Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

கோயில் Trustee யை விட கோயில் பரம்பரை தர்மகர்த்தா அதிக அதிகாரம்

படைத்தவர். உரிமை உள்ளவர். அவரை விட ஒரு மடாதிபதி அதிக


அதிகாரங்களும், அவர் நிர்வகிக்கும் தர்ம ஸ்தாபனங்கள், கோயில்கள்
பாடசாலைகள் இவற்றில் , பல படியான சம்பிரதாய உரிமைகள்
உடையவர்.
இருப்பினும் அப்படிப்பட்ட மடாதிபதியே, தாம் விரும்பினாலும், தம்
மடத்துச் சொத்துக்களையோ, தம் மடத்தினால் நிர்வாகம் செய்யப்பட்டு
வரும் கோயில் நிலங்களையோ விற்க முடியாது. அதற்கு அவருக்கு
சுத்தமாக அதிகாரம் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர் அந்த
நிலங்களை அரசோ, வேறு கயவாளிகளோ கையகப்படுத்தாமல் காப்பாற்ற
வேண்டும்.
இது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வரும் ஓர் உண்மை நிலை. தார்மீ க
நிலை
முத்தமிழை விற்றவன் ஆட்சியில் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம்
அமைக்க அரசும், கயவாளிகள் துறையும் சேர்ந்து 290 ஏக்கர்கள் -
திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் திருக்கோயிலுக்காக ஏற்பட்ட
அபிஷேக கட்டளை நிலங்களையும், இராஜன் கட்டளை நிலங்களையும்
எடுத்துக்கொண்டார்கள். கட்டளைகளுக்கு உரிய விலையை
கொடுக்கவேயில்லை.
இவ்வாறு இருக்கையில், 2014 ம் வருடம் சிதம்பரம் திருக்கோயில்
வழக்கில் மீ ண்டும் ஒரு முறை தில்லை வாழ் அந்தணர் பெற்றனர்.
அதைச் செவியுற்ற தருமையாதீனம் 26 ம் குருமகா சன்னிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ
ஷண்முகதேசிக பரமாச்சார்ய ஸ்வாமிகள் திருவுள்ளத்தில் பேருவகை
எய்தி - சிதம்பரத்தில் ஸ்ரீ சிவகாமி சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு
பாதாம் அல்வா பாவாடை படைக்கச் செய்தார்கள்.
சில மாதங்கள் கழித்துத் தீர்ப்பு விஷயமாக தம்மிடம் வந்து சில
விவரங்களைத் தெரிவிக்குமாறு குருமகா சன்னிதானம் உத்தரவிட்ட
போது அடியேன் தருமையாதீனம் சென்று அவர்களைத் தரிசித்தேன்.
ஸ்ரீ சன்னிதானம் வெகு நேரம் பல விஷயங்களைப் பற்றிப் பேசினார்கள்.
அடியேன் கோயில்களுக்காகச் செய்து வரும் சட்டப் போராட்டங்களைக்
குறித்து கேட்டறிந்து வாழ்த்தினார்கள். அப்போது திருவாரூர் மத்திய
பல்கலைக்கழகத்திற்குத் தேவை
என்று இராஜன் கட்டளை நிலங்களையும், அபிஷேகக் கட்டளை
நிலங்களையும் எடுத்துள்ளார்கள். அதற்கு உரிய விலை இன்னமும்
கொடுக்கவில்லை. நீங்கள் இது விஷயமாக வழக்கு தொடுக்க உள்ளதாக
செவியுற்றேன். வழக்கு தொடுக்க உள்ள ீர்களா? என வினவினார்கள்.
அப்பொழுது நான் - என் வழக்கு - அரசு இன்னமும் நிலங்களுக்குப் பணம்
கொடுக்கவில்லை என்பதன்று. இராஜன் கட்டளை, அபிஷேக கட்டளை
நிலங்களை விற்க ஆதீனகர்த்தர்களுக்கு அதிகாரமோ, உரிமையோ
கிடையா. அவ்வண்ணமே அரசிற்கும் கோயில், கட்டளை நிலங்களைக்
கையகப்படுத்த அதிகாரம் கிடையாது என்ற விஷயங்கள் தாம். அந்த
வழக்கில் கட்டளைச் சொத்துக்களை விற்க சம்மதம் தெரிவித்ததால்
சந்நிதானத்தையும் ஒரு பிரதிவாதியாக அடியேன் சேர்க்க நேரிடும்
...அதனால் தான் தயங்குகிறேன் என்று சொன்னேன்.
ஸ்ரீ சன்னிதானம் ஒரு கணம் என்னையே உற்று நோக்கியவர்கள், "ஐயா
அந்த வழக்கை அவ்வாறே அவசியம் போடுங்கள். அப்பொழுது தான்
எங்களைப் போன்ற மடாதிபதிகளுக்கு கொஞ்சமாவது இது சிவன் சொத்து
என்ற எண்ணம் வரும்" என்று மிகுந்த வேகத்தோடு அருளிச் செய்தார்கள்.
நான் அவரிடம் விடை பெற்று சென்னை வந்தேன். அபிஷேக கட்டளை,
இராஜன் கட்டளை விஷயமாக அறநிலையத்துறை
ஆணையருக்கு எழுதி நிலங்களுக்கு கிரயம் ஏன் கொடுக்கப்படவில்லை,
அறநிலையத்துறைச் சட்டம் பிரிவு
34 ன் கீ ழ் உள்ள வழிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்றெல்லாம்
கேட்டேன். அதன் பிறகு அரசு ரூ. 4.60 கோடி அந்த நிலங்களுக்காக
இழப்பீடாகத் தரப்பட்டன.
தற்போது நாம் அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டிய விஷயங்கள்:
1. இனியும் ஆதீனங்கள், மடங்கள் நிலங்களை - அரசும், அரசியல் கட்சி
வணர்களும்
ீ குறி வைத்து எடுப்பது - தடுக்கப் பட வேண்டும்
2. மடாதிபதிகள், ஆதீனகர்த்தர்கள் - தம் மடத்து, கோயில்கள், கட்டளைகள்
சொத்துக்களை அரசுத் துறைகள் கேட்கும் போது, இவை இறைவன்
சொத்துக்கள் - எங்கள் சம்பிரதாயத்தின் சொத்துக்கள் - இவற்றை விற்க
எங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இவற்றை பாதுகாக்க
வேண்டியது எங்கள் கடமை.
இவற்றை வைத்துப் பாதுகாக்க, எங்களுக்கு இந்திய அரசியல் சட்டம்
வழங்கிய அடிப்படைச் சொத்து உரிமைகள் உள்ளன. நீங்கள் வேறு
ஏற்பாடுகள் செய்து கொள்ளுங்கள் என்று ஆணித்தரமாக கூற வேண்டும்.
3. அறநிலையத்துறை அதிகாரிகளோ, வருவாய்த்துறை அதிகாரிகளோ
வந்தால் - 20, 30 வருடங்களாக கோயில்களுக்கும், மடங்களுக்கும்,
கட்டளைகளுக்கும் வரவேண்டிய நிலுவை, நில வருவாயை வட்டியோடு
வசூல் செய்து கொடுத்து விட்டு - பிறகு உள்ளே வாருங்கள் என்று
சொல்லி அவர்களை விரட்ட வேண்டும்.
4. கறை வேட்டிக் கயவாளிகளை மடத்தின் உள்ளே விடக்கூடாது.
5. ஒரு வேளை அரசு நோக்கங்களுக்காக மடத்தின் அல்லது
கோயில்களின் குறிப்பிட்ட நிலங்கள் தாம் தேவை எனின் - அதே ஊரில்
அல்லது கிராமத்தில் அந்த நிலத்திற்கு அருகிலேயே வேறு கூடுதல்
மதிப்புள்ள, விஸ்தீரணம் உள்ள நிலங்களை அரசு ஆர்ஜிதம் செய்து
கொடுத்த பிறகு, முன் குறிப்பிட்ட நிலத்தை பரிமாற்றம் செய்து
கொள்ளலாம்.
பக்தர்கள் நினைவு கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்:
கோயில், திருமடங்கள் சொத்து உரிமை அரசியல் நிர்ணயச் சட்டத்தால்
உறுதி செய்யப்பட்ட அடிப்படை சொத்து உரிமை. இது தனி நபர் சொத்து
உரிமை போல் வலுவிழந்த சொத்து உரிமையன்று.
இந்த உண்மை - அரசு கயவாளிகளுக்குத் தெரியும். தெரியாதது போல்
நடிப்பார்கள். அரசு கேட்டால் நிலங்களைக் கொடுத்தே ஆக வேண்டும்
என்பது போல் பேசுவார்கள்.
இவர்கள் பொய்ப் பேச்சிற்கு மடாதிபதிகள், ஆதீனகர்த்தர்கள் மதிப்பளிக்கக்
கூடார்
ஹரி ஓம்
சிவ சிதம்பரம்

You might also like