Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

பெறுநர் :

செய்திஆசிரியர்

பொருள் : டாக்டர் எம்.ஜி.ஆர் பாலிடெக்னிக் கல்லூரி, ஆரணி .

“Dr.MGR POLY CEEMA 2K18” மாநில அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம்

ஆரணி டாக்டர். எம்.ஜி.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில், ஏ.சி.எஸ். கல்விக் குழும


நிறுவன தலைவர் டாக்டர். ஏ.சி.சண்முகம் மற்றும் மேலாண்தலைவர் Er. ஏ.சி.எஸ்.
அருண்குமார் அவர்களின் நல்லாசியுடன்‌
, “Dr.MGR POLY CEEMA 2K18” என்ற மாநில
அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் 02.03.2018 வெள்ளிக்கிழமை சிவில்,
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் மாணவர்களால்
சிறப்பாக நடத்தப்பட்டது.

கல்லூரி செயலாளர் திரு ஏ.சி.ரவி அவர்கள் தலைமையில், கல்லூரி முதல்வர்


திரு.டி.ஆறுமுகமுதலி முன்னிலையில், துறை தலைவர் திருமதி P.கோமளவல்லி
வரவேற்க, துறை தலைவர்கள் திரு.R.சிவராமன், திரு. K.பாலசுந்தரம், திரு.A.கார்த்திகேயன்,
திரு.V.பெரியசாமி, திரு.R.சீனிவாசன் வழி நடத்துதலில் கருத்தரங்கம் சிறப்பாக
நடைபெற்றது.

இம்மாநில கருத்தரங்கில் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் உட்பட


பல்வேறு மாவட்டங்களை சார்ந்த 40 பாலிடெக்னிக் கல்லூரிகளின் பல்வேறுத் துறை
மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய அரிய படைப்புகளை சமர்பித்து சிறப்பாக
விளக்கினர்.

ஸ்ரீ பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியின் துறைத்தலைவர்கள் டாக்டர்


V.ராமசாமி,(MECH), திரு.T.இளங்கோவன் EEE, டாக்டர் S.விஜயகுமார் PHYSICS. நடுவர்களாக
இருந்து கருத்தரங்கை நடத்தி தந்தனர். அவர்கள் கருத்துறையில் மாணவர்கள் தங்கள்
படைப்புகளை உருவாக்கும் போது அவர்களுக்கு பகுப்பாய்வு,ஆழ்ந்தறிவு, ஆளுமைத்திறன்,
மென்திறன் மேம்பாட்டு, ஒற்றுமை உணர்வு, தன்னம்பிக்கை வளரும் என்று கூறினார்கள்.

ஒவ்வொரு துறையிலும் சிறந்த மூன்று படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அப்படைப்பாள்


மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

இக்கல்லூரியில் பணியமர்த்துப்பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வாண்டு


இதுவரை 202 மாணவர்கள் பணியமர்த்தப்பட்டுவுள்ளனர். எங்கள் கல்லூரி மாணவர்கள்
மட்டுமல்லாது ஆரணியை சுற்றி உள்ள தனியார் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி
மாணவர்களும் எங்கள் கல்லூரியில் யுரேக்கா போர்ப்ஸ், பிரேக்ஸ் இந்தியா,சோளிங்கர்.
பிரேக்ஸ் இந்தியா,பாடி.. பிரேக்ஸ் இந்தியா,கேலம்பாக்கம். TVS ட்ரைனிங் சர்வஸ்,

விக்னேஷ் பாலிமர், நோக்கியா சொல்யூஷன் நெட்வொர்க், போன்ற பன்னாட்டு
நிறுவனங்களால் நடத்தப்பட்ட வளாக நேர்காணலில் பங்கேற்று வேலைவாய்ப்பைப் பெற்று
உள்ளனர். ஆஸ்ஸி இந்தியா(GLASS) LTD. ஜி.எம்.அசோசியேட்ஸ். மற்றும் SP இன்ஸ்ட்டிட்யூட்
நிறுவனங்கள் மார்ச் இரண்டாம் வாரத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளனர்.

இச்செய்தியை தங்கள் நாளிதழில் வெளியிட வேண்டுகிறேன்.

You might also like