Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 12

சக்சஸ் கோச்சிங் சென்டர் - சித்தனி ( 9677357699 )

தமிழ்

கம்பராமாயணம்

- கம்பர்

ஆசிரியர் குறிப்பு :

# கம்பர் பிறந்த ஊர் - தேரழுந்தூர் ( நாகை மாவட்டம் )

# கம்பரின் தந்தை - ஆதித்தன்

# கம்பர் தோன்றிய மரபு - உவச்சர் மரபு

# கம்பர் புலவராக விளங்கிய அவை - இரண்டாம் குலோத்துங்க


சோழன் அவை

# கம்பரை ஆதரித்த வள்ளல் - திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப


வள்ளல்

# கம்பரால் தன் நூலில் 1000 வரிகளுக்கு ஒரு முறை போற்றப்படும்


வள்ளல் - சடையப்ப வள்ளல்

# கம்பரின் மகன் - அம்பிகாபதி

# கம்பரின் மகன் அம்பிகாபதி இயற்றிய நூல் - அம்பிகாபதி கோவை

# கம்பரின் மகள் - காவேரி

# கம்பர் வாழ்ந்த காலம் - கி.பி. 12 ஆம் நூற்றாண்டு

# கம்பரின் சிறப்பு பெயர்கள் : [ கம்பநாடன், கம்பநாட்டாழ்வார்,


கவிச்சக்கரவர்த்தி, செய்நன்றி மறவா இயல்பினன், அரையன், வர்மன்,
பொன்னுக்கு பாடியவர், கம்ப நாட்டு ஆழ்வான். ]
# கம்பர் இயற்றிய நூல்கள்:

* கம்பராமாயணம்

* சடகோபர் அந்தாதி

* ஏரெழுபது

* சிலையெழுபது

* சரஸ்வதி அந்தாதி

* திருக்கை வழக்கம்

# கம்பர் எழுதிய நூல்களில் உழவுத் தொழிலைப் பற்றி குறிப்பிடும்


நூல்கள் :

* திருக்கை வழக்கம்

* ஏரெழுபது

# கம்பரின் சமகால புலவர் - சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி.

# கம்பரின் பெருமைகள் :

* கல்வியில் பெரியவர் கம்பர்

* கம்பன் வட்டுக்
ீ கட்டுத்தறியும் கவிபாடும்.

* விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்.

# கம்பர் அதிகமாக பயன்படுத்திய அணி - தற்குறிப்பேற்ற அணி

# கலைமகளை போற்றிப் பாடிய நூல் - சரசுவதி அந்தாதி

# நம்மாழ்வாரை பற்றி பாடியது - சடகோபர் அந்தாதி

# கம்பராமாயணம் "மானுடம் பாடும் காப்பியம்" என


சிறப்பிக்கப்படுகிறது.
# சிந்தாமணிக் கடலில் சிறிது மொண்டுகொண்டேன் என்று கூறியவர் -
கம்பர்

# வடமொழி எழுத்தையும், பிற மொழி கலப்பையும் தடுத்தவர் - கம்பர்

# "ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணிலும் உளன்" என்று கூறியவர் -


கம்பர்

# "உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் நிலைபெறுத்தலும்


நிக்கலும்" என்று பாடியவர் - கம்பர்

# உலகம் தோன்றிய போதே தோன்றிய தமிழை அதன் தொன்மை


கருதி "என்றுமுள தென்தமிழ்" என்று கூறியவர் - கம்பர்

# கம்பரின் சமாதி உள்ள இடம் - நாட்டரசன்கோட்டை

# கம்பராமாயணம் பாடல் வரிகள் :

* அன்னவன் உரை கேளா

அமலனும் உரை நேர்வான்

* துன்பு உளதெனின் அன்றோ

* அன்பு உள, இனி, நாம் ஓர்

ஐவர்கள் உளர் ஆனோம்.

* குகனோடு ஐவர் ஆனேம்

* விடுநனி கடிது என்றான் மெய் உயிர் அணையானும்

நூற்குறிப்பு :

# ராமனது வரலாற்றைக் கூறும் நூல் ராமாயணம் எனப்பட்டது.

# வான்மீ கி முனிவர் வடமொழியில் எழுதிய இராமாயணத்தைத்


தழுவி கம்பர் அதனைத் தமிழில் இயற்றினார்.
# ராமாயணத்தை தழுவி எழுதிய நூல் ஆதலால் கம்பராமாயணம் வழி
நூலாகும்.

# கம்பர் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம் எனப்பட்டது.

# கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இராமாவதாரம் எனப் பெயரிட்டார்.

# இதுவே முதல் இதிகாச நூல்.

# தமிழின் மிகப்பெரிய நூல் கம்பராமாயணம்.

# கம்பர் தனது ராமாயணத்தை அரங்கேற்றிய இடம் - ஸ்ரீரங்கம் (


திருவரங்கம் ).

# கம்பராமாயணத்திற்கு இராமகாதை அல்லது ராம அவதாரம் எனும்


பெயரை சூட்டி இருக்கலாம் என சிறப்பாயிரம் கூறுகிறது.

# கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள் : 6 ( காண்டம் - பெரும்


பிரிவு )

1. பால காண்டம் - 24 படலம் ( குழந்தைப்


பருவம் )

2. அயோத்தியா காண்டம் - 13 படலம் ( திருமண வாழ்வு )

3. ஆரண்ய காண்டம் - 13 படலம் ( வனவாசம் )

4. கிட்கிந்தா காண்டம் - 17 படலம் ( சீதையைப் பிரிதல் )

5. சுந்தர காண்டம் - 14 படலம் ( அனுமனை


குறித்தது )

6. யுத்த காண்டம் - 42 படலம் ( ராமன் ராவணன் )

# கம்பராமாயணத்தில் 118 படலங்கள் உள்ளன. ( படலம் - உட்பிரிவு)

# கம்பராமாயணம் 10,589 பாடல்களை உடையது.


# ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட காண்டம் - ( உத்தர காண்டம் - 7 வது
காண்டம் )

# முதற் படலம் - ஆற்றுப்படலம்

# இறுதி படலம் - விடை கொடுத்த படலம்

# கம்பராமாயணத்தை "கம்ப நாடகம்" எனவும், "கம்ப சித்திரம்" எனவும்


கூறுவர்.

# ராம கதைக்கு "ஆதி காவியம்" என்றும் அக்காதையை வடமொழியில்


இயற்றிய வால்மீ கிக்கு "ஆதிகவி" என்ற பெயரும் உள்ளது என்றும்
கூறுவர்.

# தமிழ் இலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி கம்பர் படைப்பில் உச்ச


நிலையை தொட்டது.

# கம்பராமாயணம் "மானுடம் பாடும் காப்பியம்" என


சிறப்பிக்கப்படுகிறது.

கம்பரை போற்றும் சான்றோரின் புகழ் மொழிகள் :

# யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் - பாரதியார்

# கம்பனோடு கவிதை போயிற்று - பாரதியார்

# புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு - பாரதியார்

# உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும்,


கம்பன் காவியமும் இருந்தால் போதும் மீ ண்டும் அதனை புதுப்பித்து
விடலாம் என்று கூறியவர் - கால்டுவெல்

# கம்பன் தமிழுக்கு சிரக்கம்பம் செய்கின்றேன் - அண்ணா.

# " வெயிலுக்கேற்ற நிழலுண்டு வசும்


ீ தென்றல் காற்றுண்டு கையில்
கம்பன் கவியுண்டு " - கவிமணி தேசிய விநாயகம்
# பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளித்தந்த கம்பனுக்கு ஈடு இன்னும்
வித்தாகவில்லை - கண்ணதாசன்.

# " கண்ணி தமிழனுக்கு வேணுமேயடா - உயிர்க்

கம்பன் கவி எனக்கு வேணுமேயடா " - க. சச்சிதானந்தன்

# கம்பராமாயணம் இலியாது, ஏன ீது, துறக்க நீக்கம், மகாபாரதம்


போன்றவற்றை வெல்லும் சிறப்புடையது என்பது மட்டுமின்றி தனக்கு
முதல் நூலான வால்மீ கி ராமாயணத்தை விஞ்சும் சுவையுடைய
காப்பியமாகும் - வ.வே.சு.ஐயர்.

# " வால்மீ கியின் வடமொழி காப்பியத்தை கம்பர் அவ்வாறே


மொழிபெயர்க்கவில்லை அதன் சிறப்புகளை எல்லாம் எடுத்துக்கொண்டு
ஆழ்வார்களின் பக்தி பாசுரங்களையும் பின்பற்றி தமிழரின் நாகரிக
பண்பாட்டுக்கு ஏற்ப சில மாற்றங்களும் செய்து கொண்டு வந்து
இந்நூலைப் படைத்துள்ளார் - முனைவர் தமிழண்ணல்.

# தமிழுக்கு கதி என்று குறிப்பிடும் நூல்கள் - திருக்குறள் ,


கம்பராமாயணம்.

* சொல்லின் செல்வன் - அனுமன்

* தள்ளரிய பெருநீதியோன் - பரதன்

* தீராக்காதலன் - குகன்

* மூரிய தேர்வலன் - சுமத்திரன்

* எண்ணிம் பெரியன் - கும்பகர்ணன்

* கதிரோன் மைந்தன் - சுக்ரீவன்

* நாய் அடியேன் - குகன்

* தாயினும் நல்லான் - குகன்


* யாதினும் இனிய நண்பன் - குகன்

* நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு - சீதை ராமனிடம் கூறியது

* ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா - பரதனைப்


பற்றி குகன் கூறியது.

* ராமனால் தம்பிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் - மூன்று பேர். (


குகன், சுக்ரீவன், வடணன்
ீ )

* ராமன் மனைவி - சீதை

* சீதைக்கு ஜானகி , மைதிலி என்று வேறு பெயரும் உண்டு.

* தேவ அசுரர் போர் 18 வருடம் நடந்தது.

* ராமாயண போர் 18 மாதம் நடந்தது.

* மகாபாரதப் போர் 18 நாள் நடந்தது.

* செங்குட்டுவனின் வடநாட்டுப் போர் 18 நாழிகை நடந்தது.

* ராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நடைபெற்ற இடம் - மிதிலை

* ராமனின் வனவாசம் - 14 ஆண்டுகள்

* ராமனின் வில் - கோதண்டம்

* ராமன் அனுமனிடம் கொடுத்து அனுப்பியது - கணையாழி(மோதிரம்)

* சீதை அனுமனிடம் கொடுத்து அனுப்பியது - சூடாமணி

* இலங்கையில் சீதை இருந்த இடம் - அசோகவனம்

* ராமனுக்கு சீதையிடம் தூது சென்றவர் - அனுமன்

* ராமனுக்கு ராவணனிடம் தூது சென்றவன் - அங்கதன்

* அங்கதன் தூது வால்மீ கி ராமாயணத்தில் இல்லை.

* இரணியவதம் வால்மீ கி ராமாயணத்தில் இல்லை.


* கங்கை பகுதியிலிருந்த வேட்டுவத் தலைவன் - குகன்

* குகனின் தலைநகரம் - சிருங்கிபேரம்

* குகனின் பறை - துடிப்பறை

* கிஷ்கிந்தையை ஆண்டவன் - வாலி

* வாலியின் தம்பி - சுக்ரீவன்

* வாலியின் மகன் - அங்கதன்

* சுக்ரீவன் அமைச்சர் - அனுமன்

* ராவணனின் மகன் - இந்திரஜித்

கம்பராமாயணம் சொற்பொருள் : (12 - ம் வகுப்பு)

# அமலன் - ராமன்; இளவல் - தம்பி; நளிர் கடல் - குளிர்ந்த கடல்; துன்பு -


துன்பம்; உன்னேல் - எண்ணாதே.

# அனகன் - ராமன்; உவா -அம்மாவாசை; உடுபதி - சந்திரன் ; செற்றார் -


பகைவர் ; கிளை - உறவினர்.

இலக்கண குறிப்பு :

* உளது - இடைக்குறை

* மாதவம் - உரிச்சொற்றொடர்

* தாழ்கடல் - வினைத்தொகை

* செற்றவர் - வினையாலணையும் பெயர்.

2. பெரியபுராணம்

# ஆசிரியர் பெயர் : சேக்கிழார்


# இயற்பெயர் : அருண்மொழித்தேவர்

# காலம் : 12 ஆம் நூற்றாண்டு

# ஊர் : குன்றத்தூர் ( காஞ்சிபுரம் மாவட்டம் )

# மரபு : வேளாளர் மரபு

# சேக்கிழார் தலைமை அமைச்சராக விளங்கிய அரசவை - இரண்டாம்


குலோத்துங்க சோழன் அரசவை

# சேக்கிழாருக்கு கோவிலும் மடமும் அமைந்துள்ள இடம் - குன்றத்தூர்

# சேக்கிழார் பெரியபுராணத்தை அரங்கேற்றிய இடம் - தில்லை நகர்


(சிதம்பரம்)

# பெரிய புராணம் எனும் சொற்கோவில் எழுப்பிய இவர் கற்கோவில்


எழுப்பிய இடம் - திருநாகேஸ்வரம் (குன்றத்தூர்)

# திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் சைவத்தின் இரு கண்கள்


என கூறியவர் - சேக்கிழார்

# சேக்கிழாரின் சிறப்பு பெயர்கள் : தெய்வ சேக்கிழார், தொண்டர் சீர்


பரவுவார், உத்தம சோழ பல்லவராயன்.

# தனியடியார்கள் 63 பேர், தொகையடியார்கள் 9 பேர், ஆக மொத்தம்


சிவனடியார்கள் 72 பேர் ஆவார்கள்.

# அவ் அடியார்களின் வரலாற்றை கூறுவதே பெரியபுராணம்.

# இந்நூலுக்கு சேக்கிழார் இட்ட பெயர் - திருத்தொண்டர் புராணம்

# இந்நூல் "திருத்தொண்டர் மாக்கதை" எனவும் போற்றப்படுகிறது.

# பன்னிரு திருமுறைகளில் பன்னிரண்டாம் திருமுறை - பெரியபுராணம்

# திருத்தொண்டர் புராணம் ஓர் சார்பு நூல் அல்லது வரிநூல்.

# தமிழின் இரண்டாவது தேசியக் காப்பியம் ஆகும்.


# தமிழின் முதல் கள ஆய்வு நூலாகும்.

# பெரியபுராணம் 2 காண்டம், 13 சருக்கம், 4286 பாடல்களைக்


கொண்டது.

# காண்டங்கள் பெயரை அறிய முடியவில்லை.

# கடைசி சருக்கம் - வெள்யானை சருக்கம்

# 63 நாயன்மார்களில் மூன்று பேர் பெண்கள் :

1. காரைக்கால் அம்மையார்

2.இசைஞானியார்

3.மங்கையற்கரசியார்

# இறைவனால் "உலகெலாம்" என அடியெடுத்துக் கொடுத்துப்


பாடப்பட்ட நூல் - பெரியபுராணம்

# பெரியபுராணம் - இடைகால நூல்

# பெரிய புராணம் வடமொழியில் சிவபக்த விலாசம், உபமன்யு


விலாசம் என்ற பெயர்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பெரியபுராணத்தின் சிறப்புகள் :

# பக்தி சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி வலவ - மீ னாட்சி


சுந்தரம் பிள்ளை

# உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும்


காவியம்தான் பெரியபுராணம் - திரு.வி.க

# தன் வட்டில்
ீ உள்ள அனைத்து பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் என
பெயர் சூட்டியவர் - அப்பூதி அடிகளார்

மேற்கோள் :

" கூடும் அன்பினால் கும்பிடலே அன்றி


வடும்
ீ வேண்டா விறலின் விளங்கினார் "

" ஆட்சியில் ஆவணத்தில் அன்று மற்று அயலார் தங்கள்

காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் "

" பிறவாமை வேண்டும் மீ ண்டும் பிறப்பு உண்டேல்

உன்னை என்றும் மறவாமை வேண்டும் "

- சேக்கிழார்

ராவண காவியம்- புலவர் குழந்தை

நூல் குறிப்பு ;

# இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ் பெருங்காப்பியம் -


ராவண காவியம்

# ராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராக படைக்கப்பட்ட ராவணனை


முதன்மை நாயகனாக கொண்டு அமைக்கப்பட்டது இந்நூல்.

# ராவண காவியம் 5 காண்டங்களை உடையது.

( தமிழக காண்டம், இலங்கை காண்டம், விந்த காண்டம், பழிபுரிக்


காண்டம், போர் காண்டம். )

# படலங்கள் - 57

# பாடல்கள் - 3100

ஆசிரியர் குறிப்பு :

* ஆசிரியர் : புலவர் குழந்தை

* பெற்றோர் : முத்துசாமி - சின்னம்மை

* ஊர் : ஓலவலசு (ஈரோடு மாவட்டம்)

* காலம் : 1906 - 1972


* மனைவி : முத்தம்மை

* படைப்புகள் (34) : செய்யுள் நூல்கள் 13, உரைநூல்கள் 3, இலக்கண


நூல்கள் 3, உரைநடை நூல்கள் 15.

* பணி. : ஆசிரியராகவும், பின்னர் தலைமை ஆசிரியராகவும்


பணியாற்றினார்.

* சிறப்பு : தம்முடைய பத்தாவது வயதிலேயே கவிபாடும் திறன்


பெற்றார் தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கு இணங்க 25 நாட்களில்
திருக்குறளுக்கு உரை எழுதினார்.

# "இராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி.


புரட்சி பொறி உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்" - அறிஞர்
அண்ணா

* செய்யுள் நூல்களில் முதன்மையானது ராவண காவியம்.

* உரை நூல்களில் முதன்மையானது திருக்குறள்.

* உரை இலக்கண நூல்களில் முதன்மையானது யாப்பதிகாரம்.

* உரைநடை நூல்களில் முதன்மையானது தொல்காப்பியர் காலத்தமிழ்.

You might also like