கருத்துப்படம்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 30

வாட்ஸ் ஆப் வசீகரிப்பால் தூக்கம் தொலைக்கும் இளம் தலைமுறையினர்

செல்போனில் ‘வாட்ஸ் ஆப்’ செயலியைப் பயன்படுத்தி தகவல்களை


பரிமாறிக்கொள்ளும் போக்கு அண்மைக்காலங்களில் பல மடங்கு
அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் இளம் வயதினர் வாட்ஸ்-ஆப்-ஐ
பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், நூல்களைப் படிக்கும் வழக்கம்
அவர்களிடையே குறைந்து வருகிறது.

காலை நேரங்களில் படிப்பு, வேலை என்று இருக்கும் இளைஞர்கள் இரவு


நேரங்களில்தான் தங்களது நண்பர்களுடன் தொடர்பு கொள் கின்றனர்.

இன்டர்நெட் வசதி கொண்ட ஸ்மார்ட் போன் இருந்தால், வாட்ஸ் ஆப், வைபர்,


ஹைக் போன்ற குறுஞ்செய்தி ஆப்-களை (செயலி) சுலபமாக பயன்படுத்த
முடியும்.

இந்த ஆப்-களை கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து கொண்டால், அதன் மூலம்


உலகின் எந்த மூலையில் இருப்பவரோடும் இலவசமாக தகவல்களைப்
பரிமாறலாம், பேசவும் செய்யலாம். குறுஞ்செய்திகளைத் தவிர புகைப்படங்கள்,
ஆடியோ, வடியோ
ீ அனுப்பிக் கொள்ளலாம்.

இதனால் செல்போன்களில் எஸ்எம்எஸ் அனுப்பும் வழக்கம் கூட தற்போது


பெரிதும் குறைந்துவிட்டது.

பொறியியலில் முதுகலை படிக்கும் கண்ணன் வாட்ஸ் ஆப் குறித்து கூறும்போது,


“நாங்கள் வகுப்புகளை முடித்து, நண்பர்களோடு பேசிக்கொள்ள இரவில்தான்
நேரம் கிடைக்கிறது.

விடுதியில் பெரும்பாலானோர் வாட்ஸ் ஆப் பயன்படுத்து வதால், அதைப்


பயன்படுத்த பெரிதும் எதிர்ப்பு இருப்பதில்லை” என்றார்.

தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் ப்ரவணா,


ீ “நான்
திருச்சியில் படித்து தற்போது பெங்களூரில் வேலை செய்கிறேன். எனது பள்ளி
கல்லூரி நண்பர்களுக்காக வாட்ஸ் ஆப் குரூப் வைத்துள்ளோம். அந்த குரூப்
ஆரம்பித்த பிறகுதான் நான் அவர்களுடன் தொடர்பில் இருக்க முடிகிறது.

சில நண்பர்கள் வெளி நாடுகளில் இருக்கிறார்கள். எனவே, அனைவரும் ஒன்றாக


சேட்டிங் செய்யக் கூடிய நேரம் இரவுதான். ஆனால், என்னால் வாட்ஸ் ஆப்
இல்லாமலும் இருக்க முடியும்” என்றார்.

ஆங்கிலத்தில் இளங்கலை படிக்கும் மரியா கூறுகையில், “வாட்ஸ் ஆப் குரூப்-ல்


நடந்த விவாதங்களைப் பற்றி, சுவாரஸ்யமான ஸ்டேடஸ் பற்றி தினமும்
வகுப்பில் பேசிக் கொள்வோம். எனது கைபேசியை பார்க்கும்போது அதில்
குறுஞ்செய்தி எதுவும் வரவில்லை என்றால் சற்று கவலையாக இருக்கும்”
என்றார்.

இழப்புகள் அதிகம்: மருத்துவர் கருத்து

இது குறித்து மன நல மருத்துவர் ராமானுஜம் கூறியதாவது:

ஒருவர் தமது முக்கிய பணிகளுக்கும் உறவுகளுக்கும் நேரம் ஒதுக்காமல், ஒரு


செயல் அல்லது பொருளுக்கு நேரம் ஒதுக்கினால் அவர் அதற்கு
அடிமையாகியுள்ளார் என்று பொருள். அதற்கு செலவழிக்கும் நேரம் கொஞ்சம்
கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வரும். அந்த பழக்கத்தால் தமக்கு, இழப்புகள்
ஏற்படுகின்றன என்று தெரிந்தும் அது தொடரும். இந்திய இளைஞர்களுள் 5 முதல்
10 சதவதம்
ீ பேர் இன்டர்நெட் பயன்பாட்டுக்கு அடிமையாகி உள்ளனர். தங்கள்
பிள்ளைகள் பேஸ்புக்கிலும், இன்டர்நெட்டிலுமே அதிக கவனம் செலுத்துகின்றனர்
என பல பெற்றோர் புகார் கூறுகின்றனர். வாட்ஸ் ஆப்-ஐ ஒரு தொடர்பு சாதனமாக
மட்டுமே கருத வேண்டும். நண்பர்களோடு நேரில் பேசுவது, நல்ல புத்தகங்களை
படிப்பது, உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றை இளைஞர்கள் வழக்கமாக கொள்ள
வேண்டும் என்றார்.
கலந்துரையாடலை குலைக்கிறதா ஸ்மார்ட் போன்கள்?

ஸ்மார்ட் போன்களுடன் அதிகநேரம் செலவிடுவது, மற்றவர்களுடன்


உரையாடும் திறனை குறைக்கும் என்று ஆராய்ச்சி ஒன்று
தெரிவித்துள்ளது.

விர்ஜினியா டெக்கை சேர்ந்த உளவியல் பேராசிரியரும், இந்த


ஆராய்ச்சியை நடத்தியவருமான ஷாலினி மிஸ்ரா கூறும்போது,
"ஸ்மார்ட் போன்கள் இருக்கும்போதும், தொடர்ந்து அதை பயன்படுத்த
வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது. தகவல்களை தொடர்ந்து
தேடுகிறார்கள். இதனால், ஒருவரிடம் உரையாடிக்
கொண்டிருக்கும்போது, அவர்களது கவனம் வேறு இடத்திலும், வேறு
மனிதர்களிடமும் செல்கிறது" என்றார்.

மொபைல் போன்களினால் கவனம் சிதறும்போது, நாம் பேசுபவர்களது


முகபாவங்களையும், பேச்சுத் தொனியில் இருக்கும் சிறு
மாற்றங்களையும் கவனிக்கத் தவறுகிறோம்.

தங்களால் நேரில் பார்க்க முடியாத, அருகில் இருக்க முடியாத


ஆள்களிடம் மேலோட்டமான உறவுகளை மேம்படுத்துவதில் மக்கள் அதிக
ஆர்வம் செலுத்துகின்றனர். இதற்கு ஸ்மார்ட் போன்கள் உதவுகின்றன.
அடிக்கடி போன்களை எடுத்துப் பார்ப்பதாலும், ஆழமற்ற உறவுகளில்
பிணைந்திருப்பதாலும் தங்கள் கண் முன் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து,
நிகழ்காலத்திலிருந்து மக்கள் விலகியிருக்கின்றனர் என்று மிஸ்ரா
கூறுகிறார்.

இதை பரிசோதித்துப் பார்க்க, காஃபி ஷாப்பிற்கு வரும் 200 நபர்களை ஜோடி


ஜோடியாக உட்காரவைத்து ஒரு தலைப்பை விவாதிக்கச் செய்துள்ளார்.
இப்படி சிறு குழுவாகவோ, ஜோடியாகவோ உட்கார்ந்திருக்கும்போது, பலர்
தங்களது போன்களை மூன்றிலிருந்து ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை
எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதோடு தங்கள் போன்களை தங்கள்
கண் பார்வையில் மேஜையின் மேல் வைத்துள்ளனர்.

"இப்படி அவர்கள் தங்கள் போன்களையே தலை குனிந்து பார்த்துக்


கொண்டிருப்பதால் எதிரில் இருப்பவரின் கண்களைப் பார்த்து பேசுவது
குறைகிறது. இதனால் இருவருக்கும் இடையேயான இடைவெளி
அதிகமாகிறது" என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

கைத்தொலைபேசியின் தீமைகள்.

இந்த நவன
ீ காலத்தில் உங்களுக்கு தெரியாமலே உங்கள் உடலின் ஒரு
பகுதி போல கைத்தொலைபேசி உங்களுடன் ஒன்றி விட்டது.அதன் மூலம்
பல நன்மைகள் இருந்தாலும் அதே அளவுக்கு தீமையும் உண்டு, என்பதை
யாராலும் புறகணிக்க முடியாத ஒன்றாகும்.

இத்துடன் வடுகளுக்கு
ீ அருகில் மொபைல் போன் டவர்களை வைப்பதால்
அதிலிருந்து வெளியாகும் கதிர்வச்சு
ீ காரணமாக புற்று நோய் உள்ளிட்ட
பாதிப்புகள் வருவதாகவும் புற்றுநோயாளிகளுக்கு கதிர்வச்சு
ீ மருந்தாக
பயன்படுத்தப்பட்டாலும் அது எந்த அளவுக்கு உடலுக்குள் போக
வேண்டுமோ அது மீ றி விடக் கூடாது. மீ றும்போதுதான் அதிக பாதிப்பு
உள்ளதாகவும் 
பாபா அணு ஆய்வுக் களத்திலுள்ள ஸ்ரீகுமார் பானர்ஜி என்பவர்
கூறியுள்ளார்.

கிரீஷ் குமார் என்பவர் எப்படி அதிகம் காபி சாப்பிட்டால், ஊறுகாய்


சாப்பிட்டால் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் உள்ளதோ அதேபோல
கதிர்வச்சாலும்
ீ புற்று நோய் பாதிப்பு அதிகம் வருவதாக உலக சுகாதார
நிறுவனம் கூறியுள்ளதாக கூறினார்

தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டே இருந்தால் காது சவ்வு கிழிந்து


காது ஓட்டையாகிப் போய் விடுமாம். மேலும் காது நரம்புகளும்
பாதிக்கப்பட்டு காது கேக்காதாம்.

கைத்தொலைபேசி கதிர் வச்சில்


ீ இருந்து ஓரளவு பாதுகாக்கப்படுவதற்கான
வழி முறைகள்.

*அதிகமானவர்கள் தூங்கும் போதும் தொலைபேசியை அருகிலேயே


வைத்து துங்குவார்கள். நீங்கள் துங்கும் அந்நேரமும் உங்களுக்கு
கதிர்வச்சுத்
ீ தாக்கம் இருக்கும்.
*வெளியே செல்லும் நேரங்களைத் தவிர்ந்த ஏனைய நேரங்களில்
கைத்தொலைபேசிகளை தள்ளியே வையுங்கள்.
*அதிகநேரம் பேசவேண்டி உள்ள சந்தர்ப்பங்களில் இயர்போனை (headset)
பயன்படுத்துங்கள். இயர்போனை (headset) பயன்படுத்தும் சந்தர்ப்பங்களில்
கைத்தொலைபேசியை கையிலேயே வைத்திருங்கள்.
*வட்டிலிருக்கும்
ீ நேரங்களில் தரை இணைப்பு தொலைபேசிகளை
பயன்படுத்துங்கள்.
*நீங்கள் தேவையில்லை என்று கருதும் நேரங்களில் செயற்ப்பாட்டை
நிறுத்தி வையுங்கள். *

கைத்தொலைபேசி:அவசியமா,
அனாவசியமா?

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் மனிதர்கள் தத்தம்


அன்றாட வாழ்க்கையில் பல புதிய சாதனங்களைப் பயன்படுத்தி
வருகின்றனர். இப்படிப்பட்ட பொருள்கள் நமது
நேரத்தைச் சேமிக்கின்றதென சிலர் கூறுகின்றனர். மேலும்
சிலர், இந்தக் கருத்தை மறுத்துத் தற்கால சாதனங்கள் மனித
குலத்தின் மத்தயில் சோம்பல் குணத்தை வளர்க்கின்றன
என்றும் கூறியுள்ளனர். எது எப்படி இருப்பினும், இன்றுவரை
மனிதர்களுக்கு உதவியாகவும் அதற்கு மாறாக அபாயகரமாக
விளங்குவதும் கைத்தொலைபேசி என்றே கூறலாம்.

ஒரு கைத்தொலைபேசியின் மூலம் நாம் ஒரு தகவலை மிகவும்


சுலபமாக மற்றொருவரிடம் சேர்த்துவிடலாம். அவர் எவ்வளவு
தொலைவில் இருந்தாலும் கைத்தொலைபேசியைப்
பயன்படுத்தி அந்தத் தகவலைத் தேவையானவரிடம்
சேர்த்துவிடலாம். கூற வேண்டிய தகவலை நம்மால் கூற
முடியாமல் போனாலும் குறுந்தகவல்(S.M.S) என்ற எளிய
முறையில் நாம் அந்தத் தகவலைச் சேர்த்துவிடலாம். இந்த
முறை தற்பொழுது இளைஞர்களின் மத்தியில் மிகவும்
பிரபலமாகி வருகின்றது. ஒருவரிடம் அழைத்துப் பேசுவதைத்
தவிர்த்து, இவ்வாறு செய்வதால் பணமும் சிக்கனப் படுத்த
முடியும். தற்கால கைத்தொலைபேசிகளில் உள்ள சில தொழில்
நுட்ப விஷயங்கள் பலரை பிரமிக்க வைக்கின்றது என்று
சொன்னால் அது மிகையாகாது. படம் பிடிக்கும் வசதி, செவிக்கு
இனிய கானங்கள் கேட்பதற்கும், ஏன் இணையத்தை வலம் வர
கூட வாய்ப்பு தந்திருக்கின்றது கைத்தொலைபேசி.

எது எப்படி இருந்தாலும், கைத்தொலைபேசி சில நேரங்களில்


அனாவசியமாகவும் தோற்றமளிக்கின்றது . தொலைப்பேசியின்
கட்டணம் கட்டப்படாமல் இருந்தாலோ அல்லது
கைத்தொலைபேசியில் போதிய பணத்தொகை இல்லாமல்
போனாலும் நாம் ஒருவரை தொடர்பு கொள்ள முடியாது.
ஏன்,ஒரு குறுந்தகவல் கூட அனுப்ப முடியாது.
சிலர்,கைத்தொலைபேசியைத் தொல்லைபேசியாக
மாற்றுகின்றனர். பொது இடங்களிலும்,
பள்ளிகளிலும், கைத்தொலைபேசிகளைப்பயன்படுத்துகின்றனர்.
சில வருடங்களுக்கு முன்பு கைத்தொலைபேசியின்
பயன்பாட்டினால் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது
எனக் கண்டறியப்பட்டு கூறப்பட்டாலும், அது
நிருபனமாக்கப்படவில்லை. மேலும், கைத்தொலைபேசியின்
தொடர்பு அலை மருத்துவமனைகளில் உள்ள சில கருவிகளின்
வாசிப்பைத் தவறுதலாகத் தருவதால், நோயாளிகளுக்கு
அபாயகரமான விளைவுகளை விளைவிக்கக்கூடும் என்றும்
கூறப்படுகின்றது.

ஆகவே, கைத்தொலைபேசியின் பயன்பாடு மனிதர்களுக்கு


நன்மையும் அளிக்கின்றது, தீமையும் அளிக்கின்றது என்றே கூற
வேண்டும். குறிப்பாக, மாணவர்களாகிய நாம் கீ ழ்க்காணும்
விதிகளைக் கடைப்பிடித்தால் அனைவருக்கும் நன்மையே:

1. கருத்தரங்கிலோ அல்லது கூட்டத்திலோ கலந்து


கொள்ளும்போது கைத்தொலைபேசியின் ஒளியை அமைதி
நிலையில் () வைக்கவும் அல்லது அடைத்து விடவும்.

2. பலர் இருக்கும் இடத்தில் தொலைபேசியில்


உரையாடும்போது குரலைத் தாழ்த்திப் பேச வேண்டும்.

3. முக்கியமான அழைப்பு கிடைத்தால், ஆள் நடமாட்டம்


இல்லாத இடத்திற்குச் சென்று பேசலாம்.

4. குறுந்தகவல் அனுப்புவதைப் பழக்கமாக்கிக் கொள்ள


வேண்டும்.

5. கைத்தொலைபேசியை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான்


பயன்படுத்த வேண்டும். பாட நேரத்திலோ அல்லது
கலந்துரையாடலின் போதோ பயன்படுத்துவது நமது
கல்விக்கும் பணத்துக்கும் கேடு என்றால் அது மிகையாகாது.

கைபேசி
இன்றைய நாட்களில் தொலை பேசி உபயோகிபவரின் எண்ணிக்கை அதிக
மாகிகொண்டே வருகிறது .தொலை பேசி ஒரு தொல்லை பேசி என்று நாம் 
கூறினாலும் அதைநம்மால் விட முடிய வில்லை .ஏனென்றால் தொலை
பேசி யின் பயன் எவ்வளவு வளர்த்துகொண்டே வருகிறதோ அதே அளவுக்
கு பிரச்சனைகளும் வளர்த்து வருகிறது.
உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தகவல்களை பெறுவதற்கு கைத்
தொலைபேசிகள்பயன்படுகின்றன. இதில் உள்ள வசதிகளால் பயனாளர்க
ளின் எண்ணிக்கை நாளுக்கு நாள்வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது.ந
ாம் பயன்படுத்தும் தொலைபேசியை  எவ்வாறுஉபயோக படுத்த வேண்டு
ம் என்று பார்போம் 

இதில் கவனிக்க வேண்டிய விஷயம்  இந்த கைத்தொலைபேசிகளில் எந்த 
அளவு நன்மைஉள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீ
மைகளில் முக்கியமானதுஇதன் கதிர்வச்சினால் நம் மூளை செயல் இழக்

கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.

இதன் கதிர்வச்சினால் மூளையில் இரண்டு வகையான புற்றுநோய் கட்டிக

ள்உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்ப
வர்களிடம்இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆக
வே முக்கியமானவிஷயம் நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதை கு
றைத்து கொள்ள வேண்டும்.
I T L E செ ல் ப ோ ன் க ள் . . . ஜ ா க் க ி ர தை

செல்போன்கள்… ஜாக்கிரதை!
எப்போதும் செல்போனும் கையுமாக இருந்த கல்லூரி மாணவியான
தனது மகளை கண்டித்தார் அப்பா. மகளிடமிருந்து செல்போனை
பிடுங்கிக் கொண்டார். அவ்வளவுதான், செல்போன் போனதால்
சகலமும் போனதாக நினைத்த அந்தப் பெண் தற்கொலை செய்துக்
கொண்டார். சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த துயரச்
சம்பவம் இது. செல்போனின் தாக்கம் சமூகத்தில் அதிர்ச்சியான
சம்பவங்களை ஏற்படுத்தி வருகிறது.

வறுமையோ, வளமையோ நிலைமை எப்படி இருந்தாலும் இந்த


காலத்தில் தவிர்க்க முடியாத உபகரணமாக மாறியிருக்கிறது
செல்போன். எந்த தகவலையும் இருந்த இடத்தில் இருந்து
உடனுக்குடன் பெறவும், தரவும் உள்ள வசதி அசாதாரமானது. பல
தேவைகள் உடனுக்குடன் நிறைவேறுவதுடன், சில பிரச்னைகளை
தீர்க்கவும் உதவுகிறது.

அதனால் உலகில் 500 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர்.


இந்தியாவில் 67 கோடியை தாண்டி விட்டது. ஒவ்வொரு மாதமும்
சுமார் 1.8 கோடி இணைப்புகள் விற்பனையாகின்றன. நாட்டில்
100 க்கு 59 பேரிடம் செல்போன் உள்ளன. செல்போன் சேவை
நாட்டில் தொடங்கிய காலத்தில் ஒரு அழைப்புக்கு நிமிடத்திற்கு 24
ரூபாய் கட்டணம். இப்போது 10 காசுகளுக்கு பேசிக் கொள்ளலாம்.

நாளெல்லாம் இலவசமாக பேசிக் கொள்ளும் சேவைகள் பலவும்


அறிமுகமாகியுள்ளன. பலன் தரும் செல்போன்களின் பயன்பாடு,
இப்போது பாதகமாகவும் மாறியுள்ளது.

செல்போனை கையில் வைத்துக் கொண்டு சும்மா இருக்க


முடியாமல் எப்போதும் யாருடனாவது பேசிக் கொண்டே இருக்க
வேண்டும் என்று ஏங்குகின்றனர். வருகின்ற அழைப்புகளில்
எதிர்முனையில் எதிர் பாலினமாக இருந்தால் மணிக் கணக்கில் பேச
ஆரம்பித்து விடுகின்றனர். அது முகம் தெரியாதவர்களாக
இருந்தாலும், அவர்கள் பின்னணி என்னவாக இருந்தாலும் யாரும்
கவலைப்படுவதில்லை. இப்படி பேசியே காதல் கோட்டை
கட்டியவர்களும் இருக்கிறார்கள். கம்பி எண்ணியவர்களும்
இருக்கிறார்கள்.

செல் போதையில் சிக்கி பல குடும்ப உறவுகள் சீரழிந்து


இருக்கின்றன. இன்னொரு பக்கம் உடலும் கெடுகிறது.
செல்போனில் இருந்து வெளியேறும் மின்காந்த கதிர்களால் உடல்
நலம் பாதிப்பதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
புற்றுநோய், கண்புரை, காது கேளாமை, கருச்சிதைவு, மனநோய்,
மலட்டுத்தன்மை என பாதிப்புகளின் பட்டியல் நீளுகின்றன.
செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டுவதால் விபத்துகள்
ஏற்படுகின்றன. விஞ்ஞானத்தின் அரிய வளர்ச்சி செல்போன். அதை
உடல், உள்ளம், உறவுகளை பாதிக்காமல் பயன்படுத்தும் பக்குவம்
அவசியம்.
கோபுரங்களால் கோடி தொல்லை

செல்போன் டவரால் மனிதர் மட்டுமின்றி உயிரினங்களும்,


தாவரங்கள் கூட பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
செல்போன் கோபுரங்களுக்கு முதலில் பலியானது
சிட்டுக்குருவிகள்தான். கோபுரங்களில் வெளியாகும் கதிர் வச்சால்

மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்பட
வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. பெண்களுக்கு
கருப்பை புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஓரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் செல்போன்களின்


கோபுரங்கள் அமைப்பதால் ஏற்படும் பாதிப்பின் வச்சு
ீ அதிகம் என்று
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களும் சொல்கிறார்கள்.
வெளிநாடுகளில் பள்ளிகள், குழந்தை காப்பகங்கள்,
மருத்துவமனைகள் உள்ள இடங்களில் செல்போன் கோபுரங்கள்
அமைக்க தடை உள்ளது. அதேபோல் குடியிருப்பு பகுதிகளிலும்
கோபுரங்கள் அமைக்க கூடாது. குறைந்தது 100 மீ ட்டர் இடைவெளி
இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. நம் நாட்டில் எந்த
விதிமுறைகளும் கிடையாது.

கழிவறைகளில்…

யார் கேட்டாலும் சிலர் தங்கள் மொபைல் எண்களை தந்து


விடுகின்றனர். இந்த விஷயத்தில் பெண்கள் கொஞ்சம்
அசட்டையாக இருக்கின்றனர். ரயில் சினேகிதர்கள் கூட செல்போன்
எண்களை பெற்று விடுகின்றனர். பேச்சு வளர்ந்து பெரும்பாலும்
திசை மாறி போய் விடுகிறது. தவிர்க்க முயலும்போது
கோபமடைபவர்கள், அதே ரயிலின் கழிவறைகளில் அந்த
செல்போன் எண்களை எழுதி வைத்து விடுகின்றனர்.

இதேபோல் காதலிக்க மறுத்த பெண்களின் எண்களை, பகையுள்ள


குடும்பத்தின் பெண்களின் எண்களையும் எழுதி விடுகின்றனர். ரயில்
கழிவறைகள் என்றில்லை, பேருந்து நிலையம், மருத்துவமனை என
பல இடங்களில் பொது கழிவறைகளிலும் பெண்ணின் பெயருடன்
எண்ணை எழுதி வைத்து விடுகின்றனர். பாலியல் தொழில் செய்யும்
பெண்களாக சித்தரித்து விடுகின்றனர். இப்படி கண்ட எண்ணில்
இருந்து வரும் அழைப்புகளை பார்த்து பெண்கள் மனநோயாளிகள்
ஆவதுதான் மிச்சம்.

காவல்துறை சொல்வதென்ன?

செல்போனில் வடியோ
ீ கேமரா, இன்டெர்நெட் வசதி வந்த பிறகு
புகார்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. முழு சுகம் வேண்டுமா?
தொடர்பு கொள்ளவும் என்று பெண்களின் செல்போன் எண்ணை
குறிப்பிட்டு எஸ்எம்எஸ் அனுப்பி விடுவார்கள். இதேபோல் ரியல்
எஸ்டேட் தரகர் ஒருவர், உரிமையாளர் எண்ணை குறிப்பிட்டு,
தொடர்பு கொள்ளவும் நிலம் விற்பனைக்கு உள்ளது என்று பலருக்கு
எஸ்எம்எஸ் அனுப்பி விட்டார். உரிமையாளர் விற்பதற்கில்லை
என்று பதில் சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டார். அப்புறமென்ன
இந்த சம்பவங்கள் குறித்து வந்த புகார்களின் அடிப்படையில்
விசாரித்து நடவடிக்கை எடுத்தோம். தொடர்ந்து மிஸ்டு கால்
கொடுப்பதும் குற்றம்தான் என்கிறார் மத்திய குற்றப்பிரிவு உதவி
ஆணையர் டி.தங்கராஜ்.

வெறும் 2 நிமிடங்கள்தான்
சென்னை மருத்துவக் கல்லூரியின் காது மூக்கு தொண்டை
மருத்துவப் பிரிவு முன்னாள் தலைவர் கே.பாலகுமார்,
Ô‘செல்போனில் நீண்ட நேரம் பேசுவதால் செவித்திறன் குறையும்.
கவனிக்காமல் விட்டால் காது கேட்காது. அதுமட்டுமின்றி காதில்,
மூளையில் கட்டிகள் ஏற்படும். இது கேன்சர் கட்டியாகவும்
இருக்கலாம். சிந்தனைத் திறன் குறையும். நினைவாற்றல்
குறையும். நரம்பு மண்டலம் பாதிக்கும். காதில் முதலில் வலி
தோன்றுவதுதான் முதல் எச்சரிக்கை. அடுத்து கேட்கிற தன்மை
குறையும். பின்னர் காதில் இரைச்சல் கேட்கும். இது இறுதியான
எச்சரிக்கை. அதற்கு பிறகும் செல்போனில் பேசுவதை குறைத்து
டாக்டரை அணுகாவிட்டால் பிரச்னைதான்.

யாராக இருந்தாலும் 2 நிமிடங்களுக்கு மேல் செல்போனில்


பேசுவதை தவிர்ப்பது நல்லது. அவசியம் என்றால் வட்டுக்குப்
ீ போய்
நிதானமாக சாதாரண தொலைபேசியில் பேசிக் கொள்ளலாம். அதை
விட்டுவிட்டு பல மணி நேரம் செல்போனில் பேசிக் கொண்டு
இருந்தால் காது கேளாதவர்கள் பட்டியலில் சேர வேண்டியதுதான்.
செல்போனை அப்படியே காதில் வைத்தோ அல்லது புளூடூத்
பயன்படுத்தி பேசுவதை விட ஹெட்போன்(ஹாண்ட்ஸ் ஃப்ரீ)
பயன்படுத்தி பேசுவது ஓரளவுக்கு பாதுகாப்பானது. அதேபோல் சார்ஜ்
செய்துக் கொண்டிருக்கும போது பேசுவதையும் கட்டாயம் தவிர்க்க
வேண்டும் என்றார்.

எச்சரிக்கை அவசியம்

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் டாக்டர் சுதாகர்


கூறுகையில், ‘‘செல்போன் வாங்கும்போது உத்திரவாத அட்டை,
ரசீதுடன் வாங்க வேண்டும். ஐஈஎம்ஐ எண்ணை குறித்து வைத்துக்
கொள்வது நல்லது. காணாமல் போனால், எண்ணை செயலிழக்கச்
செய்வது நல்லது. இல்லாவிட்டால் போனை எடுத்தவர்கள் தவறாக
பயன்படுத்தினால், சிக்கலில் மாட்டிக் கொள்வர்கள்.
ீ தெரியாத
நபர்களிடம் செல்போனை கொடுக்கவே கூடாது. செல்போனை
பழுது பார்க்க தரும் போது சிம்கார்டு, மெமரி கார்டுகளை எடுத்துக்
கொள்ள வேண்டும். செல்போன் குற்றங்களுக்கு இந்திய தண்டனைச்
சட்டம் 506(1), 507 ஆகிய பிரிவுகளின் கீ ழ் 2 ஆண்டுகள் வரை
தண்டனை உண்டு. அபராதமும் வசூலிக்கப்படும். பாதிக்கப்படுவது
பெண்ணாக இருந்தால் 509 பிரிவு கூடுதலாக சேர்க்கப்படும்Õ’
என்றார்.

செல்போனில் பேச்சு; ரகசியம் போச்சு

செல்போனில் பேசினால் யாருக்கும் தெரியாது என்று சகலத்தையும்


செல்போனில் கொட்டுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். நாம் பேசும்
அனைத்தும் டேப் செய்யப்படும். ஒவ்வொரு செல்போன்
நிறுவனமும் ஒவ்வொரு மாதமும் இணைப்பு பெறும்
வாடிக்கையாளர் விவரங்களையும், எண்ணையும் மத்திய, மாநில
உளவு துறைகள் உட்பட 7 நிறுவனங்களுக்கு தனித்தனி குறுந்தகடில்
தருவார்கள். அவர்கள் சந்தேகப்படும எண்களை கவனிப்பார்கள்.

செல்போனில் ‘நீலம்’

செல்போன் வந்து விட்டபிறகு ஸ்டில் கேமரா, வடியோ


ீ கேமரா
எல்லாம் கைக்குள் வந்து விட்டன. சிலர் தங்கள் உறவு காட்சிகளை
கூட படம் பிடித்துக் கொள்கிறார்கள். த்ரில்லுக்காக எடுக்கும்
தம்பதிகளை விட திருட்டுத்தனமாக எடுத்துக் கொள்ளும் கள்ளக்
காதலர்கள் அதிகம். தெரிந்தோ, தெரியாமலோ எடுக்கப்படும்
படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்துக் கொள்ளவும் செய்கின்றனர்.
அங்கிருந்து பல நூறு பேர்களுக்கு பரவி, இன்டர்நெட் மூலம்
மாநிலம், தேசம் கடந்து விடுகிறது. ஒரு சிலர் இதனை
இணையதளங்களுக்கு விற்று காசாக்கி விடுகின்றனர். இந்த
விஷயம் வட்டில்
ீ தெரியும் போது பிரச்னையாகி விடுகிறது. இப்படி
குடும்பங்கள் சீர்குலைவது தொடர்கதையாகி வருகிறது.
அதுமட்டுமல்ல நீலப்படம் பார்க்க ஊருக்கு ஒதுக்குபுறமான
திரையரங்குகளை தேடிச் செல்வார்கள். செல்போனில் பரவும்
செக்ஸ் வடியோக்களால்
ீ இந்த பிட் திரையரங்குகள் நலிந்து
விட்டன.

ஆண்மைக்கும் ஆபத்தா…

பாலியல் மருத்துவ நிபுணர் டாக்டர்.டி.காமராஜ், செல்போனை


இடுப்பு பெல்ட்டில் சொருகி வைத்திருப்பதால் விந்தணுக்களின்
எண்ணிக்கை குறைந்து குழந்தை பேறு இல்லாமல் போவது குறித்து
பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதேபோல் மடிக்
கணினிகளை மடியில் வைத்துக் கொண்டு நீண்ட நேரம்
பயன்படுத்துவதும் இதே பிரச்னையை ஏற்படுத்துகிறது.
செல்போனை வெறுமனே (பேசாத போதும்) சொருகி
வைத்திருந்தாலும் இந்த பிரச்னை ஏற்படும். தொடர்ந்து 4 மணி
நேரம் செல்போனில் பேசினாலும் பாதிப்புதான். செக்சில்
ஆர்வத்தைஏற்படுத்தும் டெஸ்டோடிரான் என்ற ஹார்மோன்களின்
எண்ணிக்கை குறைகிறது. இதனால் ஆண்மை குறைகிறது.
செல்போன்களை பயன்படுத்துவதால் பெண்களுக்கு ஏற்படும்
பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த ஆய்வு முடிவுகளும்
வெளியாகவில்லை’’ என்றார்.
செல்போன் போதை

வட்டுக்கு
ீ தெரியாமல் விவகாரங்களில் ஈடுபடுபவர்கள் ஆளுக்கு
ஒரு சிம் கார்டு பயன்படுத்துகிறார்கள். வட்டை
ீ விட்டு வெளியில்
வந்ததும் வரிசையாக மிஸ்டு கால் கொடுக்க ஆரம்பித்து
விடுவார்கள். யார் முதலில் சிக்குகிறார்களோ அவர்களிடம்
கல்லூரி, அலுவலகம், தொழிற்சாலை போய் சேரும் வரை
பேசிக்கொண்டே இருப்பார்கள். மிஸ்டு கால் கிடைத்த
மற்றவர்களுக்கு இணைப்பு கிடைக்காது. இப்படி 24 மணி நேரமும்
செல்போன் போதையில் வழ்ந்துக்
ீ கிடப்பவர்களுக்கு மனநோய்
ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறார் மனநல மருத்துவர் டாக்டர்
விஜயகுமார்.
இன்றைய இணையம்......

                 எகிப்து புரட்சிக்கு வித்திட்டதாகச்


சொல்லப்படும் சமூக வலைத்தளங்களை நாம்
இப்படித்தான் அணுகி வருகிறோம். தடுக்கி
விழுந்தால்கூட பேஸ் புக்கில் ஸ்டேட்டஸ் போடுவது,
அதற்கு 'லைக்ஸ்’ போடச் சொல்லி நண்பர்களை டார்ச்சர்
செய்வது என சமுக வலைத்தளங்களின் அடிமையாகவே
இன்று சிலர் முடங்கிக் கிடக்கிறார்கள். இன்னும் சிலரோ,
பொழுதுபோக்க மட்டும் அல்லாது தங்களுக்கு
ஆகாதவர்களைப் போட்டுத்தாக்கும் தளமாகவே
வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

                'சமூக வலைத்தளங்களால்


பாதிக்கப்பட்டவர்கள்’ என்று ஒரு புது ரகத்தினர் மனநல
மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு வரத் தொடங்கி
இருக்கிறார்கள். மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன்பு
அடிமையாகக் கிடப்பது, எந்த நேரமும் வலைத்தள
யோசனையிலேயே இருப்பது, பிற வேலைகளை
மறப்பது போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகுபவர்களின்
எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது.

                ''சமூக வலைத்தளங்களில் மூழ்கி படிப்பில்


கவனம் சிதறிய ஒன்பதாம் வகுப்பு மாணவியை
என்னிடம் அழைத்து வந்தார்கள். அந்த மாணவி
'படிக்கிறேன்’ என்ற போர்வையில் தினமும் 3-4 மணி
நேரம் வரை சமூக வலைத்தளத்தில் மூழ்கி
இருந்திருக்கிறார். அவருக்கு அந்த வலைத்தளத்தில் 500-
க்கும் மேற்பட்ட நண்பர்கள். நாள் ஒன்றுக்குக் குறைந்தது
30-40 பேராவது அவருடன் அந்தத் தளம் வாயிலாக 'சேட்’
செய்வது வழக்கம். நான்கு வரி தட்டச்சு செய்து
அனுப்பிவிட்டு, அதற்கு என்ன பதில் வருகிறது என்ற
காத்திருப்பு அவருக்கு ஒரு போதையை ஏற்படுத்தி
இருக்கிறது. புத்தகத்தைத் திறந்து வைத்துக்கொண்டு
வலைத்தளத்தில் என்ன நடக்கிறது என்று
மணிக்கணக்கில் கவனித்தபடியே இருந்ததால் படிப்பு
பாதிக்கப்பட்டது. வகுப்பில் முதல் 10 இடங்களுக்குள்
வரும் அந்த பெண், தேர்வில் தோல்வி
அடைந்திருக்கிறார். சுதாரித்துக்கொண்ட பெற்றோர்
அவரது நடவடிக்கையைக் கண்காணித்து டாக்டரிடம்
அழைத்துச்சென்று கவுன்சிலிங் மூலமாக சமூக
வலைத்தளத்துக்கு அடிமையாகி இருந்த அவரை
மீ ட்டுள்ளனர்''.
               
                 ''மூளையில் 'டோபோமைன்’ என்ற வேதிப்பொருள்
சுரக்கும்போது ஒருவிதக் கிளர்ச்சி, சந்தோஷம் உண்டாவதும் இது
போன்ற 'அடிக்ஷன்’ ஏற்பட காரணம். ஒரு காலத்தில்

மது, சூதாட்டம்,சிகரெட்... என வட்டுக்கு
ீ வெளியே இருக்கும்
விஷயங்களுக்குத்தான் ஒரு சிலர் அடிமைப்பட்டார்கள். ஆனால், இன்றோ

வட்டின்
ீ நட்ட நடுக் கூடத்தில் 'கௌரவம்’ என்று கருதப்படும் கம்ப்யூட்டர்
மற்றும் மொபைல் போன் போன்றவற்றுக்கு, வயது வித்தியாசமின்றி
பலரும் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள்.

      
                  சமூகத் தளங்கள் மூலமாகப் பள்ளி
மாணவிகளைச் சமூக விரோதிகள்
பயன்படுத்திக்கொள்ளும் அபாயமும் இருக்கிறது.
குழந்தைகள் யாருடன் பழக வேண்டும், நண்பர்கள் எப்படி
இருக்க வேண்டும் என்றெல்லாம் தங்கள்
பிள்ளைகளுக்குப் பெற்றோர் சொல்லிக் கொடுப்பார்கள்.
ஆனால், சமூக வலைத்தளங்களில் இந்தக்
கட்டுப்பாடுகள் இல்லை. யார் என்றே தெரியாமல், முகம்
தெரியாத ஆட்களுடன் 'தான் யார், தனக்கு என்ன சினிமா
பிடிக்கும், எந்த மாதிரி உணவு பிடிக்காது’ என்று துவங்கி
தங்களைப் பற்றிய அத்தனை விஷயங்களையும்
பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள். புகைப்படங்களைப்
பகிர்ந்து கொள்கிறார்கள். இந்தப் பழக்கம் கடைசியில்
உணர்வு ரீதியான உறவாகவும் மாறுகிறது.
இதனால்தான் முகம் தெரியாத நபருடன் காதல்,
ஃபேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டவருடன் ஓட்டம் என்று
பல செய்திகளை நாம் பார்க்கிறோம்!'' இந்த
அடிமைத்தனத்துக்கு ஆட்பட்டுவிட்டால் என்ன நடக்கும்
என்பதை நாமும் யோசித்து பார்க்க வேண்டும்.

       ''சமூக வலைத்தளங்களில் பழியாய்க் கிடந்தால்


படிப்பு, வேலை,குடும்பம் ஆகியவற்றின் மீ து கவனம் குறையும்.
கவனச்சிதறல் ஏற்படும். வாழ்க்கையில் எது முக்கியம், எது முக்கியம்

இல்லை என்பது மறந்து போவதுடன் வாழ்க்கை முறையே மாறிவிடும்.


                 நிறைய 'லைக்ஸ்’, 'ஷேர்’ கிடைக்கவில்லை
என்றால் ஒருவித ஏமாற்றம் வந்து மனஅழுத்தம்
ஏற்படும். நம்முடைய கருத்துக்கு எதிரான கருத்து
வந்தால், அதைத் தாங்கும் பக்குவமற்று சிலருக்கு
எரிச்சல் ஏற்படும். அதுவே மன அழுத்தமாகவும் மாறும்.
யாரைப் பற்றி யார் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்
என்கிற அளவுக்கு இணைய சுதந்திரம் நம் தேசத்தில்
இருக்கிறது. அதனால், நம்மை நோக்கிய தாக்குதல் எந்த
நேரத்திலும் இணையத்தில் வெளிப்படலாம். மறைமுகப்
பெயர்களால் கருத்துரீதியான தாக்குதலுக்கு நாம்
ஆளாகலாம். ஆனால், இதை எல்லாம் சகஜமாக
எதிர்கொள்ளும் மனப்பக்குவம் அவசியம். ஒரு
வார்த்தைக்கே ஒடிந்துபோகிறவர்கள் வலைத்தள
ஆர்வத்தால் எத்தகைய மனச்சிக்கலுக்கும் ஆளாக
நேரிடும். சிலர் தற்கொலைக்கு முயலும் அபாயமும்
உருவாகும்.

                மனம் மட்டும் அல்லாமல், நீண்ட நேரம்


உட்கார்ந்தே இருப்பதால் இடுப்பு மற்றும் கண்
தொடர்பான பிரச்னைகளும் ஏற்படும். படிப்பு அல்லது
வேலையில் கவனம் குறையும். குடும்ப உறவில் விரிசல்
ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்களும் உருவாகும்!'

       இதற்க்கு மற்றொரு உதாரணம் என்னுடன் மிக


நெருக்கமாக பழகிய நண்பர் ஒருவரின் வாழ்க்கை,,,
                'சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருக்கும் அவர்.
அவருக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள்.
எல்லா ஆண்களுக்கும் 'அழகி’ படத்தைப்போல, பள்ளி-
கல்லூரிக் காலத்தில் ஏதாவது ஒரு காதல் அனுபவம்
இருந்திருக்கும். இவர் பிளஸ்-1 படித்தபோது உடன்
படித்த மாணவி மீ து ஒரு கண். இருவரும்
பார்த்துக்கொண்டதோடு சரி... காதலை
வெளிப்படுத்தவில்லை. இப்போது அந்த பெண் என்ன
செய்கிறார்? ஃபேஸ்புக்கில் இருக்கிறாரா என்று தேட
ஆரம்பித்திருக்கிறார் அந்த நபர். படித்த பள்ளியை
வைத்துத் தேடியபோது அந்தப் பெண்ணுக்குத் திருமணம்
ஆகி, பள்ளி செல்லும் வயதில் இரண்டு குழந்தைகளும்
உள்ளனர் என்பது தெரிந்தது. அந்தப் பெண்ணுக்கு இவர்,
'ஃபிரெண்ட் ரிக்வஸ்ட்’ அனுப்பினார். இருவரும்
நண்பர்கள் ஆயினர். பள்ளிக்காலத்து நிகழ்வுகளை அவர்
அந்தப் பெண்மணியின் மனதில் தூண்டிவிட்டார். பழைய
நினைவுகளில் இருவரும் மூழ்கினர். அந்தப் பெண்மணி
இல்லை என்றால் வாழ்வே இல்லை என்ற நிலைக்கு
இவர் ஆளாகிவிட்டார். மற்ற எந்த வேலையும்
செய்யாமல் இணையத்தில் பேசுவதிலேயே இருவரும்
நேரத்தை செலவிட்டனர். இதனால் இருவர்
குடும்பத்திலும் சண்டை சச்சரவு. 
 
       சமூக வலைத்தளம் குடும்ப உறவை எந்த
அளவுக்குப் பாதிக்கிறது என்பதற்கு இவரது வாழ்கை ஓர்
உதாரணம். சமூக வலைத்தளத்தில் மூழ்கியவர்களுக்கு
இதர விஷயங்களில் கவனம் திரும்பாமல்
போய்விடுகிறது. குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரம்
செலவிடுவது, பேசுவது, பொது விஷயங்களில்
கலந்துகொள்வது போன்றவை எல்லாம் வண்
ீ வேலை
என்றே நினைக்கிறார்கள். ஒருகட்டத்தில் சமூக
வலைத்தளத்தில் மூழ்குவதுதான் ஒரே மகிழ்ச்சி  என்ற
நிலை ஏற்பட்டுவிடுகிறது.

                இந்த நிலைக்கு ஆளாகிவிடாமல் இருக்க


முதலில் சுயக் கட்டுப்பாடு தேவை. அரை மணி நேரம்
மட்டும்தான் சமூக வலைத்தளங்களில் செலவழிப்பேன்
என்று வரையறுத்துவிட்டால், அதை மீ றக்கூடாது.

       பள்ளி செல்லும் மாணவ- மாணவிகளுக்குச் சமூக


வலைத்தளங்கள் தேவை இல்லை. எனவே, இதில்
பெற்றோர் கொஞ்சம் கவனம் செலுத்த
வேண்டும். இதற்கு மாறாக, புத்தகம் படிப்பது,
அக்கம்பக்கத்தில் இருக்கும் குழந்தைகளோடு சேர்ந்து
விளையாடுவது, குடும்பத்தினருடன் நேரத்தை
செலவிடுவது போன்றவற்றில் சந்தோஷத்தை
உருவாக்க வேண்டும். சமூக வலைத்தளங்களுக்கு
'அடிக்ட்’ ஆனவர்களை இந்த நோயில் இருந்து மீ ட்க ஒரே
தீர்வு... அத்தகைய ஆர்வத்தை உடனடியாக
நிறுத்துவதுதான். முதலில் கடினமாகத்தான் இருக்கும்.
ஆனால், மூன்றே வாரத்தில் அதில் இருந்து விடுபட்டு
வழக்கமான பணிகளில் முன்போல ஈடுபட முடியும்.'' 

                 ''நம் குழந்தைகளுக்கு இன்டர்நெட் வசதியை நாம் ஏற்படுத்திக்


கொடுக்க வேண்டிய தேவையே இல்லை. காரணம், நம் குழந்தைகளுக்கு
நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்க நாம் இருக்கிறோம். இன்டர்நெட்

நல்லதும், கெட்டதுமான கலவை. குழந்தைகள் மட்டும் அல்ல... நாமும்


அதனை எச்சரிக்கையோடு அணுகுதலே நலம்!''

                                                
ீ .......... 
என்றும் உங்களுடன் வரா

7
.125
Your rating: None Average: 7.1 (8 votes)

 புதிய கருத்தை சேர்

 438 views

கருத்துகள்

பதிந்தவர் nandagopal.d on சனி, 24/11/2012 - 3:47pm

unmaiyana thagaval nanba                            

 பதில்எழுது
பதிந்தவர் yarlpavanan on சனி, 24/11/2012 - 4:23pm

இப்பதிவு உளவியல், கணினி அறிவியல் சார்ந்த சிக்கலை அலசுகிறது.


 
கணினி அறிவியலில் "நம் குழந்தைகளுக்கு இன்டர்நெட் வசதியை நாம்
ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய தேவையே இல்லை." என்பதை
ஏற்கமுடியாது. குழந்தைகளுக்கான பாதுகாப்பான ஒழுங்கில் ஏற்படுத்திக்
கொடுக்கலாமே! இணையம் என்பது குழந்தைகள் தொடக்கம் கிழங்கள்
வரை நல்லறிவைப் பெருக்க உதவுமே! தவறான இணையப் பக்கங்களைப்
பார்க்க முடியதவாறு தடுப்பு மென்பொருள்களை(Filtering Software)
கடைகளில் வேண்டிப் பாவிக்கலாமே!
உளவியல் நோக்கில் பார்த்தால்  ''சமூக வலைத்தளங்களில் பழியாய்க்
கிடந்தால் படிப்பு, வேலை, குடும்பம் ஆகியவற்றின் மீ து கவனம் குறையும்.
கவனச் சிதறல் ஏற்படும். வாழ்க்கையில் எது முக்கியம், எது முக்கியம்
இல்லை என்பது மறந்து போவதுடன் வாழ்க்கை முறையே மாறிவிடும்."
என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இணையப் பக்கங்களைப்
பொழுதுபோக்காகப் பார்க்கலாம்; அறிவைப் பெருக்கப் பார்க்கலாம்.
ஆயினும், நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் பார்க்கலாம். மிஞ்சி மிஞ்சிப்
போனால் இரண்டு மணி நேரம் பார்க்கலாம். 
 
தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்கி இருப்போரைப் போலவே, சமூக
வலைத்தளங்களில் பலர் மூழ்கி விட்டனர். இரண்டுமே நல்லதல்ல.
வாழ்க்கையில் எல்லாம் தேவை தான். அதனை நேர ஒழுங்கின் படி
அதாவது அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் எனப்
பயன்படுத்தலாமே! மேலும் கல்விக்கு, தொழிலிற்கு, குடும்பத்துக்கு என
வாழ்வுக்கு முக்கியமானவற்றுக்கு முதன்மை இடம் வழங்கலாமே!
இதனால் கல்வி, தொழில், குடும்பம் சார்ந்த உறவுகள் முறிதல்,
உறவுகளுடான மோதல், வாழ்க்கையில் பின்னடைவு வருவதைத்
தடுக்கலாமே!
 
சிறந்த கருப்பொருளைக் கொண்ட பதிவைத் தந்த நணபர் வராவுக்கு
ீ நன்றி.

                           


யாழ்பாவாணன்.

http://ypvn.96.lt/

http://tamilnanbargal.com/user/4852/posts/all

 பதில்எழுது

பதிந்தவர் veerakrish on சனி, 24/11/2012 - 6:00pm

உண்மைதான் அன்பரே
நான் என்ன சொல்லவந்தேன் என்றால்???

சிறுபிள்ளைகள் கணிணியில் முழ்கி வணாவதையும்

சின்னாபின்னமாவதையும்தான் குறிப்பிட்டுள்ளேன்..
அது தவிர பெற்றோர்களே அவர்களுக்கோர் அறனாக உதவ வேண்டும்..
கணிணினியை தான் பார்த்து படித்து அதை குழந்நதைகளுக்கு பயீற்றுவித்
தாலே
அக்குழந்தைபருவத்தினர்க்கு போதுமான கல்வியை புகட்டும்
என்று நான் நினைக்கிறன்..

கருத்துரைத்ததற்கு மிக்க நன்றிகள் அன்பர்களே......

இடம் மாறிவந்த கடிதம்போல் அலைகிறேன்


உரியவனைதேடி......... வரா

 பதில்எழுது
பதிந்தவர் ஜோதி on ஞாயிறு, 25/11/2012 - 6:27am

இன்றைய கால கட்டத்தில் நடக்கின்ற ஒரு வகையான ஈர்ப்பு இந்த சமூக


வலை தளம்.....

இந்த வலை தளங்கள் மூலம் நம்முள் புதைந்திருந்த பல்வேறு


திறமையையும் வெளிபடுத்தவும் அறிவியல் சார்ந்த பல்வேறு
விடயங்களை 
நாம் தெரிந்து கொள்கிறோம்  என்றாலும்.....சில நேரங்களில் மற்ற நல்ல
விசயங்களை புறக்கணிக்கிறோம் ...
சிறு குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இதில் மூழ்கி
விடுவதால்....வெளியில் கூட செல்ல விரும்பாமல் 
உறவினர்களுடன் சகஜமாக பழகவும் நேரமும் மனதும்
ஒத்துபோவதில்லை ஆதலால் உறவுகளிடம் பரஸ்பர 
அன்பு கிடைக்காமல் ஒரு தனிமை நிலையுடன் இணைய தளமே
உலகமாக  வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...
நன்மைகள் எவ்வளவு இருக்கிறதோ அதேபோல் தீமைகளும் நிறைந்த
உலகமாக இந்த இணைய தளம் மக்கள் 
மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கிறது....இதற்கு ஒரே வழி
என்னவென்றால் மனதை ஒரு நிலைப்படுத்த 
பழகி கொண்டால் ஓரளவு இந்த இணையத்திற்கு அடிமை ஆவதை
தடுக்கலாம்.....

மிகவும் அருமையான பதிவு நண்பா....

         
தொ(ல்)லைக்காட்சி....

"குழந்தைகளிடம் உள்ள நற்பண்புகளை


சீரழிப்பதில் தொலைக்காட்சி மற்றும் இன்டர்நெட்
ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால்
குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும்
தங்களுக்குள் பேசிக்கொள்ள குறைவான நேரமே
செலவிடுகின்றனர்' என சமீ பத்திய ஆய்வு
தெரிவிக்கிறது. 
அமெரிக்காவில் உள்ள தெற்கு கலிபோர்னியா
பல்கலை சார்பில், "நவன
ீ தொழில்நுட்ப
காலத்தில் குடும்ப உறவுகளின் நிலை' குறித்து
ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 57 சதவத

வடுகளில்
ீ இன்டர்நெட் பயன்படுத்தவும், 60 சதவத

வடுகளில்
ீ தொலைக்காட்சி பார்க்கவும் தடை
விதிக்கப்பட்டுள்ளதாக தெரிந்தது. 
ஆய்வுக்குழுத் தலைவர் மைக்கேல் கில்பர்ட்
இதுகுறித்து கூறியதாவது: 
தொலைபேசி வழியாக நடத்தப்பட்ட இந்த
ஆய்வில், 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள்,
அவர்களின் பெற்றோர்கள் என இரண்டாயிரம் பேர்
கலந்து கொண்டனர். அப்போது, பெரும்பாலான
பெற்றோர்கள் தொலைக்காட்சி மற்றும்
இன்டர்நெட் பயன்பாட்டுக்கு தடைவிதிப்பதும்,
அமெரிக்க சிறுவர்கள் உண்மையான நண்பர்களை
விட ஒன்லைன் நண்பர்களை ஏற்படுத்திக்
கொள்ளவே ஆர்வம் காட்டுகின்றனர் என்பதும்
தெரிந்தது. 

தொ
லைக்காட்சி மற்றும் இன்டர்நெட் காரணமாக,
சிறுவர்கள் தங்கள் நண்பர்களுடன் போதிய நேரம்
செலவிடுவதில்லை. அவர்களின் விளையாட்டு
நேரமும் குறைகிறது. குடும்ப உறுப்பினர்கள்
ஒருவருக்கொருவர் நேரடியாக தங்களுக்குள்
பேசிக் கொள்வதும் குறைந்து வருகிறது. கடந்த
2000 ம் ஆண்டுகளில், சிறுவர் சிறுமியர் ஒரு
நாளில் நான்கு மணிநேரம் தங்கள் பெற்றோருடன்
செலவிட்டனர். இப்போது, இரண்டு மணிக்கும்
குறைவான நேரமே ஒதுக்குகின்றனர். இதனால்,
குடும்ப உறவுகள் பலவனமடைகின்றன.

தேவையற்ற மன அழுத்தமும் ஏற்படுகிறது.
ஒன்லைன் வடியோ
ீ கேம்ஸ் மற்றும் சமூக
வலைதளங்கள் தான் இதற்கு முக்கிய காரணம்.
நவன
ீ தொழில்நுட்பத்தால் குடும்ப உறவுகள்
பலப்படுவதற்கு மாறாக, பலவனமடைந்து

வருகின்றன. அதேசமயம், செல்போன் போன்ற
தொலைத்தொடர்பு வசதிகள் தங்களுக்கு பெரும்
உதவி புரிவதாகவும் ஆய்வில் பங்கேற்றவர்கள்
கூறினர். இவ்வாறு மைக்கேல் கில்பர்ட் கூறினார்.

You might also like