03 Nandriyurai

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 6

சுருக்கக் குறிப்புகள்

தொல்காப்பிய மூலம்என வரும் இடங்களில் முதல் எண் நூற்பா


எண்ணையும் அடுத்துவரும எண்/எண்கள் நூற்பாவின் அடி/அடிகளைக் குறிக்கும்.

தொகைநூல் பாடல்களை மேற்கோள்களாகக் காட்டும்போது, அவை


முழுஎண்ணாக (145, 152 போல) இருந்தால் பாடல் முழுவதும் மேற்கோளாகும்.
அவ்வாறு இல்லாத இடங்களில் பாடலின் எண்ணும் மேற்கோளாகவரும் அடிகளின்
எண்களும் குறிக்கப்பட்டுள்ளன.

தொகைநூல் பாடல்களை மேற்கோள்களாகக் காட்டும்பொழுது பெரும்பாலும்


டாக்டர்.உ.வே. சாமிநாதையரின் பதிப்புகளே கொள்ளப்பட்டுள்ளன. கருத்து
விளக்கத்திற்காகப் பேராசிரியர் ஔவை சு.துரைசாமிப் பிள்ளை அவர்களின்
புறநானூறு நற்றிணை ஐங்குறு நூறு பதிற்றுப் பத்துப் பதிப்புகளும்
பயன்படுத்தப்பட்டுள்ளன. குறுந்தொகைக்கு மகாவித்வான் இரா. இராகவையங்கார்
அவர்களின் பதிப்பும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நற்றிணைக்குப் பின்னத்தூர் அ.
நாராயணசாமி அய்யர் பதிப்பும் கலித்தொகைக்குச் சி.வை.தாமோதரம் பிள்ளை
பதிப்பும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அகநானூறு முற்றிலும் உரையுடன் கூடிய கழகப்
பதிப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மர்ரே எஸ்.ராஜம் அவர்களின்
தொகைநூல் பதிப்புகளும் (மூலம்) பயன்படுத்தப்பட்டுள்ளன.

Monier-Williams இன் A Sanskrit-English Dictionary மேற்கோளாகக்


காட்டப்படும்போது, அதன் எண் பக்கத்தைக் குறிக்கும். T.R.Turner இன் A
comparative Dictionary of Indo-Aryan Languages மேற்கோளாகக்
காட்டப்படும்போது அதன் எண் அகராதியில் இடம்பெற்றுள்ள சொல்லின்
எண்ணாகும்.

தொல்காப்பியப் பொருளதிகாரம் தொடர்பாகக் கருத்துகளைத்


தெரிவிக்கும்போது இளம்பூரணர் உரையும் நச்சினார்க்கினியர் உரையும் பேராசிரியர்
உரையும் ஒப்பு நோக்கும் முறையில் எடுத்தாளப்பட்டுள்ளன.

DED: Dravidian Etymological Dictionary

i
அதன் அடிக்குறிப்பில் குறிக்கப்பெறும் எண் அவ்கராதியில் இடம்பெற்றுள்ள
சொல்லின் எண்ணாகும். தமிழ்-லெக்சிகனை மேற்கோளாகக் காட்டும்போது, அதன்
பக்க எண் குறிக்கப்பட்டுள்ளது.

ப. என்பது ஒரு பக்கத்தை மட்டும் குறிக்கும்


பக். என்பது ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களைக் குறிக்கும்.

ii
என்னுரை
‘பண்பாட்டு மானிடவியல் நோக்கில் சங்க இலக்கியங்களின் விளக்கம்’
என்னும் தலைப்பில் ஒரு குறுகிய கால ஆய்வுத் திட்டத்தின்கீழ் ஆய்வு செய்ய
வாய்ப்பளித்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு முதற்கண் என்
நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆய்வினைத் தொடங்கிய பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு மிக


விரிவானதாக இருந்ததால், அதனைப் ‘பழந்தமிழ் மக்களின் தொல்சமயம்’ (Proto
Religion of the Ancient Tamils) என்று மாற்றிக் கொள்வதற்கு ஒப்புதல் வழங்கிய
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு என்ஆழ்ந்த நன்றியினை மீண்டும்
தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்ஆய்வுத் திட்டத்திற்கு அனுமதி வழங்கிய செம்மொழித் தமிழாய்வு


மத்திய நிறுவனத்தின் முன்னாள் பொறுப்பு அலுவலர் முனைவர் பேராசிரியர்
க.இராமசாமி அவர்களுக்கு என்பணிவார்ந்த நன்றியினைப் பதிவு செய்கின்றேன்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளராகப் பொறுப்பேற்றுக்
கொண்ட நாளிலிருந்து தொலைபேசி வாயிலாக இவ்ஆய்வினைத் தொடரும்படி
ஊக்கமளித்த நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் மு.முத்துவேலு அவர்களுக்கு
மனமார்ந்த நன்றி உரித்தாகுக.

இவ்ஆய்வுத் திட்டத்தை நான் ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து அவ்வப்போது


ஆய்வு தொடர்பாக என்னோடு விவாதித்த புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு
ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் (பொறுப்பு) முனைவர் சீ.பக்தவத்சல பாரதிக்கு நன்றி
கூறுதல் என்கடமையாகும். இவ்ஆய்வினைப் ‘பழந்தமிழ் மக்களின் தொல்சமயம்’
என்னும் தலைப்பில் குவிமுனைப்படுத்தும்படி அவர் ஆலோசனை கூறியதற்கேற்ப,
ஆய்வு முன்னெடுத்துச் செல்லப்பட்டது. அவருக்கு மீண்டும் நன்றி!

பதுக்கை நடுகல் முதுமக்கள் தாழி போன்றவை பற்றித் தன்னுடன்


விவாதிப்பதற்கு வாய்ப்பளித்த புதுவைப் பல்கலைக்கழகத் தொல்லியல்துறைப்
பேராசிரியர் அறிஞர் முனைவர் கா.இராஜன் அவர்களுக்கு நான்மிகவும்
கடன்பட்டுள்ளேன். அவர்தம் ஆய்வுகளில் கண்டெடுத்திருந்த பதுக்கை நடுகல்
முதுமக்கள் தாழி ஆகியவற்றின் புகைப்படங்களை இவ்ஆய்வேட்டில்

iii
பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் அளித்த பெருந்தன்மைக்கு நன்றி கூறிக்
கொள்கின்றேன்.

மானிடவியல் தொடர்பான நூல்களைத் தந்து என்னை ஊக்கப்படுத்திய


பேராசிரியர் முனைவர் ஆ.தனஞ்சயன் அவர்களுக்கும் பேராசிரியர் முனைவர்
செல்லப் பெருமாள் அவர்களுக்கும் நன்றிகள்!

ஆய்வேட்டை அறிஞர்கள் குழுவின்முன் அளிப்பதற்காக அதனைக்


கணிணியில் அழகுற அச்சிட்டுக் கொடுத்த நண்பர்கள் முனைவர் எழில் வசந்தன்.
ஆய்வாளர் திரு லோகநாதன். திரு.க. சிவானந்தம் ஆகியோருக்கு என் நன்றிகள்!

ஆய்வேடு பற்றிய நேர்காணல் 2012 ஜுலைத் திங்களில் நடைபெற்றதும்


அதனைச் செம்மைப்படுத்திக் கொடுக்கும்படி பணிக்கப்பட்டது. அதன் பொருட்டு
ஆய்வேட்டைப் படித்துப் பார்த்தபோது, சில முரண்களும் இடைவெளிகளும்
இருப்பது புலப்பட்டது. எனவே, ஒவ்வொரு இயலாக மீண்டும் எடுத்துக்கொண்டு
நான் தொகுத்திருந்த தரவுகளை மானிடவியல் பார்வையில் எழுதத்
தொடங்கினேன். ஒவ்வொரு இயலையும் எழுதி முடித்தபின் கணினிக்குக்
கொடுத்தேன்; மெய்ப்பினைத் திருத்தும்போது. புதிய வெளிச்சங்கள் சில கிடைத்தன;
அவற்றையும் மெய்ப்போடு இணைத்து மீண்டும் கணினிக்குக் கொடுத்தேன்;
ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒருபுதிய வெளிச்சம் கிடைத்துகொண்டே இருந்தது;
ஒவ்வொரு இயலும் ஐந்துமுறை திருத்தித் திருத்தி அச்சிடப்பட்டது.

எட்டாவது இயலான ‘சடங்குகள்’, முதலில் அளித்த ஆய்வேட்டில்


இடம்பெறவில்லை. ‘சடங்குகள்’ பற்றிய ஆய்வில்லாமல், ஆய்வேடு நூலாக
வெளிவருவது ஆய்வின் போதாமையைக் (deficiency) காட்டுமென நான்
உணர்ந்ததால், ‘சடங்குகள்’ பற்றிய இயல் புதிதாக எழுதிச் சேர்க்கப்பட்டது.
இவ்வியலும், நான் எதிர்பார்த்தற்கு மேலாக ஒருதனி ஆய்வு போல நீண்டுவிட்டது;
எனவே, அதனையும் மேலே கூறியவாறு பலமுறை திருத்தித் திருத்திச் செப்பம்
செய்தேன்; இதன் காரணமாக, எதிர்பார்த்தற்கு மாறாகக் காலத்தாழ்வு
ஏற்பட்டுவிட்டது.

என்னுடைய அடித்தல் திருத்தல் எல்லாவற்றையும் பொறுமையாகப் படித்து


ஒவ்வொரு இயலையும் அழகுறக் கணினியில் வடித்துக் கொடுத்த திருமதி.

iv
R.பாக்கியலட்சுமி அவர்களுக்கும் அவருடைய இளவலும் அன்புத் தம்பியுமான
திரு. G.விஜயகுமார் அவர்களுக்கும் நன்றி சொல்வதற்கு என்னிடம் சொற்கள்
இல்லை. எட்டு மாதங்களாக என்னோடு அவர்களும் கடுமையாக உழைத்து இதனை
உருவாக்கியுள்ளனர்; அவர்களை வணங்கி மகிழ்கின்றேன்.

2009-ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டு ஓராண்டிற்குள்


முடிக்கப்பட வேண்டிய இவ்ஆய்வு, ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகக்
காலத்தை எடுத்துக்கொண்டது. அதற்குரிய காரணங்களைப் பதிவு செய்வது என்
கடமையாகும்.

ஆய்வுத் தலைப்பான ‘தமிழ் மக்களின் தொல்சமயம்’ மிகவிரிவான ஆய்வு.


தொல்காப்பியத்தையும் தொகைநூல் பாடல்களையும் முழுமையாகப் படித்து
மானிடவியல் நோக்கில் தரவுகளைத் தொகுக்க வேண்டியிருந்தது. எனக்கு முற்றிலும்
புதிய துறையான மானிடவியலின் அடிப்படை நூல்களைப் பயின்று அவற்றை
உள்வாங்கிக் கொண்ட பின்னரே, ஆய்வைத் தொடங்க வேண்டியிருந்தது.
அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டுத் தீவிரச் சிகிச்சை பெற வேண்டிய
சூழல்! இவற்றினிடையில் எங்கள் ஊரில் நான் குலதனமாகப் பெற்றிருந்த
திருக்கோயில்களைப் புதிதாகக் கட்டிக் குடமுழுக்கு நடத்த வேண்டிய தவிர்க்க
முடியாத கடமைச் சூழல்களால், ஆய்வேட்டைப் பணிப்பதில் காலம் நீண்டு
விட்டது.

குடும்பத்தினர்களும் உறவினர்களும் மருத்துவர்களும் உடல் நலத்தைக்


கருதி ஆய்வைத் தொடர வேண்டாமென்று என்னைத் தொடர்ந்து
வற்புறுத்தியபோதிலும், விடாப்பிடியாக ஆய்வைத் தொடர்ந்தமைக்கு இறைவன்
திருவருளே காரணமாகும்! என்னுள் இருந்து இதனை எழுதிய கண்ணன்
எம்பெருமான் திருவடிகள் என் தலைமேலன!
உடல் நலம் குறைந்து துன்புற்றபோதும் எழுதும்போது சோர்வுற்றபோதும்
எல்லா வகையாலும் எனக்குத் துணையாகவிருந்து என்னைத் தொடர்ந்து
எழுதும்படி ஊக்குவித்த என்இல்லத்தரசி திருமதி.திருவரங்கத்திற்கு என்
வாழ்த்துகள்!

25.03.2013

v
புதுச்சேரி. அ.பாண்டுரங்கன்

vi

You might also like