Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

வாருங்கள் ! வரவேற்போம் !!

(நம் தம்பி தங்கைகளை)

எல்லோருக்கும் வணக்கம் பா ! நான் தான் உங்களோட partner வந்துருக்கேன்.


நம்ம எல்லாம் பேசுனா மாதிரி நம்ம தம்பி தங்கைகளை வரவேற்க எல்லோரும்
புன்னகையோட , புது உற்சாகத்தோட , அட நம்ம அகரம்-ல சொல்றமாதிரி, இது
எங்களோட பொறுப்புன்னு உரிமையோட தயாராயிட்டோம்.

அதுக்கு முன்னாடி எப்படி பா வரவேற்கலாம், என்னலாம் பண்ணலாம்னு உங்க


கிட்ட கேட்டா !!
……………………ஒரு நிமிஷம் இருங்கப்பா, மூச்சு வாங்கிக்கிறேன் ..
அவ்ளோ அனுப்பி இருக்கீ ங்க ..இத, இத தான எதிர்பார்த்தோம்-ன்னு சொல்ற
அளவுக்கு அள்ளி அள்ளி சொல்லி இருக்கீ ங்கப்ப்ப்பா.

சரி ஒரு வழியா நீங்க அனுப்புனத எல்லாம் தொகுத்து உங்களுக்காக


கொடுக்கிறோம். எல்லாத்தையும் படிச்சு பாருங்க , இத பண்ணலாமா , அத
பண்ணலாமான்னு நல்லா - குழுவா எல்லோரும் யோசித்து சிறப்பா பண்றோம்!

தம்பி தங்கைகளுக்கு சொல்ல வேண்டியவை:

1. College (Utilizing opportunities like library, participation in clubs,Transportation to college,


College code of conduct )
2. College Hostel /Agaram Hostel ( Mandatory things to follow in Hostels,Food Timings, Hostel
outing permission)
3. Agaram ( Opportunities in agaram, Accessing office, Transportation facility to office)

இவ்ளோ தான்ப்பா முக்கியமா நாம சொல்லவேண்டியது.அத தாண்டி நீங்க Ice


breaker செய்யுறதுன்னா செய்யுங்க , தனி திறமைகளுக்கான வாய்ப்பு
கொடுக்கலாம்னா? கொடுங்க , அத விட இன்னும் நீங்க ஆடி,பாடி கூட
வரவேற்கலாம்

மொத்தத்துல Rules பேச கூடிய நண்பன் பட Virus வாத்தியாரா இல்லாம , “கனா


காணும் காலங்கள்” serial போல இணக்கமா,நாம எல்லாம் ஓன்னுன்ற உணர்வ
கொடுங்கப்பா அவ்ளோதான் !!!
கல்லூரிக்கு வருகை தரும் தம்பி தங்கைகளுக்கு முதலில் அக்கா
அண்ணன் ஆகிய எங்களை அறிமுகப்படுத்தி கொள்வோம்

➢ தம்பி தங்கைகளை ஆட்டம் ,நாடகம்,இசை,கவிதை ,ஓவியம்


போன்ற வடிவங்களில் வரவேற்போம்

➢ தம்பி தங்கைக்கு புது இடத்தை எப்படி தகவமைத்து கொள்வது என்று


கூறவோம்

➢ துறை சார்ந்து இருக்கும் அண்ணா அக்காக்கள் அந்த department இல்


இருக்கும் தம்பி தங்கைகளுக்கு பொறுப்பேற்று அவர்களுக்கு
உறுதுணையாய் இருப்போம்

➢ கல்லூரியில் உள்ள CLUBS,SPORTS,CA ,CMA etc போன்ற


விஷயங்களை அவர்களுக்கு தெரியப்படுத்துவோம்

➢ வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை தங்கள்


கல்லூரியிலேயே அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடல்
நடத்துவோம்

➢ அகரம் workshop மற்றும் mentor meeting போன்றவற்றின் நன்மைகளை


அவர்களுக்கு தெளிவாக எடுத்து கூறி அவர்களை அனைத்து workshop
& training போன்றவற்றில் கலந்துகொள்ள செய்வோம்.

➢ தம்பி தங்கைக்கு கல்லூரியின் நடைமுறைகளை பற்றியும் மற்றும்


அகரம் அலுவலகம் , விடுதிகள் பற்றியும் என்ன செய்ய வேண்டும்
மற்றும் என்ன செய்யக்கூடாது என்று விழிப்புணர்வை கொடுக்க
வேண்டும்.

➢ தம்பி தங்கைகள் படிக்கும் கல்லூரியின் தூரம் மற்றும் அதற்கான


பயணச் செலவு குறித்து தெரிவிப்போம்

You might also like