தமிழ்

You might also like

Download as odt, pdf, or txt
Download as odt, pdf, or txt
You are on page 1of 21

Object 1

2
1.0 முன்னுரை

தமிழில் உள்ள நூல்களுலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய
அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம்,பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும்
நூல். திருக்குறள் உலக நூல்களில் உயர்ந்த நூல்; தமிழர்க்குத் தெவிட்டாத அறிவு விருந்து. எவ்வளவோ
அரசியல், சமய, சமுதாய மாறுதல்கள் ஏற்பட்டு மாறிய பிறகும், திருவள்ளுவரின் நூல் இன்றும்
நம்முடன் வாழ்ந்து நமக்காக அறிவுரை கூறும் சான்றோர் ஒருவரின் தெளிந்த வாய்மொழிபோல்
விளங்குகிறது. அந்தச் சான்றோரைப் பற்றி முதலில் தெரிந்து கொள்வோம்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்த வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாரதியார் போற்றிப்
ப ா டி யு ள ் ள ா ர ் . வாழ்க்கைநெறியை வகுத்துக் காட்டி வள்ளுவரால் வழங்கப்பெற்ற அறிவுக்
கருவுலமே திருக்குறள். வள்ளுவன் குலத்தைச் சார்ந்தவராக இருக்கக்கூடும் என்ற வரலாற்று
நம்பிகையின் அடிப்படியில் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர் என்ற காரணப்பெயர் இவருக்கு
அமைந்தது. திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை.

“வள்ளுவர் ஒரு சிறந்த தமிழ்மகன். நல்ல வேளாண்டி மரபினர். அவர் பிறந்தது, வாழ்ந்தது,
இறந்தது அனைத்தும் மதுரை. அவர் பாண்டிய மன்னனுக்கு அரசனது உள்அடு கருமத் தலைவராக ( )
இருந்தவர். இந்தத் தொழில் காரணமாகவே ' வள் வர்' என்ற பட்டத்தைப் பாண்டியனால் வழங்கப்
பெற்றவர். நல்ல வேளாண்குடி மகளை மனைவியாக பெற்றவர். உலகத்தை நோக்கி ஒரே நூலை
நன்றாகசசெய்து கொடுத்துவிட்டுநம்மைவிட்டு மறைந்தவர்". என்று உ.வே சாமிநாதய்யர்
தலைமையில் நடந்த ஆய்வில் கிடைத்த வரலாற்றுத் தொகுப்பினை கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின்
'வள்ளுவரும் குறளும்" எனு ம ் நூ ல ி ல ் க ாணல ா ம ் .

திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் அவரைப் போல் தமிழுக்கு அழியாப் பெருமையளித்த நக்கீரர்,


சாத்தனார், இளாங்கோவடிகள், கபிலர், ஒளவையார் முதலிய பெருமக்கள் பலரும் உடன் வாழ்ந்தனர்.
இவர்கள் முன்னிலையில் வள்ளுஅரின் நூல் சங்கத்தமிழ் மன்றத்தில் அரங்கேற்றம் கண்டது.

திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வ புலவர், டெருநாவலார், பொய்யில் புலவர் என்று பல


ச ி ற ப ் பு ப ் பெ ய ர ் க ள ா ல ் அழை ப ் ப ர ் . புலவர் தம் வாழ்நாளிலேயே புகழ் பெறுதல் என்பது
அரிது. அதிலும் தம்மோடு ஒத்த தம் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் இடையிலே ஒரு சேர புகழ் பெறுதல்
என்பது அரிதினும் அரிது.
2.0 திருக்குறள் அமைப்பு

2.1 திருக்குறள் எப்போது இயற்றப்பட்டது?

திருக்குறள் இயற்றப்பெற்ற காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல்


ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையான என்று கணிக்கப்படுகிறது. மறைமலையடிகள் செய்த
ஆராய்ச்சியின் பயனாய்த் தமிழ் நாட்டில் ஆண்டுளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும்
பயன்படுத்தப்படுகிறது. திருவள்ளுவர் ஆண்டானது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.
2.2 திருக்குறளின் அமைப்பு

பதினெண் மேல்கணக்கு

பழந்தமிழ் நூல்கள் ஐ சிறுங்


ஐம ் பெ ரு ம ் கா ப ் ப ி யங் கள்
பகுப்பு க ா ப ் ப ி ய ங ் கள ்

பதினெண் கீழ்க்கணாக்கு

படம் 6.2 : பழந்தமிழ் நூல்பகுப்பு

இவற்றுள் பதினெண் கீழ்க்கணக்கு எனப்படும் நூல்களின் வரிசையில் "மு ப ் ப ா ல ் " எனும்


பெயரோடு இந்நூல் விளங்குகின்றது.

இன்பத்துப்பால்
அறத்துப்பால் பொரு ட ் ப ா ல ்

திருக்குறள்
படம் 2.2 திருக்குறல் (மு ப ் ப ா ல ் ) [மு ப ் ப ா ல ்
}

இம்மூன்று பாடல்கள் ஒவ்வொன்றும் 'இயல்' எனும் அகுதிகளாக பகுக்கபட்டுள்ளன, ஒவ்வோர் இயலும்


சில அதிகாரங்களையும் ஒவ்வோர் அதிகாரமும் பத்து குறள்களையும் உள்ளடக்கியது. இதை இன்னும்
தெளிவாகக் கீழே காண்போம்.
இதன் அனைத்துப் பாடல்களும் குறள் வெண்பா எனும் வகையைச் சார்ந்தவை. இவ்வகை
வெண்பாக்களால் ஆன முதல் நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் அதனால் குறள் என்றும்
சிறப்பித்துக் கூறுவதற்காகத் என்றும் பெயர் பெற்றது.

திருக்குறள் நூலானது முப்பாலான அறம் பொருள் இன்பம் என மூன்று பாக்களை


கொண்டுள்ளது. முப்பால்களும் இயல் என்று பிரிக்கப்பட்டுள்ளது. 1330 குறட்பாக்களில் ஒவ்வொரு
அதிகாரத்திற்கும் 10 பாடல்கள் வீதம் பிரிக்கப்பட்டுள்ளது.
அறத்துப்பால்: முதற் பாலான அறத்துப்பாலின் 38 அதிகாரங்கள் உள்ளன. பாயிரவியல் 4
அதிகாரங்களும், பாயிரவியல் -ஐ தொடர்ந்து முதல் 20 அதிகாரங்களுடன் இல்லறவியல் அடுத்து 13
அதிகாரங்கள் கொண்ட துறவறவில் இறுதியில் ஊழ் என்னும் அதிகாரம் கொண்ட ஊழியல்.
திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் கொண்ட இயல் ஊழியல் மட்டுமே.

பொரு ட ் ப ா ல ் : பொருட்பாலின் மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன அவை, பொரு ட ் ப ா ல ி ல ்


அரசு இயல் ( 25 அதிகாரங்களும்) அமைச்சு இயல் (#2 அதிகாரங்களும்), ஒழிபு இயல் (!
3 அதிகாரங்களும்) உள்ளன.

இன்பத்துப்பால் அல்லது காமத்துப்பால்: இறுதியாக உள்ளது இன்பத்துப்பால். இன்பத்துப்பாலில் (


களவியல்) 7 அதிகாரங்களும், (கற்பியல்) 18 அதிகாரங்களும் உள்ளன. இன்பத்துப்பாலில்
மொத்தமாக 25 அதிகாரங்கள் உள்ளன.

2.2 திருக்குறள் பெயர்க்காரணம் :


திரு+குறள் = திருக்குறள். குறள் குறுகிய வடிவினை உடையது. முதல் அடியில் நான்கு சீர்களும்
இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் பெற்று குறுகிய வடிவினைக் கொண்டிருப்பதால் குறள்
எனப்படுகின்றது. குறள் என்னும் யாப்பமைதிப் பெயருக்கு முன் 'திரு' என்னும் அடைமொழி பெற்று
திருக்குறள் என வழங்கப்படுகின்றது.

2.3 திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள்:

திருக்குறளுக்கு உத்தரவேதம், ஒய ் ய ாமொழ ி , வாயுறை வாழ்த்து, தெய்வநூல், பொதுமறை,


மு ப ் ப ா ல ் , தமிழ்மறை, ஈரடிநூல், வானம்மறை, உலகப்பொதுமறை, மு ப ் ப ா ல ் என ் று பல
சிறப்பு பெயர்கள் உள்ளன.

3.0 திறுக்குறளைப் பற்றி சான்றோரின் கருத்து.

இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை. மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம். மனிதன்


மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்,” என்றும் திருக்குறளைச் சிறப்பித்துக் கூறுவர்.

● ஒளவையார்
ஈரடி குறள் வெண்பா ஆழமான கருத்துகளை உள்ளடக்கியது. என்பதை உணர்த்த " அணுவைத்
துளைத்துஏழ் கடலை புகட்டிக் குறுகத் தரித்த குறள்" என்று திருவள்ளுவமாலையில் ஒரு செய்யுள்
காணப்படுகிறது.

● மதுரைத் தமிழ் நாகனார்


எல்லாப் பொருளையும் தன்னகத்தே தாங்கி நிற்பது குறள் எனும் கருத்தில் இவர் " எ ல ் ல ா ப ் பொரு ளு ம ்
இதன்பாலுள இதன்பால் இல்லாத எப்பொருளுமே இல்லையால்" என ் று கூ று க ி ன ் ற ா ர ் .

4.0 திருக்குறளின் சிறப்புகள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்


முதற்றே யுலகு

எனும் தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து 1330 ஆம் குறளை,

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்ௐஉ இன்பம்


கூடி முயங்கப் பெறின்.

என்று தமிழ்மொழியின் இறுதி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார்.

முதலே அகரம்! முடுவோ னகரம்!


அதனால் குறள், தமிழ்! ஆம்!

என்று கவிமாமணி மதிவண்ணன் உணர்ச்சி பொங்கக் குறிப்பிடுகிறார்.

பொதுநோக்காகத் திருக்குறளுக்கு ஒரு சிறப்பு உண்டு. என்ன சிறப்பு? உலகில்


தோன்றிய நூல்களில் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டவை மூன்று நூல்கள் தான். முதல்
வரிசையில் இருப்பது பைபில். இரண்டாம் வரிசையில் இருப்பது இஸ்ளாமிய வேதம் குரான். மூன்றாவது
வரிசையில் இருப்பது திருக்குறள். 85 க்கும் மேற்பட்ட மொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முதல்
இரண்டும் சமய நூல்கள் என்று ஒதுக்கி வத்து விட்டால், உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழி
பெயர்க்கப்பட்ட இலக்கியங்களில் தலைமை வகித்து நிற்பது திருக்குறள் ஒன்று தான். இந்த சிறப்பு,
தமிழுக்குப் பெருமையளிப்பதாகும்.

மனிதன் மனிதனாய்ப் பிறந்து மனிதனாய் வாழ்வது எப்படி என்று கற்றுக் கொடுப்பது திருக்குறள்.
தனிமனிதனுக்கு உருமையானது இன்ப வாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது. பொருளியல் வாழ்வு;
இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு.அறவழியில் நின்று பொருள் ஈட்டி அதனைக்
கொண்டு இன்ப வாழ்வு வாழ வேண்டும். இவ்வாறே உலக மாந்தரையும் இன்புறச் செய்ய வேண்டுமென
உரைப்பது திருக்குறள்.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால் அதைச் சிறப்பித்துப் பல


பெ ய ர ் க ள ா ல ் அழை ப ் ப ர ் . திருக்குறள் முப்பால், உத்தவேதம், தெய்வநூல், பொதுமறை,
பொய ் ய ாமொழ ி , வாயுரை வாழ்த்து தமிழ்மறை என்ற பெயர்கள் அதற்குரியன.

திருக்குறள் ஒரு மறைநூல்; பொதுமறையாய், மக்கள் வேதமாய், உலகுக்கெல்லாம் தனிச்சிறப்பான


ஒன்றாய் விளங்குகிறது. இம்மதமாய்ஹ் தன்னை இனங்காட்டிக் கொள்ளாமல் சம்மதமாய் நின்ற
மறைகாற்று என்கிறார் கவிமாமணி மதிவண்ணன்.

சைவர்கள், வைணவர்கள், பெளத்தர்கள், சமணர்கள் ஆகிய அனைவரும் தத்தம் சமயக்


கருத்துகள் குறட்பாக்களில் காணப்படுதால் தத்தம் சமயத்துக்குரிய நூலே குறள் என்று கூறுவர்.

4.1 அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

திருக்குறள் முதற்பாலாகிய அறத்துப்பால் பாயிரம் எனும் பகுதியுடன் தொடங்குகிறது. இதில்


முதலில் காணப்படுவது கடவுள் வாழ்த்து எனும் அதிகாரம். தொடர்ந்து வருபவை வான் சிறப்பு, நீதத
் ார்
பெருமை, அறன் வலியுறுத்துதல் எனும் அதிகாரங்கள் ஆகும்.

திருக்குறள் என்பது ஓர் அறநூல் என்று முன்னமே அறிந்தோம்.அந்நூலுக்கு உரிய பெயர்களில் அ


என்பதும் ஒன்றாகும். திருவள்ளுவர் அறநெறியில் அழுத்தமான நம்பிகை உடையவர். “ மறந்தும்
பிறருக்குக் கெடுதியானவற்றை எண்ணக்கூடாது. அவ்வாறு எண்ணினால் அவற்றை எண்ணியவனுக்கே
கெடுதி விளையுமாறு அறமே செய்து விடும்,” என ் க ி ற ா ர ் .
உயர்ந்த குறிக்கோள் கொண்டு மனிதன் வாழ வேண்டும் என்பது அவர் கருத்து. அறநெறியைப்
போற்றி வாழ்வதால் இந்த உலகுக்கு இடையூறு ஆகும் என்றாலும், அந்த இடையூற்றை ஏற்றுக் கொள்வதே
நல்லது என்பர் ஆவர்.

இவ்வாறு உயிர் வாழ்வைப் பொருட்படுத்தாமல் உயர் நெறியை வலியுறுத்தும் திருவள்ளுவர்


நெறியோடு வாழ்வதற்கு உரிய படிகளையும் ஆங்காங்கே தெளிவாக்குகிறார்.

4.1.2 குறள் அறத்தின் சிறப்பு

பழைய வடவர் அனுவல்களில் " தர்மம்" என்பது மனித இனத்தை அனைத்து நிலைகளிலும் சமன்மைப்
பார்வையோடுநோக்காமல், நடுவு நிலையற்ற, ஒரு சார்பு கொண்ட ஒரு சமுதாய முறைமையையே
விளக்கியது. ஆனால் குறளறம் சமன்மை கொண்ட ஒரு சமுதாய அமைப்பு முறையை எடுத்துக்
காட்டியது. குறள் காலத்தில் போற்றப்படாத நெறிகள் அறத்துப்பாலில் வலியுறுத்தப்பட்டுள்ளன: முதன்
முதலாக குறளில்தான் ஆணுக்குப் பாலியல் ஒழுக்கத்துக்கான ஓர் அறம் கூறப்பட்டது; வள்ளுவர் அதை
'பிறன் மனை நோக்காத பேராண்மை' என்று சொல்லி அழைத்தார். மனைவியை விடுத்து பிற
பெண்களிடம் செல்வது, பரத்தையர் என்ற பொதுமகளிரிடம் செல்வது போன்றவை மரஆன
செயல்களாகக் கருதப்பட்ட வேளையில் அவற்றை மறுத்துச் சாடியுள்ளார். உணவுக்காக உயிர்களை
வேட்டையாடிக் கொல்லுவது தெல்மரபில் கொலை அன்று. குறள் உயிர்களைக் கொல்லாதிருப்பதோடு
புலால் உண்ணாதிருப்பதும் அறம் என்றது. ஆயிரம் வேள்வி செய்வதைவிட ஒன்றன் உயிரைக் கொன்று
உண்ணாமை சிறந்தது; கொல்லாதவனை - புலால் உண்ணாதவனை உலகம் கைகப்பி வழிபடும் என்கிறது
குறள்.

தொடர்ந்து நாம் அறத்துப்பால் ' அறன் வலியுறுத்தல' அதிகாரத்தின் இரண்டு குறட்பாக்களைக்


காண்போம்.

அ) மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்


ஆகுல நீர பிற

பொருள்: மனத்தளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக. அறம் என்பது அவ்வளவே. பிற வார்ததை

நடிப்பும் வாழ்க்கை வேடங்களும் மற்றவர் அறியச் செய்யபடும் ஆடம்பரங்களே.

விளக்கம் : அறம ் என ் ற ா ல ் என ் ன ? மனத்தின்கண் மாசு அற்றவனாக, குற்றமற்றவனாக


வாழ்வதே அறமாகும் என்பது திருவள்ளுவர் கருத்து. அகத்தைத் தூய்மையாக வைத்திருப்பதே
அறநெ ற ி ய ாகு ம ் . புறவாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் அனைத்தும் பிறருக்கான ஆடம்பரங்களே.
நற ச
் ொ ல ் லு க ் கு ம ் செ யலு க ் கு ம ் ந ல ் ல எண ண ் மே அடி ப ் படை ய ாகு ம ் .
தூய்மையான அகம் ஒன்றே அறம் சார்ந்த வாழ்க்கைக்கு ஏற்ற நெறியாகும். நம் மனத்தைத் தூய்மையாக
வைத்துக்கொள்வோம். அதுவே நெறியான வாழ்வுக்கு வழிகோலும்.

ஆ) சிறப்பினும் செல்வவும் ஈனும் அறத்தினூங்கு


ஆக்கம் எவனோ உயிருக்கு ( பரிமேலழகர் உரை, 31)

பொருள்: மக்கள் சிறப்பும் செல்வமும் எய்துவதற்கு உரியது அறமே. ந ான ் கு பே ர ் மு ன ் ந ம க ் கு


மேன்மையானது உண்டா என்கின்றார் திருவள்ளுவர்.

விளக்கம்: தனிமனிதனின் நெறியான வாழ்க்கைக்கு அறமே அடைப்படையானது என்று


வலியுறுத்திய திருவள்ளுவர் இக்குறட்பாவில் அறத்தைச் செய்தால் என்னென்ன கிட்டும் என்று
விவரிக்கிறார். அறம் மனித வாழ்க்கையை மேம்படுத்திச் சிறப்புச் சேர்க்கும். இந்தச் சிறப்பு எல்லா வகை
செல்வத்தையும் அளிக்க வல்லது.

4.2 பொருட்பால்

பொருட்பால் அரசும் சமுதாயமும் மனிதநிறைவுக்கு வழிகோலும் முறையைச் சொல்கிறது. மக்கள்


யாவரும் சமம்; மனிதரிடையே ஏற்றத்தாழ்வு யாதுமில்லை; யாரும் எப்பணியையும் மேற்கொண்டு வாழ்வு
நடத்தலாம்; எதுவும் ஒடடுக்கப்படவில்லை; எல்லா வினைகளும் அறத்தின்பாற்பாட்டனவாக இருத்தல்
வேண்டும், இது பொருட்பால் கூறும் கருத்தின் சாரம்.

அறம், பொருள், காமம் என்ற குறளின் பெரும்பிரிவுகளும் பொருள் நடுவில் அமைகிறது.


அறத்தால் பொருளீட்டி அப்பொருளால் இன்பம் நுகர்தலே வாழ்க்கை முறையாகும். சமுதாய வாழ்க்கை
பொருள் வாழ்வு எனவும் அறியப்படும். அறம், பொருள், இன்பம் என்ற மூன்றனுள் நடுவணதாகிய
பொருள் சிறப்புடையது. நடுவணது எய்த இருதலையும் எய்தும் பொருள்: நடுவில் நின்றதான 'பொருள்'
என்பதை ஒருவன் அடைய அது காரணமாக அதன் இருபக்கத்தனவான 'அறம்' இன்பம்' என்னும்
இரண்டையும் அவன் அடைவான்.) என்கிறது நாலடியார். (114)

பொருளின் வன்மையைப் புகழ்ந்தேத்தி பொருள் இருத்தால் ஏனைய அறமும் இன்பமும் எளிதிற்


கைகூ டு ம ் என ் ற ா ர ் க ள ் . முதல் நின்ற அறமும் கடைநின்ற காமமும் பொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லை என்று பிறிதொரு கருத்துக்கு இடமின்றித் தெளிவாகக் குறள் பேசுகிறது. அருளும்
பொருளால் வளர்வது என்கின்றது; அன்பு பெற்ற அருள் என்னும் குழந்தை பொருள் என்னும்
செவிலித்தாயால் வளர்வதாகும் என்பது குறள் தரும் செய்தி. பொருள் தீதின்றி வரவேண்டும்; அப்படிச்
சேர்த்த பொருள் அறத்தையும் இன்பத்தையும் தரும் என்பது வள்ளுவர் வாய்மொழி.

4.2.1 பொருட்பாலின் சிறப்பு

பொருட்பால் அரசியலையும் ஒழுங்குமுறைச் சமுதாய வாழ்வினையும் கூறுகிறது. இது


பொருள் ஈட்டுவதை மட்டும் பேசவில்லை; பொருள் சமைக்கும் சமுதாய வாழ்வையும் விவரிக்கிறது.
சீரிய அரசியல் நெறியால் அமைதி பெற்றோங்கும் சமுதாயம், பண ் ப ா ட ் டி ல ் ச ி ற க ் கு ம ்
சமுதாயம்,பொருள்களை ஆக்கிப் பகுத்துண்டு பயன்பெறும் சமுதாயம்- இந்த அமைப்பே இங்கு பொருள்
எனப்பெறும்.
ஒரு நாட்டின் தலைவனாக விளங்கும் அரசன் அரசனாக மட்டுமல்லாமல் அரசருள் தலைவனாய்
விளங்க வேண்டும் எனக் கூறும் வள்ளுவர் அரசர்கட்குரிய பண்களை ஒரு மருங்கும் அவர்தம் செய்த
திறங்களாஇப் பிறிதொரு மருங்குமாகக் அரசியலில் கூறிச் செல்கின்றார்.
அரசு முறை, ஆள்பவன் என்பவற்றை எல்லாம் கடந்து ஆட்சியின் பொதுத்தன்மைகளை மட்டும்
கூறுவது குறட்பொருட்பாலின் தனிச் சிறப்பாகும். நல்ல குடிமக்கள் உருவாக்கப்பட்டால் அதுவே நாட்டின்
அரசியலின் பெருமையும் பயனும் ஆகும். இதனாலேயே குடிச் சிறப்பை உடன்பாட்டாலும்
எதிர்மறையாலும் பொருட்பாலின் இருதிப்பகுதியாக விளங்கும் குடி இயலில் வள்ளுவர் தெள்ளத் தெளிய
விளக்குன்றார்.
தண்டிக்கும் வேல் அரசுக்கு சிறப்பு தருவதில்லை; செங்கோல் கோணாமல் இருக்குமானல் அதுவே
வெற்றியாகும். குடி மகலிடம் வலிந்து வரி வாங்குவது வழிப்பறி கொள்ளைகாரன் ஏட்டி முனையில் நின்று
கொடு என்பதை ஒக்கும். குடி மக்கள் துன்அத்தில் அழுது சொரியும் கண்ணீரே அரசின் வளத்தை
குலை க ் கு ம ் படை ய ாகு ம ் . கல்வியின் சிறப்பை எடுத்து இயம்புவதோடு, கற்றபின் என்ன
செய்ய வேண்டும் என்பதையும் விளக்கும். வாழ்க்கைக்குப் கட்டாயமாகத்தேவை என்று கருதியதால் '
செய்க பொருளை' என்று அழுத்தமாக எடுத்துரைப்பர்.

மேலும் காலம் அறிதல், இடம் அறிதல், வலியறிதல், ஊக்கம், சோம்பலில்லாமை, முயற்சி,


துன்பத்தில் கலங்காமை, சொல்வன்மை, செயலில் தூய்மை, செயலில் உறுதி, செயல் செய்து முடிக்கும்
திறமை, நட்பு, பகை, பெரியோரைப் போற்றல், விலைமகளிரிடம் சேராமை,கள் குடித்தலின் தீமை,
சூதாட்டத்தின் தீங்கு, மருந்து, ம ானம ் , நற்பண்பு, உழவின் சிறப்பு, வறுமையின் கொடுமை
முதலிய அதிகாரங்களின் கருத்துக்கள் குடிமக்கள் எல்லாருக்கும் பொதுவாகப் பொருந்தும் வகையில்
இருப்பதாக அமைந்துள்ளன.
தொடர்ந்து நாம் பொருட்பால்: ' அறிவுடமை' அதிகாரத்தின் இரண்டு குறட்பாக்களைக் காண்போம்.

அ) சென்ற இடத்தாற் செலவிடா தீதெரஇ


நன்றின்பால் லுய்ப்ப தறிவு ( பரிமேலழகர் உரை,
422)

பொருள் : மனம் செல்லும் வழியெல்லாம் அதைச் செல்லவிடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல
வழியில் நடத்துவது அறிவு

விளக்கம்: இக்குறட்பாவில் அறிவின் இலக்கணம் யாது என்று தெளிபடுத்துகிறார். மனத்தை அடக்கி


ஆள்வதே அறிவென்கிறார் திருவள்ளுவர். "மனம் ஒரு குரங்கு" என்பர். அதன் போக்கிற்கு
அதனை போகவிடாமல் நாம் தடுக்க வேண்டும். நன்மையெது தீமையெது என்அதை ஆராய்ந்து
தீயவற்றை ஒதுக்கி நல்லவற்றை நாடும் ஆற்றல் பெறுதலே அறிவாகும். சிந்தனையை அடக்கியாளும்
ஆற்றல் உள்ளவனே அறிவுடையனாகின்றான். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினாலும் மனதை
அடக்கத் தெரிந்தவனே அறிவாளி. இது கைவர பெறாதவன் அறிவிலி.

ஆ) எவ்வ துறைவ துலக முலகத்தோ


டவ்வ துறைவ தறிவு. ( பரிமேலழகர் உரை, 426)
பொருள்: உலகத்து பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ அவரோடு சேர்ந்து , தானும் அப்படியே
வாழ்வது அறிவு.

விளக்கம் :பரிமேலழகர் இவ்வாற்றல் ஓர் அரசனுக்கு அவசியமான ஒன்று என்கிறார். தனக்குத்தான்


எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டு அரசன் தான் நினைத்தஅடியே நடந்தால் பாவமும் பழியும்
வந்து சேரும். உலகத்தோடு ஒட்டி வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

4.3 காமத்துப்பால்

குறளின் காமத்துப்பால் சங்க அக இலக்கியங்களின் கருத்துப் பிழிவாய் அமைந்து கற்பனைவளமும்


இலக்கியச்சுவையும் சேர்ந்து காதலரின் கூடல், பிரிதல், ஊடல் என்ற பிரிவுகளில் காதல் நாடகமாய்
அமைகிறது. காமத்தினை இவ்வளவு தூய்மையாகப் பாடமுடியுமா என்று எல்லாரும் வியக்கும் வண்ணம்
உள்ளது இப்பகுதி. காதலரின் பண்பட்ட நெஞ்சத்தை விளக்கும் கற்பனை கலந்த உணார்ச்சிக் குவியலாகத்
தீடட
் ப்பட்டு அன்பும் அறனும் ஒன்றிய இன்பநெறியாய் ஒளிர்கிறது இது. காமத்துப்பாலில் வள்ளுவரின்
கலையுள்ளம் வெளிப்பட்டு அவரை ஒரு தலை சிறந்த இலக்கியச் செல்வராக அடையாளம் காட்டுகிறது.
காவியங்களில் காணப்படும் மிடுக்கு காமத்துப்பாலில் உலா வருகிறது.
காமத்துப் பால் சொல், பொருள், உவமை நயம் கொண்டு, மகிழ்ச்சி, இரங்கல், சோகம்,
க ா ம ம ் , உளவியல் இவற்றை அடக்கி இலக்கியச்சுவை ததும்பப் பாடப்பட்டது

4.3.1 காமத்துப் பாலின் சிறப்பு


உலகத்திலுள்ள எல்லா உயிர்கட்கும் காம உணர்ச்சி இயல்பான ஒன்று; பசிப்பதுபோல், தாகம்
எடுப்பதுபோல் ஏற்படும் ஓர் உணர்வு. மனிதர்கள் ஆணும் பெண்ணுமாகக் கூடி மகிழ்வது உயிர் இயல்பாகும்.
இக்கூடுதலில் விளையும் உள்ளப் புணர்ச்சியையும் உடல் புணர்ச்சியையும் கூறுவது காமத்துப்பால். கூடுதல்
என்னும்போது பிரிதலும் நேர்கிறது. கூடுதலால் தோன்றும் இன்பமும் பிரிதலால் உண்டாகும் துன்பமும் மாறி
மாறி வரும் நிலையினை நெஞ்சை அள்ளும் கவிதை வரிகளால் படைக்கப்பட்டது குறளின் காமத்துப்பால்.
சொல்லித் தெரிவதில்லை காமக்கலை என்பது உண்மையானாலும் மலரினும் மெல்லிய காமத்தை
அதன் செவ்வி தலைப்பட நுகர்வேண்டும் என்று புரிந்து கொள்ளவேண்டும். இதனாலேயே வள்ளுவர்
போன்ற சான்றோர் தூய காமப்பனுவல்களை இலக்கியச் சுவை நிரம்ப இயற்றினர். காமக் கல்வி பெற்றால்
இல்லற வாழ்க்கை இனிய வெற்றி தரும். காமத்துப்பாலை ஓதுவோர் காமத்தின் முழுச்சுவை காண
வல்லவர் ஆவர். 'காமத்துப்பாலின் நுதலும் பொருளைப் பல முறையும் சிந்தித்தால் ஒருகாலைக்கொருகால்
கருத்து ஆழ்ந்து செல்லும் அழகைக் காணலாம்' என்பர் திருமணம் செல்வக் கேசவராயர்.
வள்ளுவர் காமத்துப்பாலில் ஒருதலைக் காமத்தையோ பொருந்தாக் காமத்தையோ கூறவில்லை.
தொல்காப்பியம் கூறிய 'அன்பின் ஐந்திணை' அதாவது ஒன்றுபட்ட காதலர்களிடையே நிகழும் காதல்
ஒழுக்கத்தையே கூறுகின்றார்.
காமத்துப்பாலில் உள்ள 250 பாடல்களும் முழுக்கமுழுக்க அகப்பொருள் சார்ந்தவை. ஆனால ்
இவற்றில் ஒன்றில்கூட இடக்கர்ச் சொல் இடம்பெறவில்லை. புணர்சச ் ியின் வருணனையில் அருவருப்பு
சிறிதும் இல்லை. பால் உறுப்புக்கள் பற்றிப் பேசப்படவில்லை.
ஊடுதல் தொடர்பாகக் காமத்துப்பாலில் புலவி, புலவி நுணுக்கம், ஊடலுவகை என்னும் மூன்று
அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவற்றில் தலைவி ஊடலுக்கான காரணங்களைக் கற்பனை செய்து
கூறுவதாகப் பாடியுள்ளார். வள்ளுவர் இங்கு தன் கலைத்திறன் முழுதும் பயன்படுத்தி ஊடல் இன்பத்தை
காட்சி வடிவில் அமைக்கிறார். அம்மூன்று அதிகாரங்களும் இலக்கியச் செழுமை வாய்ந்த, பொருள்
நயம் மிக்க, கற்பனைக் களஞ்சியமாகத் திகழ்கின்றன. ஊடல் காட்சிகளில் தலைவி தலைவனை
மடக்கி மடக்கி வினா தொடுப்பதும் தலைவன் நிலை தடுமாறி விழித்துத் தவிப்பதும் படிப்பவர்கள்
அக்காட்சிகளை நேரே காண்பது போல் நாடக ஆக்கம் பெற்றுள்ளன. திரும்பத் திரும்பப் படிக்கத்
தூண்டும் படைப்பு இலக்கியமாகத் திகழ்கின்றன அவை.

அ) இருனோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு


நோய்நோக்கொன் றந்நோய் மருந்து ( பரிமேலழகர் உரை, 1091)

பொருள்: இவளின் மையூட்டப்பட்ட கண்களில் என்மேல் இரண்டு நோக்குகள் இருப்பது தெரிகிறது.


ஒரு னோக்கு எனக்குத் துன்பம் தருகிறது. மற்றோன்று அந்தத் துன்பத்திற்கு மருந்த ஆகிறது.

விளக்கம் ; நோய்நோக்கு என்பது பெண்ணின் மனத்திலுள்ள காமக்குறிப்பினை வெளிப்படுத்துகின்ற


நோக்காகும். இதனைக் கண்டதும் தலைமகன் நோய்க்குள்ளாகிறான்; வேதனையடைகிறான்.மருந்தாகிய
நோக்கு என்பது அன்பு நோக்கு. வருத்தமுற்ற தலைமகனைத் தலைமகள் உள்ளங் கலங்கி நாணத்தோடு
நோக்குதலாகும். ஹலைமகளினால் ஏற்பட்ட நோயை அவளேதான் தீர்க்க வேண்டியுள்ளது.

ஆ) கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்


செம்பாகம் அன்று பெரிது ( பரிமேலழகர் உரை, 1092)

பொருள்: நான் பார்காதபோது அவனைப் பார்த்து மகிழும் தலைமகளை மேற்கண்ட குறட்பாக்களில்


பார்த்தோம் அல்லவா? தலைமகன் பாராதபோது பார்ப்பதைக் களவு என்கிறார் திருவள்ளுவர்.
கள்ளத்தனமாக அவள் பார்பதை இவனும் அறிந்து கொள்கிறான். பார்ப்பதோடு மட்டுமல்லாமல் நாணித்
தலை குனிகிறாள்; மெல்ல இசைவோடு முறுவலிக்கிறாள். இக்குறிப்புகளெல்லாம் எதை
உணர்த்துகின்றன? தலைமகன் 'வேண்டப்பட்ட பொருளிர்' ஆதிக்கும் மேல் பெற்று விட்டான் என்பதன்று.
வேண்டப்பட்ட பொருள் என்று இங்குக் குறிப்பிடப்படுவது புணர்ச்சியாகும். தலைமகனின் ஆசைக்கு
இவளிடமிருந்து இசைவு கிடைத்தது மட்டுமின்றி எதிர்ப்பார்ப்பதைவிட அதிகமான இசைவு இவனுக்கு
கிடைக்கின்றது.

5.0 திருக்குறளின் தனிச்சிறப்பு


• திருக்குறள் தமிழ்ச் செய்யுள்களில் முதல் பாவாகிய வெண்பாவில் முதல் வகையாகிய குறட்பாக்களால்
ஆனது.
• திருக்குறளில் முப்பால்களிலும் 120-க்கும் மேற்பட்ட உவமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. திருக்குறளில்
அனிச்ச மலர் 4 முறையும், ய ானை 8 முறையும், ப ா ம ் பு 3 முறையும்
சுட்டப்பட்டுள்ளன.
• “தொடிற்கடின் அல்லது காமநோய் போல விடிற்கடின் ஆற்றுமோ தீ” (1159) என்ற குறள் ஒரே எழுத்தில்
முடிந்துள்ளது.என்ற இந்தக் கொம்பு எழுத்துக்கள் இல்லாமல் 17 குறள்கள் உள்ளன.
• 46 குறள்களில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
• அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, அருளுடைமை,
அறிவுடைமை, ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை, பண்புடைமை, நாணுடைமை என வள்ளுவர்
கூறிய உடைமைகள் 10.
• “ஒருமையுள் ஆமைபோ லைந்தடக்க லாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து” – என்ற குறளில் 1.5.7 என்ற
ப க ா எண ் கள ் கு ற ி ப ி ட ப ் ப ட ் டு ள ் ளன.
• அன்னம்,கூகை (ஆந்தை), கொக்கு, க ா க ்கை , புள்(பறவை), மயில், ஆமை, கயல்
மீன். மீன் (விண்மீன்), முதலை, நத்தம்(சங்கு), ப ா ம ் பு , ந ா க ம ் , என்பிழாது(புழு)
ஆகியன இடம் பெற்றுள்ளன.
• பலோடு தேன்கலந் த்றறே
் பணிமொழி வாலெயி றூறிய நீர் (112) – என ் ற கு றள ி ல ் ப ா ல ் , தேன்,
நீர் என்ற மூன்று நீமங்கள் இடம் பெற்றுள்ளன.
• “ப ற ் று க ப ற ் ற ற ் ற ான ் ப ற ் ற னை
ி அப ் ப ற றை
் ப ்
• பற்றுக பற்று விடற்கு” – என்ற குறளில் ஒரே சொல் 6 முறை இடம் பெற்றுள்ளது.
• ஒரே சொல் 5 முறை 5 கு ற ட ் ப ா க ் க ள ிலு ம ் , ஒரே 4 முறை 22
கு ற ட ் ப ா க ் க ள ிலு ம ் , ஒறே சொல் 3 முறை 27 கு ற ட ் ப ா க ் க ள ிலு ம ் இடம ்
பெற்றுள்ளன.
• 1330 குறட்பாக்களில் எந்த இடத்திலும் கடவுள் என்ற சொல் இடம் பெறவில்லை.
• திருக்குறளில் 50 பிறமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.
• திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
• திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் ஆகும்.
• திருக்குறளில் 'தமிழ்' என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
• திருக்குறல் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812 ஆகும்.
• ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர்களை கொண்டது.
• திருக்குறளில் மொத்தம் 14000 சொற்கள் உள்ளன.
• திருக்குறளில் உள்ள மொத்தம் 42,194 எழுத்துகள் அடங்கியுள்ளன.
• திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை.
• திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
• திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
• திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
• திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதுவ்
• திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
• திருக்குறளில் ஒரு சொல் அதிக அளவில், அதே குறளில் வருவது பற்று” – ஆறு முறை
• திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
• திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
• திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
• திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து-னி
• திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
• திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் ( அகர முதல என தொடங்கும் முதல் குறள்
கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது, இதில் ஆதி பகவன் – என்பது கடவுளை குறிக்கிறது)
• திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்
• திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
• திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
• திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்
• திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
• திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
• திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
• திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
• ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது
• திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.

இன்னும் திருக்குறளின் சிறப்பை அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வளவு சிறப்பு


கொண்ட திருக்குறளை நாம் அடுத்த அடுத்த தலைமுறைக்கு பொக்கிஷமாக பேணிகாத்து
வழங்கவேண்டும். தற்போது மலேசியா நாட்டின் கல்வி கற்றல் தரத்தில் தொடக்கப்பள்ளியிலும்
இடைநிலைபள்ளியிலும் திருக்குறள் அறிவர்; எழுதுவர்; பயன்படுத்துவர் போன்ற திறன்களை இணைத்து
கற்பிக்கப் படுகிறது. மேலும் அவப்போது திருக்குறள் போட்டிகள் பள்ளி அளவில். வட்டார அளவில், தேசிய
அளவில் நடத்தப்படுகிறது.

இது போன்ற பல போட்டிகள் இன்னும் நடத்தப்பட வேண்டும்.

முடிவுரை

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”

திருக்குறளானது தமிழினத்தின் சொத்தாகும். இதனைப் பாதுகாப்பது நமது கடமையாகும்.


இந்த உலகத்திலேயே வாழும் முறைப்படி வாழ்ந்து விட்டால் வானில் உறையும் தெய்வத்திற்கு இணையான
நிலையைப் பெற்று விடலாம் என்கின்றது திருக்குறள். திருக்குறள் கூறும் அறக் கருத்துக்களை வாழ்வில்
பின்பற்றி உயர்வோமாக.

கேள்வி (ஆ)

முன்னுரை
“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்று பிற”
என்கிறார் பொய்யாமொழி புலவர். அதாவது உலகத்தில் மனிதர்களுக்கு
கல்வி தான் சிறந்த செல்வம் ஏனைய செல்வங்கள் இதற்கு இணையாக மாட்டாது
என்பது இதன் பொருள். இதுவே கல்வியின் சிறப்பை தெளிவாக எடுத்து
காட்டுகின்றது. ஏனைய செல்வங்கள் நிலையில்லாதவை அவை எமக்குள்
அறியாமையை உருவாக்கி விடும் ஆனால் கல்வியோ அழிவில்லாத செல்வமாய்
அறிவொளியை உண்டாக்குகின்றது.
மனித வாழ்க்கையில் உயர்வான எண்ணங்களும் உன்னதமான குணங்களும்
எம்முள் தோன்ற வேண்டுமாயின் கல்வி என்பது அவசியம். வாழ்க்கை என்ற
வீட்டில் கல்வி என்ற விளக்கு ஏற்றப்பட்டால் தான் எமது வாழ்வானது
பிரகாசிக்கும்.
இதுவே பிற விலங்குகளிடம் இருந்து மனிதர்களை வேறுபடுத்தி
காட்டுகிறது. இதனையே திருவள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்.
“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனையவர்”
கல்வி தான் ஒரு மனிதனது அறிவு கண்களை திறக்கின்றது. பகுத்தறிவை
உருவாக்கி அவனை வழிநடாத்துகின்றது. எனவே கல்வி மிக அவசியமாகும்.
தொடர்ந்து திருவ்ள்ளுவர் அறிவு பற்றிக் கூறும் சில திருக்குறளை நாம் காண்போம்.

அ) குறள்

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்


உள்ளழிக்க லாகா அரண்

பதவுரை:

அறிவு : அறிவு என்பது


அற்றம் காக்கும் : இறுதி வராமல் காக்கும்
கருவி : (படை)
செறுவார்க்கும் : பகைவர்க்கும்
அழிக்கல் ஆகா : அழிக்க முடியாத
அரண் : பாதுகாக்கும் கோட்டை

பொருள்:

அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயூதம்: பகைவராலும் அழிக்க முடியாத


உட்கோட்டை..

விளக்கம் :

அறிவெண்பது நமக்கு வரக்கூடிய தீங்கிலிருந்து நம்மைக் காக்கும் கருவியாகும். பின்விளைவை


முன்பறிந்து செயற்பட உதவுவது அறிவு. நம் பகைவர்கள் நம்மை அழிக்காமல் நம்மைக் காக்கும் அரணும்
அதுவே என்கிறார் திருவள்ளுவர். அதுவும் எப்படிப்பட்ட அரண்? அகைவன் உள்ளே புகுந்து அழிக்க
முடியாத உள்ளரணாகும். வெளியரன் காக்கத் தவறினாலும் மனிதனின் அறிவு எனும் உள்ளரண்
அவனைத் தீங்கிலிருந்து காத்தருளும் என்கின்றார் வள்ளுவர்.
மேலும், நாட்டின் அரசனையே வழிநடாத்தும் அமைச்சர் சிறந்த கல்வி
அறிவுடையவராகவே இருப்பர். உயர்பதவிகள் பொறுப்புக்கள் கல்வி
அறிவுடையவர்களுக்கே சாத்தியமாகும் ஆகவே கல்வி ஒரு மனிதனை
எப்போதும் மேன்மை அடைய செய்யும்.எனவே நாம் அழிவில்லாத செல்வத்தை
அடைந்து கொள்ள முயற்சி உடையவர்களாக இருக்க வேண்டும்.

ஆ) குறள்

சென்ற இடத்தாற் செலவிடா தீதொரஇ


நன்றின்பால் லுய்ப்ப தறிவு

பதவுரை ;
சென்றவிடத்தால்: (மனத்தை) அது சென்ற புலத்தின் கண்
செலவிடா : போகவிடாமல்
தீது : தீயதிலிருந்து
ஒரீஇ : நீக்கி
நன ் ற ி ன ் ப ா ல ் : நல்லவற்றினடத்து
உய்ப்பது : போகவிடுவது
அறிவாம் : அறிவாம்

பொருள் : மனம் செல்லும் வழியெல்லாம் அதைச் செல்லாவிடாமல், தீமையை விட்டு விலக்கி நல்ல
வழியில் நடத்துவது அறிவு.

விளக்கம் : இக்குறட்பாவில் அறிவின் இலக்கணம் யாது என்று தெளிவுபடுத்துகிறார். மனத்தை அடக்கி


ஆள்வதே தெளிந்த அறிவென்கிறார் திருவள்ளுவர். ‘ மனம் ஒரு குரங்கு' என்பர். அதன்
போக்கிற்கு அதனைப் போகவிடாமல் நாம் தடுக்க வேண்டும். நன்மையெது தீமையெது என்பதை
ஆராய்ந்து தீயவற்றை ஒதுக்கி நல்லவற்றை நாடும் ஆற்றல் பெறுதலே அறிவாகும்.

சிந்தனையை அடக்கியாளும் ஆற்றல் உள்ளவனே அறிவுடையானாகின்றான். மனம் போன போக்கில்


சென்று தீமையை அனுபவிப்பவன் அறிவற்றவனாகின்றான். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினாலும்
மனத்தை அடக்கத் தெரிந்தவனே அறிவாளி.

இ) எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்


மெய்ப்பொருள் காண்ப தறிவு

பதவுரை :
எப்பொருள் : யாதொரு பொருளை
யார்யார்வாய் : ய ா ர ் சொல ் ல
கேட்பினும் : கே ட ் ட ாலு ம ்
அப்பொருள் : அப்பொருளினது
மெய்ப்பொருள் : மெ ய ் ய ா க ி ய ப யனை
காண்பது : காணவல்லது
அறிவு : அறிவாம்

பொருள் ; எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பதே அறிவாகும்.

விளக்கம் : இக்குறளின்வழி அறீவெனப்படுவது யாது என விளக்குகின்றார் திருவள்ளுவர். ய ா ர ் என ் ன


கருத்துக் கூறினாலும் அதன் உண்மையை ஆராய்ந்தறிய வேண்டும். இதனைப் பற்றி விளக்கும்போது
பரிமேலழகர் " உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்
பொருள் பகைவர் வாயினும், கொடுபொருள் நட்டார் வாயிஉம், சொல்பவரது இயல்பு நோக்காது
அப்பொருளின் பயன் நோக்கிக் கொள்ளுதல் அறிவு' என ் க ி ன ் ற ா ர ் . ஒரு கருத்தை யார்
கூறுகின்றார் என்பதைவிட அதில் பொதிந்திருக்கும் உண்மையை ஆராய வேண்டுயொழிய சொல்பவரது
இயல்பைக் கருத்தில் கொள்ளலாகது. சொல்லப்பட்ட பொருளின் நன்மை தீமையை ஆராய்ந்து தீயவற்றை
விடுத்து நல்லவற்றை விடுத்து நல்லவற்றை எடுத்துக் கொள்ளுவதே அறிவு. சுருக்கக் கூறின் பிறர்
சொல்வதில் உண்மைப் பொருளை அறிவதே அறிவாகும்.

தொடர்ந்து, நாம் அறிவுடையோருர்க்கும் அறிவற்றோர்க்கும் உள்ள வேற்றும என்ன என்பதைக் காண்போம்;

முன்னுரை

'அறிவு வளர் அகிலம் ஆழ்” என்பது மூத்தோர் பொன்மொழி. பகுத்தறிவு என்ற ஒரு திறன்

மனிதனிடத்தில் இருப்பதனால் தான் மனிதர்கள் ஏனைய பிற உயிர்களிடமிருந்து வேறுபடுகின்றனர்.ஒரு

மனிதனிடத்தில் உள்ள நல்ல அறிவையும் பண்பையும் கொண்டுதான் அவர்களை இந்த உலகம் அறிகிறது.

தெளிந்த அறிவும் துல்லியமான சிந்தனையும் உடையவர்கள் பெரும் ஆற்றல் உடையவர்களாக

கொள்ளப்படுவார்கள்.நல்லறிவு உடையவர்கள் நயன்மிகு மரம் பழுத்ததை போல எல்லோர்க்கும்

பயனுடையவர்களாக இருப்பார்கள். அறிவுடையவர்களின் ஆற்றல் பிறருக்கும் பலன் தரவல்லது.

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்


என்னுடைய ரேனும் இலர். (430)

அறிவுடையவர் வேறு ஒன்றும் இல்லாதவராக இருந்தாலும், எல்லாம் உடையவராக திகழ்வார்


என்கின்றார் நம் திருவள்ளுவர். மேலும் அறிவில்லாதவர் வேறு எல்லாம் பெற்றிருந்தாலும், ஒன்றும்
இல்லாதவர் ஆவார் என ் று கு ற ி ப ் ப ி ட ் டு ள ் ள ா ர ் . கல்வி அறிவில் சிறந்தவர்கள் ஒரு
சமூகத்தில் உயர்வாக மதிக்கப்படுவார்கள். ஒரு செல்வந்தன் கால சூழ்நிலையால் ஏழையாகலாம் ஆனால்
கல்வி அறிவுடையவன் அவ்வாறு இல்லை தனது நிலையை மேலும் உயர்த்தி கொள்வான்.
இதனை ஒளவையார் கூறுகையில் “மன்னனும் மாசற கற்றோனும் சீர்தூக்கின் மன்னனில் கற்றோன்
சிறப்புடையன் மன்னற்குத் தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு”
என்று கற்றவர்களின் பெருமையை பாடுகிறார்.கல்வி ஏனைய செல்வங்களை விடவும் சிறப்புடைய
செல்வமாக காணப்படுவதற்கு காரணம் அது “வெள்ளத்தால் அழியாது வெந்தழலால் வேகாது
வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவன்றி குறைவுறாது” என அழியாத
செல்வமாகும்.
எனவே நாம் எப்போதும் நிலையான செல்வத்தை அடைந்து கொள்ள ஆவலாக இருக்க வேண்டும்.
“பெற்ற பிள்ளை கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது” என்றார் மகாத்மா காந்தி அடிகள் ஆகவே அழியா
சிறப்புடைய கல்வியின் சிறப்பை நாம் அனைவரும் உணர வேண்டும்.

அறிவு என்பது எல்லா மனிதர்க்கும் அவசியமாகும் அறிவில்லாதவர்கள் துன்பம் நிறைந்த வாழ்வே

வாழ்வார்கள் என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக திருக்குறளில் பின்வருமாறு காணலாம் “அறிவிலார்

தாந்தம்மை பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது” என்று விளக்குகிறார்.அதாவது அறிவு

அற்றவர்கள் தமக்கு தாமே செய்து கொள்ளும் துன்பமானது. அவர்கள் எதிரிக்கு கூட செய்யமாட்டார்கள்

என்று கூறுகிறார்.

கல்வி அறிவினை பெற விளையாதவர்களை திருவள்ளுவர் விலங்குகள் என்று குறிப்பிடுகின்றார்.


கல்வி அறிவு இல்லாதவர்கள் மனித பண்புகள் இன்றி தவறான வழிகளில் செல்வார்கள். அது அவர்களது
அழிவுக்கு வழிவகுக்கும் கல்வி கண்போன்றது. கற்காமல் விடுவது இரு கண் இன்றி வாழ்வதனை
போன்று அமைந்துவிடும். இதனை திருவள்ளுவர் “கண்ணுடையோர் என்போல் கற்றோர் கல்லாதோர்
முகத்திரண்டு புண்ணுடையர்” என்று கல்லாதவர்களை பார்வையிழந்தவர்களாக சுட்டிக்காட்டுவதனூடாக
கற்காமையின் பாதகத்தை எடுத்து காட்டுகிறார்.

கல்லாமையின் விளைவுகளான வேலைஇன்மை,


சுகாதாரக்கேடு, நோய், தாழ்ந்த வாழ்க்கைத்தரம்
எப்படி சமுதாய வீழ்ச்சிக்குக் காரணங்கள்
ஆகின்றன என்பது இன்று நமக்கு நன்றாகவே
தெரியும். ஒர
ுநாட
்ட
ின்வளர
்ச
்ச
ிக்க
ுத்தடையாய
ிரு
ப்
பதில
்அந
்நாட
்டுமக
்கள
ின்
கல்வியின்மை ஒரு முக்கியமான காரணம் என்பதை சமூக/பொருளாதார
வல்லுநர்கள் சுட்டிக்காட்டுவர். வளர்ந்த
நாடுகளில் கல்லாதார் விழுக்காடு
மிகக்குறைவாகவே இருக்கிறது.
கல்லாமை தனிமனிதனை வெகுவாகப் பாதிக்கிறது. எழுதப்படிக்கத்

தெரியாததால் சட்டமீறல்கள் நிகழ்கின்றன; குற்றங்கள்

மிகுகின்றன; வாழ்க்கைத்தரம் தாழ்கிறது. கல்லாதார்

அடிமைகளாகவும், கூலித்தொழில் புரிபவர்களாகவும், இழிவான தொழில்

மேற்கொள்பவர்களாகவும் முடிவுறுகின்றனர்; மூடநம்பிக்கைகள் பெருகுகின்றன; அடுத்த

தலைமுறையும் பாதிப்புக்குள்ளாகின்றது. இக்கூற்றுக்கள் யாவும் கல்லாமை

அதிகார்த்துக் குறட்பாக்களின் கருத்துக்களோடு பொருந்துவனவே. கல்வியின்மை

குறைந்தால் மனிதவளம் மேம்படும். தனி மனிதன் இழிவு நீங்கும்.

சமுதாயம் மகிழ்ச்சியாக இருக்கும். நாடு செழிக்கும்.

அறிவுடைமை என்பது மனிதனுக்கு மிகப்பெரிய அரணாகும். இது எந்த சூழ்நிலையிலும்

அவனை பாதுகாக்கும். திருவள்ளுவர் இதனை விபரிக்கையில் “அறிவற்றங் காக்குங் கருவி

செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்” என்று குறிப்பிடுகிறார்.

நிச்சயமற்ற இந்த உலக வாழ்வில் இறுதிக்காலம் வரையும் காப்பாற்றும் கருவி அறிவு தான் இதனை

பகைவராலும் அழிக்கமுடியாது. இந்த அறிவு மனிதர்க்கு அழிவு வராமல் காக்கும் என்கிறார் டாக்டர் மு.

வரதராசனார்.

ஆகவே மனிதர்க்கு அறவுடைமை மிகப்பெரிய ஆற்றலாகும். இதனை சரியாக பயன்படுத்தி கொள்ளுதல்

நன்மை பயக்கும்.

முடிவுரை

இந்த தரணியில் மனிதர்களாக பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் பிறப்பினால் சமனாவர் இருப்பினும்

அவர்களிடம் இருக்கின்ற பணம், புகழ், செல்வங்கள், ஆடம்பரங்கள், சொத்துக்கள் இவை எல்லாம்

தற்காலிகமாக மகிழ்ச்சியையும் பெருமையையும் கொடுக்கலாம். எனவே மனிதர்கள் இவற்றை

அடைவதற்கே அதிகம் முனைந்து நிற்கலாம்.

ஆனால் அறிவு இவை அனைத்திற்கும் மேலானது இது எந்த காலத்திற்கும் அழியாத பெருமை உடையது.

என்றைக்கும் நம்மை காப்பது அறிவினால் உண்டாகும் ஆற்றல் என்றால் யாராலும் மறுக்கமுடியாது.

You might also like