Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 18

1.

0 முன்னுரை

“யாமரிந்த மொழிகளிலே, தமிழ் மொழியைப் போல்

இனிதாவது எங்கும் காணும்”

என்று தமிழ் மொழியின் இன்பத்தை உணர்ந்து மிக அற்புதமாக பாடிச் சென்றுள்ளார்


மகாகவி பாரதியார் அவர்கள். அவர் இந்த அளவிற்கு உணர்ந்து நம் தாய் மொழியான
தமிழ் மொழியைப் போற்றிப் பாடுவதற்கு ஒரு உந்துதலாக திகழ்வது இலக்கணமே என்று
கூறினால் அது மிகையாகாது. இலக்கணம் என்பது மொழியின் வழிகாட்டி, கட்டுரையை
நேரடியாக எழுத மற்றும் பேசுவதற்கு தேவைப்படும் அடிப்படைகள், விதிகள் மற்றும்
கோடுகளை பற்றியது. இலக்கணம் என்பது விதிக்குட்பட்டதாகும். தமிழை முறையாக
பேசவும் பயன்படுத்தவும் வரையறுக்கப்பட்ட இலக்கணத்தின் பங்கு அளப்பரியது என்றால்
அது மிகையாகாது. தமிழ்மொழியை முறையே கற்கவும் பயன்படுத்தவும் அத்தியாவசியமாக
திகழும் தமிழ் இலக்கணத்தைக் கற்பிப்பதில் ஆசிரியர்கள் பல சவால்களை
எதிர்கொள்கிறார்கள். இதில் விதிவிளக்க முறையும் விதிவருவித்தல் முறையும் இலக்கணம்
கற்பித்தலிக்கு விதிவிலக்காக திகழ்கின்றன.
2.0 விதிவிளக்கமுறை

விதிவிளக்க முறைப்படி முதலில் விதியை மாணவர்களுக்குச் சொல்லிவிட்டு பின்னர்


அவ்விதியை விளக்கும் உதாரணங்களை எடுத்துக்காட்டுதல் வேண்டும். உதாரணமாக
மக்கள்,மிருகம், பறவை, மற்ற உயிருள்ள விலங்குகள், உயிரில்லாத நாற்காலி, கல்
போன்றவற்றைக் குறிக்கும் சொற்களுக்குப் பெயர்ச் சொல் என உரைத்துவிட்டுப் பின்னர்
அவற்றிற்கு உரிய உதாரணங்களை விளக்குதல். அதாவது இலக்கண விதியையோ அல்லது
சூத்திரத்தையோ விளக்கிச் சொல்லிவிட்டுப் பின்னர் உதாரணங்களை எடுத்துக் காட்டுதல்.
இது மாணாக்கர்களுக்குக் கடினத்தில் இருந்து எளிமையை உணரும் விதமாக அமைகிறது.

3.0 விதிவருமுறை

இலக்கணத்தின் எந்தப் பகுதியைச் சொல்லிக் கொடுக்க வேண்டுமோ அந்தப்


பகுதியை விளக்கும் பல உதாரணங்களை முதலில் கரும்பலகையில் எழுதி விளக்கி
அவற்றினின்று இலக்கண விதியை மாணாக்கரிடமிருந்து வரவழைக்கும் முறையே
விதிவருமுறை ஆகும். இம்முறை இலக்கணம் சொல்லிக் கொடுக்கச் சிறந்த முறை என்பது
அறிஞர்களின் கருத்தாகும். இம்முறையில் சொல்லிக் கொடுக்கும் பொழுது மாணாக்கர்கள்
தமக்குத் தெரிந்தவற்றிலிருந்து தெரியாததை நோக்கிச் செல்லும் தன்மை, எளிமையிலிருந்து
அருமையை உணரும் விதமாக அமைகின்றன. உதாரணமாகக் கிளி, ஆடு, முருகன், மரம்,
மலை, கல், மனிதன் போன்ற பெயர்களைக் கரும்பலகையில் எழுதிப் போட்டு,
மாணாக்கர்களை வாசிக்கச் செய்தல் வேண்டும். ஒவ்வொரு சொல்லும் எதைக் குறிக்கின்றது
என்று கேட்டு, அவர்களிடம் விடையை வருவிக்க வேண்டும். மாணாக்கர் முருகன் என்ற
சொல் மனிதன் பெயரைக் குறிக்கின்றதென்றும், ஆடு என்பது மிருகத்தைக்
குறிக்கின்றதென்றும் கூறுவார்கள். இதிலிருந்தே பெயர்ச் சொல், மற்றும் அஃறிணை,
உயர்திணைச் சொற்களையும் விளக்கலாம். இவ்வாறே வினை, இடை, உரி
போன்றவற்றையும் விவரிக்கலாம். இங்ஙனம் பல உதாரணங்களிலிருந்து ஒரு விதியை
வரவழைத்தலுக்கு விதி வரவழைக்கும் முறை என்று பெயர்.
விளக்கம் தருதல்
அணுகுமறையையே
அடிப்படையாகக்
கொண்டுள்ளது

ஓர்மை

ஆசிரியரை
மையமாகவே கொண்டு
கையாளப்படுகின்றன.

4.0 விதிவிளக்கு முறை, விதிவருமுறை இரண்டிற்குமான ஓர்மை

விதிவிலக்கு முறை, விதிவருமுறை இரண்டும் கற்பித்தலின் போது விளக்கம் தருதல்


அணுகுமறையையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதன் காரணம், கற்பிக்க வேண்டிய
அனைத்தையும் வினாக்களைக் கொண்டே கற்பிக்க இயலாது. ஒரு சமயம், வினாக்களை
விடுத்து மாணாக்கர்களை விடையிறுக்கும்படி செய்வதும் உண்டு; பிறிதொரு சமயம்,
ஆசிரியரே சொல்ல வேண்டியவற்றைக் கோவையாக எடுத்துக் கூறுவதும் உண்டு. இவ்வாறு
ஆசிரியர் அழகுற எடுத்துக் கூறி விளக்குவதால் கற்பிக்கப்படும் விதியை மாணவர்கள்
முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும், இவ்விரு அணுகுமுறைகளுமே ஆசிரியரை மையமாகவே கொண்டு


கையாளப்படுகின்றன. விளக்கம் தருதல் இவ்விரண்டு அணுகுமுறைகளுக்கும்
அடிப்படையாக அமைவதால், ஆசிரியரின் பங்கே அதிகமாக இருக்கையில்
வழிக்காட்டியாக அமைகின்றனர்.

5.0 விதிவிளக்கு முறை, விதிவருமுறை இரண்டிற்குமான எதிர்வுக் கருத்துகள்


விதிவிளக்கு முறை, விதிவருமுறை இரண்டும் சில ஒற்றுமைகளை கொண்டிருந்தாலும்
சில விடையங்களில் மாறுப்பட்ட தன்மைகளையே கொண்டுள்ளன. காட்டாக, விதிவிளக்கு
முறையானது பொது விதியிலிருந்து எடுத்துக் காட்டுகளுக்குப் போகின்றது. ஆனால்,
விதிவருமுறையோ எடுத்துக்காட்டுகளினின்று பொதுவிதிக்குப் போகின்றது. விதிவிளக்க
முறையில் மாணாக்கர்கள் ஒன்றையும் கண்டறிவதில்லை. முன்னர் ஒருவர் கண்டு பிடித்ததை
எடுத்துக்காட்டுகளில் பொருத்திப் பார்ப்பதுதான் இவர்களின் வேலை. விதிவருமுறையில்
மாணவர்களால் புதியவற்றை கண்டறிய இயலுகிறது. இதன் காரணம், தாமாகக் கண்டறிந்த
விதிகளை அவர்கள் மறக்கவே இயலாது. இதனால் மாணாக்கர்களுடைய சிந்தனையாற்றல்
வளர்வதுடன் விதிகளின் கருத்தும் நன்கு மனத்தில் பதியும். இவ்வாறு கண்டறிந்த விதியை
மேலும் சில எடுத்துக்காட்டுகளுடன் பொருத்திக் கற்றால் இன்னும் இக்கருத்து
நன்கு வலியூறும். அடுத்ததாக, விதிவிளக்க முறையானது விரைவாகப் போகும், காலச்செலவு
குறைவு; விதிவருமுறையோ மெதுவாகச் செல்லும்; காலச் செலவு அதிகமாகும்.

எனவே, எமது பார்வையில் விதிவிளக்கு முறையே அதிகமான நேரங்களில்


இலக்கணத்தை கற்பிக்க உதவும். காரணம், இம்முறையின் மூலம் மாணவர்கள் கற்பித்தலில்
தெரிந்ததைலிருந்து தெரியாததற்குச் செல்லும் முறையில் அமைந்துள்ளது. இது ஏதுவான
உளவியல் முறையாகக் கருதப்படுகிறது. ஆகவே, விதிவருவித்தல் முறையிலேயே கற்பித்தல்
வேண்டும். இருப்பினும், எல்லாப் பகுதிகளையும் இம்முறையில் கற்பித்தல் இயலாது. சில
பகுதிகளை விதிவிளக்கு முறையிலும் கற்பிக்க வேண்டும். இவ்வாறு கற்பித்தவற்றிற்கு
மேலும் சில எடுத்துக்காட்டுகளை மாணாக்கர்களிடமிருந்து வருவித்துக் கற்பித்தவற்றை
வலியுறச் செய்தல் வேண்டும். எந்த முறையில் கற்பித்தாலும் வினா-விடை முறையைத்
தக்கவாறு பயன்படுத்தினால் தான் மாணாக்கர் உற்சாகமாகக் கற்பர்.

6.0 முடிவு

ஒவ்வொரு மொழியும் தனக்கெனச் சில சிறப்பியல்புகளைக் கொண்டு திகழும்.


அவற்றை மாணவர்களை அறியச் செய்தும், மொழியின் பல்வேறு கூறுகளை
எடுத்தியம்பியும் இலக்கணத்தின் மீது ஆர்வம் ஏற்படச் செய்து, இன்றைய மொழி நிலைக்கு
வேண்டாதனவும் உணர்வதற்கு அரியனவுமான இலக்கண விதிகள் பாடத் திட்டத்தில்
திணிக்கப்படுவதைத் தவிர்த்து மாணவர்கள் இலக்கணத்தை விரும்பிப் படிக்கும் சூழலை
ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்.
நாள் பாடத்திட்டம் (முழுமைப்பயிற்றல்)

பாடம் : தமிழ்மொழி
நாள் : 14/02/2023 (செவ்வாய்கிழமை)
ஆண்டு : 1 பாரதியார்
மாணவர் வருகை : 23/24
கருப்பொருள் : இயற்கை
தலைப்பு : மழை
நேரம் : 1 மணி நேரம் (காலை 9:30 – 10:30)
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் முன்னரே வாக்கியங்களை உருவாக்கி எழுதி
உள்ளனர்.

உள்ளடக்கத்தரம் : 5.4 வாக்கிய வகைகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

கற்றல் தரம் : 5.4.3 செய்தி வாக்கியத்தை அறிந்து கூறுவர்; எழுதுவர்.


பாடநோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்
அ. செய்தி வாக்கியத்தை அறிந்து கூறுவர்.
ஆ. செய்தி வாக்கியத்தை கண்டரிந்து எழுதுவர்.
சிந்தனைத்திறன் : அறிவோட்டவரை
விரவிவரும் கூறு : 1. இயற்கை ஈடுபாடு (பல்வகை நுண்ணறிவாற்றல்)

தற்காலப் பயிற்றியல் : 1)தகவல் தொழில்நுட்ப அறிவு - (நழவம் மற்றும் காணொலி


பயன்பாடு )
நடைமுறை :

பயிற்றுத்துணைப்பொருள் : மடிக்கணினி, நீர்மப்படிக உருகாட்டி (LCD), திறமுனைப் படைப்பி


(PP Presentation)
படி / பாடப்பொரு கற்றல் கற்பித்தல் குறிப்பு
நேரம் ள் நடவடிக்கை

பீடிகை மழை 1. ஆசிரியர்


(காணொலி) மாணவர்களை நலம்
விசாரித்தல்.
(± 4
நிமிடம்) 2. ஒளிபரப்பப்படும் மழை
தொடர்பான
காட்சியில் முறைதிறம்:

காணப்படும்
 வகுப்புமுறை
தகவல்களை
மாணவர்கள்
செவிமடுத்தல். பயிற்றுத்துணைப்பொரு
ள்:
3. மழை தொடர்பாகக்
கேள்விகள் கேட்டல்.  நீர்மப்படிக உருகாட்டி

அ. காணொலியில்  திறமுனைப்படைப்பி
ஒளிப்பரப்பட்ட செய்திகள்
யாவை?

ஆ. மழை தொடர்பான
உங்கள் அனுபவங்களைக்
கூறுங்கள்?

4. மழையைப் பற்றி
மாணவர்கள் அறிந்த
தகவல்களைக் கூறுதல்.

5. இன்றைய பாடத்திற்கு
மாணவர்களை
இட்டுச்செல்லுதல்.

படி 1 மழை 1. ஆசிரியர் மழை


(± 13 (வாக்கியம்) தொடர்பான பல்வகை
நிமிடம்) வாக்கியங்களை
மாணவர்களுக்குக்
காண்பித்தல்.

2. மாணவர்கள்
அவ்வாக்கியங்களை
உரக்க வாசித்தல்.

3. ஆசிரியர் முறைதிறம்:
தகவல்களைப் பெறக்
 வகுப்புமுறை
கேள்விகள் கேட்டல்.

அ. எந்த வாக்கியம்
தகவலைத் தருகின்றது? பயிற்றுத்துணைப்பொரு
ள்:
ஆ. ஒவ்வொரு
வாக்கியத்திற்கும் என்ன  நீர்மப்படிக உருகாட்டி

வேறுபாடு உண்டு?  திறமுனைப்படைப்பி

4. மாணவர்கள், தகவல்கள்
அடங்கிய
வாக்கியங்களை
அடையாளங்கண்டு
கூறுதல்.

படி 2 மழை 1. மின்னட்டையில்


எழுதப்பட்ட
(± 15 (வாக்கியம்)
தகவல்களைக்
நிமிடம்)
கொண்ட
வாக்கியங்களை
ஆசிரியர்
காண்பித்தல்.

2. மாணவர்கள்
அவ்வாக்கியங்க
ளைச் சரியாக
வாசித்தல். பயிற்றுத்துணைப்பொரு

3. ஆசிரியர், செய்தி ள்:

வாக்கியம்  மின்னட்டை
தொடர்பான
விரவிவரும் கூறு:
கேள்விகள்
தொடுத்தல்.  ஆக்கம் புத்தாக்கம்

அ. வாக்கியத்தில்
காணப்படும் நிறுத்தக்குறி
முறைதிறம்:
யாது?
 குழுமுறை
ஆ. எத்தனை
தகவல்கள் வாக்கியத்தில்
உள்ளன?

இ. வாக்கியம்
எவ்வாறு முழுமை
பெற்றிருக்கின்றது?

4. இவ்வினாக்களுக்கு
விடையளிக்கும் வண்ணம்
மாணவர்கள்

குழுவில்
கலந்துரையாடி விடை
காணுதல்.

5. அவ்வாக்கியங்களின்
தன்மைகளைக் குழுமுறையில்

கலந்துரையாடி எழுதி
வாசித்தல்.
4. ஆசிரியரும்
மாணவர்களும்
கலந்துரையாடி
செய்தி
வாக்கியங்களின்
தன்மைகளைப்
பட்டியலிட்டுக்
கூறுதல்.

படி 3 இயற்கை 1. மூவர் கொண்ட


வளம் பல்நிலை
(± 14
மாணவர்கள்
நிமிடம்)
குழுவில்
அமரச்செய்தல். முறைதிறம்:

2. செய்தி  குழுமுறை
வாக்கியங்களின்
பயிற்றுத்துணைப்பொரு
தன்மைகளைத்
ள்:
துணையாகக்
கொண்டு மூன்று  வெண்டாள்

செய்தி
வாக்கியங்கள்
உருவாக்கி
வெண்டாளில்
எழுதுதல்.

3. எழுதிய
வாக்கியங்களை
உரக்க வாசிக்கச்
செய்தல்.

4. ஆசிரியரும்
மாணவரும்
கலந்துரையாடி
வாக்கியங்களைச்
சரிசெய்தல்.

5. ஆசிரியர் செய்தி விரவிவரும் கூறுகள்:


வாக்கியத்தின்
 இயற்கை ஈடுபாடு
தன்மைகளை
வலியுறுத்திச் (பல்வகை

செய்தி வாக்கியம் நுண்ணறிவாற்றல்)

பற்றிய தெளிவான சிந்தனைத் திறன்:


விளக்கம் தருதல்.
 அறிவோட்டவரை

1. ஆசிரியர்
மாணவர்களுக்குப்
பயிற்சித்தாளை
வழங்குதல்.
மதிப்பீ
முதல்நிலை மாணவர்கள்:
டு
 கொடுக்கப்பட்ட
(±10 இயற்கை
சொற்களைத் முறைதிறம்:
நிமிடம்)
துணையாகக்கொணடு  தனியாள்முறை
குறைந்தது மூன்று
செய்தி
வாக்கியங்களை
எழுதுதல்.

இடைநிலை மாணவர்கள்:

 பொருத்தமான
சொற்களைக் கொண்டு
கொடுக்கப்பட்ட
வாசிப்புப் பத்தியை
நிறைவு செய்தல். பண்புக்கூறு:

கடைநிலை மாணவர்கள்:  அன்புடைமை


 கொடுக்கப்பட்ட
வாக்கியங்களுள்
செய்தி
வாக்கியங்களைத்
தெரிவுசெய்து
எழுதுதல்.

2. பலவீனமான
மாணவர்களுக்கு
ஆசிரியர்
வழிகாட்டுதல்.

3. ஆசிரியரும்
மாணவரும்
கலந்துரையாடி
வினாக்களுக்கேற்ற
சரியான
விடைகளை
எழுதுதல்.

1. செய்தி
வாக்கியங்களின்
தன்மைகளை
மாணவர்கள்
வலியுறுத்திக்
கூறுதல்.

இயற்கை 2. சில செய்தி


வாக்கியங்களைச்
பாட
சரியாக வாசித்தல்.
முடிவு
3. பிழை இருப்பின்
(±4
ஆசிரியருடன்
நிமிடம்)
கலந்துரையாடித்
திருத்துதல்.

தொடர் வளப்படுத்தும்
நடவடிக்கை நடவடிக்கை

(வீட்டுப்பாட மாணவர்கள் செய்தி

ம்) வாக்கியங்களை உருவாக்கி,


அவற்றைச் செய்தி
வாசிப்பாளரைப்போல
வாசித்துவர பணித்தல்.

குறைநீக்கல்
நடவடிக்கை

மாணவர்கள் படத்தின்
துணைகொண்டு செய்தி
வாக்கியம் எழுதிவர
பணித்தல்.
நாள் பாடத்திட்டம் (நுண்மைப்பயிற்றல்)

பாடம் : தமிழ்மொழி

நாள் : 14/02/2023 (செவ்வாய்கிழமை)

ஆண்டு : 1 பாரதியார்

மாணவர் வருகை : 23/24

கருப்பொருள் : இயற்கை

தலைப்பு : மழை

நேரம் : 13 நிமிடம் (காலை 10:00 – 10:15)

மாணவர் முன்னறிவு : மாணவர்கள் முன்னரே வாக்கியங்களை உருவாக்கி எழுதி


உள்ளனர்.

உள்ளடக்கத்தரம் : 5.4 வாக்கிய வகைகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

கற்றல் தரம் : 5.4.3 செய்தி வாக்கியத்தை அறிந்து கூறுவர்; எழுதுவர்.

பாடநோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்

அ. செய்தி வாக்கியத்தை அறிந்து கூறுவர்.

ஆ. செய்தி வாக்கியத்தை கண்டரிந்து எழுதுவர்.

சிந்தனைத்திறன் : அறிவோட்டவரை
விரவிவரும் கூறு : 1. இயற்கை ஈடுபாடு (பல்வகை நுண்ணறிவாற்றல்)

தற்காலப் பயிற்றியல் : 1) தகவல் தொழில்நுட்ப அறிவு - (நழவம் மற்றும்


காணொலி பயன்பாடு )
நடைமுறை

பயிற்றுத்துணைப்பொருள் : மடிக்கணினி, நீர்மப்படிக உருகாட்டி (LCD), திறமுனைப் படைப்பி


(PP Presentation)

படி 1 நிமிடம் முறைதிறம்:


(± 13  வகுப்புமுறை
நிமிடம்) மழை
(வாக்கியம் பயிற்றுத்துணைப்பொரு
) 5-6 ஆசிரியர் மழை ள்:
தொடர்பான பல்வகை  நீர்மப்படிக உருகாட்டி
வாக்கியங்களை தயார்
நிலையில் வைத்தல்.  திறமுனைப்படைப்பி

ஆசிரியர் வாக்கியங்களை
6-7
திரையிடுதல்.

7-8 மாணவர்கள்
வாக்கியங்களை
உற்றுநோக்குதல்.

மாணவர்கள்
8-9 அவ்வாக்கியங்களை
மனதுக்குள் வாசித்தல்.

9 - 10 மாணவர்கள்
அவ்வாக்கியங்களை
உரக்க வாசித்தல்.

10 - 11 ஆசிரியர் மாணவர்கள்
வாசிப்பதை சரிப்பார்த்தல்

ஆசிரியர் தகவல்களைப்
11 - 12
பெறக் கேள்விகள்
கேட்டல்
அ. எந்த வாக்கியம்
தகவலைத் தருகின்றது?

மாணவர்கள் கேள்விக்கு
12 – 13 பதிலளித்தல்

13 - 14
ஆசிரியர் பதிலை
சரிப்பார்த்தல்

14 - 15
ஆசிரியர் மீண்டும்
ஒருமுறை கேள்வி
கேட்டல்
ஆ. ஒவ்வொரு
வாக்கியத்திற்கும் என்ன
வேறுபாடு உண்டு?
15 - 16
மாணவர்கள் கேள்விக்கு
பதிலளித்தல்

16 - 17
ஆசிரியர் பதிலை
சரிப்பார்த்தல்

17 - 18
மாணவர்கள், தகவல்கள்
அடங்கிய வாக்கியங்களை
அடையாளங்கண்டு
கூறுதல்.
சிந்தனை மீட்சி

நான் தயாரித்துள்ள இந்நாள் பாடத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் கற்றல் தரத்தை

முழுமையாக அடைந்துள்ளனர் என்பதை உறுதிச் செய்துக்கொள்ள முடியும். இந்நாள்

பாடத்திட்டத்தில் ஒவ்வொரு படியும் திட்டமிட்டவாறே செயல்படுத்தப்படும். இதன் மூலம்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் மாணவர்கள் பெரும்பாலோர் முழு ஈடுபாட்டுடன்

பங்கேற்றனர். மேலும், மாணவர்கள் பெரும்பாலோரால் செய்தி வாக்கியத்தின் தன்மைகளைச்

சரியாகக் கூறவும் வாக்கியங்களை உருவாக்கி எழுதவும் முடியும். இந்த நாள் பாடதிட்டம்

இன்றைய பாடத்தில் எனக்கு மனநிறைவை அளிக்கும் என்று பெரிதும் நம்பிகின்றேன்.

வளப்படுத்தும் நடவடிக்கை

மாணவர்கள் செய்தி வாக்கியங்களை உருவாக்கி, அவற்றைச் செய்தி

வாசிப்பாளரைப் போல வாசித்தலைப் போல நாள் பாடக்குறிப்பை தயார் செய்திட

வேண்டும். மாணவர்கள் கற்றல் தரத்தை முழுமையாக அடைய வாய்ப்பு குறைவு.

மாணவர்களுள் சிலர் முழு ஈடுபாட்டைக் காட்டமல் இருப்பதற்கும் விளையாட்டுத்தனமாக

கைருப்பதற்கும் வாய்ப்புண்டு.

மேற்கொள்
முனைவர் எஸ்.குமரன், ம. அ. (2007). தமிழ்வழிக் கற்றல் கற்பித்தலில் - புதிய உத்திகள் (பாகம்
3). சென்னை: கலைஞ்சன் பதிப்பகம்.

முனைவர் எஸ்.குமரன், ம. அ. (2007). தமிழ்வழிக் கற்றல் கற்பித்தலில் - புதிய உத்திகள்


(பாகம் 1). சென்னை: கலைஞ்சன் பதிப்பகம்.

Selvaganapathi, (2000). Nannul Thelivurai, Karpagam Pathippakam, தஞ்சாவூர்.

Palanivelu. G, (2011). Senthamil Karpithal, Nathi Publications, Thanjavur.

Tamil Nadu Government, (2019). School Education Department, Higher Secondary First Year,
General Tamil (Book), Second Edition.

You might also like