Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 37

தலைமைத்துவம் (Ministry – Missions)

பாடப்பிரிவு : தலைவரின் உழியம்

1. கிறிஸ்தவத் தலைவர் கிருபையைப் பற்றி அறிந்திருக்க வேண்டிய 3


காரியங்களை விவரிக்கவும்.

கிருபையும் அதன் எதிரிகளும்

இந்த நூலை எழுதும்படி நான் தீர்மானிக்க ஒரு முக்கிய காரணம்


மிஷனெரிப் பணி என்பது 'கிருபை-எழுப்புதலினால்' நடைபெற வேண்டும்
என்ற எனது உள்ளக் குமுறலுக்கு எழுத்து வடிவம் கொடுப்பதாகும். 'கிருபை-
எழுப்புதல்' என்ற இத்தொடரை சார்ல்ஸ் ஸ்வின்டாலின் ‘கிருபை எழுப்புதல்’
என்ற நூலின் தலைப்பிலிருந்தே எடுத்துள்ளேன். கடந்த ஆண்டுகளில்
என்னிடமும், இன்னும் பல்லாயிரமானோரிடமும் இந்நூல் வல்லமையாகப்
பேசியிருக்கிறது. இந்நூலின் ஆரம்பவரிகள், கிறிஸ்தவர்கள் ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினாலே விசுவாசத்தின் மூலமாக
இரட்சிக்கப்படுகிறார்கள், அதற்குப் பதிலளிக்கும் வண்ணமாக அவர்கள்
அவருக்கென்று செய்யக் கூடியது 7 துவுமேயில்லை என்பதை
நினைவுபடுத்துகின்றன. நாம் செய்யக் கூடியதெல்லாம் கிருபையாக அவர்
தரும் இந்த இலவச ஈவை ஏற்றுக் கொள்வது மட்டுமே. 'தேவனிடமிருந்து
இலவச ஈவாக வரும் கிருபையின் செங்குத்து முக்கியத்துவத்தை நாம்
ஒருமுறை புரிந்து கொண்டு விட்டோமானால், கிடைமட்டக் கிருபை அதாவது
நாம் பிறருக்குக் கிருபை காட்டுவது என்பது - தானாக நடைபெறும்' என்கிறார்
ஸ்வின்டால்.

இந்தக் ‘கிடைமட்டக் கிருபை' - அதாவது, தனிப்பட்ட கிறிஸ்தவர்களும்,


கிறிஸ்தவ நிறுவனங்களும் சட்டதிட்டங் களுக்கு அடிமைப்பட்டவர்கள்
அல்லர், கிறிஸ்துவில் விடுதலை பெற்றவர்கள், அவர் நடத்தும் விதத்தில்
வளரவும், உழைக்கவும் உரிமை உடையவர்கள் என்பதை நாம் உணர உதவும்
குணம் - பற்றித் தான் இந்த அத்தியாயத்தில் எழுதப் போகிறேன். 'நீங்கள்
மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்கு உட்படாமல், கிறிஸ்து உண்டாக்கின
சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்' (கலாத்தியர் 5:1).

1
நாம் இந்தச் சுயாதீனத்தைக் குறித்துச் சந்தோஷப் படுகிறோம், ஆனால்
அதைப் பற்றிப் பெருமை பாராட்ட மாட்டோம். பிறரைக் கட்டியெழுப்பவும்,
அவர்கள் தேவனோடு நடக்கும் நடையையும், அவருக்கென்று செய்யும்
பணியையும் நாம் மதிப்பதைக் காட்டவும் அந்த விடுதலையைப்
பயன்படுத்துகிறோம். 'சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள்,
இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கு ஏதுவாக அனுசரியாமல்,
அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்' (கலாத்தியர் 5:13).

அநேக ஆவிக்குரிய எழுத்தாளர்கள் இதே செய்தியை வலியுறுத்தியுள்ளனர்.


கிருபை என்ற இந்தச் சத்தியம் பற்றி என்னிடம் மிக வல்லமையாகப் பேசிய
மற்றொரு நூல் ஸ்டேன்லி வோக் எழுதிய 'Personal Revival' (தனிப்பட்ட
எழுப்புதல்) என்பதாகும். அதோடு கூட மற்றொரு புத்தகம் ராய் ஹெஷன்
என்பவரின் 'Calvary Road' (கல்வாரிப் பாதை) ஆகும். இது ஆபரேஷன்
மொபிலைசேஷன் ஆரம்பித்த நாட்களிலிருந்தே ஊழியர்கள் வாசிக்கும்படி
பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. இவையும் இன்னும் பல புத்தகங்களும்
ஒருவரோடொருவர் உறவு கொண்டு வாழ்வது எப்படி என்பது பற்றிப்
போதிக்கும் I கொரிந்தியர் 13, எபேசியர் 4 போன்ற வேதபகுதிகளை நமக்குச்
சுட்டிக் காட்டுகின்றன.

அன்பு நீடிய சாந்தமும் தயவும் உள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு


தன்னைப் புகழாது; இறுமாப்பாய் இராது, அயோக்கியமானதைச் செய்யாது,
தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில்
சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும்,
சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.

இதே பண்பைக் குறிக்க நான் சிலவேளைகளில், பயன்படுத்தும் மற்றொரு


பதம் 'பரந்த மனம்' அல்லது 'பெரிய மனது' என்பதாகும். மாற்கு, லூக்கா
சுவிசேஷங்களில் இடம் பெறும் ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது.
தங்களில் ஒருவனாய் இராமல், ஆனால் இயேசுவின் பெயரால் பிசாசுகளைத்
துரத்திய ஒருவன் பற்றி யோவான் இயேசுவிடம் சொல்கிறான். சீஷர்கள்
எப்படி அவனைத் தடுத்தார்கள் என்று கூறுகிறான். யோவான் குறுகிய

2
கண்ணோட்டம் கொண்டிருந்தான். ஆனால் இயேசுவோ, 'அவனைத் தடுக்க
வேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதம் செய்கிறவன் எளிதாய் என்னைக்
குறித்துத் தீங்கு சொல்ல மாட்டான். நமக்கு விரோதமாய் இராதவன் நமது
பட்சத்தில் இருக்கிறான்' என்று சொன்னார் (மாற்கு 9:39-40). இயேசு பரந்த மனம்
படைத்தவர்.

எல்லாரும் நன்கறிந்த ரோமர் 8:28 மற்றொரு 'பரந்த மனம்' கொண்ட


வேதபகுதி எனலாம். 'அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி
அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச்
சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம்.
காரியங்கள் ஒன்றும் சரியாக நடவாதது போல் தோன்றும் நேரங்களில்
தேவனுடைய தயவு இன்னும் நம்மைச் சூழ்ந்திருக்கிறது என்பதை
நினைப்பூட்டி நம்மையும் பிறரையும் ஊக்குவிக்க இவ்வசனத்தை நாம்
பயன்படுத்துவதுண்டு. ஆனால் பிறர் செய்த தவறுகளால், நமக்கு உடன்பாடற்ற
கொள்கைகளும் திட்டங்களும் பின்பற்றப்பட்டதால், சிக்கல்கள் வரும்
வேளைகளிலும் கூட இவ்வசனம் பொருந்தும்.

மிஷனெரிப் பணியில் இந்தக் கிருபை - எழுப்புதலுக்கு,

இந்தப் பரந்த மன அணுகுமுறைக்கு இருக்கும் அவசியத்தைச் சொல்லி


முடியாது. உலகின் எத்தனையோ பகுதிகளில் பரந்த மனமின்மையால்
மனவேதனையும் பதட்டமும் ஏற்பட்டு தேவனுடைய பணி தடைப்படுகிறது.
பல சமயங்களில், கிறிஸ்தவர்களாகிய நாம் அவசியமற்ற சிறு சிறு
காரியங்களில் மனமொத்துப் போகிறோம். ஆனால் நாம் ஒத்துப் போக
வேண்டிய அத்தியாவசியமான காரியங்களில், சுவிசேஷத்தின்
அடிப்படைகளில், தெளிவான கிறிஸ்தவக் கோட்பாடுகளில் ஒருமனம்
அற்றவர்களாய் இருக்கிறோம்.

கிருபையின் எதிரிகளை ஸ்வின்டால் அழகாக வரிசைப்படுத்துகிறார் :

...வெளியே இருந்து: சட்டதிட்ட வாதம், எதிர்பார்ப்புகள், பாரம்பரியவாதம்,


மற்றவர்களைச் சரிக்கட்டி வழிக்குக் கொணருதல், கோரிக்கைகள், எதிர்மறை

3
வாதம், அடக்கியாளுதல், ஒப்பிடுதல், குறைவுகளை ஏற்காமை, போட்டி,
விமரிசனம், சிறு காரியங்களைப் பெரிதுபடுத்தல், இன்னும் வேறு பல. உள்ளே
இருந்து: பெருமை, பயம், கசப்பு, எரிச்சல், மன்னியாத குணம், பாதுகாப்பற்ற
உணர்வு, சரீர முயற்சி, குற்றவுணர்ச்சி, வெட்கம், புறங்கூறுதல், மாய்மாலம்,
இன்னும் எத்தனையோ...இவையெல்லாம் கிருபையைக் கொல்பவை!

பிறரது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருந்ததால், பாப்டிஸ்ட் சபையினராகவோ,


ஆங்கிலிக்கன் சபையினராகவோ இராததால், பல பாஷை பேசாததால்,
இன்னும் இப்படி எத்தனையோ முக்கியமான அல்லது முக்கியமற்ற சிறு சிறு
காரணங்களுக்காக வெறுத்து ஒதுக்கப்படும் மக்களை யெல்லாம் நினைத்துப்
பார்க்கிறேன். ஆவியின் வரங்களைச் சரியானபடி அறிந்து கொள்ளவில்லை
என்ற ஒரே காரணத்துக்காக ஆவியின் வரங்களை வலியுறுத்துவோரால்
புறக்கணிக்கப்படும் மக்கள் மிகுந்த வேதனை அடைகின்றனர். அதே போல
ஆவியின் வரங்களை வலியுறுத்துவோர், அதை வலியுறுத்தாதவர்கள்
தங்களை ஏற்கவில்லை என்பதாகக் கருதி வேதனையுறுகின்றனர்.

இதை இன்னும் சிக்கலாக்குவது எதுவெனில் பல சமயங்களில்


பிரசங்கிமார்களே பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு இப்படிப்பட்ட
முக்கியமற்ற காரியங்களை முக்கியப்படுத்திப் பேசுவதுதான். அது, அவர்களது
செய்தியைக் கேட்கும் மக்கள் பிறரையும், பிறரது நம்பிக்கைகளையும் எப்படி
மதிப்பிடுகின்றனர் என்பதைப் பாதிக்கிறது. பரிசுத்த ஆவியானவர் மூலமாக
இயேசு கிறிஸ்துவில் நாம் அடைந்துள்ள புதிய பிறப்பின் விளைவாக
நமக்கிடையே உள்ள ஒற்றுமையைக் காட்டிலும், இந்தச் சிறுசிறு
விஷயங்களே அதிமுக்கியம் என்று காட்டுவது போல் நமது நடவடிக்கை
அமைந்துள்ளது. இப்பகுதியில் நாம் கிருபையில் குறைவுபடுகிறோம்.

நமது பணியைப் பற்றி, பிறரது பணியைப் பற்றிக் கிருபையுடன் பேசுதல்

கிருபைக் குறைவு அதிகச் சேதத்தை விளைவிக்கும் பகுதிகளில் ஒன்று,


சரியான விவரங்களையோ அல்லது முழு விவரங்களையோ அறியாதபடி
ஒரு குழுவினர் மற்ற குழுவினரைப் பற்றி - ஒரு சபை அல்லது நிறுவனம்
அல்லது மிஷனெரிக் குழு பற்றி உண்மை போன்று வெளியிடும் சரி

4
செய்யாமலேயே அவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று முடிவு
கட்டிவிடக் கூடாது. அவர்கள் உண்மை, நொறுங்குண்ட மனம், சிலுவைப்
பாதை இவை பற்றிக் கொஞ்சமேனும் அறிந்திருப்பார்களானால், ஒரு
கிறிஸ்தவச் சகோதரனையோ அல்லது சகோதரியையோ - அதுவும்
தேவனுடைய ஊழியத்தில் உள்ள ஒரு தலைவரையோ பற்றிக் குறை
கூறவோ, தீது சொல்லவோ வெகுவாகத் தயங்குவார்கள். அதே சமயத்தில்
விவரங்களைச் சரிபார்க்காமல் தவறான அல்லது மிகைப்படுத்தப்பட்ட
கூற்றுகளை வெளியிடுவோரும் தங்களது தவறு சுட்டிக்காட்டப்படும்
பட்சத்தில் தங்களைத் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
உண்மை விவரங்களைச் சேகரிப்பதிலும், மிகைப்படுத்திக் கூறாமலிருப்பதிலும்
அதிகக் கவனம் காட்ட வேண்டும். தங்களை விமரிசிப்போரை நேசிக்கவும்,
ஊழியம் செய்கையில் அவர்களைக் குறித்து அன்பற்ற காரியங்களைச்
சொல்லாதிருக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.

"பிறரைப் பிறராகவே இருக்க விடும் கிருபை” என்ற தனது அத்தியாயத்தில்


சார்ல்ஸ் ஸ்வின்டால் மனிதர்கள் ஒருவருக்கொருவர் இடைப
டைபடுகையில் கிருபையைப் போக்கடித்து விடக்கூடிய இரண்டு வித
மனப்பான்மைகளைக் குறிப்பிடுகிறார். முதலாவது, பிறரோடு ஒப்பிட்டுப்
பார்த்தல். அதைக் குறித்து அவர் எழுதுகிறார்:

"பிறரைப் பிறராகவே இருக்க விடுவதற்குப் போதுமான கிருபையை நாம்


காட்டுவதற்கு முன், யாரையும் யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்கும் இந்தச்
சட்டதிட்டவாத மனப்பான்மையிலிருந்து நாம் விடுபட வேண்டும். (ஆம், அது
ஒரு வகை சட்டதிட்ட வாதம் தான்.) நாம் இருக்கின்ற வண்ணமாக நம்
ஒவ்வொருவரையும் படைத்தவர் தேவனே. அவர் தமது மனதில் வைத்துள்ள
ஒரு வடிவத்திற்கு நம்மைக் கொண்டுவருவதற்காக அயராது பாடுபட்டு
வருகிறார். அவரது ஒரே மாதிரி வடிவம் (குணநலன்களில்) அவரது குமாரன்
தாம். நாம் ஒவ்வொருவரும் ஒப்புநிகர் அற்றவர்களாய்த் திகழ வேண்டும்...
வேறு எந்த நபரையும் போலன்றி, தனித்தன்மை படைத்தவர்களாய் விளங்க
வேண்டும் என்பதே அவர் விருப்பம்.

5
அடுத்த தன்மை அடக்கியாளுதல். ஸ்வின்டால் கூறுகிறார்:

பிறரை அடக்கியாளுபவர்கள் மற்றவர்களைப் பயமுறுத்தியே வெற்றி


காண்கின்றனர். சொல்லாலோ, செயலாலோ நம்மைச் சரிக்கட்டி தங்கள்
வழிக்குக் கொண்டு வந்து தங்கள் காரியத்தை நம் மூலமாகச் சாதித்துக்
கொள்வார்கள். அடக்கியாளுவதோ, ஒப்பிடுவதோ, முறை எதுவாயினும் அது
நிச்சயமாகக் கிருபையைப் போக்கடித்து விடும். பிறரை அடக்கியாண்டே
பழகியிருப்பாயானால், கிருபை அல்லது பரந்த மனம் என்பது உனக்கு
விளங்காத, அந்நியமான ஒரு தத்துவம்.

கிருபை எழுப்புதலுக்கு எதிரான மனித சுபாவம் சட்டதிட்டங்களை


மிகைப்படுத்தும், விட்டுக் கொடுக்காத, குறுகிய மனப்பான்மையாகும். பல
நேரங்களில் இது நமது பாதுகாப்பின்மையையும் பயங்களையும் மூடி
மறைக்கும் முயற்சியாகும். உண்மையைச் சொன்னால், சில நல்ல
பரிசுத்தவான்கள் தேவனுடைய முழு ஆலோசனையையும் ஏற்றுக்
கொள்ளாமல் தங்களுக்குப் பிடித்தமான சில வேத வசனங்களை அளவுக்கு
மீ றி முக்கியப்படுத்துவதோடு, வேதவசனத்தைத் தவறான
கண்ணோட்டத்திலும் பார்க்கின்றனர் என்பது என் கருத்து.

எனக்குத் தெரிந்த சில சபைகள் 20 முன் ஆவியானவரில் கண்ட புது


விடுதலையின் விளைவாக புதியபுதிய கருத்துக்களோடும், ஆண்டுகளுக்கு
திட்டங்களோடும் உதயமாயின. இன்று அவை தாங்கள் எந்தக் கிருபையையும்,
விடுதலையையும், உண்மையையும் நாடி வெளி வந்தனவோ, அந்தப் பழைய
சபைகளைக் காட்டிலும் கெடுபிடி நிறைந்தவையாக இருப்பதைக்
காண்கையில் வியப்பு மேலிடுகிறது. இதைப் பற்றி இந்தப் புதிய (தற்போது
பழையதாகி விட்ட) சபைத் தலைவர்களிடம் கேட்டால், அன்றைய வரலாறு
இன்றைய நடைமுறை என்பதையே அவர்களது பதில்கள் காட்டுகின்றன.

தேவன் பல்வேறு விதங்களில் கிரியை செய்கிறார் என்பதைக் காட்டும் 2000


ஆண்டுக்காலச் சான்று நம்மிடம் இல்லையா? வெவ்வேறு மிஷனெரி
இயக்கங்களுக்கென்று வெவ்வேறு செயல் திட்டங்கள் உள்ளன. ஒரே சபை
அல்லது நிறுவனத்திற்குள்ளும் கூட செயல்திட்டத்தில், நடைமுறை

6
விவரங்களில் பிரிவினைகளும், பதட்டங்களும் காணப்படுகின்றன. வேதாகமம்
திட்டவட்டமாகப் பேசாத சில காரியங்களிலும் கூட நாம் இவ்வளவு
பிடிவாதம் காட்ட வேண்டுமா? வெவ்வேறு மக்கள் கூட்டங்கள் நடுவில்
வெவ்வேறு விதங்களில் தேவன் கிரியை செய்கிறார் என்பதை நாம் ஏற்றுக்
கொள்ளக் கூடாதா? தேவனுடைய பணி என்பது எந்த ஐக்கியத்தையும், எந்த
நிறுவனத்தையும் விடப் பெரியது. ஒரு பணி நிறைவேற்றப்பட
வேண்டுமானால், குறிப்பிட்ட தேவைகளைச் சந்திக்கக் கூடிய குறிப்பிட்ட
நிறுவனங்கள் அவசியம் தான். உதாரணமாக, ஒரு திட்டவட்டமான
நோக்கத்திற்கென்று ஐரோப்பிய, வட அமெரிக்க இளைஞர்களையும், அதன்
பிறகு அகில உலகின் இளைஞர்களையும் தமது பணியில் அணிதிரளச்
செய்வதற்காகவே ஆபரேஷன் மொபிலைசேஷனை தேவன் தோன்றச்
செய்தார். நாம் நிறுவனங்களைத் தலை மேல் தூக்கி வைத்துக்
கொண்டாடுவதும் இல்லை, அவற்றில் நடைபெறுவதெல்லாம் நமக்குப்
பிடிக்கவில்லை என்பதற்காக பின்னணியில் அவற்றை ஒரேயடியாக ஒதுக்கி
விடுவதும் இல்லை. அவற்றின் குறிப்பிட்ட நோக்கத்தின் மதிப்பிட்டுப் பார்க்க
வேண்டும். பரந்த மனதுடன் நடந்து கொள்ள வேண்டும். நம்மைக் காட்டிலும்
பிறரை உயர்வாகக் வண்
ீ கருத வேண்டுமென பிலிப்பியர் 2 கூறுவதை மறந்து
விட்டாயா? 'ஒன்றையும் வாதினாலாவது, பெருமையினாலாவது செய்யாமல்,
மனத்தாழ்மையினாலே ஒருவரை ஒருவர் தங்களிலும்
மேன்மையானவர்களாக எண்ணக் கடவர்கள்.
ீ அவனவன் தனக்கானவைகளை
அல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக' (பிலிப்பியர் 2:3-4).

இதை மட்டும் நடைமுறையில் பின்பற்றுவோமானால் ஓர் அன்புப் புரட்சி,


ஒரு கிருபைப் புரட்சியே ஏற்பட்டு விடும் அல்லவா? அதன் பொருள் நமது
சொந்த நிறுவனங்களின் திட்டங்கள், இலக்குகளிலேயே மூழ்கிக் கிடக்கும்
நாம் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதிலும், கிறிஸ்துவின் சரீரத்தின்
ஒற்றுமையிலும் நாட்டம் கொள்வோம், பரந்த மனதுடன் நடந்து கொள்வோம்
என்பதாகும். மிஷனெரித் தலைவர்கள் ஒருவர் அடுத்தவரது திட்டங்கள்,
இலக்குகள் பற்றிக் குறை சொல்வதை விட்டு, நிறைகளையே பேசுவதைக்
கேட்கும் நாள் ஒரு பாக்கிய நாளன்றோ! கிறிஸ்தவ எழுத்தாளர்களும்
கலைஞர்களும் தங்களுடைய முன்னேற்றுவதற்குப் பதிலாக,

7
படைப்புக்களையே மற்றவர்களுடைய படைப்புக்களையும் பாராட்டிப்
பேசுவதைக் கேட்பதும், தங்களது கூட்டங்களுக்கு மற்றவர்களது
படைப்புக்களை எடுத்துச் செல்வதைப் பார்ப்பதும் எத்தனை பெரிய பாக்கியம்!
இதை ஏற்கெனவே செய்து வருவோருக்காகத் தேவனுக்கு நன்றி
செலுத்துகிறேன்.

மற்றவர்களையும் மற்ற இயக்கங்களையும் நம்மை விட உயர்வாகக்


கருதுவதற்கு, அவர்கள் சார்பாக, அவர்களைப் பற்றி நன்மையாகப் பேசுவது
மட்டும் போதாது. அது ஒருவர் மற்றவரது பாரங்களைச் சுமப்பதும், பணம்,
நடைமுறை ஆதாரங்கள், தொழில் நுணுக்கங்கள், ஜெபம் ஆகியவற்றை
ஒருவரோடொருவர் தாராளமாகப் பகிர்ந்து கொள்வதுமாகும். இங்கே ஒரு
சமநிலை காணப்பட வேண்டியது அவசியம். ஏனெனில் ஒவ்வோர்
இயக்கத்துக்கும் அதனதனுக்கென்று தேவன் அருளிய தரிசனமும், அதை
நிறைவேற்றும் வழிமுறையும் உண்டு. ஆகவே ஒற்றுமை இல்லாத
இடங்களில் இருப்பது போல் நடிப்பதோ, அவசியமற்ற இடங்களில்
ஒற்றுமையை வலியுறுத்துவதோ கூடாது. அதே சமயத்தில் இதையே ஒரு
சாக்குப் போக்காகப் பயன்படுத்தி, நாம் ஒருவரையொருவர் மேன்மையாக
எண்ணவும், ஒருவரிடம் ஒருவர் கிருபையுடன் நடந்து கொள்ளவும் வேத
வசனங்கள் போதிக்கின்றன என்பதை மறுத்து விடவும் கூடாது.

உண்மையாகவே உடன்பாடு இல்லாத விஷயங்களில் கிருபை

ஆக, நாம் ஒருவரைப் பற்றி ஒருவர் பேசும் விதத்தில், உலகிற்குச்


சுவிசேஷத்தை எடுத்துச் செல்லும் நமது பணியில் ஏற்பட்டுள்ள
முன்னேற்றத்தை எடுத்துக் கூறும் விதத்தில், நமது பணிக்கும் மற்றவர்களது
பணிக்கும் இடையே நடைமுறை அணுகுமுறையில், நமது பண்பாடு மற்றும்
இறையியல் வேறுபாடுகள் பற்றிய உணர்வில் கிருபை எழுப்புதல்
அவசியமாகிறது. ஆனால் திருச்சபையின் உள்ளேயும் கூட பிரதான
கட்டளையை நிறைவேற்றச் சிறந்த வழி எது என்ற விவாதங்களின் நடுவே
நமக்குக் கிருபை தேவைப்படுகிறது. பல சமயங்களிலும் மிஷனெரிப் பணியில்
ஒரு வேலையைச் செய்யக் கூடிய பல விதங்கள், இப்படிச் செய்யலாம்

8
அல்லது அப்படிச் செய்யலாம் என்பதற்குப் பதிலாக இப்படித் தான் செய்தாக
வேண்டும் என்று அறுதியிட்டுக் கூறப்படுகின்றன. இப்படிப்பட்ட சர்ச்சைகள்
ஏராளம் உண்டு.

2. தலைவரானவர் தேவனுக்குச் சாட்சியாக இருப்பது, செலுத்த வேண்டிய


கிரயம் ஆகியவைகளை விவரிக்கவும்.
விலை கிரையத்தை எண்ணி பார்த்தல் :

உனது வாழ்க்கையை எதிர்காலத்தை பனி அல்லது தொழிலை மகிமையின்


கர்த்தருக்கென்றுபனி அல்லது தொழிலை மகிமையின் கர்த்தருக்கு என்று
வழிபடத்தில் சமர்ப்பிப்பது என்பது சிறிய விஷயம் அல்ல. நாம் செய்யப்
போகும் இந்தக் காரியத்திற்கு எவ்வளவு விலை கொடுக்க வேண்டியதாகும்
என்பதை எண்ணிப் பார்க்க வேண்டுமென்று லூக்கா 14 கூறுகிறது.
போகின்றவர்கள் எண்ணிப் பார்க்கக் கூடிய விலைக்கிரயங்கள் தனி.
மிஷனெரிப் பணியில் கால் வைக்கலாமா என்று யோசிக்கும் மக்களுக்கு
நான் அடிக்கடி கொடுக்கும் 4 எச்சரிக்கைகள் இதோ:

முதலாவதாக, உன் உள்ளம் பலமுறை உடையும், ஏராளமான


வேண்டியதாகும். ஏமாற்றங்களைச் சந்திக்க

இரண்டாவதாக, பண நெருக்கடிகளையும், பிரச்சனைகளையும் எதிர் கொள்ள


நேரிடும். வாழ்க்கை முறை மற்றும் பணத்தைச் செலவழிக்கும் விஷயங்களில்
ஏராளமான கருத்து வேறுபாடுகள் வரும்.

மூன்றாவதாக, சில சமயங்களில் ஒன்றைச் செய்ய ஆரம்பிப்பது வெகு எளிது,


ஆனால் அதைத் தொடர்ந்து செய்து கொண்டே போவதும், கூடவே உனது
உடன் ஊழியர்கள் உனக்கு விசுவாசமாய் இருக்க எதிர்பார்ப்பதும் மிக மிகச்
சிரமம் என்பதை அறிய வருவாய்.

நான்காவதாக, கிறிஸ்தவப் பணியில் வெகு எளிதில் கசப்பு முளை விடும்


என்பதைக் காண்பாய். சாத்தானின் எதிர்ப்பின் விளைவாக உலகப் பணியைக்
காட்டிலும் கிறிஸ்தவப் பணியில் கசப்பு வருவது எளிது. அதிலும் குறிப்பாக

9
பணமும், ஊக்கம் தரும் மற்ற பல காரியங்களும் குறைவுபடும் வேளைகளில்
கசப்பு எளிதில் தலைதூக்கும் என்பதை அறிந்து கொள்வாய். உன்னை
ஊக்கமிழக்கச் செய்வதற்காக நான் இதைச் ஏராளமாக வரும்.
சொல்லவில்லை, உண்மை தான், ஜெபத்திற்கு விடையாக ஆசீர்வாதங்களும்,
சந்தோஷமும் மிஷனெரிப் பணி என்பது ஒரு இன்பமான பணியாகும். நான்
அறிந்த பல மிஷனெரிகள் கிருபை எழுப்புதல் பெற்றவர்கள்! தங்கள்
வாழ்க்கையை அதிகப் பயன் தருவதாக்குவது எப்படி ஒரு என்று
அறிந்தவர்கள். ஆனாலும், விசுவாச இலட்சியங் களுக்கும் யதார்த்தமற்ற
எதிர்பார்ப்புகளுக்கும் இடையே சமநிலையைக் கண்டுபிடிப்பதும்
விலைக்கிரயத்தை எண்ணிப் பார்ப்பதன் ஒரு பகுதியே. ஈடித் ஷேஃபர் அதை
இப்படிக் கூறுகிறார்: 'ஒரு சுவிசேஷகன் அல்லது "சத்தியத்தை
எடுத்துரைப்பவனின்” வாழ்க்கையின் யதார்த்தம், எல்லா வியாதி,
விக்கினங்களையும், சரீரக் களைப்பையும் அவனிடமிருந்து முற்றிலும்
அகற்றிப் போடும் தொடர்ச்சியான அற்புதங்கள் அல்ல, அந்த மனிதனின்
பெலவனத்தின்
ீ நடுவே போதுமான அளவு தேவனுடைய பெலன்
விளங்குகின்ற, கடின உழைப்பு நிறைந்த நாட்களே.' (பாடுகள் - Affliction).

இந்த அத்தியாயம் உலகின் பல இடங்களுக்கும் மிஷனெரிகள் செல்ல


வேண்டிய மாபெரும் தேவை பற்றியதோ, அல்லது இன்று மிஷனெரிப்
பணியில் நிலவும் ஏராளமான வாய்ப்புகள் பற்றியதோ அல்ல; இவற்றைப்
பற்றிப் பின்னர் பார்ப்போம். உனது எதிர்காலம் பற்றித் திட்டமிடுகின்ற
வேளையில் உலகம் முழுவதிலும் உள்ள தேவைகள் மற்றும் வாய்ப்புகள்
பற்றிய அறிவு உனக்கு அவசியம் தான், ஆனால் இந்த அத்தியாயமோ
பிரதான கட்டளையில் இயேசு அருளிச் சென்ற வாக்குத்தத்தம் மற்றும்
கட்டளைக்குச் செவி கொடுப்பதில் உனது தனிப்பட்ட பங்கு என்ன என்பதை நீ
யோசிக்க விடுக்கப்படும் அறைகூவல் ஆகும். நீ ஒரு தீர்மானம் செய்யும்படி
அழைக்கப்படுகிறாய். இந்தத் தீர்மானத்தை நீயாகவே செய்து கொள்ளக்
கூடாது. மற்றவர்களிடம் - குடும்பத்தார், கிறிஸ்தவ நண்பர்கள், உனது
சபையிலுள்ள மூத்த விசுவாசிகள் இவர்களிடம் நீ இதைப் பற்றிப் பேச
வேண்டியது அவசியம். மிஷனெரி நிறுவனங்களோடு தொடர்பு கொள்வது
அல்லது அவர்களது வெளியீடுகளை வாசிப்பது மூலம் உலகளாவிய

10
விபரங்களை நீ தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியம். உனது
எதிர்காலத்திற்கான தேவனுடைய திட்டம் என்ன என்பதைத் தெளிவாக
அறிந்து கொள்ளும் முயற்சியில் நிச்சயமாக நீ ஜெபிக்கவும், வேதத்தைப்
படிக்கவும் வேண்டியதாகும். [கிளென் மையர்ஸ் தனது 'The World Christian Starter
Kit' (அகில உலகக் கிறிஸ்தவனின் ஆரம்பப் பாடம்) என்ற நூலில் 'நான் என்ன
செய்ய வேண்டும்?' என்ற கேள்விக்குப் பதிலாக நீ செய்யக் கூடிய நூறு
செயல்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.] மிஷனெரிப் பணித்தளத்துக்கு
அழைப்பு என்பது உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பும், உணர்வுப் பூர்வமான
அழைப்பு அல்ல. ஒரு சிலரது அனுபவம் அப்படிப்பட்டதாக இருக்கலாம்.
ஆனால் பொதுவாக, அடிப்படையில் அது இந்தப் பத்தியில் நாம் வருணித்த
பல முறைமைகளின் விளைவாக ஏற்படும், நமது சித்தத்தின் தெரிந்தெடுப்பே
ஆகும். பல சமயங்களில் அது, ஒவ்வோரடியாகக் கவனமாக எடுத்து வைத்து
முன் செல்லும் ஒரு தொடர்ச்சியான முறைமையாகும். டெட்சுனவ்
யாமமோரி, 'Penetrating Missions' Final Frontier' (மிஷனெரிப் பணியில் இறுதியான
ஊடுருவுதல்) என்பதில் இவ்வாறு எழுதுகிறார்: எல்லைகளை

மிஷனெரிப் பணியில் ஈடுபட்டுள்ள மற்றவர்களது கதைகளில் இருந்து,


ஆரம்பகட்ட உள்ளான தூண்டுதல்கள் அவ்வளவு வெளிப்படையானவை
அல்ல, அவற்றைப் பகுத்தறிவது கடினம் என்பதைக் கற்றுக் கொள்கிறோம்.
உண்மையில், நம்மில் பலருக்கு நாம் செயல்பட ஆரம்பிக்கும் வரை செய்தி
பிடிபடுவதேயில்லை. பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலுக்குக் கீ ழ்ப்படியும்
வண்ணமாக நாம் செயலாற்ற ஆரம்பிக்கையில் தான், மெல்ல மெல்லத்
தெளிவு பிறக்கிறது. நீ செயலாற்ற ஆரம்பிக்கவேயில்லை என்றால் அழைப்பு
இருக்கிறது என்பதை ஒருவேளை கண்டு பிடிக்கவே மாட்டாய்.

மிஷனெரிப் பணிக்கு அழைப்பு என்பது, ஒன்று செல்வது அல்லது ஒன்றுமே


செய்யாதிருப்பது என்பதுமல்ல. மைக்கேல் கிரிஃபித்ஸ் ‘A Task Unfinished'
(முடிவடையாத பணி) என்ற தனது நூலில் ஆதித் திருச்சபையைத் திரும்பிப்
பார்த்து இப்படியாகக் கூறுகிறார்: 'இயேசுவின் சீஷர்கள் எல்லாருமே சீஷர்கள்
தாம். அவர்கள் அனைவருமே போதகரின் காரியத்தில் சம அளவு அர்ப்பணம்
உடையவர்களாக, பூமியின் கடைசி பரியந்தம் சுவிசேஷத்தை எடுத்துச்

11
செல்லும் விஷயத்தில் சம அளவு அக்கறை கொண்டவர்களாக இருக்கும்படி
எதிர்பார்க்கப் பட்டனர். அந்தப் பெரிய பணியில் நமது பங்கு எதுவானாலும்
சரி, நம்மிடம் இன்று எதிர்பார்க்கப் படுவதும் அது தான்.

3. தலைமை தேவை என்ற கருத்தை விவரிக்கவும்.


'தலைமைத்துவம் என்பது நாம் இருக்கின்ற இடத்திலிருந்து இருக்க
வேண்டிய இடத்துக்கு எப்படிப் போவது என்று அறிந்திருத்தல் ஆகும்.' (ஸ்டீவ்
சாக்).

தலைவர்களாய்ப் பணியாற்றக் கூடிய மக்களுக்குத் தான் இன்று எத்தனை


பஞ்சம்! தலைவர்களாகும் ஆற்றல் கொண்ட மனிதர்கள் எவ்வளவு அரிதாகி
விட்டனர் என்பதற்குச் சான்று வேண்டுமானால் ஐக்கிய நாடுகள் சங்கம் ஒரு
பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற்கு அமெரிக்கா அல்லது மற்ற நாடுகள்
அரசியலில் தலைமைப் பொறுப்புகளுக்குத் தகுதியானோரைத்
தேர்ந்தெடுப்பதற்குக் கையாளும் சிக்கலான, சிரமமான வழிகளை யோசித்துப்
பார். அநேக கிறிஸ்தவ நிறுவனங்கள், குறிப்பாக மிஷனெரி இயக்கங்கள்
ஆண்களும் பெண்களுமான தலைவர்களுக்காகக் கதறிக் கொண்டிருக்கின்றன.
தலைமை இயக்குநர் பதவிக்காக இரண்டு வருடங்களாக ஆள் தேடிக்
கொண்டிருந்த மிஷனெரி நிறுவனம் ஒன்றை நான் அறிவேன். தலைமைப்
பொறுப்பை ஏற்று நடத்தக் கூடிய கிறிஸ்தவர்கள் அவசியம். அதை ஏதோ
பெருமைக்காகவோ புகழுக்காகவோ அன்றி, தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள
வரங்களையும் ஊழியங்களையும் கொண்டு கிறிஸ்துவின் சரீரத்துக்குப் பணி
செய்யும் வாய்ப்பாக எண்ணி அவர்கள் செயல்பட வேண்டும்.
தலைவர்களாவோம் என்று எதிர்பார்த்திராத அநேகர் தலைவர்கள் ஆவர்,
குறிப்பாக உள்ளூர்த் திருச்சபைகளில் இது சாதாரணமாக நடைபெறுகிறது.
ஆனால் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்துவது என்பதே
எல்லாவற்றைக் காட்டிலும் பெரிய சவாலாகலாம்.

இளைஞர்களும் முதியவர்களுமான தலைவர்களின் பயிற்சி பற்றித்


திருச்சபையில் அதிகமாக வலியுறுத்த வேண்டியது அவசியம்.
தெசலோனிக்கே சபைத் தலைவர்கள், அதாவது பவுலின் நிருபம் யாருக்கு

12
எழுதப்பட்டதோ அவர்கள், விசுவாசிகளாகிச் சில வாரங்கள் மட்டுமே
ஆகியிருந்தன. இளமையிலேயே பயிற்சியைத் தொடங்கலாம். மக்களை,
அவர்கள் இருக்கின்ற இடங்களிலேயே தலைமைப் பொறுப்புகளுக்குப்
பயிற்றுவிக்கும் பணிக்கு, அதே சமயத்தில் உலகளாவிய தரிசனம் ஒன்றை
அவர்களுக்கு வழங்குவதற்கு என்னை அர்ப்பணித்திருக்கிறேன். அப்போஸ்தலர்
1:8 இன் தரிசனம் படைத்த, தங்கள் சொந்த நாடுகளில் வல்லமை மிக்க
ஆவிக்குரிய தலைவர்களை உருவாக்கும் வேத போதனையை நாம் ஒன்று
திரட்டக் கூடுமானால் திருச்சபை எவ்வளவு பெரிய 'வல்லமை நிலையமாக'
விளங்கக் கூடும், அல்லவா? இது சபையை மிஷனெரிப் பணியில் பலத்த
உந்துதலோடு முன்செல்லச் செய்யும். 'வரீ திரமும் கற்பனா சக்தியும் கொண்ட
மிஷனெரிப் பணிகளுக்கென்று தேவ மக்களை அணி திரட்டக் கூடிய
தலைவர்கள் இன்று வெகுவாகத் தேவை. [பால் பீஸ்லி - மர்ரே - A Call to
Excellence (உன்னதத்திற்கு ஓர் அழைப்பு). அப்படிப்பட்ட தலைவர்களைத் தேவன்
தாமே நமக்குத் தந்தருளுவாராக. ஆவியானவரால் நிறைந்திரு

இந்த அத்தியாயம் பெருமளவிற்கு, கடந்த ஆண்டுகளில் ஆபரேஷன் இன்று


திருச்சபையிலும், மிஷனெரிப் பணியிலும் தலைமைப் பதவி வகிப்பது
எவ்வளவு கடினமானது என்பதையே பற்றியது. எனினும் அப்படித்
தலைவர்களாக இருப்போருக்குக் கிறிஸ்துவில் கிடைக்கக் கூடிய மேன்மை
மிக்க ஆதாரங்களையும், ஒத்தாசையையும் பற்றிக் கூறாமல் இருக்க
முடியாது. மொபிலைசேஷன் இயக்குநராகத் தலைவர்களைப் பயிற்றுவிப்பதில்
அதிக நேரம் செலவிட்டிருக்கிறேன். சில நேரங்களில் நான் தலைவர்கள்
மாநாட்டில் பேசும்பொழுது, தேவனுடைய ஊழியத்தில் ஈடுபட்டுள்ள
தலைவர்களுக்கு இருக்க வேண்டிய சிறப்பான ஆவிக்குரிய பண்புகளையும்,
நல்ல குணங்களையும் பற்றிக் கூறுவதுண்டு. இவை முக்கியமானவை, இவை
பற்றி அத்தியாயத்தின் பின்பாகத்தில் பார்ப்போம். சில சமயங்களில் ஒரு
தலைவனாகத் தீர்மானங்களைச் செய்வது எப்படி என்பதையும், ஒழுங்கைக்
கடைபிடிப்பது எப்படி என்பதையும் பற்றி நான் பேசுவதுண்டு. இதுவும்
முக்கியம் தான். ஆனால் பெரும்பாலான வேளைகளில், தலைவர்கள்
கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படைகளை அறிந்து, அவைகளைக் கைக்கொண்டு
நடக்க வேண்டியதன் அவசியம் பற்றி அதாவது, தலைவர்களின் ஆவிக்குரிய

13
முன்னேற்றம் மற்றும் தேவனுடன் நடப்பது பற்றியே அதிகமாகப் பேசுகிறேன்.
தலைவர்களுக்கு இதை விட அவசியமானது, முக்கியமானது
வேறொன்றுமில்லை. தானாக இதைத் தொடரும் மற்றொரு காரியம்
தலைவர்கள் மற்றவர்களுடனான தங்களது உறவுகளில் தங்களாலான மட்டும்
மற்றவர்களுக்குப் பக்திவிருத்தி உண்டாக்கவும், மற்றவர்களைக்

கட்டியெழுப்பவும், அவர்கள் இன்னும் அதிகமாக இயேசுகிறிஸ்துவின்


சாயலுக்கு ஒப்பாக மாற உதவவும் தக்க வகையில் நடந்து கொள்ள
வேண்டும் என்பதாகும்: தலைவர்கள் உலக சுவிசேஷப் பணியில் ஒன்றுபட்டு
உழைப்பதற்காகத் தேவனால் எழுப்பப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும்
இயக்கங்களில் பணி செய்யும் மக்களது பின்னணிகள், சந்தர்ப்பச் சூழ்நிலைகள்
இவற்றைக் கருத்தில் கொண்டு அவர்களிடம் இதமாக, பரிவாக நடந்து
கொள்ள வேண்டும்.

எல்லாவற்றையும் விட, தலைவர்களிடம் பேசும்போது வலியுறுத்த


விரும்புகின்ற காரியம் 'ஆவியினால் நான் நிறைந்திருங்கள்' (எபேசியர் 5:18)
என்பதாகும். ஏனெனில் கிறிஸ்தவப் பணி அனைத்திற்கும் மேலான இயக்குநர்
பரிசுத்த ஆவியானவரே. J. ஆஸ்வால்ட் சான்டர்ஸ் 'Spiritual Leadership'
(ஆவிக்குரிய தலைமை) என்ற தனது நூலில் பரிசுத்த ஆவியானவர் பற்றிய
அத்தியாயத்திற்கு 'இன்றியமையாத தேவை' என்று தலைப்பிட்டுள்ளார்.
ஆவிக்குரிய தலைவர்களுக்கு இருக்க வேண்டிய இனிய பண்புகள்
எத்தனையோ இருக்கலாம், ஆனால் அவற்றுள் ஒன்றே ஒன்று மட்டும்
இன்றியமையாதது - அது அவர்கள் ஆவியானவரால் நிரம்பியிருக்க வேண்டும்
என்பதே என்கிறார் அவர். விசுவாசிகள் மத்தியில் பரிசுத்த ஆவியானவரையும்
அவரது கிரியையையும் பற்றி இன்னும் தெளிவான உணர்வு அவசியம் என்று
நான் நம்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் கர்த்தராகிய இயேசுவை உயர்த்திக்
காட்டக் காட்ட, நமது வாழ்க்கைகளையும், காரியங்களையும் ஆண்டு நடத்தும்
இராஜரீக இயக்குநராக இருக்க இருக்க, அவரது நிறைவினால் நாம்
அனுதினமும் நிரப்பப்படுவது ஒரு மகத்தான சிலாக்கியம் என்பது
விசுவாசிகள் அனைவருக்கும் போதிக்கப்பட வேண்டும். இந்த நிறைவு நமது
உணர்ச்சிகளோடும், உள்ளான ஆவிக்குரிய வாழ்வோடும் நின்று விடக்

14
கூடாது. அனுதினமும் நமது வாழ்க்கைகளை எப்படி நடத்திச் செல்கிறோம்
என்பதில் (கலாத்தியர் 5:22-25). யதார்த்தமாக வெளிப்பட வேண்டும். கிறிஸ்தவப்
பணியில் நாம் உருவாக்குகின்ற யுக்திகளை, செயல்திட்டங்களைப் பாதிக்க
வேண்டும். விசேஷமாக, கிறிஸ்தவப் பணியில் முன்செல்லப் பரிசுத்த
ஆவியானவரே நம்மை வழிநடத்தும்படியாக அவரையே இன்னும் அதிகமாக
நாம் சார்ந்திருக்க வேண்டுமென்று தலைவர்களிடம் அதிகப் பாரத்தோடு
கூறிக் கொள்கிறேன். பரிசுத்த ஆவியானவரே மிஷனெரிப் பணியை நடத்திச்
செல்கிறார் என்பது அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வெட்ட
வெளிச்சமாகிறது.

பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து,


எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி
பரியந்தமும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் (அப்போஸ்தலர் 1:8),

அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து உபவாசித்துக் கொண்டிருக்கிற


போது, பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக
அவர்களைப் பிரித்து விடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர்
திருவுளம்பற்றினார் (அப்போஸ்தலர் 13:2).

மிஷனெரிப் பணியை வழி நடத்துகிறவர்களும் பரிசுத்த ஆவியானவரால்


நிரப்பப்பட்டிருக்க வேண்டுமென்பதை அப்போஸ்தலர் நடபடிகள் J. ஆஸ்வால்ட்
சான்டர்ஸ் எழுதுகிறார்; தெளிவாக்குகின்றது.

கிறிஸ்தவ இயக்கத்தின் மீ து கணிசமான அளவிற்குத் தாக்கம் ஏற்படுத்திய


தலைவர்கள் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்ட மனிதர்களே என்பது
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து தெளிவாகத்துலங்குகிறது. உன்னதத்தி
லிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரை எருசலேமிலே
தரித்திருங்கள் என்று தனது சீஷர்களுக்குக் கட்டளையிட்ட அவரே கூட
பரிசுத்த ஆவியானவராலும் வல்லமையாலும் அபிஷேகிக்கப்பட்டார் என
கூறுகிறது (10:38). மேலறையில் கூடும் பாக்கியம் பெற்ற அந்த 120 பேரும்
ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள் (2:4) சனகெரிப் சபையைப் பார்த்துப் பேசும்
போது பேதுருவும் ஆவியானவரால் நிறைந்தார் (4:8). ஆவியானவரால்

15
நிரப்பப்பட்ட ஸ்தேவானும் கிறிஸ்துவுக்கு ஓர் உன்னத சாட்சியாகத் திகழ்ந்து,
இரத்தசாட்சியாக மரித்தான் (6:3,5 7:55). ஆவியானவரின் நிறைவில் தான் பவுல்
தனது ஒப்பற்ற ஊழியத்தை ஆரம்பித்தார், நிறைவேற்றினார் (9:17; 13:9). அவரது
மிஷனெரி நண்பரான பர்னபாவும் ஆவியானவரால் நிரம்பியிருந்தார் (11:24).
ஆவிக்குரிய தலைமைத்துவத்துக்கு அடிப்படைத் தகுதியும். ஆயத்தமும்
இதுவே என்பதை நிதானித்து அறிய முடியாத எவனும் ஒரு விந்தையான
(ஆவிக்குரிய தலைமை) குருடனே எனலாம்.

பரிசுத்த ஆவியானவரின் நிறைவின் அனுபவத்தோடு முதலில் வரும்


துடிதுடிப்பு பிறகு தணிந்து போவதைக் குறித்து மக்கள் வருந்துகின்றனர்.
ஆனால் 'Unseen Warfare (கண்ணுக்குப் புலப்படாத போர்) என்ற நூலில்
விளக்கப்பட்டுள்ளபடி இந்த ஊக்கக் குறைவு வளர்ச்சியின் அடையாளமாக
இருக்கலாம். நீ ஒரு கிறிஸ்தவத் தலைவனாக இருக்கப் போகிறாய் என்றால்
நீ வளர்ச்சி அடைய வேண்டும். அப்போஸ்தலர் நூலில் நாம் பார்த்த
வண்ணமாகவே உனது அன்றாடப் பணியிலும், திட்டங்களிலும் ஆவியானவர்
உன்னை வழிநடத்துவது என்பது ஒரு மாறாத பழக்கமாக வேண்டும். இது
அனுதினமும் நடைபெறும் நிறைவாக இருக்க வேண்டுமே அன்றி, எப்போதும்
புதுப்புது 'அனுபவங்களை' நாடித் தேடி அலைவதாக இருக்கக் கூடாது. அநேகர்
தங்கள் வாழ்வில் ஒரு புது விதமான தொடுதல் அவசியம் என்று
உணருகின்றனர், ஏதாவது புதிதாகக் கிடைக்காதா என்று ஏங்கி ஒரு
மாநாட்டிலிருந்து இன்னொரு மாநாட்டிற்கு அலைகின்றனர். தேவனோடு
ஏற்படும் உன்னத அனுபவங்களே கூடாது என்று நான் சொல்ல வரவில்லை,
ஆனால் ரால்ஃப் ஷாலிஸ் என்பவரின் 'From Now On' [இன்று முதல்) என்ற
நூலின் ஒரு அத்தியாயத்தின் தலைப்பு கூறுவதைப் போல 'ஆவிக்குரிய
வளர்ச்சிக்கு ஒரு தொடர்ச்சியான செயல் திட்டம்' இருப்பது அவசியம். தேவன்
உன்னை மீ ட்டுக் கொண்டு, உன் வாழ்வில் பரிசுத்த ஆவியானவரை அருளிச்
செய்த போது முடிவை உன் கையில் விட்டு விட்டார். பந்து இப்போது உன்
மைதானத்தில் இருக்கிறது. அதை அடித்து விளையாடுவதோ, பேசாமல்
சும்மாயிருப்பதோ உன் விருப்பம். வேறொரு விதமாகக் கூறினால் நெகேமியா
இஸ்ரவேல் மக்களை 'எழுந்து கட்டுவோம், வாருங்கள்' (நெகேமியா 2:18). என்று
தூண்டி எழுப்பியது போல் தேவன் உன் மனதையும் தூண்டியெழுப்பக் கூடும்.

16
4. தலைவரிடம் எதிர்ப்பார்க்க படுகிறவை, அவர்களிடம் இருக்க
வேண்டியவை மற்றும் தலைவர்கள் தவிர்க்க வேண்டியவை
ஆகியவைகளை விவரிக்கவும்.
ஒரு தலைவனின் வாழ்வில் சமச்சீர் நிலை

இந்த விதமான கடுமையான யதார்த்தங்களுக்கு மத்தியில் ஆவியானவரால்


நிரப்பப்பட்ட தலைவனுக்கு அடையாளமாகிய மிகவும் இன்றியமையாத
வேதாகம சமச்சீர் நிலையைக் காத்துக் கொள்வது என்பது வெகு சிரமம்.
கடந்த ஆ ஆண்டுகளில் இந்தச் சமச்சீர் நிலை பற்றி நான் அதிகம்
கற்பித்துள்ளேன். எனது பழைய வேதாகமங்கள் ஒன்றில், வல்லமை மிக்க
கிறிஸ்தவ ஜீவியத்தில் சமச்சீர் நிலையைக் கடைபிடிக்க அவசியமான
முப்பது எதிர்ப்பதங்களைக் குறித்து வைத்துள்ளேன்; அவை தவிர வேறு
பலவும் உண்டு. பிரதான கட்டளையை நிறைவேற்றுவதற்காக உழைக்கும்
கிறிஸ்தவத் தலைவர்களுக்கு அவசியமான சமச்சீர் நிலை காணப்பட
வேண்டிய ஏழு பகுதிகளைக் குறித்து இங்கே கூற விழைகிறேன்.

1. முதலாவது, விசுவாசத்துக்கும் விவேகத்துக்கும் இடையேயான சமச்சீர்


நிலை. பல வேளைகளிலும் தலைவர்கள் அபாயகரமான, துணிச்சலான
விசுவாசத்தைக் காட்டும்படியான வேளை வருகிறது. மிஷனெரி வரலாறு ஏமி
கார்மைக்கேல், ஹட்ஸன் டெய்லர், ஜிம் எலியட் போன்றோரின் வாழ்க்கைச்
சரித்திரங்கள் நிறைந்து காணப்படுகிறது. உண்மை தான், தலைவர்கள்
விசுவாசத்தில் பெரும் அடிகளை எடுத்துவைக்குமாறு தேவ ஆவியானவரே
தூண்டும் போது அவர்கள் முன் நோக்கி நகரவே வேண்டும். அவர்க களைப்
பின்பற்றுவோரும் அவர்கள் வேகத்திற்கு ஈடுகொடுத்து முன் செல்ல முயற்சி
செய்ய வேண்டும். ஆனால் அதே சமயத்தில் தலைவர்கள் விவேகத்துடன்
நடந்து கொள்ளவும் வேண்டும். தாங்கள் மற்றவர்களது தீவிரத்தைத் தூண்டி
விடக் கூடியவர்கள், தங்களது எதிர்பார்ப்புக்களை மற்றவர்களுக்கும் பரவச்
செய்பவர்கள் என்ற உண்மையைத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதன் காரணமாக, உண்மையிலேயே அடையக் கூடிய இலக்குகளை
ஏற்படுத்த வேண்டிய, அல்லது ஒருவேளை எதெல்லாம் சாத்தியம் என்பது

17
பற்றிய விவேகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டிய தங்கள் பொறுப்பை
உணர்ந்து நடக்க வேண்டும். குறிப்பாக, இளம் தலைவர்கள், மிஷனெரி
வரலாற்றில் அரும்பெரும் வரர்களாக
ீ விளங்கிய மனிதர்களின் வாழ்வில்
காணப்படும் துணிச்சலான விசுவாசம், பொதுவாக அவர்களது பல்லாண்டுக்
கால அனுபவங்களுக்கும், ஆரம்ப காலத் தவறுகளுக்கும் பின்னர் வந்ததே
என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கை
வரலாறுகள் பல முழுமையான உண்மையைக் கூறவில்லை என்பது என்
எண்ணம். ஏனெனில் அவை கடந்த காலத்தின் தலைசிறந்த தலைவர்களது
பாவங்களையும் தோல்விகளையும் பற்றி எதுவும் சொல்லாமல் விட்டு
விடுகின்றன. A.W. டோஸர் சொன்னது போல:

விசுவாசிக்க வேண்டும் என்ற நமது இடையறாத போராட்டத்தின் மத்தியில்,


நமது ஆத்தும நலனுக்கு விசுவாசம் எவ்வளவு அவசியமோ அவ்வளவுக்குக்
கொஞ்சம் ரோக்கியமான அவநம்பிக்கையும் அவசியம் என்ற ஆ உண்மையை
நாம் கவனியாமல் போகக் கூடும். இன்னும் ஒருபடி மேலே சென்று, நாம்
பயபக்தியுடன் கூடிய சந்தேகத்தை வளர்த்துக் கொள்வது நல்லது என்று
கூடச்சொல்வேன். அது இல்லாத அநேகர் சில நேரங்களில் சிக்கிக்
கொள்கின்ற ஆயிரக்கணக்கான சேற்றுப் பள்ளங்களுக்கும், சதுப்பு நிலக்
குழிகளுக்கும் அது நம்மை விலக்கிக் காக்கும். ஏதாவது ஒன்றைச்
சந்தேகிப்பது ஒருவேளை பாவமாகாது, ஆனால் எல்லாவற்றையும் நம்புவது
நமது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். (நீதிமானின் வேர்)

2.கட்டுப்பாட்டுக்கும் சுதந்தரத்துக்கும் இடையேயான சமச்சீர் நிலை. நாம்


சுயாதீனத்திற்கு அல்லது சுதந்தரத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று
சுட்டிக் காட்ட, கலாத்தியர் 5:13 ஐ நீ மேற்கோள் கூறலாம். அதை நானும்
ஒத்துக் கொள்வேன். ஆனால் அதே வசனத்தில் நாம் அன்பினாலே
ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யவும் அழைக்கப்படு கிறோம். எங்கே
விதிமுறைகள் உண்டோ அங்கே சுதந்தரத்திற்குச் சில கட்டுப்பாடுகளும்
உண்டு, ஆனால் விதிமுறைகள் என்பவை நாம் நம்மிடையே அன்பை
அமுல்படுத்த விரும்புகிறோம் என்று காட்டும் ஒரு வழியுமாகும். ஒரு விதி
என்பது சற்று அழுத்தமாகக் கூறப்படும் அறிவுரை எனலாம். எப்படியும்,

18
கட்டுப்பாடு இல்லாத கிருபை அவமானத்துக்கே வழி நடத்தும்.
ஆண்டவருடைய பணியின் ஒரு பகுதியை மேற்பார்க்கும் பொறுப்பிலுள்ள
தலைவர்கள் விதிகளின் முக்கியத்துவத்தை அளவுக்கு மீ றி வலியுறுத்தலாம்.
உலகில் ஒலிக்கும், கட்டுப்பாட்டுக்கு எதிரான சுதந்தரத்தின் குரல்களைக்
காண்பதன் விளைவாக அவர்கள் இப்படி விதிகளை முக்கியப்படுத்தலாம்.
அல்லது நான் சொன்னதைப் பிறர் கேட்டு நடந்தேயாக வேண்டும் என்ற
பெருமையின் விளைவாகவும் இப்படி நடக்கலாம். ஒருவேளை அவர்கள்
ஏற்படுத்தியுள்ள விதி அல்லது சட்டம் சரியானதாக இருக்கலாம், ஆனால்
அதைத் தங்களைச் சுற்றியுள்ளோரிடம் தெரியப்படுத்தும், அமுல்படுத்தும்
முறை சரியற்றதாக இருக்கலாம். வலுவான குணநலன்களும், உறுதியான
நம்பிக்கைகளும் உள்ள நம்மைப் போன்றோர் பொதுவாக மற்றவர்களை
அதிகம் நோகடிக்கிறோம், ஆனால் அதை உணரத் தவறி விடுகிறோம்.

3. இதோடு நெருங்கிய தொடர்பு கொண்டது அதிகாரத்திற்கும் ஐக்கியத்திற்கும்


இடையேயான சமச்சீர் நிலை. மிஷனெரித் தலைவர்களின் வலுவான
அதிகாரம் பற்றிய பல கதைகள் மிஷனெரி வரலாற்றில் உண்டு. வில்லியம்
பூத் மற்றும் CT ஸ்டட் ஆகிய இருவருமே, தாங்கள் நடத்தி வந்த
இயக்கங்களின் தலைவர்களுக்குக் கீ ழ்ப்படியவில்லை என்ற காரணத்திற்காக
தங்கள் சொந்தக் குடும்பத்து மக்களை இயக்கத்தை விட்டே வெளியேற்றினர்.
இன்று வலுவான தலைவர்கள் எவ்வளவு அவசியமோ, அவ்வளவுக்கு
அதிகாரத்தைப் பிரயோகிப்பதில் ஐக்கியங்கள் அல்லது குழுக்களும் அவசியம்
என்று நான் நம்புகிறேன். மேலான தீர்மானங்களைச் செய்பவர்களோடு கூட,
புத்தி சொல்லக் கூடியவர்களும் கண்டித்துத் திருத்தக் கூடியவர்களும்
இருப்பது அவசியம். ஒரு வலுவான தலைவரின் அதிகாரத்தைத் தட்டிக்
கேட்கக் கூடிய, குறுக்கிட்டு சரிசெய்யக் கூடிய வழிகளும், முறைகளும்
இருக்க வேண்டும். பல மிஷனெரி நிறுவனங்களில் இப்பணியைச்
செய்வதற்காக தர்மகர்த்தாக்கள் சங்கம் அல்லது அது போன்ற ஒன்று
ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவன் பலதரப்பட்ட தலைமைத்துவ
அமைப்புகளையும், முறைகளையும் பயன்படுத்துகிறார் என்பதை வரலாறும்,
தற்காலச் சம்பவங்களும் வெளிப்படுத்துகின்றன.

19
4. முன்னுரிமைகளை நிர்ணயிப்பது என்பது தலைவர்கள் முன் இருக்கும் ஓர்
இடையறாத சவால் எனலாம். நமது கவனத்தைக் கோருகின்ற ஏராளமான
காரியங்கள் உண்டு, எனவே நேரத்தைக் கவனமாகப் பயன்படுத்துவது
இன்றியமையாததா கிறது. நாம் காத்துக் கொள்ள வேண்டிய சில
முக்கியமான சமச்சீர் நிலைகள்: தனியாக நேரம் செலவிடுவது மற்றும்
பிறரோடு நேரம் செலவிடுவது; குடும்பத்தோடு நேரம் மற்றும் குடும்பத்தினர்
அல்லாதவர்களோடு நேரம்; வேலை நேரம் மற்றும் ஓய்வு நேரம்; வேலை
நேரம் மற்றும் விளையாட்டு நேரம்; ஜெப நேரம் மற்றும் வேதவாசிப்பு நேரம்;
அவிசுவாசிகளுக்குச் சாட்சி கூறும் நேரம் மற்றும் விசுவாசிகளுக்கு உதவும்
நேரம். இந்தச் சமச்சீர் நிலையைக் கண்டு பிடிப்பதில் நமது இயற்கையான
சுபாவத்துக்குப் பெரும் பங்குண்டு. எந்த இரண்டு தலைவர்களோ அல்லது
அவர்களது பணிகளோ ஒரே மாதிரி இருப்பதில்லை. காலத்தைப்
பயன்படுத்துவதில் சமச்சீர் நிலை என்பது அந்தந்தத் தலைவர்களின்
குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு கண்டறியப்பட வேண்டும்.
தலைவர்கள் அல்லாத மக்களும் தங்களது தலைவர்களின் வாழ்வில் இந்தச்
சமச்சீர் நிலை காணப்படத் தங்களால் இயன்ற அளவிற்கு ஒத்துழைப்பு நல்க
வேண்டும். தலைவர்கள் மீ து தேவையற்ற நெருக்கடிகளைத் திணிக்கக் கூடிய,
அளவுக்கு மிஞ்சிய எதிர்பார்ப்புக்கள் இன்றி நடந்து கொள்ள வேண்டும்.
அன்பும், குழுவாக இணைந்து பணி செய்தலும் வலியுறுத்தப்பட வேண்டும்.
நாம் நமது வாழ்க்கையின் முடிவு பரியந்தம் இதைச் செய்து

கொண்டேதான் இருப்போம்.

5. தலைவர்கள் தீர்மானிக்கும் திறனும் உறுதியும் படைத்தவர்களாய்


இருக்கும்படி எதிர்பார்க்கப்படுகின்றனர், அதே வேளையில் இந்தப்
பண்புகளுக்கும், சாந்தம் அல்லது பட்சம் மற்றும் இளகிய மனம் இவற்றுக்கும்
இடையேயான ஒரு சமச்சீர் நிலையும் மிக அவசியம். இளகிய மனமானது
முடிவில்லா வேலையை விட அதிகச் சத்தமாகப் பேசக் கூடியது; இளகிய
மனம் இருப்பதுபோல் யாரும் பாசாங்கு செய்து விட முடியாது. இளகிய
அல்லது நொறுங்குண்ட மனம் என்பது, ஒரு பாவியின் இடத்தை எடுத்துக்
கொண்டு, தவறை ஒப்புக் கொண்டு, தவறான உள் நோக்கங்களை உள்ளபடி

20
அறிக்கையிட்டு, மற்றவர்களிடம் உண்மையைச் சொல்லி மன்னிப்பு
கேட்பதாகும். இது, யாராவது பதிலுக்கு ஏதாவது செய்து விட்டால் என்ன
செய்வது என்ற பயத்தில் தவறுகளைத் தட்டிக் கேட்காமல் விடுவது அல்ல.
உண்மையில் ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய தகுதிகளில்
அத்தியாவசியமானது எந்தப் பயமுறுத்தலைக் கண்டும் பணியாத
அஞ்சாநெஞ்சம் ஆகும். இன்னும் சிலர் மற்றவர்களைப் பயமுறுத்திப் பணிய
வைப்பதில், அவர்களைத் தரக் குறைவாக எண்ணச் செய்வதில் வல்லவர்கள்.
இப்படிச் செய்யாமல் நம்மைக் காக்க வல்ல ஒரு வசனம் II தீமோத்தேயு 1:7
ஆகும்: 'தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும்
தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.'

சிலர் நொறுங்குண்ட மனம் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டதன்


விளைவாக தங்களைப் பற்றியும், தங்களது ஆள்தத்துவத்தைப் பற்றியும்
ஆரோக்கியமற்ற எண்ணம் கொண்டிருக்கிறார்கள் - தங்களைத் தரக்
குறைவாக மதிப்பிட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் மிஷனெரித்
தலைவர்களாக இருப்பது சிரமம், இவர்கள் தங்கள் சொந்த நாடுகளிலும் கூட
நல்ல சீஷர்களாகவும், மிஷனெரிப் பணிக்கு அணியும் நிதியும்
திரட்டுபவர்களாகவும் இருப்பதில் கூட பிரச்சனை தான். தலைவர்கள்
என்போர் எப்பொழுதுமே எதிர்ப்பு அலைகளை எழுப்பக் கூடியவர்கள், எனவே
அதன் விளைவாக வரக்கூடிய பயமுறுத்தல்களைக் கண்டு பணியாத
வலிமை அவர்களுக்குத் தேவை. பின்விளைவுகளை ஒளிவு மறைவின்றி
உண்மையாகவும் அன்போடும் சமாளிக்கும் மனப்பாங்கு பெற்றிருக்க
வேண்டும். கடந்த 30 ஆண்டுக் காலமாக, எங்களது ஊழியத்தில் டேவிட்
ஸீமான்ட்ஸ் என்பவரின் செய்தியைத் தேவன் பயன்படுத்தி வருகின்றார்.
அதிலும் குறிப்பாக அவரது 'Healing for Damaged Emotions' (காயப்பட்ட
உணர்வுகளுக்கு சுகம்) என்ற நூல் இந்தக் குறிப்பிட்ட போராட்டத்தில்
அநேகருக்குப் பெரிதும் பயன்பட்டுள்ளது.

6.கோட்பாடுகள் அல்லது கொள்கைகள் என்ற பகுதியிலும் ஒரு


தலைவனுக்குச் சமச்சீர் நிலை அவசியம். டாக்டர். ஃபிரான்சிஸ் ஷேஃபர்
மற்றும் டாக்டர். ஜான் ஸ்டாட் ஆகியோர் கிறிஸ்தவக் கொள்கைகளில்

21
சுத்தத்தை நேசிக்க எனக்குக் கற்றுத் தந்துள்ளனர். A W டோஸர், இன்னும்
அவரைப் போன்ற வேறு பலர், அனுதினமும் தேவனுடைய பிரசன்னத்தை
அனுபவித்து அறிவதன் மதிப்பை உணர உதவியுள்ளனர். இவையிரண்டுமே
வலியுறுத்தப்பட வேண்டியது அவசியம். இவையிரண்டுக்கும் இடையே
எப்போதும் ஒரு பதட்டம் இருந்து கொண்டேயிருக்கும் - ஜீவனுக்கும்
கோட்பாட்டுக்கும் இடையே, வாழ்க்கைக்கும் கொள்கைக்கும் இடையே, ஒரு
சமச்சீர் நிலை. எனினும், கொள்கை என்பது தனிப்பட்ட நம்பிக்கைகளிலும்,
இலட்சியங்களிலும் இருந்து வேறுபடுத்தி அறியப்பட வேண்டும். அநேகத்
தலைவர்கள் தாங்கள் இப்போதுள்ள பதவிகளில் இருக்கக் காரணம், ஏதோ
ஒரு குறிப்பிட்ட பணி நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அவர்களது
தனிப்பட்ட வலுவான நம்பிக்கையே. இதில் தவறொன்றும் இல்லை,
என்றாலும் நாம் அனைவரும் கட்டாயமாக விசுவாசிக்க வேண்டிய முக்கிய
கோட்பாடுகளுக்கும், ஓரளவு கருத்து வேறுபாடுகளுக்கு இடமளிக்கக் கூடிய
மற்றக் காரியங்களுக்கும் இடையேயுள்ள மயிரிழை அளவு வித்தியாசத்தை
உணர வேண்டியது அவசியம். அநேக சபைப் பிரிவுகளின் தலைவர்கள் சபைப்
பாகுபாடற்ற ஒத்துழைப்பு நல்கப் பயப்படுகிறார்கள். அடிப்படைக் கிறிஸ்தவக்
கோட்பாடுகளுக்குப் பங்கம் வராதென்றாலும், எங்கே தங்கள்
நம்பிக்கைகளையும் இலட்சியங்களையும் விட்டுக் கொடுக்க நேருமோ.

5. மிஷ்னரிப் பணி பற்றித் தலைவர் அறிந்திருக்க வேண்டியவைகளையும்


பிறரையும் ஈடுபடுத்தி அதை நிறைவேற்ற அவர் செய்ய
வேண்டியவைகளையும் விவரிக்கவும்.
உலக மிஷனெரிப் பணி பற்றிய அறிவைப் பெருக்கிக் கொள்ளுதல்

உலக மிஷனெரிப் பணியை நமது சொந்தப் பணியாக்கிக் கொள்வதுடன்


நெருங்கிய தொடர்புடையது அது பற்றிய நமது அறிவைப் பெருக்கிக்
கொள்வதாகும். இதை நாம் வாசிப்பது, ஒலி நாடாக்களைக் கேட்பது, ஒளி
நாடாக்களைப் பார்ப்பது இவற்றின் மூலம் செய்யலாம். ஒரு முறை நாம்
விவரங்களைப் பெற்றுக் கொண்ட பின் இத்தகைய விவரங்களை
மற்றவர்களும் பெற உதவலாம். மிஷனெரிப் பணி பற்றி தற்போது கிட்டக்
கூடிய தகவல்களை இன்னும் பத்துமடங்கு அதிகமாக்க வேண்டும்,

22
நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய வேண்டுமானால் தொடர்பு சாதன
முறைமைகள் அனைத்தையும் கையாள வேண்டும் என்பது எனது கருத்து.
வதியிலும்
ீ சரி, உலகிலும் சரி மக்கள் மிஷனெரி மக்கள் அனுபவங்களைப்
பெறச் செய்ய வேண்டும். உள்ளூரில் நாம் எதையாவது செய்வது உலகில்
பெரிய தாக்கத்தையே ஏற்படுத்த முடியும் என்பதை நாம் உணர வேண்டும்.
புதிய பணியாளர்கள் நுழைவதற்கு ஏற்ற திறந்த வாசல்கள் எங்கே உள்ளன
என்பது பற்றிய விவரங்களை நாம் சேகரிக்க வேண்டியது அதிக அவசியம்.
இது பற்றிய விவரங்கள் உண்மையில் மலை போல் குவிந்துள்ளன
என்றாலும் ஒரு சராசரி மனிதனின் கையில் இவை கிட்டுவதில்லை.
மிஷனெரிப் பணிக்கு அணி திரட்டும் ஒவ்வொரு நபரும் குறைந்தபட்சம் ஒரு
டஜன் மிஷனெரி ஐக்கியங்களுடனாவது தொடர்பு கொண்டிருக்க வேண்டும்:
அவர்களது தகவல்களைப் பெற்றுத் திறந்த வாசல்களைக் கண்டறிந்து
கொள்ள வேண்டும். அதற்குக் கடிதங்கள் எழுத வேண்டியதாகலாம்,
தொலைபேசி அழைப்புகள், ஃபேக்ஸ்கள், e-மெயில்கள் தேவைப்படலாம்.
இன்றைய நாளில் இருக்கின்ற தொலைத் தொடர்பு வழிமுறைகள்
அனைத்தையும் பார்க்கையில் எதையும் செய்யாமல் இருக்க நமக்குச் சாக்குப்
போக்கே கிடையாது. அப்போஸ்தலனாகிய பவுல், தனது கரங்களில் ஒரு
'மொபைல் போன்' அல்லது 'கம்ப்யூட்டர்' வைத்திருப்பதை உன்னால் கற்பனை
செய்து பார்க்க முடிகிறதா? இவற்றையெல்லாம் தேவன் கருவிகளாக நமது
கரங்களில் கொடுத்திருக்கிறார். தொழில் நுட்பத்தைப் பார்த்து நாம் பயப்பட
வேண்டியதில்லை. இதைத் தவறாகப் பயன்படுத்தலாம் என்பது உண்மைதான்,
ஆனால் அந்தப் பயம் இவற்றைத் தகுந்த முறையில் பயன்படுத்தவே நம்மை
ஏவி விட வேண்டும். திறந்த வாசல்கள் அநேகம் உண்டு, சாதாரண மக்களும்,
மிஷனெரிப் பணிக்குச் செல்லக் கூடியவர்களும் இந்த வாசல்களைப் பற்றிக்
கேள்விப்படுகையில், நிச்சயமாகச் செயலில் இறங்குவர் என்று நம்புகிறேன்.
ஆனால் முதலில், அவர்கள் தகவல்களைப் பெற்றாக வேண்டும்.

உலகத்தின் இன்னும் சந்திக்கப்படாத மக்கள் கூட்டங்களைப் பற்றிய


திட்டவட்டமான, உடனுக்குடனான தகவல்களையும் ஜெபக் குறிப்புகளையும்
அறிந்து கொள்வதற்கு, நவன
ீ தொடர்பு சாதன முறைகளைக் கையாண்டு,
நம்மால் முடிந்த அளவு பலதரப்பட்ட தனி நபர்கள், இயக்கங்களுடன்

23
இணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை நாம் உணர வேண்டும்.
இந்த உலகம் தழுவிய பிணைப்பை ஏற்படுத்த 'Adopt A People' இயக்கம், AD 2000,
லூஸான் மற்றும் WEF போன்ற பெரிய அமைப்புகள் சிறந்த மையங்களாகக்
கூடும். இவற்றின் நடுவில், சிறிய மிஷனெரி இயக்கங்களின் முக்கியத்
துவத்தையும் நாம் மறந்து விடக் கூடாது. இவை போன்ற ஆயிரக்கணக்கான
இயக்கங்கள் உலகெங்கும் உண்டு. (மிஷனெரிப் பணியில் பல்லாண்டு
அனுபவம் பெற்ற நாம் இந்தப் புதிய சிறு இயக்கங்களுடன் நமது
அனுபவங்களைத் தாராளமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அது நாம் செய்த
சில தவறுகளை அவர்கள் தவிர்க்க உதவும். ஒருவரோ டொருவர் இணைந்து
செயலாற்றுவது முக்கியம் என நான் கூறுவதற்கு மற்றொரு காரணம் இது
தான்.) பெரிய இயக்கங்கள், சிறிய இயககங்கள், தனிப்பட்ட மிஷனெரி
அணிதிரட்டுபவர்கள் ஒருவரோடொருவர் கலந்து பேச வேண்டும்.

வலுவான தகவல் தொடர்பு பிணைப்புகளின் மற்றொரு நன்மை, உலக


சுவிசேஷப் பணியைச் சூழ்ந்துள்ள அறியாமையை விலக்க அது பெரிதும்
உதவும் என்பதாகும். நான் வாசிக்கின்ற சில காரியங்கள், காண்கின்ற சில
புள்ளி விவரங்கள் நிச்சயமாக உண்மையாயிருக்க முடியாது. உலகளாவிய
இணைய தளங்களில் இன்று காணப்படும் விபரங்கள் அதிர்ச்சியையே
ஏற்படுத்தும். சமீ பத்தில் நடைபெற்ற ஒரு பெரிய கருத்தரங்கில்,
ஆப்பிரிக்காவில் உள்ள 'கிறிஸ்தவர்களின்' எண்ணிக்கை தவறினாலோ
அப்படியே மொத்தமாக யாருடைய மறுபடி பிறந்தவர்களின்' எண்ணிக்கையாக
வெளியிடப்பட்டது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் பெயரளவு
கிறிஸ்தவர்கள் மலிந்து கிடக்கின்றனர். மக்கள் தங்களிடம் உள்ள
விவரங்களை ஆராயாமல், சரி பார்க்காமல் அவற்றை உண்மை போல
வெளியிட்டு விடுகின்றனர். சுவிசேஷப் பணியில் அரும்பெரும் சம்பவங்கள்
நடைபெற்றதாகக் கூறப்படுவதை நன்றாக ஆய்வு செய்து பார்த்தால்
உண்மையில் அப்படி எதுவும் நடக்கவேயில்லை என்பது தெளிவாகும். இது
மொத்தத்தில் எதையுமே நம்ப முடியாதபடி செய்து விடுகிறது. மிஷனெரி
இயக்கங்கள் மீ துள்ள நம்பிக்கையே போய் விடுகிறது. நாம்
வருங்காலத்திற்கான இலக்குகளைத் தீர்மானிக்கையில் சாத்தான்
நமக்கெதிராகப் பயன்படுத்தும் மிகத் தந்திரமான ஆயுதம் இதுவாகவே

24
இருக்கும். நீதிமொழிகள் 18-லும், இன்னும் வேறுபல வேத பகுதிகளிலும் நாம்
வாயைத் திறந்து பேசுமுன் நம்மிடம் உள்ள தகவல்கள் உண்மைதானா
என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

எனினும், இந்தப் பிரச்சனைகளைக் கண்டு நாம் மனம் கலங்கக் கூடாது.


அப்படிக் கலங்குவோமானால் எதையுமே சாதிக்க முடியாது. நமது
வார்த்தைகளைக் கவனமாகத் தெரிந்தெடுப்பது, உண்மைகளைச் சரிபார்ப்பது,
நமக்கு உறுதிபடத் தெரியாவிடில் அதை ஒத்துக் கொள்வது, உண்மை,
தாழ்மை, பணிவுடன் பேசுவது இவை மூலம் நாம் தகவல்களைப் பரப்பலாம்.
ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக் கடவர்கள்

என்ற பிலிப்பியர் 2:3, இந்தப் பின்னணியில் மிகமிக முக்கியமானது.
பலதரப்பட்ட இயக்கங்களுடன் நாம் தொடர்பு கொள்ளுகையில், அவர்களை
மதிக்க வேண்டும், அவர்களது பணியில் ஓர் உண்மையான ஈடுபாடு காட்ட
வேண்டும். நாம் கேள்விப்பட்ட ஏதோ ஒரு சிறிய மோசமான விஷயத்துக்காக,
அவர்களைப் பற்றி எங்கோ வாசித்த ஒரு சிறு தீ மையான காரியத்துக்காக
அவர்களை ஒதுக்கி விடாமல், எத்தனையோ வழ்ச்சிகள்,
ீ பாவங்கள்
இருந்தபோதிலும் தேவன் இந்தத் திருச்சபைகளை, இயக்கங்களை,
நிறுவனங்களை எவ்வளவு அழகாகப் பயன்படுத்துகிறார் என்பதைப்
பார்ப்போமாக.

இது ஒரு சிறந்த விதத்தில் நம்மை ஒன்று சேர்க்கும். நாம் எல்லாருமே


ஒன்று சேர்ந்து உழைப்பது என்பது நடைமுறையில் சாத்தியமல்ல, ஆனால்
கிறிஸ்துவின் சரீரமாம் திருச்சபைக்குள் இந்த மற்ற இயக்கங்கள் பற்றி
நல்லெண்ணம் கொண்டவர்களாயிருப்பது சாத்தியம். மிஷனெரிப் பணியில்
பதட்டங்கள் ஏராளம் அவற்றுள் சிலவற்றைப் பின்னர் - ஆனால்
வேற்றுமையில் ஒற்றுமை என்ற காணலாம் முரண்பாட்டை நாம் ஏற்றேயாக
வேண்டும். -

கிடைத்துள்ள கருவிகளைப் பயன்படுத்துதல் மிஷனெரிப் பணிக்கு அணி


திரட்டுவதில் பயன்படக் கூடிய தலைசிறந்த கருவிகள் அநேகம் உண்டு. ஒலி,
ஒளி நாடாக்கள், நூல்கள், கைப்பிரதிகள் என என்னுடைய சொந்தத் தபால்

25
பெட்டி மூலமாக நிரம்பி வழியும் கருவிகளைக் கண்டு நானே ஆச்சரியத்தில்
ஆழ்ந்து விடுகிறேன். வேறு ஏதோ ஓரிடத்தில் மிஷனெரிப் பணிக்கு அணி
திரட்டும் வண்ணமாக நூறு மில்லியன் இலக்கியப் பிரதிகளை விநியோகிப்பது
பற்றி எழுதியது என் நினைவிற்கு வருகிறது. அது ஒன்றும் அளவுக்கு
அதிகமல்ல. இதில் பெரும்பகுதி ஏற்கெனவே பல்வேறு திருச்சபைகளாலும்
இயக்கங்களாலும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. ஏற்கெனவே
தயாரிக்கப்பட்டு வருவதைப் பத்து மடங்கு பெருகச் செய்தால், அது
காலாகாலத்திற்கும் மிகப் பிரமாண்டமான மிஷனெரிப் பணி அணி
திரட்டலுக்கு வழி நடத்தும் என்று யோசிக்கிறேன். அதன் மூலமாக, 2000 வது
ஆண்டுக்குள்ளாக ஒவ்வொருதனிநபருக்கும் நற்செய்தி, ஒவ்வொரு மக்கள்
கூட்டத்திற்கும் ஒரு திருச்சபை என்பன போன்ற ஏற்கெனவே
ஏற்படுத்தப்பட்டுள்ள சிறந்த இலக்குகளை நிறைவேற்ற முடியும். ஆனால் இது
நடைமுறையில் உண்மையாவதற்கு புத்தாயிரமாவது ஆண்டில் பல
வருடங்கள் பிடிக்கும் என்பதை இப்போது காண்கிறேன். நாம் அதிகம்
பின்தங்கிப் போனோம் என்பதை ஒப்புக் கொள்ளவே வேண்டும்.

எண்ணிக்கைகளைப் பற்றி, குறிப்பிட்ட தேதிகளைப் பற்றி, வாய்ப்புகளின்


தன்மைகள், காலம் இவை பற்றி முடிவில்லாமல் விவாதம் செய்து கொண்டே
போகலாம். தனிப்பட்ட முறையில், தேதிகள் குறித்து உழைப்பது சரியல்ல
என்பதே எனது கருத்து. அதே வேளையில் 'எவ்வளவு சீக்கிரம் முடியுமோ
அவ்வளவுக்கு நல்லது' என்று நமது இதயங்கள் கதறுகின்றன. ஏனெனில் நாம்
ஏற்படுத்தும் இந்த இலக்குகள் எல்லாம் உண்மையில் இழந்து போன
மனிதர்களோடு தொடர்புடையவை, கிறிஸ்துவைப் பற்றிய அறிவின்றி
நித்தியத்திற்கு நேராகத் தீவிரித்து ஓடும் உண்மையான, நிஜமான மக்களைப்
பற்றியவை. இது நாம் அனைவருமே வெகு எளிதில் பங்கு பெறக் கூடிய ஒரு
காரியம். ஒரு சில (அல்லது சில நூறு) ரூபாய்களை நீ ஏன் மிஷனெரிப் பணி
அணிதிரட்டும் இலக்கியத்தில் முதலீடு செய்யக் கூடாது? வாய்ப்பு வரும்போது
பகிர்ந்து கொள்ளத் தக்கதாகச் சில பிரதிகளை எப்போதும் உன்னோடு
எடுத்துச் செல்லலாமே. நீயும் அவற்றைப் படிக்கலாம், ஆனால் பிறரும்
பணியில் பங்கு பெற உதவும் வகையில் அவர்களுக்கும் கொடுக்கலாம். உனது
வட்டில்
ீ மிஷனெரிப் பணி விழா ஒன்று சிறிய அளவில் நடத்தி அதில் ஓர்

26
ஒளிநாடாவைப் போட்டுக் காட்டலாம், அல்லது சில இலக்கியங்களைப்
பகிர்ந்து கொள்ளலாம். இறுதியில் உலகெங்கும் உள்ள கோடிக் கணக்கான
மக்களைப் பாதிக்கும் விதத்தில் இன்று தாங்கள் மிஷனெரிப் பணியில்
ஏதாவது செய்யக் கூடும் என்பதைக் கிறிஸ்தவர்கள் மட்டும் உணரச் செய்ய
முடியுமானால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு ஓர் அளவோ,
எல்லையோ இருக்காது.

மிஷனெரிப் பணி பற்றிக் கேள்விப்படுவதில்,

வாசிப்பதில் மக்கள் ஆர்வம் கொள்வார்களானால், அடுத்ததாக நாம்


அவர்களை மிஷனெரி விழாக்களுக்கு அழைத்துச் செல்லலாம். ஏறக்குறைய
ஒவ்வொரு நாட்டிலும் இன்று மிஷனெரி விழாக்கள் நடைபெறுகின்றன.
தனிப்பட்ட திருச்சபைகளும், இயக்கங்களும் நடத்தும் விழாக்களும் உண்டு.
மக்கள் இவற்றில் கலந்து கொள்ளும்படி உற்சாகப் படுத்தலாம். அங்கே
பாடப்படும் பாடல்கள் நமக்கு இஷ்டமில்லை என்பதற்காகப் போகாமல்
இருக்கக் கூடாது! (மக்கள் கிறிஸ்துவுக்கு நெருங்கி வரப் பலதரப்பட்ட
இசைகளைத் தேவன் பயன்படுத்தியிருக்கிறார் என்பதற்கு வரலாறு சான்று
பகருகையில், கிறிஸ்துவின் சரீரமாம் திருச்சபை இசைகளின் விதத்தைக்
காரணம் காட்டிச் சண்டை போட்டுக் கொண்டிருப்பது எத்தனை பரிதாபம்!)
கொண்டிருக்க வேண்டாமே.

உடன்பாடற்ற காரியங்களையே பெரிதுபடுத்திக்

எப்படி உடன்படுவது, எப்படி கருத்து வேறுபடுவது, கிறிஸ்தவ வாழ்க்கையை


நடைமுறையில் எப்படி வாழ்ந்து காட்டுவது, மிஷனெரிப் பணிக்கென
மக்களை எப்படி அணிதிரட்டுவது, முழு உலகத்திற்கும் சுவிசேஷத்தை எப்படி
வழங்குவது என்பவற்றை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். மிஷனெரிக்
கூடுகைகள், வைபவங்கள் எவ்வளவு சிறிய அளவிலானதாக இருப்பினும்
அவை பற்றிய விவரங்களை ஒருவரோடொருவர் பகிர்ந்து கொள்ள
வேண்டும். இவற்றை ஒழுங்கு செய்கின்ற, அல்லது வேறு விதங்களில் பங்கு
பெற்றுள்ள நம்மைப் போன்றோர் அங்கு வரக்கூடிய பலதரப்பட்ட
மக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். சர்ச்சைகளை உருவாக்கக் கூடிய

27
எதையும் வேண்டுமென்றே செய்யாதிருப்போம். அப்படிச் செய்வது 'நான்' என்ற
அகங்காரத்துக்கு வழி வகுக்கும். சில விதமான மக்களின் சிறப்பான கவனம்
நம்மீ து விழுகிறது, இதுவும் நல்லதல்ல. நம்மோடு உடன்படாத மக்களின்
கருத்துக்களையும், நாம் மிதமிஞ்சி செய்கிறோம் என்று எண்ணும்,
மிகைப்படுத்திப் பேசுகிறோம் என்று கூறும் மக்களின் எண்ணங்களையும்
கேட்டறிய வேண்டும். இப்படியாக நாம் ஒற்றுமையை உருவாக்கலாம்,
நிறைவேற்றலாம். தலையாய முன்னுரிமைகளை

மிஷனெரிப் பணிக்கு அணி திரட்டக் கூடிய ஒரு வலுவான ஆயுதம்


முறையான கல்வியாகும். பெரும்பாலான வேதாகமக் கல்லூரிகள் மிஷனெரிப்
பணிக்கென்ற அர்ப்பணம் உடையவை. தொன்று தொட்டே மிஷனெரி
நிறுவனங்கள் இவற்றோடு இணைந்து உழைத்து வருகின்றன. ('வேதாகமக்
கல்லூரிக்கு ஏன் போக வேண்டும்?' என்ற எனது ஒலி நாடா உலகைச் சுற்றி
வந்துள்ளது.) ஏராளமான கிறிஸ்தவக் கல்லூரிகள் (இவற்றுள் பல இன்று
பல்கலைக் கழகங்களாகி விட்டன) மிஷனெரி அறைகூவல் விடுப்பவை; இது
பொதுவாக வட அமெரிக்காவில் காணப்படும் பண்பு. இங்கிலாந்தில்
பல்கலைக் கழகங்களிலும் உயர்கல்வி நிலையங்களிலும் இயங்கி வரும்
கிறிஸ்தவ யூனியன்கள் மிஷனெரிப் பணிக்கு மக்களை அணி திரட்டுவதில்
பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த எல்லாச் சாதனங்களையும் உள்ளடக்கிய
ஒரு செயல்திட்டம் நமக்கு அவசியம். உன்னை ஒரு மிஷனெரிப் பணிக்கு
அணி திரட்டுபவனாகக் கருதுவாய் என்றால் இப்படிப்பட்ட இடங்கள் பற்றிய
விவரங்களைச் சேகரி; முடிந்தால் நேரில் சென்று பார்த்து வா. அவை என்ன
செய்கின்றன என்பது பற்றிய விவரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்.

6. சுவிஷேசம் அறிவிக்கிற மிஷ்னெரிப் பனியின் பிரச்சனிகள், பணத்


தேவை போன்றவை பற்றியும் இவற்றில் தலைவரின் அணுகுமுறை
பற்றியும் எழுதுக.
உணர்வுகளை மதியாதிருத்தல் மேற்கத்திய மிஷனெரிகள் தேவையில்லை,
அதற்குப் பதிலாக பணத்தை மட்டும் அனுப்பி சுதேச ஊழியர்களைத்
தாங்கலாம் என்று வாதிடுவோர் மேற்கத்திய மிஷனெரிகளின் பணியோடு
கரங்கோர்த்துச் செல்லும், கலாச்சார உணர்வுகளை மதியாதிருத்தல் பற்றி

28
வலியுறுத்துகின்றனர். இது நிச்சயமாகக் கவலையளிக்கும் விஷயம் தான். சில
இடங்களில் மேற்கத்திய மிஷனெரிக்கும் சுதேசத் திருச்சபைக்கும் இடையே
ஒரு பெரிய சுவரே எழும்பி விடுகின்றது. சுதேச ஊழியர்களே கூடத் தங்கள்
சொந்த நாடுகளிலுள்ள மற்றப் பண்பாடுகளைச் சார்ந்த மக்களின்
உணர்வுகளை மதியாமல் நடந்து கொண்ட சம்பவங்கள் ஏராளமுண்டு. இரு
பக்கத்திலும் குற்றமுண்டுஎன்றாலும், பொதுவாக மேற்கத்திய மிஷனெரிகள்
தங்களது பண்பாடு மற்றும் இறையியல் மூட்டைகளைத் தங்களோடு சுமந்து
வருகின்றனர், விளைவாக சட்டதிட்டங்களை மிகைப்படுத்தி, கிருபை காட்டத்
தவறி விடுகின்றனர் என்பது உண்மையே. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த
நமது தவறு, நாம் பணிபுரியும் கலாச்சாரத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளக்
கூடிய எளிமையான வாழ்க்கைத் தரம் அற்றவர்களாய் இருப்பதே. நாம்
வரும்போதே ஏராளமான மூட்டை முடிச்சுகளுடன் வந்து சேருகிறோம். சில
கலாச்சாரங்களில் அது ஏகப்பட்ட குழப்பத்தை உண்டாக்குகிறது. இந்தப்
பிரச்சனை பற்றி லூஸான் உடன்படிக்கை கூறுகிறது:

மிஷனெரிப்

பல சமயங்களில், பணி என்பது சுவிசேஷத்துடன் சேர்த்து ஓர் அந்நிய


கலாச்சாரத்தையும் ஏற்றுமதி செய்து விடுகிறது. சில வேளைகளில், சபைகள்
வேதவசனத்துக்கு அடிமைப்பட்டிருப்பதற்குப் பதிலாகப் பண்பாட்டிற்கு
அடிமையாகி விடுகின்றன. கிறிஸ்துவின் சுவிசேஷகர்கள், மற்றவர்களுக்கு
ஊழியர்களாக இருக்கும் பொருட்டு தங்களது உண்மை ரூபம் தவிர
மற்றெல்லாவற்றையும் விட்டுத் தங்களை வெறுமையாக்க நாட வேண்டும்.
திருச்சபைகளும் தேவ நாம் மகிமைக்கென்று கலாச்சாரங்களை
மாற்றியமைக்கவும். அவற்றுக்குப் புதுப்பொலிவு சேர்க்கவும் முயல வேண்டும்.

ஓரளவிற்கு இது, மிஷனெரிகளைத் தேர்ந்தெடுப்பதிலும் பயிற்சியளிப்பதிலுமே


சரி செய்யப்பட முடியும். குறுகிய கால மிஷனெரிப் பணி செய்யும்
காலத்திலேயே இவற்றைச் சரி செய்ய முடியவில்லை என்றால், ஒருவேளை
அவர்கள் மிஷனெரிகளாகப் பணித் தளங்களுக்குச் செல்லவே கூடாது.

29
குறுகிய காலப் பணித் திட்டத்தின் நற்பயன்களில் இதுவும் ஒன்று. OM இன்
இரகசியங்களில் ஒன்று, அநேகர் எங்களுடன், இருக்கும் காலங்களில் தங்களது
'மிஷனெரி அழைப்பிலிருந்து' விடுவிக்கப்படுகின்றனர் என்பதாகும்! கடினமான,
கலாச்சாரம் கடந்த மிஷனெரிப் பணி சூழ்நிலைகள் தங்களுக்கு ஒத்து வராது
என்று இவர்கள் உணர்ந்து கொள்கின்றனர். இப்படித் தகுதியற்றவர்களை
வடிகட்டி எடுத்து விடும் முறைமை விலை மதிப்பு மிக்கது.

சார்ந்து வாழ்தல்

மேற்கத்திய நாடுகள் மிஷனெரிகளை அனுப்பக் கூடாது, பணம் அனுப்பி


சுதேச ஊழியர்களைத் தாங்க வேண்டும் என்ற வாதத்தினால் எழும்பும்
பெரும் பிரச்சனை சார்ந்து வாழ்தல் என்பதாகும். இந்த அணுகுமுறையின்
சாதக, பாதகங்களை எனது ஆரம்ப நாட்களிலேயே கற்றுக் கொண்டு
விட்டேன். நான் முதல் முறையாக மெக்ஸிகோ சென்ற போது கல்லூரி
மாணவனாக இருந்தேன். எனவே பணம் திரட்டி மட்டும் அனுப்பினேன், அந்தப்
பணத்தினால் மெக்ஸிகர்களை அணி திரட்டி ஊழியம் செய்ய வைத்தேன்,
அவர்கள் செய்த பணிக்காக ஜெபித்தேன். நான் முதன் முதலில் சேர்ந்து
உழைத்த சுதேச ஊழியர் ஒருவரின் பெயரைத் தான் எங்களது முதல்
மகனுக்கு இட்டோம். அவர் அமெரிக்கப் பணத்தில் வாழ மனமற்றவராய்
சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் ஊழியம் செய்வதையே நிறுத்திவிட்டார். அவர்
ஒரு மெக்ஸிகன், அமெரிக்கப் பணத்தில் வாழ அவருக்குப் பிடிக்கவில்லை.
10,000 மைல்களுக்கு அப்பால் வேறொரு நாட்டிலும், வேறொரு பண்பாட்டிலும்
உழைக்கும் மக்களைத் தாங்க ஒரு நாட்டிலிருந்து பெருமளவு பணம் வர
வேண்டியதாகும் போது அது பல மன வேதனைகளையும், குழப்பங்களையும்
ஏற்படுத்துகிறது.

உதாரணமாக, இந்தியாவில் நாங்கள் செய்யும் பணியில் ஆண்டு நிதி


ஒதுக்கீ ட்டின் பெரும்பகுதி இந்தியாவிலிருந்தே வர வேண்டும் என்று
எதிர்பார்க்கிறோம்; இது மிகக் கடினம். வேதாகம அடிப்படையில் நிதி
திரட்டுவது எப்படி என்று கற்பிக்கிறோம். அதற்காக 'Friend Raising' (நண்பர்களைத்
திரட்டுதல்') மற்றும் 'People Raising' (மக்களைத் திரட்டுதல்) போன்ற நூல்களைப்

30
பயன்படுத்துகிறோம். இந்தப் புத்தகங்கள் வெளிநாட்டு மிஷனெரிகளுக்கு
மட்டுமல்ல, உள்நாட்டு ஊழியர்களுக்கும் அவசியம். OM தனது
உலகமயமாக்கும் கொள்கைக்குப் பெயர் போனது. ஏனெனில் 80 வெவ்வேறு
நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடையதல்லாத 1 டஜன் வெளி நாடுகளில்
பணி செய்கின்றனர். ஆனால் புதிதாக மிஷனெரிகளை அனுப்பத்
தொடங்கியிருக்கும் நாடுகளிலிருந்து வருவோர் தங்கள் ஆதரவைத் தங்கள்
சொந்த நாடுகளிலிருந்தே - அதிலும் பெரும்பகுதியைத் தங்கள்
திருச்சபையிலிருந்தே திரட்டித் தராத பட்சத்தில் நாங்கள் அவர்களை
ஏற்பதில்லை. நீண்ட கால அளவில், முன்னேறிச் செல்ல இதுவே சரியான
வழி என்று நாங்கள் கருதுகிறோம். வளமான எதிர்காலம் என்பது மேற்கத்திய
நாடுகளிலிருந்து, உதவி பெறும் நாடுகளுக்கு அளவில்லாமல் பணம்
வாரியிறைக்கப்படுவதில் இல்லை.

சில வேளைகளில் இந்தப் பணமானது சற்றே திசை திருப்பப்படுகிறது.


அதாவது உள்நாட்டுக் கிறிஸ்தவர்கள் உயர் கல்விக்கும் பயிற்சிக்கும்
மேற்கத்திய நாடுகளுக்குச் செல்ல ஊக்குவிக்கப்படுகின்றனர். மேற்படிப்புக்காக,
உதாரணமாக, ஒரு ஆப்பிரிக்க சகோதரன் அல்லது சகோதரியைத் தனது
கலாச்சாரத்தை விட்டு ஐந்தாறு மாதங்கள் வெளியே செல்லச் சொல்வது
அவ்வளவு நல்லதல்ல என்று எண்ணுகிறேன். சில குறிப்பிட்ட
சூழ்நிலைகளுக்கு அது ஒத்துவரலாம், ஆனால் இது சிறந்த வழியல்ல. சிறந்த
வழி, இம்மக்கள் தங்கள் சொந்தக் கலாச்சாரத்திலேயோ அல்லது சமீ பத்தில்
உள்ள ஒரு கலாச்சாரத்திலேயோ முடிந்த அளவு உயர்கல்வியைப்பெறுவது
தான். மக்கள் மேற்படிப்புக்காக மேல்நாடு சென்று விட்டு, திரும்பி வந்து
தங்கள் சொந்தக் கலாச்சாரத்தில் ஒட்ட முடியாமல் தத்தளிப்பதை எனது 40
ஆண்டுகால அனுபவத்தில் கண்கூடாகப் பார்த்து வருகிறேன். என்னோடு கூட
மூடி வேதாகமக் கல்லூரியில் பயின்ற இந்தியக் கிறிஸ்தவ சகோதரர்,
இந்தியா திரும்பினார். ஆனால் அங்கே வாழ முடியாமல் அமெரிக்கா
திரும்பினார், தனது மிஷனெரி அழைப்பை விட்டு விட்டார், அங்கேயே
சுகமாகக் குடியேறி விட்டார். உண்மையில் ஆயிரக்கணக்கானோர் மேற்கத்திய
நாடுகளிலிருந்து திரும்புவதேயில்லை, அப்படியே திரும்பினாலும் ஓரிரண்டு
ஆண்டுகள் தாயகத்தில் இருந்து விட்டு, மீ ண்டும் அமெரிக்கா சென்று

31
வசதியாக வாழ ஆரம்பித்து விடுகின்றனர். இவர்கள் குற்றவுணர்வு கொள்ளச்
செய்ய வேண்டாம். இன்னும் இயேசுவோடு சரியான உறவில்
இருப்பார்களானால் தேவனுக்கு ஸ்தோத்திரம். எனினும், மக்களை மிஷனெரிப்
பணிக்காக இம்முறையில் பயிற்றுவிப்பதில் உள்ள அபாயங்களை நாம்
அறிந்து வைத்திருப்பது நல்லது.

தங்கள் சொந்த நாட்டு மக்களை, சொந்த நாட்டு ஊழியத்திற்காகப் புத்தகங்கள்,


மற்ற சாதனங்கள், கூடவே பண உதவி கொடுத்து ஆயத்தம் செய்வதில்
முனைந்துள்ள மக்களையும், அவர்களது இயக்கங்களையும் மனமுவந்து
பாராட்டுகிறேன். ஆனால் மக்கள் தங்கள் சொந்த நாடுகளில் பணி
செய்வதற்காக மேற்கிலிருந்து நாம் பெரிய தொகைகளை அனுப்பி
உதவுகையில் சார்ந்து வாழ்தலும், பரம்பரை ஆட்சியும் எளிதில் உள்ளே
நுழைந்து விடுகின்றன. இப்படிப் பணமே அனுப்பக் கூடாது என்று நான்
சொல்லவில்லை. ஆனால் விலைக் கிரயத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்,
நாம் என்ன செய்ய முயலுகிறோம் என்ற உண்மை நிலையை எதிர்கொள்ள
வேண்டும், வெவ்வேறு அணுகு முறைகளைப் பற்றி ஒட்டு மொத்தமாக
எதிர்மறைக் கருத்துகளைக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும் என்றே
கூறுகிறேன். உள்நாட்டு சுவிசேஷகர்களையும், மிஷனெரிகளையும்
வெளியிலிருந்து பணம் அனுப்பித் தாங்குவது உள்நாட்டுத் திருச்சபைக்குப்
பேருதவியாகும். ஏனெனில் இது திருச்சபையின் சுமையை வெகுவாகக்
குறைக்கிறது. ஆனால் இதிலும் ஒரு குறை உண்டு: சபை அனுப்பத் தவறி
விடுகிறது.

செலவு பற்றிய வாதம்

இந்த விவாதத்திலேயே ஒரு கடுமையான வாக்குவாதம், மேற்கத்திய


மிஷனெரி ஒருவருக்கு ஆகும் செலவை விட, உள்நாட்டு ஊழியர் ஒருவருக்கு
ஆகும் செலவு மிக மிகக் குறைவு என்பதாகும். இதற்கு ஆதாரமாகக்
கூறப்படும் சில புள்ளி விபரங்களை அத்தியாயத்தின் முன்பகுதியில்
குறிப்பிட்டிருந்தேன். பணம், செலவேயில்லாத சுதேச ஊழியர், ஏராளமான
செலவை இழுத்து வைக்கும் மேற்கத்திய மிஷனெரி இவர்கள் பற்றிய

32
ஒப்பீடுகள் அளவுக்கு மிஞ்சித் திரித்துக் கூறப்படுகின்றன. இது எனக்கு
வருத்தமளிக்கிறது.

உள்நாட்டு ஊழியர்கள் மணமாவதற்கு முன் அதிகச் செலவின்றி


வாழ்ந்தாலும், குடும்பமாகும்பொழுது திடீரென்று செலவினங்கள் மலைபோல்
ஏறி விடுகின்றன, அதுவும் பிள்ளைகளை மிகச்சிறந்த பள்ளிகளிலோ, வெளி
நாடுகளிலோ படிக்க வைக்க எண்ணினால், செலவைப் பற்றிக் கேட்கவே
வேண்டாம். இதையெல்லாம் இந்த வாதம் செய்வோர் கவனிப்பதாகவே
தெரியவில்லை. உள்நாட்டு ஊழியர்களை நான் குறை சொல்லவில்லை,
ஆனால் இப்படிச் செலவுகள் ஏறிக் கொண்டே போகையில், மேற்கத்திய
மிஷனெரியை என்ன காரணத்துக்காக வேண்டாமென்று சொன்னோமோ அதே
பிரச்சனை தலை தூக்குவது வேடிக்கைதானே! மிஷனெரிப் பணித்தளங்களில்
மிகக் குறைந்த செலவில் தாங்கப்படுவோர் பொதுவாக, குறுகிய கால
மிஷனெரிப் பணிக்கு வரும் மேற்கத்தியர்களே. இதற்குச் சில விதிவிலக்குகள்
இருக்கலாம், ஆனால் அவர்களது ஓராண்டுத் தேவைகளைச் சந்திக்கச் சில
ஆயிரம் பவுண்டுகள் போதும் என்பதை எனது அனுபவத்தில் கண்டுள்ளேன்.
அவர்கள் பெரிய அறைகளில் பிறரோடு வசிப்பிடத்தைப் பகிர்ந்து கொண்டு
வாழக் கூடியவர்கள். உலகத்தின் வேறெந்த இடத்திலும் வாழ்வதை விட
மிகமிகக் குறைந்த செலவில் கிறிஸ்தவப் பணியாளர்கள் வாழக்கூடிய இடம்
OM மற்றும் YWAM கப்பல்கள் ஆகும்; உண்மை தான், அவர்களுக்கு ஒரு சில கன
அடிகள் மட்டுமே இடம் கிடைக்கும். அதிலும், வெகுசில குடும்பங்களுக்கு
மட்டுமே இடம் இருக்கும்.

மிஷனெரிகளுக்கு அதிகச் செலவாகிறது என்று குறைப்பட்டுக் கொள்ளும் சில


திருச்சபைகள் உண்மையில் தாங்கள் பணத்தை எப்படிச் செலவழிக்கிறோம்
என்று ஆராய வேண்டியது அவசியம். சபையிலிருந்து அனுப்பப்படும்
மிஷனெரிகளை விட சபையின் போதகர்களுக்கு அதிகச் சம்பளம்
கொடுக்கப்படுவதைப் பார்க்கிறேன். அதற்கு மேலே அவர்களுக்கு பெரிய வடு

ஒன்று, இன்னும் அப்படி, இப்படி ஏதேதோ கூடுதல் சலுகைகள் வேறு. (சில
சிறிய திருச்சபைகளுக்கு இது பொருந்தாது, அவற்றின் போதகர்களுக்குக்
கிடைக்கும் சம்பளம் உயிர்வாழப் போதுமானதல்ல, மேஜையில் சாப்பாடு

33
வேண்டுமென்றால் இவர்கள் பகுதி நேரமாவது வேறு ஏதாவது தொழில்
செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்.) பல இலட்சாதிபதிகளை உறுப்பினராகக்
கொண்ட ஒரு சபை, 70 இலட்சத்திற்கும் 80 இலட்சத்திற்கும் திட்டம் போட்டு
கட்டடங்களைக் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு சபை, ஒரு மிஷனெரிக்
குடும்பம் வெளிநாட்டில் மிஷனெரிப் பணி செய்யும்படி அனுப்பிவைப்பதற்கு
ஆண்டுக்கு 30,000 பவுண்டுகள் திரட்ட முடியவில்லை என்று புலம்புவது
எனக்கென்னவோ அற்பத்தனமாகத் தான் படுகின்றது.

ஒரு மிஷனெரியைத் தாங்குவதற்கு ஆகும் செலவு, அவர் உலகில் எந்த


இடத்தில் பணி செய்கிறார் என்பதைப் பொறுத்து மாறுபடுகின்றது. இந்தச்
சிக்கல், உதாரணமாக இந்தியாவில் ஒரு மிஷனெரியைத் தாங்குவதும்
பிரான்ஸில் ஒரு மிஷனெரியைத் தாங்குவதும் வெவ்வேறான காரியங்கள்
என்பது, பொதுவாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. உள்நாட்டு
ஊழியர் ஒருவரை ஆதரிக்க ஒரு மாதத்துக்கு 25 பவுண்டுகள் போதும்
என்போரின் பொறுப்பில்லாத் தன்மையும் இதோடு சேர்ந்து கொள்கிறது. அது
உண்மையே அல்ல. காரியங்கள் அவ்வளவு சுலபமே அல்ல. ஒரு வேளை
இங்கிருந்து 25 பவுண்டு, அங்கிருந்து 25 பவுண்டு, பிறகு பகுதி நேர
வேலையிலிருந்து கொஞ்சம் என இதெல்லாம் சேர்ந்தால் தான் முடியும்.
எனினும், இப்படி வெகு குறைந்த ஊதியமளிப்பது பல சமயங்களில்
ஊழியர்களுக்குப் பண நெருக்கடியை உருவாக்குவதுடன், அவர்களைப்
பணத்தில் நேர்மையற்றவர்களாகவும், ஊழியத்தில் வரும் பணத்தை
உண்மையான முறையில் கையாள இயலாதவர்களாகவும் மாற்றுகிறது.

சில நாடுகளில், சிலர் தேவனுடைய அழைப்பைப் பெறாத மக்களைக்


குறைந்த ஊதியத்தில் தேவனுடைய பணியைச் செய்வதற்காகக் கூட்டிச்
சேர்த்து வருகின்றனர். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஏதோ ஒரு வேலை,
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடு கிறது, ஆகவே
கிறிஸ்தவப் பணியில் சேர்ந்து கொள்கிறார்கள். உன்னிடம் பணமிருந்தால்
போதும், இவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம். பொதுவாக
இவர்களுக்குச் சரியான பயிற்சி என்று ஏதுமிராது, வாழ்க்கைகளும்
தாறுமாறாக இருக்கும். இவர்களுக்குத் திருமணமாகிறது, குழந்தைகள்

34
பிறக்கிறார்கள். இவர்களுக்குக் கிடைக்கும் அந்த அற்ப சம்பளம் குடும்பத்
தேவைகளைச் சரிக்கட்டுவதில்லை. ஆக மனக்கசப்பும், வேதனையும்,
குழப்பமும் மேலிடுகின்றன. உலகைச் சுவிசேஷமயமாக்கும் அரும்பெரும்
பணியில் இவற்றுக்கு இடமளிப்பது சரிப்பட்டு வராது.

மிஷனெரிகளைத் தக்க முறையில் ஆயத்தம் செய்வதற்கு ஒரு பெரிய


முதலீடு அவசியம் என்பதை உணர வேண்டியது அவசியம். உள்நாட்டு
ஊழியர்களை ஆதரிப்பது வேலையைத் துரிதமாகச் செய்து முடிக்க உதவும்
அற்புதமான குறுக்கு வழி என்று எண்ணுவோமானால் ஒரு பெரிய தவறு
செய்கிறோம் என்பதை விளங்கிக் கொள்வதும் அவசியம். உலக மிஷனெரிப்
பணியில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க, பணத்தை ஜாக்கிரதையாய்க் கையாள
எத்தனையோ வழிகள் இருந்தாலும், சிக்கலற்ற குறைந்த செலவிலான,
'தள்ளுபடி' வழங்கப்படும் குறுக்கு வழி என எதுவும் கிடையாது. தாயகத்திலும்
சரி, கடல் கடந்தும் சரி, அது மிஷனெரியின் குறுகிய மனமோ, அல்லது
உள்நாட்டு சபையின் குறுகிய மனமோ - எந்தக் குறுகிய மனதிலிருந்தும்
நம்மை விடுவிக்க இன்னும் முழுமையான விபரங்கள் தேவையாகின்றன.
பணத்தின் பெரும்பகுதி வெளிநாட்டிலிருந்தே வரும்போது உள்ளூர்த்
திருச்சபை ஓரங்கட்டப்படுகிறது.

பணத்தை அனுப்பி உள்நாட்டு ழியர்களை ஊ ஆதரிப்போம் என்று கூறும்


ஒரு சாரார், இல்லை, நமது நாடு அல்லது சபையிலிருந்து மிஷனெரிகளையே
அனுப்புவோம் என்று சொல்லும் இன்னொரு சாரார் - இவர்கள் நடுவே
காணப்படும் ஒற்றுமையின்மை நமக்குச் சரிக்கட்டி வராது. வெறும் பணத்தை
மட்டும் அடிப்படையாக வைத்து எல்லாவற்றையும் தீர்மானித்து விட
முடியாது. பணம் திரட்டுதல்

இந்த அத்தியாயத்தில் முதலாவது நான், மிஷனெரிப் பணியில் தானே ஈடுபட


விரும்பும், மேற்கண்ட விதத்தில் ‘விசுவாசத்தில்' வாழ விரும்பும் ஒரு நபரின்
கண்ணோட்டத்திலிருந்து நிதி ஆதாரம் பற்றிப் பார்க்க விரும்புகிறேன்.
இரண்டாவது பகுதியில் மிஷனெரிப் பணிக்காகத் திருச்சபையிலிருந்து
கொடுப்பது பற்றிக் கொஞ்சம் பேச விரும்புகிறேன்.

35
பணம் திரட்டுதல் என்ற இந்தச் சிக்கல் நிறைந்த விஷயத்தில், நிறுவனத்துக்கு
நிறுவனம், நபருக்கு நபர் அணுகுமுறைகள் மாறுபடுகின்றன. 'People Raising'
(மக்களைத் திரட்டுதல்) என்ற தனது ஒப்பற்ற புத்தகத்தில் வில்லியம்
டில்லான் பலவேறுபட்ட வழிவகைகள் பற்றி எழுதுகிறார். 'A Practical Guide to
Raising Support' (நிதி திரட்டுவதற்கு ஒரு நடைமுறைத் துணைவன்) என்று
உபதலைப்பிடப்பட்டுள்ள இந்நூல், ஜெபம் மட்டுமே செய்ய வேண்டும் என்ற
ஜார்ஜ் முல்லரின் முறையில் தொடங்கி, ஜெபம், விபரங்கள், பணத்திற்கு
வேண்டுகோள் விடுத்தல் ஆகிய அனைத்தும் வேண்டும் என்ற D.L. மூடியின்
முறையில் முடிவுறுகின்றது. நடுவில், ஜெபமும் வேண்டும், விபரங்களும்
வேண்டும், ஆனால் பணம் வேண்டும் எனக்கேட்கக் கூடாது என்று கூறும்
ஹட்ஸன் டெய்லரின் முறையையும் விவரிக்கத் தவறவில்லை. இறுதியாக
ஆசிரியர் சொல்கிறார்: 'கேள்வி என்னவென்றால்: நிதி ஆதாரத்தைத்
திரட்டுவதற்கு வேதவசனம் கூறும் ஒரே வழி முறை என்ன? என்பது தான்.
ஆனால் அதற்குப் பதில், ஒரே முறை என்று எதுவுமே கிடையாது.
எத்தனையோ மாதிரிகளும், வழிமுறைகளும் இருக்கின்றன என்பதே.'

திருச்சபையில் நிலவி வரும் சிக்கலான மற்றெல்லா விவாதங்களையும்


போலவே, தேவ ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவதில் திருச்சபையின் பொறுப்பு
என்ற முழுச் சித்திரத்தையும் ஒரு சமச்சீரான கண்ணோட்டத்துடன் பார்க்க
வேண்டும். டில்லான் கூறுவது போல, இது மற்ற குழுக்கள், நபர்களின்
வழிமுறைகளை மதிப்பதாகும். இராஜ்யத்தின் பணிக்காகக் கொடுப்பவர்கள்
தங்கள் செல்வச் செழிப்பிலிருந்து கொடுத்தாலும், கொடிய வறுமையிலிருந்து
கொடுத்தாலும் அவர்களுக்கு நன்றியுணர்வு காட்டுவதுமாகும்.

மக்கள் உலகளாவிய நிலைமையைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், பண


விஷயத்தில் நல்ல தெளிவான தகவல் பரிமாற்றங்கள் இன்றியமையாதவை.
பணத்தைப் பற்றிப் பேசுவது ஆவிக்குரிய வாழ்விற்கு ஏற்றதல்ல என்ற
மனப்பான்மை மாற வேண்டும். பண விஷயங்களில் வேதாகம விதிகளைப்
பற்றிய அறிவு அதிகரிக்க வேண்டும் என்றும், எல்லாவற்றுக்கும் மேலாக
நமது 'நிதி-திரட்டும்' முறைகள் என்னவாக இருந்தாலும், காசோலைகளில் யார்
கையெழுத்திட்டாலும், இறுதியில் பார்க்கப் போனால், நமது தேவைகள்

36
அனைத்தையும் சந்திப்பவர், நமது நன்றி அனைத்துக்கும் உரியவர் தேவன்
மாத்திரமே என்ற மனப்பான்மை ஓங்க வேண்டும் என்றுமே கெஞ்சிக்
கேட்கிறேன்.

37

You might also like