Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 7

வலை வைநாசிகம்

வைநாசிக நட்சத்திரம் எதற்கு பயன்படுகிறது


வைநாசிகம் என்றால் உடலை வதைக்கும் என்று
பொருள். சந்திரனிலிருந்து 22
நட்சத்திரம் தான் வைநாசிகம் நட்சத்திரம் ஆகும்
வைநாசிக அதிபதி நட்சத்திரம் இருக்கும் நட்சத்திரம்
நோய் காட்டுகிறது
88 வது பாதம் என்பது என்ன

ஓர் ஆண் நட்சத்திரத்திற்கு 22


வது நட்சத்திரம் வைநாசிக் நட்சத்திரம் பெண்ணை
இணைக்க கூடாது.

பெண்ணின் 22 நட்சத்திரமான ் ஆணை இணைக்க கூடாது.


88 நவ நவாம்சம் வர்க்க சக்கரம்

ஜாதகரின் வைநாசிக் நட்சத்திரம்


அன்று,எந்த நல்ல செயலும் வேண்டாம்
இதில் அபிஜித் நட்சத்திரம் சேர்க்க வேண்டுமா

அப்ப 17 வது நட்சத்திரத்திலும் எதுவும் செய்யக்கூடாது அது சந்திராஷ்டம ஸ்டார்


சொன்னாங்களே....17/22 இரண்டும் கூடாதா....
22வது நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்தால் அது
சம்பந்தமான பாதிப்பு இருக்கும்
இது காலபுருஷ அமைப்பு படியா அல்லது ராசிப்படியா அல்லது லக்னப்படியா
ராசி படி

எதனால்
அப்படி கேட்டேன் என்றால் காலபுருஷனுக்கு 22 வது நட்சத்திரம்
திருவோணம் வரும் அங்கு தான் அபிஜித் நட்சத்திரம் உள்ளது
நோய் எப்படி வருகிறது 22 வது நட்சத்திரம் மூலம்

உத்தாராடம் 3,4 பாதம்.

திருவோணம்1,2 பாதம்
.
அபிஜித் நட்சத்திரம்.

காலபுருஷனின்,10ம்
பாவத்தில்,கர்மகாரன் முதல் வீட்டில் தொழில்ஸ்தானத்தில்
உள்ளார்கள்.அங்கு செவ்வாய் ( உத்வேகத்தின்,முயற்சி, காரகன்) உச்சம்.
காலை11.16 முதல் 12.18 வரை ,அபிஜித் நேரம்.

ஒவ்வொரு லக்னத்திற்கு 4 பாவம் அபிஜித் லக்னம் விழும்.


கேள்வி கேட்டு பல தகவல்கள் தெரிந்து கொண்டேன்

மேலும் தகவல் இருந்தால் பதிவு செய்யலாம் வதை-வைநாசிகம் - ஒரு ஜோதிடப்


பார்வை.

பெண்ணுக்கும் ஆணுக்கும் திருமணப் பொருத்தம் பார்த்தலில் வதை-வைநாசிகப்


பொருத்தம் என்பது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது முதல் பொருத்தமாக பார்க்கப்படுவது தினப்


பொருத்தம் எனும் நட்சத்திரப் பொருத்தமாகும்.

இந்த நட்சத்திரப் பொருத்தத்தில் பெண்ணின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து


எண்ண வரும் 2-4-6-8-9 வது நட்சத்திரங்கள் ஆணின் ஜென்ம நட்சத்திரங்களானால்
அவை பொருந்தும். 3-5-7 ஆக வரும் நட்சத்திரங்கள் பொருந்தாது என்பது
கொள்கையாக கொள்ளப்படுகிறது.

இவற்றுள் 2-4-6-8-9 ஆக வரும் நட்சத்திரங்களை முறையே சம்பத்து ஷேம சாதக மைத்ர


பரமமைத்ர தாரா என்றும். 3-5-7 ஆக. வரும் நட்சத்திரங்களை முறையே விபத்து
பிரத்யக் வதை தாரா என்றும் சொல்லப் படும். இவற்றை பொதுவாக தாரா பலம்
என்பர்.
2-4-6-8-9 இவற்றின் அனு ஜென்மங்களாக (11-13-15-17-18) நட்சத்திரங்களும் திரி
ஜென்மங்களாக (20-22-24-26-27) நட்சத்திரங்களும் அமையும்.

இதேபோல் 3-5-7. இவற்றின் அனு ஜென்மங்களாக (12-14-16) நட்சத்திரங்களும் திரி


ஜென்மங்களாக (21-23-25) நட்சத்திரங்களும் அமையும்.

இங்கு நாம் கருத்தில் கொள்வது வதை நட்சத்திரம் எனப்படும் 7-வது நட்சத்திரமும்


வைநாசிக நட்சத்திரம் எனப்படும் 22-வது நட்சத்திரமும் மட்டுமே.

பெண்ணின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து 7-வது நட்சத்திரம் வதை என்பதால் அது


ஆணின் ஜென்ம நட்சத்திரமாக இருக்க கூடாது என்பது ஒரு விதி.

பெண்ணின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து 4-வது நட்சத்திரம் ஷேம நட்சத்திரம்


என்பதால் அது ஆணின் ஜென்ம நட்சத்திரமாக இருக்க பொருத்தம் உண்டு. ஆனால்
அந்த ஷேம நட்சத்திரத்தின் திரிஜென்மமாக வரும் 22-வது நட்சத்திரம் வைநாசிகம்
என்பதால் பொருந்தாது என்பது மற்றொரு விதி.

இதில் அந்த 22-வது நட்சத்திரத்தில் (சில சமயங்களில் 23-வது நட்சத்திரத்தில்)


அமையும் 88-வது பாதம் மரண பாதம் என்பதால் அது ஆணின் ஜென்ம நட்சத்திரமாக
அமையக்கூடாது என்பது குறிப்பான விதி.

இந்த இரண்டு விதிகளும் பெண் மற்றும் ஆணின் திருமணப் பொருத்தத்தில் சேர்ந்து


அமையும்போது அது வதை-வைநாசிகப் பொருத்தம் என்பதால் தவிர்க்கப்பட
வேண்டும் என்பது விதியாக உள்ளது.

அதாவது பெண்ணின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து 7-வது ஆக அமையும்


நட்சத்திரம் ஆணின் ஜென்ம நட்சத்திரமாகி வதைதாரா என்றால் அந்த ஆணின்
ஜென்ம நட்சத்திரத்திலிருந்து எண்ணிவர பெண்ணின் நட்சத்திரம்
22-வது நட்சத்திரமாக அமைந்து வைநாசிக தாரா ஆகிவிடுகிறது. இது வதை-
வைநாசிகத்தை தருவதால் பொருந்தாது எனக் கூறப்பட்டு விட்டது.

வதை என்றால் எல்லோருக்கும் சாதாரணமாக புரியும். வதம்,வதைத்தல்,சம்ஹாரம்


செய்தல்,அழித்தல்,கொடுமை செய்தல் மற்றும் கேடு செய்தல் என்ற அர்த்தங்களை
தருவது.

ஆனால் வைநாசிகம் என்றால் என்ன? வைநாசிகம் என்றால் 23-என்று பொருள். இதை


மந்திர நூல்களில் கெட்ட எண்ணாக கூறுவது உண்டு.(எண்ணியல் ஜோதிடர்கள்
கவனத்திற்கு சந்திரனும் குருவும் சேர்ந்து குருச் சந்திரயோகமாக புதனின் எண்ணை
தரும் 23 கெட்ட எண்) மந்திர மஹோததி எனும் மந்திர சாஸ்திரத்தில் 23வது ஆவரண
தேவதையாக பஹளாதேவி குறிப்பிடப் படுகிறாள். இவள் முக்கோணத்தை
கவிழ்த்துப்போட்டு இரண்டாவது கோணத்தில் அமர்ந்துள்ளதாக
வர்ணிக்கப்படுகிறாள் என்று கூறினார்.மேலும் வைநாசிகம் என்றால் அழிவுக்கு
(Perishable) உள்ளாவது என்ற அர்த்தம் உள்ளது

இங்கு 23 என்று எப்படி வருகிறது என்ற கேள்வி வருகிறது. நாம் அபிஜித்தை நீக்கி 27
நட்சத்திரங்களை கணக்கில் கொள்ளும்போது 7-22 ஆக வதை-வைநாசிகம்
சொல்லப்படும். அபிஜித்தை சேர்த்து 28 நட்சத்திரங்களாக கணக்கில்
கொள்ளும்போது 7-23 ஆக வதை-வைநாசிகம் அமையும்.
இந்த வதை-வைநாசிகம் தரும் பலன்தான் என்ன? பெண்ணின் ஜென்ம
நட்சத்திரத்திலிருந்து 7வது வதை நட்சத்திரமாக ஆணின் ஜென்ம நட்சத்திரமாக
அமைந்தால் அந்த ஆண் தன் மனைவியை கொடுமைப் படுத்துவான் வதம் செய்வான்
என்பது பலனாகிறது. அதேசமயம் அந்த ஆணின் ஜென்ம நட்சத்திரத்திலிருந்து 22/23
ஆக பெண்ணின் ஜென்ம நட்சத்திரம் அமைவதால் அந்த பெண்ணால் ஆணானவன்
அழிந்து படுவான் என்பதும் பலனாகிறது. இங்கு ஆண் அழிந்துபட்டால் பெண்
விதவையாகி விடுவாள் என்ற தன்மையில் வதை-வைநாசிகப் பொருத்தம்
வைதவ்யத்தை தரும் என்றனர்.

இது பொது நிலையில் கூறப்பட்டாலும் 22-வது நட்சத்திரத்தின் 4-வது பாதம்(அதாவது


ஆணின் ஜென்ம நட்சத்திர பாதத்தில் இருந்து 88-வது பாதமாக பெண்ணின் ஜென்ம
நட்சத்திர பாதம் அமைய)இந்த பலன் உறுதி செய்யப் படுகிறது.

பெண்ணின் ஜென்ம நட்சத்திர பாதத்தில் இருந்து ஆணின் ஜென்ம நட்சத்திர பாதம்


88-ஆக அமைவது இயல்பாகவே தவறு என்றும் வைநாசிகம் தரும் என்பதும்
சொல்லப்பட்டு விடுகிறது.

இந்த வதை-வைநாசிகத்தை கொண்டு வேறு எங்கெங்கு பலன் காணலாம் என்பதே


இக்கட்டுரையின் முக்கிய நோக்கம் ஆகும்.

இதற்கு முதலில் வைநாசிகப் பாகைகள் என்பதை வரையறை செய்வோம்.


காலப்புருஷனின் 21-வது நட்சத்திரம் உத்திராடம். 22-வது நட்சத்திரம் திருவோணம்.
இது நமது கணிதவியல் வசதிக்காக வைத்துள்ள 27 நட்சத்திர எண்ணிக்கை
அமைப்பில் வருவது ஆகும்.

உத்திராட நட்சத்திரத்தின் 4-ம் பாதமும் திருவோண நட்சத்திரத்தின் 1-ம் பாதத்தில்


உள்ள ஆரம்ப பங்கும் சேர்ந்து 4°19' அளவுள்ள பகுதியே அபிஜித் நட்சத்திரத்தின்
பங்காகும். அதாவது காலப்புருஷனின் 276°40' முதல் 279°59' வரையுள்ள பகுதியே
அபிஜித் நட்சத்திரத்தின் பங்காகும். இந்தவகையில் கொள்ளும்போது 28
நட்சத்திரங்களும் அதில் 22-வது நட்சத்திரமாக அபிஜித்தும் 23-வது நட்சத்திரமாக
திருவோணமும் அமைந்து விடும். இந்த அபிஜித்தின் பாகமே ஒவ்வொரு
நட்சத்திரத்திலிருந்தும் வைநாசிக பாகமாக/பாதமாக /88வது பாதமாக/மரண
பாதமாக கொள்ளப்படுகிறது.

இதை எங்கெல்லாம் பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.

முதலில் திதியை எடுத்துக் கொள்வோம். சூரியன் நின்ற தீர்க்காம்சத்திலிருந்து 84°


முதல் 96° வரை சந்திரன் சஞ்சரிப்பது அஷ்டமி திதி ஆகும்.

சந்திரன் சஞ்சரிக்கும் தீர்க்காம்சத்துடன் 276° 40' சேர்த்து அதற்கு மேல் 4° 19' அமையும்
ராசியின் பங்கு குறிப்பிடும் காரகங்கள் உடல் பாகங்கள் சூரியனின் காரகங்களால்
பாதிக்கப்படும். இது குறிப்பாக பொருளாதாரத்தில் பிரச்சனையை தரும்.

வதை-வைநாசிகம் தம்பதிகளிடையே பிரிவினையை தருமா?

ஜோதிட நூல்களில் வதை-வைநாசிகம் என்பது தம்பதிகளிடையே பிரிவினையை


தரும் என்று பொதுவாக கூறப்பட்டுள்ளது.அதற்குமேல் விரிவாக ஏதும்
சொல்லப்படவில்லை என்ற கருத்து முன் வைக்கப்பட்டது.இது சம்பந்தமாக
தேடியபோது...
காலவிதானம் என்ற நூலில் ஸ்லோகம் 273 முதல் 279 வரை வதை-வைநாசிக
பலத்தை காசியப மகரிஷி கூறுவதாக சொல்லப்பட்டதை காண்போம்.

காரத்திகை-ஆயில்யம்
ஆயில்யம்-சுவாதி
சித்திரை-பூராடம்
அனுசம்-அவிட்டம்
அவிட்டம்-பரணி
சதயம்-கார்த்திகை

என பெண் மற்றும் ஆணின் ஜென்ம நட்சத்திரங்கள் அமைந்து வதை-வைநாசிகமாக


தம்பதியருக்கு மரணத்தை பலனாக சொல்ல வேண்டும்.

திருவாதிரை-உத்திரமும்
பூரம்-அனுசமும்
பூசம்-சித்திரையும்

தம்பதியரானால் வதை-வைநாசிகம் சுகத்தை உண்டு பண்ணும்.

புனர்பூசம்-அஸ்தமும் தம்பதியரானால் வதை-வைநாசிகம் வம்ச விருத்தியை தரும்.

கேட்டை-சதயமும் தம்பதியரானால் வதை-வைநாசிகம் வம்ச நாசத்தை செய்யும்.

மிருகசிரீடம்-பூரமும்
அஸ்தம்-மூலமும்
தம்பதியரானால் வதை-வைநாசிகம் தாரித்திரியத்தை உண்டு பண்ணும்.

ரோகிணி-மகமும்
பூரட்டாதி-ரோகிணியும்
தம்பதியரானால் வதை-வைநாசிகம் சந்தான ஸமிர்த்தியை (விருத்தி) செய்யும்.

அசுவினி-புனர்பூசமும்
சுவாதி-உத்திராடமும்
தம்பதியரானால் பெண் குழந்தைகளே பெறுவர்.

ரேவதி-திருவாதிரையும்
மிருகசிரீடம்-பூரமும்
தம்பதியரானால் இருவரும் வைரம். அதாவது பகையாய் இருப்பர்.

மகம்-விசாகமும் தம்பதியரானால் பிள்ளையில்லை.

விசாகம்-திருவோணமும் தம்பதியரானால் சக்களத்தி யோகம் உண்டாகும்.


தம்பதியரிடையே பகை உண்டாகும் எனும் கருத்தும் உண்டு.

திருவோணம்-அசுவினியும் தம்பதியரானால் பிரிந்து விடுவர்.

உத்திரட்டாதி-மிருகசிரீஷமும் தம்பதியரானால் வைதவ்யம் ஏற்படும்.

உத்திராடம்-ரேவதியும் தம்பதியரானால் போக போக்கியங்கள் அதிகம் உண்டாகும்.

மூலம்-பூரட்டாதியும் தம்பதியராக பரஸ்பரம் அதிக சிநேகமாக இருப்பர்.


பரணி-பூசமும் தம்பதியராக சௌபாக்ய ஸமிர்த்தி (விருத்தி) உண்டு.

இந்தப்படி வதை-வைநாசிகங்கள் பார்த்து சுபபலனைக் கூட்டி அசுப பலன்களை


தவிர்க்க வேண்டும் என காசியப மகரிஷி கூறுகிறார்.

மிருகசிரீஷம்-பூரமும் தம்பதியரானால் ஸ்லோகம் 276-ல் தாரித்திரியம் என்ற பலனும்


ஸ்லோகம் 277-ல் தம்பதியர் பகையாயிருப்பர் என்றும் சொல்லப் பட்டுள்ளது.

முடிவாக எல்லா வதை-வைநாசிகங்களும் தீமை செய்வதில்லை என்பது தெரிய


வருகிறது.

ஆதிரை(ராகு)-உத்திரம்(சூரியன்)
பூரம்(சுக்)-அனுசம்(சனி)
பூசம்(சனி)-சித்திரை(செவ்) வதை-வைநாசிக இணைவு சுகத்தையும்

புனர்பூசம்(குரு)-அஸ்தம்(சந்) வதை-வைநாசிக இணைவு வம்ச விருத்தியையும்

அசுவதி (கேது)-புனர்பூசமும் (குரு)


சுவாதி (ராகு)-உத்திராடமும் (சூரி) இணைய பெண்குழந்தைகளையும் (அக்காலத்தில்
இதுவும் தோஷமே)

உத்திராடம்(சூரி)-ரேவதி (புதன்) இணைவு போக போக்கியத்தையும்

மூலம்(கேது)-பூரட்டாதி(குரு) இணைவு நட்பையும்

என வதை-வைநாசிக இணைவு நன்மையும் தருவதாக கூறப்பட்டுள்ளதையும்


கவனத்தில் கொள்ள வேண்டும்.

காலப்பிரகாசிகா கூறும் வதை-வைநாசிக பலன்கள்:

சூரியன் மற்றும் புதனின் நட்சத்திரங்கள் வதை-வைநாசிகங்கள் ஆனால் உண்டாகும்


பலன்கள்:
கார்த்திகை-ஆயில்யம் விலக்க வேண்டும்
உத்திரம்-கேட்டை ?
உத்திராடம்-ரேவதி சகல போகம் உண்டாகும்

சந்திரன் மற்றும் கேதுவின் நட்சத்திரங்கள் வதை-வைநாசிகங்கள் ஆனால்


உண்டாகும் பலன்கள்;
ரோகினி-மகம் சந்தான விருத்தி
அஸ்தம்-மூலம் தாரித்திரியம்
திருவோணம்-அஸ்வினி தம்பதியர் பிரிவு

செவ்வாய் மற்றும் சுக்ரனின் நட்சத்திரங்கள் வதை-வைநாசிகங்கள் ஆனால்


உண்டாகும் பலன்கள்:
மிருகசீரிஷம்-பூரம் தாரித்திரியம்/தம்பதியரிடையே பகை
சித்திரை-பூராடம் விலக்க வேண்டும்
அவிட்டம்-பரணி விலக்க வேண்டும்

ராகு மற்றும் சூரியனின் நட்சத்திரங்கள் வதை-வைநாசிகங்கள் ஆனால் உண்டாகும்


பலன்கள்:
திருவாதிரை-உத்திரம் சுகம் தரும்
சுவாதி-உத்திராடம் பெண் குழந்தைகளே பெறுவர்
சதயம்-கார்த்திகை ?

குரு மற்றும் சந்திரனின் நட்சத்திரங்கள் வதை-வைநாசிகங்கள் ஆனால் உண்டாகும்


பலன்கள்:
புனர்பூசம்-அஸ்தம் வம்ச விருத்தி
விசாகம்-திருவோணம் தம்பதியரிடையே பகை
பூரட்டாதி-ரோகினி சந்தான விருத்தி

சனி மற்றும் செவ்வாயின் நட்சத்திரங்கள் வதை-வைநாசிகங்கள் ஆனால் உண்டாகும்


பலன்கள்:
பூசம்-சித்திரை சுகம் தரும்
அனுசம்-அவிட்டம் விலக்க வேண்டும்
உத்திரட்டாதி-மிருகசீரிஷம் கடுமையான விளைவு

புதன் மற்றும் ராகுவின் நட்சத்திரங்கள் வதை-வைநாசிகங்கள் ஆனால் உண்டாகும்


பலன்கள்:
ஆயில்யம்-ஸ்வாதி விலக்க வேண்டும்
கேட்டை-சதயம் பொருந்தாது
ரேவதி-திருவாதிரை தம்பதியரிடையே பகை

கேது மற்றும் குருவின் நட்சத்திரங்கள் வதை-வைநாசிகங்கள் ஆனால் உண்டாகும்


பலன்கள்:
அஸ்வினி-புனர்பூசம் பெண் குழந்தைகளே பெறுவர்
மகம்-விசாகம் தீய குணமுள்ள பிள்ளை பிறப்பு
மூலம்-பூரட்டாதி செல்வ விருத்தி

என காலப்பிரகாசிகா வதை-வைநாசிக பலன்களாக கூறுகிறது

வதை-வைநாசிகத்தை கொண்டு தசா புத்தி பலன் காண இயலுமா என்பதை


காண்போம்.

ஜென்ம நட்சத்திரதின் கிரஹம் வதை நட்சத்திரத்தின் கிரஹம்


(திசை நடத்தும் கிரஹம்) (புத்தி நடத்தும் கிரஹம்)
சூரியன் புதன்
சந்திரன் கேது
செவ்வாய் சுக்ரன்
ராகு சூரியன்
குரு சந்திரன்
சனி செவ்வாய்
புதன் ராகு
கேது குரு
சுக்ரன் சனி

ஜென்ம நட்சத்திரத்தில் திசை நடத்தும் கோள் நின்று வதை நட்சத்திரத்தில் புத்தி


நடத்தும் கிரஹம் நின்றால் அது நல்ல/சரியான பலனை தராது.

மேற்படி தசா புத்தி காலங்களில் ஜாதகருக்கு 7-ஆம் பாவ காரகங்களால் நெருக்கடி


பிரச்சனைகள் உண்டாகும்.
மேற்படி காலகட்டங்களில் மனைவியால் பிரச்சனைகள் நேரிடும்.

அதேபோல் ஜாதகரின் தொழில் பங்குதாரர்களால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஆனால் இதிலும் விதி விலக்காக சுக்ர திசை சனி புத்தி நல்ல பலன்களை தருவதை
வதை-வைநாசிக பலன்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த விதியை பொதுமைபடுத்தினால் திசை நடத்தும் கிரஹம் நின்ற


நட்சத்திரத்திலிருந்து 7-வது நட்சத்திரமான வதை நட்சத்திரத்தில் ஒரு கிரஹம் நின்று
புத்தி நடத்தினால் அந்த புத்தி தரும் பலன்கள் நல்லவையாக அமையாது.

மேற்கூறிய வதை-வைநாசிக பலன்களை ஜாதகரின் தசா புத்தி பலன்களுடன்


ஒப்பிட்டு சரியாக வருகிறதா என்பதை ஜோதிடர்கள் ஆய்வு செய்து தங்களின்
மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் திரேக்காணம்.22
திரேக்காணம் மேல். கோச்சார சனி,குரு,ராகு, சம்பந்தம்.ஆயுள் கண்டம்.
திரேக்காணம் நோய் களை அறிய உதவும்.
'/

You might also like