Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

திருநீறில்லா நெற்றி பாழ்

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
திருமுறை விழாவிற்கு வருகை தந்திருக்கும் இந்து சங்கப் பெரியோர்களே, எங்களின் உரையாற்றும்
திறமைக்குப் புள்ளி வழங்க அமர்ந்திருக்கும் நடுவர்களே, போட்டிக்கு வந்திருக்கும் பெரியோர்களே,
தோழர்களே அனைவர்க்கும் எனது இனிய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன் . நான்
பேசப் போகும் உரையின் தலைப்பு ‘திருநீறில்லா நெற்றி பாழ்’ என்பதாகும்.

‘மந்திரமாவது நீறு’ திருநீற்றின் மகத்துவத்தை உணர்த்தும் முதல்


பாடலாகும். இரண்டாம் திருமுறையில் திருநீற்றுப் பதிகத்தில்
திருஞானசம்பந்தர் நாயனாரால் அருளப்பட்டது. சமயச் சின்னங்களுல்
திருநீறு அணிவது மிகவும் புனிதமானதும் தனித்துவம் வாய்ந்ததுமாகும்.
சைவர்களின் ஆதிசமயமான சிவசத்தியை வழிபடும் சைவ சமயத்தின்
சின்னம் திருநீறு ஆகும்.

தீராத நோயைத் தீர்க்கவல்லது திருநீறு. கூன்பாண்டியன் வெப்பு


நோயினால் அவதியுற்றபோது திருஞானசம்பந்தர் பதிகம் பாடி, திருநீறு
பூசி குணப்படுத்தினார். தலை குளித்த பின்பு திருநீற்றை அணிந்தால் சளி
பிடிக்காது. தலை வலிக்கும்போது திருநீற்றை நீரில் குழைத்துப் பூசினால்
தலைவலி அகன்று விடும். மன சஞ்சலம், மன உளைச்சல் ஏற்படும்
வேளைகளில் கைக் கால்களைக் கழுவி, நெற்றியில் திருநீற்றை
அணிந்து கொண்டால் எல்லா குறைகளும் நீங்கி விடும். திருநீறு
அணிந்து கொண்டால் இனம் புரியாத அமைதியில் மனம் திளைக்கும்
என்பது சித்தர்களின் அருள் வாக்கு.

திருநீறு அணிவதால் கோடி புண்ணியமும் முத்தி பேறும்


கிடைக்கும். திருநீறு நம் உடலில் படும்போது நம்மைச் சுற்றி ஆன்மீ க
அதிர்வலை உருவாகும். திருநீறு அணிந்தால் நல்ல அதிர்வுகளை நமது
உடல் ஏற்கும் வண்ணம் திறன் பெறுகின்றது என்பது அறிவியல்
உண்மையாகும். திருநீறு அணிவதால் நம்மைச் சுற்றிலும் தெய்வகத்

தன்மை உருவாகும். திருநீறு அணிவதால் தீயவற்றிலிருந்து நம்மைத்
தவிர்க்க இயலும்.

புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) திருநீறு அணிந்து கொள்வதால்


வாழ்வின் ஞானத்தை நாம் ஈர்த்துக் கொள்ள முடியும் என்று
மகான்களும் கூறுகின்றார்கள். தொண்டைக் குழியின் (விசுத்தி சக்கரம்)
சத்தியையும் மிகுத்துக் கொள்ள முடியும் என்று சொல்லப்படுகின்றது.
நெஞ்சுக் கூட்டின் மையப் பகுதியில் திருநீற்றை அணிவதன் வழி
தெய்வக
ீ அன்பைப் பெற்றுச் சிறப்புற்று வாழலாம்.
மோதிர விரலால் திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசுவதே சாலச்
சிறந்தது ஆகும். நமது வாழ்க்கையை ஆன்மீ க நெறியில் இட்டுச்
செல்லும் சூட்சமம் இதில் அடங்கியுள்ளதாகப் பெரியவர்கள் நமக்கு
அறிவுறுத்துகின்றார்கள்;

திருநீற்றுப் பதிகத்தில் காணும் ஓர் அழகிய மந்திரம்; இதோ


உங்களுக்காக;

காணவினியது நீறு கவினைத் தருவது நீறு


பேணி யணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆலவாயான் திருநீறே

அனைவர்க்கும் நன்றி; வணக்கம்!

You might also like