Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு

நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12,
மஹாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள்.
இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இந்த 96 நாட்களை விட மிக மிக உத்தமமான நாள் என்பது தாய் தந்தையருக்கு சிரார்த்தம் செய்ய
வேண்டி நாள்தான்.

துவாதியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்யும் நாட்களும்
மிகவும் புண்ணியங்களைத் தரும். ஆகவே அதிக புண்ணியங்களைத் தரும் தந்தையரின் சிரார்த்தத்தை
எக்காரணம் கொண்டும் செய்யாமல் விட்டு விடக் கூடாது.

பீஜ (அட்சர) மந்திரம் நமது உடலில் உள்ள சக்கரங்களை இயக்கி சக்தி அளித்து சீராக செயல்பட வைக்கும்
ஆற்றல் உடையது. இதனை பிரயோகிக்கும் இடம் அனைத்திலும் மிகப்பெரிய அதிர்வாற்றலை
உண்டாக்கி அவ்விடத்திலும் அங்குள்ளோரின் ஆன்ம, ஜீவ சக்தியை பெருக்கும். க்லீம், ஸ்ரீம், ஹ்ரீம், ஐம்,
கௌம், க்ரீம், ஹௌம், ஔம், சௌம் என்று ஒன்பது (நவ) அட்சர மந்திரம் உண்டு. அட்சரங்கள்
முன்,பின் இடம் மாறும்போது ஒளியும்,நிறமும்,அதிர்வும் மாறும். இவைகளை சரியான முறையில்
வரிசைபடுத்தி பிரயோகிக்க ஆதீத ஆற்றலை உணரலாம். நாவுக்குள் மௌனமாக இதை ஓதினால்
நன்மைகள் தரும். ஒன்பது (நவ) அட்சர மந்திரம் ஏழு சக்கரங்களுக்கும், இந்திரயோனி (உள்நாக்கு),
பிரம்மநாளம்( தலைஉச்சி) பகுதிகளுக்கும் அதிர்வுகளை கொடுத்து சக்தி ஊட்டும்பொழுது பலன்களை
பெரிதும் ஈர்க்கின்றது.

க்லீம்- மூலாதாரம்

ஸ்ரீம்- சுவாதிட்டானம்
ஹ்ரீம் – மணிப்பூரகம்

ஐம்- அநாகதம்
கௌம் – விசுத்தி

க்ரீம்- இந்திரயோனி

ஹௌம்- ஆக்ஞா

ஔம்- நெற்றி உச்சி

சௌம்- பிரம்ம நாளம்

அதாவது ஆக்ஞா சக்கரதிற்கான பீஜ (அட்சர) மந்திரம் ஹௌம் தொடர்ந்து பிரயோகிக்கும் பொழுது
கல்வி ஞானம் முதலிய செல்வமும் வலிய வினை நீக்கமும் தீவினைகள் வராமல் செய்வதும் ஆகிய பலன்
தரும் சூட்சம ஒளியுடல் உள்ஒளி வட்டம் (ஆரா) உண்டாகும். இவைகளை ஜோதிட சூட்சமாக
ராசிகளுக்கான பீஜமந்திரத்தை உபயோகிக்கும் பொழுது கிரக நற்பலன்கள் பெரிதும் ஆகர்ஷணம்
பண்ணும்.

கீழே ஒவ்வொரு ராசிக்கும் உண்டான பீஜமந்திரத்தை அளித்துள்ளோம். அதனை தினசரி 108 முறை
ஜபித்து வந்தால் சகலவித நன்மைகளும் உண்டாகும்.

மேஷம் - ஓம் ஐம் க்லீம் சௌம் ரிஷபம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

மிதுனம் - ஓம் க்லீம் ஐம் சௌம் கடகம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
சிம்மம் - ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம் கன்னி - ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்

துலாம் - ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் விருச்சிகம் - ஓம் ஐம் க்லீம் சௌம்

தனுசு - ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம் மகரம் - ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

கும்பம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம் மீனம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தடைகள், இடைஞ்சல் என்று! தலை தூக்கி அந்த முயற்சி நிறைவேறாமல்
போய் விட்டது. அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இது தான்.

நரசிம்மர் மந்திரம்:

“யஸ்ப அபவத் பக் தஜன ஆர்த்திஹந்து


பித்ருத்வம் அந்யேஷூ அவிசார்ய தூர்ணம்
ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்
லக்ஷ்மி ந்ருஸிம் ஹம் சரணம் பிரபத்யே”

ஹயக்ரீவர்:
ஓம் தம் வாகீஸ்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி

தந்நோ ஹம்ஸ ப்ரசோதயாத்||

சிவனுக்குகந்த பத்திரங்கள் – பஞ்சவில்வம் அவை : 

1. வில்வம் 2. நொச்சி 3. முட்கிளுவை 4. விளா 5. மாவிலங்கை (அ) முல்லை (6) மஹாவில்வம்.

You might also like