Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

கிரகங்கள் 6,8,12 ல் இருந்தால் பலமிழக்கும் என்பது பொதுவான பலன்.

ஆனால் ஒரு கிரகம் 6,8,12 ல் இருந்தாலே


பலமிழந்துவிட்டதாக நினைத்து பீதியடைகின்றனர். இது தவறான கருத்து

உண்மையில் ஒரு கிரகமானது 6 விதமான பலத்தை அடைவதை நீங்கள் அறிவீர்கள். அதில் உள்ள முதன்மையான பலம்
ஸ்தான பலம். ஆறு என்றால் சட். இந்த சட்பலத்தில் முதன்மையான பலமான ஸ்தான பலத்தை பெற பல படிநிலைகள்
உள்ளன. அதில் ஒன்றே ஒன்றுதான் ராசிக்கட்டத்தில் அக்கிரகமானது பெறும் ஆட்சி, உச்சம் , நட்பு போன்ற பலமும் கேந்திர
கோணங்கள், 6,8,12 ல் பெறுகின்ற பலமும் ஆகும். இந்த ராசியைத்தவிர, ஹோரை, திரேக்காணம், சப்தாம்சம்,
திரிசாம்சம், துவாதாம்சம், நவாம்சம் போன்ற வர்க்க அட்டவணைகளில் ஒரு கிரகம் பெறும் கூடுதல் மதிப்பே
ஆறுபலத்தில் ஒன்றான ஸ்தானபலமாகும்.

ராசியை மட்டும் வைத்துக்கொண்டு பலன் சொல்பவராக இருந்தாலும் நான் கூறும் இவ்விதிகள் மேலோட்டமாக
பொருந்தும். உதாரணமாக ஒரு ஜாதகத்திற்கு கதாநாயகனான லக்னாதிபதியை எடுத்துக்கொள்வோம். இந்த
லக்னாதிபதி சுபரா, பாவரா என்று முதலில் பிரித்துக்கொள்வோம். சுபர் என்றால் பொதுவாக கேந்திரகோணத்தில்
இருக்கும்போது பாவக்கிரகங்களின் பார்வையும் சேர்க்கையும் இன்றி சுபர்களின் பார்வை சேர்க்கையில் பகை, நீசம்
இல்லாமல் இருந்தாலே போதுமானது. அது உங்களது ஜாதகத்திற்கே யோகமளிக்குமாறு வலுபெற்றுள்ளது என்று
கருதலாம். அவ்வாறில்லாமல் அச்சுபராகிய லக்னாதிபதி 6,8,12 ல் மறைந்தாலும் பகை, நீசம் பெறாமல் நட்பாகவோ அதற்கு
மேல் வலுவாகவோ இருந்தாலோ, பாவக்கிரகங்கள் தொடர்பின்றி சுபக்கிரகங்களின் பார்வை சேர்க்கையில் இருந்தாலும்
அக்கிரகம் யோகவலுவில்தான் உள்ளது என்று பொருள். இதில் கவனிக்கவேண்டிய முக்கிய கருத்து கேந்திரகோணத்தில்
பகை, நீசம் , பாவர்களது தொடர்பு என்று இருப்பதைவிட 6,8,12 ல் ஆட்சி, உச்சம், நட்பு, சுபக்கிரகங்களின் பார்வை
சேர்க்கை என்று இருப்பது வெகுசிறப்பு. லக்னாதிபதி பாவியாக இருந்தால் லக்னத்திலேயே ஆட்சியாகவோ உச்சமாகவோ
இருந்து பாவக்கிரகங்களின் பார்வை, சேர்க்கை பெற்றிருப்பதைவிட 6,8,12 ல் " தனது பகை வீடானாலும்" சுபர்களது
வீடாகிய குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரனது வீடுகளில் இருப்பது சிறப்பு. இது ஜோதிடத்தில் உள்ள பொதுபலன்களில்
இருந்து விதிவிலக்குகளை நோக்கி விலகி செய்யும் விதியாகும். செவ்வாய் சாதாரணமாக பகைவீடான புதன், சுக்கிரன்
வீடுகளில் இருந்தாலும் அது சுபர்களின் வீடாகையால் உயர்வான வாழ்க்கை நிலையையே தரும்.
சட்பலரீதியாவோ, பலவர்க்கங்களில் சுபர்களது வீடுகளில் இருந்தாலோ அக்கிரகங்கள் 6,8,12 ல் இருந்தாலும்
லக்னசுபர்கள் உயர்வான யோகவாழ்க்கையையே தரும்.

லக்ன அசுபர்கள்( இயற்கை பாவர், சுபர்கள் யாராக இருந்தாலும்) சட்பல ரீதியாக பலமடைந்து அதிகமாக சுபர்களது
சேர்க்கை பார்வையில் இருந்தால் காரகத்துவரீதியாகவும் ஆதிபத்தியரீதியாகவும் உயர்வான பலன்களையே 6,8,12 ல்
உள்ள நல்ல விசயங்களை அனுசரித்து செய்யும். லக்னாதிபதி வலுவிழந்த ஜாதகத்தில் 6,8,12 ஆம் அதிபதிகள்
சுபவலுவில் இருந்தாலும் பெரும்பாலும் தீயபலனை அதிகமாகவே தரும். லக்ன சுபர்களான 1,5,9 க்குரியவர்கள்
சட்பலரீதியாகவும், ராசி சக்கரத்திலும் வலுத்து ஆரோகண கதியிலும் உள்ள ஜாதகத்தில் லக்ன அசுபர்களான 6,8,12 ஆம்
அதிபதிகள் கூட தீயபலனை குறைத்தே செய்வார்கள். இவ்வாறாக பல்வேறு நுணுக்கமான விதிகளையும் அனுசரித்து
ஒரு ஜாதகத்தில் உள்ள புஷ்கர நவாம்சம், யோகி அவயோகி, இந்து லக்னம், திதிசூன்யம் போன்ற பஞ்சாங்க
நுணுக்கங்களான துணைவிதிகளையும் ஆய்வுசெய்தே யோகத்தின் மதிப்பெண்ணையும், வாழ்ககை ் நிலை உயர்வு
நிலையையும் மதிப்பிட வேண்டியுள்ளது. எனவேதான் நமது ஜோதிட குருமார்களும், பெரியோர்களும் ஜோதிடத்தை கடல்
என்கின்றனர். இன்றைய கணிப்பொறி காலத்தில் பலநாள்கள கணிக்கவேண்டிய கிரகங்களின் சட்பலத்தை ஒரு
நிமிடத்திற்குள் மிகவும் துல்லியமாக கணித்துவிட முடிவதால் ஜோதிட ஆய்வானது இன்றைய நிலையைவிட இன்று
மேம்பட்டே உள்ளது.

You might also like