Sub Code 301

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 33

புதிய ஏற்பாடு

பாடப்பிரிவு : வேதாகம புத்தகங்கள் பாட எண் : 301

பாடத்தின் தலைப்பு : புதிய ஏற்பாட்டுக் கண்ணோட்டம்

1. புதிய ஏற்பாட்டில் உள்ள எல்லாப் புத்தகங்களின் பெயர்களையும்


பட்டியலிடவும்

முன்னுரை :
பரிசுத்த வேதாகமம் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் ஒரு முக்கிய உரை,
ஆனால் ஒரு பழைய ஏற்பாடு மற்றும் ஒரு புதிய ஏற்பாடு உள்ளது என்ற
உண்மையைவிட மிகக் குறைவான மக்கள் அதன் கட்டமைப்பைப்
புரிந்துகொள்கிறார்கள். டீனேஜர்கள், குறிப்பாக, தங்கள் விசுவாசத்தை
வளர்த்துக்கொள்வதுபோல், பைபிள் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது அல்லது
எப்படி, ஏன் அதை எப்படி வழிபடுவது என்பதில் தெளிவாக இருக்காது. இந்த
புரிதலை வளர்ப்பது இளைஞர்களுக்கு உதவும் - மற்றும் எல்லா
கிறிஸ்தவர்களுக்கும், அந்த விஷயத்தில் - அவர்களுடைய விசுவாசத்தை
பற்றிய தெளிவான புரிதல் வேண்டும்.
புதிய ஏற்பாட்டின் கட்டமைப்பைப் புரிந்துகொள்வது, குறிப்பாக
கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால்
கிறிஸ்தவ சர்ச்சின் கோட்பாட்டின் அடிப்படையில் இது புதிய ஏற்பாடு ஆகும்.
பழைய ஏற்பாடு எபிரெய வேதாகமம் அடிப்படையாகக் கொண்டாலும், புதிய
ஏற்பாடு இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் போதனைகளுக்கு
அர்ப்பணித்திருக்கிறது.

புதிய ஏற்பாட்டைப் பற்றி சில அடிப்படை உண்மைகள் :.

புதிய ஏற்பாட்டில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை : 27 புதிய ஏற்பாட்டில்

புத்தகங்கள் வகைகள் : புதிய ஏற்பாட்டில் மூன்று வகையான புத்தகங்கள்


உள்ளன. அவர்கள் வரலாற்று புத்தகங்கள், பவுலின் கடிதங்கள், மற்றும்
பொதுவான எபிஸ்ட்லிஸ்.

1
வரலாற்று புத்தகங்கள் :
புதிய ஏற்பாட்டின் வரலாற்று புத்தகங்கள் நான்கு சுவிசேஷங்களாக
இருக்கின்றன –
 மத்தேயுவின் சுவிசேஷம்,
 மாற்கு சுவிசேஷத்தின்படி,
 லூக்காவின் சுவிசேஷம்,
 யோவான் சுவிசேஷம்,
 அப்போஸ்தலருடைய நடபடிகள்.

இந்த அத்தியாயங்கள் ஒன்றாக இயேசு மற்றும் அவரது சர்ச் கதை


சொல்ல. புதிய ஏற்பாட்டின் எஞ்சிய பகுதியை நீங்கள் புரிந்துகொள்ளும்
கட்டமைப்பை அவர்கள் அளிக்கிறார்கள், ஏனென்றால் இந்த புத்தகங்கள்
இயேசுவின் ஊழியத்திற்கு அஸ்திவாரம் அளிக்கின்றன.

பவுலின் கடிதங்கள் :
எபிஸ்டுகள் என்ற வார்த்தை எல் எட்ரெர்ஸ் என்பதாகும், புதிய ஏற்பாட்டின்
ஒரு சிறந்த பகுதியை அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய 13 முக்கியமான
கடிதங்களைக் கொண்டது, பொ.ச. 30 முதல் 50 ஆண்டுகளில் எழுதப்பட்டிருப்பதாக
நினைத்தேன். இந்தக் கடிதங்களில் சில ஆரம்பகால கிறிஸ்தவ சர்ச்
குழுக்களுக்கு எழுதப்பட்டிருந்தன, மற்றவை மற்றவர்களுக்கு எழுதப்பட்டிருந்தன,
முழு கிறிஸ்தவ மதத்தின் அடிப்படையிலிருந்த கிறிஸ்தவ கோட்பாடுகளின்
வரலாற்று அடிப்படையையும் அவை ஒன்றாக இணைக்கின்றன.

தேவாலயங்களுக்கு பவுலின் கடிதங்கள் :

 ரோமர்
 1 கொரிந்தியர்
 2 கொரிந்தியர்
 கலாத்தியர்
 எபேசியர்
 பிலிப்பியர்
 கொலோசெயர்
 1 தெசலோனிக்கேயர்
 2 தெசலோனிக்கேயர்

2
தனிநபர்களுக்கான பவுலின் கட்டுரைகள்:
 1 தீமோத்தேயு
 2 தீமோத்தேயு
 தீத்து
 பிலேமோன்

பொது கட்டுரைகள்
பல்வேறு கட்டுரைகள் மற்றும் சபைகளில் பல்வேறு எழுத்தாளர்கள்
எழுதிய கடிதங்கள் இவை. பவுலின் கடிதங்களைப் போல அவர்கள் அந்த
மக்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்கள், இன்றும் கிறிஸ்தவர்களுக்கு
வழிநடத்துகிறார்கள். இவை பொதுவான எபிஸ்டில்களின் வகைகளில்
இருக்கின்றன:
 எபிரேயர்
 யாக்கோபு
 1 பேதுரு
 2 பேதுரு
 1 யோவான்
 2 யோவான்
 3 யோவான்
 யூதா
 வெளிப்படுத்தின சுவிசேஷம்
முடிவுரை
ஆரம்பகால சபை நிறுவனர்களால் ஒதுக்கப்பட்ட சில கடிதங்கள் மற்றும்
அவற்றின் நம்பகத்தன்மையின் மீ து கணிசமான விவாதங்கள் இருந்தன.
இன்றும்கூட, இன்றைய புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்ட சில கடிதங்களை
பவுல் எழுதியிருக்கிறாரா என்பது பற்றிய சர்ச்சைகள் இருக்கின்றன. இறுதியாக,
வெளிப்படுத்துதல் புத்தகம் பல ஆண்டுகளாக சூடாக விவாதிக்கப்பட்டது. சுமார்
கி.மு. சுமார் 400 வரை புதிய சபை சபைக்கு ஒருமித்த கருத்தை எட்டியது, அதில்
இப்போதுள்ள 27 புத்தகங்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்கின்றன.

3
2. நான்கு சுவிசேஷங்களிலும் சிறிதும் எளிமையும் ஆன மாற்க்
சுவிசேஷம் கிறிஸ்துவானவர் வாழ்க்கையை ரத்தினச் சுருக்கமாகவும்
துரிதமாகவும் காண செய்கிறது இந்த கருத்தை ஆராய்ந்து எழுதும்

எழுதிய ஆசிரியர் : யோவான் மாற்கு

அப்போஸ்தலர் நடபடிகளில் வரும் மாற்குதான் மாற்கு சுவிசேஷத்தின்


ஆசிரியர். மாற்கு பேதுருவோடு ஊழியத்திற்குச் சென்றவராவார். மாற்கு
பேதுருவோடு அதிக தொடர்புடையவராக இருந்தார். இயேசுவின் காரியங்களை
நேரடியாகப் பார்த்து பேதுரு தன்னிடம் சொன்னவைகளை மாற்கு
எழுதியிருக்கிறார். 1 பேதுரு-5: 13 ல் மாற்குவைக்குறித்து பேதுரு
குறிப்பிட்டிருக்கிறார். 4 சுவிசேஷங்களில் முதலாவதாக எழுதப்பட்டது மாற்கு
தான் என்று பல வேதபண்டிதர்கள் கருதுகிறார்கள்.
அப்-12: 12, 25 மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய
மரியாள் வட்டுக்கு
ீ வந்தான், 25. பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை
நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக்
கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள். (அப்-15: 37, 39)

1 பேது-5: 13 உங்களுடனேகூடத் தெரிந்து கொள்ளப் பட்டிருக்கிற


பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு
வாழ்த்துதல் சொல்லுகிறர்கள்.

கொலோ- 4: 10 ல் மாற்கு பர்னபாவின் உறவுக்காரர் என்றும்,

பிலேமோன்-1: 24 ல் என் உடன் வேலையாட்களாகிய மாற்கு என்றும் பவுல்


குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சுவிசேஷத்தை எழுதியபிறகு, மாற்கு எகிப்திற்குச் சென்று, அங்கே


சுவிஷேத்தை அறிவித்து, அலெச்ஸாண்ட்ரியாவில் சபையை நிறுவினார் என்று
ஜொசேஃபஸ் என்று யூதசரித்திர ஆசிரியர் கூறுகிறார். வென ீஸ் நகரத்தின்
வியாபாரிகள், அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்து மாற்குவின் சரீரத்தை
திருடிச்சென்று வென ீஸில் அவருக்கு ஒரு புண்ணியஸ்தல்தை
ஏற்படுத்தினார்கள் என்று 9 ஆம் நுற்றாண்டின் பாரம்பரியம் ஒன்று
தெரிவிக்கிறது.

4
எழுதப்பட்ட மக்கள்:

இது ரோமர்களுக்கு எழுதப்பட்டதாகும். மாற்கு யூதர்களல்லாத


புறஜாதியாருக்கு இதை எழுதியதால், அவர்களுக்கு ஆர்வமற்றவைகளாக
இருப்பதை அவர் அதிகம் முக்கியப் படுத்தவில்லை. அதேபோல அரமாயிக்
வார்த்தைகளுக்குரிய விளக்கத்தையும் மாற்கு தம்முடைய புத்தகத்தில்
அதிகமாகக் கொடுத்திருக்கிறார். காரணம் இந்த அரமாயிக் வார்த்தைகள்
ரோமர்களுக்கு அதிகம் பழக்கப்பட்டதாக இருந்ததில்லை.

உதாரணத்திற்கு :

மாற்-3:17 செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின்


சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும்  இடிமுழக்க
மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனர்கேஸ் என்கிற பெயரிடப்பட்டார்.

மாற்-5:41 பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்,


அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று
அர்த்தமாம்.

மாற்-7:34 வானத்தைஅண்ணாந்துபார்த்து,பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார்,
அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம்.

மாற்-15: 22 கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும்


இடம்.

கிரேக்க வார்த்தைகளுக்கிய இடங்களில் அதிகமான லத்தீன்


வார்த்தைகளையும் மாற்கு பயன்படுத்தி இருக்கிறார். அந்த நாட்களில்
ரோமஉலகத்தின் சட்டப் பூர்வமாக்கப்பட்ட மொழியாக லத்தீன் இருந்ததால் அவர்
அப்படிச் செய்திருக்கலாம்.

மாற்-4: 21 பின்னும் அவர் அவர்களை நோக்கி: விளக்கைத் தண்டின்மேல்


வைக்கிறதற்கேயன்றி, மரக்காலின் கீ ழாகிலும், கட்டிலின் கீ ழாகிலும்,
வைக்கிறதற்குக் கொண்டு வருவார்களா?

5
மாற்-6:27 உடனே அவனுடைய தலையைக் கொண்டுவரும்படி
சேவகனுக்குக் கட்டளையிட்டு அனுப்பினான்.

இயேசுவைக்குறித்த பார்வை: "வேலைக்காரன்"

மாற்கு சுவிசேஷத்தில் இயேசு "வேலைக்காரனாக" வெளிப் படுத்தப்


பட்டுள்ளார். இந்த முழுசுவிசேஷத்திலும் இதுவே முக்கியப் படுத்தப்
பட்டிருக்கிறது. இயேசுவைத் தேவகுமாரனாக மத்தேயு காட்டுகிறார். ஆனால்
மாற்கு இயேசுவை மனிதகுமாரனாகக் காட்டுகிறார். இயேசுவே தன்னை
மனிதகுமாரன் என்று 14 முறை குறிப்பிட்டிருக்கிறார்.
மாற்கு-10: 45 அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங் கொள்ளும்படி வராமல்,
ஊழியஞ்செய்யவும், அநேகரை மீ ட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்
கொடுக்கவும் வந்த்தார் என்றார்.

மாற்கு சுவிசேஷத்தின் சுருக்கம்

1. அதிகாரங்கள் 1 முதல் 10: வேலைக்காரன் இயேசு

 செயல்பாட்டிலே மனுஷகுமாரன்
 வாழ்ந்துகாட்டும் முன்மாதிரி
 கலிலேயா மற்றும் பெராயா
 முதல் 3 வேலைக் காரர்களின் வேலைக்காரன்
 4 முதல் 7 வேலைக்காரனின் வேலைகள்
 8 முதல் 10 வேலைக்காரனின் வார்த்தைகள்

2. அதிகாரங்கள் 11 முதல் 16 பலியாகும் இயேசு

 சிலுவையிலே மனுஷகுமாரன்
 மரிக்கும் இரட்சகர்
 யூதேயா மற்றும் எருசலேம்
 11 முதல் 13 வேலைக்காரனின் பிரசங்கங்கள்
 14 முதல் 16 வேலைக்காரனின் பாடுகள்

6
எழுதப்பட்டுள்ள செய்தி :

இயேசுவின் வேலைக் காரனுக்குரிய இருதயத்தையும், செய்கையையும்


இந்த சுவிசேஷம் அழகாகக் காண்பிக்கிறது. தன்னைக்குறித்து யூதர்கள் மத்தியில்
பிரசித்தப்படுத்திட வேண்டாம் என்று இயேசுவே அடிக்கடி கூறுவதை நாம்
இதிலே பார்க்கிறோம்.
பிரபல்யத்தையோ, புகழ் பாராட்டையோ அவர் விரும்பவில்லை. உடனே
என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் மொத்தத்தில் 46 முறை வருகிறது, அதிலே, 42
முறை இந்த ஒரு புத்தகத்திலேயே வந்திருக்கிறது. தேவையை நிறைவேற்றுகிற
காரியத்தில் இயேசு தாமதமாகச் செயல்பட விரும்பவில்லை என்பதை இது
காட்டுகிறது.
இதிலிருந்து சபை கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால்,
இயேசுவைப்போல நாமும் வேலைக்காரர்களாக, பணிவிடை செய்பவர்களாக
வாழ்ந்திட வேண்டும்.

மாற்கு சுவிசேஷத்தின் தொகுப்பு :

(16 அதிகாரங்கள், 4 பகுதிகளாகப் பிரிக்கலாம்)

I. அதிகாரம்-1: 1-13 முகவுரை. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் ஆரம்பம்:


1. முன்னோடியாக வந்த யோவான் ஸ்நானகன் (1: 1-8)
2. ஞானஸ்நானம் (1: 9-11): இயேசுவைக்குறித்து பரலோகம் சாட்சி பகர்ந்தது.
3. சோதிக்கப்படுதல் (1: 12-13)

II. அதிகாரம்-1: 14 முதல் 9 வரை: இயேசுவின் கலிலேய ஊழியம்


1. தான் யாரென்பதை இயேசு வெளிப்படுத்திக் காட்டுதல் (1: 14 முதல் 2: 28)
அ. காலம் நிறைவேறிற்று (1: 14-15)
ஆ. தலைவர் (1: 16-20) - சீடர்களை அழைத்தல்
இ.அசுத்த ஆவிகள்மேல் அதிகாரம் உடையவர் (1: 21-28)
ஈ. வியாதியின்மேல் அதிகாரம் உடையவர் (1: 29-34)
உ. பிரதானமானது ஜெபமும் பிரசங்கித்தலும் (1: 35-39)
ஊ. குஷ்டரோகி சுத்தமாக்கப்படுதல் (1: 40-45)
எ.திமிர்வாதக்காரனை மன்னித்தலில் தனதுதெய்வகத்தை
ீ நிரூபித்தல்(2:1-12)

7
ஏ.தன்னை மருத்துவராக, மணவாளனாக, ஓய்வுநாளின் ஆண்டராக
அறிவித்தல் (2: 13-28)
2. எதிர்ப்புக்கள் எழும்புதல் (3 முதல் 6)
3. தன்னுடையமரணத்திற்காகதனது சீடர்களைஆயத்தப்படுத்துதல்(7 முதல்
9)
அ. சீஷத்துவத்திற்கான அழைப்பு (8: 34-38)
ஆ.ஜெபம் மற்றும் உபவாசத்தின் வலிமை முக்கியப்படுத்தப்படுதல்(9:14-
29)
இ. தாழ்மையைக் குறித்த போதனை (9: 33-37)
ஈ. இடறலைக்குறித்த போதனை (9: 42-50)

III. அதிகாரம்-10 முதல் 16: எருசலேம் நிகழ்வுகள்:

1. எருசலேமிற்குச் செல்லும் வழியில் (10)


2. எருசலேமில் எதிர்ப்பு (11-12)
3. கடைசிக் காலங்களைக் குறித்த போதனை (13)
4. இயேசுவின் இறுதி நாட்கள் (14-16)
காட்டிக் கொடுக்கப் பட்டதிலிருந்து உயிர்த்தெழுதல் வரை.

IV. அதிகாரம் 16: 19-20: இறுதிக் குறிப்புகள்:

இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு


எடுத்துக் கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார். அவர்கள்
புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள்.

8
3. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வாக்கிய மனித குமாரரின் பூரண மானிடத்
தன்மையை கவனமாக எழுதும்போது ஒரு குடும்ப வைத்தியரை போல
மனது ஊக்கத்துடனும் வெண்மையாகவும் மருத்துவராகிய லூக்கா
எழுதுகிறார். லூக்கா எழுதின சுவிசேஷத்தின் அடிப்படையில் இந்த
கருத்தை ஆராய்ந்து எழுதுக :

1. எழுதிய ஆசிரியர்: லூக்கா


லூக்கா ஒரு மருத்தவராக இருந்தார். இவர் யூதனல்ல, அந்தியோகியாவில்
பிறந்து, இரட்சிக்கப்பட்ட ஒரு புறஜாதி நபராவார். புதியஏற்பாட்டுப் புத்தகங்களை
எழுதியவர்களில் லூக்கா மாத்திரம்தான் புறஜாதியாராவர், மற்ற அனைவரும்
யூதர்களாவார்கள். இவருக்கிருந்த கல்வி அறிவும், பிண்ணனியும் இவருடைய
எழுத்துநடையில் தனிப்பட்ட விதத்தில் வெளிப்பட்டிருக்கிறது.

கொலோ-4: 14 பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும்


உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

இதை லூக்காதான் எழுதினார் என்பதற்கேதுவாக, அவருடைய பெயர்


எங்கும் கொடுக்கப்படவில்லை. இவர் பவுலோடு அதிகமாக ஊழியம்செய்தார்.
பவுல் மூலமாகக் கற்றுக் கொடுக்கப்பட்டு லூக்கா உருவாக்கப் பட்டிருந்தார்.

பிலே-1: 24 என் உடன் வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும்,


தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

பவுல் தன்னுடைய நிரூபங்களில் என் சுவிசேஷத்தின்படியே என்று


அடிக்கடி குறிப்பிடும்போது லூக்கா சுவிசேஷத்தைக் குறிப்பிட்டே இவ்வாறு
சொல்லியிருக்கிறார் என்றும் கருதப்படுகிறது.

உதாரணத்திற்கு:

ரோம-2: 16 என் சுவிசேஷத்தின் படியே, தேவன் இயேசு கிறிஸ்துவைக்


கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக் குறித்து நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்
நாளிலே இது விளங்கும்.

ரோம-16: 26 இயேசுகிறிஸ்துவைப் பற்றிய பிரசங்கமாகிய என்


சுவிசேஷத்தின் படியே!

9
2 தீமோ-2: 8 தாவதின்
ீ சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என்
சுவிசேஷத்தின் படியே, மரித்தோரிலிருந்து எழுப்பப் பட்டவரென்று
நினைத்துக்கொள்.

எழுதப்பட்ட மக்கள்: தேயோப்பிலு


இது தேயோப்பிலு என்ற ஒரு தனிநபருக்கு எழுதப்பட்டதாகும். இவர் யார்
என்பதைக்குறித்த குறிப்புக்கள் நமக்குக் கொடுக்கப்படவில்லை. இது ஒரு
கிரேக்கப் பெயராகும். இந்த சுவிசேஷம் மனந்திரும்புதலுக்குள்
வந்துகொண்டிருந்த புறஜாதியாருக்கு எழுதப்பட்டதாக இருக்கிறது.

லூக்-1: 1-4 மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள்


முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை, 2. ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு
வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்
குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பர் ஏற்பட்டபடியினால், 3. ஆதிமுதல்
எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட
விசேஷங்களின் நிச்சயத்தை நீ ர் அறிய வேண்டுமென்று, 4. அவைகளை
ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.

புதிய ஏற்பாட்டின் 2 புத்தகங்களை லூக்கா எழுதினார் என்று நாம்


ஏற்கெனவே அறிந்துகொண்டோம். லூக்காவின் ஆரம்பத்திலும், அப்போஸ்தலர்
நடபடிகளின் ஆரம்பத்திலும் தேயோப்புலுவுக்கு எழுதப்பட்டது என்ற குறிப்பு
கொடுக்கப் பட்டிருப்பதைக் கவனியுங்கள்.

அப்-1: 1-2 தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட


அப்போஸ்தலருக்குப் பரிசுத்தஆவியினாலே கட்டளையிட்ட பின்பு, 2. அவர்
எடுத்துக் கொள்ளப்பட்ட நாள் வரைக்கும் செய்யவும், உபதேசிக்கவும் தொடங்கின
எல்லாவற்றையுங் குறித்து, முதலாம் பிரபந்தத்தை (லூக்கா சுவிசேஷம்)
உண்டுபண்ணினேன்.
கிரேக்கர்கள் மத்தியில் மனந் திரும்பியவர்களில் தேயோப்புலு என்பவரும்
ஒருவராக இருந்தார். லூக்கா அவரை அதிகமாக நேசித்து, மதித்தார் என்று
அவருடைய வார்த்தைகளால் நாம் அறியமுடிகிறது. தேயோப்பிலுவின் குடும்ப
மருத்துவராக லூக்கா இருந்திருக்கலாம். கிறிஸ்துவின் சுவிசேஷத்தை லுக்கா
முறைப்படுத்தி எழுதியிருக்கிறார்.

10
இயேசுவைக் குறித்த பார்வை: உலகத்தின் இரட்சகர்: (மனிதகுமாரன்)

இயேசு யூதருடைய மேசியா மாத்திரமல்ல, அவர் உலகத்தின்


இரட்சகராகவும் இருக்கிறார் என்பதை லூக்கா அதிகமாக வலியுறுத்தி
இருக்கிறார்.

எழுதப்பட்டுள்ள செய்தி:

இந்த சுவிசேஷத்தில் தாழ்மையும் மனதுருக்கமும் அதிகமாக முக்கியப்


படுத்தப் பட்டிருக்கிறது. முக்கிய வனம்: லூக்கா-19: 10 இழந்துபோனதைத் தேடவும்
இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார். லூக்கா சுவிசேஷத்தில்
மற்ற 3 சுவிசேஷங்களில் காணப்படாத அதிகமான குறிப்புகள், உவமைகள்,
சம்பவங்கள் உள்ளன. உதாரணத்திற்கு, யோவான் ஸ்நானகனின் பிறப்பைக்
குறித்து சகரியாவுக்கு அறிவிக்கப்பட்டது, எம்மாவூஸ் சீடர்களோடு இயேசு
நடந்துசென்றது போன்றவைகள். இதிலே 24 உவமைகள் எழுதப்பட்டுள்ளன
(மத்தேயுவில் 22 உவமைகளும் மாற்குவில் 8 உவமைகளும் உள்ளன).
தனித்தன்மைவாய்ந்த 13 உவமைகள் லூக்காவில் உள்ளது. புதியஏற்பாட்டிலே
பெரிய புத்தகம் லூக்கா ஆகும் (அதிகாரங்களில் எண்ணிக்கையில் அல்ல).

 இயேசு உயிர;த்தெழுந்தபிறகு, பரலோகத்திற்கு எழுந்தருளிச்சென்றதை


லூக்கா சுவிசேஷம் மாத்திரமே விவரிக்கிறது!
 இயேசுவின் வாழ்வில் பரிசு;தஆவியானவரின் நடத்துதலைக்குறித்த
அதிகமான முக்கியப்படுத்துதல் கொடுக்கப்பட்டுள்ளது
 இதிலே ஜெபத்தைக்குறித்து அதிகமான குறிப்புகள் முன்வைக்கப்
பட்டிருக்கிறது.

லூக்கா சுவிசேஷத்தின் தொகுப்பு:

(மொத்தம் 24 அதிகாரங்கள், 7 பகுதிகளாகப் பிரிக்கலாம்)

I. அதிகாரம் 1: 1-4 முகவுரை

II. அதிகாரம்-1: 5 முதல் 2 பிறப்பின் விபரங்கள்

1. யோவான் ஸ்நானகனின் பிறப்பைக்குறித்த அறிவிப்பு (1: 5-25)


2. இயேசுவின் பிறப்பைக்குறித்த அறிவிப்பு (1: 26-38)

11
3. மரியாள் எலிசபெத்தைச் சந்திக்கச் செல்லுதல் (1: 39-56)
4. யோவானின் பிறப்பு (1: 57-80)
5. இயேசுவின் பிறப்பு (2: 1-21)
6. சுத்திகரிப்பின் பிரமாணம் நிறைவேற்றப்படுதல் (2: 22-40)
7. 12 வயதில் எருசலேமில் இயேசு (2: 41-52)

III. அதிகாரம்-3 இயேசுவை அறிமுகப்படுத்துதல்

1. யோவான் ஸ்நானகனின் ஊழியம் (3: 1-20)


2. இயேசு ஞானஸ்நானம் பெறுதல் (3: 21-22)
3. இயேசுவின் வம்சவரலாறு (3: 23-38)

IV. அதிகாரம்-4 முதல் 9: 50 வரை: தனது ஊழியத்தால் அதிகாரப்படுத்தப்


பட்ட இயேசு

1. இயேசு சோதிக்கப்பட்டது (4: 1-13)


2. ஏசாயாவில் எழுதப்பட்டது நடைமுறைக்கு வருதல் (4: 16-30)
3. அசுத்த ஆவியைத் துரத்துதல் (4: 31-37)
4. இயேசுவின் ஊழியங்களும் போதனைகளும்
5. இயேசு சீடர்களை அழைத்தல்
6. 12 அப்போஸ்தலர்கள் அனுப்பப்படுதல் (9: 1-6)

V. அதிகாரம் 9: 50 முதல் 19: 27 தனது போதனைகளைத் தாங்கும்


இயேசுவின் ஊழியங்கள்

1. புறக் கணிக்கப்படுதலைக் குறித்த போதனை (9: 51-56)


2. சீஷத்துவத்தைக் குறித்த போதனை (9: 57-62)
3. சுவிசேஷம் அறிவித்தலைக் குறித்த போதனை (10: 1-24)
4. நல்ல சமாரியனின் உவமை (10: 25-37)
5. மார்த்தாளும் மரியாளும் (10: 38-42) தேவையானது ஒன்றே!
6. ஜெபத்தைக் குறித்த போதனை (11: 1-13)
7. எதிர்ப்பைக் குறித்த போதனை (11: 14-23)

12
8. கீ ழ்படிதலைக் குறித்த போதனை (11: 27-28)
9. வெளிவேஷத்தைக் குறித்த போதனை (11: 29 முதல் 12: 3)
10. காணாமல் போனவைகளைக் குறித்த உவமை (15)
11. பரதீசு, நரகத்தைக் குறித்த உண்மை (16: 19-31)
12. சோர்ந்துபோகாமல் ஜெபித்தலைக் குறித்த போதனை (18: 1-14)
13. சகேயுவின் வடு
ீ (19: 1-10)

VI. அதிகாரம் 19: 28 முதல் 23 இயேசுவின் பாடுகளின் வாரம்:


1. எருசலேமிற்குள் பவணிசெல்லுதல் (19: 28-44)
2. தேவாலயத்தைச் சுத்திகரித்தல் (19: 45-48)
3. கொடுத்தலைக் குறித்த போதனை (21: 1-4)
4. கடைசிக்காலத்தைக் குறித்த போதனை (21: 5-38)
5. இயேசு காட்டிக் கொடுக்கப் பட்டதிலிருந்து அடக்கம்வரை

VII. அதிகாரம்-24 இயேசுவின் உயிர்த்தெழுதல்:

1. உயிர்த் தெழுதலைக் குறித்து பெண்கள் அறிவித்த செய்தி (24: 1-12)


2. எம்மாவூஸுக்குச் செல்லும் வழியில் (24: 13-35)
3. சீடர்களுக்குத் தரிசனமாகுதல் (24: 36-49)
4. பரலோகத்திற்கு எழுந்தருளிச் செல்லுதல் (24: 50-53)

முக்கிய வசனங்கள்:

↻லூக்-2: 11 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத்


தாவதின்
ீ ஊரிலே பிறந்திருக்கிறார்.

↻லூக்-9: 26 மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு


அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார்.

↻லூக்-19: 10 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன்


வந்திருக்கிறார் என்றார்.

13
4. இயேசுவானவரை தேவகுமாரர் ஆக அவரது தெய்வக
ீ தன்மையுடன்
யோவான் காண்பிக்கிறார். யோவான் சுவிசேஷமானது தலைப்புகளில்
அடிப்படையில் உள்ளது அத்துடன் அது ஏழு அற்புதங்களையும்
"நான்" "நானே" என்ற கிறிஸ்துவானவர் இன் ஏழு வசனங்களையும்
சூழ எழுதப்பட்டுள்ளது இந்த கருத்தை சீர்தூக்கிப் பார்த்து எழுதவும் :

மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “Kata Iōannēn Euangelion”


(The Gospel according to John) என்று அழைக்கப்படுகிறது. நம்முடைய பரிசுத்த
வேதாகமத்திலே 43-வது புத்தகமாக வருகிறது. இப்புத்தகத்தை இயேசுவின்
பண்ணிரெண்டு சீஷர்களுள் ஒருவரான வயதான யோவான்
எழுதியதாகும். இயேசுவுடன் இருந்த நெருக்கமான கூட்டுறவால் அவர்
வெகுவாய் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார்.

இயேசு செய்த ஏழு அற்புதங்கள் இப்புத்தகத்திலே பதிவு


செய்யப்பட்டுள்ளன :

1) கானாவில் திருமணம் (2:1-11);


2) அரச அலுவலர் மகன் குணமாதல (4:46-54);
3) உடல் நலமற்றவர் ஓய்வுநாளில் நலமடைதல் (5:1-9);
4) ஐயாயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு அப்பமும் மீ னும்
பகிர்ந்தளித்தல் (6:1-15);
5) இயேசு கடலைக் கடந்து செல்லுதல் (6:16-21);
6) பிறவியிலேயே பார்வையற்றவர் பார்வை பெறுதல் (9:1-12);
7) மரித்த லாசர் உயிர்பெறுதல் (11:1-44).

இந்த 20-வது நூற்றாண்டில் முக்கிய கையெழுத்துப் பிரதிகள்


கண்டுபிடிக்கப்பட்டன; இவை யோவான் சுவிசேஷத்தின் நம்பகத்
தன்மைக்கு சான்றளிக்கின்றன. அவற்றில் ஒன்று எகிப்தில்
கண்டுபிடிக்கப்பட்ட யோவான் சுவிசேஷத்தின் ஒரு பாகம். இது இப்போது
பப்பைரஸ் ரைலண்ட்ஸ் 457 (P52) என்றறியப்படுகிறது. இதில் யோவான்
18:31-33,37,38-ன் பகுதி அடங்கியுள்ளது; இது இங்கிலாந்து,

14
மான்செஸ்டரிலுள்ள ஜான் ரைலண்ட்ஸ் நூலகத்தில் பாதுகாப்பாக
வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 21 அதிகாரங்களும், 879 வசனங்களையும்
கொண்டுள்ளது. 6-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 2-வது மற்றும் 21-
வது அதிகாரங்கள் சிரிய அதிகாரங்களாகவும் உள்ளது.

நான்காம் நற்செய்தியாகிய யோவான் நற்செய்தி முந்தைய மூன்று


நற்செய்தி புத்தகங்களாகிய ஒத்தமை நற்செய்திகளிலிருந்து
மாறுபட்டது.

 யோவான் இயேசுவின் பொதுப் பணிகாலத்தை மூன்று


ஆண்டுக் கால வரையறைக்குள் எடுத்துரைக்கிறார். ஆனால்,
ஒத்தமை நற்செய்திகளோ இயேசு ஓர் ஆண்டுக் காலமே
பொதுப்பணி செய்ததாகக் காட்டுவதுபோலத் தெரிகிறது.

 யோவான் காட்டும் இயேசு பல தடவை எருசலேமுக்குப்


பயணமாகச் செல்கிறார். ஆனால் ஒத்தமை நற்செய்திகளோ,
இயேசு ஒரே முறை எருசலேம் பயணத்தை
மேற்கொண்டதாகக் கூறுகின்றன.

 யோவான் நற்செய்தியில் மற்ற மூன்று நற்செய்திகளிலும்


வராத கதாபாத்திரங்கள் வருகின்றனர். எடுத்துக்காட்டாக,
நிக்கதேம், சமாரியப் பெண், பிறவியிலேயே பார்வையற்ற
ஒருவர், இலாசர், மற்றும் இயேசுவின் அன்புச் சீஷர்
ஆகியோரைக் கூறலாம்.

இருப்பினும், யோவான் இவ்வார்த்தைகளுடன் தன் புத்தகத்தை


முடிக்கிறார்: “இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு;
அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள்
உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன்.” (21:25).

15
இயேசுவை பழைய ஏற்பாட்டின் தேவன் என்று யோவான் சித்தரிப்பது
இயேசுவின் ஏழு “நானே/நான்” என்னும் அறிக்கைகளில் மிகவும் உறுதியாகக்
காணப்படுகிறது.

அவர் "ஜீவ அப்பம்" (யோவான் 6:35), வனாந்தரத்தில் இஸ்ரவேலருக்கு


உணவளிக்க வானத்திலிருந்து மன்னாவை வழங்கியதைப் போலவே,
அவருடைய மக்களின் ஆத்துமாக்களுக்கு உணவளிக்க தேவன் வழங்கினார்
(யாத்திராகமம் 16:11-36). இயேசு “உலகத்தின் ஒளி” (யோவான் 8:12), பழைய
ஏற்பாட்டில் தேவன் தம் மக்களுக்கு வாக்குறுதியளித்த அதே ஒளி (ஏசாயா 30:26,
60:19-22), அதன் உச்சத்தை புதிய எருசலேமில் காணலாம், அங்கெ
ஆட்டுக்குட்டியானவராகிய கிறிஸ்து அதன் வெளிச்சமாக இருக்கும் போது
தெளிவாகும் (வெளிப்படுத்துதல் 21:23). "நான்" அறிக்கைகளில் இரண்டு இயேசுவை
"நல்ல மேய்ப்பன்" மற்றும் "ஆடுகளின் வாசல்" என்று குறிப்பிடுகின்றன. பழைய
ஏற்பாட்டின் தேவன், இஸ்ரேலின் மேய்ப்பர் என்று இயேசுவைப் பற்றிய
தெளிவான குறிப்புகள் இங்கே (சங்கீ தம் 23:1; 80:1; எரேமியா 31:10; எசேக்கியேல்
34:23), ஆடுகளுக்குள் ஒரே வாசலாக, இரட்சிப்பின் ஒரே வழியாக இயேசு
இருக்கிறார்.

யூதர்கள் உயிர்த்தெழுதலை நம்பினர், உண்மையில், அந்த கோட்பாட்டை


பயன்படுத்தி இயேசுவை அவருக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய அறிக்கைகளை
கூறி அவரை ஏமாற்ற முயன்றனர். ஆனால் லாசருவின் கல்லறையில் அவர்
கூறியது “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” (யோவான் 11:25)
என்னும் கூற்று அவர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்க வேண்டும். அவர்
உயிர்த்தெழுதலுக்கான காரணம் என்றும், ஜீவன் மற்றும் மரணம் மீ தான
அதிகாரத்தை வைத்திருப்பவர் என்றும் அவர் கூறிக்கொண்டிருந்தார். தேவனைத்
தவிர வேறு எவருக்கும் இதுபோன்ற ஒன்றைக் கோர முடியாது செய்யவும்
இயலாது. இதேபோல், "நானே வழியும், சத்தியமும் மற்றும்
ஜீவனுமாயிருக்கிறேன்" என்று அவர் கூறுவது (யோவான் 14:6) அவரை பழைய
ஏற்பாட்டுடன் தொடர்புபடுத்தியது. ஏசாயா 35:8-ல் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்ட
“பரிசுத்த பாதை” அவருடையது; சகரியாவின் சத்திய நகரத்தை அவர்
ஸ்தாபித்தார் 8:3 "சத்தியம்" தானே எருசலேமில் இருந்தபோது, நற்செய்தியின்
சத்தியங்கள் அவரும் அவருடைய அப்போஸ்தலர்களும் அங்கு பிரசங்கித்தார்கள்;
"ஜீவன்" என்று, அவர் தனது தெய்வத்துவத்தை, ஜீவனின் படைப்பாளராக,

16
தேவனின் அவதாரம் என்பதில் விளங்கிற்று (யோவான் 1:1-3). இறுதியாக,
“மெய்யான திராட்சைச்செடி” (யோவான் 15:1, 5) பல பழைய ஏற்பாட்டுப்
பத்திகளில் கர்த்தருடைய திராட்சைத் தோட்டம் என்று அழைக்கப்படும்
இஸ்ரவேல் தேசத்தோடு இயேசு தன்னை அடையாளப்படுத்துகிறார்.
இஸ்ரவேலின் திராட்சைத் தோட்டத்தின் உண்மையான திராட்சைத் தோட்டமாக,
அவர் தன்னை "உண்மையான இஸ்ரவேலின்" தேவன் என்று சித்தரிக்கிறார் -
விசுவாசத்தோடு அவரிடம் வருவோர் அனைவருமே மெய்யான இஸ்ரவேலர்கள்,
ஏனென்றால் “… இஸ்ரவேலிலிருந்து வந்தவர்கள் அனைவரும் இஸ்ரவேலர்கள்
அல்ல” (ரோமர் 9:6).

நடைமுறை பயன்பாடு :

சுவிசேஷத்திற்கு மிகவும் பயனுள்ள தகவல்களைக் கொண்டுவருவதற்கான


அதன் நோக்கத்தை யோவானின் நற்செய்தி தொடர்ந்து நிறைவேற்றுகிறது
(யோவான் 3:16 என்பது பலரால் சரியாகப் புரிந்து கொள்ளப்படாவிட்டாலும் கூட,
நன்கு அறியப்பட்ட வசனம்) மற்றும் இந்த வசனம் பெரும்பாலும் சுவிசேஷ
வேதாகமப் படிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இயேசுவிற்கும்
நிக்கொதேமுவோடும் மற்றும் கிணற்றின் அருகே சமாரிய ஸ்திரீக்கும்
இடையில் பதிவுசெய்யப்பட்ட சந்திப்புகளில் (அத்தியாயங்கள் 3-4), இயேசுவின்
தனிப்பட்ட சுவிசேஷத்தின் மாதிரியிலிருந்து நாம் அதிகம் கற்றுக்கொள்ளலாம்.
மரிப்பதற்கு முன்னர் அவருடைய சீஷர்களிடம் அவர் அளித்த ஆறுதலான
வார்த்தைகள் (14:1-6,16; 16:33) கிறிஸ்துவில் நம்முடைய அன்புக்குரியவர்களை
மரணம் நேரிடும் மற்றும் வருத்தப்படுத்தும்போது உள்ள காலங்களில் இன்னும்
மிகுந்த ஆறுதலளிக்கிறது, அதேபோல் 17-ஆம் அதிகாரத்தில் விசுவாசிகளுக்காக
அவர் செய்த “உயர் ஆசாரிய ஜெபமும்” அவரது அக்கறை மற்றும் இரக்கத்திற்கு
வலுச்சேர்க்கிறது. கிறிஸ்துவின் தெய்வத்துவத்தைப் பற்றிய யோவானின்
போதனைகள் (1:1-3,14; 5:22-23; 8:58; 14:8-9; 20:28, முதலியன) இயேசுவை முழு
தேவனை விட குறைவாக இருப்பதைக் காணும் வழிபாட்டு முறைகளாகிய
சிலரின் தவறான போதனைகளை எதிர்ப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். 

சுருக்கமான திரட்டு :
கிறிஸ்துவின் தெய்வத்துவத்தை நிரூபிப்பதற்கும் அவருடைய ஊழியத்தை
விளக்குவதற்கும் அடையாளங்களாக யோவானின் நற்செய்தி ஏழு அற்புதங்களை

17
மட்டுமே தேர்ந்தெடுக்கிறது. இந்த அறிகுறிகள் மற்றும் சம்பவங்கள் சில
யோவானில் மட்டுமே காணப்படுகின்றன. நான்கு நற்செய்திகளில் இது மிகவும்
இறையியல் மற்றும் பிற நற்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளுக்குப்
பின்னால் இருக்கும் காரணத்தைக் கூறுகிறது. பரிசுத்த ஆவியானவர் தனது
பரமேறுதலுக்குப் பிறகு இறங்கி வரும் ஊழியத்தைப் பற்றி அவர் அதிகம்
பகிர்ந்து கொள்கிறார். யோவான் தனது நற்செய்தியின் தொடர்ச்சியான
கருப்பொருள்களைக் காட்டும் சில சொற்கள் அல்லது சொற்றொடர்கள் உள்ளன:
விசுவாசியுங்கள், சாட்சி, தேற்றரவாளர், ஜீவன் - மரணம், ஒளி - இருள், நானே ...
(இயேசு "நானே" என மொழிந்த கூற்றுக்கள்), மற்றும் அன்பு.

யோவான் நற்செய்தி கிறிஸ்துவை அவரது பிறப்பிலிருந்து அல்ல, மாறாக


"ஆதியில்" இருந்த "வார்த்தை" (லோகோஸ்) என்று அறிமுகப்படுத்துகிறது, அவர்
தேவனாக, படைப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் ஈடுபட்டுள்ளார் (1:1-3) பின்னர்
அவர் இந்த பூமிக்கு வரும்படிக்கு மாம்சமாக மாறுகிறார் (1:14) அவர்
குற்றமில்லாத, பழுதற்ற பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டியாக நம் பாவங்களை
அகற்றுவதற்காக (யோவான் 1:29) ஜீவனையே தந்தார். இயேசு மேசியா என்பதைக்
காட்டும் ஆவிக்குரிய உரையாடல்களை யோவான் தேர்ந்தெடுக்கிறார் (4:26)
மற்றும் சிலுவையில் அவர் அடைந்த மரணத்தின் மூலம் ஒருவர் எவ்வாறு
இரட்சிக்கப்படுகிறார் என்பதை விளக்குகிறார் (3:14-16). யூதத் தலைவர்களைத்
திருத்துவதன் மூலம் அவர் பலமுறை கோபப்படுகிறார் (2:13-16); ஓய்வுநாளில்
குணப்படுத்துதல், மற்றும் தேவனுக்கு சொந்தமான சுபாவ குணாதிசயங்கள் (5:18;
8:56-59; 9:6,16; 10:33) அவரில் காணப்பட்டன. இயேசு தம்முடைய சீஷர்களை
அவருக்கு நேரிடவிருக்கும் மரணத்துக்காகவும், அவருடைய
உயிர்த்தெழுதலுக்கும் பரமேறுதலுக்கும் பின்னர் அவர்கள் செய்யும்
ஊழியத்திற்கும் தயார் செய்கிறார் (யோவான் 14-17). பின்னர் அவர் நம்
ஸ்தானத்தில் சிலுவையில் மனமுவந்து சிலுவையில் மரிக்கிறார் (10:15-18),
நம்முடைய பாவக் கடனை முழுவதுமாக செலுத்துகிறார் (19:30) இதனால்
பாவத்திலிருந்து இரட்சிக்கும் இரட்சகராக அவரையே நம்புகிற எவரும்
இரட்சிக்கப்படுவார்கள் (யோவான் 3:14-16 ). பின்னர் அவர் மரித்தோரிலிருந்து
உயிர்த்தெழுந்து, தம்முடைய அவர் தேவன் மற்றும் கர்த்தர் என்று சந்தேகிக்கும்
தமது சீஷர்களுக்கு தெளிவு படுத்துகிறார் (20:24-29).

18
6. ரோமாபுரியிலிருந்த விசுவாசிகளுக்கு சுவிசேஷத்தை
தெளிவாகவும் ஆணித்தரமாகவும் ரோமருக்கு எழுதிய
நிருபத்தில் அப்போஸ்தலராகிய பவுல் எவ்வாறு எழுதியுள்ளார்
என்பதை விவரிக்கவும் :

ரோமர் முன்னுரை

பரிசுத்த வேதாகமத்தில் அறுபத்தாறு புஸ்தகங்கள் கோர்வையாகக்


கோர்க்கப்பட்டுள்ளன. பழைய ஏற்பாட்டில் முப்பத்தொன்பது புஸ்தகங்களும்,
புதிய ஏற்பாட்டில் இருபத்தேழு புஸ்தகங்களும் இடம்பெற்றுள்ளன. பழைய
ஏற்பாட்டில் தாவதின் 
ீ சங்கீ த புஸ்தகம் மிகவும் பிரபல்யமானது. அதுபோலவே
புதிய ஏற்பாட்டில் பவுல் எழுதின நிருபங்கள் மிகவும்
பிரபல்யமானவையாகும். 

புதிய ஏற்பாட்டில் பலர் எழுதின நிருபங்கள்  இடம்பெற்றிருந்தாலும்,


பவுலின் நிருபங்களே  எண்ணிக்கையில் அதிகம். பவுலின் வார்த்தைகள் 
பரிசுத்த ஆவியினால் அபிஷேகம்பண்ணப்பட்டிருக்கிறது. பவுல்
எழுதியிருக்கிற ஒவ்வொரு நிருபமும் ஜீவனுள்ளது. இருதயத்தை
உணர்த்தக்கூடியது.  பவுல் தன்னுடைய நிருபங்களில் ஆவிக்குரிய
சத்தியங்களை, மிகவும் எளிமையான மொழிநடையில், வாசிப்போர்
எல்லோரும் புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதியிருக்கிறார்.  

பவுல் இரட்சிக்கப்படுவதற்கு முன்பாகவே யூதமார்க்கத்தின் வேதத்தை


கற்று அறிந்தவர்.  கமாலியேலின் பாதபடியில் வேதத்தைப் படித்த பரிசேயர்.
கிறிஸ்துவின் சீஷர்களை அதிகமாய்த் துன்பப்படுத்தினார். யூதமார்க்கத்தில்
பக்திவைராக்கியமாகயிருந்தார். பவுல் இரட்சிக்கப்பட்ட பின்பு, அவருக்கிருந்த
வேதஅறிவு, வேதாகம சத்தியங்களை நிருபங்களாக எழுதுவதற்கு
பெருமளவில் உதவிற்று. இரட்சிக்கப்பட்ட பின்பு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை
சாதுரிய ஞானத்தினால் பிரசங்கம்பண்ணினார். பக்திவைராக்கியத்தோடு 
கர்த்தருக்காக ஊழியம் செய்தார். ஆத்தும ஆதாய பணியில் தன்னை
முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டார். 

பவுல் எழுதின நிருபங்களில், அவர் ரோமருக்கு எழுதின நிருபம்


முதலாவதாகக் கோர்க்கப்பட்டிருக்கிறது. காலவரிசையின்படி,  ரோமருக்கு
எழுதின நிருபத்தைவிட, வேறு சில நிருபங்கள் முந்தி எழுதப்பட்டவையாகும்.
ஆனாலும் பவுல் ரோமருக்கு எழுதின நிருபமே  முதலாவது
கோர்க்கப்பட்டிருக்கிறது. இந்த நிருபத்திலுள்ள சத்திய உபதேசங்களே, இந்த

19
நிருபம் முதலாவது கோர்க்கப்பட்டதற்கு முக்கிய காரணம். கிறிஸ்தவ
உபதேசங்கள் அனைத்தையும் பவுல் இந்த நிருபத்தில் விரிவாகவும்
முழுமையாகவும் எழுதியிருக்கிறார்.

பவுல் கொரிந்து பட்டணத்திலிருந்து, கி.பி. 56-ஆம் வருஷத்தில் இந்த


நிருபத்தை எழுதினார். பவுல் இந்த நிருபத்தை எழுதுகிற சமயத்தில் அவர்
கொரிந்துவிலிருந்து எருசலேமுக்கு பிரயாணம் செய்துகொண்டிருக்கிறார்.
எருசலேமிலுள்ள தரித்திரருக்கு உதவி செய்வதற்காக பவுல் தருமப்பணத்தை
சேகரித்து தன்னோடு கொண்டுபோகிறார். 

பவுல் தன்னுடைய நிருபங்களில் வேதத்தின் ரகசியங்களையெல்லாம்


தெளிவுபடுத்தி எழுதுகிறார். புரிந்துகொள்வதற்கு  கடினமான
சத்தியங்களைக்கூட, பவுல் தேவனுடைய கிருபையினால், விளக்கமாக எழுதி,
அதை விளங்க வைக்கிறார். 

அப்போஸ்தலர் பேதுரு, பவுல் எழுதின நிருபத்தைக்குறித்து, தான்


எழுதின நிருபத்தில்  இவ்வாறு எழுதியிருக்கிறார். “”நமக்குப் பிரியமான
சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே
உங்களுக்கு எழுதியிருக்கிறான்;  எல்லா நிருபங்களிலும் இவைகளைக்
குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள்
அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும்
மற்ற வேத வாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக்
கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்’’              (2 பேது 3:15,16). 

பவுல் ரோமருக்கு எழுதின நிருபத்தை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம்.


முதல் பிரிவில், முதல் பதினொரு அதிகாரங்களையும், இரண்டாவது பிரிவில்
மீ தமுள்ள அதிகாரங்களையும், இரண்டு பிரிவாகப் பிரித்து தியானிக்கலாம்.
முதலாவது பிரிவில் பவுல் உபதேசம் சம்பந்தமான காரியங்களை
எழுதியிருக்கிறார். கடைசி ஐந்து அதிகாரங்களில் ஆவிக்குரிய ஜீவியம்
ஜீவிப்பதற்குப் பிரயோஜனமாகயிருக்கும் நடைமுறை
ஆலோசனைகளைப்பற்றி எழுதியிருக்கிறார். 

பவுல் உபதேசத்தைப்பற்றி எழுதும்போது, இரண்டு உபதேசங்களுக்கு


முக்கியத்துவம் கொடுக்கிறார். அவையாவன : 1. இரட்சிப்பின் வழி. 2.
மனுஷருடைய இரட்சிப்பு, கிருபையின் தெரிந்தெடுப்பு, புறஜாதியாரும் யூதரும்
இரட்சிக்கப்படுவது. பவுல் ஊழியம் செய்த காலத்தில் “”விசுவாசத்தினால்
நீதிமானாக்கப்படுவது’’ என்பது யூதர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு

20
உபதேசமாகயிருந்தது. நியாயப்பிரமாணத்தின் கிரியையினால் மாத்திரமே
மனுஷர் இரட்சிக்கப்பட முடியும் என்று யூதர்கள் நினைத்தார்கள். 
புறஜாதியாரை சபைக்குள் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்றார்கள். யூதர்கள்
தங்கள் மார்க்கத்தில் மிகுந்த வைராக்கியத்தோடிருந்தார்கள். பவுல் ரோமருக்கு
எழுதின நிருபத்தின் முதலாவது பகுதியில், இவ்விரண்டு உபதேசங்களையும்
தெளிவுபடுத்தி எழுதியிருக்கிறார். 

பவுலின் உபதேச பகுதியைத் தொடர்ந்து,  ஆவிக்குரிய ஜீவியத்திற்குப்


பிரயோஜனமாயிருக்கும் நடைமுறை ஆலோசனைகளையும் தெளிவாக
எழுதியிருக்கிறார். இந்த நிருபத்தின் முடிவில் சில குறிப்பிட்ட
விசுவாசிகளுக்கு  வாழ்த்துதல் சொல்லி, பவுல் இந்த நிருபத்தை எழுதி
முடிக்கிறார். 

கி.பி. 58-60 ஆம் ஆண்டில் பவுல் கொரிந்துவிலிருந்து இந்த நிருபத்தை


எழுதினார். இது பவுலின் ஆறாவது நிருபமாகும். ரோமாபுரிக்கு பெபேயாள்
மூலமாக இந்த நிருபம் அனுப்பப்பட்டது.

மையக்கருத்து

நிருபங்களின் வரிசையில் ரோமருக்கு எழுதின நிருபம் முதலாவதாக


வருகிறது. உபதேசப் பிரகாரமாகவும், வேதாகமம் கோர்க்கப்பட்டிருக்கிற
பிரகாரமாகவும் இந்த நிருபம் முதலாவது வருவது சரியானது.
கிறிஸ்தவத்தின் அஸ்திபார உபதேசங்களைப் பவுல் இந்த நிருபத்தில்
எழுதியிருக்கிறார். ரோமருக்கு எழுதின நிருபத்தில் பவுல் எழுதியிருக்கும்
உபதேசங்களை நாம் தெளிவாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இல்லையென்றால், கிறிஸ்தவத்தின் மெய்யான கோட்பாடுகளை நம்மால்
புரிந்து கொள்ள இயலாது. சபையின் அஸ்திபார உபதேசத்தை இந்த
நிருபத்தில் நாம் வாசிக்கிறோம். இந்த நிருபத்தில் கூறப்பட்டிருக்கும்
உபதேசங்களை நாம் தவறாகப் புரிந்து கொண்டால் நமது கிறிஸ்தவ
ஜீவியமே தவறானதாக இருக்கும்.

இந்த நிருபத்தில் இரண்டு மையக்கருத்துக்கள் உள்ளன. அவையாவன:


1. பாவத்திற்கு எதிராகத் தேவனுடைய கோபம் வெளிப்பட்டிருக்கிறது.
2.விசுவாசத்தின் மூலமாக வரும் நீதி நீதிமானாக்கப்படுவதற்கு
ஆதாரமாக இருக்கிறது.

21
தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷரையும் ரோமர்கள் குற்ற
உணர்வுடையவர்களாக ஆக்கிவிட்டார்கள். ஆகையினால் இயேசு
கிறிஸ்துவின் மூலமாக மனுஷருக்கு இரட்சிப்பு தேவைப்படுகிறது.
ரோமருக்குப் பவுல் எழுதின இந்த நிருபத்தில் பல அதிகாரங்கள் கிறிஸ்தவ
உபதேசத்தை விளக்குவதற்காக ஒதுக்கப் பட்டிருக்கிறது. (ரோமர் 1:16-8:39)
யூதர்களோடும், புறஜாதியாரோடும் தேவன் எவ்வாறு கிரியை நடப்பிக்கிறார்
என்பதும், ஒவ்வொரு காலத்திலும் தேவன் அவர்களோடு எவ்வாறு உறவு
வைத்திருப்பார் என்பதும் இந்த உபதேசப்பகுதியில் விளக்கப்பட்டிருக்கிறது.
(ரோமர் 9:1-11:36) இரட்சிப்பினால் நடைமுறை வாழ்வில் ஏற்படும்
விளைவுகளை ரோமர் 12:1-16:27 ஆகிய வசனங்கள் விளக்குகிறது.

முழு உலகமும் தேவனுக்கு முன்பாக குற்ற உணர்வோடு இருக்கிறது  

1. தேவ கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது (1:18)   


2. உலகமும் காணப்படாதவைகளும் தேவனுடைய வெளிப்பாடாகும் (1:19-20)   
3. உலகம் தேவனை விட்டு விலகிப்போனதன் பதினெட்டு நிலைகள்  

(1) தேவன் மனுஷரை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார் (1:21-23)   


(2) தேவனை விட்டு விலகிப் போனதினால் ஏற்பட்ட விளைவு - அசுத்த
இச்சைகள் (1:24) 
(3) தேவன் மனுஷருடைய ஆத்துமாக்கள் தீட்டுப்பட ஒப்புக்கொடுத்தார் (1:25)   
(4) தேவனை விட்டு விலகிப் போனதினால் ஏற்பட்ட விளைவு - இச்சை
ரோகங்களும் சுபாவத்திற்கு விரோதமான அநுபோகமும்  (1:26-27) 
(5) தேவன் மனுஷருடைய ஆவிகளை தீட்டுப்பட ஒப்புக்கொடுத்தார் (1:28)   
(6) தேவனை விட்டு விலகிப் போனதினால் ஏற்பட்ட விளைவு - ஆத்துமாவை
அழிக்கும் 23 பாவங்கள் (1:29-31) 
(7) தேவனை மறுதலிப்பதினால் ஏற்படும் இறுதி விளைவு - தேவன்
தீர்மானித்த நீதியான நியாயத் தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அதற்காக
அவர்கள் பயப் படுவதில்லை (1:32) 

4. தேவ பக்தியின்மை - மன்னிக்கப்பட முடியாத பாவம்  (2:1)   

5. தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின் படியே இருக்கிறது (2:2)  

6. தேவனுடைய நியாயத்தீர்ப்பு - மனுஷனுடைய மனக்கடினத்திற்கும்


குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி இருக்கும் (2:3-6)  

22
7. தேவனுடைய நியாயத்தீர்ப்பு - சத்தியத்திற்குக் கீ ழ்ப்படியாமல்,
அநியாத்திற்குக் கீ ழ்ப் படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிர கோபாக்கினை
வரும் (2:7-11)  

8. தேவனுடைய நியாயத்தீர்ப்பு - எவர்கள் நியாயப்


பிரமாணத்துட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள்
நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத் தீர்ப்படைவார்கள் (2:12-16)  

9. யூதனைக் குறித்த காரியம்  

(1) யூதனுடைய பத்து அம்ச நிலைமை  (2:17-20)  


(2) யூதனுடைய ஆறு அம்ச பாவமும் தேவனை விட்டு அவன்
பின்வாங்கியிருப்பதும் (2:2:21-24)  
(3) விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளது (2:25-27)   
(4) உண்மையான யூதனுக்கு விளக்கம்  (2:28-29)

(5) சுவிசேஷத்திற்கு யூதனுடைய மூன்று அம்ச மறுப்புரை  

(அ) யூதனுடைய மேன்மை என்ன? (3:1-2)  


(ஆ) யூதனுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ?
(3:3-4) 
(இ) நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன
சொல்லுவோம்? (3:5-8)   

10. தேவனுக்கு முன்பாக முழு உலகமும் பாவத்திற்குட்பட்டிருக்கிறது   

(அ) யூதர், கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட் பட்டவர்கள் (3:9)  


(ஆ) முழு உலகமும் பாவத்திற்குட் பட்டிருப்பதற்கு பதினைந்து காரணங்கள்
(3:10-18)  
(இ) நியாயப்பிரமாணத்தின் நோக்கம் - உலகத்தார் யாவரையும் தேவனுக்கு
முன்பாக ஆக்கினைத்தீர்ப்பிற்கு ஏதுவானவர்களாக ஆக்குகிறது  (3:19-20)  

இயேசு கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தினால் நீ திமானாக்கப்படுதல் -


இதுவே பாவத்திற்கு பரிகாரம்                

1. மனுஷன் எவ்வாறு நீதிமானாக்கப் படுகிறான்  (3:21-26) 


2. மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல்
விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் (3:27-28)   

23
3. விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுவது உலகத்தின் பாவத்திற்கு
பரிகாரமாகும் (3:29-31)  
4. விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல் - எடுத்துக்காட்டுக்கள்  

(1) ஆபிரகாம் - ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக


எண்ணப்பட்டது  (4:1:3)
(2) நியாயப்பிரமாணமும் கிரியைகளும் இல்லாமல் எல்லா மனுஷரும்
விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்படமுடியும்  (4:4-5)
(3) தாவது
ீ - நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டிருந்த தாவது
ீ நியாயப்
பிரமாணமும் கிரியைகளும் இல்லாமல் கிறிஸ்துவில் வைக்கும்
விசுவாசத்தினால் நீதிமானாக்கப் பட்டான் (4:6-8)
(4) எல்லா மனுஷரும் நியாயப்பிரமாணமும் கிரியைகளும் இல்லாமல்
கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட முடியும்  (4:9)
(5) ஆபிரகாம் - விருத்தசேதனமுள்ளவனாக இருப்பதற்கு இருபத்தினான்கு
வருஷங்களுக்கு முன்பாகவே ஆபிரகாம் கிறிஸ்துவில் வைக்கும்
விசுவாசத்தினால் நீதிமானாக்கப் பட்டான்  (4:10-12) 
(6) விசுவாசத்தினால் நீதிமானாக்கப் படுவது நியாயப் பிரமாணத்தினாலும்
கிரியைகளினாலும் உண்டானதல்ல  (4:13-16)    
(7) விசுவாசத்தினால் நீதிமானாக்கப் படுவதன் விளக்கமும் எடுத்துக்காட்டும் 
(4:17-21) 
(8) கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும் எல்லா மனுஷருக்கும்
நீதிமானாக்கப்படுதல் உரியது  (4:22-25)

5. விசுவாசத்தினாலே நீதிமானாக்கப் படுவதன் பத்து அம்ச விளைவு (5:1-5)  


6. விசுவாசத்தினாலே நீதிமானாக்கப் படுவதன் ஆதாரமும் எல்லா
ஆசீர்வாதங்களும் (5:6-11)  

நியாயப்பிரமாணத்திற்குக் கீ ழ் பாவத்திற்கு அடிமையாக இருந்த


பவுலின் அனுபவம்  

1. நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே  (7:7)


2. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்கும்  (7:8) 
3. முன்னே நியாயப் பிரமாணமில்லாதவனாயிருந்த போது நான்
ஜீவனுள்ளவனாயிருந்தேன். கற்பனை வந்தபோது பாவம் உயிர் கொண்டது,
நான் மரித்தவனானேன்  (7:9-11) 
4. நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான் - ஆனால் பாவமே எனக்கு
மரணமாயிற்று  (7:12-14) 

24
5. நன்மை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன் ஆனால் நன்மை
செய்வது என்னிடத்திலில்லை. ஏனெனில் நான் பாவத்திற்கு அடிமையாக
இருக்கிறேன்  (7:15-20) 
6. என் மனதின் பிரமாணத்தின் பிரகாரம் நான் பாவத்திற்கு அடிமையல்ல 
(7:21-23) 
7. புதிய எஜமானனை நான் காணும் வரையிலும் நிர்பந்தமான
அடிமையாக இருக்கிறேன்  (7:24-25)

பாவத்திலிருந்தும் பிரமாணத்திலிருந்தும் முழுவதுமாக விடுதலை பெற்ற


பவுலின் அனுபவம்  

1. ஆக்கினைத்தீர்ப்பு இல்லை - ஏன்?  (8:1-5) 


2. மாம்சத்தின்படி நடப்பதற்கும் ஆவியின்படி நடப்பதற்கும் வேறுபாடுகள்  (8:6-
13) 
3. பாவத்திலிருந்து விடுதலை பெறுவதினால் உண்டாகும் விளைவுகள் (8:14-
16) 
4. பாவத்திலிருந்து விடுதலை பெறுவதினால் உண்டாகும் நித்திய
விளைவுகள் (8:17-25)  
5. விசுவாசிகளிடத்தில் திரித்துவ தேவனின் கிரியை   

(1) பரிசுத்த ஆவியானவரின் கிரியை  (8:26-27) 


(2) பாவத்திலிருந்து விடுதலை பெற்றவர்களுடைய ஜீவியத்தில் தேவனுடைய
கிரியை (8:28-33)   
(3) பாவத்திலிருந்து விடுதலை பெற்றவர்களுடைய ஜீவியத்தில்
கிறிஸ்துவினுடைய கிரியை (8:34-39)  

நடைமுறை உபதேசங்கள்  

1. கிறிஸ்தவ மார்க்கத்தின் அஸ்திபாரம்  (12:1-2) 


2. கிறிஸ்துவின் சரீரமும் ஆவிக்குரிய வரங்களும்  (12:3-8) 
3. கிறிஸ்தவ சகோதரத்துவத்தை காத்துக்கொள்ள இருபது கட்டளைகள்  (12:9-
16) 
4. உலகத்தில் கிறிஸ்தவ நடத்தையைக் காத்துக் கொள்ள ஏழு கட்டளைகள் 
(12:17-21)
5. கிறிஸ்தவரும் அதிகாரமும் அதிகாரிகளும்  (13:1-7) 
6. பிறரிடத்தில் கிறிஸ்தவர்கள் நடந்து கொள்ள வேண்டிய விதத்தைக் கூறும்
எட்டு கட்டளைகள்  (13:8-10) 
7. தேவனுக்கு முன்பாக கிறிஸ்தவர்கள் நடந்து கொள்ள வேண்டிய
விதத்தைக் கூறும் பன்னிரெண்டு கட்டளைகள்  (13:11-14)

25
8. கிறிஸ்தவரும் சந்தேகமுள்ள காரியங்களும்  

(1) விசுவாசத்தில் பலவனமுள்ளவனை


ீ சேர்த்துக் கொள்ள வேண்டும்  (14:1) 
(2) சந்தேகமுள்ள நடத்தைகளை நியாயந்தீர்க்கக் கூடாது  (14:2-9) 
(3) கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக எல்லா கிறிஸ்தவரும் நிற்க
வேண்டும்   (14:10-12) 
(4) கிறிஸ்தவருடைய பொறுப்பு  (14:13-21) 
(5) சந்தேகமுள்ள காரியங்களைக் குறித்து விசுவாசத்தின் பிரமாணம்  (14:22-23)
(6) பலவனருடைய
ீ பலவனங்களைத்
ீ தாங்க வேண்டும்  (15:1-3)
(7) கிறிஸ்தவர்கள் வேதவசனங்களை வாசித்து ஒருமனப்பட்டு ஜீவிக்க
வேண்டும்  (15:4-7) 
(8) யூத மார்க்கத்து கிறிஸ்தவர்களும் புறஜாதி கிறிஸ்தவர்களும்
கிறிஸ்துவில் ஒன்றாயிருக்கிறார்கள் (15:8-12) 

சாட்சியும் புத்திமதிகளும்  

1. ரோமாபுரி சபையைக் குறித்து பவுலின் ஆர்வமும் நிச்சயமும்  (15:13-14) 


2. புறஜாதியார் மத்தியில் தனது ஊழியத்தைக் குறித்து பவுலின் சாட்சி  (15:15-
16) 
3. பவுலின் தத்துவமும் வல்லமையும் - வெற்றியின் இரகசியம்  (15:17-21) 
4. ரோமாபுரிக்குச் செல்ல பவுலின் வாஞ்சை  (15:22-24)
5. எருசலேமிலிருந்த ஏழை பரிசுத்தவான்களுக்கு பவுலின் ஊழியம்  (15:25-28)
6. சுவிசேஷத்தின் வல்லமையில் பவுலின் நம்பிக்கை  (15:29) 
7. எருசலேமிற்கும் ரோமாபுரிக்கும் தனது பிரயாணத்தைக் குறித்த ஜெபம்
(15:30-33)
8. பெபேயாளைப் பற்றிய காரியம்  (16:1-2) 
9. கிறிஸ்தவ வாழ்த்துக்கள்  (16:3-16) 
10. ஸ்திரமான உபதேசத்திலும் ஒற்றுமையிலும் இருக்குமாறு புத்திமதி  (16:17-
18) 
11. ரோமாபுரி கிறிஸ்தவரின் கீ ழ்ப்படிதல்  (16:19-20)
12. மற்றவர்களிடமிருந்து வாழ்த்துக்கள்  (16:21-24) 
13. ஆசீர்வாதம் (16:25-27)

8. வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிட்டவைகளை சுருக்கி


எழுதவும் :

26
வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம் :

வேதத்தின் இறுதி புத்தகமான வெளிப்படுத்தின விசேஷம் ஒன்றும்


புரிந்துகொள்ளுவதற்கு கடினமான ஒரு புத்தகமல்ல.அதன் சீ ரான அமைப்பை
மட்டும் நாம் அறிந்துகொண்டாலே இன்னும் ஆழமாக அதை நாம் படிக்கலாம்.

வெளிப்படுத்தின விசேஷத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து


அப்போஸ்தலனாகிய யோவானுக்கு ”கண்டவைகளையும்,
இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு
சம்பவிப்பவைகளையும்” காட்டிக்கொடுக்கிறார்.(வெளி:1:19). அதாவது
கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் காட்டிக்கொடுக்கிறார்

அவர் கண்டவை என்ன? அவை முதலாம் அதிகாரத்தில் வருகிறது.


சீஷனாகிய யோவான், மரித்து உயிரோடெழுந்த இயேசுவை அவர் மகிமையிலும்
வல்லமையிலும் காண்கிறார்.இது கடந்தகாலம்.

இருக்கிறவை என்ன? அவை இரண்டாம் மற்றும் மூன்றாம் அதிகாரத்தில்


வருகிறது.போதகரான யோவான் தன் சபைகளுக்கு கடிதங்களை எழுதுகிறார்.
இது சபையின் காலம்.ஏறத்தாழ கிபி 33 ல் தொடங்கி இன்றுவரைக்கும் அது
நீடிக்கிறது. சபை இரகசிய வருகையிலே எடுத்துக்கொள்ளப்படும் வரை அது
தொடரும்.இது நிகழ்காலம்.

இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கப்போகிறவை என்ன?


நான்காம் மற்றும் ஐந்தாம் அதிகாரத்தில் இரகசிய வருகையில்
எடுத்துக்கொள்ளப்பட்ட சபையை நாம் பரலோகத்திலே காணலாம். ஏழு வருட
காலம் இது நீடிக்கும்.

அதே வேளை பூமியிலே முதல் மூன்றரை வருட உபத்திரவ காலமும் பின்பு


இன்னும் மூன்றரை வருட மகா உபத்திரவகாலமும் நடைபெறும்.அதுவே
அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்காலம்.இதை ஆறாம் அதிகாரம் முதல்
பத்தொன்பதாம் அதிகாரம் வரை நாம் காணலாம்.

அந்த ஏழு வருட முடிவில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நடைபெறும்.


இஸ்ரேலுக்கு எதிராக வரும் அர்மகெதோன் யுத்தத்தில் கர்த்தர் வெற்றி

27
சிறப்பார், சாத்தான் பாதாளத்திலே அடைக்கப்படுவான். இயேசுகிறிஸ்து பூமியிலே
ஆயிரம் வருடம் அரசாட்சியை செய்வார். இதை இருபதாம் அதிகாரத்தில்
காணலாம்.

ஆயிர வருட முடிவில் சாத்தான் பாதாளத்திலிருந்து வெளியே விடப்படுவான்.


அவன் உலக ஜாதிகளையெல்லாம் கூட்டிக்கொண்டு வர கோகு மாகோகு எனும்
இறுதி யுத்தம் நடைபெறும். சாத்தான் எரிகிற நரகத்திலே தள்ளப்படுவான். இந்த
பழைய வானமும் பூமியும் ஒழிந்துபோம்.

இருபத்தி ஒன்று மற்றும் இருபத்தி இரண்டாம் அதிகாரத்தில் புதிய வானம்


புதிய பூமி உருவாக இனி அங்கே மரணமில்லை. கண்ண ீர் இல்லை.
என்றென்றும் கர்த்தரோடே கூட இருப்போம்.ஆமென், கர்த்தராகிய இயேசுவே,
வாரும்.

I.முன்னுரை: கிறிஸ்து தொடர்பு கொள்ளுதல் 1:1-8

1). தலைப்பு 1:1


2). பிரதிநிதி 1:2
3). சிபாரிசு 1:3
4). விதி 1:4-5
5). அர்ப்பணிப்பு 1:5-6
6). சட்ட வாக்கியம் 1:7
7). அனுமதி 1:8

II.தரிசனம்:1 திருச்சபையில் கிறிஸ்து

ஜீவிக்கிறவர் 1:5-3:22
இடம் :  பத்மு

1). உருவச் சித்திரம் 1:9-20


2). செய்திகள் எபேசுவுக்கு 2:1-7
3). சிமிர்னாவுக்கு 2:8-11
4). பெர்கமுவுக்கு 2:12-17
5). தீயத்தீராவுக்கு 2:18-29
6). சர்தைக்கு 3:1-6
7). பிலதெல்பியாவுக்கு 3:7-13
8). லவோதிக்கேயாவுக்கு 3:14-22

28
III.தரிசனம்:2 அண்ட சராசரங்களில் கிறிஸ்து

இரட்சகர் 4:1-16:21
இடம்: பரலோகம்

1). பரலோகத்தின் காட்சி 4:3-5:14


2). ஏழு முத்திரைகள் 6:1-8:5
3). வெள்ளைக் குதிரை 6:1-2
4). சிவப்புக் குதிரை 6:3-4
5). கறுப்புக் குதிரை 6:5-6
6). மங்கின நிறமுள் குதிரை 6:7-8
7). இரத்தச் சாட்சிகளின் ஆத்துமாக்கள் 6:9-11
8). பரலோகத்தின் அடையாளங்கள் 6:12-17
9). (இடைச் செருகல் விளக்கம்: முத்திரிக்கப்படுதல் 1,44,000 பேர் 7:1-17
10). பரலோகத்தின் அமைதி 8:4-5
11). எழு எக்காளங்கள் 8:6-11:39
12). கல் மழை, அக்கினி, இரத்தம் 8:7
13). சமுத்திரம் இரத்தமாக மாறுதல் 8:8-9
14). நட்சத்திரம் தண்ண ீர்களின் மேல் விழுதல் 8.10-11
15). சூரியன், சந்திரன் நட்சத்திரங்கள் இருளடைதல் 8:12-13
16). ஆழம் காண முடியாத பாதாளம் திறக்கப்படுதல் 9:4-12
17). நான்கு தூதர்களை இழத்தல் 9:13-21
18). இடைச் செருகல் விளக்கம்: சிறிய புத்தகம் தேவாலயத்தை அளத்தல்
19). இரண்டு சாட்சிகள் 10:1-11:14
20). மொத்த அறிக்கையை அறிவித்தல் 11:15-19
21). அடையாளங்கள் 12:1-16:21
22). முக்கியமான நபர்கள் 12:1-14:20
23). ஸ்திரி 12:12
24). வலுசர்ப்பம் 12:3-4
25). ஆண் குழந்தை 12:5-6
26). பிரதான தூதனான மிகாவேல் 12:7-17
27). சமுத்திரத்திலிருந்து வரும் மிருகம் 13:1-10
28). பூமியிலிருந்து வரும் மிருகம் 13:11-18
29). சீயோன் மலை மீ து ஆட்டுக்குட்டியானவர் 14:1-5
(இடைச் செருகல் விளக்கம்
தூதரின் செய்திகள்)

30). நியாயத்தீர்ப்புக்கு அழைப்பு 14:6-7

29
30). பாபிலோனின் வழ்ச்சி
ீ 14:8
31). கோபத்தைப் பற்றி எச்சரிக்கை 14:9-12
32). மரித்தோரின் ஆசீர்வாதம் 14:13
33). அறுவடைக்கு அழைப்பு 14:14-16
34). கோபாக்கினையின் திராட்சைகளை அறுவடை செய்தல் 14:17-20
35). எழு கலசங்கள் 15:1-16:21
36). பரலோகத்தின் காட்சி 15:1-18
37). நியாயத் தீர்ப்புகள் 16:1-20
38). மனுஷர் மேல் கொடிய புண் 16:2
39). சமுத்திரம் இரத்தமாக மாற்றப்படுதல் 16:3
40). நீரூற்றுக்கள் இரத்தமாக மாற்றப்படுதல் 16:4-7
41). சூரியனின் வெப்பம் அதிகரித்தல் 16:8-9
42). இருள் 16:10 -11
43). அகத்த ஆவிகள் 16:12-15
44). நிறைவுறுதல் 16:17-21

IV.தரிசனம்:3 வெற்றியில் கிறிஸ்து

போர் வரர்
ீ 17:1-21:8
இடம்: வனாந்திரம்

1). பாபிலோனின் அழிவு 17:1-18:24


2). பரலோகத்தில் மகிழ்ச்சி 19:1-10
3). மிருகம் வெற்றி கொள்ளப்படுதல் 19:11-21
4). சாத்தானைக் கட்டுதல் 20:1-3
5). ஆயிர வருஷ அரசாட்சி 20:4-6
6). இறுதி எதிர்ப்பு 20:7-10
7). மரித்தோரின் நியாயத் தீர்ப்பு 20:11-15
8). புதிய வானம், புதிய பூமி 21:1-8

V.தரிசனம்:4 நிறைவில் கிறிஸ்து

ஆட்டுக் குட்டியானவர் 21:9-22:5


இடம்: ஒரு மலை

1). தேவனுடைய நகரம் 21:9-21


2). தேவனைத் தொழுது கொள்ளுதல் 21:21-27
3). தேவனுடைய ஆசீர்வாதம் 22:1-5

30
VI.முடிவுரை

1). கிறிஸ்து சவால் விடுகிறார் 22:5-21


2). கீ ழ்ப்படிவதற்கு - விருப்பம் 22:6-9
3). பரிசளிக்க - அறிவு 22:10-15
4). ஐக்கியப்பட - உணர்வுகள் 22:16-20
5). ஆசீர்வாதம் 22:21

காலமும் இடமும்

கிவி. 96 ஆம் ஆண்டில் பத்மு தீவிலிருந்து இந்த நிருபம் எழுதப்பட்டது. (வெளி


1:9)

ஆசிரியர்: அப்போஸ்தலர் யோவான். (வெளி 1:4)


புள்ளிவிவரங்கள்

a). அதிகாரங்கள் - 22
b). வசனங்கள் - 404
c). கேள்விகள் - 9
d). புதிய தீர்க்க தரிசனங்கள் - 15
e). வரலாற்றைக் குறிக்கும் வசனங்கள் - 53

பொருளடக்கம்

1. தலைப்பும் ஆசிரியரும் (1:1)


2. யோவான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான் (1:2)
3). பாக்கியவான்கள் (1:3)
4). ஏழு சபைகளுக்கும் வாழ்த்துக்கள் (1:4-6)
5). வெளிப்படுத்தின விசேஷத்தின் மையக்கருத்து (1:7 )
6). ஆதியும் அந்தமுமாக இருக்கிற இயேசு கிறிஸ்து (1:8)
7). தீர்க்கதரிசி - யோவான் (1:9-10)
8). யோவான் காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதவேண்டும் என்னும் கட்டளை
(1.11)

இவைகளுக்குப் பின்பு சம்பவிப்பவைகள் - சபை எடுத்துக் கொள்ளப்பட்ட


பின்பு

A. பரலோகத்தின் தேவாலயம் - எடுத்துக் கொள்ளப்பட்ட விசுவாசிகள்


தேவனோடு இருக்கிறார்கள்

31
(1) பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசல் (4:1)
(2) பரலோகத்தில் ஒரு சிங்காசனம் (4:2-3)
(3) இருபத்துநான்கு மூப்பர்கள் (4:4)
(4) ஏழு ஆவிகள் (4.5)
(5) கண்ணாடிக் கடல் (4:6-8)
(6) பரலோகத்தில் ஆராதனை (4:9-11)
(7) பரலோகத்தில் ஒரு புஸ்தகம் (5:1-4
(8) பரலோகத்தின் ஆட்டுக்குட்டி (5:5-7)
(9) ஜீவன்களும் மூப்பர்களும் ஆட்டுக்குட்டியானவரே ஆராதிக்கிறார்கள் (5:8-10)
(10) தேவனையும் ஆட்டுக் குட்டி யாவரையும் எல்லோரும் ஆராதிக்கிறார்கள்
(5:11-14)

B. தானியேலின் எழுபதாவது வாரமும் உபத்திரவக்காலமும்

(1) முதலாம் முத்திரை - அந்திக்கிறிஸ்து புறப்பட்டான் (6:1-2)


(2) இரண்டாம் முத்திரை -அந்திக்கிறிஸ்து புறப்பட்டதினால் ஏற்பட்ட யுத்தம்(6:3-4)
(3) மூன்றாம் முத்திரை - முதலாவது முத்திரைகளினால் ஏற்பட்ட பஞ்சம் (6:5-6)
(4) நான்காம் முத்திரை - முதல் மூன்று முத்திரைகளினால் ஏற்பட்ட மரணமும்
பாதாளமும் (6:7-8)
(5) ஐந்தாம் முத்திரை - தானியேல் எழுபதாவது வாரத்தின் உபத்திரவக் காலத்தில்
இரத்தச்சாட்சியாக மரித்தவர்கள் (6.9-11)
(6). ஆறாம் முத்திரை - தேவனுடைய கோபாக்கினை ஆரம்பமாகிறது (6:12-17)

கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக பரலோகத்தின் காட்சிகள்


1. பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் கர்த்தரைத் துதிக்கிறார்கள் (19:1-3)
2. இருபத்துநான்கு மூப்பர்களும் நான்கு ஜீவன்களும் தேவனைத்
தொழுதுகொண்டார்கள் (19:4)
3. கர்த்தரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது
(19:5)
4. திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம் (19:6)
5. ஆட்டுக்குட்டியானவருடைய கல்யாணம் (19:7-9)
6. யோவான் தூதனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தான் (19:10)

புத்தகத் தலைப்பின் முக்கியத்துவம்

இயேசு கிறிஸ்துவினால் போவானுக்கு திறந்து வெளிக்குக் கொண்டுவரப்பட்ட


அல்லது திரையை நீக்கிக் காட்டப்பட்ட காரியங்கள்

மிகச் சிறிய அதிகாரம்:- அதிகாரம் 15 (8 வசனங்கள்)

32
மிக நீ ண்ட அதிகாரம்:- அதிகாரம் 2 (29 வசனங்கள் )

மொத்த அதிகாரங்கள்: 22

முக்கிய வேத வசனம்:-

வெளிப்படுத்தின விசேஷம் 1:19 "நீ கண்டவை களையும், இருக்கிறது களையும்,


இவைகளுக்குப் பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது"

33

You might also like