Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

அரசு பணி அமையும் அமைப்பு

முதலில் அனைத்துக்கும் ஆதாரம் லக்னம் மற்றும் லக்னாதிபதியின் சுபத்தன்மை மற்றும் வலுமைதான். இது பிள்ளையார்
வழிபாடு போன்றது. இல்லாவிட்டால் உயர்நிலையை அடையமுடியாது. இனி விதிகளை பார்ப்போமாக.

1. அரசு என்றாலே சூரியனும் சிம்ம ராசியும்தான் முதல் முக்கியத்துவம் பெறுகிறது. அரசுகிரகங்கள் என்று பொதுவாக
ஜோதிடர்களால் அழைக்கப்படும் கிரகங்கள் சூரியன், குரு, செவ்வாய் என்றிருக்க நீங்கள் சூரியனை மட்டுமே
குறிப்பிடுகிறீர்களே என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றும். அவை பொதுவிதிகளில் உள்ள, துனைவிதிகளே! அதாவது
சாப்பாட்டிற்கு தொட்டுக்கொள்ள உதவும் கூட்டு பொறியல் மாதிரிதான் குரு, சனி, செவ்வாய், எல்லாம்....
உடனே சூரியன் நீசம் பெற்ற எனக்கு தெரிந்தவர் குரு, செவ்வாய் பலத்தினால் அரசுப்பணியில் இருக்கிறார் என்று யாராவது
சொல்லக்கூடும். அப்படி சொன்னால் கிரகங்களின் சட்பலம் கணிப்பது, தசவர்க்கம் கணிப்பது போன்றவை நமது
பதிவிலிருந்து இன்னும் கற்றுக்கொள்ளவில்லையென்று அர்த்தம். சூரியன் நீசமாக இருந்து அவர் அரசுப்பணியில் இருந்தால்
அவரது ஜாதகத்தில் சட்பலம் கணித்து பாருங்கள். சூரியன் சட்பல வலிமையில் முதலிடத்தில் இருந்து 8 ரூபத்திற்கு மேல்
வலிமை பெற்றிருக்கும்.

அதாவது ராசியில் ஒருகிரகம் உச்சம் பெறுவது என்பது அடிப்படை ஆனால் சாதாரண அமைப்புதான்.
உதாரணமாக சூரியன் மேசத்தில் முதல் 10 பாகைக்குள் இருந்தால் மட்டுமே உச்சம். இதற்கு ஒரு ' ரூபம்' வலிமை
கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது 100 மதிப்பெண்கள் என்று எளிதில் புரியும்படியாக வைத்துக் கொள்ளுங்களேன்.
ஆட்சியாக சிம்மத்தில் இருந்தால் அரை ரூபம் வலிமைப்படும். இதை 50 மதிப்பெண் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.
அதுவும் சிம்மத்தில் முதல் 20 பாகைவரை மூலத்திரிகோண வலிமையில் இருக்கும். இதற்கு முக்கால் ரூப வலிமை தரும்.
அதாவது 75 மதிப்பெண். நட்பு வீடுகளான தனுசு, மீனம், விருட்சிகம், கடகம், ஆகியவற்றில் சூரியன் கால்ரூபம் அதாவது 25
மதிப்பெண்கள் வலிமைபெறும் . நீசவீடான துலாத்தில் முதல் 10 பாகை 0 ரூபவலிமை பெறும். அதாவது 0 மதிப்பெண்கள்.
மேலே கூறியது எல்லாம் ராசிக்கட்டத்தில்தான். இது சட்வர்க்கபலம் அல்ல. இறுதியானதும் கிடையாது. ராசியில் உள்ளது
போன்றே நவாம்சத்திலும் ருபத்தில் நீங்கள் ஒரு பின்னவடிவில் கிரகவலிமையை கணித்துக்கொள்ளலாம்.ஆனால்...
இதைத்தான்டி கிரகங்களின் சூட்சும வலிமை என்பது சட்பலத்தில் இருக்கிறது.
சட்பலம்:
1.ஸ்தானபலம்
இது ராசி, நவாம்சம், திரேக்காணம், ஹோரை, சப்தாம்சம், துவாதாம்சம், திரிசாம்சம், சதுர்தாம்சம், சப்தாம்சம் போன்ற
தசவர்க்கங்களில் சூரியன் பெறும் கிரகவலிமை ருபம் அளவில் கணித்து மொத்த கூடுதல்.

2. காலபலம்:
இது உத்திராயணகாலம், தட்சினாயகாலம்,
இரவு பகல்,
வளர்பிறை, தேய்பிறை
போன்ற காலங்களில் ஒரு கிரகம் பெறும் கூடுதல் பலம் ரூப ( மதிப்பெண்) வடிவில்.

3. அயனபலம்:
இதில் கிரகயுத்தம், வக்ரம் போன்றவற்றில் அடையும் பலம் ரூபவடிவில்

4. திக்பலம்.
சூரியன், செவ்வாய் 10 திக்பலம். அதாவது ஒரு ரூப்பலம். அதாவது ராசியில் பெறும் உச்சம் அதற்கு சம்மான பலம்.

5. நைசர்க்கிய பலம்

6. சேஷ்டாபலம் 

இந்த ஆறும் தான் கிரகங்களின் வலிமையை கணிக்கும் சட்வர்க்க முறை.

1. நமது திசாபுக்தி முறையை வகுத்துக்கொடுத்த பராசரமுனிவர் தெளிவாக சட்வர்க்கம் எவ்வாறு கணிப்பது என்று
பராசர சம்ஹிதையில் விரிவாக குறிப்பிட்டுள்ளார். மேலும் காளிதாசரின் உத்தரகாலாமிர்தம், வராகமிகிர்ரின்
ஜாதகசிரோன்மணி என்னும் ப்ருஹத் ஜாதகம் மற்றும் சர்வார்த்த சிந்தாமணி போன்ற மூலநூல்களில் விரிவாக
விளக்கப் பட்டுள்ளது. மேலும் சூரிய ஹோரையில் ஒருவர் பிறந்திருந்தால் சூரியன் சட்பலத்தில் ஒரு ரூபம் கூடுதலாக
அதாவது ஒரு உச்சபலம் கூடுதலாக பெறும். ஞாயிற்றுக்கிழமை ஒருவர் பிறந்திருந்தால் அரைரூப பலம் சூரியன்
பெறும். அதாவது ஒரு ஆட்சிபலம் சட்பலத்தில் கூடுதலாக சூரியன் பெறும். இதை ஏன் உங்களுக்கு இவ்வளவு
விரிவாக கூறியுள்ளேன் என்றால் நீங்கள் சூரியனை முழுமையாக எடைபோட்டு பார்த்து அதன் வலிமையை
கணிக்கத்தான்.திருஷ்டிபலம் என்ற கிரகங்களின் பார்வையும் சட்வர்க்கத்தின் உட்பிரிவுகளில் அடங்கும்.ஏனென்றால்
சட்பலம் பல உட்பிரிவுகளை கொண்டது.
2. செவ்வாய் ராணுவம், காவல் போன்ற பணிவகைகளை வகுக்க உதவும் துனைவிதி அமைப்பைபெறும். குரு ஆசிரியர்,
வங்கிப்பணி போன்ற பணிபிரிவுகளுக்கு உதவும் துணைவிதிகள். சனி கர்மகாரகன், மக்கள் சேவைப்பணி, அரசியல்,
நகராட்சி, ஊராட்சி, சேவை போன்ற பணிவகைகளை குறிக்கும் துணை விதிகள்.
3. சனி லக்ன அசுபராக வந்து சிம்மத்தில் தொடர்புபெற்றால் அரசுப்பணி கிடைக்க தடை ஏற்படும். அப்படி சூரியனின்
வலிமையால் அரசுப்பணி அமைந்தாலும் உயர்பணி அமையாமல் சாதாரண கடைநிலை ஊழியராகவே ஓய்வு
பெறவேண்டியதுதான்.
4. சனி கடகம்,சிம்மம், மேசம், விருட்சிகம் ஆகிய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்ன அசுபராக வருகிறார்.
உதாரணமாக சிம்ம லக்னத்தில் ஒருவர் பிறந்து லக்னத்திற்கு பத்தில் சூரியனும் செவ்வாயும் திக்பலத்தோடு
அமர்ந்தால் அரசுவேலை கிடைக்கும் அமைப்பாகும்.
5. ஆனால் சனி சிம்மத்தில் அமர்ந்து பத்தில் வலிமை பெற்ற சூரியன் செவ்வாயை பார்த்தால் அரசுப்பணி அமைவதில்
சிரம்ம் ஏற்படும். அல்லது வேறு கிரகங்கள் உதவியானால் அரசுப்பணி அமைந்தாலும் கடைநிலை ஊழியராகத்தான்
பணியாற்ற வேண்டும். ஏனென்றால் பெரும்பாவியான சனி உடல் உழைப்புக்கும் கீழ்நிலை பணிக்கும் காரகம் வகிப்பவர்.
6. சனி குருவின் சேர்க்கை பார்வை பெற்று சுபம் அடைந்தால் மட்டுமே உயர்பதவிகளை தருவார். மேற்கண்ட நான்கு
லக்னத்திற்கும் சனி வலிமை குறைய வேண்டும். சிம்மம் சூரியனுக்கு சனியின் தொடர்பு ஏற்படக்கூடாது.
கடகம்,சிம்மம்,மேசம், விருட்சிக லக்னங்களுக்கு சனி 3,5,11,12 ல் வலிமை குறைந்து ஆட்சி உச்சம் பெறாமல்
இருப்பதே நல்லது.
7. சூரியன், சந்திரன், 1,4,7,10,11 ல் இருந்து வலிமை பெற்று உத்தியோகத்தை குறிக்கும் 6,10 ஆகிய இடங்கள்
வலுத்தால் நல்லது.
8. அரசுப்பணி அமைய போட்டி தேர்வில் வெற்றிபெற வேண்டும். இதற்கு ஆறாமிடம் அவசியம். 6,11 தொடர்பு பெறும்
காலங்களில் தேர்வில் வெற்றி ஏற்படும்.
9. யோகியின் திசாபுக்திகளில் பணி அமையும். யோகியின் சாரம் பெற்ற கிரகங்கள் திசை நடத்தினாலும் அரசுப்பணி
அமையும். ஆனால் ஜாதகத்தில் சூரியன் வலிமை பெறுவது அவசியம்.
அரசு பணி:

ஜோதிடர்களிடம் கேட்கும் கேள்வி அரசுப்பணி கிடைக்குமா?


1. 1,4,8 ல் புதன் சூரியன் சேர்க்கைப்பெற்று இருவரில் ஒருவர் ஆட்சிப்பெறுதல், உச்சம் பெறுதல், இந்த அமைப்பை குரு
பார்வை செய்தல்.
2. லக்னத்திற்கு பத்தில் சூரியன். குரு, செவ்வாய் சுபர்களால் சுபமடைந்து பத்தாம் வீட்டோடு தொடர்பு.
3. சூரியன், சிம்மம் வலுவடைதல், பாவிகளால் பாதிக்கப்படாதிருத்தல்.
4. பத்தாமதிபதி சூரியன் நட்சத்திரத்தில் அமர்ந்து சூரியன் வலுபெறுதல்.
4. பத்தில் செவ்வாய் , சூரியன் திக்பலமடைதல்.
5. குரு பத்தாம் வீடு, பத்தாமதிபதியை பார்க்க சூரியன் வலுவடைதல்.
6. சந்திரன் வலுவாகி வளர்பிறையாக சூரிய கேந்திரத்தில் இருக்க, சூரியன் நல்ல நிலையில் ஆட்சி, உச்சம், நட்பு,சம்மாக
இருத்தல்.
6. சூரியன் இருக்கும் ராசிநாதன் வலுவாகியிருத்தல்.
மேற்காணும் சில அமைப்புகள் இருந்து லக்னாதிபதி வலுவாக இருந்து யோகதசா நடந்தால் அரசுப்பணிக்கு விண்ணப்பம்
செய்வதோடு அதற்கு உரிய பொதுஅறிவு பாடத்திட்டங்களையும் படிக்கும் ஆர்வம் ஏற்படும். சூரியனின் நட்பான புதன்
பொதுஅறிவுமேல் விருப்பம் தரும் கிரகம்.
7. ஆறாம்வீடு, ஆறாமதிபதியே போட்டித்தேர்வில் வெற்றி, சேவை( Services) குறிப்பதால் இப்பாவம் சுபமாகவும், வலுவாகவும்
இருப்பவர்கள் போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப்பணியில் சேர்வர்.(6,11 போட்டித்தேர்வில் வெற்றிபெறுவதை குறிக்கும்)
அணைத்து அமைப்புகளோடு பதவி ஸ்தானம் எனப்படும், உத்தியோக ஸ்தானாதிபதி வலுவாக( 10) ஜாதகத்தில் வலுவாக
இருந்து பத்தாம்பாவம் பாவத்துவம் கொண்ட சனியால் பாதிக்கப்படாமல் இருந்தாலும், 6,11,10 தொடர்புக்கு குருவின் பார்வை
,சேர்க்கை இருந்தாலும் சில முயற்சிகளிலே வெற்றி கிடைக்கும். சனி , ராகு போன்றவை பத்தாம் வீட்டோடு சுபர் தொடர்பின்றி
தொடர்பு கொண்டால் சோம்பல், தோல்வி, தாமதம், கடும் உழைப்பு போன்ற பலன்களை தந்து வெற்றியோ, தோல்வியோ மற்ற
அமைப்புகளை பொருத்து அமையும்.
8. பத்தாம் வீட்டோடு புதன், குரு தொடர்பு வங்கி, ஆசிரியர்துறைக்கு அழைத்து செல்லும். இதற்கு இரண்டாமிடமும் பலம்
பெறவேண்டும். ( அனைத்து அமைப்பிற்கும் சூரியன் அவசியம்)
9. காவல்,ராணுவம் போன்றவற்றிற்கு செவ்வாய் சந்திரன் முதலிய சுபர்கள் தொடர்பை பெற்று பலமடைதல் வேண்டும்.
முக்குயமான பொதுபலன்கள் மட்டும் கூறியுள்ளேன்.
சூரியனே அதிகாரம் , புகழ், அரசாங்கம், அரசுப்பதவி, அமைச்சர், முதல்வர், பிரதமர், போன்றவற்றிற்கு அடிப்படையாகும்.
சூரியன் பிறந்த ஜாதகத்தில் வலிமை பெற்றவர்களே உயர்பதவிகளில் இருப்பவர்கள்.
இன்று கல்வி பெறும் மாணவர்களின் பெரும்பான்மையானோரின் விருப்பம் அரசுப்பணியில் சேர்வதாகும். பெற்றோர்களின்
கனவு தங்கள் மகன்,மகள் IAS,IPS போன்ற உயர்பதவிகளுக்கான போட்டிதேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர்வது
பற்றியதாகவே உள்ளது. இதைபற்றி விரிவாக ஒரு தொடர்பதிவை போடுவதே இக்கட்டுரையின் சாராம்சமாகும். ஏனெனில்
இதைப்பற்றி காலங்கருதி ஓரிரு பதிவுகளில் பதிவு செய்ய இயலாது.
சூரியனின் காரகத்துவம் நூற்றுக்கணக்கில் இருந்தாலும் இக்கட்டுரையின் நோக கம் " அரசு" மட்டுமே. இதிலேயே
அதிகாரம் ,பதவி , அரசு சலுகைகள் , எல்லாம் அடக்கம்.
அரசுப்பணிக்கான கிரக சேர்க்கைகள்:
சூரியன் பிறந்த ஜாதகத்தில் 1, 4,10,6,3 ,11 ஆகியவற்றில் உச்சம் ,ஆட்சி ,நட்பாக இருக்க வேண்டும் என்பது பொதுவான
அடிப்படை. மற்ற கிரக சேர்க்கையால் ஏற்படும் யோகத்தால் இது மாறுபடக்கூடும் என்ற விதியை ஒவ்வொரு பொது
விதியையும் படிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டும். அதைவிட்டு ' இல்லசார் ! எனக்கு சூரியன் 12 ல் இருக்கு ,நான்
தாசில்தாரா இருக்கேனே என்று குழப்பிக்கொள்ளக்கூடாது. ஏனெனில் ஜோதிடம் என்பது ஒரு கரைக்காணமுடியாத கடல்
என்பதால் நுணுக்கமான சில யோகங்களால் இவ்விதிகள் உடைப்பட்டு போகலாம்.

அரசுகிரகங்கள்: 
அரசுப்பணிக்கு மூன்று அரசுக்கிரகங்கள் அடிப்படை .
1. சூரியன்
2. குரு
3. செவ்வாய்
இந்த மூன்றின் குணங்களை விரிவாக நாம் தெரிந்துக்கொள்வதோடு ராசியிலும் மற்ற வர்க்கங்களிலும் இவை பெறும்
வலிமை, மற்றக்கிரகங்களால் ஏற்படும் யோகம், பார்வை பலம் போன்றவையும் முக்கிய பங்கு வகிக்கும்.
IAS,IPS போன்ற பதவிகளுக்கு ராஜ கிரகங்களின் வலிமை ஏற்படுவதோடு கூடுதலாக மக்கள் செல்வாக்கு,பொதுஜனசேவை
, உழைப்பு , அர்ப்பணிப்பு போன்றவற்றை குறிக்கும் சனியின் உதவி அவசியம். ஒருவேளை மற்ற கிரகங்களால் உயர்பதவிகள்
கிடைத்தாலும் சனியின் கொடுப்பினை இல்லாவிட்டால் ' டம்மி,' தான். அதேபோன்று மூளை செயல்பாட்டையும் ,ஞாபகத்திறன்,
கல்வி போன்றவற்றை குறிக்கும் புதனும் ,வசதிவாய்ப்புகளை தரும் சுக்கிரனும் அவசியம்.
அரசுப்பணி அமைய உதவும் சில ராஜயோகங்கள்:

1. தர்மகர்மாதிபதி யோகம்: 
லக்னத்திற்கோ அல்லது ராசிக்கோ 9, 10 ஆம் அதிபதிகள் சேர்ந்து கேந்திர கோணத்தில் பலப்பட்டு இருப்பதோடு
இக்கிரகங்களின் சேர்க்கை 12 பாகைக்குள் இருக்க வேண்டும். அதோடு இக்கிரகங்களின் திசை 20 வயது துவக்கத்தில் வர
வேண்டும். இவ்வாறு அமைந்து லக்னமும் சூரியனும் வலிமை பெற்றவர்களே IAS,IPS ,போன்ற உயர் பதவிகளில் இருக்கும்
யோகத்தை பெறுகிறார்கள்.

2. காகள யோகம்: 
4,9 ஆம் அதிபதிகள் பரஸ்பரம் சேர்க்கை பெற்று லக்னத்திற்கும் கேந்திரம் பெற்றிருந்து லக்னாதிபதி கேந்திரத்தில்
ஆட்சியோ, உச்சமோ பெற்றிருந்தால் Group 1 மற்றும Group 2 தேர்வில் வெற்றி பெற்று உயர்பதவியை பெறும் யோகமாகும்.
இந்த காகள யோகம் அமைந்து சூரியன் மற்றும் செவ்வாய் பலம் பெற்றால் ராணுவ தளபதி, தலைமை செயலாளர், போன்ற
உயர் பதவிகளை தரும் அமைப்பாகும்.

3. பஞ்ச மகா புருஷயோகம்:


தாரா கிரகங்களான செவ்வாய், புதன் ,குரு ,சுக்கிரன், சனி இவ்வைந்தில் ஏதாவதொன்று லக்ன கேந்திரத்தில் ஆட்சியோ
,உச்சமோ பெற்றால் பஞ்சாபுருஷ யோகத்தில் ஏதாவதொன்று அமையும். கேந்திரம் என்பது 1,4,7,10 ஆகும். சந்திரனுக்கு
கேந்திரத்தில் இக்கிரகம் இருந்தாலும் இவ்யோகம் அமையும். 
ஐந்து பஞ்சமகாபுருஷ யோகங்கள்:
1.புதனால் ஏற்படும் பத்ரயோகம்.
2.செவ்வாயால் ஏற்படும் ருசக யோகம்.
3. குருவால் ஏற்படும் ஹம்சயோகம்.
4. சுக்கிரனால் ஏற்படும் மாளவிகா யோகம்.
5. சனியால் ஏற்படும் சசயோகம்.
இந்த ஐந்து யோகங்களில் இரண்டு அமைந்து அது 4,10 ஆக அமைந்தால் நிச்சயமாக அமைச்சர், முதல்வர், ஆளுநர்,
தலைமைசெயலாளர், தொழிலதிபர் போன்ற நிலையை உருவாக்கும்.

5. அதியோகம்: 
லக்னத்திற்கோ சந்திரனுக்கோ 6,7,8 ல்சுபகிரகங்களான குரு, சுக்கிரன்,புதன்,சேர்ந்தோ தனிதனியாகவோ இருந்து
பாவகுரகங்கள் தொடர்பு இல்லையென்றால் நிச்சயமாக IAS,IPS,IFS அதிகாரிதான். இவற்றில் ஏதாவது ஒரு கிரகம்
ஆட்சியோ உச்சமோ பெற்றுருந்து மற்ற இரண்டு கிரகமும் நட்பு பெற்றிருந்தால் போதும் அரசுப்பணியில் மத்திய அரசில்
செயலாளர், கேபினட் செயலாளர் போன்ற நிலையை உருவாக்கும்.

5. புதாதித்ய யோகம்: 
புதனும் சூரியனும் சேர்ந்து 1,4,8 ல் இருந்து இவற்றில் ஒரு கிரகம் ஆட்சியாபவோ உச்சமாகவோ இருந்தால் அரசுப்பணிக்கு
முயற்சிக்கலாம்.

6. லக்னத்திற்கு பத்தில் சூரியனும் செவ்வாயும் பகையில்லாமல் திக்பலத்தோடு இருந்தால் அரசுப்பணி அமையும்.

7. லக்னத்திற்கு பத்தில் செவ்வாய் தொடர்பு பெற்று சூரியன் மற்றும் குரு பலம் பெற்று பத்தாமதிபதியும் லக்னமும் நன்றாக
இருந்தால் ராணுவம் ,காவல்துறையில் பணி அமையும்.

8. லக்னத்திற்கோ ராசிக்கோ பத்தில் குரு பகை மற்றும் நீச்சமில்லாமல் இருந்து சூரியனும் செவ்வாயும் பகை, நீசச
் ம், 6,8,12
போன்ற இடங்களில் உச்சம் , ஆட்சி ,நட்பு தவிர்த்து இல்லாமல் இருந்தால் கல்லூரி பேராசிரியர், அல்லது ஆசிரியராக பணி
அமையும்.

9. புதனும் ,குருவும் லக்னத்திற்கோ ராசிக்கோ பத்தாமிடத்தோடு தொடர்புபெற்று சூரியன் பலம் பெற்றால் வங்கி மேளாளராக
பணி அமையும்.
தொ
அரசு வேலை நிச்சயம் அமையும். அடுத்து வரும் சுக்கிரதசா
யோகி சாரம் பெற்று உச்ச நவாம்சம் பெற்று தசா
நடத்துவதால் அத்தசாவில் நிச்சயம் அரசு அதிகாரியாக
இருப்பரீ ்கள். சிம்மராசியில் இராசி வலிமைபெற்று சூரியன்
பரிபூரண ஒளியுடைய சந்திரனால் சுபமடைந்து
அதிகாரயோகம் பெற்ற ஜாதகம். சூரியன் புஷ்கராம்சம்
பெற்றுள்ளது.

You might also like