Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 12

சக்சஸ் கோச்சிங் சென்டர் - சித்தனி ( 9677357699 )

ஆறாம் வகுப்பு - தமிழ் ( 2 )

துன்பம் வெல்லும் கல்வி - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

# ' மக்கள் கவிஞர் ' என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.

# எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப்


பாடியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

# இவர் செங்கப்படுத்தான்காடு என்னும் ஊரில் பிறந்தவர்.

# 1954 ஆம் ஆண்டு 'படித்த பெண்' எனும் திரைப்படத்துக்கு


முதன்முறையாக பாடல் எழுதினார்.

கல்விக்கண் திறந்தவர் - காமராஜர்

# கல்விக்கண் திறந்தவர் என்று தந்தை பெரியாரால் பாராட்டப் பட்டவர்


- காமராசர்

# காமராசரின் சிறப்பு பெயர்கள் :

* பெருந்தலைவர்

* படிக்காத மேதை

* கர்மவரர்

* கருப்பு காந்தி

* ஏழைப்பங்காளர்

* தலைவர்களை உருவாக்குபவர்

# காமராசரின் கல்விப் பணிகள் :

* இலவச கட்டாய கல்வி சட்டத்தை இயற்றினார்.

* மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.


* சீருடை திட்டத்தை அறிமுகம் செய்தார்.

* பல கிளை நூலகங்களை தொடங்கினார்.

# கல்வி புரட்சிக்கு வித்திட்டவர் - காமராசர்

# காமராசருக்கு செய்யப்பட்ட சிறப்புகள் :

* மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர்


பல்கலைக்கழகம் என பெயர் சூட்டப்பட்டது.

‌* நடுவன் அரசு 1976 இல் பாரத ரத்னா விருது வழங்கியது.

* காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் மற்றும் விருதுநகர் இல்லம்


ஆகியன அரசுடமையாக்கப்பட்டு நினைவு இல்லங்கள் ஆக
மாற்றப்பட்டன.

* சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.

* சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராசர்


பெயர் சூட்டப்பட்டுள்ளது.

* கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 2.10.2000 ஆம்


ஆண்டு அமைக்கப்பட்டது.

* ஆண்டுதோறும் காமராசர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் நாள்


கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.

நூலகம் நோக்கி....

# ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் சீனாவில் உள்ளது.

# இந்திய நூலகவியலின் தந்தை இரா. அரங்கநாதன்.

# சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் இரா. அரங்கநாதன் விருது


வழங்கப்படுகிறது.

# நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்கள் சிலர் - அறிஞர்


அண்ணா, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ்.
* காமராசர் பிறந்த நாள் 15 ஜூலை 1903 ( கல்வி வளர்ச்சி நாள் )

* டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் 5 செப்டம்பர் 1888 (


ஆசிரியர் நாள் )

* அப்துல் கலாம் பிறந்த நாள் 15 அக்டோபர் 1931 ( மாணவர் நாள் )

* விவேகானந்தர் பிறந்த நாள் 12 ஜனவரி 1863 ( தேசிய இளைஞர்


நாள் )

* ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் 14 நவம்பர் 1889 ( குழந்தைகள்


நாள் )

# கதை சொல் :

Education - கல்வி

Primary School - தொடக்கப்பள்ளி

Escalator. - மின் படிக்கட்டு

Lift - மின்தூக்கி

E - Mail - மின்னஞ்சல்

Compact Disk - குறுந்தகடு

E - Library - மின் நூலகம்

E - Book - மின் நூல்

E - Magazine - மின் இதழ்கள்

ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளியார்

# ஆசாரக் கோவையின் ஆசிரியர் - பெருவாயின் முள்ளியார்.

# பிறந்த ஊர் – கயத்தூர்


# ஆசாரக்கோவை என்பதற்கு 'நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு' என்பது
பொருள்.

# இந்நூல் பதினெண்கீ ழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

# இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது.

கண்மணியே கண்ணுறங்கு :

# சொல்லும் பொருளும் :

நந்தவனம் - பூஞ்சோலை; பண் - இசை; பார் - உலகம்

# வாய்மொழி இலக்கியங்களும் ஒன்று - தாலாட்டு

# தால் என்பதற்கு நாக்கு என்று பொருள்.

# நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு என்று பெயர் பெற்றது.

தமிழர் பெருவிழா :

# தை முதல் நாளில் திருவள்ளுவர் ஆண்டு தொடங்குகிறது.

# தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்படுகிறது.

# அறுவடைத் திருநாள் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம்


,உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் " மகரசங்கராந்தி" என்ற
பெயரில் கொண்டாடப்படுகிறது.

# பஞ்சாப் - லோரி

# குஜராத், ராஜஸ்தான் - உத்தராயணம்

# தமிழ்நாடு - உழவர் திருநாள்

# வாழ்க்கைக்கு வளம் தரும் மழை கடவுளை வழிபடும் நோக்கில்


அக்காலத்தில் போகிப் பண்டிகை இந்திர விழாவாக
கொண்டாடப்பட்டது.
கலைச்சொல் :

* Welcome - நல்வரவு

* Sculptures - சிற்பங்கள்

* Chips - சில்லுகள்

* Ready made Dress - ஆயத்த ஆடை

* Makeup - ஒப்பனை

* Tiffin - சிற்றுண்டி

நானிலம் படைத்தவன் - முடியரசன்

# முடியரசனின் இயற்பெயர் - துரைராசு

# முடியரசனின் நூல்கள் : பூங்கொடி, வரகாவியம்,


ீ காவியப்பாவை

# " திராவிட நாட்டின் வானம்பாடி " என்று பாராட்டப் பெற்றவர்.

# நானிலம் படைத்தவன் என்ற பாடல் 'புதியதோர் விதி செய்வோம்'


என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

# சொல்லும் பொருளும் :

சமர் - போர்; கழனி - வயல்; மறம் - வரம்;


ீ எக்களிப்பு - பெருமகிழ்ச்சி;
கலம் - கப்பல்; ஆழி - கடல்

# வெள்ளிப் பனிமலையின் மீ துஉலாவுவோம் - அடி

மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் - பாரதியார்

கடலோடு விளையாடு :

# உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும்


பாடல் - நாட்டுப்புறப் பாடல்
# காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால்
இதனை 'வாய்மொழி இலக்கியம்' என்பர்.

# ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு, விளையாட்டுபாடல்கள், தாலாட்டுபாடல்கள்


முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களும் அடங்கும்.

# கடலோடு விளையாடு என்ற பாடல் சு. சக்திவேல் தொகுத்த


'நாட்டுப்புற இயல் ஆய்வு' என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

# நெய்தல் திணை

நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்

மக்கள் : பரதவர், பரத்தியர்

தொழில் : மீ ன் பிடித்தல், உப்பு விளைவித்தல்

பூ : தாழம்பூ

வளரும் வணிகம் :

# துறைமுக நகரங்கள் பட்டினம் என்றும் பாக்கம் என்றும்


குறிக்கப்பட்டன.

# தமிழ் நாட்டின் தலை சிறந்த துறைமுகமாக பூம்புகார் விளங்கியது.

# தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிற நாட்டு உப்பின் கொள்ளை


சாற்றி....

உமணர் போகலும் - நற்றினை

பாலொடு வந்து கூழொடு பெயரும் - குறுந்தொகை

பொன்னொடு வந்து கறியொடு பெயரும் - அகநானூறு

# பழங்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து தேக்கு, மயில் தோகை, அரிசி,


சந்தனம், இஞ்சி, மிளகு போன்றவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி
செய்யப்பட்டன.
# சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம், பட்டு போன்றவை இறக்குமதி
செய்யப்பட்டன.

# அரேபியாவிலிருந்து குதிரைகள் வாங்கப்பட்டன.

# வணிகரை "நடுவு நின்ற நன்னெஞ்சினோர்" என்று பட்டினப்பாலை


பாராட்டுகிறது.

# கொள்வதும் மிகை கொள்ளாது

கொடுப்பதும் குறைபடாது - பட்டினப்பாலை

ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் :

* Currency Note - காகித நாணயம்

* Bank - வங்கி

* Cheque - காசோலை

* Demand Draft - வரைவோலை

* Digital - எண் முறை/ இலக்கமுறை

* Debit card - பற்று அட்டை

* Credit card - கடன் அட்டை

* Online Shopping - இணையவழி பொருள் வாங்குதல்

* E - Commerce - மின் வணிகம்

பாரதம் அன்றைய நாற்றங்கால் - தாராபாரதி

# " புதுமைகள் செய்த தேசமிது

பூமியின் கிழக்கு வாசலிது !

# ' புல்வெளி எல்லாம் பூக்கா டாகிப்

புன்னகை செய்த பொற்காலம்'.


# தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் தாரபாரதி குறிப்பிடும் நூல்
- திருக்குறள்

# தாராபாரதியின் இயற்பெயர் ராதாகிருஷ்ணன்.

# இவர் "கவிஞாயிறு" என்னும் அடைமொழி பெற்றவர்.

# தாராபாரதி இயற்றிய நூல்கள் :

* புதிய விடியல்கள்

* இது எங்கள் கிழக்கு

* விரல்நுனி வெளிச்சங்கள்

* பூமியை திறக்கும் பொன் சாவி

* இன்னொரு சிகரம்

# 'பாரதம் அன்றைய நாற்றங்கால்' என்ற பாடல் "தாராபாரதியின்


கவிதைகள்" எனும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

# நல்லாசிரியருகான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை பெற்றவர்.

தமிழ்நாட்டில் காந்தி

# 1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்தியடிகள் சென்னைக்கு வந்தார்.


ஆங்கில அரசு கொண்டுவந்த ரௌலட் சட்டத்தை எதிர்த்து
கடுமையான போராட்டத்தை நடத்த திட்டமிட்டார்.

# இதுபற்றி ராஜாஜியின் வட்டில்


ீ கருத்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

# காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் -


மதுரை

# தமிழ் நாட்டுக் கவிஞர் - பாரதியார்

# ஜி. யு. போப் எழுதிய 'தமிழ் கையேடு' தம்மை கவர்ந்ததாகவும்


குறிப்பிட்டுள்ளார் காந்தியடிகள்.
# காந்தியடிகளைப் பெரிதும் கவர்ந்த நூல் திருக்குறள்.

# 1937 ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு ஒன்று


நடைபெற்றது. அம்மாநாடு காந்தியடிகள் தலைமை வகித்தார். உ.வே.
சாமிநாதர் வரவேற்பு குழு தலைவராக இருந்தார்.

# உ. வே. சாமிநாதர் 'அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும்' என்று


விரும்பியவர் - காந்தியடிகள்

வேலு நாச்சியார் :

# ராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் -


வேலுநாச்சியார்

# தாய்மொழியாகிய தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலம், பிரஞ்சு,


உருது ஆகிய மொழிகளையும் சிறப்பாகக் கற்றார்.

# சிவகங்கை மன்னர் 'முத்து வடுகநாதரை' மணந்து மகிழ்ச்சியோடு


வாழ்ந்து வந்தார்.

# 'காளையார் கோவிலில்' நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர்


ஆங்கிலேயரால் கொல்லப்பட்டார்.

# வேலுநாச்சியார் ஆங்கிலேயரை வென்று சிவகங்கையை மீ ட்க உறுதி


பூண்டார்.

# வேலு நாச்சியார் திண்டுக்கல் கோட்டையில் தங்கி ஒரு படையை


திரட்டி பயிற்சி அளித்தார்.

# எட்டு ஆண்டுகளுக்கு பின் தனது அமைச்சர் தாண்டவராயன், தளபதி


ஆகிய பெரிய மருது, சின்ன மருது மற்றும் குறுநில மன்னர்கள்
மற்றும் ஹைதர் அலி படையுடன் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிராக
போர் தொடுத்தார்.

# மைசூரிலிருந்து ஹைதர் அலி 5000 குதிரை படை வரர்கள்


ீ வந்தனர்.
# ஆண்கள் படைப்பிரிவுக்கு மருது சகோதரர்களும், பெண்கள்
படைப்பிரிவு குயிலியும் தலைமை ஏற்றனர்.

# வேலுநாச்சியாரின் காலம் 1730 - 1796

# வேலு நாச்சியார் சிவகங்கையின் மீ ட்ட ஆண்டு - 1780

# ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வரப்போர்



புரிந்தவர் - வேலுநாச்சியார்

வ. உ. சிதம்பரனார் :

# இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் ஒருவர் வ. உ. சி

# சுதேசி நாவாய் சங்கத்தை நிறுவியவர் - வ.உ.சி

# வ.உ. சி சென்னைக்கு செல்லும் போது பாரதியாரை சந்திப்பதை


வழக்கமாகக் கொண்டிருந்தார்.

# வ. உ. சி பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்.

# வ.உ.சி அவர்கள் வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத்


தலைவர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார்.

# இவர் புலமை பெற்றிருந்த மொழிகள் தமிழ், ஆங்கிலம்.

பராபரக்கண்ணி - தாயுமானவர்

# பெற்றோர் : கேடிலியப்பர் - கஜவல்லி அம்மையார்

# பிறந்த ஊர் : திருமறைக்காடு (வேதாரண்யம்) நாகப்பட்டினம்


மாவட்டம்

# மனைவி :மட்டுவார்குழலி

# காலம் : 18 ஆம் நூற்றாண்டு

# தோன்றிய குளம் : சைவ வேளாளர் குலம்

# தாயுமானவர் கணக்கராக பணிபுரிந்த இடம் - திருச்சியை ஆண்ட


விஜயரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம்
# தாயுமானவர் பாடிய பாடல் தொகுப்பிற்கு 'திருப்பாடல் திரட்டு' என்று
பெயர்.

# திருப்பாடல் திரட்டு மொத்தம் 56 பிரிவுகள், 1452 பாடல்கள் உள்ளன.

# தாயுமானவர் பாடல்கள் மீ து மிகுந்த ஈடுபாடு கொண்ட இஸ்லாமியர்


- குணங்குடி மஸ்தான் சாகிபு

# தாயுமானவருக்கு மெய்ப்பொருள் ஞானம் வர குருவாக விளங்கியவர்


- திருமூலர் மரபில் வந்த மௌனகுரு

# தாயுமானவர் பின்பற்றிய நெறி - தவநெறி

# பராபரக்கண்ணி 'தாயுமானவர் பாடல்கள்' என்னும் நூலில் உள்ளது.

# இந்நூலை 'தமிழ்மொழியின் உபநிடதம்' என போற்றுவர்.

# கண்ணி என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகை.

தாயுமானவரின் சிறப்பு பெயர்கள் :

* எல்லோரும் இன்புற்று இருக்க வைத்தவர்.

* சமரச சன்மார்க்கத்தை முதலில் பாடியவர்.

* அன்பர் பணி செய்ய ஆர்வம் கொண்டவர்.

* பராபரமே என்ற முத்திரை கொண்டு தன் பாடலை முடிப்பவர்.

தாயுமானவரின் முக்கிய மேற்கோள்கள் :

* " முத்தே பவளமே மொய்த்த பசும் பொற்சுடரே

சித்தேஎன் உள்ளத் தெளிவே பராபரமே"

* கண்ணே கருத்தே என் கற்பகமே கண்ணிறைந்த

விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே..

* அருள் பழுத்த பழம் சுவையே கரும்பே தேனே அமுதே என்


கண்ணே....
"நீ ங்கள் நல்லவர்" - கலீல் கிப்ரான்

# கலில் கிப்ரான் லெபனான் நாட்டை சேர்ந்தவர்.

# கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரை ஆசிரியர், ஓவியர் என பன்முக


ஆற்றல் பெற்றவர்.

# இப்பாடப்பகுதி கவிஞர் புவியரசு மொழிபெயர்த்திருக்கும் தீர்க்கதரிசி


என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

"பாதம்" - எஸ். ராமகிருஷ்ணன்

# எஸ். ராமகிருஷ்ணன் தற்கால தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்


தக்கவர்.

# நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுவர்


இலக்கியங்கள் என இவருடைய படைப்புகள் நீள்கின்றன.

# உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள்


முதலிய ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

# பாதம் என்ற கதை 'தாவரங்களின் உரையாடல்' என்னும் சிறுகதைத்


தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

திருக்குறள் - திருவள்ளுவர்

# ஏழைகளுக்கு உதவி செய்வதே - ஈகை

# பிற உயிர்களின் துன்பத்தை கண்டு வருந்துவது அறிவின் பயன்


ஆகும்.

# உள்ளத்தில் குற்றம் இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.

# பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் பேசுதல் ஆகிய நான்கும்


இல்லாமல் வாழ்வதே - அறம்

You might also like