Jurnal M5 குறிப்பேடு

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

வாரம் 6

திகதி : 13.02.2023 – 17.02.2023


மாணவர்களின் பெயர் : ஜீவந்தா, மேவிஷா, டிவாஷ்
1.0 ஆய்வுக்குரிய சிக்கல்

 ஆறாம் வாரத்தின் போது நடைப்பெற்ற கற்றல் கற்பித்தலின் போது எனக்கு ஒரு சிக்கல்
தென்பட்டது.
 சான்றாக, வகுப்பிலுள்ள ஜீவந்தா, மேவிஷா மற்றும் டிவாஷ் ஆகிய மாணவர்களிடைய
சொற்களஞ்சியப் பயன்பாடு மிகக் குறைந்த அளவில் உள்ளது என்பதை நான்
மாணவர்களின் பயிற்சிகளைத் திருத்துவதன் வழிக் கண்டறிந்தேன். அதோடு,
பயன்படுத்திய சொல்லையே திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதோடு வாசிப்புப்
பகுதியின் பொருளை முழுமையாக விளங்கிக் கொள்ளாததால்; கருத்துணர்
கேள்விகளுக்குச் சரியான பதிலை எழுதுவதில் குழப்பம் அடைகின்றனர் எனலாம்.
2.0 சிக்கலுக்கான காரணங்கள்
 அகராதி வரிசையினை அறியாமை. மாணவர்களுக்கு அகராதியை பற்றிய அறிமுகம்
இல்லாததால் புரியாதச் சொற்களுக்குப் பொருள் காண்பதில் சிக்கலை
எதிர்நோக்குகின்றனர். அகராதி அறிமுகம் இல்லாததால் அகராதி வரிசை அடிப்படையில்
சொற்களுக்குப் பொருள் காண்பதிலும் குழப்பங்களை எதிர்நோக்குகின்றனர்.
 சுயதேடலின்மை. சுயதேடலின்மையால் மாணவர்கள் புரியாரச் சொற்களுக்குப் பொருள்
காணாததோடு புதியச் சொற்களையும் கற்றுக்கொள்ள இயலாமல் போகின்றது.
 ஆர்வமின்மையும் அலட்சியப் போக்கும். மாணவர்கள் புரியாதச் சொற்களின்
பொருள்களைக் காண ஆர்வம் செலுத்தாததால் அகராதியின் பயன்பாட்டைத்
தவிர்க்கின்றனர். இதன் விளைவாக மாணவர்களின் படைப்புகள் பெரும்பான்மையும்
பொருள் விளங்கா வண்ணம் அமைகின்றது. அதோடு. கடினமானச் சொற்களின்
பொருளைக் கண்டறியாமல் பொருள் விளங்காமல் சொற்களைப் பயன்படுத்தி விட்டு
ஆசிரியர் திருத்துவார் எனும் அலட்சியப் போக்கும் இச்சிக்கலுக்கான காரணமாக
அமைகின்றது.
.

3.0 விளைவு
 வருங்காலங்களில் மாணவர்களிடத்தில் சொற்களஞ்சியத்தின் பயன்பாடு குறையக்கூடியச்
சூழல் ஏற்படுவதோடு, அவர்களால் நல்லதொரு எழுத்துப் படிவத்தை உருவாக்க இயலாத
சூழல் ஏற்படும் எனலாம்.
4.0 சிக்கலைக் களைவதற்கான வழிமுறைகளைத் திட்டமிடுதல்
 மாணவர்களுக்கு அகராதி வரிசையினை அறிமுகப்படுத்துதல். ஆசிரியர் சிக்கலை
எதிர்நோக்கும் மாணவர்களுக்கு அகராதியினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்
என்பதைக் குறித்து விளக்கமளித்தல் வேண்டும். அகராதி வரிசையினை அடிப்படையாகக்
கொண்டு எவ்வாறு சொற்களுக்குப் பொருள் காண வேண்டும் என்பதையும் கற்றுத்
தருதல்.
 நாளிதழ், இணையம், சஞ்சிகைகள், மாத இதழ், குயில், சிறுவர் கதை, நன்னெறிக்கதைகள்
போன்ற மூலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வாசிப்புப் பகுதியைக் கொடுத்து
அருஞ்சொற்களுக்குப் பொருள் காணப் பணித்தல். ஆசிரியர் வாரத்தில் இருமுறை
பல்வேறு மூலங்களிலிருந்து மாணவர்களுக்குச் சில வாசிப்புப் பகுதிகளை வழங்கி
அருஞ்சொற்களுக்கு அகராதியின் வாயிலாகப் பொருள் காணப் பணித்தல்.
5.0 கால அளவு
 மேற்கண்டறிந்த சிக்கலை நான் இரண்டு வாரத்திற்குள் நிவர்த்தி செய்ய
திட்டமிட்டுள்ளேன். (20.02.2023 – 03.03.2023)
6.0 வெற்றிக் கூறு
 மாணவர்கள் தங்களின் எழுத்துப்படிவங்களில் சொற்களஞ்சியங்களைப் பயன்படுத்த
முயற்சிப்பர்.
 வருங்காலங்களில் அவர்கள் தங்களுடைய சிக்கல்களை முழுவதுமாக நிவர்த்திச் செய்து
தரமான படைப்புகளை உருவாக்குவர் என்பது திண்ணம்.
7.0 தொடர் நடவடிக்கை
திகதி நேரம் நடவடிக்கை அடைவுநிலை
13/2 பாட வேளை/  அறிமுகம்  ஜீவந்தா, மேவிஷா
காலை 8.30 – 9.30 வரை மற்றும் டிவாஷ்
அகராதி
பயன்பாட்டின்
முறைமையை
நன்றாகப் புரிந்து
கொண்டனர்.
14/2 பாட வேளை/  அருஞ்சொற்களுக்குப்  ஜீவந்தா, மேவிஷா
காலை 9.00 – 10.00 வரை பொருள் காணல் மற்றும் டிவாஷ்
அருஞ்சொற்களுக்குக்
குறுகிய நேரத்தில்
பொருள்
காண்கின்றனர்.
அகராதியை விரும்பி
பயன்படுத்தவும்
தொடங்குகின்றனர்.

You might also like