Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 7

வசந்த் அண்ட் கோ - உள்ளுறுதி 4

மாசம் 70 ரூபாய் சம்பளத்துக்கு ஒரு சேல்ஸ்man அஹ வேலைக்குச் சேர்ந்த


ஒருத்தர் இன்னைக்கு வருஷத்துக்கு 1,000 கோடி டேர்ன் ஓவர் வாங்குறாரு
ன்னு சொன்னா… என்னங்க தோணும்… அப்டி யாரு இருக்க முடியும்.? சும்ம்மா
motivational காக எதையாச்சும் சொல்லாதீங்க… அப்டின்னு மட்டும்
நெனட்சுராதீங்க… motivational காக மட்டும் இல்லை.. உண்மையாவே அப்டி ஒரு
மனிதர் இருந்தாரு.. நம்ம கூடவே வாழ்ந்துருக்காறு.. அவரு கடையில
நம்மளும் கண்டிப்பான முறையில ஏதோ ஒரு பொருள்
வாங்கிருப்போம்.விஷயம் என்னன்னா இவரோட தொழில் முதல்ல ஒரு
பிரபலமான நிறுவனத்துல சேல்ஸ் man வேலை கிடைக்குது.. சேல்ஸ் man
அஹ சேர்ந்து, அங்க உள்ள ஒரு சைக்கிள் எடுத்துகிட்டு தினமும்..
ஒவ்வொரு தெரு தெருவா. ஒவ்வொரு வட்டுக்கும்
ீ ஏறி இறங்கி.. ஒவ்வொரு
ரேடியோவையும் விக்கணும்.. ஒரு ரேடியோ அப்போலாம் 50 ரூபாய்ல
இருந்து 75 ரூபாய் விக்குமாம். ஒரு வாடிக்கையாளர் அதை வாங்குனா.. 1
வாரத்துக்கு 5 ரூ ன்னு தவணை முறையில குடுத்து, மொத்தம் ஒரு
மாசத்துக்கு 20 ரூ கட்டுவான்கலாம்.. இந்த மாதிரி ஒவ்வொரு ரேடியோ அஹ
வித்து,அதுல இருந்து வந்த collection அஹ தன்னோட அலுவலகத்துல வந்து
ஒப்படைக்குறது தான் இவரோட வேலை.. மாசம் 70 ரூபாய் சம்பளம். இப்பிடி
70 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்து இன்னைக்கு வருஷத்துக்கு பல
கோடி டேர்ன் ஓவர் வச்சு.. தமிழ்நாடு, பாண்டிச்சேரி, பெங்களூர் ன்னு
தன்னோட சொந்த நிறுவனத்தை வளர்த்தெடுத்த தமிழகத்தின் தென்
கோடியான கன்யாகுமரியில் பிறந்து, இன்னும் நம் மனசுலயும் , ஒவ்வொரு
வட்டுலயும்
ீ சிரித்த முகத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கக் கூடிய
ஒருத்தரின் வாழ்க்கை போராட்டத்த தான் இன்னைக்கு நம்ம தேநீர்
இடைவேளையின் உள்ளுறுதி நிகழ்ச்சியில பார்க்கப் போறோம்..!

சரி.. 70 ரூபாய் சம்பளம்..யாருக்கா இருந்தாலும் எடுத்த ஒடனே வேலைக்கு


சேர்ந்ததும்..ஒரு வியாபாரம் எப்படி பண்ணனும் அப்டின்ற எண்ணம்
வந்துடுமா? எந்த வட்டுக்கு
ீ போனா நம்ம வச்சுருக்க பொருள
வாங்குவாங்கனு தெரியனும், எப்டி பேசுனா அவங்கள வாங்க வைக்கலாம்னு
கத்து இருக்கணும்.. நம்ம கிட்ட இருக்குற பொருள் customer kku எந்த
வகையில எப்படி தேவைப்படும்னு பேசி புரிய வைக்கணும்.. இதெல்லாம்
தெரிஞ்சா தான்.. Sales man தொழில்ல வெற்றி அடைய முடியும்.. இன்னைக்கு
நம்ம பார்க்கப் போற ஆளும்…இந்த யுத்திகள் எல்லாம் தன்னோட சின்ன
வயசுல இருந்தே ஊருல திருவிழா வந்தா சர்பத் விக்குறது.. கடை மாதிரி
போடுறது.. பலூன் வியாபாரம் பன்றது.. இப்பிடி ஆரம்பத்துல இருந்தே தன்
உடம்போட ஊறுன ரத்தம்மா இவருக்கு Business Mind இருந்ததால.. சேல்ஸ்
man அஹ வேலை பார்க்க ஆரமிச்சதும் எப்புடியாவது பெரிய ஆளா வரணும்
அப்டின்ற மனசு அவருக்கு உறுத்திகிட்டே இருந்துச்சாம். தன்னோட ஊர
விட்டு சென்னைக்கு வந்து வேலை பார்க்குறவங்களுக்கு இருக்க கஷ்டம்
மாதிரியே, அன்றாட உணவுக்கே கஷ்டப்பட்ட நிலமையில, நேரம் காலம்
பார்க்காமல் கடுமையா உழைட்சாராம். வேலைக்கு சேர்ந்த இடத்துல, வெறும்
தனக்கு குடுத்த வேலைய மட்டும் பார்க்காம, தன்னோட கடின உழைப்ப 8
வருஷம் அந்த கம்பெனி ல போட்டு.. அந்த கம்பெனி ஓட முழு நம்பிக்கைய
பெற்று அடுத்து அடுத்து promotion வாங்கி, இவரு வேலைக்கு சேர்ந்த ஏழு
வருஷத்துல ஒரு விற்பனையாளர்ல இருந்து… ஒரு branch manager பொறுப்பு
வகிக்கும் அளவுக்கு பதவி உயர்வு இவருக்கு கிடட்சுருச்சு.. அப்போது அவர்
வாங்கிய சம்பளம் ரூ.300.. அதுவரைக்கும் சென்னையில் வேலை பார்த்த
இவரை, மும்பை ல இருக்கக் கூடிய ஒரு கிளைக்கு மாத்துறோம் அப்டின்னு
சொன்னாங்களாம்.. யாரா இருந்தாலும் நல்ல சம்பளம்.. நல்ல பிரபலமான
நிறுவனம்.. Promotion லாம் கிடைக்குதுன்னா.. கண்டிப்பா அந்த வேலைய
பார்த்து அதுல பெரிய ஆளா வந்துடணும் ன்னு நெனைப்ப்போம். ஆனா..
நம்ம ஆளு.. தனக்கு இந்த வேலை வேண்டாம்ன்னு எழுதி குடுத்துட்டு.. அந்த
வேலையை விட்டுவிட்டு, சொந்தமாகத் தொழில் தொடங்க முடிவு
செய்யுறாரு.

எட்டு வருஷம் வேலை பார்த்திருந்தாலும், சொந்தத் தொழிலில் முதலீடு


செய்ய அவரிடம் பணம் எதுவும் இல்லை. இந்த நேரத்துல யோசிசுகிட்டே
என்ன பன்றதுன்னு தெரியாம கைய இப்டி பின்னாடி கட்டிக்கிட்டு ரோட்ல
நடந்து போனாராம்.. ஒரு நாள் இவரு சாதரணமா ரோட்ல நடந்து போய்டு
இருந்த அப்போ, ஒரு நண்பர் ரோடுல பார்த்து.. என்ன ஐயா வேலைக்கு
போகலையா.. அப்டின்னு கேட்டான்கலாம்.. இல்ல நான் வேலைய
விட்டுட்டேன்.. நான் இனிமேல் தொழில் செய்து என் காலுல நிக்கப்போறேன்
அப்டின்னு சொன்னாராம்… ஏப்பா நீ சொல்றது எப்புடி சரி வரும்! பணமே
இல்லாம எப்டி ஒரு ஆளு தொழில் செய்ய முடியும்.. அப்டின்னு கேட்டாராம்..
அவரு கேக்குற கேள்வியும் நியாய மானது தான.. தொழில் செய்யணும்
அப்டின்னா.. ஏதோ கையில குறைஞ்சது 1 லட்சம் ஆச்சும் இருக்கணும்..
எதுவுமே இல்லாம இருந்த வேலையும் விட்டுட்டு.. எப்புடி ஒரு ஆளு
தொழில் தொடங்க முடியும்.. இதுக்கு நம்ம ஆளு என்ன பதில்
சொன்னாருன்னா.. அத நடத்தி காட்டுறதுக்காக தான் நான் இப்போ நடந்து
போய்டு இருக்கேன்னு சொன்னாராம். இத கேட்ட அந்த நண்பர் க்கு ஒரு
நம்பிக்கை பரவால ஏதோ மனசுல லட்சியத்தோட தான் பையன்
இருக்குறான். அப்போ சிரிசுகிட்டே சொன்னாராம்.. என்கிட்ட ஒரு கடை
கெடக்குது, அது சும்மா தான் இருக்கு.. அத நீ எடுத்து நடத்து.. அதுக்கான
கடை வாடகைய.. 6 மாசம் கழிச்சு குடுத்தா போதும்னு.. ஒரு மனுஷனுக்கு
ஒரு தூண்டுதல் கிடைக்குது.. சாதாரணமா கிடைச்ச இந்த முதல்
தூண்டுதல்ல எப்புடி சரியா பயன்படுத்துறோமோ, அதுக்கு ஏத்த மாதிரி தான்,
நம்மளோட வெற்றி இருக்கும் அப்டின்னு நம்பி சொந்தமாகத் தொழில்
தொடங்க முடிவு செய்து, தனி ஒருவனாக போராடி வித்தியாசமாகச்
சிந்தித்து, இன்றும் நம் வட்டில்,
ீ நம் மனதில் நம் கண் எதிரே சிரித்த
முகமாய் வாழ்ந்து.. கடின உழைப்பின் மூலம் எதையும் சாதிக்கலாம் என்ற
மிகப் பெரிய வாழ்க்கைப் பாடத்தை நமக்கு கற்றுத் தந்து, இன்று 107
கிளைகளுடன் vasanth and co ங்குற மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தையே
உருவாக்கி வர்த்தகத் துறையில் மாபெரும் சாதனை படைத்த திரு.
ஹரிக்ரிஷ்ணன் வசந்தகுமார் அவர்களின் வாழ்க்கை வரலாறு தான்
இன்னைக்கு நம்ம பார்க்கப் போறோம்.

தன்னோட நண்பர் கிட்ட இருந்து வாங்குன கடைக்கு வசந்த் அண்ட் கோ


ன்னு ஒரு தேவை இல்லைன்னு தூக்கி வசப்பட்ட
ீ ஒரு மரப்பலகையில
எழுதி தன்னோட கடைக்கு ஒட்டி வச்சு அழகு பார்க்குறாரு.. யார் யாரோ
வந்து இந்த கடை ராசியே இல்லாதது.. இதுலையா கடை நடத்த போறன்னு
கேட்டாங்களாம்.. அட போங்க .. ராசிய தூக்கி வசிட்டு
ீ என் முகராசிய வச்சு
நான் ஜெய்க்குறேன் பாருங்க ன்னு சொன்னாராம்.. அவருக்கு மனசு நிறைய
நம்பிக்கை இருக்கு.. ஆனா .. ஒரு வியாபாரத்தை தொடங்க அது போதுமா
சொல்லுங்க.. ஏங்க பணம் இருந்தா தாங்க.. முதல் போட்டு பொருட்களை
வாங்க முடியும்.. அதுக்கே காசு இல்லாம.. தைரியம் மட்டும் வச்சு யாரா
இருந்தாலும் என்னங்க சாதிக்க முடியும்… ஆனா.. சாதிச்சு தன்னோட சிரித்த
முகத்தையே இன்னைக்கு வசந்த் அண்ட் கோ ன்னு ப்ரண்ட் ah மாத்தி
காமிட்சுருக்காறு… இந்த வசந்த குமார்..

வெறும் கடைய மட்டும் போர்டு மாட்டி வச்சு ஒரு ஆளு என்ன வியாபாரம்
பார்த்துட முடியும்.. அடுத்து என்ன பன்றதுன்னு யோசிசுகிட்டே இருந்த
நேரத்துல சரியா தன்னோட நண்பர் chair செய்யுறது இவரு நியாபகத்துக்கு
வருது.. அவங்க கிட்ட இருந்து..
1 chair 25 ரூபாய் ன்னு 4 சார் தவணை முறையில வாங்குவாராம்.. அதை
இவரோட கடையில கொண்டு வந்து போட்டுடு.. எப்டியாச்சும் அங்க
இங்கன்னு அலைஞ்சு, 5 ரூபாய் லாபம் வச்சு 1 chair க்கு 30 ரூபாய்ன்னு .. 3
சார் வித்துடுவாராம்.. இப்போ chair வாங்குனாருல அவரோட நண்பருக்கு 75
ரூபாய் குடுத்துடுவாரம். 15 ரூபாய் இவருக்கு லாபம் ஆம். அடுத்தும் இதே
போல, 4, 5, 6 ன்னு அதே நண்பரோட கடையில தயாரிக்குற எல்லா
பொருளையும் வாங்கி தன்னோட கடையில வச்சு தவணை முறையில
வித்துட்டு வந்துருக்காரு… அதுலையுமே யாராச்சும் சின்ன கடை
வட்சுருகக்வங்க வந்து , என்கிட்டே 15 ரூபாய் தான் இருக்கு, ஒரு சார்
வேணும் னு கேட்டாலும்.. சரி. இப்போ 15 ரூபாய் குடுத்து இந்த chair அஹ
எடுத்துட்டுப் போங்க.. நாளை பின்ன இந்த வழியா வரும் போது டெய்லி
ஒவ்வொரு ரூபாயா குடுத்து.. மீ தி இருக்க 15 ரூபையாயும்
கழிட்சுக்கோங்கன்னு சொல்லுவாராம்.. 15 நாள் கடன் குடுத்து ஒவ்வொரு
ரூபாயா கழிட்சதால extra ஒரு ரூபாய் வாங்கிப்பாராம்.. அப்போ 5 + 1 = 6
ரூபாய் லாபம். அப்போதுலாம் அவரிடம் இருந்தது ஒரே ஒரு சைக்கிள்
மட்டும் தான்.. மடக்கக்கூடிய சேர்கள் அப்போது எல்லோரும் விரும்பி
வாங்கக்கூடிய பொருளாக இருந்தது. இதை வாங்க மக்கள் கிட்ட காசு ஒரு
தடையா இருக்கும்.. ஆனா, தவணை முறையில குடுத்தா வாங்கிக்கக் கூடிய
வியாபாரத்தை மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்கணும்னு.. தன்னோட
சைக்கிள்ல இந்த ஷேர் லாம் எடுத்து கட்டிக்கிட்டு.. சென்னையில
இருக்கக்கூடிய ஒவ்வொரு வட்டுக்கும்
ீ ஏறி இறங்கி ஒவ்வொரு வட்லையா

விக்க ஆரமிட்சாராம். தனியா தொழில் தொடங்குனதுக்கு அப்பறம் இவரோட
முதல் வருமானம் 22 ரூபாய்.. 1970 களில் 22 ரூ ன்றது சின்ன பணம்
கெடையாது. மிகப் பெரிய பணம். கையில கிடைத்த அந்தப் பணத்தில்
சாமானிய மக்களும் எளிய முறையில் வாங்கும் வகையில்… மடக்கி
வைத்துக் கொள்ளும் வயர் சேர், அயர்ன் பாக்ஸ் இந்த மாதிரி
அத்தியாவசியமான பொருட்களை வாங்கி விற்பனை செய்யத்
தொடங்கிருக்காங்க.

இருந்தாலும் எத்தனை நாள் தான் இப்டி ஒவ்வொரு ஆர்டர் அஹ


எடுக்குறது… அடுத்த அடிக்கு நகரணும் ல.. அந்த நேரத்துல ஆசிய
விளையாட்டுப் போட்டிகளை மக்கள் டி.வி-களில் பார்த்து ரசிசுருக்காங்க..
நம்ம இந்தியா எந்த பாயிண்ட் வாங்குதுன்னு ஆவலோட பார்க்குறதுக்கு டிவி
தேவை பட்டுச்சு.. இதை சரியா பயன்படுத்தி.. ஒரு நிறுவனத்தின்
ஊழியர்களுக்கு தவணை முறையில் டிவி குடுக்குறோம், அதுக்கான ஆர்டர்
வேணும்னு ஒரு பெரிய famous ஆன நிறுவனத்தின் அதிகாரிய தேடி டெய்லி
இரண்டரை மணி நேரம் கஷ்டம் பார்க்காமல், சைக்கிள் அழுத்திட்டு போய்..
அந்த நிறுவனத்தின் உயரதிகாரிகளைத் தொடர்ந்து பல தடவை பார்த்துட்டே
இருந்தாராம்.. ஆனால், ஆர்டர் எதுவும் கிடைத்தபாடில்லை.. மறுபடியும்
மறுபடியும், அவங்க முன்னாடி போய் கஷ்டம் பார்க்காம போய் நின்னதால..
960 கலர் டிவிகளுக்கான ஆர்டர் அவருக்கு ஒரே நேரத்தில் கிடைத்தது...
தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே அப்போ யாரும் செய்திராத
சாதனை .. எல்லாரையும் யார் டா அது வசந்த் அண்ட் கோ ன்னு திரும்பி
பார்க்க வச்ச முதல் இடம்..

ஒரு கடிகாரத்துல இருந்து, பீரோ ல இருந்து, டிவி வரைக்கும் இந்த மாதிரி


நம்ம எந்தப் பொருளை யார் கிட்ட இருந்து வாங்குனாலும் அவங்களுக்கு
சேர வேண்டிய பணத்தை திருப்பி கொடுக்கக் கூடிய, எண்ணம் அப்போ
இருந்தே தொடர்ந்து இருக்குறதால.. எந்தப் பொருளை யார் கிட்ட இருந்து
வாங்குனாலும்.. இந்த மனுஷரா.. நீங்க பொருளை எடுத்துட்டு போங்க வசந்த
குமார் … அப்பறம் பணத்தை குடுங்கன்னு சொல்லுவாங்களாம். ஒரு மனிதன்
ஒரு தயாரிப்பாளர் கிட்ட ஒரு நம்பிக்கைய ஏற்படுத்திகிட்டா அவங்க என்ன
உதவினாலும் நமக்கு பண்ணுவாங்கன்னு நம்பி ஒரு தொழிலை
தொடங்குனவரு தான் இன்னைக்கு வசந்த் அண்ட் கோ ன்னு பெரிய
நிறுவனமா வளர்ந்து நிக்குறதுக்கு காரணம். இன்னைக்கு சுமார் 107
கிளைகளுடன் இயங்கி வரும் வசந்த் அண்ட் கோ வின் வளர்ச்சி என்பது
சாதாரணமா வந்தது இல்லை.. எளிய குடும்பத்தில் பிறந்து வசந்தகுமார்
விற்பனையாளராகத் தன் தொழிலைத் தொடங்கி, ஒவ்வொரு
தடைக்கற்களையும் படிக்கற்களாக மாற்றி தானே உருவாக்கி இருக்கிறார்..

ஒவ்வொரு நாள் நைட் தூங்கும்போதும் அன்னைக்கு என்ன நடந்துச்சு,


அன்னைக்கு நம்ம என்ன தப்பு பண்ணுனோம்.. அதை எப்புடி நான்
திருத்திக்கணும்.. வேற யாரையும் குறை சொல்லாம என்னால எப்டி
மாத்திக்க முடியும்னு யோசிச்சு அந்த நைட் ஒரு தெளிவு வந்ததுக்கு அப்பறம்
தான், தூங்குவாராம்.. அடுத்த நாள் காலையில எந்திரிக்கும் போது ஒரு
தெளிவோட, நல்ல ஒரு புது உற்சாகத்துல எதையும் என்னால் தாங்க
முடியும், எதையும் என்னால் எதிர்கொள்ள முடியும்னு செயல்படுவாராம்.
இதனால நானும் மகிழ்ச்சியாக இருக்குறேன்.. என்னாலையும் மத்தவங்க
மகிழ்ச்சியா இருக்காங்கனு வெகுளியோட சிரிச்சுட்டே சொல்ற ஒரு interview
அஹ பார்க்கும் போதே… ச்சா இப்டி ஒரு மனுஷனானு பெருமை படுற
அளவுக்கு இருக்குதுங்க…

குறிப்பிட்ட அளவு பணத்தை முதலில் தந்து, பொருளை வாங்கி, மீ தமுள்ள


பணத்தை மாதம்தோறும் கட்டும் தவணை முறையை அப்போ மக்கள்
நிறையவே விரும்பினார்கள். பலரும் இந்த முறையில் டிவி,
வாஷிங்மெஷின், ஃப்ரிஜ் இந்த மாதிரியான பொருள்களை வாங்க
ஆரமிட்சதும்.. வசந்த் அண்ட் கோவின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு
கொஞ்சம் கொஞ்சம்மா அதிகமா ஆகிருச்சு.. ரூ.22 முதலீட்டில் ஆரம்பித்த
தொழில் இன்று ஆண்டுதோறும் பல கோடி விற்று முதலுடன் சிறப்பாக
இயங்கி வருகிறது. அது மட்டும் இல்லாம வசந்த் அண்ட் கோல ஏறக்குறைய
1000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வர்றாங்க.. இவரின்
கடையின் வெற்றிச் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் தனி ஒரு மனிதனாக,
உள்ளத்துல உறுதியோடு போராடுன வசந்தகுமாரின் உழைப்பு மட்டுமே
மூலதனமா நமக்கு தெரியுது..

அப்பறம் என்னங்க.. இது தான் formula.. ஒரு வேலைய முடிக்குற மனசும்..


நம்ம கிட்ட கடின உழைப்பும்…. நான் நல்லவன் … நாணயமா நடந்துப்பேன்
அப்டின்ற நம்பிக்கைய மத்தவங்க கிட்ட நம்ம ஏற்படுத்திட்டாலே வெற்றி
தான் கிடைக்கும். “எல்லார் கிட்டயும் திறமை இருக்கு.. அந்த திறமைய
சரியா பயன்படுத்துறவன் தான் மனிதன்.. அவன் தான் வாழ்கையில வெற்றி
பெற முடியும் . அந்த திறமைய பயன்படுத்தாம.. சோம்பேறியா, எல்லாம்
எனக்கு தெரியும் ன்னு நினைக்கும்போது தான் ஒருத்தர் வளர்றது கஷ்டம்”
திரு. வசந்த் குமார் அவர்களின் வாழ்க்கை போராட்டத்தில் இருந்து நம்ம
தெரிஞ்சுக்கக்கூடிய முக்கியமான விஷயம்.

இதே போல உள்ளத்துல உறுதியோட போராடி வெற்றி பெற்ற


இன்னொருத்தரைப் பற்றி அடுத்த தேநீர் இடைவேளையின் உள்ளுறுதி
நிகழ்ச்சியில பார்ப்போம்!

நன்றி..

You might also like