Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

இந்து லக்னத்தில் உள்ள சுபக்கிரகங்கள் மற்றும் பார்வை செய்யும் சுபக்கிரகங்கள் உறுதியாக செல்வ

யோகத்தை தரும். இந்து லக்னத்தை பாவக்கிரகங்கள் இருந்தாலும் பார்தத ் ாலும் கூட அது யோகத்தையே
தரும்.

இந்து லக்னத்தில் உள்ள பாவக்கிரகங்கள் தங்கள் இயல்பைவிட குறைந்த தீமையையே தரும். தீயகிரகங்கள்
லக்ன சுபர்களாகவோ அல்லது சுபக்கிரகங்களின் பார்வை மற்றும் சேர்க்கையோ பெற்றிருந்தால் அத்தசா
காலங்கள் யோகமே தரும்.

இந்து லக்னத்தில் உள்ள பாவக்கிரகங்கள் உச்சம்பெற்று யோக அமைப்பில் தசா நடத்தினால் கோடீஸ்வர
யோகமாகும். யோகி, புஷ்கர நவாம்சம் போன்றவற்றை பெற்ற கிரகங்கள் லக்ன சுபராகி, சுபக்கிரகங்கள்
சேர்க்கை பார்வை பெற்றால் மிகப்பெரிய யோகதாசவாகவே இருக்கும்.

லக்னத்திற்கு பாக்கியாதிபதியாகிய ஒன்பதாமதிபதியோ அல்லது ராசிக்கு பாக்கியாதிபதியாகிய


ஒன்பதாமதிபதியோ இந்து லக்னத்தில் இருந்தோ, பார்த்து தனது தசாவை நடத்துவது மிகசிறந்த யோக
பாக்கியங்களையும் செல்வத்தையும் தரும்.

இந்து லக்னத்தில் உள்ள கிரகதசாவுக்கு முன்பாக இந்து லக்னத்தை பார்வை செய்யும் கிரகதசா வருவது
மிகப்பெரிய யோகமாகும். ஏனென்றால் இரு கிரக தசாக்களும் யோகத்தை அதிகரித்தே தரும்.

பல குருமார்கள் லக்ன வலிமையை முதலில் தீரம


் ானித்த பிறகே இதைப்போன்ற இந்து லக்னம், புஷ்கர
நவாம்சம், யோகி அவயோகி யோக அமைப்புகளை தீரம ் ானிக்க வேண்டுமென்று கூறியுள்ளார்கள்.

ஆரோகண கதியில் உச்ச ராசியை நோக்கி செல்லும் கிரகங்கள் இந்து லக்னத்தில் இருந்தாலோ,
பார்த்தாலோ உறுதியாக நல்ல பலன்களை தரும்.

இந்து லக்னத்தில் இருந்த, பார்த்த கிரகங்கள் தீமையை செய்வதாக கருதினால் அக்கிரகமானது இந்து
லக்னத்தில் இல்லாமலோ, பார்க்காமலோ இருந்தால் இதைவிட மோசமாக தீமை செய்திருக்கும் என்று கருத
வேண்டும்.

இந்து லக்னத்தில் உள்ள கிரகங்கள் பகை, நீசம், அஸ்தமனம், பாவர் சேர்க்கை, கிரகயுத்தம் போன்ற
அமைப்பில் இருந்தால் யோகபலம் அதிகமாக குறையும்.

You might also like