100 தமிழ் சிறுகதைகள் - பகுதி II - கூட்டாஞ்சோறு

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

2/8/23, 4:19 PM 100 தமிழ் சிறுகதைகள் – பகுதி II | கூட்டாஞ்சோறு

கூட்டாஞ்சோறு

Anything goes
ஜூன் 18, 2009

100 தமிழ் சிறுகதைகள் – பகுதி II

Posted by RV under Reading | குறிச்சொற்கள் : Aadhavan, Asokamithran, Azhagiya periyavan,


Boston bala, G. nagarajan, Jayakanthan, Ki. rajanarayanan, Ku. azhagirisami, Ku.pa.ra., Mowni,
Poomani, Rajendra sozhan, S. ramakrishnan, Subra bharathi manian, Sundara ramasami,
Suyambulingam, Thi. janakiraman, Vannadasan, Vannanilavan |
பின் னூட்டமொன் றை இடுங் கள்  
i
2 Votes

ராமகிருஷ் ணனின் லிஸ் ட் பற்றி போன பதிவில் எழுதி இருந்தேன் . அப்புறம் கொஞ்சம்
புத்தக அலமாரியை புரட்டி பார்த்தேன் . பாஸ் டன் பாலா ஒரு லிங் க் கொடுத்திருந்தார்.
இன் னும் ஞாபகம் வந்தவை.

மௌனியின் பிரபஞ் ச கானம் – இந்த கதை ஏதோ கொஞ்சம் புரிகிறது. ஆனால்


பிரமாதமாக ரசிக்கவில் லை.

கு.ப.ராவின் விடியுமா? – எனக்கு நேராக கதை சொல் லாவிட்டால் பல நேரங் களில்


புரிவதில் லை. இந்த கதையில் அத்திம் பேர் இருக்காரா போய் ட்டாரா?

தி. ஜானகிராமனின் பாயசம் – பொறாமையை, அசூயையை இந்த கதையை விட


பிரமாதமாக வெளிப்படுத்தி விடமுடியாது. அண் ணன் பையன் தலையெடுத்து
சித்தப்பாவுக்கு எல் லாம் செய் தாலும் சித்தப்பாவுக்கு ஈகோவும் பொறாமையும்
படுத்துகிறது. கல் யாணத்தில் பாயசத்தில் எலி என் று சொல் லி அண் டாவை கவிழ்த்து
விடுகிறார்.

கு. அழகிரிசாமியின் அன் பளிப்பு, இருவர் கண் ட ஒரே கனவு – அன் பளிப்பு அற்புதம் .
தன் னை மட்டும் விட்டுவிட்டார் என் ற மனநிலையை அருமையாக எழுதி இருக்கிறார்.
இருவர் கண் ட ஒரே கனவு ஓகே, ஆனால் பிரமாதம் இல் லை.

கி. ராஜநாராயணனின் கோமதி, கதவு – கோமதி gay சமையல் காரன் பற்றியதுதான் .


நன் றாக எழுதி இருக்கிறார். கதவு வீட்டில் ஜப்தி செய் யப்பட வீட்டு குழந்தைகள்
விளையாடும் கதவு பற்றி. நன் றாக வந்திருக்கிறது. கி.ரா.வுக்கு கேட்க வேண் டுமா?

சுந்தர ராமசாமியின் பிரசாதம் , ரத்னாபாயின் ஆங் கிலம் , விகாசம் – பிரசாதம்


அருமை. நான் இதை விவரிக்க விரும் பவில் லை. படித்து அனுபவியுங் கள் . ரத்னாபாயும்
நன் றாக இருக்கிறது. விகாசம் பற்றி எஸ் .ரா. சொல் லி இருக்கிறார், நான் தான்
கவனிக்கவில் லை. எனக்கு மிகவும் பிடித்த சு.ரா. கதை இதுதான் . கோவில் காளையும்
உழவு மாடும் என் ற ஒரு நல் ல கதையும் இப்போதும் நினைவுக்கு வருகிறது.

அசோகமித்ரனின் காலமும் ஐந்து குழந்தைகளும் – மனிதர் ஜீனியஸ் . டெக்னிக் மிக


அற்புதம் . இதையும் விவரிக்க முடியாது.

ஜெயகாந்தனின் குரு பீடம் , முன் நிலவும் பின் பனியும் – இரண் டும் மிக நன் றாக
இருக்கிறது. இங் கே படிக்கலாம் .

ஆதவன் சிவப்பா உயரமா மீசை வெச்சுக்காமல் – பாஸ் டன் பாலா லிங் க் கொடுத்து
உதவினார். நன் றாக இருக்கிறது. இங் கே படிக்கலாம் . பகுதி 1, பகுதி 2, பகுதி 3

வண் ணநிலவனின் எஸ் தர், மிருகம் , பலாப்பழம் – எஸ் தர் மிக அருமை. மிருகம்
புரியவே இல் லை. பலாப்பழம் புரிந்த மாதிரியும் இருக்கிறது, புரியாத மாதிரியும்
இருக்கிறது. கொஞ்சம் subtle ஆன எழுத்தாளர்.

https://koottanchoru.wordpress.com/2009/06/18/100-தமிழ்-சிறுகதைகள் -பகுதி-ii/ 1/2


2/8/23, 4:19 PM 100 தமிழ் சிறுகதைகள் – பகுதி II | கூட்டாஞ்சோறு

ராஜேந்திர சோழனின் புற்றில் உறையும் பாம் புகள் – ஓகே. ஆனால் பிரமாதம்


இல் லை.

வண் ணதாசனின் நிலை – ஓகே.

ஜி. நாகராஜனின் டெரிலின் ஷர்ட்டும் எட்டு முழ வேஷ் டியும் அணிந்த மனிதர்,
ஓடிய கால் கள் – ஓடிய கால் கள் எனக்கு கொஞ்சம் பிடித்திருந்தது. டெரிலின் ஷர்ட்
ஓகே.

பூமணியின் ரீதி – தண் ணீருக்கு தவிக்கும் இரு சிறுவர்கள் . நன் றாக இருந்தது.

சுப்ரபாரதிமணியனின் ஒவ் வொரு ராஜகுமாரிக்குள் ளும் – மட்டன் சமையலை


பற்றி விலாவாரியாக எழுதிக்கொண் டே பொய் திடீரென் று ஓ. ஹென் றி ஸ் டைலில்
முடிக்கிறார். நல் ல எழுத்து.

அழகிய பெரியவனின் வனம் மாள் – பரவாயில் லை. மரங் களை நேசிக்கும் ஒரு
வயதான பாட்டி.

சுயம் புலிங் கத்தின் ஒரு திருணையின் பூர்வீகம் – என் னிடம் இருக்கும் கலெக்ஷனில்
ஒரு திருணையின் கதை என் று ஒன் று இருக்கிறது. பரவாயில் லை.

சம் பந்தம் உள்ள பிற பதிவுகள்


100 சிறந்த சிறுகதைகள் – எஸ் . ராமகிருஷ் ணனின் லிஸ் ட்
சினிமாவுக்கு ஏற்ற தமிழ் சிறுகதைகள்

வேர்ட்பிரஸ் .காம் இல் வலைப்பதிவு.

https://koottanchoru.wordpress.com/2009/06/18/100-தமிழ்-சிறுகதைகள் -பகுதி-ii/ 2/2

You might also like