Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 21

யோகி அவயோகி

பல ஜோதிடர்கள் நான்கு கிரகம் ஆட்சி, நான்கு கிரகம் உச்சம் பெற்ற ஜாதகங்கள்தான் யோக ஜாதகம் என்று
நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. ஜாதகங்களில் பல ரகசியங்களும், சூட்சுமங்களும் அடங்கியுள்ளன. ஒரு கிரகம்கூட
ஆட்சி உச்சம் பெறாமல் ராஜயோகங்கள் அடங்கிய பல ஜாதகங்கள் உண்டு. பல கிரகங்கள் ஆட்சி, உச்சம்பெற்ற நிலையில்
வீடில்லாமலும், உண்ண உணவில்லாமல் வீதியில் வசிப்போர்களின் ஜாதகங்கள் பல உள்ளன. ஜோதிடத்தில் மறைந்துக்கிடக்கும்
சூட்சுமங்கள் பல உள்ளன.

பல ஜோதிட குருமார்களும் ஆச்சார்ய பெருமக்களும் இந்த நித்ய நாமயோகத்தை பற்றி ஆய்வுசெய்து பல பதிவுகளையும்
புத்தக்கட்டுரைகளையும் வெளியிட்ட பின்பும் நான் தொடர்ந்து இதிலேயே உழன்றுக்கொண்டு ஆய்வுசெய்வதற்கு
மறுக்கமுடியாத பல தீர்க்கமான பல காரணங்கள் உள்ளன.

நான் எனது அறிவுக்கும் அனுபவத்துக்கும் எட்டியவரை 27 நித்திய நாமயோகங்களை பற்றி ஆய்வுசெய்து பல பதிவுகளை
பதிவேற்றி உள்ளேன். ஜோதிட சூட்சுமத்தின் பெரும்பகுதி இந்த யோகி அவயோகிகளிடம்தான் உள்ளது.

மூலநூல்களில் இது விளக்கப்படாவிட்டாலும் பஞ்சாங்கத்தின் அடிப்படையான நாள், நட்சத்திரம், திதி, யோகம், கர்ணம் என்ற
ஐந்து அங்கங்களுள் ஒன்று நாமயோகம். இதை முதலில் சிரஞ்சரி பிரபலபடுத்தினார். கோமிலா-குட்டன் என்பவர் இதைபற்றி
மிக விளக்கமான ஆய்வுகளை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள ஜோதிடர்களில் சிலருக்கு மட்டு மே இதன் முக்கியத்துவம் பற்றி தெரியும். வட இந்தியாவில் உள்ள
ஜோதிடர்கள் பெரும்பாலும் இதை பற்றி தெரிந்நு வைத்திருப்பதால் ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் முதலில் அந்த ஜாதகர்
எந்த யோகத்தில் பிறந்திருக்கிறார் என்றும் அவருக்கு யோகியாக வரும் கிரகம் யார் என்றும், யோகி சாரத்தில் எத்தனை
கிரகங்கள் இருக்கின்றன. தற்போது நடைபெறும் தசாபுத்திநாதர்கள் யோகி அல்லது அவயோகி நட்சத்திரத்தில்
இருக்கிறார்களா என்பதை கணக்கிடுவார்கள். ஆங்கிலத்தில் கணக்கற்ற கட்டு ரைகள் Yogi avayogi planets, Yogi
avayogi prosperous and destruction, போன்ற தலைப்புகளில் உள்ளதை காணலாம்.

யோகி, அவயோகி சூட்சுமத்தை தெரிந்த யாரோ சில ஜோதிடர்களும் அதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்து
விடுகிறார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் நமக்கு தெரிந்த ஜோதிட ரகசியங்களை மறைத்து வைக்கும் ஒரு சிலருக்கு
புதனின் தோசம் அதிகமாகவே பற்றுவதால் அவர்களால் இத்திறையில் சிறப்பையும், புகழையும் ஒரு காலமும் அடைய
முடியாது. புதன் கொஞ்சம் ஆச்சரியமான இல்லை இல்லை அதிகமான சூட்சும கிரகம்தான். ஒரு குற்றம்
நடந்திருக்கும்போது புதன் வக்கிரமானால் அவ்வக்கிரகாலம் முடிந்த பிறகே துப்பு துலங்கும் என்றால் பாருங்களேன்.
பஞ்சபூத காற்று, பிரபஞ்ச ரகசியம் உள்ள கிரகம்.

பஞ்சாங்கம்:
நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் இந்த ஐந்தும் கொண்டதுதான் பஞ்சாங்கம். இதில் பெரும்பலோனோருக்கு பிறந்த
நட்சத்திரமும், நாளும்தான் தெரியும். இதில் உள்ள யோகம் தெரியாது. உங்களது ஜாதக நோட்டில் நல்ல ஜோதிடர்
எழுதியிருந்தால் நீங்கள் என்ன யோகத்தில் பிறந்துள்ளீர்கள் , என்ன திதியில் பிறந்துள்ளீர்கள் என்று நிச்ச யம்
எழுதியிருப்பார்.

மொத்தம் 27 நித்திய நாமயோகங்கள் உள்ளன. அந்த 27 யோகங்கள் என்னவென்றும், அதற்கு யார் யோகி கிரகம் என்றும்,
யார் அவயோகி கிரகம் என்றும் கீழே கொடுத்துள்ளேன்.

யோகி அனுயோகி அவயோகி:


மேசம் முதல் ஒவ்வொரு ராசியும் 30 பாகைகளாக மொத்தப் 360 பாகை கொண்ட 12 ராசிகளாக ராசிமண்டலத்
பிரிக்கப்பட்டுள்ள அடிப்ப டை கணித்த்தை அனைவரும் அறிந்திருப்பீர்கள் . அதாவது மேசம்0 to 30, ரிசபம் 30 to 60 ,
மிதுனம் 60 to 90, கடகம் 90 to 120 , சிம்மம் 120 to 150, கன்னி 150 to 180, துலாம் 180 to 210, விருச்சிகம் 210 to 240,
தனுசு 240 to 270, மகரம் 270 to 300, கும்பம் 300 to 320 பாகை, மீனம் 320 to 360 பாகை என 360 பாகை கொண்ட 12
ராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதிலேயே 13 பாகை 20 கலை அளவுள்ள 27 நட்சத்திர தோகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ள
27 நட்சத்திரங்கள் உள்ளன.( 13.20 ×27=360).

மேசத்தில் இருந்து சூரியனின் பாகையையும் சந்திரனின் பாகையையும் கூட்டி அதனோடு 93.20 பாகையை கூட்டிவரும்
நட்சத்திராதிபதியே யோகியாவார். அதற்கு ஒவ்வொரு பெயரையும் சூட்டியுள்ளனர் ஞானிகள்.

அதிலிருந்து 186.40 பாகையில. வரும் நட்சத்திராதிபதி அவயோகியாவார். அதாவது இது யோகி நட்சத்திரத்திற்கு 15 வது
நட்சத்திர அதிபதியே அவயோகி நட்சத்திரமாகும். யோகிக்கு ஆறாவது நட்சத்திராதிபதியே அவயோகி என்றாலும் சரிதான்.

சூரியன் மற்றும் சந்திரனின் பாகையை கூட்டுவது (மேசத்திலிருந்து) யோகம்.


சூரியனின் பாகையிலிருந்து சந்திரனின் பாகையை கழிப்பது திதி.
இந்த இரண்டுக்குமுள்ள சூட்சுமத்தை புரிந்துக்கொண்டால்
 எப்போது யோகி நன்மை செய்வார்
 எப்போது யோகி தீமை செய்வார்
 எப்போது அவயோகி நன்மை செய்வார்
 எப்போது அவயோகி தீமை செய்வார்
 எப்போது திதிசூன்யம் பாதிக்கும்
 எப்போது திதிசூன்யம் யோகம் செய்யும்
என்பதையும் 100 சதவீதம் மிகசரியாக கூறமுடியும்.

முதல் நித்தியநாமயோகம் விஷ்கும்பம் என்பது பூசம் நட்சத்திரத்திலிருந்து துவங்குவதால் சூரியனின் பாகை சந்திரனின்
பாகை மற்றும் 93.20 பாகை ஆகியவற்றைக் கூட்டுவதே யோகிப்புள்ளி.
யோகி:
யோகி பாகை எந்த நட்சத்திரத்தில் விழுகிறதோ அந்த நட்சத்திர அதிபதியே யோகி.
அந்த நட்சத்திராதிபதியின் மூன்று நட்சத்திரங்களுமே யோகி நட்சத்திரங்களே.
அதாவது ஒருவருக்கு யோகி பாகை 223 பாகயில் விழுந்தால் சனியின் நட்சத்திரமான அனுச நட்சத்திரத்தில் விருட்சிக
ராசியாக வரும். இந்த நட்சத்திர யோகம் கண்ட யோகம் ஆகும். இப்போது சனியே யோகியாவார். சனி தசா சனி கெடுதல்
செய்யும் ராசியில் இருந்தாலும் யோகமே செய்யும். அதுமட்டுமின்றி சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுசம்,
உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் எந்த மோசமான கிரகம் நின்று தசா நடத்தினாலும் யோகம் செய்யும்.
யோகி என்று அதற்கு எதற்கு பெயர் வந்ததென்றால் அவர் லக்னத்திற்கு எந்த அதிபதியாக இருந்தாலும் எந்த இடத்தில்
இருந்தாலும் யோகத்தை செய்வதால்தான்.

அனுயோகி:
யோகி புள்ளி நட்சத்திரம் விழுந்த ராசிநாதனே அனுயோகி/ சகயோகியும் ஆவார். இதை duplicate yogi என்றும், supporting
yogi என்றும் ஆங்கிலத்தில் அழைப்பர். இந்த அனுயோகி யோகியை விட சற்று குறைவான (70 சதவீதம் தோராயமாக,
ஆனால் அதுபெறும் வலிமைக்கேற்ப ) யோகம் தரும்.

அவயோகி:
யோகியின் நட்சத்திர பாகையிலிருந்து 186 பாகையிலுள்ள நட்சத்திரம் அவயோகி நட்சத்திரம். அவயோகியாக வரும்
கிரகமும் அவயோகி நட்சத்திர பாதம் நின்ற கிரகங்களும் தனது தசா புத்தி காலங்களில் மிக மோசமான பலன்களை
தருவார்கள். அவயோகியை மற்றொரு குறுக்கு வழியில் எளிதாக கண்டுபிடிக்கலாம். அதாவது யோகி நட்சத்திரத்திற்கு
ஆறாவது நட்சத்திர அதிபதியே அவயோகி.
1. சனி யோகியென்றால் சந்திரன் அவயோகி
2. சூரியன் யோகியென்றால் சனி அவயோகி
3. சந்திரன் யோகியென்றால் புதன் அவயோகி
4. புதன் யோகியென்றால் செவ்வாய் அவயோகி
5. குரு யோகியென்றால் சூரியன் அவயோகி
6. சுக்கிரன் யோகியென்றால் குரு அவயோகி
7. ராகு யோகியென்றால் சுக்கிரன் அவயோகி
8. கேது யோகியென்றால் ராகு அவயோகி
9. செவ்வாய் யோகியென்றால் கேது அவயோகி

இந்த யோகியும் அவயோகியும் 3 செட்டுகளாக காணப்படும்.


1. சனி, சுக்கிரன் , செவ்வாய்
2. சந்திரன், குரு, கேது
3. சூரியன் , புதன், இராகு
இந்த குரூப்பில் ஒருவர் யோகியாக வந்தால் மற்ற இருவரும் யோகத்தன்மை பெற்று யோகம் செய்வர்.
யோகி எப்போது நன்மை செய்யாது. அவயோகி எப்போது தீமை செய்யாது.
இந்த விதிகளை நுட்பமாக நீங்கள் தெரிந்துக்கொண்டால் ஒருவருடைய ஜாதகத்தில் முதல்தர யோகத்தை
தரவல்ல யோகி நன்மைசெய்யுமா அல்லது தீமை செய்யுமா என்று 100 சதவீதம் கூற இயலும்.

யோகி எப்போது நன்மை செய்வார்


1. லக்னத்திற்கும் ராசிக்கும் எதிரான, கெடுதலை செய்யும் கிரகமாக இருந்தாலும், லக்னத்திற்கு 6, 8, 12, மாரக,
பாதக, கேந்திராதிபத்திய தோஷமாக இருந்தாலும், திதி சூன்ய ராசியில் இருந்தாலும், யோகி மற்றும் அனுயோகி,
இருவரும் சந்தோசம், சுகம், யோகம், செல்வம், வெற்றியை தருவார்கள்.
1. 1, 5, 9 ஆம் அதிபதிகள் யோகியாக வரும்போது மிகுந்த யோக பலனை தருவார்கள்.
2. லக்ன சுபராகவோ, மற்ற அமைப்புகளில் சுபத்தன்மை அல்லது யோகத்தன்மை அடைந்து இருந்தால் மாபெரும்
யோகத்தை தனது தசாக்காலங்களில் தருவார்கள்.
3. ஒரு யோக கிரகம், சுபருடன் தொடர்பு, கேந்திரம் கோணம், சுப-நட்சத்திரசாரத்தில் இருந்தால் அதன் யோகம்
இரண்டு மடங்காகும்.
4. அதிர்ஷ்ட கிரகம், ஜெயக்கிரகம் என்று அழைக்கப்படும் யோகி வலுப்பெற்றாலே யோகஜாதகம்தான்.
5. எல்லா யோக ஜாதகங்களிலும் அவயோகி ராகு கேது சாரத்திலேயே இருக்கும்.
6. ஒரு யோக கிரகத்திற்கு வீடு கொடுத்த ராசிநாதனே அக்கிரகத்தின் ஜீவன் எனப்படுகிறான். நட்சத்திராதிபதி
ஆன்மாவை போன்றவன். இவர்கள் வலு இழப்பதால் ராசியில் வலுபெற்ற கிரகம் பலனளிக்காமல் போகும்.
7. யோகி புள்ளியிலேயே (அதே நட்சத்திரத்தில்) அமர்ந்த கிரகம் மாபெரும் யோகபலன்களை வழங்கும்.
8. யோகி நட்சத்திரம் லக்ன நட்சத்திரமாக வந்தால் வாழ்நாள் முழுவதும் ஜெயம், செழுமை எதிர்பார்க்கலாம்.
9. ஒருவருக்கு யோகி கிரகத்தின் தசா அல்லது யோகி நட்சத்திரத்தில் அமர்ந்த கிரகத்தின் திசை நடந்தால் எந்த
நிலையிலும் தன்னம்பிக்கை, காரியஜெயம், வெற்றி, யோகம் அனைத்தையும் தரும். வளர்ச்சியை தருவார்கள்.
அடுத்த நிலையில் தனது தசாவில் யோகத்தை அனுயோகி தரும்.
10. யோகிக்கு அடுத்த நிலையில் யோகி நட்சத்திர சாரம் பெற்ற கிரகங்கள் யோகம் தரும்.
11. இதற்கு அடுத்த நிலையில் அனுயோகி யோகம் தரும்.
12. திசை புக்தி அந்தரம் நடத்தும் இருவர் யோகிகளாய் வந்தால் காரியத்தில் வெற்றி உண்டாகும்.
13. யோகி ராசிக்கட்டத்திலும் மற்ற வர்க்க சக்கரங்களிலும் யோகபலம் பெறுவது யோகபலனை அதிகரிக்கும்.
14. ஒருவருக்கு யோகி சாரத்தில் இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் இருந்தால் கண்டிப்பாக அது யோக ஜாதகமாகும்.
ஏனென்றால் எவ்வளவு மோசமாக தசா நடந்தாலும் அத்தசாவில் யோகி மற்றும் யோகி சாரம்பெற்ற கிரகங்களின்
புத்திகளில் யோக காலமாக இருப்பதால் மீண்டுவிடலாம்.
15. யோகி ராசியில் அமர்ந்த கிரகங்கள் மற்ற ராசியிலிருப்பதைவிட அதிகமாக யோகபாக்கியங்களை தருவார்கள்.
பாவிகள், லக்ன அசுபர்கள் கெடுபலனை குறைத்து தருவார்கள். பாவியாக இருந்தாலும் பெரிய அளவில் கெடுதல்
தராது.
16. யோகியுடைய நவாம்சத்தில் உள்ள கிரகமும் யோகத்தன்மையை பெற்று நன்மை செய்யும்.
17. யோகியின் ராசியில் உள்ள கிரகமும் நன்மையை தரும். ஆனால் இவை யோகியளவிற்கு அல்ல.
18. ஒரு ஜாதகத்தில் மற்ற எட்டு கிரகங்கள் யோகம் செய்யும் அமைப்பில் இல்லாமல் கெட்டிருந்தாலும் பிறந்த
நாமயோகத்தின்படி யோகி கிரகமானது நல்ல நிலையில் இருந்து தசா நடத்தினால் அக்காலம் வாழ்வில் யோகம்
நிறைந்த பொற்காலமாகும்.
19. ஜாதகத்தில் எந்த கிரகமும் ஆட்சியோ, உச்சமோ பெறாவிட்டாலும், உங்களுக்கு ராஜயோகங்கள் எதுவும்
இல்லாவிட்டாலும் யோகியின் நட்சத்திரங்களில் மூன்று நான்கு கிரகங்கள் இருந்துவிட்டால் நீங்கள்தான் யோகசாலி.
அதிர்ஸ்டசாலி. இதில் சந்தேகமில்லை.
20. சில பிரபலமானவர்களின் ஜாதகம் மிக சாதாரணமாக இருந்தாலும் யோகமாக காணப்படுவார்கள். இது ஏனெனில்
திசாநாதனும் அதிகமான கிரகங்களும் யோகியின் நட்சத்திரத்திலோ யோகியின் தொடர்பிலோ அவரது
ஜாதகத்தில் இருப்பதுதான் காரணம்.
21. யோகியாக வரும் கிரகம் ஒருவர் தன்னிச்சையாக விரும்பி செய்யும் விசயங்களையும், அவயோகியாக வரும் கிரகம்
ஒருவர் கொடுப்பினையாக அனுபவிக்கும் விசயங்களையும் குறிக்கும்.அதாவது யோகியின் கிரக காரகங்களில்
ஜாதகருக்கு தனிப்பட்ட விருப்பம் அல்லது ஈடுபாடு அதிகமாக இருக்கும்.
22. அவயோகியின் கிரக காரகங்களில் ஜாதகருக்கு ஈடுபாடு இருக்காது, ஆனால் வலுக்கட்டாயமாக அவர் மீது
திணிக்கப்படும். அதனால் அது ஒருவகையில் கெடு பலன்கள் போல் ஜாதகரை பாதிக்கும்.
23. சட்பலம் பெற்ற கிரகமோ, புஷ்கராம்சத்தில் உள்ள கிரகமோ, இந்து லக்னத்தில் இருந்தால்தான் பெரிய யோகத்தை
செய்யும். யோகபங்க அமைப்பில் இருந்தால் நன்மை செய்யாது. ஆனால் யோகி விதிவிலக்கு.
24. வக்கிரமாகி பலமான கிரகத்தை சாராவளி சக்தன் என்று கூறுகிறது. அக்கிரகம் யோகியானால் தனது தசாவில்
அதிக திரவியம், தருவதோடு ஜாதகனை சாந்தசீலனாகவும், புகழ், மனைவி மக்கள், அதிகாரம், சுகம், தந்து
பிரபலமானவனாக உருவாக்கும்.
25. கண்ட, விஷ்கும்ப, பரிக யோகத்தில் பிறந்தவர்களுக்கு சனி மாபெரும் யோகத்தை தனது தசா செல்ல செல்ல
செய்தே தீரும். லக்ன அசுபராக இருந்தாலும் யோகம் உண்டு. ஆனால் ராகுவோடு நெருங்கினாலோ, ராகு நட்சத்திர
சாரம் பெற்றாலோ யோகம் செய்யாது. ஆனால் எந்த நிலையிலும் தீயபலன் நடக்காது. இது நிச்சயம்.
26. ராகு கேதுக்கள் யோகியின் வீட்டிலிருந்தால் சிறந்த யோக தசாவினை நடத்தி தருவார்கள்.
27. யோகி வக்கிரமடையும்போது, வக்கிரமான கிரகம் பலமடைந்தால் நன்மையும் பலவீனமானால் குறைந்த நன்மையும்
தரும்.

யோகி எப்போது நன்மை செய்ய மாட்டார்


1. யோகி பலமிழந்து கெட்டிருந்தாலும் தீமை செய்வதில்லை. ஆனால் தீயபலன் பெற்ற யோகி நன்மையும் தராது.
2. யோகி சுபரோடு சேர்நது
் கேந்திர/கோணத்தில் திதிசூன்ய தோசமின்றி இருந்து தசா நடத்தவேண்டும்.
அப்போதுதான் யோகம் முழுமையாக செயல்படும்.
3. யோக கிரகம், அவயோகி, 6, 8, 12 தொடர்பு, திதி-சூன்யராசி தொடர்பு, ராகு கேது சேர்க்கை அல்லது சாரம்
பெற்றால், அஸ்தமனம் ஆகி இருந்தால், யோகி நன்மைசெய்யாது. யோகம் செய்வது குறையும். ஆனால் யோகி
தீமை செய்யாது.
4. யோகி கேது நட்சத்திர சாரத்தில் இருந்தாலோ, சேர்ந்தாலோ யோகபலனை குறைத்துவிடுவார்கள்.

அவயோகி எப்போது தீமை செய்வார்


5. அவயோகி லக்ன யோகரான 1, 5, 9 ஆம் அதிபதியாக இருந்தாலும் அவர் வலிமை பெற்றால் அதிகமான தீமையையே
தருவார்.
6. அவயோகி வலிமை (ஆட்சி, உச்சம்) பெற்றால் தீமையை அதிகம் தரும்.
7. எந்த நிலையிலும் அவயோகியும், அவயோகி நட்சத்திர சாரங்களில் அமர்ந்த கிரகங்களும் தனது தசாபுத்தி
காலங்களில் கெடுதலையும், வீழ்ச்சியையும், தீங்கையும் தருவார்கள். வளர்ச்சி பாதிக்கும்.
8. அவயோகி லக்னத்தில் அமரக்கூடாது. அப்படி அவயோகி வலுப்பெறெவது நல்லதல்ல.
9. லக்கினாதிபதி வலிமை இழந்த ஜாதகத்தில் அவயோகி திசை நடந்தால் சமாளிக்க முடியாது.
10. ஒரு யோகஜாதகத்தில் அவயோகியே 1, 5, 9 ஆம் அதிபதியாக வருவது கிடையாது. அப்படியே வந்தாலும் 100
சதவீதம் விதிவிலக்குகளை பெற்றிருக்கும்.
11. ஒரு ஜாதகத்தில் பல கிரகங்கள் ஆட்சியாகவும் உச்சமாகவும் இருந்து, பல ராஜயோகங்கள் இருந்தாலும், அவயோகி
நட்சத்திர சாரத்தில் பல கிரகங்கள் இருந்து தசா நடத்தினால் அவர் துரதிஸ்டசாலி.
12. ஒரு லக்னத்திற்கு யோகத்தை தரக்கூடிய தசா என்று நல்ல ஜோதிடர்களால் கணிக்கப்பட்ட யோகதசாவாக
இருந்தாலும் அவயோகி தசாவாக இருந்தால் யோகத்தையும் சந்தோசத்தையும் நிச்சயம் தராது.
13. ராஜயோகத்தைப் பெற்ற ஒரு கிரகம் அவயோகியாக இருந்தால் ராஜயோகத்தை தந்தாலும் நிச்சயமாக
திருப்தியையும் சந்தோசத்தையும், சுகத்தையும்,வெற்றியையும், வளர்ச்சியையும் அதிக அளவில் தராது.
14. சிலரின் ஜாதகத்தில் மூன்று நான்கு கிரகங்கள் கூட உச்சமாக இருக்கும். கேந்திர கோணாதிபதிகள் இணைந்து
ராஜ யோகத்தை தரும் இடத்தில் இருக்கும் . ஆனால் ஊரில் சாதாரணமான நிலையிலேயே காணப்படுவார்.
ராஜயோகங்கள் பலனிக்காது. தொட்ட அனைத்தும் தோல்வியிலேயே முடியும். இது ஏனெனில் அவரது உச்ச
கிரகங்களும், யோக கிரகங்களும் அவயோகியின் நட்சத்திரத்திலோ அல்லது அவயோகியுடன் நெருக்கமான
தொடர்பில் இருப்பதுதான்.
15. லக்கினாதிபதி வலிமையிழந்து இருக்கும் ஜாதகங்களில் அவயோகியின் தசை காலம் சமாளிக்கமுடியாது.
16. ஒன்பதாம் அதிபதியாக வந்தாலும் அவயோகி கெட வேண்டும்.
17. அவயோகி வக்கிரமானால் வக்கிர கிரகம் பலவீனம் நீங்கி பலமடைந்தால் அதிக தீமைதரும்.
18. பலமான (உச்சம்) கிரகம் அவயோகியாக வந்து வக்கிரமானால் தீமை சற்று குறையும். ஆனால் நன்மையிராது.
நல்லதும் கெட்டதும் கலந்த பலன்தரும்.

அவயோகி எப்போது தீமை செய்ய மாட்டார்


1. அவயோகி மிகமோசமான கிரகமாகும். அவயோகி கெட்ட ஜாதகங்களே யோக ஜாதகங்கள்.
2. அவயோகி ராகு கேது தொடர்பில் மட்டுமே கெடுதல் செய்வதில்லை.
3. திதிசூன்ய ராசி அதிபதி எப்படி வக்ரம், பகை, ராகு/ கேது சாரம் ஏறினால் திதிசூன்ய தோசம் விலகுமோ
அதைப்போன்று அவயோகிக்கு ஏற்பட்டால் கெடுதல் குறையும்.
4. அவயோகி திதிசூன்ய ராசியிலிருந்தால் தீயபலன் குறையும். 6,8,12 ல் அவயோகி இருந்தாலும் தீயபலன் குறையும்.
5. அவயோகி வலிமையே பெறக்கூடாது. அவயோகி பலமிழக்க வேண்டும்.
6. அவயோகி மற்றும் திதிசூன்யதோசம் பெற்ற கிரகம் ராகு கேது சாரம் சேர்க்கையில் இருப்பது, 6,8,12 ஆம்
அதிபதியுடன் பரிவர்த்தனை அல்லது 6,8,12 ல் இருப்பது, அல்லது 6,8,12 சாரம் பெறுவதோ, திதி சூன்யராசியில்
இருப்பது நன்மைசெய்யும்.
7. அவயோகி திதிசூன்ய ராசி அதிபதியாகவோ, திதிசூன்ய ராசியிலோ இருந்தால் கெடுதல் செய்யாது.
8. அவயோகி வீட்டில் உள்ள கிரகங்கள் யோகர்களானாலும் யோகபலனை குறைத்துவிடுவார்கள்.
9. அவயோகி புஷ்கரநவாம்சம், இந்து லக்னம. போன்ற மிகசிறந்த யோக அமைப்பில் இருந்து யோகமளித்தாலும் ஒரு
மனநிம்மதியோ திருப்தியோ இருக்காது
10. அனுயோகியே அவயோகியாக வரும்போது தீயபலன் குறையும்.
பிரபலங்களின் ஜாதகசூட்சுமம்:
 VVIP களின் ஜாதகங்களில் கட்டாயமாக புஷ்கராம்சத்தில் அல்லது வலிமைபெற்ற யோக கிரகங்கள் இருந்து தசா
நடத்தும்.
 அல்லது இந்துலக்னத்தில் சுபர்கள், உச்ச, ஆட்சி கிரகங்கள் இருக்கும்.
 திதிசூன்ய ராசியில் 6,8,12 ஆம் அதிபதிகள் அல்லது ராகு அல்லது கேது இருக்கும்.
 திதிசூன்ய தோசம் பெற்ற கிரகங்கள் ராகு அல்லது கேது சாரத்தில் அமர்ந்து இருக்கும்.
 லக்னாதிபதி, ராசியாதிபதி வலிமைபெற்றோ அல்லது சுபர்களின் பார்வையிலோ இருக்கும். அல்லது ராசி மற்றும்
லக்னத்தை சுபர்கள் பார்வை செய்யும்.
 லக்னம் மற்றும் ராசிக்கு யோகாதிபதிகள் நல்லநிலையில் அமர்ந்து தசா நடத்தும்.
 முக்கியமாக யோகபங்கநிலைகள் குறைவாக இருக்கும்.
Example: திருமணவாழ்வு சிக்கல்
பிறந்த நாமயோகத்தின்படி யோகி அவயோகியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஜாதகத்தை கீழே பதிவிட்டுள்ளேன்.
லக்னாதிபதி சனி உச்சம் பெற்று மகர லக்னத்திற்கு மகாயோகாதிபதியான சுக்கிரன் உச்சம்பெற்ற குரு செவ்வாய்
பரிவர்த்தனை யோகஜாதகம். மிக உயர்வாக கூறப்படும் பௌர்ணமியோகமும் இந்த ஜாதகத்தில் உள்ளது. சிம்மராசியாகி
ராசி வலுத்து சுபவலுபெற்ற யோகஜாதகம். லக்னத்தில் புதன் திக்பலம் வேறு.
என்றாலும் சந்திரதசாவில் அரசுவேலைக்கு சென்னையில் படித்துக்கொண்டிருந்தபோது விபத்து நடந்து மூன்று
ஆண்டுகளாக நினைவின்றி இருந்த ஜாதகம். திருமணம் பிரிவினைவேறு. பிரிவினைக்கு குழந்தை இல்லாதநிலையே
காரணம்.
ஏன்? ஐந்தாம் அதிபதி உச்சமாகிய நிலையில் இந்த பரிதாம் நிலை.
இவர் சுகர்மா நாமயோகத்தில் பிறந்ததால் செவ்வாய் யோகி.
கேது அவயோகி. பத்து ஆண்டுகளாக கேது நட்சத்திரத்தில் அமர்ந்து தசாநடத்திய சந்துரன் தசாதான் இவ்வளவு
கொடுமைகளை செய்துள்ளது. 2021 வரை அவயோகி சாரம்பெற்ற சந்திரதசாவால் பயனில்லை. அதற்கு பிறகுவரும்
யோகியான செவ்வாய்தசாவில் இழந்த அனைத்தும் திரும்பவரும். கணவன் திரும்பி வருவார். கர்ப்பப்பை கோளாறு நீங்கி
குழந்தை பிறக்கும் என்று கூறியுள்ளேன். நீங்களே ஜாதகத்தை பாருங்களேன். 1,5,9, அதிபதிகள் உச்சமாகவும்
திக்பலமாகவும் இருந்தும்கூட அவயோகிசாரம் பெற்றதசா மிகவும் கெடுபலன் செய்யும் என்பதற்கு இந்த ஜாதகமே சாட்சி.
Example 2:

வெளிநாடு செல்லும் யோகம் உள்ளதா

கண்டிப்பாக நீண்டதூர அந்நிய நாட்டிற்கு செல்வீர்கள். அந்த நாட்டின் குடியுரிமையையும் பெறுவீர்கள்

Person 1: மிதுன லக்னத்தில் பிறந்து அந்த லக்னத்திற்கு யோகாதிபதியான 8, 9 ஆம் வீட்டிற்கு அதிபதியான சனி
லக்னத்திற்கு 12 ல் ஆட்சிபெற்ற மற்றொரு யோகாதபதியான சுக்கிரனோடு சேர்நத ் ்திருந்து. பொதுசுபரான குருவின்
பார்வையில் இருக்க யோகியின் புத்தி நடந்ததே் காரணம்.

Person 2: கடக லக்னமாகி லக்னத்திற்கு 12 ல் எட்டாம் அதிபதி சனி குரு மற்றும் புதனோடு இணைந்து மிகுந்த சுபத்துவம்
வலு பெற்று தசா நடத்தியதே காரணம். இருவரும் தற்போது கனடாவில்.
Example 3:
திரு Steve jobs அவர்களின் ஜாதகத்தை வெளியிட்டு மீண்டும் விளக்கம் அளிக்கிறேன்.

நாமயோகம், புஷ்கார நவாம்சம், திதி சூனியம், இந்து லக்கினம் போன்றவற்றிற்கு எடுத்து காடாக திகழும் யோக ஜாதகம்

சிம்மலக்னமாகி லக்னாதிபதி சூரியன் ஏழிலிருந்து சிம்மத்தை பார்க்கும் அமைப்பு.


சுபயோகத்தில் பிறந்த அவருக்கு யோகி சூரியன் அவயோகி சனி.
லக்னபுள்ளியே உத்திரம் ஒன்றாம் பாதமாக அமைந்ததால் யோகியின் நட்சத்திரமே லக்னபுள்ளியாக அமைந்தது.
அந்த யோகிபுள்ளியே புஷ்கராம்சமாக அமைந்த கொடுப்பினையை பெற்ற பாக்கியசாலி.

இவரது தொழில்காரனான சுக்கிரன் துனுசுராசியில் சூரியனின் உத்தாரட நட்சத்திரத்தில் வர்க்கோத்தம நவாம்சம் பெற்றது.
உத்தாரடம் ஒன்றாம் பாதமும் புஷ்கர நவாம்சம் ஆகும். 1982 முதல் 2002 வரை சுக்கிரனின் தசா நடந்த காலத்தில்தான்
ஆப்பிள் நிறுவனத்தின் தலைவராகி ஐபோன், ஐபேடு, செல்போன்களை உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக்கியவர். சூரியன் (
யோகி) தசாவில் அமெரிக்க ஜனாதிபதியின் விருதையும் பெற்றவர். ஆப்பிள் செல்போனை இக்காலகட்டத்தில் நம்பர் ஒன்
செல்போன் என்ற புகழை அடைய செய்தவர். இவர் பிறந்தது உத்தரட்டாதி நட்சத்திரம் நட்சத்திரம் அவயோகி நட்சத்திரம்.
இளமையில் அவயோகி சனிதசா நடந்தபோது வறுமை, உணவுக்கே கஷ்டம், படிப்பை பாதியில் விடுதல் போன்ற துன்பங்களை
பெற்றவர். சனி வீட்டில் இருந்த புதனும் அவயோகி வீட்டில் இருந்ததால் பல நிறுவனங்களில் பணிபுரிந்தநிலையில் நிலையற்ற
தொழிலை தந்தது. ஆனால் புஷ்கரபாகமும், யோகிபுள்ளியுமே லக்னமாக அமைந்து அவர்களது தசாக்களான சுக்கிரன்
மற்றும் சூரியனின் தசாவில் மாபெரும் யோகத்தை அடைய செய்தது. அவயோகியான சனிசாரம் பெற்ற சந்திர தசா காலமான
2011 ல் இறவாப்புகழுடைய மரணத்தை தந்தது.
Example 4: DSP யின் ஜாதகம்:
Group 1 தேர்வில் வெற்றிபெற்று காவல்துறை அதிகாரியாக இருக்கும் நண்பரின்
ஜாதகங்களை கீழே பதிவிட்டுள்ளேன்.
அவரது பிறந்த தேதி 07.07.1980.
பிறந்த நேரம் மாலை 04. 10 PM.
பிறந்த இடம் ஈரோடு.

இவர் விருட்சிக லக்னம் மேசராசி, தசமி திதி, திருதியோகத்தில் பிறந்துள்ளார்.


யோகநட்சத்திரம் சுவாதி.
யோகி ராகு.
அனுயோகி சுக்கிரன்.
அவயோகி சுக்கிரன்.
இந்து லக்னம் ரிசபம் அங்கே சுக்கிரன் ஆட்சி.
தசமி திதி. திதிசூன்யராசி விருட்சிகம் மற்றும் சிம்மம்.
திதிசூன்ய கிரகங்கள் சூரியன் செவ்வாய்.

இவரது லக்னாதிபதி செவ்வாயே ராசியாதிபதியாகி ஆறாமதிபதியும் ஆகி


பதினொன்றாம் வீட்டில் சுபத்துவமாகியுள்ளார். செவ்வாய் திதிசூன்ய ராசிக்கு
அதிபதியாகி மற்றொரு திதிசூன்ய ராசிக்கும் அதிபதியாகிய சூரியன் சாரம்
பெற்றதால் தோசம் நீங்கியுள்ளது.
ஏற்கனவே வங்கிப்பணியில் இருந்த இவர் போட்டிதேர்வில் வெற்றிப்பெற்று
தலைமைசெயலகப்பணிக்கு செவ்வாய் தசாவில்தான் வந்தார்.
2012 ல் செவ்வாய் தசா சுக்கிரபுத்தியில் மீண்டும் குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று
துணை கண்காணிப்பாளர் (DSP) ஆக நேரடியாக தேர்சச ் ி பெற்றுள்ளார்.
அவயோகி சுக்கிரனே அனுயோகியாக வந்து இந்து லக்னத்தில் ஆட்சிபெற்றதால்
மாளவிய யோகமான பஞ்சமகாபுருஷயோகத்தை வழங்கியது.
மிகமுக்கிய அமைப்பாக அரசுப்பணி உறுதியாக அமையும் அமைப்பில் ஒன்றான புத ஆதித்ய யோகம் எட்டில் அமைந்துள்ளது
.அதில் புதன் ஆட்சி, வர்க்கோத்தம ம் பெற்று வக்கிரமும் ஆகியுள்ளார்.
இந்த அமைப்பில் பத்தாமதிபதி சூரியனுக்கு மறைவு கிடையாது.
நான்காமதிபதி சனி பத்தில் புஷ்கர நவாம்சம் பெற்று வர்க்கோத்தம பலம் பெற்ற குருவுடன் சேர்ந்து சுபத்தன்மை அடைந்து
சிம்மாசனயோகம் பெற்றுள்ளது.
சூரியன் எட்டில் மறைந்த்தால் திதிசூன்ய தோசம் விலகியுள்ளது.
தற்போது யோகி ராகுதசா நடைபெறுகிறது யோக அமைப்பாகும்.
எப்போதுமே யோகி தசா நடத்தும் காலமே உன்னதயோக காலமாகும்.
யோகி தசா அற்புதமான யோகபலன்களை வழங்கும். அடுத்த யோக கிரகம் அனுயோகியாகும்.திருதியோகத்திற்கு
அவயோகியே அனுயோகியாக வருவதால் அவயோக பலன்கள் குறையும்.
Example 5:
மகர லக்னம்:
யோகர்: சுக்ரன்.
மகர லக்னத்திற்கு சுக்கிரன் அவயோகியாகாமலும் திதிசூன்ய ராசியில் என்னால் குறிப்பிடப்பட்டுள்ள திதிசூன்ய விலை்கு
பெறாமலும் இருந்தாலோ ஒழிய தனது தசாக்காலத்திலே எங்கிருந்தாலும் சிறந்ததொரு யோகத்தையும் நற்பலன்களையும்
வழங்கும்.

அடுத்ததாக புதன் ஆறாமதிபதியாக இருந்தாலும் லக்னாதிக்கு நண்பரும் பாக்கியதாதிபதியாகவும் வருவதால் நன்மைகளை


வாரி வழங்குவார்.

கடைசியாக லக்னாதிபதி சனி அவர்கள் சுபராசிகளிலோ, சுபர் சேர்க்கையிலோ, அல்லது சுபர்பார்வையிலோ இருந்தால் நல்ல
யோகபலன்களை கட்டாயம் தருவார். 

குரு லக்னாதிபதிக்கு சமத்துவம் பெற்ற கிரகம் என்றாலும் ஆதிபத்திய விசேசம் இல்லாத்தால் நல்ல பலன்களை தரமுடியாது.
ஒருவேளை பிறந்த ராசிக்கு யோகராக இருந்தால் சிறிது யோகபலன்களையும், நன்மைகளையும் வழங்குவார்.

சூரியன், சந்திரன், செவ்வாய் லக்னாதிபதிக்கு எதிரி என்பதால் நல்ல பலன்களை வழங்க இயலாது. ஆனால் இவர்கள்
3,6,10,11 ல் உபஜெய ஸ்தானத்தில் அதிக வலுபெறாமல் சுபத்தன்மை அடைந்திருந்தால் தீயபலனின்றி சராசரி நற்பலன்கள்
நடைபெறும்.

ராகு கேதுக்கள் ராசிநாதனையும் சேர்நத


் , பார்த்த, கேந்திரத்தில் இருந்த கிரகங்களை பொருத்து பலன் தருவார்கள்.
லக்னத்திற்கு நல்ல ஆதிபத்தியம் பெறாதவர்கள் ராசிக்காவது நல்ல ஆதிபத்தியம் பெற்றிருந்தால் ஓரளவு
யோகபாக்கியங்களையும் நன்மைகளையும் வழங்குவார்கள்.

புதனும் சுக்கிரனும் சேர்ந்து நல்ல ராசிகளில் கெடாமல் இருந்தால் பிரபலமான ராஜயோகமான தர்மகர்மாதிபதி யோகத்தை
தனது தசாவில் வழங்கி அதிகாரம்,செல்வம்,சுகம், வசதி படைத்தவராகவும், யோகசாலியாகவும், மகிழ்ச்சியான வாழ்ககை ்
வசதிகளையும் வழங்குவார்கள்.
Example 6
இது ஒரு மிகப்பெரிய பதவியில் அதிகாரத்தோடு இருப்பவரின்
ஜாதகம். இவருக்கு தற்போது ரிசபலக்னத்திற்கு
தர்மகர்மாதிபதியாகவும் கன்னிராசிக்கு யோகராகவும் வரக்கூடிய
சனிதசா தனது பகைவீடான சிம்மத்தில் ராகுவோடு இணைந்த
பாவத்துவமான நிலையில் தசா நடக்கிறது.

ஆனாலும் சனி அமர்ந்த பாகை புஷ்கர நவாம்சம். லக்னாதிபதி


அமர்ந்த பாகை புஷ்கர நவாம்சம் . சந்திரன் வர்க்கோத்தம்பலம்.
அவயோகி புதன் திதிசூன்ய ராசியான விருட்சிகத்தில். மற்றொரு
திதிசூன்ய கிரகமான சூரியன் கேது சாரம். 

மூலநூலான பாரிஜாத யோகம் சந்திரன் வர்க்கோத்தம பலமடைவதும்


புஷ்கரநவாம்சம் பெறுவதும. அமைந்து குரு செவ்வாய்
சேர்ந்திருப்பதும் சந்திரன் புஷ்கர நவாம்சம் அல்லது
வர்க்கோத்தம்பலமடைவது யோகம் என்கிறது.
Example 7:
இந்த ஜாதகம் ஒரு விதவை பெண்ணின் ஜாதகம். இவருக்கு 13
Nov 2011 அன்று திருமணம் நடை பெற்றது. இவருக்கு இரண்டு
ஆண் குழந்தை. இவரது கணவர் 10 செப் 2016 அன்று வாகன
விபத்தில் இறந்து போனார். இதற்கான காரணங்கள் மற்றும்
உங்கள் அனுபவ கருதுதுகளை பகிர்ந்து கொள்ளுமாறு
தாழ்மயுடன் கேட்டு கொள்கிறேன்.

வியாகாத யோகத்தில் பிறந்த இந்த ஜாதகிக்கு சுக்கிரன் யோகி


குரு அவயோகி. 2016 ல் நடந்த புதன் அவயோகி சாரம் அப்போது
புதன் தசா புதன் புத்தி. குரு அவயோகியாக வந்து மாங்கல்ய
ஸ்தானமான எட்டாமிடத்திற்கும், பதினொன்றாதிடத்திற்கும்
அதிபதியாக வந்த்தால் அதுவழியாக தீமை நடந்த்து. அவயோகி
மிகமோசமானவன் என்பதே எனது பல பதிவுகளில் வலியுறுத்தி
வருகுறேன் என்பதை என் பதிவை தொடர்ந்து படிப்பவர்களுக்கு
விளங்கும்.

ரிஷப லக்னம், துலாம் ராசி விசாகம் நட்சத்திரம், ரிசப லக்னத்தற்க்கு 7-ஆம் பாவம் விருச்சகம் வரும். அப்போ கனவருடைய
லக்னம் விருச்சகத்தில் இருந்து பாா்த்தால் 8-ஆம் பாவாதிபதி புதன் தசை, புதன் புத்தியில் மரனம் நிகழ்துள்ளது. புதன் 8-
ஆம் அதிபதி 4-ல் உள்ளாா் சூரியனுடன், அவருக்கு வீடுகொடுத்த சனி மூன்றில் ஸ்திர லக்னத்திற்க்கு மாரக ஸ்தானத்தில்
செவ்வாயுடன் பலமாக உள்ளாா். விபத்து நடக்கும் போது புதன் தசை புதன் புத்தி, சூரியன் அந்தரம் அந்த சூரியன்
அட்டமாதிபதியுடன் கூடி 4-ல் வாகனஸ்தானத்தில் சூரியன் நிற்பது ராகு சாரம் அந்த ராகுவும் விருச்சக லக்னத்திற்க்கு 2-ல்
மாரக ஸ்தானத்தில் இருப்பதால் வாகன விபத்து நடந்துள்ளது.
நடிகர சாருக்கான் ஜாதகம். இது நுட்பமான விதிகள் உள்ளதென்பதால்
திருக்கணித முறையான லாகிரியில் கணித்துள்ளேன்.

யோகவிதிகள் கீழ் வருவன:


1. கண்ட யோகத்தில் பிறந்த்தால் சனி யோகி.
2. சனி யோகியாகி, ராசிநாதனும் ஆகி மூலத்திரிகோண பாகையிலும்
இருப்பதோடு, சனி வக்கிரமாகி உச்ச பலனை தந்துள்ளது.
3. சனியை குரு பார்வை செய்வது.
4. சனி புஷ்கராம்சம் பெற்றிருப்பது.
5. ஹைலைட்டாக சனி இந்து லக்னத்தில் இருப்பது (சிம்மலக்னம.
ஒன்பதாமதிபதி செவ்வாய் களபரிமாண எண் 6. ராசி மகரம்
களபரிமாண ஒளியெண் ஒன்பதாமதிபதி புதனுக்கு 8. கூட்டினால் 14. 12
ல் வகுத்தால் மீதி 2. மகர ராசியிலிருந்து கணக்கிட இந்து லக்னம்
கும்பம். அங்கேதான. அண்ணன் சனி)

மேற்கண்ட அனைத்து அமைப்புகளும் யோகமாக இருப்பதால்தான் இப்போது


நடக்கும் சனி தசா மாபெரும் யோகத்தை தந்துக்கொண்டிருக்கிறது. இந்து
லக்னத்தை பார்தத ் குருதசாவே பெரும் நடிகனாக்கியது. இப்போது சனிதசா IPL
கிரிக்கெட்டில் எத்தனை முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி
வென்றுள்ளது, அதன் மூலம் விளம்பர ஏலம் மூலம் சாருக்கான் எவ்வளவு
சம்பாதித்தார்
என்பது தெரிந்தால் இந்து லக்ன சூட்சும்பலன் நீங்கள் தெரிந்தவர்.
Example 9
இது ஒரு மிகப்பெரிய பதவியில் அதிகாரத்தோடு இருப்பவரின் ஜாதகம். இவருக்கு தற்போது ரிசபலக்னத்திற்கு
தர்மகர்மாதிபதியாகவும் கன்னிராசிக்கு யோகராகவும் வரக்கூடிய சனிதசா தனது பகைவீடான சிம்மத்தில் ராகுவோடு
இணைந்த பாவத்துவமான நிலையில் தசா நடக்கிறது.
ஆனாலும் சனி அமர்ந்த பாகை புஷ்கர நவாம்சம். லக்னாதிபதி அமர்ந்த பாகை புஷ்கர நவாம்சம் . சந்திரன்
வர்க்கோத்தம்பலம். அவயோகி புதன் திதிசூன்ய ராசியான விருட்சிகத்தில். மற்றொரு திதிசூன்ய கிரகமான சூரியன்
கேதுசாரம்.
மூலநூலான பாரிஜாத யோகம் சந்திரன் வர்க்கோத்தம பலமடைவதும் புஷ்கரநவாம்சம் பெறுவதும. அமைந்து குரு செவ்வாய்
சேர்ந்திருப்பதும் சந்திரன் புஷ்கர நவாம்சம் அல்லது வர்க்கோத்தம்பலமடைவது யோகம் என்கிறது.
குரு சனி சேர்க்கை+ யோகி & அவயோகி
குரு சனி சேர்க்கையோ பார்வையோ பெற்றவர்கள் உயர்பதவியையோ, அல்லது தொழிலில் உயர்ந்த நிலையையோ
அடைவார்கள். நாடி நூல்கள் இதைதான் தர்மகர்மாதிபதிகளின் சேர்க்கை என்று கூறுகிறது.

சாராவளி என்ற மூலநூலில் சனி+குரு சேர்க்கை கேந்திரங்களில் அமைந்தால் ராஜமந்திரியாகவோ அல்லது சங்கம்,
நகரம் கிராமம் போன்றவற்றிற்கு தலைவராகவோ ஆவதோடு சனிதசா உயர்ந்த ராஜயோகத்தையும் தரும் என்கிறது.
பலதீபிகையும் சனி குரு சேர்க்கையை யோகசேர்க்கை என்கிறது.

1981 ல் குரு + சனிதசா இணைவு ஏற்பட்டது. அவ்வருடத்தில் பிறந்தவர்கள் பலர் சனி குரு தசாவில் உயர்வான
பதவி, பல யோகவசதிகளை பெற்றிருப்பதே இதற்கு ஆதாரமாகும்.

குரு எந்த பாவக்கிரகத்தோடு சேர்ந்தாலும் தனது காரகத்துவ பலன்களை குறைத்துக்கொள்வான்.


ஆனால் குரு, சனிகாலபுருஷ லக்னமான மேசத்திற்கு தர்மகர்மாதிபதிகளாவதால் குருவின் காரகத்துவ
பலன்களில் தாமதம் தந்தாலும் கெடுதல் தருவதில்லை. இவர்கள் சேர்ந்திருந்தால் யோகத்தையே செய்கிறார்கள். 

குரு+ சனி சேர்க்கையில் குரு வலுபெற்றவர்கள் சுத்த ஆன்மீகவாதிகள்.

மற்றொரு சூட்சுமமாக குரு தீமையை செய்யும் லக்னமான ரிசபம், துலாம் மற்றும் கேந்திராதிபத்ய, மாரகாதிபத்ய,
பாதகாதிபத்ய தோசங்களை தரும் உபய லக்னங்களான மிதுனம், கன்னி, துலாம், மீனம் லக்னங்களுக்கு சனியுடன்
சேர்ந்த குரு மட்டுமே தனது தசாவில் யோகத்தை செய்வதோடு அடுத்துவரும் சனிதசாவும் மாபெரும் யோகத்தை
செய்யும்.

குரு+சனி சேர்க்கையில் யாராவது அவயோகியாக இல்லாவிட்டாலோ, அவயோகி நட்சத்தில் இல்லாவிட்டாலோ


இவர்களது தசாக்கள் அவ்வளவு மோசமாக இருக்காது. இது நிச்சயம்.
கன்னி லக்னத்தில் பிறந்த ஒருவரின் ஜாதகத்தை கீழே பதிவிட்டுள்ளேன். அவருக்கு
குரு யோகி
சூரியன் அவயோகி. ஆனால் சூரியன் 12 ரூபவலிமையுடன் அசுரபலம்.
திரயோதசி திதியில் பிறந்ததால் சூரியன் சுக்கிரன் திதிசூன்ய கிரகங்கள்.
ரிசபமும், துலாமும் திதிசூன்ய ராசிகள்.

அவயோகியாக இருக்கும் கிரகமே திதிசூன்ய ராசியில் இருந்தாலோ, ராகு சேர்க்கை அல்லது ராகுவின்
நட்சத்திரத்திலோ இருந்தாலோ யோகம் செய்யும்.

நான் உதாரணமாக கீழே கொடுத்துள்ள ஜாதகம் எனது நண்பருடையது. அவர் மாவட்ட துணை ஆட்சியருக்கு
சமமான பதவியில் இருப்பவர்.
இவர் கன்னி லக்னத்தில் பிறந்து சூரியன் பத்தில் திக்பலம்.
இரண்டாவதாக லக்னம் மற்றும் பத்தாமதிபதியான (பத்து-தொழில், உத்தியோகம்) ஆட்சி பெற்று வக்கிரம்
ஆனதால் உச்சபலத்தை பெற்றது. சுக்கிரன் சந்திரன் பரிவர்த்தனை.
இரண்டு கிரகங்கள் திக்பலம் பெற்றால் ராஜயோக அமைப்பு. 
இவரின் ஜாதகத்தில் குரு லக்னத்தில் திக்பலம்.
சூரியன் 10 ல் திக்பலம். இவருக்கு சனியுடன் சேர்ந்த குருமகாதசாவில்தான் கெஜட்டடு ரேங்க் அரசு பதவி
கிடைத்தது.
இதே குரு தசா சனி புத்தியில் மேலும் உயர்பதவி உயர்வு பெற்றார். இவர் IAS முதன்மை தேர்வில் வெற்றிபெற்று
நேர்முகதேர்வு வரை சென்று தேர்ச்சிபெறாதவர். ஆனால் மாநிலதேர்வில் உயர் பதவியை தேர்வுமூலம் பெற்றவர்.
இந்தக் குரு யோகி. 12 ரூப வலிமைபெற்ற சூரியன் நட்சத்திரசாரம்.
அதைவிட சனியோடு 2 பாகைக்குள் இணைவுபெற்றவர்.
இதில் அவயோகி சூரியன் திதிசூன்ய தோசத்தை அடைந்தாலும் ராகுவின் நட்சத்திரத்தை பெற்று
தோசநிவர்த்தியை அடைந்துள்ளது.
இன்னும் பல சிறப்புகளை ஜாதகத்தில் நீங்களே ஆய்வுசெய்யுங்களேன்.
முக்கியமாக குருவும் சனியும் புஷ்கர நவாம்சத்தையும் புஷ்கர பாகையையும் பெற்றிள்ளதை நீங்களே பாருங்கள்.
யோகாதிபதி
1. மேஷம் சூரியன்
2. ரிஷபம் சனி
3. மிதுனம் சுக்ரன்
4. கடகம் சிம்மம் (செவ்வாய்)
5. கன்னி சுக்ரன்
6. துலாம் சனி
7. விருச்சகம் சந்திரன்
8. தனுசு சூரியன்
9. மகரம் சுக்ரன்
10. கும்மம் சுக்ரன்
11. மீனம் சந்திரன்
யோகம்/ யோகதாரை/ யோகி & அவயோகம்/ அவயோக தாரை/ அவயோகி
No யோகம் யோகதாரை யோகி அவயோக தாரை அவயோகி
1 விஷ்கம்பம் (விஷ் யோகம்) பூசம் சனி திருவோணம் சந்திரன்
2 ப்ரீதி (ப்ரீ யோகம்) ஆயில்யம் புதன் அவிட்டம் செவ்வாய்
3 ஆயுஷ்மான் (ஆயு யோகம்) மகம் கேது சதயம் ராகு
4 செளபாக்யம் (செள யோகம்) பூரம் சுக்ரன் பூரட்டாதி குரு
5 சோபனம் (சோ யோகம்) உத்திரம் சூரியன் உத்திரட்டாதி சனி
6 அதிகண்டம் (அதி யோகம்) ஹஸ்தம் சந்திரன் ரேவதி புதன்
7 சுகர்மம் (சுக யோகம்) சித்திரை செவ்வாய் அஸ்வினி கேது
8 திருதி (திரு யோகம்) சுவாதி ராகு பரணி சுக்ரன்
9 சூலம் (சூல யோகம்) விசாகம் குரு கார்த்திகை சூரியன்
10 கண்டம் (கண் யோகம்) அனுஷம் சனி ரோகினி சந்திரன்
11 விருத்தி (விரு யோகம்) கேட்டை புதன் மிருகசீரிடம் செவ்வாய்
12 துருவம் (துரு யோகம்) மூலம் கேது திருவாதிரை ராகு
13 வ்யாகதம் (வ்யா யோகம்) பூராடம் சுக்ரன் புனர்பூசம் குரு
14 ஹர்ஷணம் (ஹர் யோகம்), உத்திரட்டாதி சூரியன் பூசம் சனி
15 வஜ்ரம் (வஜ் யோகம்), திருவோணம் சந்திரன் ஆயில்யம் புதன்
16 சித்தி (சித் யோகம்), அவிட்டம் செவ்வாய் மகம் கேது
17 வியதீபாதம் (விய யோகம்) சதயம் ராகு
18 வரீயான் (வரீ யோகம்) பூரட்டாதி குரு உத்திரம் சூரியன்
19 பரிகம் (பரி யோகம்) உத்திரட்டாதி சனி சித்திரை செவ்வாய்
20 சிவம் (சிவ யோகம்) ரேவதி புதன் சித்திரை செவ்வாய்
21 சித்தம் (சித் யோகம்) அஸ்வினி கேது சுவாதி ராகு
22 சாத்தியம் (சாத் யோகம்) பரணி சுக்ரன் உத்திரம் சூரியன்
23 சுபம் (சுப யோகம்) கார்த்திகை குரு அனுஷம் சனி
24 சுப்பிரம் (சுப் யோகம்) ரோஹிணி சந்திரன் கேட்டை புதன்
25 பிராம்மியம் (பிரா யோகம்) மிருகசீரிஷம் செவ்வாய் மூலம் கேது
26 ஐந்திரம் (ஐந் யோகம்) திருவாதிரை ராகு பூராடம் சுக்ரன்
27 வைதிருதி (வை யோகம்) புனர்பூசம் குரு உத்ராடம் சூரியன்
திதி/சூன்யம்
NO திதி சூன்யம் கிரகம்
1 பிரதமை மகரம், துலாம், சனி, சுக்கிரன்
2 துவிதியை தனுசு, மீனம், குரு
3 திரிதியை மகரம், சிம்மம், சனி, சூரியன்
4 சதுர்த்தி கும்பம், ரிஷபம், சனி, சுக்கிரன்
5 பஞ்சமி மிதுனம், கன்னி புதன்
6 சஷ்டி மேஷம், சிம்மம் செவ்வாய், சூரியன்
7 சப்தமி தனுசு, கடகம் குரு, சந்திரன்
8 அஷ்டமி மிதுனம், கன்னி புதன்
9 நவமி சிம்மம், விருச்சிகம் சூரியன், செவ்வாய்
10 தசமி சிம்மம், விருச்சிகம், சூரியன், செவ்வாய்
11 ஏகாதசி தனுசு, மீனம் குரு
12 துவாதசி மகரம், துலாம் சனி, சுக்கிரன்
13 திரயோதசி ரிஷபம், சிம்மம், சுக்கிரன், சூரியன்
14 சதுர்த்தசி மிதுனம், கன்னி, புதன் குரு
15 அம்மாவாசை கடகம் சந்திரன்
15 பௌர்ணமி சிம்மம் சூரியன்

முடக்கு ராசிகள்
உத்திரம் ஆயில்யம் புனர்பூசம் மிருக சீரிடம்
ஹஸ்தம் மகம் பூசம் திருவாதிரை
பூரம்
சித்திரை கார்த்திகை
சுவாதி ரோகிணி

விசாகம் அஸ்வினி
அனுஷம் பரணி
ரேவதி
கேட்டை உத்ராடம் அவிட்டம் பூரட்டாதி
மூலம் திருவோணம் சதயம் உத்திரட்டாதி
கிரக சேர்ககை
் யளவு:
ஒரு ராசியில் இரண்டு கிரகங்கள் சேர்ந்திருந்தால் மட்டுமே சேர்ககை ் யால் உண்டாகும் யோகம் கிடைத்துவிடாது. அக்கிரகங்கள்
எத்தனை பாகைகள் நெருக்கமாக இணைந்திருக்கின்றன என்பதை பொருத்தே யோகம் அமையும். 12 பாகைக்கு மேல் இணைந்த
கிரக சேர்ககை ் யால் ஒரு சதவீதம் கூட யோகம் இல்லை. ஒரு பாகை அளவில் சேர்ந்த கிரகங்கள் 100 சதவீதம் யோகத்தை
வலிமையாக செய்யும். ஒரு பாகைக்குள் சேர்ந்திருக்கும் கிரகங்களுக்கிடையே கிரகயுத்தம் ஏற்படும். கிரகயுத்தத்தில் வெற்றிபெற்ற
கிரகங்கத்திற்கு ஒரு ரூபம் பலத்தை கூட்டிக்கொள்ளவேண்டும். தோற்ற கிரகத்திற்கு ஒரு ரூபம் பலத்தை கழுத்துக்கொள்ள
வேண்டும். ரூபம் என்பது கிரகங்களின் வலிமையை அளக்கும் ஒரு அளவீடு. உதாரணமாக தனது பரம உச்ச பாகையில் உள்ள கிரகம்
ஒரு ரூபம் பலம் பெற்றிருக்கும். திக்பலம் பெற்ற கிரகம் ஒரு ரூபம் பலமர பெற்றிருக்கும். பிறந்த நேரத்தில் உள்ள ஹோரை அதிபதி
ஒரு ரூபம் பலம் பெற்றிருக்கும். இவற்றை கூட்டி கணக்கிடுவதே கிரகங்களின் மொத்த சட்பலம். 10 ரூபம் மேல் பெற்ற கிரகங்கள்
ஆரோகண கதியிலிருந்தால் மிகுந்த சுகத்தை கொடுக்கும்.
இவ்வாறாக கிரகயுத்தத்தில் வென்ற கிரகம் ஒரு ரூபம் பலமடைவதால் மிகுந்த யோகம் தரும். அதாவது அதிக பாகை, கலை,
விகலை பெற்ற கிரகமே கிரக யுத்தத்தில் வெற்றிபெறும். இக்கிரகம் தோறரற கிரகத்தின் ஆதிபத்தத்தையும் சேர்த்து செய்யும்.
ஜோதிடமன்னன். K.S கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மூன்று பாகைக்குள் சேரும் கிரகசேர்ககை ் மிக நெருக்கமான ஒன்றாகும்
என்கிறார். உதைதான் மகாகவி காளிதாசர் 100 சதவீத சேர்ககை ் யளவு 1 பாகை என்று குறிப்பிட்டுள்ளார். சுபத்துவம்
,அசுபவத்துவத்தையும் தர்மகர்மாதிபதிகள் சேர்ககை ் யால் உண்டாகும் யோகத்தை கணக்கிடும்போது பாகையளவை கட்டாயம்
கணக்கிட்டு பலன் காண வேண்டும். சேர்ககை ் யால் உண்டாகும் யோகம் நல்லயோகம் கெட்டயோகம் என்று சேரும் கிரகங்களை
பொருத்து எதுவாகவும் இருக்கலாம்.

You might also like