Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

குரு சனி சேர்க்கை:

குரு சனி சேர்க்கையோ பார்வையோ பெற்றவர்கள் உயர்பதவியையோ, அல்லது தொழிலில் உயர்ந்த


நிலையையோ அடைவார்கள்.
நாடிநூல்கள் இதைதான் தர்மகர்மாதிபதிகளின் சேர்க்கை என்று கூறுகிறது.
சாராவளி என்ற மூலநூலில் சனி + குரு சேர்க்கை கேந்திரங்களில் அமைந்தால் ராஜமந்திரியாகவோ அல்லது
சங்கம், நகரம் கிராமம் போன்றவற்றிற்கு தலைவராகவோ ஆவதோடு சனிதசா உயர்ந்த ராஜயோகத்தையும்
தரும் என்கிறது. பலதீபிகையும் சனி குரு சேர்க்கையை யோகசேர்க்கை என்கிறது.
1981 ல் குரு + சனிதசா இணைவு ஏற்பட்டது. அவ்வருடத்தில் பிறந்தவர்கள் பலர் சனி குரு தசாவில்
உயர்வான பதவி, பல யோகவசதிகளை பெற்றிருப்பதே இதற்கு ஆதாரமாகும்.
ஒரு அறிவார்ந்த ஜோதிடன் தீர்க்கமாக ஆய்வுசெய்து உறுதிப்படுத்திக்கொண்டுதான் தனது பலன்களை
பதிவிட வேண்டும்.
குரு எந்த பாவக்கிரகத்தோடு சேர்ந்தாலும் தனது காரகத்துவ பலன்களை குறைத்துக்கொள்வான்.
ஆனால் குரு ,சனிகாலபுருஷ லக்னமான மேசத்திற்கு தர்மகர்மாதிபதிகளாவதால் குருவின் காரகத்துவ
பலன்களில் தாமதம் தந்தாலும் கெடுதல் தருவதில்லை.
இவர்கள் சேர்ந்திருந்தால் யோகத்தையே செய்கிறார்கள். 
யாரோ சிலர் இடையில் குரு சனி சேர்ந்திருந்தால் பிரம்மஹத்திதோசம் என்றும் ,இது மிகவும் மோசமான
தோசமென்றும் இதற்கு பரிகாரமாக ,வேள்வி,யாகம் செய்யவேண்டுமென்றும் பரிகாரத்திற்காக
சொல்லியதெல்லாம் ஜோதிடமாகுமா?
குரு+ சனி சேர்ந்திருந்தத
் ால் பிரம்மஹத்திதோசம் அதனால் கெட்டொழிந்தான் என்று எவனோ கூறியதை
கூறிக்கொள்ளும் ஜோதிடர்கள் ஒரு உதாரண ஜாதகத்தையாவது பதிவிடமுடியுமா?
முடியவே முடியாது.
எல்லாம் குரு சனி சேர்க்கை பிரம்மஹத்தி தோசம் என்றுக்கூறி ஒன்றுமறியாத மக்களை
ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

குரு+ சனி சேர்க்கையில் குரு வலுபெற்றவர்கள் சுத்த ஆன்மீகவாதிகள்.


இதைப்பற்றி பல ஜோதிட மேதைகள் விளக்கியும் அரைகுறை போலி ஜோதிடர்கள் சில பரிகாரம்
செய்பவர்களுடன் கூட்டு வைத்துக்கொண்டு பரிகாரம் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
மற்றொரு சூட்சுமமாக குரு தீமையை செய்யும் லக்னமான ரிசபம், துலாம் மற்றும் கேந்திராதிபத்ய
,மாரகாதிபத்ய, பாதகாதிபத்ய தோசங்களை தரும் உபய லக்னங்களான மிதுனம் ,கன்னி, துலாம், மீனம்
லக்னங்களுக்கு சனியுடன் சேர்ந்த குரு மட்டுமே தனது தசாவில் யோகத்தை செய்வதோடு அடுத்துவரும்
சனிதசாவும் மாபெரும் யோகத்தை செய்யும்.
குரு+ சனி சேர்க்கையில் யாராவது அவயோகியாக இல்லாவிட்டாலோ, அவயோகி நட்சத்தில்
இல்லாவிட்டாலோ இவர்களது தசாக்கள் அவ்வளவு மோசமாக இருக்காது.
இது நிச்சயம்.
சரி கன்னி லக்னத்தில் பிறந்த ஒருவரின் ஜாதகத்தை கீழே பதிவிட்டுள்ளேன். அவருக்கு குரு யோகி.
சூரியன் அவயோகி.
ஆனால் சூரியன் 12 ரூபவலிமையுடன் அசுரபலம்.
திரயோதசி திதியில் பிறந்ததால் சூரியன் சுக்கிரன் திதிசூன்ய கிரகங்கள். ரிசபமும் ,துலாமும் திதிசூன்ய
ராசிகள்.
எனது கொள்கையின்படி அவயோகியாக இருக்கும் கிரகமே திதிசூன்ய ராசியில் இருந்தாலோ, ராகு
சேர்க்கை அல்லது ராகுவின் நட்சத்திரத்திலோ இருந்தாலோ யோகம் செய்யும்.
நான் உதாரணமாக கீழே கொடுத்துள்ள ஜாதகம் எனது நண்பருடையது. அவர் மாவட்ட துணை
ஆட்சியருக்கு சமமான பதவியில் இருப்பவர்.
இவர் கன்னி லக்னத்தில் பிறந்து சூரியன் பத்தில் திக்பலம்.
இரண்டாவதாக லக்னம் மற்றும் பத்தாமதிபதியான ( பத்து தொழில்,உத்தியோகம்) ஆட்சிபெற்று வக்கிரம்
ஆனதால் உச்சபலத்தை பெற்றது. சுக்கிரன் சந்திரன் பரிவர்தத ் னை.
இரண்டு கிரகங்கள் திக்பலம் பெற்றால் ராஜயோக அமைப்பு. 
இவரின் ஜாதகத்தில் குரு லக்னத்தில் திக்பலம்.
சூரியன் 10 ல் திக்பலம். இவருக்கு சனியுடன் சேர்ந்த குருமகாதசாவில்தான் கெஜட்டடு ரேங்க் அரசு பதவி
கிடைத்தது.
இதே குருதசா சனிபுத்தியில் மேலும் உயர்பதவி உயர்வு பெற்றார். இவர் IAS முதன்மை தேர்வில் வெற்றிபெற்று
நேர்முகதேர்வு வரை சென்று தேர்ச்சிபெறாதவர். ஆனால் மாநிலதேர்வில் உயர்பதவியை தேர்வுமூலம்
பெற்றவர். இந்தக்குரு யோகி. 12 ரூப வலிமைபெற்ற சூரியன் நட்சத்திரசாரம்.
அதைவிட சனியோடு 2 பாகைக்குள் இணைவுபெற்றவர்.
இதில் அவயோகி சூரியன் திதிசூன்ய தோசத்தை அடைந்தாலும் ராகுவின் நட்சத்திரத்தை பெற்று
தோசநிவர்த்தியை அடைந்துள்ளது.
இன்னும் பல சிறப்புகளை ஜாதகத்தில் நீங்களே ஆய்வுசெய்யுங்களேன்.
முக்கியமாக குருவும் சனியும் புஷ்கர நவாம்சத்தையும் புஷ்கர பாகையையும் பெற்றிள்ளதை நீங்களே
பாருங்கள்.

You might also like