அன்னை கதிஜா ரலி

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 27

அன்னை கதிஜா நாயகி (ரலி) வாழ்க்கை

வரலாறு

அன்னை கதீஜா (ரலி)


அவர்கள் கி.பி. 556 ஆம் ஆண்டு மக்காவில் பிற
ந்தார். இவரது தந்தை குவைலித் பின் அஸத்.
தாயார் பாத்திமா பின்த் ஸாஇதா இவருக்கு
இரு சகோதரிகள். அவர்கள் ஹாலா பின்த்
குவைலித், ருகையா பின்த்
குவைலித் ஆகியோராவர்.
கதீஜா (ரலி) அவர்கள் அன்றைய மக்களிடம்
நன்மதிப்பைப் பெற்றவராகத் திகழ்ந்தார்கள்.
இவர் அறபிகளால் மதிக்கப்படும் உயர்
குலத்தைச் சேர்ந்தவர். பெண்களிடம்
அவசியம் இருக்க வேண்டிய ஒழுக்கத்தை
நிறைவாகவே பேணி வாழ்ந்து
வந்ததால் ‘தாஹிரா’ – பரிசுத்தமானவள்
என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டு
வந்தார்கள்.
அந்தக் கால கட்டத்தில் நபி (ஸல்) அவர்கள்
பல கூட்டத்தினரோடும் வியாபாரக்
கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வந்தனர்.
அவற்றில் நபி (ஸல்) அவர்களின்
நேர்மையான நடைமுறைகள், நீதியான
கொடுக்கல் வாங்கல்கள் மக்களின்
உள்ளங்களைக் கொள்ளை கொண்டன.
அப்போது நபி (ஸல்) அவர்களை அம்மக்கள்
‘அல்-அமீன்’ – நம்பிக்கையாளர் என்றும்
“அஸ்ஸாதிக்” உண்மையாளர் என்றும்
அழைத்தனர்.

நபியவர்களின் நேர்மை, நாணயம் அறிந்து


தமது வியாபாரச் சரக்குகளை விற்கும்
பொறுப்பைக் கவனித்துக் கொள்ளுமாறு
நபியவர்களை அழைத்து, வணிகத்திற்காக
அனுப்பி வைத்தார்கள் கதீஜா (ரலி) அவர்கள்.
அதற்கிணங்க நபி (ஸல்) அவர்கள் கதீஜா
(ரலி) அவர்களின் வியாபாரப் பொருட்களை
விற்றுக் கொடுத்தார்கள்.
கதீஜா (ரலி) அவர்களது வயது நாற்பதை எட்டி
இருந்தாலும் அவர்களின் செல்வச்
செழிப்பின் காரணமாகப் பெரும் பெரும்
செல்வச் ச ீமான்களைத் திருமணம்
முடித்திருக்க முடியும். ஆனால், தனக்குக் கீழ்ப்
பணியாளராக வேலை செய்த நபி (ஸல்)
அவர்களைத் திருமணம் முடித்து
இவ்வுலகிற்கு அழியாத முன்மாதிரியை
வழங்கினார்கள்.

ஒரு பெண் தனது வருங்காலக் கணவனை


எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும்
என்பதற்கு கதீஜா (ரலி) அவர்கள் ஒரு சிறந்த
முன்மாதிரி. ஒரு மனிதன் எவ்வளவு
கெட்டவனாக இருப்பினும் அவனிடம்
பணமிருந்தால் அவனுக்குப் பெண்
கொடுக்கப் பெருங் கூட்டம் தயாராகிவிடும்.
அவனைக் கணவனாக அடைய எத்தனையோ
பெண்கள் ஆசைப்பட்டுவிடுவார்கள்.
பணத்திற்காக எதையும் தாங்குவேனென்று
பணக்காரனையே மணவாளனாகக் கொள்ள
நினைப்பதுண்டு.
இந்நிலைக்கு முற்றிலும் மாறுபட்டு கதீஜா
(ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். பொன்னையும்
பொருளையும் ஒதுக்கி வைத்துவிட்டு
நீதி, நேர்மை
நிறைந்த, உண்மையுரைக்கின்ற, உயர்
பண்புகளுக்குச் சொந்தக்காரார் ஆகிய
நபிகள் நாயகத்தை மணமுடித்தார்கள்.
இதனால், கதீஜா (ரலி) அவர்களின் வாழ்க்கை
மகிழ்வோடு கழிந்தது.

கதீஜா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள்


மூலமாக காஸிம், அப்துல்லாஹ்
ஸைனப், உம்மு குல்ஸூம், பாத்திமா, ருகையா
ஆகிய குழந்தைகள் பிறந்தார்கள்.

திருமணம்
கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத்
திருமணம் முடிக்க முன்னர் அபூ ஹாலா பின்
ஸுராரா என்பவரையும், அவருக்குப் பின்னர்
அதீக் பின் ஆயித் என்பவரையும் திருமணம்
முடித்திருந்தார். அவர்களிருவரும் மரணித்த
பின் கதீஜா (ரலி) அவர்கள் விதவையாகக்
வாழ்ந்து வந்தனர்.

அன்னை கதீஜா (ரலி) அவர்கள் மிகப்பெரிய


செல்வச் ச ீமாட்டியாகத் திகழ்ந்தார்கள். மக்கா
மாநகரிலிருந்து சிரியா போன்ற வெளிநாடு
களுக்குச் சரக்குகளை ஏற்றிச் செல்லும்
அனைவரின் ஒட்டகங்களின் சுமைகளைவிட
கதீஜா (ரலி) அவர்களின் சரக்கு ஒட்டகங்கள்
மிகைத்திருக்கும். அந்தளவுக்கு வாணிபம்
செய்து அரபுலகம் போற்றும் சிறந்த
தொழிலதிபராகவும், வணிக மேதையாகவும்
திகழ்ந்தார்கள்.

நபியவர்கள் வியாபாரத்தில்
மட்டுமன்றி, அனைத்து துறைகளிலும் மிக
நேர்மையாக நடந்து கொண்டதால் மக்கள்
அவர் மீது உயிரையே வைத்திருந்தனர்.
நற்குணங்களின் உறைவிடமாகத் திகழ்ந்த
நபியவர்கள் அனைவரையுமே மதித்து
நடந்தனர். இதனால், நபியவர்களது
அருங்குணங்கள் மக்கள் மத்தியிற் பரவ
ஆரம்பித்தன.

அவர்கள் வணிகத்தில் அதற்கு முன் எவருமே


ஈட்டாத அளவு இலாபத்துடன் நாடு
திரும்பினார்கள். நபி (ஸல்) அவர்களுடன்
வியாபாரத்திற்காகச் சென்ற மைஸரா என்ற
அடிமை மூலம் நபி (ஸல்) அவர்களின்
நன்னடத்தை பற்றி மேலும் அறிந்து
கொண்டார்கள் கதீஜா (ரலி) அவர்கள்.
இதனால், நபி (ஸல்) அவர்களை மணமுடிக்க
விரும்பினார்கள். 

இந்த வியாபாரப் பயணத்தில் கதீஜா (ரலி)


அவர்களுக்கு மிகப் பெரிய இலபாம்
கிடைத்ததோடு, மைஸராவுக்குச் சொல்ல
முடியாத அதிசயத்தக்க சில நிகழ்வுகளை
நேரில் காணும் வாய்ப்பும் கிடைத்தது.
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் காணப்பட்ட
நற்குணங்கள், நம்பிக்கை, நாணயம், ஒப்பந்த
ங்களை நிறைவேற்றுதல், கொடுக்கல்
வாங்கலில் காணப்பட்ட நாணயம், மற்றும்
வியாபாரத் திறமை ஆகியவை யாவும்
மைஸராவை அதிசயிக்க வைத்தன. வியாபார
விஷயமாக சிரியா சென்று விட்டு திரும்பி
வரும் வழியில் ஓய்வுக்காக இறைத்தூதர்
(ஸல்) அவர்கள் ஒரு மர நிழலில் ஓய்வெடுக்க
ஆரம்பித்தார்கள். இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் அந்த குறிப்பிட்ட மர நிழலில்
ஓய்வெடுப்பதைப் பார்த்த, ஒரு யூதத்
துறவி, மைஸராவிடம் யார் இந்த
மனிதர்? என்று கேட்டார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின்


குணநலன்கள், வியாபாரத் திறமைகள் ஆகிய
அனைத்தையும் பற்றி அந்த யூத துறவியிடம்
மைஸரா விவரித்தார்கள். இவர்
வருங்காலத்தில் இறைத்தூதராக
வருவதற்கான அறிகுறிகள் இவரிடம்
இருக்கின்றன, இந்தக் குறிப்பிட்ட மரத்தில்
இறைத்தூதர்களைத் தவிர வேறு யாரும்
ஓய்வெடுக்க மாட்டார்கள் என்று அவர்
கூறினார்.

இன்னும் சில
அறிவிப்புகளின்படி, கடுமையான வெயிலின்
பொழுது, வெயிலின் வெப்பத்திலிருந்து
இறைத்தூதர் (ஸல்) அவர்களைப்
பாதுகாக்கும் பொருட்டு, இரண்டு வானவர்கள்
மேகத்தைத் தாங்கிப் பிடித்த வண்ணம்
தலைக்கு மேல், இறைத்தூதர் (ஸல்) உடன்
வந்து கொண்டிருப்பதைக் கண்டிருக்கின்றார்.
இந்தக் காட்சிகளை எல்லாம் கண்ணாறப்
பார்த்த மைஸரா, இவரைத் தனது உற்ற
நண்பராக ஆக்கிக் கொள்வதன் மூலம், மிகச்
சிறந்த
நல்வாய்ப்புகளையும், ஆதாயங்களையும்
பெற்றுக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தார்.

கடுமையான மனக்குழப்பத்தில் ஆழ்ந்திருந்த


அன்னையவர்கள், சூரியன் தனது வீட்டு
முற்றத்தில் இறங்கி வந்து தனது வீட்டையே
வெளிச்சமாக்கி கொண்டிருப்பதாகக் கனவு
கண்டார்கள். தான் கண்ட கனவிற்கு அர்த்தம்
சொல்லுமாறு, தனது ஒன்று விட்ட சகோதரர்
வரகா பின் நவ்பல் என்பவரிடம்
கேட்கின்றார்கள். தௌராத் மற்றும் இன்ஜீல்
ஆகிய வேதங்களைக் கற்றவரும், சிறந்த
ஞானமிக்கவரும், கனவுகளுக்கு விளக்கம்
சொல்லுமளவுக்கு அறிவு ஞானம்
படைத்த, கண்தெரியாத அந்த மனிதர் கதீஜா
(ரலி) அவர்களைப் பார்த்து புன்னகைத்து
விட்டு, கவலைப்பட வேண்டாம், இது
நன்மாராயமான கனவாகும் என்று
கூறினார்கள். சூரியன் வீட்டு முற்றத்தில்
இறங்குவது என்பது இறைத்தூதர் ஒருவரது
வருகையைப் பற்றிய தௌராத் மற்றும்
இன்ஜீல்; ஆகிய வேதங்களில் காணப்படும்
முன்னறிவிப்பு நிறைவேற இருப்பதனைக்
குறிக்கக் கூடியதாகும் என்று அவர், கதீஜா
(ரலி) அவர்களின் கனவுக்கு
விளக்கமளித்தார்.

வரகா பின் நவ்பல் அவர்களைச் சந்தித்து


விட்டு வந்த பின், இறைத்தூதர் (ஸல்)
அவர்களைத் தான் மணமுடிக்க வேண்டும்
என்பதில் உறுதியான முடிவை எடுத்தார்கள்.
ஆனால் எவ்வாறு முஹம்மது அவர்களை
அணுகுவது என்பதில் ஒரு முடிவுக்கு வர
இயலாத குழப்பான நிலையிலேயே
இருந்தார்கள். கதீஜா (ரலி) அவர்களின்
தோழியான நஃபீஸா பின்த் மன்பஃ
அவர்கள், கதீஜா (ரலி) அவர்களின்
இதயத்துடிப்பை அறிந்து, அதற்கு உதவ
முன்வந்தார்கள், இன்னும் முஹம்மது (ஸல்)
அவர்களிடம் தூது போகவும்
முடிவெடுத்தார்கள்.

மிகப் பெரிய பீடிகை எதனையும்


போடாமல், மிக எளிதான முறையில் நான்
உங்களிடம் தனிப்பட்ட முறையில் ஒரு
கேள்வியைக் கேட்க வேண்டும் என்று
முஹம்மது (ஸல்) அவர்களிடம்
விண்ணப்பித்த நஃபீஸா அவர்கள், முஹம்மது
(ஸல்) அவர்களிடமிருந்து அதற்கு
எதிர்ப்பேதும் இல்லாது சம்மதத்திற்கான
அறிகுறிகள் கிடைத்தவுடன், நீங்கள் ஏன்
இன்னும் திருமணம் முடிக்காமல்
இருக்கின்றீர்கள்? என்று கேட்டார். அதற்கு
முஹம்மது (ஸல்) அவர்கள் திருமணம்
முடிக்கும் அளவுக்கு என்னுடைய
பொருளாதார நிலை இல்லை என்று
பதிலளித்தார்கள்.

பொருளாதாரத்தைப் பற்றிப்
பிரச்னையில்லை, குறைஷிக் குலத்தில் மிகப்
பெரும் குலத்தில் பிறந்த வசதியான இன்னும்
தங்களையே மணமுடிக்க வேண்டும் என்று
விரும்புகின்ற அழகானதொரு பெண்ணை
நீங்கள் மணமுடிக்க
விரும்புகின்றீர்களா? என்று நபீஸா அவர்கள்
கேட்டார்கள்.

நீங்கள் எந்தப் பெண்ணைப் பற்றிக்


கூறுகின்றீர்கள்? என்று இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் வினாத் தொடுத்தார்கள். நஃபீஸா
அவர்கள் கூறிய அடையாளங்களை
வைத்து, அவர் என்னை மணக்க விருப்பம்
தெரிவித்தால் நான் அவரை மணந்து
கொள்ள விரும்புவதாகத் தன்னுடைய
விருப்பத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள்
தெரிவித்து, மணமுடிக்க சம்மதம்
தெரிவித்தார்கள். இதனைக் கேள்விப்பட்ட
கதீஜா (ரலி) அவர்கள் மிகுந்த
சந்தோஷமடைந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சிறிய


தகப்பனார்களான ஹம்ஸா (ரலி)
அவர்களும், அபூதாலிப் அவர்களும் கதீஜா
(ரலி) அவர்களின் சிறிய தகப்பனாரான உமர்
பின் அஸத் அவர்களை அணுகி திருமண
விஷயம் பற்றிக் கலந்தாலோசனை
செய்தார்கள். திருமண ஒப்பந்தங்கள்
போடப்பட்டு தேதியும் நிச்சயிக்கப்பட்டது. இரு
குடும்பத்தவர்களும் நிச்சயித்த அந்த நாளில்
சுற்றமும் நட்பும் புடை சூழ திருமணம்
நடந்தேறியது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இளமைப்


பருவத்தின் பொழுது அவர்களுக்குப்
பாலூட்டிய செவிலித் தாயான ஹலீமா
ஸஃதிய்யா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக
அழைக்கப்பட்டிருந்தார்கள். தனது
கிராமத்திலிருந்து திருமணத்திற்காக மக்கா
வந்த ஹலீமா அவர்களுக்கு, இறைத்தூதர்
(ஸல்) அவர்களுக்கு இளமையில் பாலூட்டி
வளர்த்த அந்தத் தாய்க்கு வீட்டுச்
சாமான்களையும், ஒட்டகம்
மற்றும் 40 ஆடுகளைப் பரிசாக அவர்களுக்குக்
கொடுத்து அவர்களை கௌரவப்படுத்தி
அனுப்பி வைத்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் பிள்ளைகள் பற்றி

காஸிம், அப்துல்லாஹ் ஆகியோர் நபி (ஸல்)


அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்பே
இறந்து விட்டனர். ஏனையோர் கதீஜா (ரலி)
அவர்கள் இறந்த பின்பு சில காலம் உயிர்
வாழ்ந்தனர். இவர்களில் ருகையா (ரலி)
அவர்கள் ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு
மரணித்தார்கள். ஸைனப் (ரலி) அவர்கள்
ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டும் உம்மு குல்ஸூம் (ரலி)
அவர்கள் ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டும்
மரணித்தனர். மேற்படி மூவரும் நபி (ஸல்)
அவர்கள் உயிர் வாழும் போதே மரணித்து
விட்டார்கள். எனினும் பாத்திமா (ரலி) அவர்கள்
மாத்திரம் நபி (ஸல்) அவர்கள் வபாத்தாகி
ஆறு மாதங்களின் பின் மரணித்தார்கள்.
கதீஜா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றல்

கதீஜா (ரலி) அவர்களின் வயது 55 ஆகவும், நபி


(ஸல்) அவர்களின் வயது இருந்த வேளை அது.
நபி (ஸல்) அவர்கள், ச ீர் கெட்டு, வழி
தவறி, இருளில் மூழ்கிக் கொண்டிருக்கும்
சமுதாயத்தை எண்ணிக்
கவலைப்படுகிறார்கள்

அவ்வேளை நபி (ஸல்) அவர்களது


உள்ளத்திற்குத் தனிமை மிகவும் பிரியத்தைக்
கொடுத்தது. எனவே, இறைவனை வணங்கி
வழிபட அமைதியான தனிமையான இடம் நாடி
ஹிராக் குகைக்குச் சென்றார்கள். அங்கு பல
இரவுகள் தங்கி வணக்க வழிபாடுகளில்
ஈடுபட்டனர்.

இவ்வாறு, நபி (ஸல்) அவர்கள் குகையிற்


தங்கி வணக்கத்தில் ஈடுபட்ட வேளையில்
அவர்களுக்குத் தேவைப்படும் உணவுகளைத்
தயார் செய்து கொடுக்கும் பணியை கதீஜா
(ரலி) அவர்கள் மிகவும் கனிவுடன் செய்து
வந்தார்கள். குகை, ஹிரா மலையின்
உச்சியிலேயே அமைந்திருந்தது. பாதையோ
மிகவும் கரடு முரடானதாகக் காணப்பட்டது.
இப்படியிருந்தும் தமது முதுமைப்
பருவத்தையும் பொருட்படுத்தாது சிரமத்துடன்
நடந்து சென்று அன்னை கதீஜா (ரலி)
அவர்கள் உணவளித்ததைப் பெண்கள்
நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் ஹிராக்


குகையில் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டுக்
கொண்டிருந்தார்கள். அப்போது வானவர்
ஜிப்ர ீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்கள்
முன் தோன்றி ‘இக்ரஃ’ (ஓதுவீராக!) என்று
கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
“எனக்கு ஓதத் தெரியாது” என்றனர். பின்னர்
நபி (ஸல்) அவர்களை இறுகக் கட்டித்
தழுவினார்கள். இவ்வாறு மூன்று முறை
செய்தார்கள். பின்னர் ஓதுவீராக என்று கூறி
மீண்டும் நபி (ஸல்) அவர்களைக் கட்டித்
தழுவிவிட்டு 96 ஆம் அத்தியாயமாகிய “அல்-
அலக்” கின்
( ‫سانَ مِنْ َع َل ٍق * ا ْق َرْأ َو َر ُّب َك اَأل ْك َر ُم‬ ْ ‫ا ْق َرْأ ِب‬ )
َ ‫اس ِم َر ِّب َك ا َّلذِى َخ َل َق * َخ َل َق اِإل ْن‬

இக்ரஃ எனத்துவங்கும் முதல் ஐந்து


வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள்.
அவற்றை நபி (ஸல்) அவர்களும் அப்படியே
ஓதினார்கள். பின்பு ஜிப்ர ீல் (அலை) அவர்கள்
சென்று விட்டார்கள். இந்நிகழ்வால்
அதிர்ச்சியடைந்து பயந்து நடுங்கிய நபி (ஸல்)
அவர்கள் கதீஜா (ரலி) அவர்களிடம் வந்து

« ‫ َز ِّملُونِى َز ِّملُونِى‬ »

“என்னைப் போர்த்துங்கள், என்னைப்
போர்த்துங்கள்” என்று கூறினார்கள்.

கதீஜா (ரலி) அவர்கள் போர்த்திவிட்ட பின்னர்


நபி (ஸல்) அவர்கள், நடந்த சம்பவத்தை
விளக்கினார்கள். பின்னர் தமக்கு ஏதும்
ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று
அஞ்சுவதாகவும் கூறினார்கள்.
அப்போது கதீஜா (ரலி) அவர்கள் தமது
கணவருக்கு மிக அழகான முறையில்
ஆறுதல் கூறி மன தைரியத்தை
ஊட்டினார்கள். கதீஜா (ரலி) அவர்கள் கூறிய
வார்த்தைகள் வருமாறு:

َّ ُ ‫ ِإ َّن َك َل َتصِ ل‬، ‫ِيج ُة ” َكالَّ َوهَّللا ِ َما ُي ْخ ِزي َك هَّللا ُ َأ َبدًا‬
، َّ ‫ َو َت ْح ِمل ُ ا ْل َكل‬، ‫الر ِح َم‬ َ ‫َف َقا َل ْت َخد‬
‫ب ا ْل َح ِّق‬ ِ ‫ َو ُتعِينُ َع َلى َن َواِئ‬، ‫ف‬ َّ ‫ َو َت ْق ِرى‬، ‫ب ا ْل َم ْعدُو َم‬
َ ‫الض ْي‬ ُ ِ‫َو َت ْكس‬

“அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது


ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும்
உங்களை இழிவுபடுத்த மாட்டான். நீங்கள்
உங்கள் உறவினர்களுடன் இணங்கி
வாழ்கிறீர்கள். (சிரமப்படுவோரின்)
சுமைகளைச் சுமக்கிறீர்கள். ஏழைகளுக்காக
உழைக்கிறீர்கள். விருந்தினரை
உபசரிக்கிறீர்கள். சோதனைகளில்
(சிக்கியோருக்கு) உதவி புரிகிறீர்கள்” என்று
கூறிப் பயந்திருந்த உள்ளத்திற்கு
உண்மையான வார்த்தைகளைக் கொண்டு
ஆறுதல் கூறினார்கள்.

அதுமட்டுமல்ல; அந்நிகழ்ச்சியின்
உண்மையான விளக்கம் என்னவென்பதைக்
கேட்டறிய வேண்டும் என்பதற்காகத் தமது
தந்தையின் சகோதரர் வறகா பின் நௌபல்
என்பவரிடம் சென்று கேட்டறிந்து
கொள்ளலாம் என்று ஆறுதல் கூறினார்கள்.
ஏனெனில், அவர் இன்ஜீல் வேதத்தை நன்கு
அறிந்து வைத்திருந்த கிறிஸ்தவராகக்
காணப்பட்டார். எனவே, கதீஜா (ரலி)
அவர்களது ஆலோசனையை ஏற்ற நபி (ஸல்)
அவர்கள், கதீஜா (ரலி) அவர்களுடன் வறகா
பின் நௌபல் ‫ َو َر َق َة ْبنَ َن ْو َف ِل‬ என்பவரிடம் வந்து
நடந்ததை எடுத்துக் கூறி விளக்கம்
கேட்டனர். அதற்கு அவர் “முஹம்மதிடம்
வந்தவர் வானவர் ஜிப்ர ீல் (அலை) ஆவார்.
முஹம்மதை அல்லாஹ் தனது தூதராகத்
தெரிவு செய்துள்ளான்.

‫سول ُ هَّللا ِ – صلى هللا عليه وسلم – « َأ َو ُم ْخ ِر ِج َّى ُه ْم‬


ُ ‫ َف َقال َ َر‬. ‫ ُي ْخ ِر ُج َك َق ْو ُم َك‬ »
உங்களை மக்கள் ஊரை விட்டு
வெளியேற்றுவார்கள்” என்றார். அதற்கு நபி
(ஸல்) அவர்கள், “எனது கூட்டத்தினர்
என்னையா வெளியேற்றுவார்கள்” என்று
வியப்புடன் கேட்டார்கள். அதற்கு

‫ص ْر َك‬ُ ‫ َوِإنْ ُيدْ ِر ْكنِى َي ْو ُم َك َأ ْن‬، ‫ِى‬ ِ ‫ َل ْم َيْأ‬، ‫َقال َ َن َع ْم‬


َ ‫ت َر ُجل ٌ َق ُّط ِب ِم ْث ِل َما ِجْئ َت ِب ِه ِإالَّ ُعود‬
‫ص ًرا ُمَؤ َّز ًرا‬ْ ‫َن‬

“ஆம், அப்போது நான் உயிரோடு


இளைஞனாக இருந்தால் உங்களுக்கு மிகப்
பெரிய அளவில் உதவிடுவேன் என்று
கூறினார்”. (புகாரி:3, அறிவிப்பவர்
ஆயிஷா(ரலி) (வரகா அவர்கள் சிறிது
காலத்தில் இறந்து விட்டார்கள்)

இந்நிகழ்ச்சியின் பின்னர் முஹம்மத் நபி


(ஸல்) அவர்கள் ஒரு இறைத் தூதர் என்ற
உண்மையை உணர்ந்து ஏற்றுக்
கொண்டார்கள். எனவே, முஹம்மத் (ஸல்)
அவர்களை நபி என்று ஏற்றுக் கொண்ட முதல்
பெண்மணியாகக் கதீஜா (ரலி) அவர்கள்
திகழ்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “மக்கள்


என்னை நிராகரித்த போது அவர் என்னை
ஏற்றுக் கொண்டார். மக்கள் என்னைப்
பொய்யாக்கிய போது அவர் என்னை
உண்மைப்படுத்தினார். மக்கள் எதையுமே
எனக்குத் தராது தடுத்துக் கொண்ட போது
அவர் தமது சொத்துக்களை எல்லாம்
எனக்காக அர்ப்பணித்தார்” [அஹ்மத், 16: 118].

மேற்கூறப்பட்ட அனைத்து விடயங்களையும்


கதீஜா (ரலி) அவர்களின் வாழ்விலிருந்து
அனைவரும், குறிப்பாகப் பெண்கள்
படிப்பினையாகப் பெற்றிடல் வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் கதீஜா (ரலி) அவர்கள் நடந்து
கொண்ட விதமானது, பெண்ணினத்துக்குப்
பல முன்மாதிரிகளைத் தருகின்றது.

கதீஜா (ரலி) அவர்களின் சிறப்பு

எவ்விதச் சலனமுமின்றி இஸ்லாத்தை ஏற்றுக்


கொண்ட முதல் மனிதராகிய கதீஜா (ரலி)
அவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக நபி
(ஸல்) அவர்களோடு தோளோடு தோள் நின்று
உழைத்தார்கள். அவர்களின் தஃவாக்
களத்தில் தன்னையும் பங்காளியாக
இணைத்துக் கொண்டார்கள். தமது
செல்வத்தையெல்லாம் இஸ்லாத்தின்
வளர்ச்சிக்காகவும் பிரச்சாரப் பணிக்காகவும்
தியாகம் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்
கொண்டார்கள். கதீஜா (ரலி) செய்தார்கள்.
இவ்வாறு இஸ்லாத்திற்காக உடலாலும்
பொருளாளும் உள்ளத்தாலும் அவர்களின்
சிறப்புப் பற்றி ஏராளமான நபி மொழிகள்
காணப்படுகின்றன. அவற்றிற் சில வருமாறு:
¨ உலகிற் சிறந்த பெண்மணி

‫َعنْ َعل ٍِّى – رضى هللا عنهم – َع ِن ال َّن ِب ِّى – صلى هللا عليه وسلم – َقال َ « َخ ْي ُر‬
‫ِيج ُة‬َ ‫ِساِئ َها َخد‬َ ‫ َو َخ ْي ُر ن‬، ‫ساِئ َها َم ْر َي ُم‬
َ ‫ ِن‬ »

நபி (ஸல்) அவர்கள்


கூறினார்கள், “இவ்வுலகிற் சிறந்த பெண்
மர்யம் (அலை) ஆவார். இவ்வுலகிற் சிறந்த
மற்றொரு பெண் கதீஜா (ரலி) ஆவார்”
[அறிவிப்பவர்: அலி (ரலி), ஆதாரம்:
புகாரி 3432, முஸ்லிம் 4815].

 ¨ கதீஜா (ரலி) அவர்களின் குடும்பத்தினரை


நபி (ஸல்) அவர்கள் மதித்து நடந்தார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள், “கதீஜா (ரலி) அவர்களின்
மரணத்திற்குப் பின் ஒரு நாள் நபி (ஸல்)
அவர்களிடம் வருவதற்கு கதீஜா (ரலி)
அவர்களின் சகோதரி ஹாலா பின்த்
குவைலித் (ரலி) அவர்கள் அனுமதி
கேட்டார்கள். அவருடைய குரல் கதீஜா (ரலி)
அவர்களின் குரலைப் போன்று இருந்ததால்
கதீஜா (ரலி) அவர்கள் அனுமதி
கோருகிறார்கள் என்று எண்ணி நபி (ஸல்)
அவர்கள் மகிழ்ச்சியுற்றார்கள். பிறகு
அவருடைய சகோதரி என்று தெரிந்த போது
‘என் இறைவனே! இவர் ஹாலா’ என்று
கூறினார்கள். இதனைக் கேட்ட நான்
பொறாமைப்பட்டேன். ‘காலத்தால்
அழிக்கப்பட்ட பல் விழுந்த குறைஷிக்
கிழவிகளில் ஒருவரையா இவ்வளவு நினைவு
கூருகிறீர்கள். நிச்சயமாக அவர்களை விடச்
சிறந்த ஒருவரை அல்லாஹ் உங்களுக்குத்
தந்துள்ளான்’ என்று கூறினேன்” [நூல்:
புகாரி 382, முஸ்லிம் 4824].

கதீஜா (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் ஸலாம்


கூறல்
‫سول َ هَّللا ِ َه ِذ ِه‬ ُ ‫ َف َقال َ َيا َر‬-‫صلى هللا عليه وسلم‬- ‫َعنْ َأ َبي ه َُر ْي َر َة َقال َ َأ َتى ِج ْب ِريل ُ ال َّن ِب َّى‬
‫اب َفِإ َذا ه َِى َأ َت ْت َك َفا ْق َرْأ َع َل ْي َها‬
ٌ ‫ش َر‬ َ ‫ِيج ُة َقدْ َأ َت ْت َك َم َع َها ِإ َنا ٌء فِي ِه ِإدَ ا ٌم َأ ْو َط َعا ٌم َأ ْو‬
َ ‫َخد‬
َ‫ص َخ َب فِي ِه َوال‬ َ َ‫ب ال‬ ٍ ‫ص‬ َ ‫ت فِى ا ْل َج َّن ِة مِنْ َق‬ٍ ‫ش ْرهَا ِب َب ْي‬ِّ ‫سالَ َم مِنْ َر ِّب َها َع َّز َو َجل َّ َو ِم ِّنى َو َب‬
َّ ‫ال‬
‫ص َب‬ َ ‫َن‬

ஜிப்ர ீல் (அலை) அவர்கள் நபி (ஸல்)


அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே!
இதோ கதீஜா. அவர் தன்னுடன்
குழம்பு, உணவு, பானம் ஆகியவை நிறைந்த
பாத்திரத்தை உங்களிடம் கொண்டு
வந்துள்ளார். அவருக்கு என் சார்பாகவும்
அவரின் இறைவன் சார்பாகவும் ஸலாமை
எடுத்துச் சொல்லுங்கள். சொர்க்கத்தில்
அவருக்கு சச்சரவு, துன்பங்கள்
இல்லாத, முத்தாலான மாளிகையுண்டு என்ற
நற்செய்தியையும் சொல்லுங்கள்” என்று
கூறினார். [அறிவிப்பவர்: அபூ ஹுரைரா
(ரலி), நூல்: புகாரி 3820, 7497, முஸ்லிம் 4817]

¨ சுவனத்தைக் கொண்டு நன்மாராயம்

 நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களைப்


பற்றி அதிகம் நினைவு கூர்ந்தால் நபி (ஸல்)
அவர்களின் வேறு எந்த மனைவியின் மீதும்
பொறாமைப்படாதளவு நான் கதீஜா (ரலி)
அவர்கள் மீது பொறாமைப்படுவேன். அவர்கள்
இறந்து மூன்று ஆண்டுகள் கழித்து என்னை
நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்தார்கள்.
அல்லாஹ்வும் ஜிப்ர ீல் (அலை) அவர்களும்
கதீஜா (ரலி) அவர்களுக்குச் சுவர்க்கத்தில்
முத்து மாளிகை யுண்டு என்ற நற்செய்தியை
அவருக்குத் தெரிவியுங்கள் என்று
கட்டளையிட்டார்கள். [அறிவிப்பவர்: ஆயிஷா
(ரலி), நூல்: புகாரி 3817, முஸ்லிம் 4820]
மரணம்

நபி (ஸல்) அவர்களின் நபித்துவ


வாழ்க்கையில் 10 வருடங்கள் வாழ்ந்து
தமது 65 ஆம் வயதில் கி.பி. 621 இல்
மரணித்தார்கள். 

You might also like