Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

தலைப்பு : வேற்றுமை உருபு

மூன்றாம் வேற்றுமை – ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்

எ.கா

1. ஆல் – அந்த மரங்கள் விறகு வெட்டியால் வெட்டப்பட்டது.

2. ஆன் – புறத்தூய்மை நீரான் அமையும்.

3. ஒடு – மணிவிழியொடு பாடினான்.

4. ஓடு – தங்கை அம்மாவோடு மளிகைக் கடைக்குச் சென்றாள்.

5. உடன் – சிறப்பு விருந்தினர் தலைமையாசிரியருடன் பள்ளியை வலம் வந்தார்.

தலைப்பு : வேற்றுமை உருபு


நான்காம் வேற்றுமை – கு

எ.கா – பள்ளிக்கு, அவனுக்கு, ஆசிரியருக்கு, திடலுக்கு, குமரனுக்கு

‘வேற்றுமை உருபு கு’ பயன்படுத்தப்பட்ட சொற்களுக்குக் கோடிடுக.

1. அப்பெரியவர் மாணவர்களுக்கு இலவச புத்தகப்பையை அன்பளிப்பாக வழங்கினார்.

2. நோன்புப் பெருநாள் முன்னிட்டு முஸ்லிம் அன்பர்கள் மசூதிக்குச் சென்று சிறப்பு


தொழுகையை மேற்கொள்வர்.

3. திரு.குமரன் தன் மகனுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கித் தந்தார்.

4. திருமதி. லதா அலுவலகத்திற்குச் சென்று தன் காலைச் சிற்றுண்டியை உட்கொண்டார்.

5. வாசுகி தன் தாயாருக்குப் பூங்கொத்தையும் மோதிரத்தையும் பரிசாகக் கொடுத்தாள்.

You might also like