Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

திருமூல நாயனார்

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
திருமுறை விழாவிற்கு வருகை தந்திருக்கும் இந்து சங்கப் பெரியோர்களே, எங்களின் உரையாற்றும்
திறமைக்குப் புள்ளி வழங்க அமர்ந்திருக்கும் நடுவர்களே, போட்டிக்கு வந்திருக்கும் பெரியோர்களே,
தோழர்களே அனைவர்க்கும் எனது இனிய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன் . நான்
பேசப் போகும் உரையின் தலைப்பு ‘திருமூல நாயனார்’ என்பதாகும்.

நந்தியெம்பெருமானின் அருளைப் பெற்ற நான்மறைச்


சிவயோகியரில் ஒருவரான ‘சுந்தரநாதர்’ என்பவர் சிவ ஆகமங்களில்
வல்லவராய் விளங்கினார். அவருக்குப் பொதிகை மலையில்
வற்றிருக்கும்
ீ அகத்திய முனிவரைக் கண்டு அவருடன் சில நாள்கள்
தங்கி அளவளாவி மகிழ வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது. பொதிகை
மலைக்குப் புறப்பட்டார் சுந்தரநாதர்.

திருவாவடுதுறை அருகில் அமைந்துள்ள சாந்தனூரில் அவதரித்த


மூலன், ஒரு நாள் வழக்கம்போன்று பசுக்களை மேய்ச்சலுக்காக ஓட்டிச்
சென்றபோது பாம்பு கடித்து இறந்து விட்டான். இறந்துபோன மூலனைச்
சுற்றிப் பசுக்கள் வருந்தி நின்றன. பசுக்களின் கண்களில் கண்ண ீர் வழிந்து
கொண்டிருந்தது. மூலனை நாக்கினால் நக்கியும் உடம்பினால் உராய்ந்தும்
தங்களின் அன்பை வெளிப்படுத்தின. திருநந்தி தேவரின் திருவருள்
பெற்ற நான்மறை சுந்தரநாதர் பொதிகை மலைக்குச் செல்லும் வழியில்
அக்காட்சியைக் கண்டார்.

அவர் பசுக்களின் துயரைப் போக்க எண்ணித் தன் அட்டமா


சித்தியினால் (கூடு விட்டு கூடு பாயும் வித்தை) தன் உடலை விட்டு
நீங்கி இறந்த மூலனுடைய உடலில் புகுந்தார். மூலன் உறங்குபவன்
போல் கண் விழித்துத் திருமூலராய் எழுந்தார். மூலன்
உயிர்தெழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து தம் தொழுவங்கள்
அடைந்தன. ஆனால் மூலன் மட்டும் அவரது வட்டிற்குப்
ீ போக
விரும்பவில்லை.

மூலரின் உடலில் புகுந்த நான்மறை சுந்தரர் மூலரின் மனைவியை


அறியாதது போல் நின்றதால் மூலரின் மனைவி ஐயப்பட்டு ஊரைக்
கூட்டினாள். யோக நிலையில் அமர்ந்திருந்த திருமூலரின் முகத்தில்
தெய்வ சத்தி தாண்டவமாடுவது போன்ற தனிப்பிரகாசத்தைக் கண்டு
அனைவரும் திகைத்து நின்றனர். அனைவரும் மூலர் ஞான நிலை
அடைந்து விட்டார் என்று மூலனின் மனைவியிடம் கூறினர். அவர்கள்
மொழிந்ததைக் கேட்ட மூலனின் மனைவி வேதனையோடு வடு

திரும்பினாள்.

சற்று நேரத்தில் யோகநிலை தெளிந்த திருமூலர், மறைவான


இடத்தில் வைத்திருந்த தன் திருமேனியைத் தேடிச் சென்றார். அங்கு
அது காணாது போகவே அவர் இது ஈசனின் செயல் என்று எண்ணினார்.
இறைவன் அருளிய ஆகமப் பொருளைத் தமிழில் வகுத்து உலகோர்க்கு
உணர்த்த வேண்டும் என்பதற்காகவே முக்கண்ணனார் தம் உடலை
மறைத்தருளினார் என்பதையும் உணர்ந்து கொண்டார். ஆகவே
திருமூலரின் உடலிலேயே நிலை பெற்றுத் திருவாவடுதுறையில் ஒரு
பெரிய அரச மரத்தடியில் சிவயோகத்தில் அமர்ந்து பாடல்களை
அருளினார். அதுவே திருமந்திரம் எனப்படும்.

சிவயோக நுணுக்கங்களைக் விளக்கமாகக் கூறும் திருமந்திரம் ஓர்


அற்புதமான அற நூல் ஆகும்; ஆகமங்களின் சாரமும் ஆகும். இது
ஒன்பது மந்திரங்களாக அமைந்துள்ளது. பன்னிரு திருமுறைகளில்
பத்தாம் திருமுறையாக விளங்குவது இத்திருமந்திரமாலையாகும்.
இந்நூல் சைவ சித்தாந்த சாத்திரங்கள் அனைத்திற்கும் முற்பட்டது என்று
கூறி எனது உரையை முடிக்கின்றேன்.

அனைவர்க்கும் நன்றி; வணக்கம்!

You might also like