Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 16

É#aghuj«

Ä‹dQ âd ïjœ (jÅ¢R‰W) VIJAYABHARATHAM DAILY


Rg»UJ, òu£lhá - 6 btŸË 23.09.2022 ky® - 3, ïjœ - 170

ஆர்.எஸ்.எஸ் தலைவர் முஸ்லிம் தலைவர்களுடன் சந்திப்பு


டெல்லியில், ஆர்.எஸ்.
எஸ் தலைவர் ம�ோகன்
பாகவத், அகில இந்திய
இமாம் அமைப்பின் தலைமை
இமாமாக உள்ள டாக்டர் இமாம்
உமர் அகமது இலியாசியை
vijayabharatham.org கஸ்தூரிபா காந்தி மார்க்
மசூதியில் சந்தித்து பேசினார். நாட்டில் மத நல்லிணக்கத்தை
வலுப்படுத்த முஸ்லிம் அமைப்புகளுடன் ஆர்.எஸ்.எஸ்
தலைவர் ம�ோகன் பாகவத் இடையேயான இந்தச் சந்திப்பு
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த
சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
முன்னதாக, டெல்லியில் முஸ்லிம் அமைப்பின் தலைவர்கள்
ஆர்.எஸ்.எஸ் தலைவர் ம�ோகன் பாகவத்தை சந்தித்து பேசினர்.
பா.ஜ.கவில் இருந்து நீக்கப்பட்ட நுபூர் சர்மா விவகாரத்தை
த�ொடர்ந்து, இந்த கூட்டம் நடத்த வேண்டும் என்று முஸ்லிம்
அமைப்புகள் கேட்டு க�ொண்டதன் அடிப்படையில் இந்த
கூட்டம் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த
சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில், டெல்லியின் முன்னாள் துணைநிலை ஆளுநர்
நஜீப் ஜங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.
குரேஷி, அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் முன்னாள்
துணைவேந்தர் லெப்டினன்ட் ஜெனரல் ஜமீர் உதின் ஷா
(ஓய்வு), ராஷ்டிரிய ல�ோக்தளம் தேசிய துணைத் தலைவர்
ஷாகித் சித்திக், த�ொழிலதிபர் சயீத் ஷெர்வானி உள்ளிட்ட பலர்
கலந்து க�ொண்டனர். மத நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது
மற்றும் சமூகங்களுக்கிடையிலான உறவை மேம்படுத்துவது
குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

பா.ஜ.க தட்டிக்கேட்கும்
தமிழக பா.ஜ.க. தலைவர்
அண்ணாமலை வெளியிட்டுள்ள
ஒரு அறிக்கையில், "தமிழகத்தில்
தற்போது நடைபெற்று வரும்
தி.மு.க ஆட்சியில், தமிழரின் vijayabharatham.org
மாண்பையும் தமிழரின் மரபையும் தமிழரின் த�ொன்மையையும்
இறை நம்பிக்கையையும், இழிவுபடுத்தும் செயல் த�ொடர்ந்து
நடைபெற்று வருகிறது. தமிழகத் தாய்மார்களை, தமிழினத்தை
அவமதிக்கும் கருத்திற்கு. க�ோவை மாவட்டத்தில் ஜனநாயக
ரீதியாக, எதிர்ப்பு தெரிவித்த, பா.ஜ.க த�ொண்டர்கள் த�ொடர்ந்து
கைது செய்யப்படுவதை கண்டித்து வரும் 26ம் தேதி,
அறவழியில், சிறை நிறப்பும் ப�ோராட்டம் நடத்தப்படும்.
தமிழக காவல்துறை, தி.மு.கவின் ஏவல் துறையாக

1
செயல்படுகிறது. தமிழ் இனத்தை, தமிழ்ப் பெண்களை
இழிவுபடுத்தி கேவலப்படுத்தும். ஆ. ராசா ப�ோன்ற ஆளும்
கட்சி நபர்களை எல்லாம் கண்டுக�ொள்ளாத காவல்துறை,
ஜனநாயக ரீதியாக அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பா.ஜ.க
த�ொண்டர்களையும் நிர்வாகிகளையும் ப�ொய் வழக்கில்
கைது செய்து அச்சுறுத்துகிறது. சில தி.மு.க வழக்கறிஞர்கள்
நீதிபதிகளையே அச்சுறுத்தி வருகிறார்கள். தி.மு.கவின்
அராஜகமும் ஆளும் கட்சி என்பதால் நடத்தும் அத்துமீறலும்,
கண்டிக்கத்தக்கது. தி.மு.கவின் ப�ொய் வழக்கைக் கண்டும்,
கைது நடவடிக்கையைக் கண்டும் எந்த பா.ஜ.க த�ொண்டனும்
அஞ்சப்போவதில்லை.. தவறை யார் செய்தாலும் தட்டிக்கேட்க
பா.ஜ.க தயங்காது. தமிழினத் தாய்மார்களை தரம் தாழ்ந்து
பேசிய ஆ. ராசாவை கைது செய்யாமல், பாதிக்கப்பட்டவர்கள்
மேல் ப�ொய் வழக்கு ப�ோட்டு கைது செய்வது எந்த விதத்தில்
நியாயம்? காலம் உங்களை கண்டிப்பாக தண்டிக்கும் நாள் வெகு
த�ொலைவில் இல்லை" என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் 48,000 த�ொழில் நிறுவனங்கள்
சென்னையில் நடைபெற்ற
பி.எம்.இ.ஜி.பி., எனும் பிரதமரின்
வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
த�ொடர்பான, ஒரு நாள் பயிலரங்கத்தை
துவக்கி வைத்து பேசிய துணை தலைமை
செயல் அதிகாரி ராஜன்பாபு, "பிரதமரின்
vijayabharatham.org
வேலைவாய்ப்பு திட்டம், பாரம்பரிய
த�ொழில் துறையை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது.
த�ொழில் முனைவ�ோரை உருவாக்கும் ந�ோக்கில் செயல்பட்டு
வருகிறது. இத்திட்டத்திற்கு வங்கிகள் முதுகெலும்பாக
செயல்படுகின்றன. இந்த திட்டத்தின் வாயிலாக, 7.82
லட்சம் த�ொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளன.
இதனால், இதுவரை 64 லட்சம் வேலைவாய்ப்புகள்
உருவாக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும், 48
ஆயிரத்து 220 நிறுவனங்கள் துவங்கப்பட்டு 4.82 லட்சம்
வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதுவரை 51
ஆயிரம் க�ோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டு உள்ளது. நடப்பு
நிதியாண்டில், 1.5 லட்சம் நிறுவனங்கள் துவக்கவும், இதன்
வாயிலாக 3,000 க�ோடி ரூபாய் கடன் உதவி வழங்கவும் இலக்கு
நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அவ்வகையில், தமிழகத்தில்
5,800 நிறுவனங்கள் துவங்கவும், 170 க�ோடி ரூபாய் கடன்
உதவி வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது" என
தெரிவித்தார்.

தி.மு.க எம்.எல் ஏ அராஜகம்


செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை
நகர் அடுத்த மேல்ரோசாபுரம் பகுதியில்,
கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும்,
'டேஜங்மோபாட்ஸ் பிரைவேட் லிமிடெட்'
நிறுவனம், 20 ஆண்டுகளுக்கும் மேலாக
இயங்கி வருகிறது. இந்நிறுவனத்திற்கு
vijayabharatham.org
சென்ற தாம்பரம் தி.மு.க சட்டமன்ற
உறுப்பினர் ராஜா, அங்குள்ள நிர்வாகிகளை மிரட்டி, ஆபாச
2
வார்த்தைகளில் பேசிய 'வீடிய�ோ' சமூக வலைதளங்களில்
பரவியது. எம்.எல்.ஏ., மிரட்டியது குறித்து, நிறுவனத்தின்
தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,
"எங்கள் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி, நிறுவனம்
செயல்படும் இடத்தை வட மாநிலத்தவர் இருவருக்கு
2018ல் விற்று, க�ோடிக்கணக்கான ரூபாயுடன் தலைமறைவு
ஆகிவிட்டார். அவர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கு
நிலுவையில் உள்ளது. அப்போதே அடுத்த 10 ஆண்டுகளுக்கு
இதே இடத்தில் நிறுவனம் வாடகைக்கு இயங்கும் என
சம்பந்தப்பட்ட வட மாநிலத்தவர்களுடன் ஒப்பந்தம்
ப�ோடப்பட்டது. அதன்படி வாடகை அளிக்கப்பட்டு
வருகிறது. இந்நிலையில், நிறுவனத்திற்கு நேற்று வந்த
தாம்பரம் தி.மு.க எம்.எல்.ஏ ராஜா நிறுவனத்தை காலி செய்ய
வேண்டும் எனக்கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகாத
வார்த்தைகளால் மிரட்டல் விடுத்தார். எங்கள் நிறுவனத்தில்
12 நிரந்தர பணியாளர்களும் 108 ஒப்பந்த பணியாளர்களும்
பணிபுரிகின்றனர். 120 குடும்பங்களை நடுத்தெருவுக்கு
க�ொண்டுவர ஆசைப்படுகிறார். இதை எதிர்த்து, தலைமைச்
செயலகத்திற்கு ஊழியர்களுடன் சென்று ப�ோராடுவ�ோம்"
என்று கூறினார். இந்நிலையில் எம்.எல்.ஏ எஸ்.ஆர். ராஜா
மீது 3 பிரிவுகளின் கீழ் மறைமலைநகர் காவல் நிலையத்தில்
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்  அணிவகுப்புக்கு அனுமதி


விஜயதசமியை முன்னிட்டு
சென்னை, விழுப்புரம்,
ஸ்ரீவில்லிபுத்துார் உள்ளிட்ட
ஒன்பது இடங்களில் ஆர்.எஸ்.
எஸ் அமைப்பினர் அணிவகுப்பு
ஊர்வலத்துக்கு அனுமதி க�ோரி,
தமிழக உள்துறை மற்றும் டி.ஜி.
vijayabharatham.org பிக்கு மனு அளிக்கப்பட்டது.
ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படாததால், அனுமதி அளிக்க
அரசுக்கு உத்தரவிடக் க�ோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் 
மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுக்கள் மீதான விசாரணை
நேற்று நடைபெற்றது. அப்போது, தமிழகம் முழுவதும்
50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்
அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி
அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வரும் செப்டம்பர்
28க்குள் தமிழக காவல்துறை அனுமதி வழங்க வேண்டும்,
நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும்
என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பி.எப்.ஐ எஸ்.டி.பி.ஐ இடங்களில் ச�ோதனை


தடை செய்யப்பட்ட
பயங்கரவாத அமைப்புகளுக்கு
ஆள் சேர்த்தல், அவர்களுக்காக நிதி
திரட்டுதல், சட்டவிர�ோத பணப்
பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு
சட்டவிர�ோத செயல்களில்
vijayabharatham.org ஈடுபட்டதாக பாப்புலர் பிரண்ட்
3
ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள்
மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர்
மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இணைந்து ஒரே
சமயத்தில் நாடு முழுவதும் அதிரடி ச�ோதனைகளை நேற்று
நடத்தினர். இதேப�ோல பி.எப்.ஐ அமைப்பின் அரசியல்
முகமான எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்தவர்கள் வீடுகளிலும்
ச�ோதனைகள் நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை,
க�ோவை, நெல்லை,மதுரை, தென்காசி உள்ளிட்ட இடங்களில்
ச�ோதனை நடைபெற்றது. இதேப�ோல கேரளா, டெல்லி,
மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ,
க�ோல்கட்டா உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள பல்வேறு
நகரங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த
அதிரடி ச�ோதனை நடைபெற்றது. இதில் பாப்புலர் பிரண்ட்
ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் நூறுக்கும்
மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன. இந்த ச�ோதனை, கைதுகளை கண்டித்து
பி.எப்.ஐ, எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் பல இடங்களில்
ப�ோராட்டங்கள் நடத்தினர். இவர்களை காவல்துறையினர்
கைது செய்து அப்புறப்படுத்தினர்.

ஆ. ராசா மீது எம்.பிக்கள் புகார்


தி.மு.க எம்.பியான ஆ. ராசா, சமீபத்தில்
ஹிந்துக்களை இழிவுபடுத்தும் வகையில்
பேசினார். இதற்கு பலத்த எதிர்ப்பு
எழுந்துள்ளது. அவர் மீது நடவடிக்கை
எடுக்கக் க�ோரி, தமிழகத்தில் பல்வேறு vijayabharatham.org
பகுதிகளில் காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு
வருகின்றன. அவர் மீது நடவடிக்கை எடுக்கக் க�ோரி
ப�ோராட்டங்களும் நடந்து வருகின்றன. ஆனால், தமிழக
முதல்வர் ஸ்டாலின், நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை
பார்த்து வருகிறார். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தைச்
சேர்ந்த பா.ஜ.க பெண் எம்.பிக்கள் மூன்று பேர், மக்களவை
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், ஆ. ராசாவின் பேச்சு சம்பந்தமாக நடவடிக்கை
எடுக்கக் க�ோரியுள்ளனர். மேலும், சபாநாயகர் இல்லாத
நேரத்தில் சபையை நடத்துவதற்கு, எட்டு எம்.பி.,க்கள்
தற்காலிக சபாநாயகர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதில், ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆ. ராசாவை
அந்தப் ப�ொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்
ஹிந்துக்களையும், பெண்களையும் இழிவு படுத்தும் வகையில்
பேசியுள்ள ராசா, மக்களவையை வழிநடத்த அனுமதிக்கக்
கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர். இது த�ொடர்பான
பத்திரிகை செய்திகள், வீடிய�ோ உள்ளிட்டவற்றை சமர்ப்பித்து
உள்ளனர்.

ர�ோஹிங்கியா பயங்கரவாதிகள் த�ொடர்பு


டெல்லி உயர்நீதிமன்றத்தில்,
மியான்மர் அகதி குறித்த வழக்கு
ஒன்றில் மத்திய அரசு தகல் செய்த
அறிக்கையில், மியான்மரில்
இருந்து சட்டவிர�ோதமாக
குடியேறும் ர�ோஹிங்கியா vijayabharatham.org
4
முஸ்லிம்களுக்கு, ஏஜென்ட்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம்
பாரதத்தில் குடியேற ஏற்பாடுகள் உதவிகள் செய்யப்பட்டு
வருகிறது. பாகிஸ்தானை தளமாகக் க�ொண்ட பயங்கரவாத
அமைப்புகளுடன் ர�ோஹிங்கியாக்களின் த�ொடர்புகள்
இருப்பதைக் குறிக்கும் சமகால தரவுகள் உள்ளன. இது தீவிர
பாதுகாப்புக் கவலைகளை ஏற்படுத்துகிறது. மேற்கு வங்கம்,
திரிபுரா உள்ளிட்ட எல்லை மாவட்டங்கள் வழியாக அவர்கள்
வர உதவிகள் செய்யப்படுகின்றன. 2012ம் ஆண்டு முதல்
பாரத எல்லைக்குள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில்
ர�ோஹிங்கியாக்கள் சட்டவிர�ோதமாக ஊடுருவத்
த�ொடங்கியுள்ளனர். அண்டை நாடுகளில் இருந்து ஏற்கனவே
அதிக அளவில் சட்டவிர�ோதமாக குடியேறுபவர்கள் காரணமாக,
எல்லைய�ோர மாநிலங்களில் சிலவற்றின் மக்கள்தொகை
நிலை தீவிரமான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. இது பல்வேறு
சூழல்களில் நீண்டகால சிக்கல்களை ஏற்படுத்துகிறது. நாட்டின்
ச�ொந்த குடிமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீது
நேரடியாக தீங்கு விளைவிக்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலகலக்கும் தி.மு.க கூட்டணி


தி.மு.க தலைவரான ஸ்டாலின்
முதல்வராக ப�ொறுப்பேற்று ஒரு
வருடத்தை நிறைவு செய்துள்ள
நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள
விலைவாசி ஏற்றம், சட்டம் ஒழுங்கு
சீர்குலைவு, வீட்டு வரி, தண்ணீர்
வரிகள் உயர்வு, மின்சார கட்டணம்
உயர்வு, தி.மு.கவினரின் அராஜகம்,
ஹிந்து விர�ோத மனப்பான்மை ப�ோன்ற
பலமுனை துன்பங்களால் அவரை நம்பி
vijayabharatham.org
ஓட்டுப்போட்ட ப�ொதுமக்கள் தங்கள்
வாழ்வின் விடியலை ம�ொத்தமாக இழந்து தவிக்கின்றனர்.
மின்சார கட்டணம் உயர்வு குறித்து தி.மு.கவின் கூட்டணிக்
கட்சிகளே குறைகூறி வருகின்றன. தி.மு.க.வின் கூட்டணியில்
அங்கம் வகிக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர்
வேல்முருகன் கூட, 'தி.மு.க. அன்று ச�ொன்னதை இன்று
மாற்றிப் பேசுவது ஏற்புடையதல்ல. க�ொடுத்த வாக்குறுதியை
நிறைவேற்றவில்லை எனில், மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு
உண்டாகும்' என கூறியுள்ளார். இந்நிலையில், தி.மு.க.வின்
கூட்டணியில் உள்ள ஐ.ஜே.கே கட்சியின், நிறுவனர் பாரிவேந்தர்,
திருச்சியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில்
பேசுகையில், “நான் சற்று அவசரப்பட்டு விட்டேன். ப�ோகாத
இடத்துக்கு சென்றிருக்க வேண்டாம். தனியாக நின்றிருந்தால்
கூட நிச்சயம் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்
பெற்றிருப்பேன். இதை நினைத்து வருந்துகிறேன். எம்.பி. பதவி
எனக்கு பெரிது கிடையாது. எப்போது, வேண்டுமானாலும்
ராஜினாமா செய்யலாம்" என தெரிவித்துள்ளார். இவர் சில
நாட்களுக்கு முன்பு கூட, இதனிடையே, "எம்.பி. பதவி எனது
அடையாளத்தின் சிறு துளி. இதற்காக, நான் ப�ோகாத இடத்திற்கு
ப�ோய் இருக்க கூடாது. கூட்டணியில் சேர்ந்ததை நினைத்து
ஒவ்வொரு நாளும் வேதனைப்படுகிறேன்" என கூறியிருந்தார்
என்பது குறிப்பிடதக்கது.
5
தேசிய சுகாதார இயக்கத்திற்கு ஐ.நா விருது
தேசிய சுகாதார இயக்கத்தின்
கீழ் இந்திய உயர் ரத்த அழுத்த
கட்டுப்பாட்டு முன்னெடுப்பு மூலம்
மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான
திட்டத்திற்காக பாரதத்திற்கு ஐ.நா
விருது கிடைத்துள்ளது. இது குறித்து vijayabharatham.org
டுவிட்டரில் பதிவிட்டுள்ள மத்திய சுகாதார மற்றும் குடும்ப
நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா,
"அனைவரது உடல் நலத்தை உறுதி செய்ய வேண்டும்
என்ற பிரதமர் நரேந்திர ம�ோடி அவர்களின் இயக்கத்திற்கு
பாரத உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு முன்னெடுப்பு
வலுவூட்டியுள்ளது. ஆர�ோக்கியமான மற்றும் உடல் உறுதிமிக்க
பாரதத்தை கட்டமைப்பதில் நாம் உறுதி பூண்டுள்ளோம்" என
கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் செப்டம்பர் 21,
2022ல் நடைபெற்ற ஐ.நா ப�ொதுச்சபை கூட்டத்தில், 2022
ஐநா முகமைகளுக்கிடையேயான முனைப்பு குழு மற்றும்
உலக சுகாதார அமைப்பின் சிறப்பு திட்டத்தின் ஆரம்ப சுகாதார
நலவாழ்வு விருது பாரதத்துக்கு கிடைத்துள்ளது. ஆரம்ப
நிலையிலேயே உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதன்
மூலம் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பால்
ஏற்படும் இறப்புகள் குறைகின்றன. கடந்த 2017ம் ஆண்டு
த�ொடங்கப்பட்ட பாரத உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு
முன்னெடுப்பு படிப்படியாக 23 மாநிலங்களில் 130க்கும்
மேற்பட்ட மாவட்டங்களில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் 34 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயர் ரத்த
அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுற்றுலாத் தலங்களில் தேசியக்கொடி


மாநில சுற்றுலாத் துறை அமைச்சர்களின்
3 நாள் தேசிய மாநாட்டில் பங்கேற்று
பேசிய மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர்
ஜி.கிஷண் ரெட்டி, "நாட்டின் பெருமையை
வெளிநாட்டவருக்கு எடுத்துக்காட்டும்
வகையில் சுற்றுலா தலங்கள் மற்றும் நட்சத்திர vijayabharatham.org
ஓட்டல்களில் நமது நாட்டின் தேசிய கொடியை கம்பீரமாக
பறக்க செய்ய வேண்டும். இதைவிட பாரத சுற்றுலாவுக்கான
சிறந்த வர்த்தக பிராண்ட் வேறெதுவும் இருக்க முடியாது.
க�ொரோனா காலகட்டத்துக்குப் பிறகு உலகளவில் சுற்றுலாத்
துறை மீட்சியில் பாரதம் கணிசமானத�ொரு பங்களிப்பை
வழங்கி வருகிறது. சுற்றுலாத் துறை மேம்பாட்டு பணிகளை
ஒருங்கிணைக்கவும், வரும் ஆண்டுகளில் உலகளவில்
அந்தத் துறையில் தலைமை இடத்துக்கு முன்னேறவும்
மத்திய அரசுடன், மாநில அரசுகள் இணைந்து செயல்பட
வேண்டியது அவசியம். வரும் 2024க்குள் மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் சுற்றுலாத் துறையின் மூலம் ரூ.12 லட்சம் கோடி
பங்களிப்பை வழங்கவும் அந்நியச் செலாவணி மூலமான
வருவாய் ஈட்டலில் ரூ.2.40 லட்சம் கோடி பங்களிப்பையும்,
1.5 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதையும்
இலக்காக கொண்டு சுற்றுலாத் துறை செயல்பட்டு வருகிறது"
என தெரிவித்தார்.
6
பயணிகளிடம் நல்ல வரவேற்பு
சேலம் ரயில்வே க�ோட்டத்துக்கு
உட்பட்ட ரயில் நிலையங்கள்,
வழித்தடங்களில் தெற்கு ரயில்வே
ப�ொது மேலாளர் மல்லையா ஆய்வு
மேற்கொண்டார். பின்னர் அவர்
செய்தியாளர்களிடம் பேசுகையில்,
vijayabharatham.org "ரயில்வே நிர்வாகத்தால் ஆண்டுக்கு
ஒருமுறை இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. ரயிலில் முன் பதிவு
செய்தவர்கள் வராத நிலையில், அடுத்ததாக காத்திருப்போர்
பட்டியிலில் உள்ள பயணிகளுக்கு, ஆன்லைன் மூலம் படுக்கை
ஒதுக்கீடு செய்யும் இயந்திரம் தற்போது பயன்பாட்டுக்கு
க�ொண்டு வரப்பட்டுள்ளது. பயணச்சீட்டு பரிச�ோதகர்களுக்கு
இதற்கான 800 கையடக்க கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த
நடைமுறையால் பயணிகளுக்கு வெளிப்படைத் தன்மையுடன்
படுக்கை வசதி ஒதுக்கீடு செய்து தரப்படுகிறது. இதற்கு
பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது" என கூறினார்.

தீஸ்டா செடல்வாட் மீது குற்றப்பத்திரிகை


குஜராத் கலவரம் த�ொடர்பாக
புனையப்பட்ட ஆதாரம் த�ொடர்பான
வழக்கில் தீஸ்டா செடல்வாட்,
முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி
சஞ்சீவ் பட், முன்னாள் காவல்துறை
vijayabharatham.org இயக்குநர் ஆர்.பி. ஸ்ரீகுமார் (ஓய்வு)
ஆகிய�ோருக்கு எதிராக 100 பக்க குற்றப்பத்திரிகையை
சிறப்பு புலனாய்வு அமைப்பு (எஸ்.ஐ.டி) அகமதாபாத்
மெட்ரோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், குற்றம்
சாட்டப்பட்டவர்கள், அன்றைய குஜராத் முதல்வராக
இருந்த ம�ோடிக்கு மரண தண்டனையை கிடைக்க வைக்க
திட்டமிட்டதாக எஸ்.ஐ.டி கூறியுள்ளது. மேலும், 'ஸ்ரீகுமார்
மற்றும் சஞ்சீவ் பட் அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும்,
ப�ோலி ஆவணங்களைத் தயாரித்து அதிகாரப்பூர்வ பதிவுகளில்
சேர்த்து தீஸ்டாவுக்கு உதவினார்கள். குற்றப்பத்திரிகையின்படி,
அப்போதைய முதல்வர் ம�ோடியின் அரசியல் வாழ்க்கையை
முடிவுக்குக் க�ொண்டு வந்து, அவரது நற்பெயருக்குக் களங்கம்
ஏற்படுத்துவதே ந�ோக்கமாக இருந்தது. ப�ோலி ஆவணங்கள்
மற்றும் பிரமாணப் பத்திரங்கள் தயாரிக்க பல வழக்கறிஞர்களை
நியமித்துள்ளனர். இதற்காக கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை
அவர்கள் ப�ொய் சாட்சியங்களை ச�ொல்லவைக்க முனைந்தனர்.
அவர்கள் ப�ோலியான அறிக்கைகளில் கைய�ொப்பமிட
நிர்ப்பந்தித்தனர். குஜராத்தில் தங்களுக்கு நீதி கிடைக்காது
என்று அவர்களை தவறாக வழிநடத்தினர். பல காங்கிரஸ்
தலைவர்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முகாம்களுக்குச்
சென்றனர் “நீங்கள் தீஸ்டாவை ஆதரிக்கவில்லை என்றால்,
முஸ்லிம்கள் உங்களுக்கு எதிராகத் திரும்புவார்கள், மேலும்
நீங்கள் பயங்கரவாதிகளின் இலக்காகிவிடுவீர்கள். நமக்குள்
சண்டை ப�ோட ஆரம்பித்தால் எதிரிகள் பலன் அடைவார்கள்,
ம�ோடிக்கும் லாபம் கிடைக்கும்" என ஒரு சாட்சியை ஆர்.
பி.ஸ்ரீகுமார் மிரட்டியுள்ளார். சாட்சிகளை பல இடங்களுக்கு
அழைத்துச்சென்று அவர்களை காட்டி நன்கொடைகளை
7
வசூலித்தனர். முதலமைச்சருக்கு ம�ோடிக்கு எதிரான
சதியில் தீஸ்டாவுக்கு உதவுவதற்காக பல என்.ஜி.ஓக்கள்,
பத்திரிகையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள்
த�ொடர்பில் இருந்தனர். நீதிமன்றம் மற்றும் பிற அதிகாரிகள் மீது
அழுத்தத்தை உருவாக்க முயன்றனர்' என கூறப்பட்டுள்ளது.

ஆர்.பி.எப் ரத்ததான முகாம்


முதன்முறையாகரயில்வே பாதுகாப்பு படை மூலம்
மிகப்பெரிய ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ரயில்வே பாதுகாப்புப் படை நிறுவனத் தினத்தைய�ொட்டி
செப்டம்பர் 17 முதல் 20 வரை நடைபெற்ற ரத்ததான முகாமில்,
3,946 ரயில்வே பாதுகாப்புப் படையினர் ரத்ததானம் செய்தனர்.
செப்டம்பர் 20, 2022 அன்று ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும்
தேசியபட்டு தினத்தைய�ொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில்
மத்திய இணையமைச்சர் தர்ஷனா விக்ரம், ஜர்தோஷ்
லக்னோவில் உள்ள ஜக்ஜீவன் ராம் ரயில்வே பாதுகாப்புப்
படை அகாடமியில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை
ஏற்றுக�ொண்டார். பின்னர் பேசிய அவர், லக்னோவில் ரயில்வே
பாதுகாப்பு சிறப்பு படையின்
மூன்றாவது பட்டாலியன்
வளாகத்தில், 3 க�ோடி ரூபாய்
செலவில் பயிற்சி மையம்,
ப�ொது வசதி மையம்
ஏற்படுத்தப்படும் என்றார்.
vijayabharatham.org

ரிபப்ளிக் டிவிக்கு த�ொடர்பில்லை


ப�ோலி டி.ஆர்.பி வழக்கில்,
மும்பையில் உள்ள சிறப்பு
நீதிமன்றத்தில் அமலாக்க இயக்குனரகம்
குற்றப்பத்திரிக்கை ஒன்றை தாக்கல்
செய்துள்ளது, அதில் ப�ோலி டி.ஆர்.
vijayabharatham.org
பி வழக்கில் ரிபப்ளிக் டிவி ஊடக
நெட்வொர்க்குக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்பதை
உறுதிப்படுத்தியது. மேலும், டி.ஆர்.பி முறைகேடு ம�ோசடியில்
மும்பை காவல்துறை விசாரணை இதில் மாறுபாடாக உள்ளது
எனவும் தெரிவித்துள்ளது. டி.ஆர்.பி வழக்கில் ரிபப்ளிக் டிவி
மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் சதியின் ஒரு பகுதி. டி.ஆர்.
பி வழக்கில் ரிபப்ளிக் டெவியை சிக்கவைக்க அப்போதைய
மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்
அறிவுறுத்தினார் என்று முன்னாள் காவல்துறை ஆணையர்
பரம் பீர் சிங் கூறியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

செமி கண்டக்டர்கள், டிஸ்ப்ளே உற்பத்தி


பிரதமர் நரேந்திர ம�ோடி
தலைமையிலான மத்திய
அமைச்சரவை குழு, பாரதத்தில்
செமி கண்டர்கள் மற்றும்
டிஸ்ப்ளே உற்பத்தி சூழலை
மேம்படுத்துவதற்கான பின்வரும்
8 vijayabharatham.org
திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
1. இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தி மையங்களை
அமைப்பதற்கான திட்டத்தின்கீழ், அனைத்து த�ொழில்நுட்ப
முனையங்களுக்கும், திட்ட செலவில் சமவீத அளவில் 50
சதவீத நிதியுதவி.
2. டிஸ்ப்ளே உற்பத்தி மையங்களை அமைப்பதற்கான
திட்டத்தின்கீழ், திட்ட செலவில் சமவீத அளவில் 50 சதவீத
நிதியுதவி.
3. பாரதத்தில் கூட்டு செமி கண்டக்டர்கள் / சிலிக்கான
ஃப�ோட்டானிக்ஸ் / சென்சார் உற்பத்தி மையங்கள் மற்றும்
செமி கண்டக்டர் ஏடிஎம்பி / ஓஎஸ்ஏடி வசதிகள் கூடுதலாக
அமைக்கும் திட்டத்தின்கீழ், மூலதன செலவில், சமவீத
அடிப்படையில் 50 சதவீத நிதியுதவி.
4. மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின்கீழ், செமி
கண்டக்டர்களை அமைப்பதற்கான அனைத்து த�ொழில்நுட்ப
முனைகளுக்கும், திட்ட செலவில், 50 சதவீத ஒரேமாதிரியான
நிதியுதவி அளிக்கப்படும்.

ஹிஜாப் தீர்ப்பு ஒத்திவைப்பு


கர்நாடக மாநில கல்வி
நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து
வர தடை விதித்த அம்மாநில
அரசின் உத்தரவுக்கு எதிராக
த�ொடரப்பட்ட வழக்கை விசாரித்த
கர்நாடக உயர் நீதிமன்றம், "ஹிஜாப்
இஸ்லாத்தின் அடிப்படையான vijayabharatham.org
விஷயம் அல்ல" என தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்புக்கு
எதிராக சில முஸ்லிம் மாணவிகள், அகில இந்திய முஸ்லிம் தனிச்
சட்ட வாரியம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு
செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச
நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள்,
"ஆடை அணிவது என்பது அடிப்படை உரிமை என்றால், ஆடை
இல்லாமல் இருப்பதும் அடிப்படை உரிமைதான். சிலுவை,
ருத்ராட்சம் ப�ோன்றவையும் மத அடையாளங்கள்தான்.
அவற்றை அணிந்து க�ொண்டு மாணவர்கள் வரும்போது
ஹிஜாபுக்கு மட்டும் ஏன் தடை?" என்று வாதிட்டனர். இதில்
குறுக்கிட்ட நீதிபதிகள், "சிலுவை, ருத்ராட்சம் ப�ோன்றவை
வெளிப்படையாக தெரிவதில்லை. யாரும் அவர்களுடைய
சட்டையை கழற்றி இவற்றை ச�ோதிப்பமும் இல்லை. ஆனால்
ஹிஜாப் தனித்துவமாக வெளியே தெரியக் கூடியது" என்று
தெரிவித்தனர். கர்நாடகா அரசு, "குறிப்பிட்ட வகை உடை
உடுத்துவதைக் கண்டு மற்றவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை
ஏற்படக் கூடாது என்பதே சீருடையின் ந�ோக்கம். அதன்
அடிப்படையில்தான் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து
வர தடை விதிக்கப்பட்டதே தவிர, மதத்தின் அடிப்படையில்
அல்ல. இது மதத்திற்கு அப்பாற்பட்ட ப�ொதுவான நடவடிக்கை"
என வாதிட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த
நிலையில், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக
ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
9
ஹிஜாபுக்கு வலுக்கும் எதிர்ப்பு
ஈரானின் குர்திஸ்தான் மாகாணம்,
சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி,
முறையாக ஹிஜாப் அணியவில்லை
என்று குற்றஞ்சாட்டி கைது செய்த
காவல்துறையினர், அவரை மிகக்
க�ொடூரமாக தாக்கியதில் அவர் vijayabharatham.org
உயிரிழந்தார். இதனைத் த�ொடர்ந்து ஈரானில் ஹிஜாப்புக்கு
எதிரான பெண்களின் ப�ோராட்டம் தீவிர நிலையை
அடைந்துள்ளது. ப�ோராடத்தில் இதுவரை 6 பேர் பலியாகி
உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கும் என்று
ப�ோராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்
ஈரானில் ப�ோராட்டத்தைக் கட்டுப்படுத்த அங்கு சமூக
வலைதளங்களுக்கு அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
இதனால்ம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகச்
சேவைகள் ஈரானில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சீட் பெல்ட் கட்டாயம்


கார் தயாரிப்பாளர்கள், பின்
இருக்கையில் அமர்பவர்கள்
சீட் பெல்ட்டு அணிவதற்கான
அலாரம் அமைப்பை கட்டாயமாக
நிறுவவேண்டும் என்று இந்திய
சாலைப் ப�ோக்குவரத்து அமைச்சகம்
உத்தரவிட்டுள்ளது. மேலும் vijayabharatham.org
இதுகுறித்து ப�ொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க
அக்டோபர் 5 கடைசி தேதி என்று கூறப்பட்டுள்ளது. த�ொழிலதிபர்
சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் இறந்ததையடுத்து, இந்திய
சாலைப் ப�ோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்
இந்த விதிகளை விதித்துள்ளது. இது குறித்து சாலைப்
ப�ோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்
நிதின் கட்கரி கூறுகையில், காரில் பயணிக்கும் அனைவரும்
சீட் பெல்ட் அணிவது கட்டாயம். தவறினால் அபராதம்
விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஜெம் இ சந்தை விழிப்புணர்வு


மத்திய அரசின் 'ஜெம்'
இணையதளத்தின் புதிய
அம்சங்கள், அதன் செயல்பாடுகள்
குறித்து சிறு,குறு மற்றும்
நடுத்தர த�ொழில் நிறுவனங்கள்
இடையே விழிப்புணர்வை
உருவாக்குவதற்காக சென்னை vijayabharatham.org
சாஸ்திரி பவனில் விற்பனையாளர் மற்றும் ஊடகவியலாளர்
கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விற்பனையாளர்களுக்கு இந்த தளம் எவ்வாறு பயனுள்ளதாக
இருக்கிறது என்பது குறித்த அனுபவங்களை பகிர்ந்து
க�ொள்ளவும் இது உதவியது. சிறு,குறு மற்றும் நடுத்தர த�ொழில்
நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், புத்தொழில்
10
நிறுவனங்கள் ப�ோன்ற விற்பனையாளர் குழுக்களுக்கு ஜெம்
தளம் ஏராளமான வாய்ப்புகளை வழங்குவதுடன், மத்தி அரசின்
மேக் இன் இந்தியா முன் முயற்சியை வலுப்படுத்துவதாக உள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த தமிழக அரசின் கருவூலங்கள்
மற்றும் கணக்கு ஆணையர் விஜயேந்திர பாண்டியன், "2016ம்
ஆண்டு முதல் 'ஜெம்' தளம் இயங்கி வருகிறது. 3 லட்சம்
க�ோடி ரூபாய்க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
2014ம் ஆண்டில் இருந்து இன்று வரை தமிழக அரசு ரூ. 1,108
க�ோடி மதிப்பிலான பரிவர்த்தனைகளை ஜெம் தளம் மூலம்
செய்துள்ளது. மாநிலத்தில் ரூ. 7,400 க�ோடிக்கும் அதிகமாக
பரிவர்த்தனைகளை விற்பனையாளர்கள் மேற்கொண்டுள்ளனர்
என்றும் அவர் கூறினார். இதுப�ோன்ற விற்பனையாளர்
கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் தமிழகத்திற்கு வெளியே
உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட ஆகிய பல்வேறு
மாநிலங்களில் வர்த்தகம் புரிவது குறித்த விழிப்புணர்வு
ஏற்படுத்தப்படுகிறது. இந்த தளத்தின் மூலம் மத்திய, மாநில
அரசுகள்பொதுத்துறை நிறுவனங்களுக்கு விநிய�ோகம் செய்யும்
வாய்ப்புகளை சிறு, குறு த�ொழில் நிறுவனங்கள் பெற்றுள்ளன.
சமுதாயத்தில் அனைவரையும் உள்ளடக்கும் வகையில்
ஜெம் தளம், பட்டியலின, பழங்குடியின பிரிவினருக்கு
பதிவு கட்டண விலக்கு அளிக்கிறது" என்றார். இதில்,
விற்பனையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு
காண்பது குறித்தும் விளக்கப்பட்டன. செய்தியாளர்களிடம்
பேசிய கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை,
"பிரதமரின் த�ொலைந�ோக்குப் பார்வைக்கேற்ப ஜெம்
தளத்தின் பயன்கள் உள்ளது. தமிழகத்தில் இருந்து மேலும்
அதிக விற்பனையாளர்கள் இந்த இ சந்தைதளத்தில் சேர்ந்து
பயன்பெறும் வகையில், இந்த ஆன்லைன் தளம் குறித்த
விழிப்புணர்வை கிராமப்பகுதிகளில் ஏற்படுத்த வேண்டும்"
என ஊடகத்துறையினருக்கு வேண்டுக�ோள் விடுத்தார்.

சூரிய மின் தகடு உற்பத்திக்கு பி.எல்.ஐ


அதிக திறன் வாய்ந்த
சூரிய மின் தகடுகளின் ஜிகா
வாட் அளவிலான உற்பத்தி
திறனை அடைவதற்கான தேசிய
அதிக திறன் க�ொண்ட சூரிய
மின்தகடுகள் திட்டத்தில் ரூ
vijayabharatham.org 19,500 க�ோடி செலவிலான
உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தை
அமல்படுத்த வேண்டும் என்ற புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க
எரிசக்தி துறையின் பரிந்துரைக்கு பிரதமர் நரேந்திர ம�ோடி
தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்
மூலம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இறக்குமதியை
சார்ந்து இருப்பது குறையும். தற்சார்பு இந்தியா இயக்கத்தின்
முன்னெடுப்புகளை வலுப்படுத்தி, வேலைவாய்ப்பை
உருவாக்கும். சூரிய மின் தகடுகள் உற்பத்தியாளர்கள்
வெளிப்படையான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
உள்நாட்டு சந்தையிலிருந்து அதிக திறன் வாய்ந்த சூரிய
மின் தகடுகள் விற்பனைக்காக சூரிய மின்தகடுகள் உற்பத்தி
ஆலைகள் த�ொடங்கப்பட்ட பிறகு, 5 ஆண்டுகளுக்கு
11
உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டம் அளிக்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் ரூபாய் 94 ஆயிரம் க�ோடி அளவிற்கு
நேரடி முதலீடு கிடைக்கும். 1,95,000 பேருக்கு நேரடியாகவும்,
7,80,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு
கிடைக்கும்.
கனிம உற்பத்தியில் சாதனை
இந்திய கனிமங்கள் அமைப்பு
வெளியிட்டுள்ள நிகழாண்டுக்கான
ஏப்ரல் முதல் ஜூலை
மாதங்களுக்கான கனிமங்களின்
ஒட்டும�ொத்த உற்பத்தி
புள்ளிவிவரங்கள், கனிமங்களின்
ஒட்டும�ொத்த உற்பத்தி 6.1 சதவீதம்
சாதனை அளவாக இருந்ததை vijayabharatham.org
வெளிப்படுத்தியுள்ளன. இதன்படி 2022 ஜூலையில் முக்கிய
கனிமங்களின் உற்பத்தி அளவுகள்: நிலக்கரி 603 லட்சம் டன்,
லிக்னைட் 33 லட்சம் டன், பெட்ரோலியம் (கச்சா) 25 லட்சம்
டன், பாக்சைட் 1,526 ஆயிரம் டன், குர�ோமைட் 192 ஆயிரம்
டன், தங்கம் 93 கில�ோ கிராம், இரும்பு தாது 155 லட்சம் டன்,
மாங்கனீஸ் தாது 153 ஆயிரம் டன், துத்தநாகம் 127 ஆயிரம்
டன், சுண்ணாம்புக்கல் 306 லட்சம் டன், வைரம் 22 கேரட்.

ஓட்டுநர் பயிற்சி மைய விதிகள்


சாலைப் ப�ோக்குவரத்து
மற்றும் நெடுஞ்சாலைகள்
அமைச்சகம் செப்டம்பர் 20ம்
தேதியிட்ட அறிவிக்கையின்படி,
அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர்
பயிற்சி மையங்கள்
த�ொடர்பான விதிகளில்
திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ப ரிந் து ரை க ்கப்பட்ட vijayabharatham.org
விதிகளை நடைமுறைப்படுத்தும்போது, அமைச்சகம்
மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவினரால் சில விஷயங்கள்
அடையாளம் காணப்பட்டன. இந்த புதிய விதிகள் பின்வரும்
முக்கிய அம்சங்களுடன் ஓட்டுநர் பயிற்சி மையங்களின்
செயல்பாட்டை மேலும் நெறிப்படுத்தும். 1. அங்கீகரிக்கப்பட்ட
ஓட்டுநர் பயிற்சி மையங்களின் அங்கீகாரத்தைப் புதுப்பித்தல்
ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். 2. இரு சக்கர
வாகனங்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான பாடத்திட்டம்,
நடைமுறை அறிவை முழுமையாக உள்ளடக்கியதாகும். 3.
ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான திறன் தேர்வு சான்றிதழைப்
பெறுவதற்கு பயிற்சி பெறுபவர் "ஓட்டுவதற்கான திறனுக்கான
தேர்வில்" தேர்ச்சி பெற வேண்டும். 4. அங்கீகரிக்கப்பட்ட
ஓட்டுநர் பயிற்சி மையங்களுடன் இணைக்கப்பட்ட பிற
விதிகள், கட்டணம், ஓட்டுநர் உரிமம் வழங்குதல் ப�ோன்றவை
தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
12
சரக்கு ப�ோக்குவரத்தில் அதிக செயல்திறன்
பிரதமர் ம�ோடி தலைமையிலான
மத்திய அமைச்சரவை, தேசிய
சரக்குப் ப�ோக்குவரத்து க�ொள்கைக்கு
ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக்
க�ொள்கையானது சரக்குப்
vijayabharatham.org ப�ோக்குவரத்து துறைக்கான
கட்டமைப்பை வகுத்துள்ளதுடன் பிரதமரின் விரைவு
சக்தி தேசிய பெருந்திட்டத்தை செயல்படுத்துவதை
இலக்காக க�ொண்டுள்ளது. இந்த க�ொள்கை மூலம் சரக்குப்
ப�ோக்குவரத்துமற்றும் மனித வளங்களை ஒழுங்குபடுத்தும்
செயல்முறைகள், ஒழுங்குமுறை கட்டமைப்பு, திறன் மேம்பாடு
ஆகியவற்றின் மூலம் செயல்திறனைக் க�ொண்டுவருவதற்கு
திட்டமிடப்பட்டுள்ளது. விரைவுபடுத்தப்பட்ட, அனைவரையும்
உள்ளடக்கிய வளர்ச்சிக்காக த�ொழில்நுட்ப ரீதியாக
செயல்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த, செலவுக்கேற்ற
திறனுள்ள, நெகிழ்ச்சியான, நிலையான மற்றும் நம்பகமான
சரக்குப் ப�ோக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பை
உருவாக்குவதே இதன் ந�ோக்கமாகும். மேலும், 2030ம்
ஆண்டுக்குள் உலகளாவிய அளவுக�ோல்களுடன் ஒப்பிடக்கூடிய
வகையில் பாரதத்தில் சரக்குப் ப�ோக்குவரத்தில் கட்டணத்தை
குறைப்பது, 2030க்குள் முதல் 25 நாடுகளில் ஒன்றாக க�ொண்டு
வருவது, திறமையான சரக்குப் ப�ோக்குவரத்து சுற்றுச்சூழல்
அமைப்புக்கான தரவு சார்ந்த ப�ொறிமுறையை உருவாக்குவது
ஆகியவையும் இதன் ந�ோக்கங்களில் சில. இந்த க�ொள்கை
செயல்பாட்டுக்கு வரும்போது, குறு, சிறு, நடுத்தர த�ொழில்
நிறுவனங்கள், விவசாயிகள் ஆகிய�ோருக்கு பயன் அளிக்கும்.

சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாடு


பிரதமர் நரேந்திர ம�ோடி, குஜராத்தின்
ஏக்தா நகரில் இன்று (செப்டம்பர் 23)
காண�ொலிகாட்சி மூலம் சுற்றுச்சூழல்
அமைச்சர்களின் தேசிய மாநாட்டைத்
த�ொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
கூட்டுறவு கூட்டாட்சியின் உணர்வை
vijayabharatham.org
முன்னெடுத்துச் செல்லும் வகையில்,
பன்முக அணுகுமுறையின் மூலம் பிளாஸ்டிக் மாசுபாட்டை
நீக்குதல், காலநிலை மாற்றத்தை திறம்பட எதிர்த்துப்
ப�ோராடுவதற்கான மாநில செயல்திட்டங்கள் ப�ோன்ற
விஷயங்களில் சிறந்த க�ொள்கைகளை வகுப்பதில் மத்திய
மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே மேலும் ஒருங்கிணைப்பை
உருவாக்கும் வகையில் மாநாடு கூட்டப்படுகிறது. பயன்பாட்டில்
இல்லாத நிலத்தை மீட்டெடுப்பதற்கும், வனவிலங்குகளை
பாதுகாப்பதற்கும் சிறப்பு முக்கியத்துவம் க�ொடுத்து வனப்
பரப்பை அதிகரிப்பதில் இந்த மாநாடு கவனம் செலுத்தும். இந்த
இரண்டு நாள் மாநாட்டில், வாழ்க்கை, காலநிலை மாற்றத்தை
எதிர்த்துப் ப�ோராடுதல், பருவநிலை மாற்றம் குறித்த மாநில
செயல் திட்டங்களை மேம்படுத்துதல், ஒருங்கிணைந்த
பசுமை அனுமதிகளுக்கான ஒற்றை சாளர அமைப்பு, வன
மேலாண்மை, மாசு கட்டுப்பாடு, வனவிலங்கு மேலாண்மை;
பிளாஸ்டிக் மற்றும் கழிவு மேலாண்மையை கடைப்பிடித்தல்
ஆகிய தலைப்புகளுடன் அமர்வுகள் நடைபெறும்.
13
மேல்சாந்தியாக ஆயுர்வேத மருத்துவர்
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற
க�ோயிவில்களில் குருவாயூர்
கிருஷ்ணன் க�ோயிலும் ஒன்று. இந்த
க�ோயிலின் புதிய மேல்சாந்தியாக
(தலைமை பூஜாரி) 34 வயதான கிரண்
ஆந்த் காக்காட் என்ற ஆயுர்வேத
மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏராளமான பூஜாரிகளை க�ொண்ட
நீண்ட பாரம்பரிய குடும்பத்தை
சேர்ந்த டாக்டர் கிரண் ஆனந்த் vijayabharatham.org

காக்காட் அடுத்த மாதம் முதல் 6 மாதங்களுக்கு மேல்சாந்தியாக


நீடிப்பார். இவர் ரஷ்யாவில் 6 ஆண்டுகள் ஆயுர்வேத
மருத்துவராக பணியாற்றி உள்ளார். மேலும் யூடியூபர், பாடகர்
என பன்முகத்தன்மை க�ொண்டவர் இவர். மேல்சாந்தியாக
நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து டாக்டர் கிரண் ஆனந்த்
காக்காட் கூறுகையில், "கடவுளின் அருளாலும், ஆசியாலும்
எனக்கு இந்த பாக்கியம் கிடைத்துள்ளது. நான் ரஷ்யாவில்
இருந்தப�ோதும் பூஜைகள் செய்து க�ொண்டிருந்தேன். பாரதம்
திரும்பியதும் 'பரிகார' பூஜைகளை மேற்கொண்டேன்.
மேல்சாந்தியாக நியமிக்கப்பட்டு இருப்பதால் எனது
மருத்துவப்பணி மற்றும் பிற பணிகளை ஒதுக்கி வைக்க
வேண்டியுள்ளது. ஆறு மாதங்களுக்குப்பின் எனது அன்றாட
பணிகளைச் செய்ய முடியும்" என்று கூறினார்.

சீன மூலப்பொருட்களுக்குத் தடை


அண்மைக் காலமாக இந்திய ராணுவத்தினருக்கு
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டு துளைக்காத
ஜாக்கெட்டில், குறிப்பிடத்தக்க அளவில், சீன மூலப்பொருட்கள்
பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ராணுவத்தினருக்கு வழங்கப்படும்
குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளுக்கு, சீனாவிலிருந்து
பெறப்பட்ட மூலப்பொருட்களை ரகசியமாக
பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில்
தற்போது, சீன நிறுவனங்களிடமிருந்து
பெறப்பட்ட மூலப் ப�ொருட்களை
பயன்படுத்தவில்லை என பாரத தயாரிப்பாளர்கள்
சான்று வழங்க பாதுகாப்பு அமைச்சகம்
vijayabharatham.org உத்தரவிட்டுள்ளது.

பிரான்ஸ் விதிக்கும் கட்டுப்பாடுகள்


உக்ரைன் ரஷ்ய ப�ோரைத்
த�ொடர்ந்து ரஷ்யா மீது பல உலக
நாடுகள் தடை விதித்தன. இதனால்,
பிரான்ஸ் நாட்டில் அதிகரித்து
வரும் எரிப�ொருள் விலை
உயர்வை கருத்தில் க�ொண்டு,
அங்கு அடுத்த ஆண்டு vijayabharatham.org
14
முதல் எரிப�ொருள் விலை கட்டுப்பாடு விதிக்கப்படும்
என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எரிவாயு மற்றும்
மின்சாரத்திற்கான வீட்டு கட்டணங்களுக்கு 15 சதவீதம் உச்ச
வரம்பு விதிக்கப்படவுள்ளது. எரிவாயு கட்டணத்திற்கான உச்ச
வரம்பு ஜனவரியில் இருந்தும், மின்சார கட்டணத்திற்கான
உச்ச வரம்பு பிப்வரியிலும் நடைமுறைக்கு வரும் என
அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டிற்கு
கிடைத்து வந்த ரஷ்யாவின் இயற்கை எரிவாயு கிட்டத்தட்ட
முழுமையாக நின்றுவிட்டது. தற்போது அணு உலைகளில்
பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் முன்பு
எப்போதும் இல்லாத அளவிற்கு எரிசக்தி விலை உயர்வு
ஏற்பட்டுள்ளது. இந்த எரிசக்தி பிரச்சினையை சமாளிக்கும்
வகையில் நிலக்கரியால் இயங்கும் மின் உற்பத்தி நிலையத்தை
மீண்டும் இயக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழல்
பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட
செயிண்ட் அவ�ோல்ட் நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை
வரும் அக்டோபர் முதல் அடுத்த 6 மாத காலத்திற்கு மீண்டும்
இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ ஏஜெண்ட் சுட்டுக்கொலை


பாரதத்தில் பாகிஸ்தானை
சேர்ந்த ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பின்
கள்ள ந�ோட்டுகளின் மிகப்பெரிய
சப்ளையராக இருந்தவர் முகமது
தார்ஜி என்கிற லால் முகமது. இவர்
நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள
அவரது மறைவிடத்திற்கு வெளியே vijayabharatham.org
இருசக்கர வாகத்தில் வந்த இரண்டு மர்ம நபர்களால் சுட்டுக்
க�ொல்லப்பட்டார். இவர், ஐ.எஸ்.ஐயின் உத்தரவின் பேரில்,
பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் இருந்து நேபாளத்திற்கு
ப�ோலி இந்திய கரன்சிகளை க�ொண்டு வந்து அங்கிருந்து
நமது நாட்டுக்குள் சப்ளை செய்து வந்தவர். மேலும், தாவூத்
இப்ராஹிமின் 'டி' கேங்குடன் இவருக்கு த�ொடர்பு இருப்பதாக
புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன. காத்மாண்டுவில்
க�ோதாடர் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே காரில்
இருந்து இறங்கிய லால் முகமது மீது இருசக்கர வாகனத்தில்
வந்த இருவர் துப்பாக்கியால் சுட்ட சிசிடிவி காட்சிகள் சமூக
ஊடகங்களில் பரவி வருகின்றன. அவரை சுட்டவர்கள் யார்
என்பது இதுவரை தெரியவில்லை.

ஹிந்துக்கள் மீது மீண்டும் தாக்குதல்


ஆசியக் க�ோப்பை கிரிக்கெட்
ப�ோட்டியின்போது லண்டன்
நகரின் லெய்செஸ்டரில்
வசிக்கும் பாரத வம்சாவளியினர்,
ஹிந்துக்கள் மீது அங்குள்ள
பாகிஸ்தானியர்கள் மற்றும்
முஸ்லிம்கள் தாக்குதல் vijayabharatham.org

நடத்தினர். இதற்கு பாரத தூதரகம் கண்டனம் தெரிவித்திருந்தது.


இது சம்பந்தமாக பாகிஸ்தானியர்கள் பலரை அந்நாட்டு
15
காவல்துறை கைது செய்தது. இதுகுறித்து லெய்செஸ்டரில்
வசிக்கும் பாரத பாகிஸ்தானிய சமூக தலைவர்கள்கூடி பேசி
பயங்கரவாதத்திற்கு ஆதரவு கிடையாது என அறிக்கை
வெளியிட்டனர். ஆனால், அதே நாளில், லெய்செஸ்டரை
தொடர்ந்து, லண்டனின் பிர்மிங்ஹாம் நகரிலும் ஹிந்துக்களுக்கு
எதிரான வன்முறையில் முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்மெக்மிக் பகுதியிலுள்ள துர்கா பவன் சென்டர் என்கிற ஹிந்து
க�ோயிலுக்கு முன்பு, முகமூடி அணிந்த 200 முஸ்லீம்கள் ஒன்று
திரண்டு 'அல்லாஹூ அக்பர்' என்று க�ோஷமிட்டபடியே, க�ோயில்
மீது கற்கள், பாட்டில்களை வீசினர். இதனால் பயந்துப�ோன
ஹிந்துக்கள், க�ோயிலை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவலர்கள், முஸ்லீம்களை
அங்கிருந்து கலைந்து ப�ோகச் செய்தனர். முஸ்லிம்கள்
மெஜாரிட்டியாகவும், ஹிந்துக்கள் மைனாரிட்டியாகவும் இருக்கும்
இடங்களில் எல்லாம், முஸ்லிம்களால் ஹிந்துக்களுக்கு எதிரான
வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு வருவதாக இங்கிலாந்து
பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

சிறுபான்மை உரிமைகளை பறிக்கும் பாகிஸ்தான்


ஐ . ந ா . வின்
சி று ப ான்மை யி ன ரின்
உரிமைகள் த�ொடர்பான
உயர்மட்ட கூட்டத்தில் பேசிய
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை
அமைச்சர், பாரதம் ஹிந்து
மேலாதிக்க நாடாக மாறுகிறது
என குற்றச்சாட்டுகளை
vijayabharatham.org முன்வைத்தார். காஷ்மீர்
பிரச்சினை குறித்தும் பேசினார். இதற்கு பதில் அளித்து ஐ.நா
கூட்டத்தில் பேசிய ஐ.நாவுக்கான இந்திய இணைசெயலாளர்
ஸ்ரீனிவாஸ் க�ோத்ரு, "பாகிஸ்தான் சிறுபான்மையினரின்
உரிமைகள் பற்றி பேசுவது வேடிக்கையானது. தனது நாட்டின்
வெட்கக்கேடான பதிவை மறைக்க தரவுகளை வெளியிடுவதை
கூட அது நிறுத்தியது. அவர்கள் இந்த பிரச்சினையை க�ொண்டு
வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. உலகம் இதுவரை
பார்த்திராத சிறுபான்மையினரின் உரிமைகளை கடுமையாக
மீறுவதில் ஒரு நீண்ட வரலாற்றை பாகிஸ்தான் க�ொண்டுள்ளது.
சீக்கியர்கள், ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், அகமதியர்களின்
உரிமைகளை பாகிஸ்தான் த�ொடர்ந்து கடுமையாக மீறுகிறது.
பாகிஸ்தானில், ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும்
குழந்தைகள், குறிப்பாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த
பெண்கள், கடத்தப்பட்டு கட்டாயத் திருமணத்திற்கு
உள்ளாக்கப்பட்டு உள்ளனர். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்
ஆகிய முழு யூனியன் பிரதேசங்களும் பாரதத்தினுடையது.
எப்போதும் பாரதத்தின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத
பகுதியாகவே இருக்கும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை
நிறுத்துமாறு பாகிஸ்தானை நாங்கள் கேட்டுக்கொள்கிற�ோம்"
என்று தெரிவித்தார்.
16

You might also like