Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 8

முனைவர் ஞா.

பெஸ்கி பொதுத்தமிழ்-II கம்ெராமாயணம்

தமிழாய்வுத்துனை
தூய வளைார் கல்லூாி, திருச்சிராப்ெள்ளி-2
இளநினை வகுப்புகள்- முதைாம் ஆண்டு- இரண்டாம் ெருவம்
பொதுத்தமிழ்- II (21UTA21GL02) : அைகு-3

கம்ெராமாயணம்-
னகககயி சூழ்வினைப்ெடைம்

னகககயி சூழ்வினைப்ெடைம் அகயாத்தியா காண்டத்தில் மூன்ைாவது ெடைமாக


அனமந்திருக்கிைது. இராமன் முடிசூடுவனதத் தவிர்ப்ெதற்காகக் னகககயி
ஆகைாசித்துச் பசய்த தீயபசயனைத் பதாிவிக்கும் ெகுதியாதைால் இது னகககயி
சூழ்வினைப் ெடைம் எைப்ெடுகிைது.

கூைி பசன்ைெின் னகககயி தன் ககாைம் அழித்தல்

1.தன்னுனடய ெணிப்பெண்ணாகிய கூைி என்னும் மந்தனர பசன்ைெிைகு சிைந்த

மைர்க்குவியனை உனடய கட்டிலிலிருந்து இைங்கிய னகககயி, அனடமனழ தரும்


கருகமகம் கொன்ை நீண்ட கூந்தலில் சூடியிருந்த மைர்மானைனய அதிலுள்ள கதனை
விரும்புகின்ை வண்டுக்கூட்டம் சிதறுமாறு ெிடுங்கி எைிந்தாள். இது வாைத்தில் உள்ள
மனழகமகத்தில் நுனழயும் சந்திரனைச் சிதைச்பசய்வனதப் கொல் இருந்தது

னகககயியின் மாளினகக்குத் தயரதன் வருதல்

2. இரவுப்பொழுது நடுசாமத்னத எட்டிய ெிைகு, ஆனணச்சக்கரம் தாங்கிய நீண்ட


னககனளயும் சிங்கத்னதப் கொன்ை பீடுநனடனயயும் பகாண்ட மன்ைன் தசரதன்,
கவல் ஏந்திய மன்ைர்கள் எல்ைாம் வாழ்க என்று கூைிக்பகாண்டு அவனைச் சூழ்ந்து
ெின்பதாடர, யாழில் கதான்றும் இன்ைினசயும் கதாற்கும்ெடியாை இைியபமாழி
கெசும் னகககயியின் மாளினகக்கு வந்தான்.

னகககயி தயரதைிடம் தன் வரத்னத கவண்டுதல்

3. வண்டுகள் பமாய்க்கின்ை மைர்மானையணிந்த மன்ைன் தசரதைின் பசாற்கனளக்

ககட்ட னகககயியின் நீண்ட கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் அவள் மார்ெின்கமல்

1
முனைவர் ஞா.பெஸ்கி பொதுத்தமிழ்-II கம்ெராமாயணம்

சிந்தியது. அப்கொது அவள் “என்கமல் உங்களுக்குக் கருனண உண்டா? அப்ெடி


இருக்குமாைால் முன்பு தருவதாகக் கூைிய வரங்கனள இன்று அன்புடன் தந்திடுக”
என்று கவண்டிைாள்

தயரதன் வரத்னதத் தர வாக்குறுதி அளித்தல்


4. கதன்பொருந்திய, மைர்ந்த மானை சூடிய னகககயியின் கருத்னத உணராத
மன்ைன் தயரதன், மிகுதியாை நீண்ட ஒளினய வீசும் மின்ைல் கொல் ெற்கள் ஒளிவீசச்
சிாித்தான். " உன் மகனும் வள்ளலுமாகிய இராமைின் கமல் ஆனண; உன் உள்ளம்
விரும்புவனத மைமகிழ்ச்சிகயாடு பசய்கவன் ; சிைிதும் தவைினழக்க மாட்கடன் *
என்று கூைிைான்

னகககயி முன்பு பகாடுத்த வரங்கனளத் தருமாறு கவண்டல்

5. நற்குணங்கள் பொருந்திய மன்ைன் தயரதன் அந்த உறுதிபமாழினயச்


பசான்ைவுடன் ஐயம் நீங்கப்பெற்ைாள் னகககயி. அவள் மன்ைனர கநாக்கி, ‘மன்ைா!
எைக்கு உண்டாை பொிய துன்ெத்னத நீக்கும் எண்ணம் உமக்கு இருக்குபமன்ைால்
கதவர் கூட்டம் சாட்சியாக, நீ சம்ெராசுரப் கொர் நிகழ்ந்த அன்று எைக்குக்
பகாடுப்ெதாக வாக்களித்த வரங்கள் இரண்னடயும் இப்பொழுது பகாடுப்ொயாக'
என்று கூைிைாள்.

விரும்ெியனதக் ககட்க தயரதன் கூறுதல்

6. வன்னமயாை பநஞ்சம் பகாண்ட னகககயியின் வஞ்சகத்னத அைியாத தயரதன்


"வரங்கனளப் பெறுவதற்கு இவ்வளவு தடுமாற்ைம் தரும் துன்ெமனடந்து வருந்த
கவண்டியதில்னை. என்னுனடய மைச்சுனம நீங்கும்ெடி இப்பொழுகத
பகாடுத்துவிடுகிகைன்;. இப்பொழுகத பசால்வாயாக" என்ைான்.

னகககயின் இருவரங்கள்

7. தீயனவ என்று பசால்ைப்ெடும் எல்ைாவற்ைிலும் கமம்ெட்ட தீயவளாை னகககயி


மன்ைன் தயரதைிடம், நீங்கள் பகாடுத்த இரு வரங்களுள் ஒரு வரத்திைால் என்மகன்
ெரதன் நாட்னட ஆளுதல் கவண்டும். மற்பைாரு வரத்திைால் சீனதக்குக் கணவைாகிய
இராமன் இந்நாட்னட விட்டு நீங்கிக் காட்னட ஆளுதல் கவண்டும் என்று பசால்லி
மைம் கைங்காமல் நின்ைாள்.

2
முனைவர் ஞா.பெஸ்கி பொதுத்தமிழ்-II கம்ெராமாயணம்

தயரதைின் துயரம்

8. நாகப்ொம்பு கொன்ை பகாடியவளாகிய னகககயி, தன் நாவிைால் பகாடுத்த


துன்ெத்னதத் தரும் பசால்ைாகிய நஞ்சு, மன்ைன் தயரதனைப் ெற்ைிக்பகாண்டதால்
அவன் நடுக்கம் அனடந்தான். துன்ெத்தால் பவதும்ெி அவன் உடல் கசார்ந்து
கொைான். நச்சுப்ொம்ெிைால் தன் வலினம அடங்கி விழும் யானைகொைத் தனரயில்
விழுந்தான்.

கதவாின் நடுக்கமும் னகககயியின் கைங்கா உள்ளமும்

9. கட்டுத்தைியில் கட்டப்பெற்ை, மிக்க மதம் பொருந்திய யானைனயப் கொன்ை


பெருமிதம் பகாண்ட தயரதன், துன்ெத்தால் பவதும்ெி தனரயில் விழுந்து புைம்புகின்ை
கவதனைனயக் கண்டு கதவர்களும் மைம் பவந்து நடுங்கிைார்கள்; ஊழிக் காைம்
வந்தது கொன்ை துன்ெம் அவர்களுக்கு ஏற்ெட்டது. அம்பு கொன்ை கண்கனளயுனடய
னகககயியின் மைம் மட்டும் முன்பு இருந்த அகத நினையிலிருந்து மாறுெடாமல்
இருந்தது.

னகககயின் மைமாற்ைத்திற்காை காரணத்னத தயரதன் விைவுதல்

10.பநய் பூசப்ெட்ட கவனையுனடய தயரதன், தன்ைினையில் மாைாது உறுதியாக


நின்ை னகககயினய உற்றுகநாக்கி, “நீ மைம் தினகத்துப்கொய்விட்டாகயா? அல்ைது
வஞ்சனை மிக்கவர்கள் எவகரனும் இட்டுக்கட்டிக் கூைிய வஞ்சனைச் பசால்னைக்
ககட்டாகயா? உன் நினைக்காை காரணத்னத என் கமல் ஆனணயாக எைக்குச்
பசால்வாயாக” என்று விைவிைான்

னகககயின் தீஞ்பசாற்கள்

11. இதனைக் ககட்ட னகககயி தயரதைிடம் ”கடிவாளத்கதாடு கூடிய


குதினரகனளயுனடய அரகச! என் மைம் தினகப்பு எய்தியதும் இல்னை; தீயவர்கள்
யாரும் வந்து என்ைிடம் வஞ்சனைச்பசாற்கனளச் பசான்ைதுமில்னை; முன்பகாடுத்த
இவ்வரங்கனள இன்று பகாடுத்தால் நான் பெற்றுக்பகாள்கவன்; இல்னைபயைில்
ெழினய உங்கள்கமல் னவத்துவிட்டு நான் பசத்துப்கொகவன்' என்ைாள்.

3
முனைவர் ஞா.பெஸ்கி பொதுத்தமிழ்-II கம்ெராமாயணம்

னகககயின் கடுபமாழி ககட்ட தயரதைின் பெருந்துயரம்

12. விண்ணுைகத்னதயும் ொதாளத்னதயும் மண்ணுைகத்னதயும் பவன்ை


வாள்ெனடயுனடய தயரதன் னகககயினயப் ொர்த்து, “ஆ பகாடியவகள! என்ைான்.
பெருமூச்சு விட்டான். ஐகயா! அைம் மிகவும் பகாடியகத!" என்ைான்; 'சத்தியம்
என்கின்ை ஒன்று சாகட்டும்” என்று பசால்லிக்பகாண்டு எழுந்தான். ஆைால்
எழமுடியாமல் உடம்பு தள்ளாடி வீழ்ந்தான்.

தயரதன் னகககயின் காலில் விழுந்து இரத்தல்

13. கட்டுத்தைினய முைிக்கின்ை யானைப்ெனடயுனடய வீரக்கழல் அணிந்த அரசர்கள்


ெைர் கமலும் கமலும் ஒருவருக்பகாருவர் முந்திக்பகாண்டு வந்து வணங்குகின்ை
ொதங்கனள உனடய தயரதன், பசங்ககானை பசலுத்தி ஆட்சினய
கமற்பகாண்டிருந்தாலும், தம் நாட்டில் குற்ைம் நிகழாமல் நீக்கும் எண்ணம் பகாண்ட
நல்ை அரசனரப் கொல், இைியும் வருகின்ைபதாரு நன்னம உண்டு என்ைால் பொறுனம
காப்ெது நன்ைாகும் என்று எண்ணியவைாய்க் னகககயியின் கால்களில் விழுந்தான்

நின் மகன் அரசு ஆளட்டும் இராமன் நாடு விட்டுப் கொகாமல் இருப்ெனத


விரும்புக என்று மன்ைவன் தசரதன் விரும்புதல்

14. தயரதன் னககயயியிடம், ”உன்னுனடய மகன் ெரதன் ஆட்சிபுாியட்டும். நீயும்


இைிகத அதிகாரம் பசலுத்திக்பகாள். மண்ணுைகம் முழுதும் உன் வசமாகட்டும்.
ஆட்சிபுாிவாயாக!. ஆட்சியுாினயனயத் தந்துவிட்கடன்;. பசான்ை பசால் நான்
தவைவில்னை. ஆைால் என்மகனும், என்னுனடய கண்ணும் உயிரும் கொன்ைவனும்,
அனைத்து உயிர்களுக்கும் நல்ை மகன் கொன்ைவனும் ஆகிய இராமன் இந்த நாட்னட
விட்டு பவளிகயைாமல் இருப்ெனத மட்டும் நீ விரும்புவாயாக!“ என்று கூைிைாள்.

தசரதன் என் உயிர் உன் அெயம் எைல்

15. வாய்னமகய என்ைால் முழுவதும் அழியும்ெடி அனமந்த என் தீவினைனய எண்ணி


நான் வருந்துகின்கைன்; உன்னுடன் கெசிப் கெசி என் நாக்கும் வைண்டுவிட்டது.
தாமனர மைர்கொன்ை னககனளயுனடய இராமன் இன்று என் கண்ணுக்கு முன்ைால்

4
முனைவர் ஞா.பெஸ்கி பொதுத்தமிழ்-II கம்ெராமாயணம்

என்னைப் ெிாிந்து காட்டிற்குச் பசல்வான் என்ைால் நான் உயிகராடிருக்க மாட்கடன்.


எைகவ நங்னககய! 'என் உயிர் உன் அனடக்கைம்” என்று கூைிைான்.

னகககயி தயரதைிடம் ‘உனர மறுத்தால் உயிர் விடுகவன்’ எைக் கூறுதல்;

16. சக்கரத்னதயுனடய பொன்மயமாை கதனரயுனடய தயரதன், இவ்வாறு


கசார்வனடந்து பொன்ைிைமாை தன்னுனடய கதாள்முழுவதும் புழுதி ெடருமாறு
தனரயில் உருண்டான். அப்பொழுது, பநஞ்சில் இரக்கமற்ை னகககயி, “வலினமனயயும்
அழகிய பவற்ைிமானைனயயும் உனடய அரகச! முன்ைர் அளித்த வரங்களின்
அடிப்ெனடயில் அரசாட்சினய நான் முனையாகப் பெற்கைன் என்று உன் வாயால்
பசால். அவ்வாறு பசால்ைாவிட்டால் நான் என் உயினரப் கொக்கிக் பகாள்கவன்”
என்று கூைிைாள்.

னகககயி வரம் பகாடுத்துவிட்டு இப்கொது வருந்துவது தகாது எைல்

17. வினரந்து ெரவுகின்ை பநருப்புப் கொை எாிந்து தணியாமல் இைிய உயினர


அழிக்கின்ை பநருப்பு கொன்ை னகககயி தயரதனை கநாக்கி, “இறுகக் கட்டிய
வில்னையுனடய மன்ைகை! உன் குைத்தில் முன்பு கதான்ைிய ஓர் அரசன் (சிெி
மன்ைன்) தன்னுனடய அாிய உடம்னெகய அாிந்து பகாடுத்தான் அல்ைவா!
அம்மன்ைன் மரெில் வந்த நீ, முன்ைர் வரத்னதக் பகாடுத்து விட்டு இப்பொழுது
வருந்திைால் என்ை ெயன் உண்டாகும்?” என்று கூைிைாள்.

தயரதன் னகககயிக்கு வரம் அளித்தல்

18. தான் வரம் பகாடுக்கவில்னை என்ைால் இக்பகாடிய னகககயி இைந்துவிடுவாள்


என்று கருதிய வலினம மிக்க தயரதன் னகககயியிடம், "பகாடுத்து விட்கடன். நீ ககட்ட
வரத்னதக் பகாடுத்துவிட்கடன். என் மகைாகிய இராமன் காட்னட அனடந்து அதனை
ஆளட்டும். நாகைா இைந்துகொய் விண்ணுைனக ஆள்கவன்; நீகயா உன் மகைாகிய
ெரதகைாடு கசர்ந்து ெழி என்னும் பவள்ளத்தில் நீண்டகாைம் நீந்துவாயாக!
நீந்துவாயாக“ என்று கூைிைான்.

முடிசூட்டு விழானவக் பகாண்டாடும் அகயாத்தி நகர மக்களின் நினை


(கவி கூற்று)
19. இத்தனகய கவனளயில் அந்த அகயாத்தி மாநகரத்தின் மக்கள், ஏழுகடலும் ஒருகசர
ஒலிப்ெதுகொை ஆரவாாித்துக் பகாண்டு ெடுக்னகயிலிருந்து எழுந்தைர். இந்நாள்
5
முனைவர் ஞா.பெஸ்கி பொதுத்தமிழ்-II கம்ெராமாயணம்

இராமன் பெருனம பொருந்திய மகுடம் சூடும் நன்ைாள் என்று எண்ணிய அவர்கள்


காதல் விருப்ெம் தூண்டியதால் பசய்தவற்னை எல்ைாம் பசால்லும் தன்னம எம்னமப்
கொன்கைார்க்கு நினைத்தற்கும் உாியை அல்ை என்ைாலும் முடிந்தவனர பசால்கிகைன்

தயரதனை அனழத்துவரச் சுமந்திரன் பசல்லுதல்

20. காைம் கணித்துனரக்கும் க ாதிட நூனைக் கற்றுணர்ந்த க ாதிடர்கள் மகுடம்


சூட்டுவதற்குாிய முகூர்த்த கநரம் வந்துவிட்டது என்று பதாிவித்தைர். ெிைவிகநாய்
நீங்கும்ெடியாகத் தவம்பசய்த வசிட்ட முைிவன் அனமச்சராகிய சுமந்திரனை கநாக்கி,
“கவகமாகச் பசன்று;மணிமுடி அணிந்த தயரதனை வினரவாக அனழத்து வருவாயாக“
என்று கட்டனளயிட்டார். அம்முைிவரது கட்டனளனயத் தனைகமற்பகாண்டு
நின்ை அன்பு நினைந்த சுமந்திரன் அன்கொடு வினரந்து பசன்ைான்.

னகககயி சுமந்திரைிடம் இராமனை அனழத்து வருமாறு கூறுதல்

21.வானைத் பதாடுமளவு உயர்ந்து நின்ை அரண்மனையில் அரசர்களுக்கு


அரசைாகிய தயரதனைப் ொர்க்க முடியாததால் அங்கிருந்தவர்கனள விைவிய
அனமச்சன் சுமந்திரன், அவர்கள் கூைியனதக் ககட்டுக் னகககயியின்
அரண்மனைனயச் பசன்ைனடந்தான். பகாவ்னவக்கைினயப் கொன்ை வாயினை
உனடய ெணிப்பெண்களிடம் தன் வருனகனயச் பசால்ைவும், அப்பெண்கள் அதனைக்
னகககயியிடம் பசான்ைார்கள். பெண்களுக்குள் எமனைப் கொன்ை னகககயி,
“இராமனை அனழத்து வருக“ என்று கூைிைாள்.

சுமந்திரன் இராமனைத் திருமுடி சூட வினரவில் வருமாறு அனழத்தல்

22. சுமந்திரன் இராமனை அணுகி, ”மன்ைர்களும், முைிவர்களும், மற்றும்


இவ்வுைகத்தில் உள்ளவர்களும் உன்னைப் பெற்ை தந்னதயாகிய தயரதனைப்
கொைகவ, உன்ைிடம் கெரன்பு காட்டி நின்றுபகாண்டிருக்கின்ைார்கள்;. உன்
சிற்ைன்னையாகிய னகககயியும் உன்னை அங்கக அனழத்துவருமாறு கூைியுள்ளார்.
எைகவ அந்தப் பொன்ைால் ஆகிய பொிய முடினயச் சூடுவதற்கு வினரவில் வருக”
என்று கூைிைான்.

கதாில் பசல்லும் இராமனைக் கண்ட பெண்களின் பசயல்கள்

23.வீரைாகிய இராமன் அழகிய இரத்திைம் ெதிக்கப்பெற்ை மகுடத்னதச்


சூட்டிக்பகாள்வதற்குத் கதாில் கொகின்ைான் என்ெனத அைிந்த அந்நகரத்துப் பெண்கள்
6
முனைவர் ஞா.பெஸ்கி பொதுத்தமிழ்-II கம்ெராமாயணம்

அன்பும் மகிழ்ச்சியும் தூண்டியதால் ஒருவனரபயாருவர் முந்திக்பகாண்டு இரு


ெக்கங்களிலும் ஆரவாாித்துக் பகாண்டு பமாய்த்து நின்ைார்கள். அனைவருக்கும்
இைிய உயிர் ஒன்ைாக அனமய, அவ்வுயிர் ஒப்ெற்ை கதாில் பசல்வனதப்
ொர்ப்ெவர்கனளப் கொலிருந்தைர்

24. காிய பொிய கமகத்னதப் கொன்ை இராமனுனடய நினையும் அைிவும்


ெிைர்க்கில்னை என்ெது இருக்கட்டும்; அனைவனரயும் ஒன்ைாக எண்ணும்
எளினமக்குணம் கவறு யார்க்கு இருக்கின்ைது? ஒருவருக்கும் இல்னை. இதுவனர
இவ்வுண்னம அைியாமல் பகட்கடகை! இவன் கதவர்களுள் ஒருவைாக
அடங்குவாகைா? அடங்கமாட்டான். இந்த வலினம மிக்க இராமன், காைம் என்று
எண்ணுகின்ை நுட்ெமாை அளனவயும் கடந்துநின்ை மூைப்பொருளாய் அழிவில்ைாமல்
இருக்கின்ை ெரம்பொருகள ஆவான்!' என்று பசால்லுவார்கள்.

25. ஒற்னை பவண்பகாற்ைக்குனட நிழல்பசய்யவும், பெருகிய கசனைகயாடு


ெைவனகயாை ெனடக்கைங்கள் ஒளி வீசவும் கூடிய நினையில் அருகளாடு
இவ்வுைகத்னத ஆள்கின்ை அரசர்கள், இராமன் கதான்ைியெின் ெிள்னளகனளப்
பெற்பைடுப்ெது அவர்களுக்குப் பெருனமயன்று. சிறுனமகய ஆகும்” என்று பெண்கள்
எல்ைாம் இராமைின் பெருனமகனளக் கண்டு தினகத்து உருகிச் ஓவியம்கொல்
அனசவற்று இருந்தார்கள்

26. கமகம் மின்ைகைாடு உைாவியதுகொை முப்புாிநூல் விளங்கும் மார்னெயுனடய

இராமன், கதர் கமல் பசல்வதால் நம் வீட்டு வாயினை வினரவாகக் கடந்து


பசன்றுவிடுவாகைா? அவன் கதர் வினரந்து பசல்ைாதவாறு தடுப்ெதற்காக மிகுந்த
பொற்குவியல்களாலும் அளவற்ை நவமணிகளாலும் நீண்ட பதருவினை நிரப்புங்கள்!"
என்று பசால்லிக்பகாண்கட அப்பொன்னையும் மணினயயும் பதருவில்
பகாட்டிைார்கள்

மன்ைவன் ஆனணனயக் கூை இராமன் ெணிந்துனரத்தல்

27. “என் தந்னத தயரதன் எைக்குக் கட்டனளயிட, அதனை அன்னையாகிய நீகர


பதாிவிக்குமாறு வாய்த்ததால் நான் ஈகடைிவிட்கடன்; என்னை விட கமன்னம
அனடயும்ெடி ெிைந்தவர் கவபைாருவர் இருக்கின்ைாகரா? இல்னை; என் முன்னைத்
தவத்தால் உண்டாகிய ெயன் எைக்கு வந்துவிட்டது; இதனைவிடச் சிைந்ததாக
வரக்கூடிய நற்ெயன் கவபைான்று உள்ளகதா? எைக்கு நன்னமயாைவற்னைச்

7
முனைவர் ஞா.பெஸ்கி பொதுத்தமிழ்-II கம்ெராமாயணம்

பசய்யும் தந்னதயும் தாயும் நீகர ஆவீர்; எைகவ, நீர்பசால்ைப்கொவனதத்


தனைகமற்பகாண்டு நின்கைன் கட்டனளயிடுங்கள்“ என்ைான் இராமன்.

னகககயி பதாிவித்த மன்ைைின் ஆனண

28. னகககயி இராமனை கநாக்கிக், “கடைால் சூழப்ெட்ட உைகம்


முழுவனதயும் ெரதகை ஆண்டுபகாண்டிருக்கட்டும். நீ நாட்னட விட்டுச் பசன்று
பதாங்குகின்ை பொிய சனடகனளத் தாங்கிக்பகாண்டு தாங்குவதற்காிய தவத்னத
கமற்பகாண்டு புழுதி நினைந்த பகாடிய காட்னட அனடவாயாக!. புண்ணியத்
தீர்த்தங்களில் நீராடி -ெதிைான்குஆண்டுகள் கழித்த ெின்பு திரும்ெி வருவாயாக என்று
அரசன் பசான்ைான்” என்ைாள்.

னகககயியின் உனர ககட்ட இராமைது கதாற்ைப் பொலிவு

29.எவராலும் பசால்லுதற்காிய நற்ெண்புகனளயுனடய இராமெிராைது திருமுகத்தின்


அழனக இப்கொது ொர்த்தால் அஃது எம்னமப் கொன்ைவர்களால் புகழ்ந்து
பசால்லுவதற்கு எளிகதா? எளிதன்று. னகககயி பசான்ைவற்னைக் ககட்ெதற்கு முன்பு
அவைின் முகம் அப்பொழுது மைர்ந்த பசந்தாமனர கொன்ைிருந்தது. னகககயி
பசான்ைவற்னைக் ககட்ட அந்தப் பொழுதில் மைர்ந்த பசந்தாமனர மைாினை அவைின்
முகம் பவன்றுவிட்டது.

காட்டிற்குச் பசல்ை இராமன் னகககயியிைிடம் வினட பகாள்ளுதல்

30. இராமன் னகககயியிடம், “அரசன் கட்டனள அன்று


என்ைாலும் உங்கள் கட்டனளனய நான் மறுப்கெகைா? மாட்கடன். என்தம்ெி ெரதன்
அனடந்த கெறு நான் பெற்ைனதப் கொன்ைது அன்கைா? இதற்குப் புைம்ொை நன்னம
கவறுயாது? இதனைவிட எைக்கு உறுதி தரும் பசயல் கவறு எதுவும் இல்னை.
உங்களின் இக்கட்டனளனயத் தனைகமல் பகாண்கடன். மின்ைல் கொை
பவயிபைாளி வீசும் காட்டிற்கு இப்பொழுகத கொகின்கைன். உங்களிடம் வினடயும்
பெற்றுக்பகாண்கடன்“ என்று கூைிைான்.

You might also like