Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 9

குலதெய்வ கர்மா, குலதெய்வ தோஷம், குலதெய்வ சாபம்"இதனை

சார்ந்த சந்தேகங்கள் பெரும்பாலானோருக்கு இருக்கின்றன.ஜாதகப்படி


யாருக்கு எல்லாம் இது சார்ந்த பிரச்சினைகள் இருக்கும் உண்மையான
குலதெய்வத்தை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதைப் பற்றி
இந்த பதிவில் மிக தெளிவாக பார்க்கலாம்.
#குலதெய்வத்தை கண்டுபிடிக்கும் சில வழிகள்.
ஒரு சில பேர் அல்லது ஒரு சில குடும்பம் குல தெய்வத்தை
வணங்கும் பழக்கமே இல்லாமல் இருக்கிறார்கள்.குலதெய்வம் எது
என்றே அவர்களுக்குத் தெரிவதில்லை.
இன்னும் சில குடும்பம் குலதெய்வம் தெரிந்தும் குலதெய்வக்
கோயிலுக்குச் செல்லாமல் இருப்பது வருடத்திற்கு ஒருமுறை கூட
குலதெய்வத்தை வழங்காமல் இருப்பது.ஆன்மீ கத்தின் மீ து நம்பிக்கை
இல்லாமல் நாத்திகம் பேசுவது.இதுபோன்ற செய்கிறார்கள்.
இன்னும் சில பேர் அல்லது சில குடும்பங்கள் குலதெய்வம் எது
என்று தெரியாமல் இவர்களாகவே ஒரு கடவுளை குல தெய்வமாக
ஏற்றுக் கொள்கின்றனர்.அப்படி இவர்கள் ஏற்றுக் கொள்ளும் தெய்வம்
இவர்களுக்கு குலதெய்வமாக ஒன்றுமே வராது.
முதலில் குல தெய்வம் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்
என்பதை தெரிந்து கொள்வோம்.
நம்முடைய குலத்தை காக்கும் தெய்வம் அதுதான் குலதெய்வம்
நம்முடைய பரம்பரையையும் நம்முடைய வம்சத்தையும் காத்து
நிற்கும் தெய்வம் தான் இந்த குலதெய்வம்.
நமக்கு ஒரு பிரச்சினை என்றால் நமக்கு ஒரு கஷ்டம் என்றால்
நம்முடைய வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழ்நிலை ஏற்பட்டால்
நமக்கு முதலில் வந்து உதவுபவர்கள் அல்லது நம்முடைய
குடும்பத்தை அந்தப் பிரச்சினையில் இருந்து தீர்த்து வைப்பார்கள் இந்த
குலதெய்வம் மட்டும்தான்.
வேறு எந்தக் கடவுளும் நமக்கு ஒரு பிரச்சினை என்றால் நமக்கு
முதலில் உதவ முன்வர மாட்டார்கள் நம்முடைய குல தெய்வம் தான்
நம்மை காக்க முதலில் வந்து உதவுவார்கள்.எனவே குலதெய்வம்
ஆசீர்வாதம் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக மிக முக்கியமான
ஒன்றாகும்.
எனவே குலதெய்வம் ஆசீர்வாதம் யாருக்கெல்லாம் விட்டுப்போய்
இருக்கிறதோ அவர்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு முன்னேற்றமே
இருக்காது.ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு
குல தேவாசீர்வாதம் மிகவும் உதவும்.
ஒரு சில பேர் இவர்களாகவே ஒரு கடவுளை வணங்கிக் கொண்டு
அது தான் இவர்களுக்கு குலதெய்வம் என்று நினைத்துக்
கொண்டிருப்பார்கள்.அதையே இவர்கள் வருட வருடம் வணங்கிக்
கொண்டு இருப்பார்கள்.
இன்னும் சில பேர் சில குடும்பங்கள் இவர்களின் உண்மையான
குலதெய்வம் எது என்று தெரியாமல்,
திருப்பதி ஏழுமலையான், காஞ்சி காமாட்சி, பழனி முருகன், திருத்தணி
முருகன் ,மதுரை மீ னாட்சி, ஸ்ரீரங்கநாதர்,காளஹஸ்தி,இதுபோன்ற
கடவுளை வணங்கிக் கொண்டு இருப்பார்கள் அது அவர்களுக்கு குல
தெய்வமாக வராது ஏனென்றால் என்றுமே மூல கடவுள்கள்
யாருக்குமே குலதெய்வமாக வராது காவல் தெய்வம்தான்
குலதெய்வமாக வரும்.
அதாவது நம்முடைய பரம்பரையில் நம் முன்னோர்கள் எந்த
கடவுளை ஏழு தலைமுறைகளாக தொடர்ந்து வணங்கினார்களோ
அதுதான் நமக்கு உண்மையான குலதெய்வமாக வரும்.
ஒரு குடும்பம் அல்லது ஒரு பரம்பரை மூன்று அல்லது நான்கு
தலைமுறைகளாக மட்டுமே குலதெய்வத்தை தொடர்ந்து
வணங்குகிறார்கள் என்றால் அது உண்மையான குலதெய்வமாக வராது.
அதாவது நாம் வணங்கிக் கொண்டிருக்கும் குல தெய்வத்தை
நம்முடைய முன்னோர்கள் தொடர்ந்து ஏழு தலைமுறைகளாக
வணங்கிக் கொண்டு இருந்தால் மட்டுமே அந்த தெய்வம் நமக்கு
குலதெய்வமாக வரும்.
ஒரு சில பரம்பரையில் குலதெய்வம் என்பது அவர்கள் பரம்பரையில்
வாழ்ந்த முன்னோர்கள் அல்லது மூதாதையர்களையே குலதெய்வமாக
வணங்கும் பழக்கம்
இருந்திருக்கும்.இல்லையென்றால் இவர்கள் பரம்பரையில் சிறு
வயதில் இறந்துபோன கன்னிப்பெண்ணை குலதெய்வமாக வணங்கும்
பழக்கம் இன்னும் பெரும்பாலான குடும்பத்தில் நடைமுறையில்
இருக்கின்றது.
குலதெய்வம் என்பது வெறும் காவல் தெய்வங்களை வணங்குவது
மட்டும் இல்லாமல் நம்முடைய முன்னோர்களை குலதெய்வமாக
வணங்குவதும்.நம்முடைய பரம்பரையில் அனைவருக்கும் பிடித்திருந்த
ஒரு பெண் சிறு வயதில் இறந்து போனால் அந்தப் பெண்ணையே
குலதெய்வமாக வழங்குவதும் இருந்திருக்கின்றது.
ஒரு சில பேர் தங்கள் வாழும் வட்டிலேயே
ீ அவர்களுடைய
குலதெய்வத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள் அதாவது குலதெய்வ
விக்கிரகத்தை இவர்கள் வட்டிலேயே
ீ வைத்துக் கொண்டு தலைமுறை
தலைமுறைகளாக வருடத்திற்கு ஒருமுறை அந்த விக்ரகத்தை எடுத்து
வணங்கி கொண்டிருப்பார்கள்.
குலதெய்வம் என்பது காவல் தெய்வங்களாக இருக்கலாம் அல்லது
கன்னிப் பெண்ணாக இருக்கலாம் மற்றும் நம்முடைய மூதாதையர்
ஆக இருக்கலாம்.எதுவாக இருந்தாலும் அவர்களைத் தொடர்ந்து ஏழு
தலைமுறைகளாக வணங்கிக் கொண்டு இருந்தால் மட்டுமே
இவர்களுக்கு குலதெய்வமாக வரும்.
அதாவது நம்முடைய மூதாதையர்கள் தொடர்ந்து ஏழு
தலைமுறைகளாக எந்தக் கடவுளை வணங்கிக் கொண்டு
இருக்கிறார்களோ அது தான் நமக்கு குல தெய்வம்.முதலில்
நம்முடைய முன்னோர்கள் எந்த கடவுளை வணங்கிக்
கொண்டிருந்தார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
ஒரு சில பேர் அல்லது ஒரு சில குடும்பத்தின் பூர்வகம்
ீ வேறு ஒரு
ஊராக இருக்கும்.அவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்கும் தொழில்
செய்வதற்காகவும் பூர்வகத்தை
ீ விட்டு விட்டு வேறு ஒரு ஊருக்கு
குடிபெயர்ந்து விடுவார்கள்.
அப்படி தங்களுடைய பூர்வகத்தை
ீ விட்டு வெளியேறி வேறு ஒரு
ஊருக்கு சென்றுவிட்டு அங்கு ஒரு கடவுளை இவர்கள் குலதெய்வமாக
ஏற்றுக்கொண்டு வருடாவருடம் வணங்கி கொண்டிருப்பார்கள்.அது
இவர்களுக்கு குலதெய்வமாக வராது.
இவர்களுடைய உண்மையான பூர்வகத்தை
ீ கண்டுபிடித்து இவர்களின்
முன்னோர்கள் எந்த கடவுளை குல தெய்வமாக வணங்கினார்களோ
அந்த கடவுளை வணங்கினால் மட்டுமே இவர்களை விட்டு இந்த
குலதெய்வதோஷம் விட்டுப் போகும்.இல்லையென்றால் என்றுமே
குலதெய்வ அருள் இவர்களுக்கு கிடைக்காது.
இந்தக் குலதெய்வ விட்டுப் போனவர்கள் எல்லாம் இவர்களின்
முன்னோர்களின் உண்மையான பூர்வகத்தை
ீ எப்படியாவது
கண்டுபிடித்து அங்கு சென்று விசாரித்து அதன் மூலமாக இவர்களின்
குல தெய்வத்தை கண்டுபிடிக்க முடியும்.

#ஜாதகப்படி யாருக்கு எல்லாம் குல தெய்வ ஆசீர்வாதம் இருக்கும்


யாருக்கெல்லாம் இருக்காது.
(கேது பகவானின் நட்சத்திரங்கள்தான் குலதெய்வத்தை சாபத்தை
கொடுக்கக்கூடிய நட்சத்திரங்களாகும்)
"அஸ்வினி, மகம், மூலம்" இந்த மூன்று நட்சத்திரத்தில் யார்
யாரெல்லாம் பிறந்திருக்கிறார்களோ இவர்கள் பிறப்பதற்கு முன்னால்
இவர்கள் பரம்பரையில் குலதெய்வத்தை வணங்குவது விட்டுப்
போயிருக்கிறது.
ராசி நட்சத்திரம் மற்றும் லக்னம் விழுந்த நட்சத்திரம் மற்றும்
லக்னாதிபதி நின்ற நட்சத்திரம்
இவற்றில் ஏதாவது ஒரு நட்சத்திர புள்ளி "அஸ்வினி ,மகம்,மூலம்"
இந்த நட்சத்திரத்தில் ஒரு ஜாதகருக்கு விழுந்திருந்தால் அவருக்கு
கண்டிப்பாக குலதெய்வ சாபம் இருக்கின்றது அர்த்தம் குலதெய்வ
ஆசீர்வாதம் இவருக்கு இல்லை.
உதாரணமாக மேஷ லக்னத்தில் ஒருவர் பிறந்து இருக்கிறார் என்று
வைத்துக்கொள்வோம் லக்னம் விழுந்த டிகிரி "அஸ்வினி"
நட்சத்திரமாக இருந்தாலும் சரி.இல்லையென்றால் சிம்ம லக்னத்தில்
ஒருவர் பிறந்து இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் லக்னம்
விழுந்த டிகிரி "மகம்" நட்சத்திரமாக இருந்தாலும்.மற்றும் தனுசு
லக்னத்தில் ஒருவர் பிறந்து இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்
லக்னம் விழுந்த டிகிரி "மூலம்" நட்சத்திரத்தில் விழுந்து இருந்தாலும்
சரி இப்படி இருந்தால் அந்த ஜாதகர் பிறப்பதற்கு முன்னால் குலதெய்வ
ஆசீர்வாதம் விட்டுப் போயிருக்கிறது என்று அர்த்தம்.
இல்லையென்றால் கன்னி லக்னத்தில் ஒருவர் பிறந்து இருக்கிறார்
என்று வைத்துக்கொள்வோம் லக்னாதிபதி புதன் சென்று "மூலம்"
நட்சத்திரத்தில் இருந்தாலும் சரி,மீ ன லக்னத்தில் ஒருவர் பிறந்து
இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் லக்னாதிபதி குரு சென்று
"மகம்" நட்சத்திரத்தில் இருந்தாலும் சரி.மற்றும் மகர லக்னத்தில்
ஒருவர் பிறந்து இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் லக்னாதிபதி
சனி பகவான் சென்று "அஸ்வினி" நட்சத்திரத்தில் இருந்தாலும் சரி
இது போன்று இருந்தாலும் இந்த ஜாதகருக்கு குலதெய்வ ஆசீர்வாதம்
இல்லை என்று அர்த்தம்.
இல்லையென்றால் ராசி நட்சத்திரம் "அஸ்வினி, மகம்,மூலம்" இந்த
நட்சத்திரத்தில் இருந்தாலும் சரி இவர்களுக்கு குலதெய்வ ஆசீர்வாதம்
இல்லை என்று அர்த்தம்.

கிரகங்களில் எந்த கிரகமும் குலதெய்வம் சம்பந்தப்பட்ட


பிரச்சினையே நமக்கு கொடுக்கும் என்றால் "சுக்கிரன்" தான் நமக்கு
கொடுக்கும்.
யாருடைய ஜாதகத்தில் எல்லாம் லக்னத்தில் சுக்கிரன்
இருக்கின்றதோ
ஏழாம் பாவத்தில் "சுக்கிரன்" இருக்கின்றதோ மற்றும் லக்னாதிபதியுடன்
சுக்கிரன் சேர்ந்து இருந்தாலும் சரி லக்னாதிபதியை சுக்கிரன்
பார்த்தாலும் சரி.
லக்கினம் மற்றும் லக்கினாதிபதியை சுக்கிரன் பார்வை மூலமாக
பார்த்தாலும் சரி இது போன்ற அமைப்புகள் யாருடைய ஜாதகத்தில்
எல்லாம் இருக்கின்றதோ இவர்கள் பிறப்பதற்கு முன்னால்
இவர்கள் பரம்பரையில் குலதெய்வ ஆசீர்வாதம் விட்டுப்போய்
இருக்கின்றது என்று அர்த்தம் ஒழுங்காக இவர்களின் பரம்பரையில்
குல தெய்வத்தை வணங்க வில்லை
என்று அர்த்தம்.

யாரெல்லாம் இந்த "துலாம் ராசி துலாம் லக்னம்' அல்லது "ரிஷப


ராசி ரிஷப லக்னத்தில்" பிறந்து இருக்கிறார்களோ அவர்கள் பிறப்பதற்கு
முன்பே இவர்கள் பரம்பரையில் இவர்களின் குடும்பத்தில்
குலதெய்வத்தை ஒழுங்காக வணங்குவது விட்டுப் போயிருக்கிறது
என்று அர்த்தம்.
அதேபோன்று யாருக்கெல்லாம் இந்த "லக்னாதிபதி" சென்று துலாம்
என்ற பாவத்தில் இருக்கிறதோ அவர்களுக்கு குலதெய்வம் விட்டுப்
போயிருக்கிறது என்று அர்த்தம்.
உதாரணமாக ஒருவர் சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்று
வைத்துக்கொள்வோம் லக்னாதிபதியாக சூரியன் சென்று மூன்றாம்
பாவமாகிய துலாம் என்ற பாவத்தில் இருந்தாலும் சரி,
அதே போன்று ஒருவர் மிதுன லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்று
வைத்துக்கொள்வோம் லக்னாதிபதியாகி புதன் சென்று துலாம் என்ற
பாவத்தில் இருந்தாலும் சரி,அதே போன்று ஒருவர் மேஷ லக்னத்தில்
பிறந்திருக்கும் என்று வைத்துக்கொள்வோம் லக்னாதிபதி செவ்வாய்
சென்று துலாம் என்ற பாவத்தில் இருந்தாலும் சரி.
இது போன்ற அமைப்பு யாருடைய ஜாதகத்தில் எல்லாம்
இருக்கின்றதோ அவர்களுக்கும் குலதெய்வ ஆசீர்வாதம் விட்டுப்
போயிருக்கிறது அல்லது குல தெய்வக் குற்றம் இருக்கிறது என்று
அர்த்தம்.

இதேபோன்று லக்னாதிபதி யாருக்கெல்லாம் ஏழாம் பாவத்தில்


இருக்கிறதோ அல்லது ஏழாம் அதிபதி லக்னத்தில் இருக்கிறதோ
மற்றும் லக்கினாதிபதியும் ஏழாம் அதிபதியும் சேர்ந்து இருக்கின்றதோ
இது போன்ற அமைப்பு ஜாதகத்தில் இருப்பவர்களுக்கும் குலதெய்வ
ஆசீர்வாதம் இல்லை அல்லது குல தெய்வ குற்றம் இருக்கிறது என்று
அர்த்தம்.
உதாரணமாக ஒருவர் மீ ன லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்று
வைத்துக்கொள்வோம் லக்னாதிபதியாக குரு பகவான் சென்று ஏழாம்
பாவம் ஆகிய கன்னி என்ற பாவத்தில் இருந்தாலும் சரி அல்லது
ஏழாம் பாவம் ஆகிய கன்னி என்ற வட்டிற்கு
ீ அதிபதியாக புதன்
லக்னத்தில் இருந்தாலும் சரி,அல்லது லக்னாதிபதியாக குரு பகவானும்
7-ஆம் பாவ அதிபதி புதன் பகவானும் சேர்ந்து ஏதேனும் ஒரு
பாவத்தில் இருந்தாலும் சரி.
அதே போன்று ஒருவர் கும்ப லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்று
வைத்துக்கொள்வோம் லக்னாதிபதி ஆகிய சனி பகவான் சென்று
ஏழாம் பாவம் ஆகிய சிம்மம் என்ற பாவத்தில் இருந்தாலும்
சரி,அல்லது 7-ஆம் பாவ அதிபதி ஆகிய சூரிய பகவான் சென்று
லக்னத்தில் இருந்தாலும் சரி,
அல்லது லக்னாதிபதியாகிய சனி பகவானும் 7-ஆம் பாவ அதிபதி சூரிய
பகவானும் சேர்ந்து ஏதேனும் ஒரு பாவத்தில் இருந்தாலும் சரி.
அதாவது ஜாதகத்தில் 1=7 தொடர்பு இருக்கிறதா என்று பாருங்கள்
அப்படி இருந்தால் குலதெய்வ ஆசீர்வாதம் இவர்கள் பிறப்பதற்கு
முன்னால் விட்டுப் போயிருக்கிறது என்று அர்த்தம்.

#குலதெய்வ ஆசீர்வாதம் ஒருவருக்கு இல்லை என்றால் எந்த மாதிரி


பிரச்சினைகள் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும்.
குலதெய்வம் ஆசிர்வாதம் இல்லை என்றால் என்ன பிரச்சனை
நமக்கு வரும் என்றால் நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம்
என்பதே இல்லாமல் போய்விடும் மற்றும் குடும்ப வாழ்க்கையிலும்
நம்முடைய குடும்பத்திலும் வளர்ச்சி என்பதே இல்லாமல் போய்விடும்.
முக்கியமாக நம்முடைய உறவுமுறைகளில் பிரச்சினையை
ஏற்படுத்தும் குலதெய்வம் ஆசீர்வாதம் விட்டு போனவர்களுக்கு
(எவ்வளவு தான் இவர்களுக்கு உறவினர்களும் சொந்தங்களும்
இருந்தாலும் யாருமே இவர்களுக்கு உதவ முன்வர மாட்டார்கள்.
எல்லோரும் நமக்கு இருந்தும் நாம் தனிமைப்படுத்தப்படுவோம்.
அதாவது எவ்வளவு உறவினர்கள் நமக்கு இருந்தாலும் நாம்
அனாதையாக்க படுவோம்.)
குலதெய்வம் ஆசீர்வாதம் விட்டு போனவர்களுக்கு உறவினர்கள்
மூலமாகவும் சொந்தங்கள் மூலமாகவும் எந்தப் பயனும் இருக்காது
எந்த உதவியும் இருக்காது எந்த ஆதாயமும் இருக்காது.
இவர்கள் நமக்கு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமல் இருப்பதும்
ஒன்றுதான்.
சொந்தங்கள் உறவினர்கள் எல்லோரும் இருந்தும் அனைவரும்
பிரிந்து வாழ வேண்டிய நிலை ஏற்படும்.அவர்கள் சமுதாயத்தின்
மூலமாகவும் அவர்களின் ஜாதியின் மூலமாகவும் வரக்கூடிய
உதவிகள் எதுவும் இவர்களுக்கு இருக்காது.
நான் குறிப்பிட்டுள்ளவாறு யார் ஜாதகத்தில் ஆவது இருந்தால்
அவர்களிடம் போய் கேட்டுப்பாருங்கள் அவர்களுக்கு உறவினர்கள்
சொந்தங்கள் மூலமாக எந்த பயனும் இருக்காது.
நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் நம்முடைய
பரம்பரை விருத்தி ஆக வேண்டும் என்றால் நம்முடைய வளர்ச்சி
உயரவேண்டும் என்றால் நமக்கு எந்த பிரச்சனைகளும் வராமல்
இருக்க வேண்டுமென்றால் அதற்கு குலதெய்வம் ஆசீர்வாதம்
முழுமையாக நமக்கு இருக்க வேண்டும்.
குலதெய்வ ஆசீர்வாதம் முழுமையாக நமக்கு இருந்தால் மட்டுமே
இது எல்லாம் சாத்தியம் இல்லை என்றால் காலம் முழுவதும் நமக்கு
வளர்ச்சியை இல்லாமல் மிகப் பெரும் துன்பங்களுக்கும்
கஷ்டங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் நாம் ஆளாகி விடுவோம்.
இந்த குலதெய்வ ஆசீர்வாதம் விட்டுப் போனவர்கள் எந்த கடவுளை
வணங்கினாலும் எவ்வளவுதான் ஆன்மீ க ஈடுபாட்டில் ஈடுபட்டாலும்
தெய்வ உபாசனைகள் செய்தாலும் அதன் மூலம் இவர்களுக்கு எந்த
ஒரு பிரயோஜனமும் இருக்காது.
குலதெய்வ ஆசீர்வாதம் இல்லாதவர்களுக்கு இந்த உலகத்தில் எந்தக்
கடவுளின் அனுகிரகம் கிடைப்பதும் ஒன்றுதான் கிடைக்காமல்
இருப்பதும் ஒன்றுதான்
நம்முடைய ஜாதகத்தில் அனைத்தையும் விட குலதெய்வ
ஆசிர்வாதம் தான் மிகவும் முக்கியம் குலதெய்வ ஆசீர்வாதம் நமக்கு
முழுமையாக இருந்தால் நம்முடைய வாழ்க்கையில் எந்தப்
பிரச்சினையும் வராது.

ஜோதிடம் சார்ந்த ஏதாவது கேள்விகள் மற்றும் சந்தேகங்கள்


இருந்தால் மற்றும் ஜாதகம் பார்க்க ஜாதகம் எழுத என்னை தொடர்பு
கொள்ளவும்.
Call me My mobile number and WhatsApp number is 8610232640.
my name is s.selvakumar.
(Vedic astrologer, Numerologer and DNA astrologer).
மேலும் ஜோதிடம் சார்ந்த Online வகுப்புகள்("பாரம்பரிய ஜோதிடம்,
வாஸ்து சாஸ்திரங்கள்,மரபணு ஜோதிடம், எண் கணிதம்")போன்ற 4
முறைகள் சார்ந்த ஜோதிட வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
ஜோதிடம் கற்க ஆசைப்படுபவர்கள் விருப்பம் உள்ளவர்கள்
என்னுடைய WhatsApp number க்கு Message செய்யவும்.அல்லது என்னுடைய
mobile Number க்கு Call செய்யவும்.

128128
8 Comments
49 Shares
Like
Comment
Share

You might also like