Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 10

ஏட்ரியன்

-நவமதன்

அதிகாலை மணி நான்கு. அன்லைய நாளிற்கான தயாரிப்புகள்


ஆரம்பமாகி ககாண்டிருந்தது. தன் உலை அணிந்து இன்லைய திட்ைத்தின்
படி தனக்கு ததலவயானலத அவன் எடுத்து லவத்துக் ககாண்டிருந்தான்.
சிறிய ரக துப்பாக்கிகள், அதன் குண்டுகலை தன் தபண்டில் லவத்தான்.
லரபிலை ததாளில் மாட்டிக் ககாண்ைான். குண்டுகள் கபல்ட்டில் இைம்
பிடித்தன சண்லை கத்திகள் ஒன்று கால் உலரயில், இன்கனான்று இடுப்பில்.
தலைக்கவசம் எடுத்து துலைக்கும் கபாழுது “ஏட்ரியன் இங்கு வா..” என்று
அலைப்பு, அதன்பின் சத்தமாக மணி ஒலிக்க ஆரம்பித்தது இன்லைய
நாளின் தாக்குமுலைக்கான திட்ைமிைல் கசால்ைப்பை தபாகிைது. தபாரின்
முன்கை வீரனின் பாய்ச்சதை அதன் வீரியத்லத கபரிதாகும் என்பலத
அறிந்த தைபதி தாக்குதலில் திட்ைமிைலை விைக்குகிைார். எக்காரணம்
ககாண்டும் பின்வாங்கக் கூைாது. இத்தலன ஆண்டுகள் கெர்மன் பலை
தங்கள் மீது நைத்திய வன்முலைக்கு தீர்வு காணாமல் விைக்கூைாது என்று
ஒவ்கவாரு வீரனின் மனதிலும் தீ சுைன்று ககாண்டிருந்தது.

பலையின் சி பிரிவு அந்தப் பக்கம் இருக்கிைது. இன்று கெர்மன்


பலையின் ஏைாம் பிரிலவ சுற்றி வலைத்து தாக்குவது தான் திட்ைம், மூன்று
பக்கமும் தவகமாக பிரஞ்சு மற்றும் பிரிட்ைன் பலைகள் கநருங்கி
விட்டிருந்தன. இன்னும் ஒரு வாரத்தில் இந்த ஏைாம் பிரிலவ அழித்து விை
தவண்டும் என்பதத தைபதியின் திட்ைம். தபார் ஆரம்பித்து ஐந்து வருைம்
கழித்து இப்தபாதுதான் கவற்றி எட்டிவிை முடியும் என்ை நம்பிக்லக, அவலர
தவகமாக கசயல்பை லவத்தது. இந்த வாய்ப்லப விட்ைால் திரும்ப
கிலைக்காது என்பது அவருக்கு கதரியும்.
ஏட்ரியனுக்கு இது கவறும் தன் நாட்டிற்கான தபார் மட்டும் இல்லை,
தன் தந்லதயின் இைப்பிற்கு பழி தீர்க்கும் ஒதர வாய்ப்பு. வாழ்வின் அத்தலன
கனவுகலையும் தபாருக்கு இலரயாக்கிவிட்டு இப்படி பிகரஞ்சுப் பலையில்
தசர காைம் அவலன பணித்தது. ஏததா விலையாட்ைாய் தபாருக்குப்
தபாகிதைன் என்று கிைம்பிய அவர் தந்லத, அடுத்த மூன்று மாதத்தில்
கவறும் கசய்தியாக வந்தார். அத்ததாடு கெர்மன் பலைகள் முழு
பிரான்லசயும் ஆக்கிரமித்தனர் என்ை கசய்தியும் வந்தது. பியாதனா மீது
படிந்திருந்த ஏட்ரியனின் லககள் முழுக்க நடுங்கியது. ஒரு மிகச் சிைந்த
இலசயலமப்பாைராக தவண்டிய ஏட்ரியன், கமாத்த வீதைாடு அவனுலைய
கனவும் பற்றி எரிய இரதவாடு இரவாக ஊர்விட்டு தபாய் பதுங்கினான்.

கமாத்த நாடும் கெர்மன் கட்டுப்பாட்டில் இருக்க, தன் முழு


தகாபத்லதயும் அவர்கள் மீது திருப்பினான். இருந்தும் அவனால் எதுவும்
கசய்ய முடியவில்லை. உயிருக்கு பயந்தத வாை தவண்டிய கட்ைாயம். மூன்று
வருைம் கழித்து இப்கபாழுது தான் அகமரிக்க மற்றும் பிரிட்ைன் பலைகள்
உதவியுைன் பிகரஞ்சு ராணுவம் உயிர் கபற்ைது. பை வீரர்கள் இலணந்து
உயிருள்ைவலர என்ை நிலைப்பாட்டுைன் தபாராை இருக்கின்ைனர்.
குண்டுகள் முைங்க பை பலைகளுைன் சண்லையிட்ைனர். எங்கு தகட்ைாலும்
துப்பாக்கி சத்தம். தபாதர விதியான பின், ஏட்ரியன் பின்வாங்குவதாக
இல்லை.

கதிரவன் உதித்த முதல் கநாடிதய பிகரஞ்சுப் பலையின் தாக்குதல்


கதாைங்கிவிட்ைது. பிரிட்ைன் வான்பலை குண்டுகள் கபாழியும் சத்தம்
இவர்கலை கநருங்கியவுைன் பிகரஞ்சுப் பலையின் லதரியம் பைமைங்கு
கபருகியது. ஒவ்கவாரு வீரனும் கமாத்த கெர்மனிலயயும் இன்தை
லகப்பற்ை தவண்டும் என்ை கவறிதயாடு முன்தனறினர். கெர்மன் வீரர்கள்
அைவில் குலைந்து இருந்தாலும், இத்தலன வருைப் தபார் பயிற்சி
அவர்களுக்கு துலண புரிந்தது. தங்கள் லகவசம் இருந்த அலனத்து
குண்டுகலையும் ,ைாங்கிகலையும் பயன்படுத்தி ஒரு மிகப்கபரிய தடுப்பு
அரண் தபால் தபாரிட்ைனர்.

தபாரின் பதட்ைம் தநரம் ஆக ஆக கூடிக்ககாண்தை தபானது. சிறு


இலைகவளி கூை இல்ைாமல் எங்கும் குண்டுகள் கவடித்து சிதறும் சத்தம்.
எல்ைா திலசகளிலும் துப்பாக்கிகள் சிதறிக் ககாண்டிருந்தன.
கண்ணிகவடிகள், வான் குண்டுகள் ைாங்கியில் இருந்து வரும் கநருப்பு
என்று இருக்க, வீரர்கள் பைர் கவறும் உைைாக மாறி ககாண்டு இருந்தனர்.
உைல் தமல் காயப்பட்ை வீரர்கள் அைறும் ஓலச மற்ை வீரர்கலை கால் நடுங்க
கசய்தது. உணர்வு மரத்துப் தபாய் தபாலர தான் கதாைர்ந்தார்கள். சதகாதரன்
தபால் தநற்று இருந்தவன், கண்முன் இைந்து கிைந்தாலும் எதிரி நாட்டு
வீரரின் உயிர் தான் இருதரப்புக்கும் ததலவயாக பட்ைது. உைல் சிதறி ரத்தம்
எல்ைா இைமும் பரவிக் கிைக்க பிரஞ்சு பலை மிகப் கபரிய முன்தனற்ைம்
அலைந்து ககாண்டிருந்தது.

ஏட்ரியன், அவன் பிரிதவாடு நல்ை இைத்தில் இருந்தான். அவன்


பலைக்கு கபரிதாக தசதாரம் இல்லை. இன்லைய தின தபார் முடிய இன்னும்
சிை மணி தநரங்கதை இருக்கின்ைன. அவனுக்கு இன்னும் உள் கசல்ை
தவண்டும் என்ை கவறி இருந்தது. கமாத்தமாக தந்லத நிலனவில் வர
துப்பாக்கி ககாண்டு சுட்டு ககாண்தை இருந்தான். அவனுைன் வந்தவர்கள்
திரும்ப கசல்ை கிைம்பிய தபாதும் அவன் கதாைர்ந்து முன்தனறினான்.
லகயில் இருந்த அலனத்தும் தீராமல் திரும்ப தபாவதில்லை என்பலத
திைமாக்கி ககாண்ைான்.

சூரியன் மலைய இன்னும் ககாஞ்ச தநரம் தான் இருக்கும், தன்


கபல்ட்டில் லவத்து இருந்த கவடிகுண்லை வீசினான். கெர்மன் பலைகள்
அலனத்தும் கடுலமயாக சண்லையிட்டு தசார்ந்து தபாய் இருந்தலத, இவன்
தன் பைமாக எண்ணி குண்டுகலை வீசி ககாண்டு இருந்தான். ஏததா ஒரு
கநாடி மாகபரும் அைைல் சத்தம் அவன் காதுகளுக்கு எட்டியது. கமாத்த
உைலையும் உலுக்கி விடும் அைவுக்கான கதைல் அது.

அந்த காட்சிலய பார்த்த கநாடி ஏட்ரியன் உலைந்து விட்ைான். கெர்மன்


பலை வீரன் வலியின் மிகுதியில் அைறிக் ககாண்டு இருந்தான். அவன்
இைது லக முழுவதும் சிலதந்து சலத எல்ைாம் சுற்றி சிதறி கிைந்தான்.
அைவிை முடியாது அைவுக்கு ரத்தம் அவன் உைல் முழுவதும் பைர்ந்து
அவலன சுற்றி வழிய கதாைங்கியது. பிய்ந்த அவன் உைலில் இருந்து
லகஎலும்புகள் கவளியில் நீட்டிக் ககாண்டு இருந்தது. ஏட்ரியன் வீசிய
குண்டு மரணத்லத விை ககாடிய வலிலய அவனுக்கு ககாடுத்து ககாண்டு
இருந்தது. அத்தலன வலிக்கும் இலைதய தன் கமாத்த வாழ்லவயும் அழித்த
ஏட்ரியலன பார்த்து ஏததா கசால்ை முயன்று ககாண்டு இருந்தான். அவலன
பார்த்து லக நீட்டியும் பின் தன் கநஞ்சில் அடித்தும் கமாத்த யுத்தமும்
திரும்பி பார்க்கும் வண்ணம் இருந்த அவன் அழுலக ஏட்ரியலன
ஆட்ககாண்ைது.

தபாரின் அத்தலன கவறியும் அைங்கி தபாய் பயமும் பதற்ைமும்


அவலன கதாற்றி ககாண்ைது. அவனின் கமாத்த கம்பீரமும் சரிந்து
லககளில் நடுக்கம் பற்றி ககாண்ைது. உயிருைன் இருந்த மனிதலன சலத
தகாைமாக மாற்றி அவன் வலிதயாடு அைறுவலத அவனால் கான
முடியவில்லை. ஏட்ரியன் தன் கத்திலய எடுத்து அவனது வலிக்கு முடிவு
கட்ை எண்ணினான். ரத்த வாலையும் எரிந்த உைலும் அவலன கநருங்க
விைாமல் கசய்தது. வயிறு குமட்டுவலத உணர்ந்தான். இருந்தும் அவன்
தவதலன முடிக்க கத்திலய ஓங்கிய கபாழுது வீரன் அலத தட்டி விட்டு தன்
கநஞ்சில் அடித்து ககாண்டு இருந்தான். அவன் கசால்வது ஏட்ரியனுக்கு
புரியவில்லை, இருந்தும் அவனது கசயலுக்காக வீரனின் சட்லைலய
பிரித்தான். அதில் ஒரு காகிதம் ஏததா ஊரின் வலரபைம் தபால்
திலசகளுைன் இருந்தது. அதன் பக்கத்தில் சிறு கருப்பு கபட்டி. உருண்லை
வடிவத்தில், சிறு நட்சத்திரம் மற்றும் கவள்லை திட்டுகள் ககாண்டு மிக
அைகாய் இருந்தது. கெர்மன் வீரன் அலதயும் காகித்லதயும் காட்டி ககாண்டு
இருந்தான்.

ஏட்ரியனுக்கு புரிந்து விட்ைது. இரண்லையும் தன் லகயில் லவத்து


ககாண்ைான். சம்மதம் தபால் தன் தலைலய தமலும் கீழும் கமல்ை
நகர்த்தினன். அத்தலன வலிக்கும் இலைதய கெர்மன் வீரன் கமல்ை
சிரிப்லப உதிர்ப்பது தபால் இருந்தது அவனுக்கு. சதக் என்று கத்திலய
வீரனின் தமல் இைக்கினான். நீண்ை கநடியதாக இருந்த அழுலககள் ஏக்க
மூச்சாக நீண்டு பின் அைங்கி தபானது. இருண்டு எலததயா தநாக்கி
ககாண்டு இருந்த வீரனின் கண்கலை ஏட்ரியனால் காண முடியவில்லை.
அங்கிருந்து ஓடினான். தன் திைலுக்குள் புகுந்தான். அங்கு தைபதி
ககாடுக்கும் வீறுலர பிடிக்காமல் சலமக்கும் இைம் தநாக்கி ஓடினான்.

ஏட்ரியன், அவன் உைல் முழுதும் நடுங்கியது. அவன் அடிவயிறு ஒரு


இனம் புரியாத வலிலய உருவாக்கி ககாண்டு இருந்தது. தன் முழு பைம்
ககாண்டு அைை தவண்டும் என்ை உணர்வு. கண்ணில் இருந்து நீர், அவலன
அறியாமல் வழிந்ததாடி ககாண்டு இருந்தது. தான் அழிக்க நிலனத்த
பலையின் வீரன் ஒருத்தன், தன்லன பார்த்து ககஞ்சிய கபாழுது, அந்த
கண்கள் ககாடுத்த ரணம் தன்லன முழுலமயாக கவறுக்க கசய்தது. கமாத்த
உைல் சிலதந்து அவன் இைக்க, கூர் ககாண்டு அவன் கண்கள் இவலன
பார்த்தலத தயாசிக்க தயாசிக்க உைல் கவம்லம கூடியது. கெர்மனியின்
அத்தலன குளிரிலும் அவன் உைல் தவர்த்து ககாட்டியது. தனது கமாத்த
உைலும் பார்க்க ககாலை கருவி தபால் உணர்ந்தான். எத்தலன முலை
பார்த்தாலும் அது மாைவில்லை. திடீகரன்று அங்கிருந்து ஓடியவன்
கண்களில் கறி கவட்டும் கத்தி பட்ைது. அலத தூக்கினான். சதக்!!! பின்
நீண்ைகதாரு அலமதி.

மருத்துவமலனயில் அவன் கண் விழித்த கபாழுது அவனால் எை


முடியவில்லை. தன் வைது லக ஏதனா பாரமாய் இருப்பதாக ததான்றியது.
கெர்மன் வீரனும் அவன் சிலதந்த இைது லகயும் நிலனவில் வந்த கபாழுது
கசவிலியர் வந்து அவனுக்கு உணவு லவத்து விட்டு தபானால். அவனால்
தபார்லவக்கும் இருந்த வைது லகலய ககாஞ்சம் கூை உயர்த்த
முடியவில்லை. தன் இைக்லகயால் தபார்லவலய விைக்கி பார்த்த கபாழுது
தான் என்ன கசய்ததாம் என்பலத உணர்ந்தான். கத்தியால் தன் லகலய
கவட்டி எறிந்து விட்ைான். ஏதும் இல்ைாமல் ஒரு குச்சி தபால் தன் லக
கவள்லை நிை துணியால் சுத்தபட்டு கிைந்தலத பார்த்து கதறி அழுதான்.
சிறு வயதில் தன் தந்லதயின் லக பற்றி நைந்த முதல் நலை, பியாதனாவின்
கட்லைகலை தன் லகவிரல்கள் கதாட்ை முதல் பரவசம். வீட்டின் அலனத்து
சுவற்றிலும் பதித்த அவன் லக ஓவியம். அலனத்து நிலனவும் வந்து
அவலன ஆட்ககாண்ைது. மருத்துவரும் கசவிலியரும் விலரந்து வந்து
அவனுக்கு மயக்க மருந்து ககாடுத்து படுக்க லவத்தனர்.

ஒரு வாரம் கழிந்து இருந்தது. இனி தபாரில் அவன் பணி புரிய


முடியாது. அவனது தசலவலய பாராட்டி தைபதி கடிதம் அனுப்பி இருந்தார்.
எல்ைாம் அவனுக்கு கவறுலமயாக பட்ைது. கடிதத்லத கசக்கி தூக்கி
எறிந்தான். முதலில் எைதவ தடுமாறியவன் இப்கபாழுது இைது லக மூைம்
அலனத்து கசயல் கசய்ய கற்று ககாள்ை கதாைங்கி இருக்கிைான். முதலில்
சவரம் கசய்ய சிரமபட்டு முகம் கவட்டி ககாண்ைவன் இப்கபாழுது இருவாரம்
கழித்து எல்ைாவற்றுக்கும் பைக்கப்பட்டு விட்ைான். இருந்தாலும் வைதுக்லக
பார்க்கும்கபாழுது ஏததா தபால் இருக்கும். அடுத்த ஒரு மாதத்தில் அவலன
பிரான்சில் தனி வீடு அலமத்து அங்கு அனுப்பி லவத்தார்கள். நண்பர்கள்,
உைவினர்கள் யாரும் இல்ைாததால் ஏட்ரியனுக்கு அது வசதியாகதவ பட்ைது.

அடுத்த ஏழு மாத தபாரின் முடிவில் கெர்மன் ததாற்று அந்த நாடு


சமமாக பிரித்கதடுக்க பட்ைது. அரசுகள் இலத அலனத்தும் தங்கள்
கபருலமயாகதவ பார்த்தார்கள். பிரான்சு விைா தகாைம் பூண்ைது. இைந்த
வீரர்கள் சார்பாக பை சிலைகள், நிலனவு சின்னங்கள் எழுப்பபட்ைன.
ஏட்ரியன் இலவ எதிலும் கைந்து ககாள்ைவில்லை. அவனது இைக்லகயில்
அந்த பரிசு கபட்டியும் மனதில் அந்த கெர்மன் வீரனின் கண்களும் பதிந்து
இருந்தன. கெர்மனி கசல்ை முடிவு எடுத்து இருந்தான்.

கபர்லின் வந்து இைங்கினான். தபார் முடிந்து ஒரு வருைம் ஆனாலும்


இன்னும் பை இைங்கள் சீரலமக்க பைாமலும் தபாரின் கழிவும் மிச்சங்களும்
அகற்ை பைாமல் மிகுந்த துயரத்துைதனதய மக்கள் வாழ்ந்துனர். பைர் இருந்த
குடியிருப்லப விட்டு அகற்ைபட்டு இருந்தார்கள். எந்த கதாழில் நிறுவனமும்
இல்ைாததால் உயிருைன் மிஞ்சிய பைருக்கும் உணவு மற்றும் தவலை
இல்லை. ததால்வியின் கமாத்த உருவமாக கெர்மனி மாறி இருந்தது.

தனக்கு கதரிந்த பிகரஞ்ச் அதிகாரிகள் மூைம் அந்த காகிதத்தில்


உள்ை இைம் எங்கு இருக்கிைது என்று தகட்டு அங்கு கிைம்பினான். ஊரின்
எல்ைா பகுதியிலும் பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்சு அதிகாரிகள் தான் வழி நைத்தி
ககாண்டு இருந்தார்கள். வான்வழி தாக்குதலில் நிலைய வீடுகள் அழிந்து
இருந்தன. எல்ைா இைமும் கட்ைை கழிவுகைாய் இருந்தது. அவனுக்கு தான்
யாலர பார்க்க தபாகிதைாம் என்று கூை கதரியாது. அவனிைம் இருந்த ஒதர
அலையாைம் அந்த காகிதம் மட்டும் தான். அலத லவத்து இந்த பகுதிலய
கண்டுபிடித்ததத கபரிது.
ஒரு வழியாக அந்த இைம் வந்தலைந்தான். காகித்ததில் உள்ைது தபால்
ககாஞ்சம் கூை இல்லை. முன்பு ஒரு நல்ை வீைாக இருந்து இருக்கும் என்று
கற்பலன கூை கசய்ய இயைாத அைவுக்கு தான் இருந்தது. அதில் யாரும்
இல்லை. எதிர்பார்த்தது தான். ஏட்ரியன் உள்தை தபாயி பார்த்தான். தீக்கு
இலரயான சாமான்கள், உலைந்த சலமயற் கபாருட்கள், ஆங்காங்தக
கண்ணாடி துண்டுகள். அவன் கண்களில் காலுலைந்த தமலச ஒன்று
பட்ைது. அவன் ஒற்லை லக ககாண்டு திைக்க முடியவில்லை. உள்தை பாதி
எரிந்த தாள் நிலைய கிைந்தது. “அன்புள்ை மார்கஸ்” என்று கெர்மனியில்
எழுதி இருந்தது. அதற்கு தமல் அவனுக்கு ஏதும் கதளிவாக இல்லை. தூக்கி
தபாட்டுவிட்டு நைக்கும் கபாழுது அவன் கண்களில் அது கதன்பட்ைது.
கவள்லை நிை பியாதனா கட்லை ஒன்று உலைந்து கிைந்தது. சிறிது தநரம்
அலத உற்று பார்த்தவன் ஏததா நிலனவில் அலத தன் பாக்ககட்டில் தபாட்டு
விட்டு நைந்தான்.

அங்கு காவளில் இருந்த வீரனிைம் தகட்ை கபாழுது அவர்கள் எல்ைாம்


தவறு இைங்களுக்கு மற்ைபட்ைலத கூறி அந்த வீட்டில் ஒரு கபண்மணி
மட்டும் இருந்ததாக அவள் இருக்கும் இைம் ககாடுத்து அனுப்பினான்.
ஏட்ரியன் அங்தக கசன்ை கபாழுது வாசலில் ஒரு ஏழு வயது சிறுவன்
விலையாடி ககாண்டு இருந்தான். தபாதிய உணவு இல்ைாமலும் கமலிந்து
தபாய் சட்லை இல்ைாமல் அவலன பார்க்க ஏட்ரியனுக்கு பரிதாபமாக
இருந்தது. இவலன பார்த்து பயந்து அவன் வீட்டுக்குள் ஓடிவிட்ைான். வீடு
என்கைல்ைாம் கசால்ை கூைாது. சிறு திைல் தபால் அலமத்து சுற்றி கசங்கல்
அடுக்கி மட்டும் லவக்கபட்டு இருந்தது. அதிலிருந்து ஒரு கபண் வந்தாள்.
ஏட்ரியனுக்கு எப்படி தன்லன அறிமுகம் கசய்து ககாள்வது என்று
கதரியவில்லை. அவள் காலை பிடித்து அந்த சிறுவன் நின்று ககாண்டு
இருந்தான்.
ஏட்ரியன் பலைய வீட்டில் இருந்து எடுத்த பியாதனா கட்லைலய
முதலில் நீட்டினான். அவள் முகத்தில் ஒரு தகள்வி குறி மட்டும். “அவர்
இப்கபாழுது இல்லை”, கூறிய கநாடி உள்தை தபாக கிைம்பினாள். “கதரியும்.
அவலன ககான்ைது நான் தான்”. கநாடியில் நின்று திரும்பினாள். அவள்
எதுவும் கசால்ைவில்லை. கண்கள் மட்டும் “ஏன்” என்ை தகள்விதயாடு
கதாக்கி நின்ைது. ஏட்ரியன் எதுவும் தபசாது அந்த கருப்பு நிை கபட்டிலய
அவளிைம் ஒப்பலைதான்.

அலத கதாட்ை கநாடி அது என்னகவன்று அவளுக்கு கதரியும்.


திைந்து பார்த்த கபாழுது ஒரு தமாதிரம் மற்றும் ஒரு கடிதம். தன் லபயன்
காதில் ஏததா கசால்லி வீட்டுக்குள் அனுப்பினாள்.

“அன்புள்ை ஏடில்!!! இலத நீ படிக்கும் கபாழுது நிச்சயம் நான்


உயிருைன் இருக்க மாட்தைன். பிரஞ்சு பலை எங்கலை சூழ்ந்து விட்ைது.
தவடிக்லகயாக உள்ைது, இந்த தபார் முடிந்து விடும் தவகத்தில் உன்லன
சந்தித்து ஆயிரம் முத்தம் தர காத்திருந்த நான், உன் கண்கலை கூை
காணாமல் தபாகப் தபாகிதைன். உன்லன முதன்முதைாக பார்த்த அந்த
கநாடி, அன்று நீ அணிந்து இருந்த பச்லச நிை சட்லை இன்றும் என்
கண்களில் தான் இருக்கிைது. காதலை கசான்ன அந்த கநாடியில் என்
தலை வருடி நீ ககாடுத்த முத்தத்லத எப்படி மைப்தபன். இருந்தும் நூறு
வருைம் உன் லகப்பிடித்து இந்த உைகம் சுற்றி காட்டுதவன் என்ை வாக்லக
கபாய்யாக்கி தபாகிதைன். நாம் வாழ்ந்த இந்த 3 வருை வாழ்க்லக நிலனத்தத
நான்கு வருைம் ஓடிவிட்ைன. இனி உன்லன காணாது தனிதய இைக்க
தபாகிதைன். நம் மகன் என்லன தகட்கும் கபாழுது என்ன கசால்வாய் ஏடில்!!.
இத்தலன கஷ்ைதத்லதயும் வலியும் மட்டுதம ககாடுத்த என்லன மன்னித்து
விடு ஏடில்! நான் தபாகிதைன்!! உன்லன விட்டு ஓதரடியாக தபாகிதைன்!!”
படித்து முடித்த கபாழுது அவைால் அழுலக நிறுத்த முடியவில்லை.
தன் கமாத்த வாழ்வும் எரிந்து அலணந்ததாய் உணர்த்தாள். சாய்ந்து ஆை
தன் காதைன் ததாள் இல்லை என்று உணர்ந்த கபாழுது இத்தலன வருைம்
தசமித்து லவத்து இருந்த கமாத்த அழுலகலயயும் ககாட்டி தீர்த்தாள். ததம்பி
அழுது முடித்த அவைால் எை கூை முடியவில்லை. தன் பியாதனா கலையால்
ஊலர மயக்கும் மார்க்கஸ், முழு வாழ்வும் தன்னுைன் வாை கனவு ககாண்ை
மார்க்கஸ், எல்ைா இன்பதுன்பதிலும் தன்னுைன் இருக்க சத்தியம் கசய்த
மார்க்கஸ் கலைசியாக அவளுக்கு ககாடுக்க முடிந்தது ஒரு காகிதமாய்
முடிந்து தபானது.

வீட்டின் வாசலில் இருந்த பார்த்து ககாண்டிருந்த ஏடிலின் மகன் தன்


அம்மா இப்படி அழுது பார்த்தது இல்லை. பை இரவுகள் சிறிய விம்மைாக
இருந்து இருப்பாள். ஆனால் இப்கபாழுது அவள் ககாடுத்த கட்ைலை அவன்
நிலைதவற்ை தவண்டும். வீட்டில் இருந்து தவகமாக ஓடி வந்தவன்
ஏட்ரியனின் கநஞ்சில் அந்த கத்திலய இைக்கினான். ஒரு கணம் அங்தக
எந்த தபச்சும் இல்லை.

ஏட்ரியன் அந்த கத்திலய இனம் கண்டு ககாண்ைான். மார்க்கஸ்


கநஞ்சில் தான் குத்தி இைக்குன அதத பிரஞ்சு கத்தி. காைம் எவ்வைவு
தாழ்ந்தாலும் தபார் அலனவருக்கும் ஒதர முடிவு தான் தருகிைது. ஏட்ரியன்
உதட்டில் ஒரு கபரும் புன்னலக.

You might also like