Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 20

PROJECT PROPOSAL

திட்ட
முன்மொழிவு

Cashew Gardening-Intercrops

முந்திரி (கஜூ)
தோட்டமும்
ஊடுபயிர்களும்

Project Proposal – Cashew Gardening - Intercrops | திட்ட முந்திரி


முன்மொழிவு – 1
தோட்டமும்-ஊடுபயிர்களும்
SELF INTRODUCTION | சுய அறிமுகம்
1. Project Name | திட்டத்தின் பெயர்:

2. Proposed Work | முன்மொழியப்பட்ட பணி:


 குறைந்த மூலதனத்தில் நிறைந்த இலாபம், சுலபமான தொழில்.
 சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்புள்ள தாவர வகை.

3. Project Cost | திட்ட செலவு:


4. Source of Fund| நிதி ஆதாரம்:
Area | பரப்பளவு:
Investment | முதலீடு:
Initial Investment | ஆரம்பகட்ட முதலீடு:

5. Period | காலம்: 2020-2021 2021-2022 or

6. Implementing Agency | செயல்படுத்தும் நிறுவனம்:

7. Name & Address of Applicant | விண்ணப்பதாரர் பெயர் & முகவரி:


பெயர்:
முகவரி:
தொலைபேசி:
இமெயில்:

Project Proposal – Cashew Gardening - Intercrops | திட்ட முந்திரி


முன்மொழிவு – 2
தோட்டமும்-ஊடுபயிர்களும்
பிறப்பு திகதி dd/mm/yyyy: 

தேசிய/வாகன அடையாள அட்டை இல:


ஆண்/ பெண்/வேறு:

INTRODUCTION | அறிமுகம்

முந்திரி (கஜூ):

முந்திரி அல்லது மரமுந்திரி (Anacardium


occidentale) என்பது Anacardiaceae குடும்பத்தைச்
சேர்ந்த கஜூ என்று அழைக்கப்படும் முந்திரி
கொட்டைகளைத் தரும் ஒரு மரம் ஆகும்.
அனகார்டியம் என்ற பெயர் முந்திரிப்பழத்தின்
உருவத்தை விளக்குகிறது. அன என்றால் மேல்
நோக்கியது என பொருள். கார்டியம் என்றால்
இதயம் என பொருள். ஆங்கிலத்தில் CASHEW
என பெயர் வரக்காரணம் போர்த்துகீசிய மொழியில்
CAJU என்ற சொல்லில் இருந்து வந்தது.

முந்திரி மரம் பிரேசிலுக்கு சொந்தமானது. இந்தியாவுக்கு 16 ஆம் நூற்றாண்டில்


மொசாம்பிக் மற்றும் போர்த்துகீசியர்களால் கோவா கடற்கரையில் அரிப்புகளை
தடுப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில், தோட்டங்களில் முந்திரி
பயிர்ச்செய்கை ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள பிற
நாடுகளுக்கும் பரவியது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, முந்திரிப் பருப்புகளை
பதப்படுத்தும் மையமாக இந்தியா மாறியது, அவை அங்கிருந்து அமெரிக்கா மற்றும்
ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. 1960 களில் இருந்து, கிழக்கு
ஆபிரிக்காவிலிருந்து முந்திரி பொருட்கள் பெரும்பாலும் இந்தியாவுக்கு ஏற்றுமதி
செய்யப்பட்டு அங்கு பதப்படுத்தப்பட்டன.

1970 களில் ஆப்பிரிக்க நாடுகள் குறிப்பாக மொசாம்பிக் மற்றும் தான்சானியா ஆகியவை


முந்திரிப் பருப்புகளில் பெரும்பகுதியை உற்பத்தி செய்தன. இதற்கிடையில், இந்தியாவில்
Project Proposal – Cashew Gardening - Intercrops | திட்ட முந்திரி
முன்மொழிவு – 3
தோட்டமும்-ஊடுபயிர்களும்
உற்பத்தி அதிகரித்துள்ளது, 1990 களில் இந்தோனேசியா, வியட்நாம் போன்ற ஆசிய
நாடுகளிலும் இது விரிவடைந்துள்ளது. 2016 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, வியட்நாம்,
நைஜீரியா, இந்தியா மற்றும் ஐவரி கோஸ்ட் ஆகியவை அதிக அளவில் உற்பத்தி
செய்கின்றன. சிறிய மேற்கு ஆபிரிக்க மாநிலங்களான ஐவரி கோஸ்ட், பெனின் மற்றும்
கினியா-பிசாவு ஆகியவையும் முந்திரி பயிர்ச்செய்கையை விரிவுபடுத்தியுள்ளன. கானாவில்
மேலும் செயலாக்கத்தை ஊக்குவிக்கவும் முடிந்தது. இன்று வெப்பமண்டல நாடுகள்
பலவற்றில் முந்திரி வளர்க்கப்படுகிறது. வியட்நாம், நைஜீரியா, இந்தியா, பிரேசில்,
இந்தோனீசியா ஆகிய நாடுகளில் முந்திரி அதிகம் பயிரிடப்படுகிறது. இந்தியாவும்
வியட்நாமும் மிகப்பெரிய உற்பத்தியாளர்களாகக் கருதப்படுகின்றன.

முந்திரிப்பழம்
முந்திரியில் முந்திரிப்பழமென அழைப்பது உண்மையில் பழமல்ல. அது போலிப்பழம்
எனவும் அழைக்கப்படும். இது பூவின் சூலகப் பகுதியில் இருந்து உருவாவதில்லை. பூவின்
அடிப்பகுதியில் உள்ள தடித்த பூக்காம்புப் பகுதியே இவ்வாறு பேரிக்காய் உருவத்தில்
விருத்தியடைகின்றது. இதனை முந்திரி ஆப்பிள் எனவும் அழைப்பர்.

அதாவது முந்திரியின் உண்மைப் பழமானது தனி ஒரு விதையைக் கொண்ட பழமாகும்.


முந்திரியில், முந்திரி ஆப்பிளின் அடியில் சிறுநீரக வடிவில் அல்லது குத்துச்சண்டையில்
பயன்படுத்தப்படும் கையுறை வடிவில் விருத்தியடையும் அமைப்பே உண்மையான பழம்
ஆகும். இதன் உள்ளே இருக்கும் உண்ணக்கூடிய பகுதி கஜூக்கொட்டை என
அழைக்கப்படுகின்றது. அதாவது முந்திரியின் உண்மைப்பழமானது தனி ஒரு விதையைக்
கொண்ட பழமாகும்.

முந்திரிப்பழம் என அழைக்கப்படும் போலிப்பழமானது சுமார் 2–2.5 - 1.5 செ.மீ. அளவில்


பச்சை நிறத்திலிருந்து பழுக்கும் தருவாயில் தோராயமாக 5-10 செ.மீ நீளம் வரை
வளர்ந்து மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்துடன் காணப்படும் பேரிக்காய் அல்லது மிளகு
வடிவிலான, அடர்த்தியான பழ தண்டு “முந்திரி ஆப்பிள்” என்று அழைக்கப்படுகிறது.
முந்திரிப்பழம் சதைப்பகுதியில் அதிக அளவு சாறு இருப்பதால் அனைவராலும் விரும்பி
உண்ணப்படக் கூடியதாகவும், சுவையாகவும், இனிமையாகவும், புளிப்பாகவும் இருப்பதுடன்
இனிய வாசனையும் தரும். முந்திரிப்பழத்திலிருந்து சாறும் தயாரிக்கப்படுகின்றது. இதை
மற்ற இடங்களுக்கு கொண்டு செல்வது கடினமாகும்.

நன்மை:
முந்திரி பயிர்செய்கைக்கு அதிக பராமரிப்பு தேவை இல்லை. மழை பெய்யும் போது
உரமிடல் மற்றும் பூ பூக்கும் நேரத்தில் பூச்சி மருந்து தெளித்தல் வேண்டும். இவை
இரண்டும் வருடத்திகு ஒரு முறை மட்டுமே.

Project Proposal – Cashew Gardening - Intercrops | திட்ட முந்திரி


முன்மொழிவு – 4
தோட்டமும்-ஊடுபயிர்களும்
ECONOMIC SIGNIFICANCE OPPORTUNITIES &
MARKETING | பொருளாதார முக்கியத்துவம்
சந்தைபடுத்தல், வாய்ப்புகள்
முந்திரிக்கொட்டை இதை கப்பல் வித்தான் கொட்டை என்றும் கூறுவர். வணிகத்திற்காக
வந்த பிற நாட்டினர் இதன் சுவையால் ஈர்க்கப் பட்டு கப்பலை விற்று இதை உண்டதாக
கூறுவர்.

முந்திரியின் பயன்கள்:
வறுக்கப்பட்ட முந்திரிக்கொட்டைகள் உலகில் பலராலும் விரும்பி உண்ணப்படுவதுடன், கறி
சமைக்கவும், ருசியைச் சேர்ப்பதற்காக இனிப்பு வகை உணவுகளுடன் சேர்க்கப்பட்டும்
பயன்படுத்தப்படுகின்றது.
சிற்றுணவான முந்திரிப் பருப்பு, ஐஸ் கிரீம், கேக், மிட்டாய் வகைகளைத் தயாரிக்கப்
பயன்படுகிறது. இதில் புரதம் மிகுந்தும் சர்க்கரை குறைந்தும் உள்ளதால், ஊட்ட
உணவுகளிலும் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுகிறது. முந்திரிப்பழம் முந்திரி சாறு
மற்றும் ஜாம் ஆக பதப்படுத்தப்படுகிறது. பிரேசிலில், முந்திரிப்பழம் கஜுனா என்ற பானம்
தயாரிக்கப் பயன்படுகின்றன, இது மருத்துவ பண்புகளைக் கொண்டிருப்பதாகக்
கூறப்படுகிறது. இந்தியாவின் கோவாவில், முந்திரி ஃபெனி என்று அழைக்கப்படும்
ஸ்க்னாப்ஸ் தயாரிக்கவும் இந்த சாறு பயன்படுத்தப்படுகிறது.

Project Proposal – Cashew Gardening - Intercrops | திட்ட முந்திரி


முன்மொழிவு – 5
தோட்டமும்-ஊடுபயிர்களும்
முந்திரி பழத்தின் கஜூ கொட்டையின் ஓடுகளிலிருந்து எண்ணெய் (Cashewnut shell liquid)
எடுக்கப்படுகிறது. எண்ணெய் தொழில் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும்
பயன்படுத்தப்படுகிறது. மரம் மற்றும் காகிதத்தை புழு அரிக்காமல் பாதுகாப்பதாக
கூறப்படுகிறது, முந்திரிப்பழங்களை வெயில்ல காயவெச்சு வற்றலாக்கி வற்றலைத் தண்ணில
ஊறவெச்சு, அந்தத் தண்ணீரை ஆடு, மாடு, பன்றினு கால்நடைகளுக்குக் குடிக்கக்
குடுக்கலாம்.

ஊட்டச்சத்து மதிப்புகள்:
இதில் மோனோசாச்சுரேட்டட் உள்ளதால் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பின்
அளவை அதிகரிக்கசெய்கிறது. முந்திரி பருப்புகள் ஆன்டிஆக்சிடென்ட்,
மாங்கனீஸ், பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம் போன்ற போன்ற
கனிம தாதுக்களின் நல்ல மூலமாகும், இது எலும்புகளை வலுப்படுத்துவதற்கும் நொதிகளின்
செயல்பாட்டிற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
 பருப்புக்களில் இரும்புச்சத்து உள்ளது, இது இரத்த சிவப்பணுக்களின் முக்கிய
அங்கமான ஹீமோகுளோபினின் முக்கிய பகுதியாகும்.
 வைட்டமின்கள் பி5, பி6, ரிபோஃபிளேவின், தயாமின் உள்ளிட்ட சத்துகள் உள்ளன.
கரையக்கூடிய நார்ச்சத்தும் உள்ளது.
 புற ஊதாக்கதிர்களில் இருந்து பாதுகாப்பைத் தந்து விரைவில் முதுமை தோற்றம்
அடைவதை தடுக்கிறது.
 முந்திரியில் புரோஆந்தோசையனிடின் என்னும் ப்ளேவோனால் மற்றும் ஆன்டி–
ஆக்ஸிடன்ட்டுகளான செலினியம் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இவை
புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கும் மற்றும்
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 முந்திரியில் காப்பர் என்னும் தாதுப்பொருள், முடியின் கருமை நிறத்தைப்
பாதுகாக்கும்.
 அன்றாடம் முந்திரியை சிறிது உட்கொண்டு வந்தால், செரிமான பிரச்சனை
ஏற்படுவதைத் தடுக்கலாம்.
 பற்களின் ஆரோக்கியத்தையும், ஈறுகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
தினமும் சிறிது முந்திரி சாப்பிட்டு வந்தால், இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
அதிலும் பெண்கள் இதனை உட்கொண்டு வந்தால், இறுதி மாதவிடாய்க்கு பின்,
நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும்.
முந்திரி பருப்பில் குறைந்த அளவிலான சியாசாந்தின் உள்ளது. இது கண்ணில் உள்ள
கருவிழி படலத்தை பாதுகாக்க உதவுகிறது. கையளவு முந்திரிப் பருப்புக்களை
உட்கொள்வதால் பசியை நீண்ட நேரத்திற்கு கட்டுப்படுத்த முடியும். முந்திரி பருப்பில்
இதயத்திற்கு நன்மை தரக்கூடிய ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான
ஒலியிக் மற்றும் பால்மிட்டோலெயிக் அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகிறது.
முந்திரி பருப்பில் அதிகமாக உள்ள செலினியம் ஊட்டச்சத்தானது உடலுக்கு நோய்
எதிர்ப்பு திறனை தரவல்ல நொதிகளான குளுடாதயோன் பெராக்ஸிடேஸ் நொதிக்கு

Project Proposal – Cashew Gardening - Intercrops | திட்ட முந்திரி


முன்மொழிவு – 6
தோட்டமும்-ஊடுபயிர்களும்
இணை காரணியாக செயல்படுகிறது. முந்திரிப் பருப்புகளைப் போல அத்தியாவசிய
அமினோ அமிலம் டிரிப்டோபனின் விகிதம் வேறு எந்த உணவிலும் இல்லை.
டிரிப்டோபான் என்பது நரம்பியக்கடத்தி செரோடோனின் உற்பத்தியில் இன்றியமையாத
ஊட்டச்சத்து ஆகும். Tryptophan நறுமண அமினோ அமிலங்களில் ஒன்றாகும். இது
அத்தியாவசியமான அமினோ அமிலங்களில் ஒன்றாகும், எனவே இதை மனித உடலால்
உற்பத்தி செய்ய முடியாது, அதை உணவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். வைட்டமின்
பி6. டிரிப்டோபான் ஆகியவை மனச்சோர்வுக்கு சிகிச்சையளிக்க உதவும்.

சிக்கல்கள்:
சிலருக்கு முந்திரிப் பருப்புகளுக்கு ஒவ்வாமை இருக்கிறது, ஆனால் இந்த ஒவ்வாமை
அரிதானது. முந்திரிப்பழம் மிக மெல்லிய தோலுடையதாகவும், சதைப்பகுதி மிகவும் சாறு
நிறைந்ததாகவும் இருப்பதனால், இதனை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு
எடுத்துச் செல்லல் கடினமாகும். அதனால் சர்வதேச அளவில் வர்த்தகம் செய்ய முடியாது.
அறுவடை முடிந்த உடனேயே இது எனவே அறுவடை முடிந்த உடனேயே விற்பனை
செய்ய படுகின்றது. அல்லது பதப்படுத்தப்படுகின்றது.
இந்த முந்திர்க்கொட்டையைச் சூழவுள்ள கடினமான இரட்டை ஓட்டில் ஒவ்வாமையை
உருவாக்கக் கூடிய, தோலில் நமைச்சலைத் தரக்கூடிய சில பதார்த்தங்களைக்
கொண்டுள்ளது. சரியான முறையில் வறுத்து பதப்படுத்தப்படும்போது, இந்தப் பதார்த்தங்கள்
சில அழிவடைந்துவிடும். ஆனாலும் பதப்படுத்தலின்போது மூடிய அறைக்குள் அதன்
புகை வெளியேறுமாயின் நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே
அவதானத்துடன் செய்யப்பட வேண்டும்.
சந்தைப்படுத்தல் வாய்ப்புகள்:
2018 ஆம் ஆண்டில், உணவு மற்றும் வேளாண் அமைப்பான FAO இன் படி, உலகளவில்
5,932,507 டன் முந்திரி கொட்டைகள் (ஷெல்லுடன்) அறுவடை செய்யப்பட்டன.
மிகப்பெரிய உற்பத்தியாளர் வியட்நாம் மட்டும் 45% அறுவடையை உற்பத்திசெய்தது .
உலகின் அறுவடையில் கிட்டத்தட்ட 66% முழு ஆசிய கண்டத்திலும், 31%
ஆப்பிரிக்காவிலும் உற்பத்தி செய்யப்பட்டது.

தரிசு நிலத்தின் தங்கம் எனப்படும் முந்திரி அதிக அளவில் அந்நிய செலவாணியை


ஈட்டிக்கொடுத்து, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளது. முந்திரிப் பருப்பின்
விலை அதிகம் என்பதால், நம் நாட்டு மக்கள் அதை அளவாகவே பயன்படுத்துவது
வழக்கம். ஆனால், பண்டிகை காலங்களில் இனிப்பு மற்றும் உணவுகளில் முந்திரிப்
பருப்பை பயன்படுத்தாமல் இருப்பதில்லை. மேல்தட்டு மக்கள் மட்டுமே ஓரளவுக்கு
அதிகமாகவே பயன்படுத்துகிறார்கள். ஆனால் வெளிநாட்டவர்கள் அப்படியில்லை.
பெரும்பாலான நாடுகளில் அன்றாட உணவுப் பொருட்களில் முந்திரியும் ஒரு பொருளாக
இருந்து வருகிறது. மேலும், வெளிநாட்டவர்கள் முந்திரியை கேக், ஐஸ்கிரீம் ஆகியவற்றை
தயாரிக்க அதிகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

Project Proposal – Cashew Gardening - Intercrops | திட்ட முந்திரி


முன்மொழிவு – 7
தோட்டமும்-ஊடுபயிர்களும்
“முந்திரியை வெளிநாட்டவர்கள் ஒரு உணவுப்பொருளாக மட்டுமே கருதுகிறார்கள்.
அவர்கள் அதை அதிகம் உட்கொள்கிறார்கள் வெளிநாட்டில் முந்திரிக்கான தேவை
அதிகம் முந்திரியின் சுவை அவர்களுக்குப் பிடித்திருப்பதாலும் ஏற்றுமதி ஆர்டர்கள்
அதிகம் கிடைக்கிறது. உலகளவில் இதன் தேவையைக் கருத்தில் கொள்ளும் போது முந்திரி
பருப்புகள் உற்பத்திக் குறைவாகவே உள்ளது.

முந்திரியின் வகை மற்றும் தரம்:


இந்தியாவிலிருந்து உற்பத்தியாகும் முந்திரிப் பருப்புகள் முழுப் பருப்புகளாக, இரண்டாக,
நான்காக, எட்டாக உடைக்கப்பட்ட பருப்புகளாக ஏற்றுமதி ஆகின்றன. இவை அதன்
வடிவம், நிறம் மற்றும் அளவுகளைப் பொறுத்து தரம் பிரிக்கப்படுகின்றன. விலையும் அதன்
அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. இந்திய அரசாங்கம் இங்கு விளையும்
முந்திரியிலிருந்து வெவ்வேறு தரமுள்ள 33 முந்திரி வகைகளைப் பிரித்திருக்கிறது. இதில் 26
வகைகள் தற்போது ஏற்றுமதிக்கு நடைமுறையில் இருக்கின்றன. கீழே முந்திரிகளின் தரமும்
அதன் பெயரும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

1. W-180: முந்திரிகளின் அரசன் என்றுகூட இதை அழைக்கலாம். காரணம், முந்திரி


வகைகளிலேயே பெரிய அளவுகளில் இருப்பது இந்த வகைதான். பெரிய அளவுள்ள
முந்திரி வகை என்பதாலேயே விலையும் அதிகம்.
2. W-210: இந்த வகை முந்திரிகளை ஜம்போ (Jumbo) முந்திரி என்று அழைப்பார்கள்.
இதுவும் சற்று விலை அதிகமுள்ள தரமான வகை.
3. W-240: இந்த முந்திரி வகையானது அனைத்து தேவைகளுக்கு பயன்படும் வகையிலும்
கிடைக்கக்கூடியது. W-240 வகை முந்திரியையும் பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள்
விரும்புவார்கள்.
4. W-320: இந்த வகை முந்திரியானது உலக அளவில் பிரபலமானது. ஏற்றுமதிக்கு அதிக
தேவையுள்ள முந்திரி இதுதான். இந்த வகை முந்திரி களின் விளைச்சல் இந்தியாவில்
அதிகம்.
5. W-450: சிறிய மற்றும் மலி வான விலையில் கிடைக்கக்கூடிய முந்திரி வகை இது.

AGRICULTURAL MANAGEMENT - SEED,


SEEDLINGS, SOIL & CLIMATE |

Project Proposal – Cashew Gardening - Intercrops | திட்ட முந்திரி


முன்மொழிவு – 8
தோட்டமும்-ஊடுபயிர்களும்
வேளாண் மேலாண்மை – விதை, நாற்று, மண்
& காலநிலை
ஜுன் – டிசம்பர் மாதங்களில் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும். இறவை பாசனத்தில்
பயிர்ச்செய்கைக்கு ஆடி, ஐப்பசி, கார்த்திகை ஏற்ற மானாவாரி பயிர்ச்செய்கைக்கு
புரட்டாசி, ஐப்பசி ஏற்றவை.

இரகங்கள் (Variety):-
VRI 1, VRI 2, VRI 3 ஆகிய இரகங்கள் பயிரிடப்படுகின்றன.

தட்பவெப்பநிலை (Climate) :
கடலோரப்பகுதிகளில் முந்திரி அதிக அளவில் பயிராகிறது. இப்பயிர் அதிக குளிர் மற்றும்
அதிக வறட்சியைத் தாங்கும் தன்மையற்றது. கடல் மட்டத்தில் இருந்து 300 மீ வரை
உற்பத்தி செய்யப்படுகிறது.

மண்:
முந்திரிச் பயிர்செய்கைக்கு நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண், சரளை கலந்த
செம்மண், மணல் பாங்கான நிலத்தில் நன்கு வளரும் தன்மை கொண்டது. இது வறட்சியைத்
தாங்கி வளரக்கூடியது. மழை அளவு 50 முதல் 250 செ.மீ வரை உள்ள இடங்களிலும்
நன்கு வளரும்.

நிலம் தயாரித்தல்:
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது, கட்டிகள் இல்லாமல் பண்படுத்த
வேண்டும். பின் 45 செ.மீ நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு குழிகளுக்கும் இடையே உள்ள இடைவெளி 7 மீட்டர் இருக்குமாறு அமைத்துக்
கொள்ளவேண்டும். ஒவ்வொரு குழியிலும் மேல் மண்ணுடன் 2 கிலோ தொழு உரம், ஒரு
கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். பிறகு பத்து நாள்களுக்கு ஒருமுறை குழிகளில்
கொட்டிய தொழுவுரத்தையும் மண்ணையும் கிளறிவிட வேண்டும். இப்படி மூன்று முறை
கிளறிவிட்ட பிறகு ஒவ்வொரு குழியிலும் 100 கிராம் ஆமணக்குப்பிண்ணாக்கு, 100 கிராம்
வேப்பம்பிண்ணாக்கு, 50 கிராம் கடலைப்பிண்ணாக்கு ஆகியவற்றைப் போட்டு, குழிக்கு
ஒரு கன்று வீதம் நடவு செய்ய வேண்டும். பிறகு காற்றுப் புகாதவாறு காலால் மண்ணை
மிதித்து ஒவ்வொரு கன்றின் தூரிலும் 250 மில்லி பெருங்காயக் கரைசலை ஊற்ற
வேண்டும். இது செடியின் தளிர்களைப் பூச்சிகள் தாக்காதவாறு காக்கும்.

விதை, நாற்று உற்பத்தி இளம் தண்டு ஒட்டு, பக்க ஒட்டு, விண் பதியம் ஆகிய முறைகளில்
இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. பாலீத்தீன் பைகளில் செம்மண்ணை நிரப்பி, ஒரு
பைக்கு ஒரு விதை வீதம் கொட்டையின் வளைவுப்பகுதி மண்ணுக்குள் அரை அங்குல
ஆழம் புதைந்திருக்கும்படி ஊன்றித் தண்ணீர் விட வேண்டும். மறுநாள் 10 கிலோ மணலில்

Project Proposal – Cashew Gardening - Intercrops | திட்ட முந்திரி


முன்மொழிவு – 9
தோட்டமும்-ஊடுபயிர்களும்
600 கிராம் அசோஸ்பைரில்லம், 600 கிராம் பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து,
ஒரு பைக்கு அரை கைப்பிடி வீதம் போட வேண்டும். பைகளை வரிசையாக அடுக்கி
வைத்து வெங்காயச் சாக்கு கொண்டு மூடி, தினமும் பூவாளியால் தண்ணீர் தெளித்து வர
வேண்டும். விதைத்த 9-ம் நாளுக்கு மேல் முளைப்பு தெரியும். அனைத்துப் பைகளிலும்
முளைப்பு எடுத்தவுடன் வெங்காயச் சாக்கை அகற்றி விட வேண்டும்.

15 நாள்களுக்கு ஒருமுறை நாற்றுப் பைகளை வரிசைக்குள்ளேயே இடம் மாற்றி வைக்க


வேண்டும். இதனால், நாற்றின் வேர், தரைக்குள் இறங்குவது தடுக்கப்படும். தொடர்ந்து
தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும். 15 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர்
தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யா கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு நாற்றுகளை வயலில் நடவு செய்யலாம். விதைத்த ஓர்
ஆண்டுக்குள் நாற்றுகளை நடவு செய்துவிட வேண்டும்.

முந்திரி நடவு முறை:


இப்போதுள்ள முந்திரித் தோப்புகள் விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுகளால்
ஆனவை. அயல் மகரந்தச் சேர்க்கையின் காரணமாக, முந்திரியின் பூக்கள், பழங்கள் மற்றும்
பிற குணங்கள் மரத்துக்கு மரம் மாறுபடும். இதனால், விதைவழி மரங்கள் வேறுபட்ட
மற்றும் மிகக் குறைந்த அறுவடை கொடுக்கின்றன. எனவே, விளைச்சலைக் கூட்டுவதற்கு,
இளந்தண்டுகள் மூலம் உருவாக்கப்பட்ட ஒட்டுக் கன்றுகளைப் பயன்படுத்த வேண்டும்

முந்திரி ஒட்டுக் கன்றுகள் (வி.ஆர்.ஐ) ஏக்கருக்கு 500 ஒட்டுக் கன்றுகள், அதாவது 5


மீட்டருக்கு 4 மீட்டர் இடைவெளியில் நட வேண்டும். முந்திரி ஒட்டுச் செடிகளை 45 க்கு
45 செ.மீ, அளவுள்ள குழிகளில் நட வேண்டும். குழிகளில் மேல் மண்ணுடன் 10 கிலோ
நன்கு மக்கிய தொழு உரம் ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து நிரப்ப வேண்டும்.
முந்திரி ஒட்டுச் செடிகள் 3 முதல் 6 மாதங்கள் வயது உள்ளதை மட்டும் நடவேண்டும்.
ஒட்டுச் செடியை நடும் போது ஒட்டு கட்டியப் பகுதி தரை மட்டத்தில் இருந்து 5 செ.மீ.
மேலே இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். ஒட்டு கட்டிய பகுதி உடைந்து விடாமல்
இருக்கவும் காற்றுக்கு அசையாமல் நேராக வளரவும் செடியின் இரு பக்கங்களில் நேரான
திடமான ஊன்று குச்சிகளைக் கொண்டு நட்டு கயிற்றால் கட்டி விட வேண்டும்.

நாற்றுக்குப் பாதுகாப்பு:
நாற்றுக்களை மழைக்காலத்தில் நடவு செய்தவுடன், பிளாஸ்டிக் வலை மூலம் 4 அடி
உயரத்துக்குக் கூண்டு அமைத்து ஆடு, மாடுகளிடமிருந்து காப்பாற்ற வேண்டியது
அவசியம். கன்று காற்றில் நன்கு அசைந்து ஆடினால்தான் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
அதனால், நாற்று அசைந்தாடும் அளவுக்கு 2 அடி விட்டம் இருக்குமாறு கூண்டுகளை
அமைக்க வேண்டும்.

Project Proposal – Cashew Gardening - Intercrops | திட்ட முந்திரி


முன்மொழிவு – 10
தோட்டமும்-ஊடுபயிர்களும்
WATER MANAGEMENT | நீர் மேலாண்மை
செடிகள் ஓரளவுக்கு வளர்ந்து வரும் வரை தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க வேண்டும்.
பூக்கும் தருணத்திலும், காய் பிடிக்கும் தருணத்திலும் வறட்சியான சீதோஷ்ண நிலை
நிலவினால் காய் பிடிப்பு அதிகரிக்கும். முந்திரியை பொதுவாக மானாவாரியாக பயிர்
செய்யலாம்.

மானாவாரிச் பயிர்செய்கையில் கிடைக்கும் மழையைப் பொறுத்து வளர்ச்சி அமையும். 15


நாள்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு கன்றின் தூரிலும் 5 லிட்டர் தண்ணீரில் 150 மில்லி
ஜீவாமிர்தம் என்ற விகிதத்தில் கலந்து ஊற்ற வேண்டும். 20 நாள்களுக்கு ஒருமுறை 10
லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பான்
மூலம் தெளிக்க வேண்டும்.

இறவைப்பாசனம் என்றால், கன்று நடவு செய்து ஒரு மாதம் வரை, வாரம் ஒருமுறை
தண்ணீர் விட வேண்டும். அதன்பிறகு மாதம் இருமுறை தண்ணீர்விட்டால் போதுமானது.

உர மேலாண்மை:
உரமிடும் காலம்

சத்துக்கள் (கிலோ/மரம்)

முதல்வருடம்
10 தொழு உரம்
0.070 தழைச்சத்து
0.040 மணிச்சத்து
0.060 சாம்பல்ச்சத்து
வருடாவருட அதிகரிப்பு (5 வருடங்கள்)

5 வருடங்களுக்குப் பின்
50 தொழு உரம்
0.500 தழைச்சத்து
0.200 மணிச்சத்து
0.300 சாம்பல்ச்சத்து

Project Proposal – Cashew Gardening - Intercrops | திட்ட முந்திரி


முன்மொழிவு – 11
தோட்டமும்-ஊடுபயிர்களும்
ஒரு வயதான மரம் ஒன்றிற்கு தொழு உரம் 10 கிலோ, தழைச்சத்து 70 கிராம், மணிச்சத்து
40 கிராம், சாம்பல்ச்சத்து 60 கிராம் கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்க வேண்டும்.4 வயது
வரைகொடுக்கப்பட்டுள்ள உரங்களின் அளவை ஒவ்வொரு மடங்காக அதிகரிக்க
வேண்டும். 5 ஆண்டுகளுக்கு பிறகு தொழு உரம் 50 கிலோ, தழைச்சத்து 500 கிராம்,
மணிச்சத்து 200 கிராம், சாம்பல்ச்சத்து 300 கிராம் உரங்களை அளிக்க வேண்டும்.
உரங்களை இரண்டாகப் பிரித்து ஜீன் மற்றும் அக்டோபர் மாதத்தில் சிபாரிசு செய்யப்பட்ட
உர அளவை இரண்டாகப் பிரித்து அடிமரத்திலிருந்து 5 அடி தூரத்தில் வட்டப்பாத்தி
அமைத்து இடவேண்டும்.

பாதுகாப்பு முறைகள்:

களை நிர்வாகம்:
செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். பின் வருடம் ஒருமுறை
களை எடுக்க வேண்டும். தரையிலிருந்து 1 மீ உயரம் வரை உள்ள பக்கக் கிளைகளை
வெட்டி விடவேண்டும்; ஒட்டுக் கட்டிய பகுதிகளுக்கு கீழே வளரும் கிளைகளை நீக்க
வேண்டும். ஒவ்வொரு வருடமும் காய்ந்த, குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்த கிளைகளை
வெட்டி சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் கிடைக்க வசதி செய்ய வேண்டும். மேலும்
ஒட்டுக்கட்டிய பகுதிக்குக் கீழ் வரும் தளிரை அவ்வப்போது கிள்ளிவிடவேண்டும். ஒட்டுச்
செடியில் தோன்றும் பூக்களை நீக்கி விட வேண்டும்.

ஊடுபயிர்:
கன்றுகள் நட்ட, மூன்று ஆண்டுகளுக்கு பின்பே, முந்திரியை அறுவடை செய்ய முடியும்.
எனவே, இடைப்பட்ட காலத்தில், பப்பாளி, சர்க்கரை வள்ளி, உளுந்து, பச்சை பயறு,
நிலக்கடலை, எள் போன்றவற்றை, ஊடுபயிர் செய்து, கூடுதல் லாபம் பெறலாம். சணப்பு,
கொளிஞ்சி, பசுந்தாள் உரப் பயிர்களை மரங்களுக்கிடையே பயிரிடலாம். பசுந்தாள்
உரப்பயிர்கள் பூக்கும் முன் மடக்கி உழவு செய்யலாம்.

பெரும்பாலும் முந்திரியின் நடுவே ஊடுபயிராக பயிர் செய்யப்படுவது பலா தான்,


முந்திரிகாவது மருந்து அடிக்க வேண்டும், மாறும் உரமிட வேண்டும். பலா மரத்திற்கு
எதுவும் தேவை இல்லை. இது வருடத்திகு ஒருமுறை பலன் தரக்கூடியது. முந்திரி பலன்
தரும் அதே கால கட்டத்தில் தான், பலாவும் பலன் தரும். பலா குறைந்த அளவே
பயிரிடப்பட்டிருக்கும்.

Project Proposal – Cashew Gardening - Intercrops | திட்ட முந்திரி


முன்மொழிவு – 12
தோட்டமும்-ஊடுபயிர்களும்
AGRICULTURAL CHALLENGES & PROBLEMS |
வேளாண்மையில் சவால்கள் & சிக்கல்கள்
நோய்களும் பயிர் பாதுகாப்பும்;
முந்திரி மரங்களில் பத்தாம் மாதத்துக்குப் பிறகு குருத்துகள் வெளிப்படும். இந்த நேரத்தில்
சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் இருக்கும். குருத்தின் நுனி லேசாகக் கருகி
இருந்தாலோ, அல்லது குருத்தில் பிசின்போல் தென்பட்டாலோ பச்சைநிற சாறு உறிஞ்சும்
பூச்சிகள் தாக்கியுள்ளன என அர்த்தம். உடனடியாக 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி
மூலிகைப் பூச்சிவிரட்டி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். தொடர்ந்து 20
நாள்களுக்கு ஒருமுறை மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்து வர வேண்டும். இதன் மூலம்
பூவெடுக்கும் சமயத்தில் முந்திரியைத் தாக்கும் சிவப்பு நிற வண்டுகளையும்
கட்டுப்படுத்தலாம்.
மூலிகைப் பூச்சிவிரட்டி நெய்வேலிக் காட்டாமணக்கு, ஆடாதொடை, நொச்சி, சீத்தா,
எருக்கன், சோற்றுக்கற்றாழை ஆகிய தாவரங்களின் இலைகளில் தலா 1 கிலோ எடுத்துத்
தனித்தனியாக அரைத்து, ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். 1 கிலோ
வேப்பங்கொட்டையை இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பேரலில் 15 லிட்டர்
தண்ணீர் ஊற்றி அதில் அரைத்த இலைக்கலவை மற்றும் இடித்த வேப்பங்கொட்டை
ஆகியவற்றைப் போட்டு 5 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீர் சேர்க்க வேண்டும். தினமும் காலை,
மாலை என இரு வேளைகள் இக்கரைசலைக் கலக்கி வந்தால் ஒரு வாரத்தில் மூலிகைப்
பூச்சிவிரட்டித் தயார். இக்கரைசலை வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும். 20 லிட்டர்
தண்ணீரில் 1 லிட்டர் கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும்.
பெருங்காயக் கரைசல் 25 லிட்டர் தண்ணீரில் 1 கிலோ கட்டிப் பெருங்காயத்தைப் போட்டு
2 நாள்கள் ஊற வைத்தால், பெருங்காயக் கரைசல் தயாராகிவிடும். 10 லிட்டர் தண்ணீருக்கு
250 மில்லி பெருங்காயக் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்த வேண்டும். இது
நடவு செஞ்ச கன்றுகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். தளிர்களைத் தாக்கும் பூச்சிகளைத்
தடுக்கும்.

Project Proposal – Cashew Gardening - Intercrops | திட்ட முந்திரி


முன்மொழிவு – 13
தோட்டமும்-ஊடுபயிர்களும்
தண்டுத் துளைப்பான் இதன் தாக்குதல் மரத்தின் அடித்தண்டில் ஆண்டு முழுவதும்
காணப்படும். இதனை கட்டுப்படுத்த கார்பரில் 50 சத நனையும் தூள் 0.1 சதம் மருந்தை
தண்டுப்பகுதியில் சுமார் 1 மீட்டர் உயரம் வரை தடவி விடவேண்டும். 5% வேப்ப
எண்ணெய்யை ஜனவரி – பிப்ரவரி, மே -ஜூன் மற்றும் செப்டம்பர் – அக்டோபர்
மாதங்களில் அடி மரத்தில் பூச வேண்டும்.

தேயிலைக்கொசு:
தேயிலைக் கொசுவைக் கட்டுப்படுத்த தழைப் பருவத்தில் 2 மிலி போசலான் 35 EC,
மொட்டு விடும் பருவத்தில் 2 கிராம் கார்பரில் 50 WP மற்றும் கொட்டை உருவாகும்
பருவத்தில் 2 மிலி மேனோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து
தெளிக்க வேண்டும்.
இலைத் துளைக்கும் புழு:
இதனை கட்டுப்படுத்த 5% வேப்பங்கொட்டை சாறினை துளிர்விடும் பருவத்திலும், பூக்கும்
பருவத்திலும் தெளிக்க வேண்டும்.

வேர்த் துளைப்பான்:
ஒரு மரத்திற்கு மோனோகுரோட்டோபாஸ் 5 மில்லி மருந்துடன் 5 மில்லி தண்ணீர் கலந்த
கலவையை புழு தாக்கிய துளைகளில் ஊற்றவேண்டும். இதை குறிப்பிட்ட இடைவெளியில்
இரண்டு முறை செய்ய வேண்டும்.
ஆந்தராக்னோஸ்:
இதனை கட்டுப்படுத்த துளிர்விடும் பருவத்தில் 1% போர்டாக்ஸ் கலவையுடன் பெரஸ்
சல்பேட்டை கலந்து தெளிக்க வேண்டும்.
நுனிக்கருகல்:
நோய் தாக்கப்பட்ட கிளைகளை வெட்டி நீக்க வேண்டும். பிறகு அந்த இடத்தில் 1 சதவீதம்
போர்டோக்கலவை மருந்தினை தடவி விடவேண்டும்.
அறுவடை:
கன்றுகள் நட்ட மூன்றாவது வருடத்தில் காய்ப்புக்கு வந்து விடும். மார்ச் – மே மாதங்களில்
அறுவடை செய்யலாம்.
முந்திரி அறுவடை:
நான்காம் ஆண்டிலிருந்து காய்க்கத் தொடங்கும். தொடக்கத்தில் எக்டருக்கு (21/2) 1-
1.5 டன் பருப்பு அறுவடை கிடைத்தாலும், மரங்களைப் பாதுகாக்கும் தன்மையைப்
பொறுத்து 8-10 ஆண்டுகளில் முழுமையான உற்பத்தி பெற முடியும்.
நாட்டு ரகமா இருந்தா ஒருமுறை நடவு செஞ்சுட்டா குறைந்தபட்சம் 50 வருஷம் வரைகூட
அறுவடை எடுக்கலாம். வீரிய ரகமா இருந்தா 15 வருஷம் வரைக்கும் அறுவடை
எடுக்கலாம். முந்திரி மரத்தின் தென்பகுதி, முதலில் காய்ப்புக்கு வரும். மரத்தின் மேல் பகுதி,

Project Proposal – Cashew Gardening - Intercrops | திட்ட முந்திரி


முன்மொழிவு – 14
தோட்டமும்-ஊடுபயிர்களும்
இரண்டாவதாகக் காய்ப்புக்கு வரும். மரத்தின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகள்
மூன்றாவதாகக் காய்ப்புக்கு வரும். இப்படி ஆண்டுக்கு மூன்று முறை காய்ப்பு இருக்கும்.
காய்கள் பச்சை நிறம் மாறி முழுச்சிவப்பாகவோ அல்லது முழு மஞ்சளாகவோ அல்லது
மஞ்சள் சிவப்பு கலந்த நிறமாகவோமாறியபின் அறுவடை செய்யவேண்டும். சிவப்பு
மஞ்சள் பழத்தின்மீது ஒட்டியிருக்கும் முந்தரிகொட்டையை திருகி தனியே பிரித்து
அறுவடையை முடிக்க வேண்டும்.
மரத்தை அசைத்துப் பழம் பறித்தால், பூக்கள் மற்றும் பிஞ்சுகள் உதிர வாய்ப்புண்டு.
அதனால், கவனமாகப் பழங்களைப் பறிக்க வேண்டும். பழுத்துத் தானாகக் கீழே விழுந்த
பழங்களையும் சேகரிக்கலாம். ஒரு வருடத்தில் ஒரு மரத்தில் இருந்து 3 முதல் 4 கிலோ
வரை அறுவடை கிடைக்கும். நன்கு பழுத்த முந்திரிப் பழங்களிலிருந்து கொட்டைகளைத்
தனியாகப் பிரித்தெடுத்து, வெய்யிலில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நன்கு
உலர்த்தவேண்டும்.
விதைச் சேமிப்பு:
மரத்திலிருந்து கீழே விழும் பழங்களில் நன்கு திரட்சியான பெரிய கொட்டையுள்ள
பழங்களைச் சேகரித்துக்கொள்ள வேண்டும். அவற்றிலிருந்து விதைகளைப் பிரித்து, ஒரு
கூடையில் போட்டு 15 நாள்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். தரையில் காய
வைக்கக்கூடாது. காய்ந்த விதைகளை மண் பானையில் போட்டு, இருட்டு அறையில்
வைத்து வைக்கோல் கொண்டு மூடி 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை விதை
உறக்கத்தில் வைத்திருக்க வேண்டும். பிறகு எடுத்து நாற்று உற்பத்திக்குப் பயன்படுத்தலாம்.

FINANCIAL MANAGEMENT | நிதி மேலாண்மை

அட்டவணை 1. நிதிமேலாண்மை / முதலீடு

பொருள் விபரம்

முந்திரி வருமானம்:
ஏக்கருக்கு 170 மரமும் காய்க்க ஆரம்பித்த முதல் வருடம் சற்று குறைவாக
இருக்கும். அடுத்தடுத்த ஆண்டுகளில் வரை உற்பத்தி 3000 கிலோ வரை இருக்கும்.

ஒரு வருடத்துக்கு ஏக்கர் நிலத்தில் சராசரி 1000 கிலோ உற்பத்தி கிடைத்தாலும் .


இப்போதைக்கு ஒரு kg 250- 300 ரூபாய்னு விற்றாலும் மொத்தம் 1000 kg விற்பனை
மூலம் 250000 ரூபாய் வருமானம் வரும்.

பழங்களைக் காயவெச்சா 40 மூட்டை வற்றல் கிடைக்கும். இதை ஒரு மூட்டை

Project Proposal – Cashew Gardening - Intercrops | திட்ட முந்திரி


முன்மொழிவு – 15
தோட்டமும்-ஊடுபயிர்களும்
/ ரூபாய்னு விற்றாலும் வற்றல் விற்பனை மூலமா ——-/ ரூபாய்
வருமானம் கிடைச்சுடும். ஆக, மொத்தம் ரெண்டு ஏக்கர் நிலத்துல ——-
ரூபாய் வருமானம் கிடைக்கும்.

இதுல பராமரிப்பு, இடுபொருள்களுக்குனு ——— ரூபாய் வரை செலவுபோக,


வருஷத்துக்கு ——- ரூபாய் லாபமா நிக்கும்.

AGRICULTURAL - GOALS & EXPECTATIONS |


நிதி வேளாண்துறையில் இலக்குகள் &
எதிர்பார்ப்புகள்
பதப்படுத்தப்பட்ட முந்திரி பருப்பை வெளிநாடுகளுக்கு ஏறுமதி செய்யும் வாய்ப்புக்கள்
குறித்து இலங்கை அரசாங்கத்தின் ஏற்பாடுகள் குறித்து அறிய வேண்டும்.

கவனிக்க வேண்டியவை:
தொழில் வாய்ப்புக்கள்:
விளைவிக்கப் படும் முந்திரியானது அறுவடை செய்யப்பட்டு, அதிலுள்ள நீரை உலரவிட்டு
வறுத்து தயாரிக்கப் படுகிறது. இப்படி வறுக்கப்படுவதில் வெண்மை நிறம் பழுப்பு நிறம்
என இரண்டு வண்ணங்களில் முந்திரி ஏற்றுமதியாகிறது.
இப்படி வறுக்கப்படும்போது பழுப்பு நிறம் அதிகமாகி கறுப்பு நிறத்தில் முந்திரி
மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால் அதை
வெளிநாட்டவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
Project Proposal – Cashew Gardening - Intercrops | திட்ட முந்திரி
முன்மொழிவு – 16
தோட்டமும்-ஊடுபயிர்களும்
முந்திரி ஏற்றுமதியின்போது, கொள்முதல், மற்றும் பேக்கிங்கை அவசியம் கவனிக்க
வேண்டும். முந்திரி ஆர்டர் கிடைத்தவுடன் எந்த வகையான முந்திரிகள் வேண்டும்
என்பதை இறக்குமதி யாளர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு
இறக்குமதி யாளர் இரண்டாக உடைக்கப் பட்ட முந்திரி வேண்டும் என்று கேட்கிறார்
எனில், நீங்கள் அதை அனுப்பாமல் வேறு முந்திரியை அனுப்பினால், அவர் அதை
ஏற்றுக்கொள்ள மாட்டார். எனவே, கொள்முதல் செய்யும் முன்பு எந்த வகை முந்திரி
என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

முந்திரியை நேரடியாக முந்திரி உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்வது நல்லது.


அவர்களிடம் ஏற்றுமதிக்கான ஆர்டர் என தெளிவாக எடுத்துச் சொல்லும்பட்சத்தில்
அதிகம் உடைந்த முந்திரிகளாக இல்லாமல், கறுப்பு நிறமுள்ள முந்திரிகளாகவும்
இல்லாமல், தரமான முந்திரிகளை சுத்தமாக தருவார்கள். இந்த மாதிரியான முந்திரிகளை
ஏற்றுமதி செய்யும்போதுதான் தொடர்ந்து ஆர்டர்கள் கிடைக்கும். நமது கெளரவமும்,
நாட்டின் கெளரவமும் நிலைநாட்டப்படும்.

ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக, எந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறோம், ஏற்றுமதி


செய்யப்படும் முந்திரியின் அளவு என்ன என்பதை சிஇபிசிஐ-யிடம் (CEPCI) தெரிவிப்பது
அவசிய மாகும். அவர்களின் ஆய்வுக்கு பிறகுதான் ஏற்றுமதி செய்ய முடியும்.

பேக்கிங்கில் கவனம்:
முந்திரி ஏற்றுமதியைப் பொறுத்தவரை, சர்வதேச அளவு 11.34 கிலோகிராம்தான். இந்த
அளவுகளில்தான் பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் கேட்பார்கள். டின்களில் கார்பன்-டை-
ஆக்ஸைடு வாயுவை அடைத்து பின்னர் அதில் முந்திரிகளை சரியான அளவில் அடைத்து
காற்று புகாதபடி பேக்கிங் செய்ய வேண்டும்.

பாலிதீன் கவர்களில் உள்நாட்டு வர்த்தகத்தில் பேக்கிங் செய்துகொள்ளலாமே தவிர,


ஏற்றுமதிக்காக பாலிதீன் பைகளை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. மக்கும்
பாலிதீன் பைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இறக்குமதியாளர்கள் கேக்குகள் தயாரிக்க, ஐஸ்கிரீம் தயாரிக்க அதிகம் பயன்
படுத்துவதால், கிறிஸ்துமஸ் காலங்களில் அதிக ஏற்றுமதி ஆர்டர்கள் வர வாய்ப்பு
இருக்கிறது”

வேளாண் துறையில் இலக்குகளும் எதிர்பார்ப்புகளும்.

1. உங்களுக்கு தேவையான பொருட்களின் பட்டியல்:

1.

Project Proposal – Cashew Gardening - Intercrops | திட்ட முந்திரி


முன்மொழிவு – 17
தோட்டமும்-ஊடுபயிர்களும்
2.

3.

4.

5.

2. தற்போதைய திட்டமிடலுக்கு தேவையான நிலங்களின் அளவு:

உங்கள் திட்டத்துக்கான நிலம் எங்கே இருக்க வேண்டும்?

3. மின்சாரத்தின் தேவை:

4. சூரிய ஒளியில் மின்சாரம்:

5. நீர்ப்பாசனம்:

6. உபகரணங்கள்:

இலக்கு:
ஒருவர் தன் வாழ்வாதார தேவைக்கு தானும் தன குடும்பமும், சமூகமும் தற்சார்பு
பொருளாதார வாழ்க்கையில் நிறைவு பெறுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும்
அபிவிருத்தி அடைகின்றது. வாழ்வாதார தேவைகளுக்கான இறக்குமதி குறைகின்றது.
அதன் மூலம் அந்நிய செலாவணி சேமிக்கப்படுகின்றது.

இலங்கை போன்ற நிலம், நீர் வளம் கொண்ட நாட்டில் வாழும் நாங்கள் எங்கள்
வளங்களை பயன் படுத்தி முன்னேற முடியும்.

PLANS – TRUST & UNDERSTANDING |


திட்டங்களும் – நம்பிக்கையும், புரிந்துணர்வும்

Project Proposal – Cashew Gardening - Intercrops | திட்ட முந்திரி


முன்மொழிவு – 18
தோட்டமும்-ஊடுபயிர்களும்
திட்டங்களும் - நம்பிக்கையும் புரிந்துணர்வும்:

1. உங்கள் திட்டங்கள் மற்றும் நோக்கங்கள் என்ன?

2. நீங்கள் என்ன செய்ய முன்மொழிகிறீர்கள்?

3. அதை தேர்ந்து எடுக்க காரணம் என்ன? அதன் தேவை அல்லது அவசியம்


என்ன? அதன் முக்கியத்துவம் என்ன?

4. உங்களை குறித்த நம்பிக்கை என்ன?

5. நீங்கள் செய்யும் (திட்டமிடும்) அனைத்து பணிகளையும் விவரிக்க வேண்டும்.

6. நீங்கள் விவசாயத் தொழிலில் இருக்கிறீர்களா?

1. அல்லது அதில் இறங்க திட்டமிட்டுள்ளீர்களா?

2. நீங்கள் எங்கே வசிக்கின்றீர்கள்?

3. எத்தனை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறீர்கள்?

4. நீங்கள் எப்போது விவசாயத்தைத் தொடங்கினீர்கள்?

Project Proposal – Cashew Gardening - Intercrops | திட்ட முந்திரி


முன்மொழிவு – 19
தோட்டமும்-ஊடுபயிர்களும்
5. நீங்கள் தற்போது எவ்வாறு செயல்படுகிறீர்கள்?

7. குறுகிய கால (நடப்பு ஆண்டு):

ஆரம்ப வருமானத்துக்கு என்ன திட்டம் வைத்து உள்ளீர்கள்?

1. நடுத்தர கால (அடுத்த 1 - 2 ஆண்டுகள்):

9. நீண்டகால திட்டங்கள் என்ன?

Project Proposal – Cashew Gardening - Intercrops | திட்ட முந்திரி


முன்மொழிவு – 20
தோட்டமும்-ஊடுபயிர்களும்

You might also like