Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

யாருக்கு யார் யோககாரகன்?

யோகம் என்றால் அதிர்ஷ்டம் (Good Luck) என்று பொருள்படும். யோககாரகன் என்பதற்கு


அதிர்ஷ்டத்தைக் கொடுப்பவன் என்று பொருள் கொள்ளுங்கள். ஜாதகத்தில் கிரகங்கள் உச்சமாக
இருப்பதைவிட, யோகத்தைக் கொடுக்ககூடிய கிரகம் உச்சமாக இருந்தால் பல நன்மைகள் ஏற்படும்.
அதுபோல யோககாரகன், ஆட்சி, கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும் பல்வித நன்மைகள்
உண்டாகும்

சனியின் வீட்டிற்கு சுக்ரன்

சுக்ரன் வீட்டிற்கு சனி

செவ்வாய் வீட்டிற்கு சந்திரனும் சூரியனும்

சந்திர சூரிய வீடுகளுக்கு செவ்வாய்

புதன் வீட்டிற்கு புதனே

குரு வீட்டிற்கு குரு

1. ரிஷப லக்கினத்திற்கு சனி யோககாரகன் (9 & 10 ஆம் இடங்களுக்கு உரியவன்)


2. துலா லக்கினத்திற்கு சனி யோககாரகன் (4 & 5 ஆம் இடங்களுக்கு உரியவன்)
3. கடக லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகன் (5 & 10 ஆம் இடங்களுக்கு உரியவன்)
4. சிம்ம லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகன் (4 & 9 ஆம் இடங்களுக்கு உரியவன்)
5. மகர லக்கினத்திற்கு சுக்கிரன் யோககாரகன் (5 & 10 ஆம் இடங்களுக்கு உரியவன்)
6. கும்ப லக்கினத்திற்கு சுக்கிரன் யோககாரகன் (4 & 9 ஆம் இடங்களுக்கு உரியவன்)
7. மேஷ லக்கினக்காரகளுக்கு சூரியனும், சந்திரனும் சேர்ந்திருந்தால் பலத்த யோகத்தைக்
கொடுக்கக் கூடியவர்கள். அவர்கள் 4 ஆம் வீடு & 5 ஆம் வீடுகளுக்கு அதிபதிகள். அதை
நினைவில் வையுங்கள்.
8. விருச்சிக லக்கினக்காரர்களுக்கு சூரியனும், சந்திரனும் சேர்ந்திருந்தால் பலத்த யோகத்தைக்
கொடுக்கக்கூடியவர்கள். அவர்கள் 9 ஆம் வீடு & 10 ஆம் வீடுகளுக்கு அதிபதிகள்.
9. தனுசு & விருச்சிக லக்கினத்திற்கு யோககாரகன் என்று தனியாக யாரும் கிடையாது.
லக்கினாதிபதி குருவே யோககாரகன் வேலையையும் செய்வார். அவர் முதல் நிலை சுபக்கிரகம்
அதை மனதில் வையுங்கள். அவர் ஜாதகத்தில் அம்சமாக இருந்தால் போதும். ஜாதகன்
யோகங்களுடன் இருப்பான்.
10. மிதுன & கன்னி லக்கினங்களுக்கு தனியாக யோககாரகன் கிடையாது. லக்கினாதிபதி புதனே
யோககாரகன் வேலையையும் செய்வார். அவர் வித்யாகாரகன். வித்தைகளுக்கு அதிபதி. அவர்
ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் போதும். ஜாதகன் யோகங்களுடன் இருப்பான்.

You might also like