Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

அனுப்புனர்:

K. மோகன்ராஜ் த/பெ. குப்புசாமி (வயது 35)


வடக்கு வதி
ீ (ஆரோவில் பேக்கரி அருகில்)
குயிலப்பாளையம் கிராமம்,
வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்.
செல்: 9786372020

பெருநர்:
உயர்திரு. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள்,
விழுப்புரம்.

ஐயா,

வணக்கம் ஐயா, நான் எனது சொந்த கிராமமான மேற்கண்ட


முகவரியில் 35 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். எனக்கு திருமதி. அஜந்தா
என்கிற மனைவியும், லித்தின் (7 வயது), கவின் (4 வயது) என்கிற 2 ஆண்
குழந்தைகளும் உள்ளனர். எனது தாயார் திருமதி. அமுதா க./பெ. குப்புசாமி,
என்பவர் கடந்த 10, 15 வருடங்களாக எங்கள் ஊரில் சுமார் 50 பேர்களிடம்
சீட்டுப்பணம் பிடித்து வந்தார். அவரிடம் சீட்டு கட்டி வந்தவர்களில் சில பேர்
சீட்டு எடுத்துவிட்டு சீட்டு பணம் கட்டாமல் ஏமாற்றி விட்டனர். இதனால்
எனது தாயாரிடம் சீட்டு கட்டியவர்கள் சில பேர் என் தாயாரை சீட்டு பணம்
கேட்டு பிரச்சினை செய்யவே, எனது தாயார் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு
தலைமறைவாகிவிட்டார். அந்த சமயத்தில் நாங்கள் ஆரோவில் காவல்
நிலையத்தில் புகார் அளித்தோம். காவல் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து,
சீட்டு பணம் பிடித்த பிரச்சனையில் எனக்கும் எனது தாயாருக்கும் எவ்வித
சம்மந்தமுமில்லை என விசாரணையில் தெரியவந்து, “உனது அம்மா
இருக்கும் இடம் தெரிந்தால் காவல் நிலையத்திர்க்கு தகவல் கொடுக்க
வேண்டும்” என்று சீட்டு கட்டியவர்கள் முன்னிலையில் சொல்லி
அனுப்பினார்கள், இருப்பினும் வெண்மதி குடும்பத்தார் மண்ணெண்ணெய்
ஊற்றிக்கொண்டு வந்து எங்களையும் சேர்த்து எரித்து விடுவோம் என
மிரட்டினார்கள். மீ ண்டும் காவல் நிலையம் நாங்கள் சென்ற பொழுது சீட்டு
கட்டியவர்கள், குறிப்பாக வெண்மதி குடும்பத்தார் என்னையும் எனது மனைவி
மற்றும் குழந்தைகளையும் தொல்லை செய்ய கூடாது என்றும் மறுபடியும்
காவல் அதிகாரிகள் வெண்மதி குடும்பத்தாரிடம் எச்சரித்து அனுப்பினார்கள்.

நானும் என்னால் முடிந்த வரையில் என் தாயாரை உறவினர் வடுகள்



மற்றும் பல இடங்களில் தேடி பார்த்தேன். ஆனாலும் எந்தவித பலனும்
இல்லை.

இந்நிலையில் 26.02.2023 அன்று இரவு சுமார் 7 மணியளவில் எங்கள் ஊரை


சேர்ந்த 1. வெண்மதி, க/பெ. மணி, 2. கணேஷ். த/பெ. மணி, ஆகியோர்கள் என்
வட்டில்
ீ திடீர் என அத்து மீ றி நுழைந்து வட்டினுள்
ீ குறுக்கே காலை
நீட்டியபடி படுத்துக்கொண்டு கணேஷ் என்பவர் என்னையும் என் மனைவி
மற்றும் குழந்தைகளையும் சத்தம் போட்டு மிரட்டினார். மேலும் என்னை
பார்த்து “ டேய் பொட்ட பையா உங்கம்மா ஏமாற்றிட்டு எங்கயோ ஓடிட்டா,
நானாயிருந்தா தூக்கு போட்டு தொங்கி இருப்பேன், செத்துப்போயாண்டா”,
என்றும், “என்னைக்கு இருந்தாலும் உனக்கு என் கையால தாண்டா சாவு“
அப்படி என்றும், “ போலீஸ்-ல எங்க மேல ஏதாவது கேஸ் கொடுத்த, நீ என்ன
கதி ஆவேன்னு பாரு” என்றும் சொல்லி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு
எங்களை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
அங்கே இரவு பணியில் இருந்த காவலர்கள் “அவர்களை சும்மா சும்மா
தொந்தரவு செய்யகூடாது” என்று எச்சரித்து அனுப்பினார்கள்.

அய்யா, மேற்கண்ட வெண்மதி குடும்பத்தாரால் எங்கள் குடும்பத்திற்கும்


எங்களது உடமைகளுக்கும் எந்த நேரத்திலும் ஆபத்து நேரிடுமோ என்ற
அச்சத்திலும், நிம்மதியற்றும் தினம் தினம் செத்து செத்து வாழ்கின்றோம்.
ஆதலால் தாங்கள் மேற்கண்டவர்கள் மீ து தக்க நடவடிக்கை எடுத்து
என்னையும் என் குடும்பத்தாரையும் காத்து பாதுகாப்போடும், மன
நிம்மதியோடும் வாழ வழிவகை செய்யுமாறு தங்களை மிகவும்
தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்.

நாள்: இப்படிக்கு,

இடம்:

You might also like