Simple Present Tesnse

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 11

Simple Present Tense

இந்த காலத்தை எங்கெங்கெல்லாம் பயன்படுத்தலாம், வாக்கியத்தை எவ்வாறு அமைக்கலாம் என்பதை


பார்ப்போம். அதனை இரண்டு வகைகளாக அமைக்கலாம்...

ஒன்று am/is/are என்ற auxiliary verbs-யை main verb ஆக பயன்படுத்தி வாக்கியத்தை அமைப்பது.

Positive/affirmative sentences

Structure / Formula:-

Subject + am/is/are + predicate...

சப்ஜெக்ட் தவிர மீதி உள்ள அனைத்தும் predicate ஆகும். அதாவது சப்ஜெக்ட் பற்றி நாம் கணித்து
சொல்வது தான் predicate ஆகும்.

உதாரணமாக I am a teacher என்ற வாக்கியத்தில் நான் என்னவாக இருக்கிறேன் என்பதை கணித்துச்


சொல்வது, am a teacher - அதுதான் predicate ஆகும்.

am/is/are என்ற auxiliary verbs-யை main verb ஆக பயன்படுத்தி சில வாக்கியங்கள் பின்வருமாறு

I am 25 years old.

எனக்கு 25 வயது ஆகிறது.

She is active.

அவள் சுறுசுறுப்பாக இருக்கிறாள்.

That house is big.

அந்த வீடு பெரியது.

My wife isn't a doctor.

என் மனைவி ஒரு மருத்துவர் அல்ல.


He is a writer.

அவர் ஒரு எழுத்தாளர்.

I am not angry

நான் கோபமாக இல்லை

We are always happy.

நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

His shoes aren't new.

அவரது காலணிகள் புதியவை அல்ல.

இதுபோல வாக்கியங்களை முந்தைய பாடத்தில் படித்தீர்கள் அல்லவா? அந்த வாக்கியங்களில் இருந்து


நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள்? அவையெல்லாம் Subject-யை பற்றிய நிலைமையோ (state) அல்லது
உணர்ச்சியையோ (feeling) அல்லது தன்மையையோ (condition) நிகழ்காலத்தில் சொல்கிறோம்.

இரண்டாவது வாக்கிய அமைப்பு முறை

Positive/Affirmative sentences

Structure / Formula:-

Subject + Main verb + object.....

இங்கு Main verb, சப்ஜெக்ட் செய்யக் கூடிய செயலை(Action) விவரிக்கும்.

பொதுவாக நம்முடைய பழக்கவழக்கங்களை அல்லது வழக்கமாக செய்யும் செயல்களை Simple Present


Tense காலத்தில் தான் சொல்ல வேண்டும்.

✔️For habits

பழக்கவழக்கங்களுக்கு
I like chocolate.

எனக்கு சாக்லேட் பிடிக்கும்.

I walk to work every day

நான் ஒவ்வொரு நாளும் நடந்து வேலைக்குச் செல்கிறேன்

We go to the gym club together.

நாங்கள் ஒன்றாக ஜிம் கிளப்புக்கு செல்கிறோம்.

I like reading detective stories.

நான் துப்பறியும் கதைகளைப் படிக்க விரும்புகிறேன்.

We eat Pizza every weekend.

ஒவ்வொரு வார இறுதியில் நாங்கள் பீட்சா சாப்பிடுகிறோம்.

We drink coffee every morning.

நாங்கள் தினமும் காலையில் காபி குடிப்போம்.

You always carry your books to school

நீங்கள் எப்போதும் உங்கள் புத்தகங்களை பள்ளிக்கு எடுத்துச் செல்கிறீர்கள்

இதுபோல I, We and you, they and plural subjects-களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் main verb-உடன்
"s/es" சேர்க்கவில்லை. ஆனால் பின்வரும் வாக்கியங்களை பார்த்தீர்கள் என்றால் He, she, it third person
singular subject-களுக்கு main verb-உடன் "s/es" சேர்க்க வேண்டும்.

He drinks tea at breakfast.

அவர் காலை உணவில் தேநீர் குடிக்கிறார்.

இங்கு drink என்ற main verb உடன் "s" சேர்த்து drinks என்று அமைத்திருக்கிறோம்.
She only eats fish.

அவள் மீன் மட்டுமே சாப்பிடுகிறாள்.

They watch television regularly.

அவர்கள் வழக்கமாக தொலைக்காட்சியைப் பார்க்கிறார்கள்.

He likes to play basketball.

அவர் கூடைப்பந்து விளையாடுவதை விரும்புகிறார்.

We go to a cinema every Sunday.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாங்கள் ஒரு சினிமாவுக்குச் செல்கிறோம்.

She goes to work by car.

அவள் காரில் வேலைக்குச் செல்கிறாள்.

Niranjan brushes his teeth twice a day.

நிரஞ்சன் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குகிறான்.

My cat runs very fast.

என் பூனை மிக வேகமாக ஓடுகிறது.

He goes to the market every day.

அவர் ஒவ்வொரு நாளும் சந்தைக்குச் செல்கிறார்.

முந்தைய பாடத்தில் நம்முடைய பழக்கவழக்கங்களை (For habits) பற்றி பார்த்தோம், அந்த அனைத்து
வாக்கியங்களும் Simple Present Tense காலத்தில் பயன்படுத்தியிருகின்றோம். இப்பொழுது மீண்டும்
மீண்டும் நடக்கக் கூடிய செயல்கள் அல்லது நிகழ்வுகள் (For repeated or regular actions or events) பற்றி
பார்ப்போம்.
தினசரி செய்யக் கூடிய செயல்களையோ அல்லது வாரத்திற்கு ஒரு முறை செய்யக்கூடிய செயல்களை
அல்லது மாதத்திற்கு ஒரு முறை செய்யக்கூடிய செயல்களை அல்லது வருடத்திற்கு ஒரு முறை
செய்யக்கூடிய விஷயங்களையோ பற்றிப் பேசுவதற்கு இந்த Simple Present Tense தான் பயன்படுத்த
வேண்டும்.

For repeated or regular actions or events

We meet every Thursday.

ஒவ்வொரு வியாழக்கிழமைக்கும் நாங்கள் சந்திக்கிறோம்.

I walk to work every day.

நான் ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்கிறேன்.

We go to the gym club together.

நாங்கள் ஒன்றாக ஜிம் கிளப்புக்கு செல்கிறோம்.

We go to a cinema every Sunday.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாங்கள் ஒரு சினிமாவுக்குச் செல்கிறோம்.

They drive to Ooty every summer.

அவர்கள் ஒவ்வொரு கோடையிலும் ஊட்டிக்கு போகிறார்கள்.

I usually go to school.

நான் வழக்கமாக பள்ளிக்கு செல்வேன்.

They visit us often.

அவர்கள் அடிக்கடி எங்களை சந்திக்கிறார்கள்.

You play basketball once a week.

நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை கூடைப்பந்து விளையாடுவீர்கள்.


Usha works every day.

உஷா ஒவ்வொரு நாளும் வேலை செய்கிறார்.

Madhan and Kevin swim twice a week.

மதனும் கெவினும் வாரத்திற்கு இரண்டு முறை நீந்துகிறார்கள்.

In this club people usually dance a lot.

இந்த கிளப்பில் மக்கள் பொதுவாக நிறைய நடனமாடுகிறார்கள்.

Lara travels to Paris every Sunday.

லாரா ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பாரிஸுக்கு செல்கிறார்.

I bake cookies twice a month.

நான் ஒரு மாதத்திற்கு இரண்டு முறை குக்கீகளை சுட்டுக்கொள்கிறேன்.

The train to Madurai leaves every day.

மதுரை செல்லும் ரயில் ஒவ்வொரு நாளும் புறப்படுகிறது.

I always come to school by car.

நான் எப்போதும் கார் மூலம் பள்ளிக்கு வருவேன்.

She frequently arrives here before me.

அவள் அடிக்கடி எனக்கு முன்பாக இங்கு வருகிறாள்.

He never forgets to do his homework.

அவர் தனது வீட்டுப்பாடத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்.

I often catch the late bus home.


நான் அடிக்கடி தாமதமாக பஸ்ஸை வீட்டிற்கு பிடிப்பேன்.

I play football on Saturdays.

நான் சனிக்கிழமைகளில் கால்பந்து விளையாடுகிறேன்.

Once a year I fly back to visit my family in Kerala.

வருடத்திற்கு ஒரு முறை கேரளாவில் உள்ள எனது குடும்பத்தினரைப் பார்க்க நான் மீண்டும் பறக்கிறேன்.

The classrooms are cleaned every evening after school.

பள்ளி முடிந்ததும் தினமும் மாலை வகுப்பறைகள் சுத்தம் செய்யப்படுகின்றன.

She sometimes loses her temper, but it doesn't happen very often.

அவள் சில நேரங்களில் தன் மனநிலையை இழக்கிறாள், ஆனால் அது அடிக்கடி நடக்காது.

மேற்கண்ட வாக்கியங்களை நன்கு ஆராய்நது ் பார்தத


் ீர்கள் என்றால் அது தினசரியோ வாரம் அல்லது
வருடத்திற்கு ஒரு முறையோ நாம் செய்யக்கூடிய செயல்கள் ஆகும்.

கீழ்கண்ட வார்த்தைகளைக் கொண்டு நாம் வாக்கியங்களை அமைக்கும் பொழுது Simple Present Tense
தான் பயன்படுத்த வேண்டும்.

always - எப்போதும்

She always arrives at 7.30.

அவள் எப்போதும் 7.30 மணிக்கு வருகிறாள்.

She's always criticizing me.

அவள் எப்போதும் என்னை விமர்சிக்கிறாள்.

That phone's always ringing.

அந்த தொலைபேசி எப்போதும் ஒலிக்கிறது.


regularly - தவறாமல்

She regularly appears on TV talk shows.

டிவி பேச்சு நிகழ்ச்சிகளில் தவறாமல் தோன்றுவார்.

Accidents regularly occur on this street.

இந்த தெருவில் தொடர்ந்து விபத்துக்கள் நிகழ்கின்றன.

We meet regularly each morning for coffee.

ஒவ்வொரு காலையிலும் காபிக்காக தவறாமல் சந்திக்கிறோம்.

every day - தினமும்

We're open every day except Sunday.

ஞாயிற்றுக்கிழமை தவிர ஒவ்வொரு நாளும் நாங்கள் திறந்திருக்கிறோம்.

I walk to work every day.

நான் ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்கிறேன்.

normally - பொதுவாக

It normally takes 20 minutes to get there.

அங்கு செல்ல பொதுவாக 20 நிமிடங்கள் ஆகும்.

The exercise normally takes twenty minutes.

உடற்பயிற்சி பொதுவாக இருபது நிமிடங்கள் ஆகும்.

The journey to work normally takes an hour.

வேலை செய்வதற்கான பயணம் பொதுவாக ஒரு மணி நேரம் ஆகும்.

Normally, I plan one or two days ahead.


பொதுவாக, நான் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் முன்னதாகவே திட்டமிடுகிறேன்.

generally - பொதுவாக

I generally get up at six.

நான் பொதுவாக ஆறு மணிக்கு எழுந்திருக்கிறேன்.

These systems generally use solar power.

இந்த அமைப்புகள் பொதுவாக சூரிய சக்தியைப் பயன்படுத்துகின்றன.

The baby generally wakes up three times during the night.

குழந்தை பொதுவாக இரவில் மூன்று முறை எழுந்திருக்கும்.

usually - பொதுவாக

I'm usually home by 6 o'clock.

நான் வழக்கமாக 6 மணிக்கு வீட்டிற்கு வருகிறேன்.

We usually go by car.

நாங்கள் வழக்கமாக காரில் செல்வோம்.

I usually only see them at Christmas or weddings.

நான் வழக்கமாக கிறிஸ்துமஸ் அல்லது திருமணங்களில் மட்டுமே அவர்களைப் பார்க்கிறேன்.

He usually gets home about six o'clock.

அவர் வழக்கமாக ஆறு மணியளவில் வீட்டிற்கு வருவார்.

I usually just have a sandwich for lunch.

நான் வழக்கமாக மதிய உணவிற்கு ஒரு சாண்ட்விச் தான்.

Usually we go skiing in February.


வழக்கமாக நாங்கள் பிப்ரவரியில் பனிச்சறுக்கு செல்வோம்.

occasionally - எப்போதாவது

I see him occasionally in town.

நான் எப்போதாவது ஊரில் அவரைப் பார்க்கிறேன்.

I occasionally watch TV.

நான் எப்போதாவது டிவி பார்ப்பேன்.

We occasionally meet for a drink after work.

நாங்கள் எப்போதாவது வேலைக்குப் பிறகு ஒரு பானத்திற்காக சந்திக்கிறோம்.

She often felt sick and occasionally vomited.

அவள் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல், அவ்வப்போது வாந்தியெடுத்தாள்.

sometimes - சில நேரங்களில்

I sometimes see him in the street.

நான் சில நேரங்களில் அவரை தெருவில் பார்க்கிறேன்.

Sometimes I go by car.

சில நேரங்களில் நான் காரில் செல்கிறேன்.

He sometimes writes to me.

அவர் சில நேரங்களில் எனக்கு எழுதுகிறார்.

She sometimes goes away at weekends.

அவள் சில நேரங்களில் வார இறுதி நாட்களில் போய்விடுவாள்.

They sometimes use a helicopter to get around.


அவர்கள் சில நேரங்களில் ஒரு ஹெலிகாப்டரைப் பயன்படுத்துகிறார்கள்.

மேற்கண்ட உதாரணங்களைப் போல கீழ்கண்ட வார்த்தைகளையும் நாம் காலத்தில் தான் Simple Present
Tense பயன்படுத்த வேண்டும்.

often - பெரும்பாலும்

rarely - அரிதாக

frequently - அடிக்கடி

nowadays - இப்போதெல்லாம்

naturally - இயற்கையாகவே

seldom - எப்போதாவது

constantly - தொடர்ந்து

never - ஒருபோதும்

every a week - ஒவ்வொரு வாரமும்

every year - ஒவ்வொரு வருடமும்

once a year - வருடத்திற்கு ஒருமுறை

on a week - ஒரு வாரத்தில்

at times - சில நேரங்களில்

at present - தற்போது

now and then - இப்போது மற்றும் பின்னர்

all the time - எல்லா நேரமும்

daily - தினசரி

You might also like