலுத்தி கொண்டுள்ளதைவிட பல மடங்கு கூடுதலாக
செலுத்துவது இயலாததாகும். எனவே தற்சமயம் TANGEDCO உத்தேசித்துள்ள
மின்சார கட்டணம் மற்றும் நிலை கட்டண உயர்விலிருந்து அரிசி
ஆலைகளுக்கு முழுமையாக விளக்கு அளிக்க வேண்டும் என தங்களை
அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள,

You might also like