குறுக்கெழுத்து விளையாட்டு

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி

தமிழ்மொழிக் கழகம் / 2021

வாரம் - 2

குறுக்கெழுத்து விளையாட்டு ( பழமொழிகள் )

குறுக்கெழுத்துப் புதிரில் ஒளிந்திருக்கும் பழமொழிச் சொற்களைக்


கண்டுபிடியுங்கள்:

இடமிருந்து வலம்

1 அளவுக்கு மிஞ்சினால் இது நஞ்சாகும். (5)

2 அடி உதவுகிற  மாதிரி அண்ணனும் இவனும் உதவ மாட்டார்கள். (3)

3 உறவில் கணக்குப் பார்த்தால் _______________ தான் மிஞ்சும் (4)

6 சும்மா இருந்ததை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி. அது என்ன? (3)

7 இப்படி உக்காந்து தின்றால் குன்றும் மாளாதாம். எப்படி? (3)

9   இவன் கணக்கு பார்த்தா உழக்குக் கூட மிஞ்சாதாம். யாரிவன்? (5)

11 ஆடிக் காத்திலே _____________யும் பறக்குமாம்.(3)


18 அரை வைத்தியனாவதற்கு இதில் ஆயிரத்தைக் கொன்றிருக்க வேண்டுமாம்.
அது என்ன? (2)

வலமிருந்து இடம்

8  இதை எடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகி விடுகிறான். (2)

13 ___________ மீ ன்களுக்கு நீந்தவா கத்துத் தரணும்? (3)

17 உலகமறியாமல் இருப்பதை, குண்டுச் சட்டிக்குள் ________ ஓட்டுவது போலன்னு

சொல்லலாம். (3)

மேலிருந்து கீ ழ்

1 இவன் அன்றே கொல்வானாம். ஆனால் தெய்வம் நின்று கொல்லுமாம்.

யாரிவன்? (4)

4 மிக மிகச் சிக்கனமானவர்களை, ‘கடைந்த மோரில் ______________ வெண்ணை

எடுப்பவன்’ என்று சொல்வார்கள். (4)

5 கவனக் குறைவாக இருப்பதை “ ___________ தரையிலே ; தவிடு பானையிலே”

என்று சொல்வார்கள். (4)

9 _______________ சுருக்குவது பெண்டிர்க்கு அழகு. (3)

11 ராமனைப் போல அரசன் இருந்தாலும் இவரைப்போல சேவகன் வேண்டும்

என்கிறார்கள். யாரிவர்? (4)

12 நல்ல மாட்டுக்கு ஒரு __________. (2)

கீ ழிருந்து மேல்

8 தாயைப் போல பிள்ளை என்று சொல்வதைப் போல இவரைப் போல புதல்வன்


என்று சொல்கிறார்கள். யாரிவர்? (3)

9 __________ வாயை மூடலாம். ஊர் வாயை மூட முடியாது. (2)

10 உப்பைத் தின்னவன் _____________ குடிக்கணும். (3)

13 கைப்புண்ணைப் பார்க்க ___________________ அவசியமா? (4)

14 ___________ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்களாம். (3)


15 இவனுக்கு, புல்லும் ஆயுதமாம். யாரிவன்? (5)

16 ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது ___________ களாம். (3)

19 ___________ சுரைக்காய் கறிக்கு உதவாதாம். (3)

மாணவர்களின் கவனத்திற்கு:

1. தங்களின் விடைகளை ஒரு தாளில் எழுதி ; படம் பிடித்து ; அனுப்பவும்.


2. விடையைக் கண்டுப்பிடிக்க தங்களின் பெற்றோரின் உதவியை நாடலாம்.
3. தங்களுக்குத் தெரியாத பழமொழிகளும் இங்கு வழங்கப்பட்டுள்ளன. முயற்சி செய்யவும்.

முயல்க ! வெல்க !

You might also like