Download as txt, pdf, or txt
Download as txt, pdf, or txt
You are on page 1of 122

சந்த வசந்தம்

http://groups.yahoo.com/group/santhavasantham/
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவியரங்கம் :14
தலைப்பு: இப்படி நானிருந்தால்.....
செப்டெம்பெர் , 2004
தலைவர்: கவிஞர் N. சுவாமிநாதன்
============
1.
அன்பர்களே,

பதினான்காவது கவியரங்கம் செப்டெம்பெர் மாதம் 4 ந்தேதி தொடங்கும்.


தலைவர்: கவிஞர் N. சுவாமிநாதன்
தலைப்பு: இப்படி நானிருந்தால்.....

நெருப்பாக நானிருந்தால்....
பெண்ணாக நானிருந்தால்...
ஆணாக நானிருந்தால்..
நீராக நானிருந்தால்...
குழந்தையாய் நானிருந்தால்...
கடவுளாய் நானிருந்தால்...
பறவையாய் நானிருந்தால்..
காற்றாக நானிருந்தால்...
ஊமையாய் நானிருந்தால்..
சர்வாதிகாரியாய் நானிருந்தால்..
காலமாய் நானிருந்தால்...
நானாக நானிருந்தால்..
பூவாக நானிருந்தால்...
இளைஞனாய் நானிருந்தால்..
போஜனாய் நானிருந்தால்..
நா னின்றி நானிருந்தால்
எண்ணம்போல் நானிருந்தால்
நிலவாக நானிருந்தால்
சித்தனாய் நானிருந்தால்

30 ஆண்டுகளுக்கு முன்பு இதே தலைப்பில் ஒருகவியரங்கம் நடந்தது.


பெண்ணாக நானிருந்தால் என்ற தலைப்பில் கவிமாமணி இளையவன், பறவையாய்
நானிருந்தால் எனுந்தலைப்பில்
கவிமாமணி மதிவண்ணன், நெருப்பாக நானிருந்தால் எனுந்தலைப்பில் கவிஞர்
கே.வி. இராமசாமி ஆகியோரது கவிதகைள் மிகச் சிறப்பாக அமைந்தன.
குழந்தையாய் நானிருந்தால் என்ற தலைப்பில் நான் கவிதை
பாடினேன். கவிமாமணி இளங்கார்வண்ணன் தலைமை என நினைவு
அதில் ஒரு சிமிழ்.
அத்தனை பெண்களும் தாயாகும்-அவர்
அன்புமடி என்றன் பாயாகும்
முத்தம் தருவது நானாகும்-அதை
முந்தித் தருவது தேனாகும்

நினைவில் நிற்கும் கவியரங்கமாக அது அமைந்தது.


இங்கும் அதைவிடச் சிறப்பாக அமையும்.

கவிஞர்களுக்கு ஏற்ற தலைப்பை கவியரங்கத்தலைவர் வழங்குவார்.


எனக்கு நான் ஏற்கனவே எழுதியுள்ள தலைப்பை விடுத்து வேறு தலைப்புக் கொடுக்க
வேண்டுகிறேன்.

அன்புடன்
இலந்தை
===========

2.
கடவுள் வாழ்த்து

வேதப் பொருளானை வேழ முகத்தானை


வேல்முருகன் வெல்லத் துணையாகப் போனானை
வேண்டுவோர்க்கு வந்த விடரெல்லாங் களைவானை
வேண்டியே பணிவோம் தலை.

சந்தவசந்தத்தின் 14 வது கவியரங்கம் (இதுவாக நானிருந்தால்)

இருக்கும் நிலையில் உழன்று வெம்பாமல்


............எதுவாய் இருந்தால் என்றே சோம்பாமல்
இதுவாய் இருந்தால் அதுவாய் இருந்தால்
............என்ற எண்ணம் நமக்கு சுகம்தருமே
மாற்றம் செய்தே வாழ்வை மாற்றிடவே
............தோற்றம் யாவும் கண்முன் காணுவோமே

எண்ணங்கள் மனதில் உறையும் வரைபடமாம்


............வண்ணமாய் தீட்டிய ஓவியமாய் விளங்குமாம்
எண்ணிய மனத்தின் வளத்தை உரைக்குமாம்
............கண்ணுக்கு அழகான காட்சிகள் காட்டிடுமாம்

பறவை தங்கும் ஆலயம் போலவாம்


அறிஞர் கவிஞர் அமரும் இவ்வரங்கம்
அவையில் சொல்லும் பாக்களிலே யிருந்து
சுவைப்போம் நாமும் நல்லதொரு விருந்து

இதில் பங்கு பெற இருக்கும் கவிஞர் வரிசை

1. கவிமாமணி இலந்தையார்.......(ஊமையாய் நானிருந்தால்)..


2. முனைவர் பசுபதி......(நானின்றி நான் இருந்தால்)...
3. முனைவர் அனந்த்.....(நெருப்பாக நானிருந்தால்)....
4. கவிஞர் மதுரபாரதி.....(காற்றாக நானிருந்தால்)
5. கவிஞர் சேவியர்.......(பெண்ணாக நானிருந்தால்)
6. கவியோகி வேதம்...........(சித்தனாக நானிருந்தால்)
7. கவிஞர் ஆசாத்...........(நானாக நானிருந்தால்)
8. கவிஞர் செளந்தர்......(பறவையாக நானிருந்தால்)
9. முனைவர் ராஜரங்கன்....(இளைஞனாய் நானிருந்தால்)
10. கவிஞர் லாஸ் ஏஞ்சலஸ் ராம்........(சர்வாதிகாரியாய் நானிருந்தால்)..
11. முனைவர் நா. கண்ணன் (ஜெர்மனி)........(கடவுளாய் நானிருந்தால்)...
12. கவிஞர் சின்னக் கண்ணன்.....(பூவாக நானிருந்தால்)
13. கவிஞர் கஜன்.......(நிலவாக நானிருந்தால்)
14. கவிஞர் புகாரி.........(நீராய் நானிருந்தால்)
15. கவிஞர் புஷ்பா கிறிஸ்டி (ஆணாக நானிருந்தால்)
16. கவிஞர் ஹரிப்பிரசன்னா (குழந்தையாய் நானிருந்தால்)
17. கவிஞர் ஹரிகிருஷ்ணன் (காலச்சிறகுடன் நானிருந்தால்)
18. கவிஞர் வீரராகவன் (மிருகமாக நானிருந்தால்)
19. கவிஞர் R.S. மணி (மகுடியாய் நானிருந்தால்)
20. முனைவர் வாசுதேவன் (மந்திரவாதியாய் நானிருந்தால்)
கவிஞர் பற்றிய குறிப்பு

பங்கேற்க வரும் முதல் கவிஞர் திரு. இலந்தை ராமசாமி அவர்கள்.


கவிமாமணி, பாரதி பணிச்செல்வர் பட்டங்கள் பெற்றவர்.
1959 லிருந்தே கவிதை எழுதி வருபவர்
அமுதசுரபி குறுநாவல் போட்டியில் முதல் பரிசு வென்றவர்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவியரங்கங்களில் பங்கேற்றவர்
பதினைந்து நூல்கள் எழுதியவர்
'தினம் ஒரு கவிதை'யில் 'விருத்தம் எழுத வருத்தம் எதற்கு'
என்ற தலைப்பில் அறுசீர், எழுசீர், எண்சீர் விருத்த வகைகளை
எளிய முறையில் விளக்கி தொடர் கட்டுரைகள் எழுதியவர்
நண்பர்களின் கவிதைகளில் இருக்கும் பிழைகளை அவர்கள்
மனம் நோகாது சுட்டிக் காட்டித் திருத்துபவர்.

கவிஞர் கவிமாமணி இலந்தையாருக்கு அழைப்பு

இம்மென்றால் இருநூறு கவிதை பாடும் இலந்தையாரே


இன்று உம் தலைப்போ "ஊமையாய் நானிருந்தால்"
ஊமையாய் நீரிருந்தால் என்னாகும் என்று சொல்லும்
கை சைகையால் அல்ல, கவிதையில் !

இரு வேண்டுகோள்கள்

1. மரபிசைக் கச்சேரிகளில், தேர்ந்த இசைக் கலைஞர்கள் தாங்கள் பாடிய, பாட இருக்கும்


பாடல்களின் இராகத்தைச் சொல்வதை இழுக்காக நினைக்கிறார்கள். கேட்கிறவர்கள்
கண்டுபிடிக்கட்டும் என்று பேசாமலிருந்து விடுவார்கள். ஆனால் இங்கு, மரபிசைக்
கவிஞர்கள் தாங்கள் எழுதும் மரபுக்கவிதை
பாடல்களின் வகைகளையும் (எ-டு. கழிநெடிலடி அறுசீர் விருத்தம்; கட்டளைக் கலித்துறை;
வெண்பா) சிறு குறிப்பாய் எழுதுவது மரபுக்கவிதையில் அதிகம் தேர்ச்சி பெறாத, ஆனால்
கற்கும் ஆர்வம் உள்ள பார்வையாளர்களுக்கு உதவியாக இருக்கும்.

2. பங்கேற்பவர்களின் கவிதைகளைப் பாராட்டி, விமரிசித்து, தங்கள் கருத்தை


சொல்லுவது அவர்களுக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுக்கும்.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
3.
முன்னுரை
=======
ஒவ்வொரு கவியரங்கமும் ஒவ்வொரு புதுமையாய்த் தொடங்குகிறது.

இந்தக் கவியரங்கத்தில் கவிதை என்ன பா அல்லது பாவகை என்பதைத் தெரிவித்தால்


நன்று எனத் தலைவர் சொல்கிறார்.
( குறிப்பு: இலக்கணத்தில் ஆர்வமில்லாதவர்கள் இந்த முன்னுரையைத் தள்ளிவிட்டு
நேரடியாகக் கவிதைக்குப் போய்விடலாம்)
"ஊமையாய் நானிருந்தால் "என்பது என்பது என்கவிதைத் தலைப்பு. இதை எந்தப்பாவில்
எழுதலாம் எனச் சிந்தித்தேன். எனக்கு முதலில் அருணகிரியின் கந்தரனுபூதியில் வரும்
சும்மா இரு சொல்லற என்னும் சொற்றொடர் நினைவுக்கு வந்தது. எனவே அந்தச்
சொற்றொடரை அப்படியே பயன்படுத்த எண்ணினேன்.கந்தரனுபூதி கலிவிருத்தத்தில்
அமைந்தது. நான்கு சீர் விருத்தம் . நேரசையில் தொடங்கினால் அடிக்குப்
பதொனோரு எழுத்துகள். நிரையசையில் தொடங்கினால் 12.(மெய்யெழுத்தைவிட்டு
எண்ணவேண்டும்.)
இப்படித் தொடங்கினேன்

மறையின் பொருளைத் தெளியும் முனிவோர்


இறையை அடைய எளிய வழியாய்
முறையே மவுன மொழிதான் எனவே
அறைவார் அதனை அருண கிரியார்

'சும்மா இருசொல் அறவென் றனரே


அம்மா, அதனை அடையப் பலபேர்
எம்மாம் பெரிய தவமாற் றுகிறார்
எம்மால் இயலும் எளிதாய் அதையே!

முதல் பாடலில் ஒவ்வோரடிக்கும் 12 எழுத்துகள்


இரண்டாம் பாடலில் 11
எழுத்தெண்ணிக்கொண்டு கவிதை எழுதுவதில்லை.
இலக்கணப்படி எழுதினால் எழுத்தெண்னிக்கை தானாக அமைந்துவிடும்.

பிறகு இப்படியே தொடர்ந்தால் "ஊமையென நானிருந்தால் " அல்லது ஊமையாய்


நானிருந்தால் என்ற சொற்றொடரை அப்படியே பயன்படுத்த இயலாமல் போயிருக்கும்.
அப்படியே பயன்படுத்தும் வண்ணம் அமைந்த பாவகைகளை எண்ணிப்பார்த்தேன்..
எண்சீர் விருத்தத்தில் அமைப்பது மிக எளிது. நான்கு சீர்களும் காயாய் அமையும்
அறுசீர் விருத்தமும் வாகாகும்.

எ.கா

கல்லால மரநிழலில் சொல்லாமல் மோனத்தால் கற்பிக்கின்ற


எல்லாமும் வல்லகுரு என்றனது குருவெனவே ஏற்பேன் நானே
சொல்லாமல் சொல்லுவதன் சூக்குமத்தைத் தேர்கின்ற சூழ்ச்சி பெற்றால்
பொல்லாத மொழியாலே போராட்டம் ஏதிங்கே புகலுவீரே!

ஊமையென நானிருந்தால் உள்ளபடி பிறபுலன்கள் ஊக்கம் கொள்ளும்


ஆமையென உள்ளடங்கி அமையாமல் ஆகாயம் தொட்டுப் பார்ப்பேன்
பூமியிது பாரத்தைச் சுமந்தாலும் சுற்றுகையில் புலம்ப வில்லை
நேமிஎனத் திரிகின்ற கதிரோனும் பேசாமல் நிதம்செல்கின்றான்

இன்னும் சிறிய அமைப்பாகச் செய்ய முடியுமா என யோசித்ததில் சிந்துப்பாடல் வகைகளில்


இரட்டைச்
சமநிலை பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது பாரதியின் "சின்னஞ் சிறுகிளியே"
இந்த வகை.

ஒவ்வோர் அரையடியிலும் வெண்டளை பிறழாது( விதிவிலக்கு: நிரையில் தொடங்கும்


புளிமாச்சீர் முதலில் வந்தால் அடுத்து நேரசைவரும். இதிலும் எழுத்தெண்ணிக்கையைப்
பார்க்கலாம். ஒவ்வோர் அரையடிக்கும் 7 (எழுத்துகள்(விதிவிலக்கு: இரண்டாவது சீரின்
மையத்தில் நெடில் வந்தால் 6 எழுத்துகள்) தனிச்சொல் கணக்கில் வராது

இதோ அந்தக் கவிதையின் முதற்கண்ணி


கண்ணி என்றால் ஒத்த இரண்டு அடிகளைக் கொண்டது

ஊமையாய் நானிருந்தால்- பேசா


உன்னதம் கொண்டிருந்தால்
சாமி அருகினிலே - செலும்
சாதகம் செய்திருப்பேன்

இலந்தை
===============
கலகலக்கும் சொல்கொடுத்து மனம் நகைக்க வைக்கிற
கலைபலத்தில் கவிசிரிக்கும்,பொருள்விரிக்கும் அற்புதம்
இலையிவர்க்கும் இணையெனப்பேர் எடுத்திருக்கும் சாமியே
நலமுயிர்க்கும் அரங்குயிர்க்க நகையுதிர்த்து வெல்கவே!

ஊமையாய் நானிருந்தால்?

ஊமையாய் நானிருந்தால்- பேசா


உன்னதம் பெற்றிருந்தால்
சாமி அருகினிலே- செலும்
சாதகம் செய்திருப்பேன்

மோனம் பெரிய தவம்- அதன்


மூலமே அந்த சிவம்
வானம் அருகில்வரும்- இது
வாங்கிக் கொணர்ந்தவரம்

பேசா அநுபூதி-நாம்
பெற்றால் இலை பீதி
ஏசாத நல்லவன்நான் - உளத்தில்
எட்டிடும் வல்லவன்நான் (ஊமையாய்)

பிழையாய்ப் பேசிவிட்டு - சொல்லைப்


பேணாது வீசிவிட்டுக்
கழிவிரக்கம் கொள்ளும் - உம்மைக்
கண்டென் மனம்நகைக்கும்-

வாயாடி என்றெனையே-எவரும்
வார்த்தை சொலப்போமோ?
ஓயாது பேசுவதும் - ஒரு
ஊனம் அறிவீரோ? (ஊமையாய்)

கண்ணாலே பேசுகிற- அந்தக்


காதல் அனுபவத்தை
எண்ணியே பாருங்கள்- பேசா
ஏற்றம் புரிந்துவிடும்

ஐந்து புலன்களிலே - ஒன்று


அடைபடும் போது
விந்தைப் பலம்பெறுமாம்- இங்கே
மிஞ்சும் புலன்களெல்லாம்

ஆற்றல் புலன்களையே-நானும்
ஆண்டு புகழ்பெறுவேன்
ஊற்றம் உளத்தினுள்ளே- நாளும்
ஓடவிட்டுப் பார்ப்பேன் (ஊமையாய்)

திட்டிய போதினிலும்- பிறர்


சீறிய போதினிலும்
சட்டை செயமாட்டேன்- வீணாய்ச்
சண்டையிட மாட்டேன்

வாயாலே கெட்டவர்கள் - இந்த


மண்ணில் நிறையவுண்டு
மாயா உலகத்திலே - அந்த
வாட்டம் எனக்கில்லை

கேலியும் கிண்டல்களும்- மனம்


கீறிடும் பேச்சுகளும்
மேன்மேல் விழுவதனால்- அடி
வீழ்ந்து மரத்துவிடும் (ஊமையாய் )

எண்ணக் குறிப்பறிவார்- இறைக்கு


ஈடென்பார் வள்ளுவனார்
கண்னில் குறிப்பறியும் - நான்
கடவுள் போலாவேன்

(ஐயப் படாஅ தகத்துணர்வானைத்


தெய்வத்தோடொப்பக் கொளல்- குறள்)

மூன்று மணிநேரம் - தினம்


மோனத்திருந்துவிடின்
ஆன்ற பெருஞ்சித்து - நமை
அண்டி வருமென்பார்

நாளெல்லாம் மோனம்தான் - எனை


நண்னும் பெருஞ்சித்து
ஊளை மொழியகன்ற - இந்த
ஊமை ஒரு சொத்து (ஊமையாய்)

எல்லோருமே பாதி- ஊமை


என்ப தறிவீரா?
சொல்ல முடியாமல்- எண்ணம்
சுருண்டு போகிறதே

சூரியன் ஓரூமை- வார்த்தை


சொல்லியா சுற்றுகிறான்?
காரிருளும் ஒளியும் - அந்திக்
கனவும் ஊமைகளே

அவசியம் இல்லையெனில் - வாயை


யாரும் திறக்காதீர்
தவசிகள் சொன்ன மொழி - இது
சத்தியமான வழி

எந்தக் குறையினிலும் - ஒரு


ஏற்றம் இருக்குமென
சிந்தை அறிந்துவிடின் - வாழ்வில்
சிக்கல்கள் ஏதுமில்லை (ஊமையாய்)

இலந்தை
4-9-2004
=======
ஊமை குறையிலையே -என்ற
. உண்மை எடுத்துரைத்தீர்
தீமை பெயரிலன்று -- நமது
. சிந்தை தளத்தினிலே

பசுபதி
=============
வாயால் ஊமையானாலே
இவ்வளவு நன்மைகளென்றால்
கையும் ஊமையானால் - என்
எழுத்தின் உளரல் நிற்கும்!
அன்புடன்,
ஆர்.எஸ்.மணி
==========
சொத்தென் றுரைத்தவரே சோகத்தைச் சொல்லாம(ல்)
உத்தமமாய் வந்தகவி; உள்ளம் உறைந்ததே

அன்புடன்
கஜன்
==========
நாவலர் என்றிருந்தேன் - பேசா
நல்லவன் என்றுசொல்லி
பாவன்மை காட்டிவிட்டீர் - வாழ்க!
பன்முறை போற்றுகிறேன்.

அன்புடன்
மதுரபாரதி
===========
சும்மா இருந்தே
அம்மா தவரும்
தம்முள் அறிவார்
பெம்மான் இறையை

..அனந்த்
=============
இலந்தை சொல்லழகு- என்னை
இங்கு மயக்கியது
கலங்கரை விளக்கம் -அவர்
கவி இலக்கணமே!

ராஜரங்கன்
==========
பூட்டைப் போடென்றால் - இந்த
நாவும் கேட்கிறதா
வேட்டை கிடைத்ததுவாய் - பேய்
ஆடிக் களிக்கிறதே

மோனச் சிறைவாசம் - தரும்


ஞான உதயத்தைக்
காணத் துடிக்கின்றேன் - அந்த
வானம் வசப்படுமோ

சிறிய அடிகளுக்குள் அமையும் இந்த வகையினை இன்றுதான் முயற்சி செய்தேன்.


அறிமுகப்படுத்திய இலந்தை அய்யாவிற்கு நன்றிகள். கவிதைகளைப் படிப்பதுடன்
அதே சந்தத்தில் இரண்டு வரி முயற்சி செய்தால் என்னவெனத் தோன்றுகிறது.

அன்புடன்
ஆசாத்
===============
இருள் என்பது குறைந்த ஒளி - பாரதியின் வரிகளைப் போல்
'எல்லொரும் பாதி ஊமைதான் அறிவீரா ' இலந்தையாரின் கவிதை
வரிகள் எனக்குள் தொடர்ந்து பல சிந்தைனைகளைத் தூண்டி
வருகின்றன.

கனன்று கனன்று இன்னொரு நெஞ்சில் கவிதையை உருவாக்கும்


வரிகள் தான் சிறப்பான கவிதையாகும் என நினைக்கிறேன்.
இலந்தையாருக்கு அன்பான பாராட்டுக்கள் வணக்கங்கள்.
அன்பினிய

பா வீரராகவன்
============

4.
சந்த வசந்தக் கவியரங்கம் - 14

கவிஞர் இலந்தையாருக்கு பாராட்டு

ஊமையாயிருந்தால் என்னத்தைச் செய்ய முடியும் என்ன சொல்லுவாரோ


என்று நினைத்திருந்த போது, 'சொல்லறத்து சும்மா இருக்கிற' கடினமான
சாதகம் எளிதாகக் கை வந்து விட்டதையும், அதானால் இனி இறையை எளிதாய்
அடையலாம் என்று சுட்டினார் கவிஞர்.

கவிமாமணியாச்சே.
இதை எப்படி எல்லாம் பாடலாம் என்றும் அழகாக சொன்னார்.
அட்டேங்கப்பா. நாலு சீர், ஆறு சீர், எட்டு சீர் விருத்தம், இரட்டை
சமநிலை, கண்ணி....எவ்வளவு சமாசாரம்.
(பார்வையாளர்கள் மரபுப்பாடல் பற்றிய தங்கள் சந்தேகங்களை
இங்கேயே எழுப்பலாம். பதில் கிடைக்கும்.)

கவிஞர் இலந்தையார் குறுக எழுதி நிறையச் சொல்லிவிட்டார்.


முதல் கவிதையிலேயே அரங்கம் களை கட்டிவிட்டது.

கவிஞர் இலந்தையாருக்கு நன்றி.

*******************

**************************************

அடுத்து வரும் கவிஞர் முனைவர் பசுபதி

சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும்,


ஐ.ஐ.டி(சென்னை)யில் முதுகலைப் பட்டமும், அமெரிக்காவில் யேல்
சர்வகலாசாலையில் முனைவர் பட்டமும் பெற்றவர். இப்பொழுது
கனடாவில் டொரான்டோ பல்கலைகழகத்தில் மின்பொறியியல் துறைப்
பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
இவருடைய விருப்பமான பொழுது போக்குகள்: திருப்புகழ் கூட்டிசை;
சித்திரம் வரைதல்; கவிதைகள், தமிழிசைப்பாடல்கள் இயற்றுதல்;
கர்நாடக சங்கீதம், சொல் விளையாட்டுகள், தமிழிலக்கியம், சமயம்
பற்றிய கட்டுரைகள் எழுதுதல், சொற்பொழிவாற்றல்.
Mcalit குழுவில் பாவிலக்கணம் சொல்லித் தருகிறார்.
டொராண்டோவிலிருந்து வெளிவரும் 'மெரினா' என்ற தமிழிதழில்
தொடர்ந்து தமிழிலக்கியக் கட்டுரைகள் எழுதிவருகிறார். இவருடைய
கவிதைகள் 'திண்ணை' யிலும், கலைமகள், அம்மன் தரிசனம், கோபுர தரிசனம்
போன்ற இதழ்களிலும் வந்துள்ளன. இப்போது 'மரபிலக்கியக்' குழுவில்
யாப்பிலக்கணப் பயிற்சிகள் அளித்து வருகிறார்.
ஒவ்வொரு வெள்ளியும் திருமதி தாரா ராகவன் இசையமைத்துப்
பாடிய 'வாரம் சில திருப்புகழ் பாடல்கள்' வலையில் ஏற்றுகிறார்.
வாய்ப்புக் கிடைத்தால் கேட்டு மகிழுங்கள்.
http://www.comm.utoronto.ca/~pas/music/

இவருடைய கவியரங்கக் கவிதைத் தலைப்பு ' நானின்றி நானிருந்தால்'.


'நான்' போய்விட்டால் நானில் ஒன்றுமே மிஞ்சாதே.
பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்தால் பூரணம் மிஞ்சும்
என்பது போல, இங்க என்ன மிஞ்சுமோ? என்னதான்
சொல்றாரு பார்க்கலாம்.
கோனின்றிக் குடியுண்டோ
மானின்றிக் கானகமுண்டோ
வானின்றி வையமுண்டோ
தானின்றிக் குழம்புண்டோ
நானின்றி நானுமுண்டோ
நவில்வீர் நீருமிங்கு !

முனைவர் பசுபதி வருக, வந்து கவிதை தருக !

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

*******************************************************************
பார்வையாளர் 1: : எனக்கு ஒரு சந்தேகம். கவிஞர்கள் தாங்கள் பாடும் பாடல் வகை
என்னனு சொன்னா, 'பார்வையாளர்க்கு' உதவியா இருக்கும்னாரே, தலைவருக்கு எல்லாப்
பாவகையும் தெரியுமாமா?

பார்வையாளர் 2: அதயேன் கேக்கிற. "அட்டேங்கப்பா" ஒரு பாவகைனு நெனச்சிருக்கார்.


தலைவர் கையாளும் முறை சுலபம். ஏதாவது எழுதிட்டு அது என்ன வகைனு பேர்
வெச்சிருவார். இப்படித்தான் ஏதோ ஒரு விசன கவிதை எழுதிட்டு அதுக்கு
45 சீர் வருத்த விருத்தம்னு பேர் வெச்சார்.

பார்வையாளர் 1: 'நானில்லாமல் நானிருந்தால்' ல நான் னா என்னனு தலைவருக்கு


சுத்தமா புரியல. இவருக்கு ஒரு பார்ட்டியில நான் போடாம, சன்னா மட்டும் போட்டு
நானில்லாமல் போனதை நெனச்சு 'நானில்லாமல் நான்'னு புலம்பினாரு. அப்புறம்
சப்பாத்தி கொண்டு வந்து போட்டு இவரு வாய அடைச்சாங்க.

5.
கவியரங்கம்-14
+++/\/\++++

இறைவணக்கம்
===========
வெண்பா
<><><>
நானாரோ? நீயாரோ? நானறியேன்; நீயறிவாய்;
ஆனாலுன் பந்தம் அறிகின்றேன் -- வாழ்நாளில்
மண்ணில் வழியொன்று காட்டு! விடையவனே* ,
உண்மையொளி என்னுள் உணர்த்து.

விடையவன்= 'பதில்'தருபவன்; விடை(எருது)ஏறும் சிவன்

தலைவர்,அவை வணக்கம்
===================
வெண்பா
<><><>
தோமிலா ஆசத்தில் தோய்ந்தகவி அம்பெய்யும்
சாமிநா தப்பேர்ஆ சாமியே! சந்தக்
கவிஞர்காள்! வையக் கலைஞர்காள்! இங்குச்
செவிமடுப்பீர் என்பாச் சிறிது.

ஆசம்= நகைச்சுவை

*********************

நானின்றி நானிருந்தால்
<><><><><><><><>
எண்சீர் விருத்தம்
^^^^^^^^^^^^^^^

நான்:

"நானெனுமோர் நிலையிழந்து வாழும் போது


. ஞாலத்தில் எவ்வுருவில் செய்வேன் யாது ?"
மோனத்தில் மூழ்கினஎன் கனவில் வந்தான்,
. முறுவலுடன் அறிவுரையை முருகன் தந்தான்:
"தானவனாம் சூரனென்றன் தாசன் இன்று ;
. தகுதிபல உடையவனே சாற்றல் நன்று ."
ஞானமதை நல்கிடநான் வேண்டும் நேரம்;
. நாடிவந்த மயிலொன்று நவின்ற சாரம் . (1)

மயில்:
===========
வெண்பா
*******
"யானென்(று) எனதென்(று) இருந்தஎனை ஆறுமுகன்
வானமயில் சேவலென மாற்றினான் -- ஞான
சுகந்தரும் புத்திமதி சூரன்நான் சொல்வேன்:
அகந்தையை இன்றே அகற்று . (2)

அடக்கிய ஆணவம் ஆண்டவன் தொண்டில்


தடம்மாறி நற்செயலாய்த் தாவும் -- இடர்தரும்
யானென(து) என்னும் செருக்கறுப்பான் வானோர்க்(கு)
உயர்ந்த உலகம் புகும். " (3)

நான்:

=============
எண்சீர் விருத்தம்
^^^^^^^^^^^^^^^
தருக்கெனுமோர் பெரும்படியைத் தாண்டிச் செல்வேன்,
. சரவணனின் தொண்டனெனும் பதவி வெல்வேன்;
குருவெனக்குச் சூரனென முடிவெ டுப்பேன் ,
. குக்குடமாய்க் காலையிலே குரல்கொ டுப்பேன்;
சுருதிமுடி ஒலியெழுப்பச் சூரச் சேவல்;
. சோம்பேறி உலகெழுப்ப என்றன் ஆவல்;
பரிதியொளி பரவுமுன்னர் பாலர் காதில்
. பதித்திடுவேன் பாரதியின் 'பாப்பா'ப் பாடல். (4)

சுருதிமுடி=பிரணவம்

பாரதநல் தேசீயப் பறவை ஆவேன்,


. பாரெங்கும் நல்லெண்ணத் தூது போவேன்;
சூரமயில் செய்திடுவான் கந்தன் தொண்டு ;
. சுணக்கமின்றி நான்செய்வேன் மக்கள் தொண்டு .
சேரிகளில் வசதியிலாச் சிறுவர் தம்மை
. 'தித்தித்தா' திமிர்நடையால் சிரிக்கச் செய்வேன்.
தாரணியில் வன்முறையாம் நஞ்சைக் கக்கத்
. தலைதூக்கும் 'பாம்பு'களைத் தாக்கிக் கொல்வேன். (5)

அருந்தமிழ் மறந்தஎன்றன் நாட்டில் சங்கம்


. அகவுவேன் அழகுவன்னத் தோகை ஆட்டி .
மருந்திலா மல்மடியும் கிராமத் தோர்க்கு
. வானூர்தி யாகிநகர் வைத்யம் ஈவேன்.
அருந்திடக் கண்ணீரே அமைந்த நாட்டில்
. ஆடலினால் அடைமழையை ஆர்க்கச் செய்வேன்.
திருந்துவேன் 'நானெனு'மோர் சிரத்தைச் சீவிச்
. 'சிரஞ்சீவி' மயில்சேவல் உருவில் வாழ்வேன். (6)

பசுபதி
~*~o0O0o~*~
============
கடினமான தலைப்புத்தான் ஆனால் என்ன
கவிதையினைப் பசுபதியார் செதுக்கி விட்டார்
வடிவத்தில் முதலாக சேவற் பின்னே
வடிவோடு நடமாடும் மயிலும் ஆனார்
கடிதாக நானுமொரு புள்ளாய் மாறி
காற்றினிலே கலந்துதான் கனடா சென்று
தடியாக ஒருமாலை போட்டு என்றன்
தமிழாசான் தாளினையே பணிந்து நிற்பேன்..
அன்புடன்
சி.க.
============
> <pas_jaya@y...> wrote:
> எண்சீர் விருத்தம்

> "நானெனுமோர் நிலையிழந்து வாழும் போது


> . ஞாலத்தில் எவ்வுருவில் செய்வேன் யாது ?"

எண்சீரில் இயைபுமா! இனி முயற்சி செய்வேன்.

எட்டுச்சீ ரென்றாலே கைகள் தட்டும்


.என்னிதயத் தோரத்தில் தென்றல் முட்டும்
வட்டத்து வளையத்து நாணாய் நாவில்
.வழுவிக்கொண் டோடிடுமே சந்தம் பாவில்
இட்டத்து யாப்பென்றால் எண்சீரன்றோ
.இதுவென்னைத் தளையிட்ட வன்சீரன்றோ :)
சட்டத்திற் கதிபதியாய் நானும் வந்தால்
.சந்தத்தில் எண்சீரே மன்ன னாகும்!

அன்புடன்
ஆசாத்
==========
நானின்றி நானிருந்தால் என்பதற்கும் நானின்றி இருந்தால் என்பதற்கும் பெருத்த
வேறுபாடு. நானின்றி இருந்தால் என்ற தலைப்பிருந்தால்
செல்வேன் கொடுப்பேன் என்று சொல்வதுகூடப் பிழையாகிவிடும்.
நானின்றி நானிருந்தால் என்ற
தலைப்பிற்குச் சூரனை பசுபதி எடுத்துக் கொண்டது வெகு பொருத்தம்.
தான் அழிந்தாலும் தனியாக நின்றவன். அழிந்து வாழ்பவன்.
புள்ளியே இல்லாமல் புள்ளி இருப்பதில்லையா?
பரிமாணம் இல்லாததற்குப் பரிமாணம் கொடுப்பதில்லையா?
நானின்றி நானாக இருப்பதும் அதில் ஒன்று

எண்சீரில் கவிதையெனில் கம்பீ ரத்திற்(கு)


எள்ளளவும் குறையில்லை, சூர பத்மன்
விண்சீரை ஒதுக்கிவிட்டே ஆணவத்தால்
வினைசெய்து வீழ்ந்தாலும், அவனின் தேகம்
புண்சீழாய்ப் போகாமல் காத்த தாலே
புதுவடிவில் நானின்றி நானாய்ப் போனான்
பண்சீரில் சொல்வளரும் கவிதையாக
பசுபதியார் அளித்துள்ளார், வாழ்க, வாழ்க!
இலந்தை
================
அன்பின் இலந்தை, பசுபதி,
உங்கள் இருவரின் இடுகைகள் தொடர்ந்து உடனுக்குடன் வந்தமையால்,
இருவருக்கும் ஒருசேர எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

பேசா திருப்பதுவே பேரின்பம் என்பதுவும்


ஆசான் தினமதிலே ஆசானின் நற்கவிதை
தேனாகத் தித்திக்கும் தெள்ளமுதாய்த் தந்ததுவும்
பேனா எமக்களித்த பேறு

ஊமையாக நானிருந்தால்

தாவிடும் மனமதைச் சடுதியில் வென்றிட


நாவினை யடக்குதல் நலந்தரும் என்பதைப்
பாவினில் மிளிர்ந்திடப் பாங்குடன் வடித்தனை
மேவிடும் சிந்தையுள் வித்தகம் காட்டினை

நானின்றி நானிருந்தால்

மருக்கொழுந்தின் வாசம்சேர் மாலை மார்பன்


. . வள்ளியம்மை மணவாளன் சுவாமி நாதன்
முருகனவன் முன்னின்ற மமதை யாவும்
. . முற்றிலுமே மறைந்தோடி அற்றுப் போகும்
பருவமதில் நானென்று நினைத்த தெல்லாம்
. . பறந்தோடப் புதுவடிவம் பெற்று நிற்கும்
செருக்கொழிந்த நிலையினிலே சேவல் ஆகிச்
. . சேவையெல்லாம் செய்துநிற்கும் தாசன் ஆகும்.

சௌந்தர்
==============
பசுபதி: அற்புதக் கருத்து! அருமைப் படைப்பு!

சூரன் மாய்வின்
சாரம் தனைநீர்
கூறும் அழகில்
ஏறும் மகிழ்வே!

... அனந்த்
========
வானுலக சூரமயில் கந்தனுக்கு
பசுபதியாம் இந்தமயில் எங்களுக்கு! - உயிர்
போனபின் பார்த்திடுவோம் அந்த மயில் - நம்மை
காத்திடுமே இன்றைக்கு இந்த மயில்!

அன்புடன்,
ஆர்.எஸ்.மணி
=========
6.
சந்த வசந்தக் கவியரங்கம் - 14.

இலந்தயாருக்கு பாராட்டு

வேடிக்கையாய் சபைக்கு வணக்கமாய்க் கரணம் போட்டதே


வித்தையாய் நினைத்து வியந்து கைதட்டிய குழந்தையாய்
வீற்றிருந்த தலைவர், வித்தையோன் கண்கட்டிக் கயிற்றிலேறி
விசுவரூபமெடுத்து சுற்றிச் சுழன்று விளையாடுவது கண்டார்
வியப்பில் வாய்பிளந்து சொல்லே வராமல் சும்மாயிருந்தார்
வித்தையை வியந்து அரங்கினர் உற்சாகத்தில் ஒலியெழுப்ப
விளங்கியது வித்தையின் வீச்சும் பரவலும் வெற்றியும் !
ஓரளவு புரிந்தவுடன் தலைவர் மெதுவாய் முனகினார்:

மோனமொரு சாதகமாமே
வானமருகில் வருமாமே
சோதியுமதில் தோன்றுமாமே

வாயாடி என்றேசாராம்
புகன்றதைப் பொறுக்கவேண்டாம்
நுணல்போல் கெடவேண்டாம்

ஊமையொரு ஊனமல்லவாம்
உண்மையிலது சொத்தாம்
உலகிலுயரும் வழியேயாம்

வீணாயினி வாய்திறவேன்
வன்சொல் தவிர்ப்பேன்
வளம்பெற உயர்வேன்

கவிஞர் இலந்தையாருக்கு நன்றி.

அடுத்ததாய் முனைவர் பசுபதி அருமையாய் எண் சீர் விருத்தத்தில்


ஒரு கவிதை வடித்தார்.

'நான்' போனால் அகந்தையும் அகலும். சூரபத்மன் போல்


சேவற்கொடியோன் சின்னமாய், ஏறும் மஞ்ஞையாய் இறைவனோடு
சேர்ந்திடும் என்றார்.

நல்ல கவிதை இட்டதற்கு கவிஞர் பசுபதிக்கு நன்றி.

{முனைவர் பசுபதியின் அவை, தலைவர் வாழ்த்து வெண்பாவின் மூன்றாம் அடியில் " கவிஞர்காள்! வையக்
கலைஞர்காள்!" என்று வருவதைச்சுட்டி,
"நின்றசீர் கவிஞர்காள் = நிரைநேர்நேர் = புளிமாங்காய்
வர வேண்டியது நேர், ஆனால் வரும் சீரோ 'வையக்' என்றுள்ளது. இது
நிரையல்லவா, தளை தட்டியதே " என்று அவைத்தலைவர் கேட்டதும்,
கவிஞர், தலைவரின் தலையைத்தட்டி, "யோவ். ஐகாரக்குறுக்கம் என்று கேள்விப் பட்டதுண்டா?
சீரின்
தொடக்கத்தில் 'ஐ' நெடிலாக ஒலிக்கும்.
அதனால்... வையக் = நேர்நேர் = தேமா" என்று சொன்னதும்,
"ஓ அப்படி ஒன்று உண்டோ, பள்ளியில் தமிழாசிரியர் இதுபற்றி
காலை நாலாவது பிரிவில் சொன்னபோது அவர்குரல் பசிமயக்கத்தில்
தன் காதில் குற்றியலுகரமாய்க் குறுகி ஒலித்து விழாமல் போனதைத் தலைவர் நினைவு
கூர்ந்ததும், இங்கே அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுகின்றன}

அடுத்து வர வேண்டிய கவிஞர் அனந்த் வர கொஞ்சம் நேரம் எடுக்கும்


போல இருக்கிறது. இங்கேதான் பக்கத்தில்
மலையும் மலை சார்ந்த பகுதிகளிலும் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்.
அவர் தலைப்போ "நெருப்பாக நானிருந்தால்". ஏற்கனவே கலிபோர்னியவில்
காய்ந்த புல்செடிகள் பற்றி எரியும். (brushfire). இவர் வேற ஏதாவது கொளுத்திப்
போடாம இருக்கணும்.

அவர் வருமுன் சற்று தற்காப்பாக கவிஞர் மதுரபாரதியை அழைத்துவிடலாம்.


கவிஞர் மதுரபாரதியின் தலைப்பு 'காற்றாக நானிருந்தால்'.
இன்னும் 12 மணி நேரத்தில் இது சந்தவசந்தத்தைக் அடைந்து
குளிர்விக்கும் என்றும், இடியோடு கூடிய பலத்த தூறலோ , பெருமழையோ பெய்ய
வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை சொல்கிறது.

கவிஞர் மதுரபாரதி யார் ?

. பாரதி இயக்கம் - சமுதாய இலக்கிய அமைப்பின் நிறுவனர்-தலைவர்.


. காயத்ரி கேந்திரம் - ஆன்மிக மையத்தின் நிறுவனர்.
. மதுரமொழி (http://mozhi.blogspot.com) வலைப்பூவில் எழுதிவருகிறார்.
. வட அமெரிக்காவில் வெளியாகும் 'தென்றல்' மாத இதழின் ஆசிரியர்.
. தமிழோவியம்.காம் வலைத்தளத்தில் கட்டுரைகள் எழுதிவருகிறார்.
. 'மரபிலக்கியம்' மடலாடற்குழுவின் மட்டுறுத்துனர்.
. சென்னை ஆன்லைன்.காம் வலையிதழின் முன்னாள் தலைமைக் கருப்பொருள்
ஆசிரியர் (Chief of Content).
. அமரர் கல்கி நூற்றாண்டு விழா இசைப் பாடல் போட்டியில் 'முற்றும்
உறங்காதே' என்ற பாடல் முதல் பரிசு;. 'தீ' என்ற சிறுகதை 1990 ல்
கணையாழியில் வெளியாகி அக்டோபர் மாதத்தின் சிறந்த சிறுகதையாக
இலக்கியச் சிந்தனையின் பரிசு ;. 'இளவரசன் வருவான்' என்ற தலைப்பிலான
சிறுகதை கல்கி 1991 தீபாவளி மலரில் ;. 'வடக்கு வாசல்' என்ற தலைப்பில்
வட இந்தியா பற்றிய செய்திக் கட்டுரை 1991-1993 கல்கியில் வாரம் தோறும்
. கணையாழி, கல்கி, அமுதசுரபி ஆகிய இதழ்களில் கவிதைகள்
வெளியாகி உள்ளன.
இலக்கியச் சிந்தனை, சென்னை நண்பர் குழாம், திருச்சி தமிழ்ச் சங்கம்,
திண்டுக்கல் இலக்கிய வட்டம், தில்லித் தமிழ்ச் சங்கம், பாரதி கலைக்கழகம்,
சென்னை வானொலி, கோவை வானொலி மற்றும் தில்லி வானொலி
(தூரக்கிழக்காசியச் சேவை) ஆகியவற்றில் இலக்கியச் சொற்பொழிவுகள்,
ஒலிச்சித்திரங்கள், கவிதை மற்றும் கவிதை நாடகங்கள் வழங்கி உள்ளார்.
கலிபோர்னிய 'பே' ஏரியா (பயப்படாதீங்க, பேய் ஏரியா இல்ல, Bay ஏரியா)
தமிழ் மன்றத்தின் 'பாஞ்சாலி சபதம்' நாடகத்தை வசனம் (ghost writer ?) எழுதி
இயக்கியவர்.

. தன்னம்பிக்கை, வாழ்வில் வளம், விற்பனை, மேடைப் பேச்சு மற்றும்


மேலாண்மை ஆகிய பயிற்சிகளை வர்த்தக மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கும்,
கல்லூரிகளுக்கும் நடத்திவருகிறார்.

In English
. 'The making of a god' was among the top 3 poems
selected for Prize in the All India Poetry Contest jointly
held by the Poetry Society, India and
The British Council Division in India in 1990.

. 'Poets of Colors' won the second prize from the


Association of Business Communicators of India in 1980.

. . A number of poems have appeared in the Indian


Literature (Sahitya Akademi), The Hindustan Times
(New Delhi), Debonair and Femina.

சிண்டிகேட் வங்கியின் பன்னாட்டு வர்த்தகப்பிரிவின் மேலாளராகப்


பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்று தற்போது முழுநேர இலக்கியத்
தொண்டாற்றுகிறார்.

வாங்க கவிஞர் மதுரபாரதி


வந்து மதுரக் கவி தருக !

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

***********************************************************

பார்வையாளர் 1: தலைவர் எல்லாருக்கும் தலைப்பு கொடுத்தாரே.


அவர் தலைப்பு என்னவாம், சொல்லவேயில்லியே ?

பார்வையாளர் 2: என்ன புரியாம பேசறீர்? அவரு கவிதை எழுதறத் தடுக்கறதுக்குதானே


தலைவரா போட்டிருக்கு? தலைவர் கவிதை எழுதறதா, இல்லை தலைமை தாங்கறதா -
எது ரொம்பக் கொடுமைனு பட்டி மன்றம் நடந்துதே, அதுக்கு நீங்க வரலியா?

பார்வையாளர் 1: 'கவியரங்கத்தலைவராக நானிருந்தால்'னு இவருக்கு தலைப்பு கொடுக்கப்


போக,இவர் அதை தப்பா புரிஞ்சிண்டு நாற்காலியை இறுக்கிப் பிடிச்சிண்டுட்டாராம்.
சரி இவரே தலைவரா இருந்து தொலைக்கட்டும்னு விட்டுட்டதாகவும் சொல்றாங்க..

7.
காற்றாக நான் இருந்தால்...

*****************

வாயுதேவனே உன்னை வணங்குகிறேன். நீ கண்கண்ட தெய்வமாக இருக்கிறாய்.


உன்னைக் கண்கண்ட தெய்வம் என்றே போற்றுகிறேன்.

---தைத்திரீய உபநிடதம்: 1.1

*****************

இறைவணக்கம்
-----

சொல்லினுக் கப்பாலாய், சொல்லாய், படிமக்


கல்லினுக் கப்பாலாய், கல்லாய், மாறிவரும்
எல்லினுக் கப்பாலாய், எல்லாமாய் நின்ற
தொல்லினை, நவீனத்தை என்சொல்லி வாழ்த்துவதே!

குருவணக்கம்
-----

அறிவனிவன் அறிந்தும் வாய்மூடிச்


செறிவனிவன் செறிந்தும் ஐயங்கள்
செறுவனிவன் செம்மையன் ரமணகுரு
உறுவனென துள்ளத்தன் உண்மையானே!

அரங்கத் தலைவர் வணக்கம்


-----

ஆயிரம் அவலம் கொண்ட


அன்றாட வாழ்க்கை தன்னில்
வாய்விட்டுச் சிரித்து விட்டால்
வாடிடும் நோயும் துன்பும்;
ஓயாது சிரிக்க வைக்கும்
உத்தமக் கலையைக் கற்றாய்
தூயவா சுவாமி நாதா!
துதித்துனைப் போற்று கின்றேன்!

அவை வணக்கம்
-----

கற்றவர் கவிவரம்
பெற்றவர் பெரியவர்
முற்றிய சபையினில்
உற்றனன் வணங்கினேன்!

காற்றாக நானிருந்தால்...
-----
இளமையில்:

கொடிமுல்லைப் பூவேறி கோபுரத்து மேலேறி


படிப்படியா மேகத்தில் பாஞ்சுபாஞ் சேறியபின்

நிலாவைப் பிடிச்செடுத்து நீலநிற வானத்திலே


உலா வருகையிலே ஒதச்சுப் பந்தாடிடுவேன்

பருவத்தில்:

எமய மலைமேலும் ஏழ்கடலின் ஆழத்திலும்


குமையும் எரிமலைக்கும் கொஞ்சமும் அஞ்சாம

சுத்திச்சுத்தி வந்திருப்பேன் சூரியனைத் தொட்டிருப்பேன்


வத்தாத காதலிலே வையம் தழுவிநிப்பேன்

பூத்தபூப் போலநிக்கும் பொண்ணுங்களின் கன்னத்திலே


காத்துநான் உரசிடுவேன் கழுத்தை வருடிடுவேன்

இன்றைக்கோ...

ஊத்துநீர்க் கேணியிலே ஒத்தையடி எடுத்துவச்சு


நாத்துலே மத்தஅடி நயமா எடுத்துவச்சு

பூத்தபூக் கொள்ளையிலே வாசம் திருடிக்கிட்டு


காத்துநான் வந்திடுவேன் காங்கிரீட்டுக் காட்டுக்குள்ளே!

மினுக்கும் செம்மஞ்சள் மேப்பிள் இலைநெறஞ்ச


கனடாக் கவிஞர்களின் கவிதை திருடிக்கொண்டு

ஆரெஸ் மணிகுரலில் அவற்றைப் பொதிந்தபடி


ஈராக்கின் மக்களுக்கே இளைப்பாறத் தந்திடுவேன்!

உலகத்தின் மூலையிலே ஒவ்வொரு தேசத்திலும்


கலக நெருப்புகளைக் கடுகி அவிச்சுடுவேன்!

ஆதிக்கம் செய்திடவே அலைகின்ற ஆளுவளை


மோதி நொறுக்கிப்பிட்டு மோட்சம் கொடுத்திடுவேன்!

நல்லோர்க்கும் ஞானியர்க்கும் நாளும் உழைப்பவர்க்கும்


மெல்லவே சென்றவரின் மேனி குளிரவைப்பேன்!

காத்தால் அடைச்சதொரு கந்தல் துருத்தியென


சோத்தால் அடைச்சுவெச்ச சோரிக் குரம்பையிதைத்

தூத்தாமல் குண்டலியைச் சோதிநிலை வானமுதில்


ஏத்துவதும் காத்தாலே என்றனரே சித்தர்களும்!

சந்தம் சுமந்துவந்த வசந்தமும் நானேதான்


சொந்தங்களே சொல்லிப்புட்டுச் சுத்திவரப் போய்வாரேன்!

ooxOxoo

அன்புடன்
மதுரபாரதி
===========
இளமையில், பருவத்தில், இன்றைக் கென்றெல்லாம்
வளமான கற்பனையில் வந்ததொரு தென்றல் !
பசுபதி
==========
ஐயா மதுர பாரதியாரே,

வீசிய வேகத்தில் விழிபாதி மூடவும்


வியப்பில் திறப்பதுமாய் ஒரு வாசிப்பு

நதியில் விளையாடி கொடியில் உறவாடி


நடந்த இளந்தென்றலே என்ற கண்ணதாசனின்
ஞாபகமும் வந்தது.

கொடிமுல்லைப் பூவேறி என்ற துவக்கத்திலேயே


மனம் விழிகளில் ஏறிக்கொண்டது

பருவத்தில் என்ற தலைப்பில் சொல்லும் வார்த்தைகளை


ரஜினிகாந்த் கேட்க நேர்ந்தால் ஒவ்வொரு வரியையும்
தன் ஒவ்வொரு படத்துக்கு எடுத்துக்கொண்டுவிடுவார்

இன்றைக்கோ என்ற தலைப்பில் கவிஞன் மனசு


காற்றில் கொதித்துக்கிடக்கிறது அருமையாக....

அளவான அழகான கவிதை!

அன்புடன் புகாரி
===========
மெல்லமெல்ல ஆரம்பிச்சு சூறாவளி ஆக ஆன
மடிப்பாக்கம் காத்ததுவும் மனசை மயக்கிடுதே..
ஆதியோ டந்தமாய் எல்லா விஷயமும்
காதில் ஒலிக்கவைத்த காற்று
ஊற்றுப்போல் பொங்கி உணர்வுகளைத் தீண்டிமன
மா ற்றிய தென்றலிக் காற்று
குறுகுறுத்த கண்கொண்ட காரிகையர் மேலே
குறும்பினைச் செய்ததிக் காற்று.

மதுரபாரதி அவ்ர்களுக்கு அழகிய கவிதையை (சு)வாசிக்க வைத்தமைக்கு நன்றி..


அன்புட்ன்
சி.க.
===========
தேன்மதுரக் கவிஞரே!

காற்று போகும் இடமெல்லாம் - எங்கள்


கவனத்தைக் கொண்டு சென்றீர்!
ஊற்றுபோல் கவிதை கொட்டி
உள்ளத்தை மகிழ வைத்தீர்!

அன்புடன்,
ஆர்.எஸ்.மணி
==========
காற்றைப் பிடித்துக் காவியமாக்கிக்
காலம் வென்றாய் நீ!
சோற்றைத் தின்றே சோர்பவருக்கு
சொர்க்கத் தழுவல் இது!
காற்றில் வருமாம் தீங்குழல் நாதம்
காதில் ஒலிக்க வைத்தாய்!
போற்றுவம் உந்தன் பொற்கவியிங்கு
பொலிவதைக் கண்ணுற்றே!
ராஜரங்கன்
==============
சார்லி, ஃபிரான்செஸ், இவான் என்றெல்லாம் சூறாவளியில் அவதியுறும் இந்தப்
பகுதி மக்களுக்குச்
சந்தம் வீசும்
மந்த மாருதம்

சௌந்தர்
===========
வாக்குக் கெட்டா மனோலயத்தின்
.... வகையினை உணர்ந்த ரமணரைக்கை
தூக்கி வணங்கித் தொழுதவிதம்
.... தொட்டது மனத்தை; காற்றினைநீர்
நோக்கும் பற்பல வகைகளினால்
... நூதன மான நூலிழைகள்
ஆக்கும் எழிலார் ஆடையொன்றை
... அழகுற அணிந்தாள் தமிழணங்கு!

அன்புடன்
அனந்த்
=============

8.
சந்த வசந்தக் கவியரங்கம் - 14

கவிஞர் மதுரபாரதிக்கு பாராட்டு

வாகனம் ஓடுவதும் வானில் உயர்வதும்


விண்வெளி ஆய்வுகளும் வேற்றுக் கிரக
வாழ்வும் வையத் துயிர்கள் மூச்சுமே
வாயு கொடுத்த வளமே..

வசந்த முல்லை போலே அசைந்து


அசைந்தாடி வந்தது இசைத்தென்றல்
இசையால் மயக்கி நறுமணம் தந்தது
அவையும் மயங்கி அமைதியாய் உறங்கலானது
தூங்கலோசை துரிதமாய் எங்கும் பரவியது.

சிறப்பாகக் காற்றைப் பாடிய கவிஞர் மதுரபாரதிக்கு வாழ்த்துகள் !

(அடுத்ததாக வர கவிஞர் சேவியர் தயாராக இல்லை.


உடல்நலம் குன்றியிருக்கும் தன் தந்தையைப் பார்க்க
ஊருக்குப் போயிருக்கிறார். அவர் தந்தையின் உடல்
நலம் விரைவில் தேற கவியரங்கின் பிரார்த்தனைகள்)

முனைவர் அனந்த் இப்பொழுதுதான் கனடாவில் தன்


இல்லத்துக்கு திரும்பி இருக்கிறார். மதுரபாரதியின்
காற்றோடு, Hurricane Frances (ப்ளோரிடாவில்
ஜனித்த சமீபப் புயலின் பெயர்) மழையாக வந்ததாம்.
இரண்டு நாள் ஓய்வு எடுக்கட்டும். அப்புறம் நெருப்பைப்
பத்தி எழுதலாம்)

எனவே நாம் கவிஞர் கவியோகி வேதத்தை அழைக்கிறோம்.

கவிஞர் கவியோகி வேதம்

அத்தாழநல்லூர்க்காரர். ஆனை ஒன்று அழைக்க அரி வந்து காத்த இடம்.


பொருளாதார பட்டதாரி. ரிசர்வ் வங்கியில் மேல்நிலை இன்ஸ்பெக்டராக
வேலைபார்த்து ஓய்வு பெற்றவர்.
இவரது குரு ஸ்ரீ லஹரி மஹாசய பாபா அவர்களை சந்தித்த பிறகு
வாழ்க்கையில் ஒரு இனிய திருப்பம் ஏற்பட்டது. தியான, யோக, சுவாச பயிற்சிகள்
மனத்தை செம்மைப் படுத்தின.

இதுவரை சுமார் 600 கவியரங்குகளில் பங்கேற்புக்கு அன்னை அபிராமியின் அருளே காரணம்


என்று கூறும் இவர், 56 அரங்குகளில் தலைமை வகித்திருக்கிறார். 67 அரங்குகளில்,பாரதி
பற்றி,
சிவ சக்தி பற்றி ஆன்மிக உபன்யாசம். 58 பட்டிமண்டபங்களில் பேச்சு.
தற்போது வீட்டிலேயே உபாசனை; பாரதிகலைக்கழக கவியரங்கில் மாதம் ஒருநாள் கவி படித்தல்

இவர் எழுதிய நூல்களாவன:

1)-காயத்ரியின் காதல்(கவிநூல்)
இது போட்டியில் முதற்பரிசு வாங்கித்தந்தது( அமுதசுரபி குறுங்காவியப்போட்டி)
2)-எளிய யோகாசனங்கள் எனும்யோக நூல் இதுவரை 11 பதிப்பு கண்டுள்ளது.
3)-ஆதிசங்கரரின் ஆறு மதங்கள்-64 பக்க சிறு நூல்..கண்ணதாசன் பதிப்பகம்
4)- தற்போதைய ஸ்ரீகாஞ்சிமாமுனிவர் கவி நூல்..இது
5)-வது-பெண்களுக்கான யோகாசனங்கள் -நூல்- 2 பதிப்பு கண்டது.

காஞ்சி மாமுனியைப் பற்றி இவர் எழுதிய பாடலை நம்ம கனடா மணி சார்
இசையமைத்துப் பாடியிருக்கிறார்.

அப்பா அறுவதடி பாய்ஞ்சா, பெண்ணு முப்பதடியாவது பாயாதா? பெண் சுதா ஒரு


கவிதாயினி. கவிதை, சித்திரம் , இசை என்று அசத்தி பரிசுகள் வென்றிருக்கிறார்.
யூனியன் வங்கியில் வேலை செய்கிறார்.

கவிஞர் கவியோகிக்கு இந்தக் கவியரங்கத்துல என்ன தலைப்பு ?

'சித்தனாக நானிருந்தால்".

இவர் கவிஞர். யோகி. வேதவித்து. இதோட சித்தனாகவும் ஆகிவிட்டால்


என்ன ஆகும்?

சித்தரில் ரெண்டு வகை.

காவிச்சட்டை மொட்டை கொட்டை போட்டு


சித்தனானேண்டி நானும் பழனி சித்தனானேண்டி
பித்த வாத சய ரோகமும் சுத்தமாயண்டாதே
சித்தரத்தை செந்தூர லேகியம் கொடுத்தே
மெத்தப்பொருள் ஈட்டிக் குவிப்பேன் மாதே !
என்பாரோ ?

அல்லாமல்,

நானென தென்றுவினை நாடி அலையாதே


தானவனே யென்று தரியாய்நீ- ஏன்மனமே
வீணாவல் கொள்ளாதே மேலாம் பழம்பொருளைக்
காணாவல் கொள்ளெனக் கருத்தும் உரைப்பாரோ

SVKA- 14. கவிஞர் கவியோகி வேதத்துக்கு அழைப்பு

கவிஞர் கவியோகி வேதம் அவர்களே வருக


வந்து சித்தக் கவிமழை பொழிந்து எங்களைக் கடைத்தேற்றுக

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
*************************************************
பார்வையாளர் 1: தலைவர் தூங்கலோசைனா குறட்டை விடறதுனு
நெனச்சிட்டார். தனக்கு சித்தர்களைப் பத்தி தெரியும்போல பெரிசா
அலட்டிக்கறார்..
சித்தம் சீராயிருப்போர்க்கே சித்தி கிடைக்கும்
சித்தமில்லாதோர் வித்தை யெல்லாம் சிரிப்பேங்கறது இவருக்கு எங்க
தெரியப்போறது?

பார்வையாளர் 2: இன்னொண்ணு கவனிச்சீங்களா? பல கவிஞர்கள்


வங்கி ஊழியர்களா இருக்காங்க. வங்கிக்கு போனா நமக்கு டோக்கனை
கொடுத்து உட்கார வெச்சிட்டு அவங்க கவிதை எழுதப் போயிடறாங்க போல..
================

9.
சித்தனாய் நானிருந்தால்..?

&&&&&&&&&&&(கவியோகி வேதம்)

நகைச்சுவையில் தேர்ந்துள்ள-எம்
..நல்ல தலைவருக்கு
குகைக்குள் குனிவதுபோல்-யான்
..குனிந்துவணக் கம்சொன்னேன்;
..
அரங்கைக் கலக்குகின்ற-கவி
..அற்புதச்சிங் கங்களே!
திரும்பவும் உங்களுக்கும்-இத்
..திசையில்வ ணக்கங்கள்!
..
"சித்தனாய் நானிருந்தால்"-ஓ!
..செகமுருட்டும் நற்தலைப்பு!
பித்தனாய் மாறிவிட்டேன்!-கனல்
.பீறிடத், தொடங்கிவிட்டேன்!
..
வானவில் நிறங்களைப்போல்-உங்கள்
..மன எண்ணம் மாறிடலாம்!
ஆனஎன் ஆசைகளை-யான்
..அப்படியே சொல்லிடுவேன்!
..
திருப்பம் விளைவித்த-கூனியைத்
..திட்டுவ தில்லையன்றோ?(அதுபோல்)
கருப்பம் புதுமைகொண்ட-என்
..கவிக்காய்நீர் திட்டவேண்டா!
..
சித்தனாய் யானிருந்தால்?,-என் தாய்
..தேசத்தை மாற்றிடுவேன்!
எத்தர்கள் கையிலவள்-படுதுன்பம்
..யானேதான் நன்கறிவேன்!
..
தாயின் வளங்களெல்லாம்-பல
..தருக்கர் திருடுகின்றார்!
மாயப்போர் வையில்சென்(று)-அவரை
..மாய்க்க வழிசெய்வேன்!
..
கொஞ்சமும் நேசமின்றி-பலர்
..கொடூரம் விளைக்கின்றார்!
நஞ்சென மாறிடுவேன்-சித்தால்
..நயமாக வென்றிடுவேன்!
..
மரங்களை வெட்டிநின்று-தாயின்
..மழைக்கருணை தடுப்போரின்
கரங்களைச் சாய்த்துநின்று-அவர்தம்
..கண்ணை நடுங்கவைப்பேன்!
..
காமம்தம் கண்ணில்மின்ன-பல
..கன்னியரைக் கெடுப்போரின்
தீமை உறுப்பினையே-நொடியில்
..தீய்க்க வழிவகுப்பேன்!
.
சாதிசாதி என்றுசொல்லி-நல்
..சமுதாயம் தேய்ப்போரை
பாதிவாய் கிழித்துநின்று-(இ)ச்சித்தன்
..பயங்கரியாய் மாறிடுவேன்!
..
ஆட்களைக் கடத்திநின்று-பல
..அநியாயம் செய்பவரை
வாட்டியே தீயிலிட்டு--கடும்
..மனப்பயம் வரச்செய்வேன்!
..
சட்டசபை தன்னைதினம்-ஒரு
..சண்டைசபை யாக்குவோரை
இட்டப்படி முடியுலுக்கி-அவரை
..எளிதில்மா றச்செய்வேன்!
..
"வீரப்பனை"த் தேடிநிதம்-சொத்தை
..வீணாக்கு கின்றனரே!(அவனை)
ஈரமுள்ள பசுவாக-மாற்றி
..எஞ்சிய சொத்துகாப்பேன்!
..
பிஞ்சுகளின் கல்விமுறை-மாற்றப்
..பெரிசுகளைப் படுத்திடுவேன்!
அஞ்சிடா(து) அனைவர்க்கும்-மூளையில்
..அறிவுஎழ விதிவகுப்பேன்!..
..
சாராயப் போத்தல்களை-எங்கும்
..சட்டென மறைத்திடுவேன்!
மாறாகக் குடியர்நெஞ்சில்-த்யானம்
..மலர வழிவகுப்பேன்!
..
தண்ணீர் வளமிலையென்(று)-இனித்
..தள்ளாட்டப் பேச்சுவேண்டா!
எண்ணிலாக் கிராமத்திலும்-நதிகளை
..இணங்கி வரச்செய்வேன்!
..
சித்தனிங்கு வந்துவிட்டேன்!!-யாரும்
..தீமைகள் எண்ணமாட்டார்!
சுத்திடும்-என் மனக்கண்ணில்-அவை
..சுருக்கெனத் தெரிந்துவிடும்!
..
கள்ளம் பிறக்குமுன்பே-என்கை
..காத்துத் தடுத்துவிடும்!
பள்ளங்கள் தோன்றுமுன்பே-என் கண்
..பாய்ந்து தடுத்துவிடும்!
..
பூட்டே இனிவேண்டா!-வீடுகள்
..பொழுதும் திறந்திருக்கும்!
கூட்டுக் குடும்பங்கள்-இனிக்
..குலவி மகிழ்ந்திருக்கும்!
..
என்தாய்மண் மீதினிலே-மலர்கள்
.. எங்கும் கொலுவிருக்கும்!
என்தாய் கண்களிலோ-மகிழ்ச்சி
..என்றும் ததும்பிநிற்கும்!
..
மேடெலாம் வயல்வெளியாய்-ஆனால்
..மேன்மை பொலியாதோ?
காடெலாம் வரம்கொடுத்தால்,-தங்கக்
..கருணையிங்கு மேவாதோ?
..
மேகங்கள் சூல்கொண்டால்-இந்த
..மேதினி செழிக்காதோ?
ஊகங்கள் உண்மையென்றால்-என்றன்
..ஓர் சித்து பலிக்காதோ?
..
சித்தன்'என யான்'உலவ-காளி
,,சீக்கிரம் வரம்தருவாள்!
பத்தரைமாற் றுப்பொன்,என்-பாரதம்
..பாரிலென மாறிடும்,பார்!
&&&&&&&&&&&&&&(கவியோகி வேதம்)
..
அன்புள்ள கவியோகி வேதம்: அருமையான நடையில் அழகுக் கவிதை!

சித்தனாய் மாறிவிடின்- நீர்


...செயப்போகும் பற்பலவாம்
வித்தை தனைப்படித்தேன்- மூக்கில்
...விரலைப் பதித்துநின்றேன்!
எத்தனை யோசித்தர் - முன்பு
...இருந்திட்ட நாடுஇதனில்
இத்தனை நாள்வரைக்கும் -ஐயோ!
...ஏன்இதைச் செய்யவில்லை?

அனந்த்
==========
வேதமொரு சித்தனானார் -- அழகு
. மிளிருமொரு கவிபடைத்தார்
மாதமொரு கவியிதுபோல் -- செய்ய
. வரமெனக்க ளிப்பாரோ ?

பசுபதி
===========
சித்தர்கள் யாவையுமே- தங்கள்
சித்தி வலிமையினால்
முத்தி அடைவதற்கே- பல
முயற்சி செய்கின்றார்

அவர்கள் மத்தியிலே- சித்தர்


ஆகிடும் நம்வேதம்
புவனம் காப்பதனை- ஓர்
பொருட்டாய் எண்ணுகிறார்

அந்த விதிக்கணக்கை - மாற்ற


யாரும் முனைவதில்லை
எந்தச் செயல்களுக்கும்- அங்கோர்
எழுத்துப் போட்டிருக்கும்
இலந்தை
============
புத்தர் வந்த நாடிது
போதம் தந்த நாடிது
சித்தர் வேதம் தேடிய
சிறப்பென் மனம் நாடுது

ராஜரங்கன்
==========
ஆக்கம் பெருக்கவே ஆலோசித்து
ஊக்கம் உயர்த்தவே உத்தேசித்து
ஏக்கம் தீரவே எமைநேசித்து
நோக்கம் சிறந்ததே நும்தம் சித்து

சௌந்தர்
============
வித்தைகளை வார்த்தைகளில் காட்டுகின்ற
விற்பன்னர் யோகியார்தாம் இங்குவந்து
சித்தனாக மாறுவதால் செய்பவற்றைச்
சிறப்ப்பாகக் கவிதையிலே வார்த்துவிட்டார்
நித்தநித்தம் ஒவ்வொருவர் காணுகின்ற
நிறைவேறா கனவுகள்தான் ஆனால் என்ன
வித்தகர்கள் மனதுவைத்தால் மாயையெல்லாம்
விரைவாக நனவாக மாறுமன்றோ..
அன்புடன்
சி.க
==========
சித்தனாய் இவர் இருந்தால்
தேசத்தையே மாற்றிடுவார்.
கொடியவரை மாற்றிடுவார் - சாதி
வெறியர்களை வீழ்த்திடுவார்.

தீமைகள் தீர்ந்துவிடும் - எங்கும்


நன்மைகள் வளர்ந்துவிடும்
பத்திரிகையில் செய்திகளும்
'சப்'வென்று ஆகிவிடும்!

அன்புடன்,
ஆர்.எஸ்.மணி
===========
சந்த வசந்தக் கவியரங்கம் - 14.

கவியோகிக்கு பாராட்டு

நல்ல சித்தர் ஒருவரின் சேவை


நாட்டுக்கு அவசியம் தேவை
சொன்னதெல்லாம் தேவையான சீர்திருத்தங்கள் தான் !
கவியோகி வேதசித்தர் செப்பிய சீர்திருத்தங்களில் சிறந்தது
தீயரைத் தீய்த்து ஒழிப்பதாம் (:-)

நல்ல கவிதை கொடுத்த கவிஞர் கவியோகி வேதத்துக்கு பாராட்டுகள்.

அடுத்து வரப்போகிற கவிஞர் முனைவர் அனந்த்

வே.ச. அனந்தநாராயணன்

சென்னை நகரில் பிறந்த இவர் மதுரையில் வளர்ந்து அறிவியலில் பட்டதாரி ஆனார்.


பின், சென்னைப் பல்கழகத்தில் வேதியலில் முனைவர் பட்டம் பெற்று, மேல் ஆராய்ச்சிக்காகக்
கானடா, அமெரிக்கா
சென்று திரும்பி, பங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிலையத்தில் (Indian Institute of
Science) பேராசிரியராக வேலை பார்த்தார். கடந்த பல ஆண்டுகளாகக் கானடாவில் உள்ள
ஹாமில்டன் நகரில் 'மக்மாஸ்டர்' பல்கலைக் கழகத்தில் உயிர்வேதியல் துறையில்
பேராசிரியராகப் பொறுப்பேற்று, அத்துறையில் ஆராய்ச்சி நடத்தியும் போதித்தும் வருகிறார்.

இவர் உயர்நிலைப்பள்ளியில் படிக்கையில், பள்ளியிறுதித் தமிழ்த்தேர்வில் மாகாணத்தில்


முதன்மை மாணவராகத் திருப்பனந்தாள் மடம் வழங்கிய பரிசையும், மாணவர் மன்றம்,
மதுரைத் தமிழ்ச்சங்கம் ஆகியவை நடத்திய தமிழ்த் தேர்வுகளில் பரிசுகளையும் பெற்றுள்ளார்.
இவர் தம் தமிழ்ப்பற்றுக்கு
உயர்நிலைப்பள்ளியில் ஆசானான அமைந்த வித்துவான் திரு. கந்தசாமிப் புலவர் அவர்களே
காரணம் என்று நன்றி பெருகக் கூறுவார். கணினி மூலம் இணையத்தில் அண்மையில்
கிடைத்த அன்பர்களின் தொடர்புதான் தனது தமிழ் ஆர்வத்தை வெளிப்படுத்தப் பெரிதும்
உதவியது என்று மகிழ்கிறார். ஆறாம்திணையில் 'சொல்லாட்டம்' 'வெண்பாமேடை' ஆகிய
பகுதிகளில் பங்கெடுத்துக் கொண்டு தமிழுக்குத் திரும்பிய இவரது
தற்போதைய ஈடுபாடுகள்: குழந்தைகளுக்கு சமயம் பற்றி
(சமயல் அல்ல) வகுப்புகள் நடத்துதல்; 'திருப்புகழ் அன்பர்களுடன் இசைவழிபாட்டில்
பங்கெடுத்தல்; கர்நாடக/ தமிழ் இசையைப் பயிலுதல், பயிற்றுவைத்தல்; இணையமன்றத்தில்
உள்ள இலக்கியத்திரிக்கைகளில் கவிதைகள் இடுதல் ஆகியவை. டொராண்டோ நகரில்
இசைக் கச்சேரிகள் புரிந்துள்ளார். இவரது கவிதைகள் 'திண்ணை' மின்னிதழிலும்,
அம்மன் தரிசனம், கலைமகள், மஞ்சரி, கோபுரதரிசனம், கவிஉறவு,
ஆகிய இதழ்களிலும் இடம்பெற்றுள்ளன. டொராண்டோ நகரிலிருந்து வெளியாகும்
'கலா' என்னும் மாத இதழில் இசைபற்றிய விமர்சனங்களையும், 'மெரீனா' என்னும்
தமிழ் மாத இதழில் தமிழ்க் கவிதை கட்டுரைகளையும் எழுதிவருகிறார்.

காவடி சிந்து, நாக பந்தம், இன்னும் சில கடின பாடல் வகைகள் இயற்றியுள்ளார்.

இவருடைய இணையத்தளம்:
http://www.science.mcmaster.ca/biochem/profs/ananth.html.

இவரோட தலைப்பு என்ன" 'நெருப்பாய் நானிருந்தால்'

'நெருப்பாய் நீரிருந்தால்'
சுள்ளிகளைக் கொளுத்தும்
பள்ளிகளைத் தவிரும்
குழம்பைக் காய்ச்சும்
குழந்தைகளை விடும்
எட்டியே நிற்கிறோம்
இதமான சூட்டுக்கு

கவிஞர் முனைவர் அனந்துக்கு அழைப்பு.

வாரும் அனந்தரே , தாரும் உமது கவிதை.

என்ன தரப்போகிறீர் ? "சுட்ட " கவிதையா, "சுடாத" கவிதையா ?

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

****************************************************
பார்வையாளர் 1: என்னவோ 'கடின பாடல்' வகைன்னாரே அது என்னவாம்?

பார்வையாளர் 2: அனந்த் முன்ன அகத்தியத்துல பாடல் ஒண்ணு போட்டாராம்.


தலைவருக்கு அந்த வகையின் பேருக்கு ஸ்பெல்லிங் தெரியாததால, கடின பாடல்னு
நைசா மழுப்பிட்டார்.

10.
'சந்தவசந்தம்' கவியரங்கம் - 14 - அனந்த்
தலைப்பு: "நெருப்பாக நான் இருந்தால்"
(தலைவர் முன்பு கேட்டவாறு பாடல்களின் இனங்களைக் குறிப்பிட்டிருக்கிறேன்)
===================================================
<0> இறை வணக்கம் <0>
பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்:

முதுபெரும் பொருளாக முற்றிலும் புதிதாக மூலபண் டார மாக


..முதல்நடு முடிவேதும் இலாதஓர் முழுதாக மோனஓங் கார மாக
எதுஎது நிகழ்ந்தாலும் எங்ஙனம் நடந்தாலும் இயற்கையாய் அவற்றை எல்லாம்
..இயக்கிடும் விதியாக எதிர்வினைப் பயனாக இலங்கிஓர் வரை யறுத்தே
அதுஇது எனக்கூற ஆற்றுதற் கியலாமல் அனைத்துமே ஆகி ஆங்கே
..அணுவிலும் அணுவாக அண்டபே ரண்டங்கள் யாவினும் மேல தாகப்
பொதுவினில் நிலையான பொருளுணர் வழியாகப் பொற்பதம் காட்டி ஆடும்
..புகலரும் பரஞான பூரணா! எனையாளும் புனிதநட ராச குருவே!
====================================================

<0> திருத்தலைவர் பாவைப் பா:

(இது, ஆண்டாளின் 'திருப்பாவை'யில் 15-ஆம் பாடலை ஒட்டி


நகைச்சுவைக்காக (மட்டுமே) எழுதிய இந்தப்
பாடல், பல அடிகள் கொண்ட (பஃறொடை) வெண்பாவைப் போல
வெண்டளை பயின்று வருவதைப் பார்க்கலாம்.
எனினும், ஈற்றடி மூன்று சீராக அமையாததால், இது 'எட்டடி
நாற்சீர் ஒருவிகற்பத் தரவு கொச்சகக் கலிப்பா' என்ற பாவினத்தைச்
சேர்ந்தது. விகற்பம்=எதுகை)

"எல்லே! இளங்கிளியே! எங்கள் தலைவர்இந்த


'எல்லே' சுவாமியின் ஏற்றம் எடுத்துரைநீ!"
"சில்லென் றழையாதீர்! சீகக ் ிரம் கூறுகின்றேன்:
எல்லாத் துறையிலுமே 'எம்டன்'இவர் என்பார்கள்"
"வல்லை!உன் வாசகத்தை இன்னும் விளக்காயோ?"
"வல்லீர்கள் நீங்களே! மன்னித்துக் கூறுகின்றேன்:
சொல்லில், எழுத்தில் சூரர் நகைச்சுவையால்
கொல்லாமல் கொல்லும் குணமுடையார் எம்பாவாய்!"

<0> அவை வணக்கம்


கட்டளைக் கலித்துறைப் பா (வெண்தளை பயின்று, அடிதோறும் ஒற்று
நீக்கி 16 எழுத்துகள் கொண்டது)

நேசம் நிறைந்திடு நெஞ்சுடை யோர்முனம் நின்றவர்தம்


பாச முணர்ந்த பயனென யாவும் படித்தவனாய்
வாச மிகுந்திடு மாலையுள் நாரென மாறிஒளி
வீசும் நெருப்பென வேசம் புனைகவி வைப்பனிங்கே

<0> பாடுபொருள்:
வஞ்சித் துறை:

நெருப்பென உருக்கொளும்
விருப்பினை மனத்தினில்
இருத்திய விதத்திலென்
கருத்தினை உரைப்பனே

=============================
<> நெருப்பாக நான் இருந்தால் <>
=============================
குறள் வெண்செந்துறை:

ஆதவனும் அம்புலியும் புடைசூழ அரனாரின்


போதவிழி என்றுலகோர் புகழ்வதிலே திளைத்திடுவேன்!

ஐயனவன் தூயபெரும் ஆற்றல்விழிப் பொறியாகப்


பொய்கையாம் சரவணத்தில் பூத்தமலர் மீதமர்ந்து

ஆறுமுகக் குழவிஒன்று அவதாரம் செயஉதவும்


பேறதனை எண்ணிஎனுள் பெருமிதம்நான் கொண்டிடுவேன்!

அம்பலத்தில் ஆடிடுவோன் அங்கையில் அமர்ந்தவன்நம்


வெம்பவநோய் எரிசெயலை விளக்கும்இலச் சினையாவேன்!

மேலும்:

மின்னொளியாய் விளையாடி மேகத்தைச் சீண்டிவிட்டே


என்னிஷ்டம் போலெல்லாம் இவ்வுலகை ஆட்டிவைப்பேன்!

கன்னலெனக் குழலோசை கார்வண்ணன் பொழிகையிலே


கன்னியரின் நெஞ்சில்இன்பக் கனலாகி நினைவழிப்பேன்!

***********
இப்படிப் பெருமைப்படுவது ஒருபுறமிருக்க ......

(சமனிலைச் சிந்து)

நெருப்பாக நானிருந்தால் - ஒரு


நேர்மை கடைப்பிடிப்பேன்
ஒருக்காலும் தீவழியில் - செல்லா
உத்தம னாயிருப்பேன்

ஓங்கிடும் கோபத்தையும் - உள்ளே


உறைகின்ற காமத்தையும்
ஈங்கிவர் தீக்(கு)உவமை - காட்டும்
ஈனம் அழியவைப்பேன்

பச்சைக் குழந்தைகளை - ஒரு


பாவமும் செய்யாரை
இச்சைப்படி என்றும் - தீண்டி
இன்னல் தரமாட்டேன்

துப்பாக்கி உள்நுழைந்து - உலகைச்


சுட்டுப் பொசுக்காமல்
துப்பார்க்குத் துப்பாக்கி - என்றன்
தூய்மை உணர்த்திடுவேன்

அக்கினிக் குஞ்சாக - என்றன்


ஆற்றலைப் பாரதிதான்
தக்க முறைபுகன்றான் - அந்தத்
தன்மை மறவாமல்

பெண்ணெனும் தெய்வத்தினை - மதம்


பேரில் சதிஏற்றும்
சின்னத் தனமனிதர் - தம்மைத்
தின்று மகிழ்ந்திடுவேன்

அறிஞர்தம் உள்ளத்திலே - என்றும்


அணையா விளக்காக
எறிந்(து)அவர் ஆய்வுகளால் - புவி
ஏற்றம் பெறவைப்பேன்
பக்தித் தழலாக - ஈசன்
பாதம் பணிபவரின்
சித்தம் இருந்(து)எனையே - படைத்த
தெய்வத்தைக் கண்டிடுவேன்

குறையில் தவம்புரிவோர் - உடலில்


குண்ட லினியாக
உறையும் எனைஎழுப்ப - ஆத்ம
ஒளியென மாறிடுவேன்!

<0><0><0><0>
தீயென்று சொல்லுமுன்-தலைவர்
தீக்குச்சி உரசுமுன் - மின்னியது
தீப்பற்றிக் 'கலம்பகம்' -இங்கோர்
தீங்கவியாம் பெட்டகம் !
பசுபதி
========
"ஒருக்காலும் தீவழியில் - செல்லா
உத்தம னாயிருப்பேன்"

'தீ' வழியே செல்லாத் 'தீ'யை


சிறப்பாகப் படம்பிடித்தே
பாவகைகள் பலவும் கூறி
பாராட்டுப் புலமை காட்டி
ஆவனவெல் லாம் செய் கின்ற
அனந்தனார் திறமை கண்டே
காவியமொன் றைப்பு ரட்டும்
களிப்பிலே விழுந்தேன் நானே!

இலந்தை
===========
அன்பர் அனந்தர்

மின்னலாய் ஒளி வீசி


மழையாய்க் கவி பொழிந்தார்.
நெருப்பாய் எரிந்தாலும் - மனதை
நீரில் குளிர வைத்தார்!

அன்புடன்,
ஆர்.எஸ்.மணி
===========
எம்.எஸ் ' மீரா ' படத்தில் வரும் 'அரங்கா உன் மஹிமையை ' மெட்டில்
பாடவும்:
அனந்தா உன் மஹிமையை அறிந்தவர் யார்?
அறிந்தவர் யார் எல்லாம் அறிந்தவனே!

ராஜரங்கன்
=========
அன்பின் அனந்தருக்கு
தீயாய் நீரிருந்தால் நந்தலாலா - தமிழ்த்
தீஞ்சுவையும் கூடிடுதே நந்தலாலா...
களிப்புடன்
சி.க
=====================

சந்த வசந்தக் கவியரங்கம் 14


கவிஞர் அனந்த்துக்கு பாராட்டு

நெருப்பு,
ஆடலரசன் கைச்சட்டியிலாம்
அரனாரின் விழியிலுமாம்
அண்டமெல்லாம் தோற்றுமாம்
அதிலுள்ளதைக் காக்குமாம்
ஆங்கே குண்டலினியாய் உறங்குமாம்
அருந்ததவத்தால் ஆத்ம ஒளியாகுமாம்
துப்பார்க்கு துப்பாயவை துப்பாக்குமாம்
தீயவை பொசுக்குமாம்
அறிஞரிடம் அணையாதாம்
ஆற்றல் பெருக்குமாம் !

நெருப்பை பல கோணங்களில் ஆய்ந்து விவரித்த கவிஞருக்கு நன்றி.

"அறிஞர்தம் உள்ளத்திலே - என்றும்


அணையா விளக்காக
எறிந்(து)அவர் ஆய்வுகளால் - புவி
ஏற்றம் பெறவைப்பேன்"

இதைப்படித்தவுடன் நேஷனல் ஜியாக்ரபிக் பத்திரிக்கையின் ஜூலை 2004


இதழில் சூரியனைப் பற்றிய ஒரு கட்டுரை படித்தது நினைவு வந்தது. செயற்கைக்
கோள்களால் சூரியனில் ஏற்படும் மாற்றங்களை ஆய்ந்திருக்கிறார்கள். 500 கோடி
வருடம் மேலாக உலகம் தோன்றுமுன்னே தோன்றிவிட்டதாம் சூரியன். அதன் மேற்புறத்தைவிட
சுற்றியிருக்கும் வெப்ப மண்டலம் இன்னும் அதிகம் சூடானதாம். சூரியனுக்கு
ஒப்பிடுகையில் உலகம் யானைமேல் அமர்ந்த கொசு போலத்தானாம். அதன் காந்த
ரேகைகளில் மட்டும் பல பூமிகளை அடக்கலாமாம்.
பூமியில எரிபொருளுக்கு (பெட்ரோல்) அடிதடி யுத்தம். (:-(

"ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்" என்று சிலம்பில் சும்மாவா


சொன்னார்கள். இந்த இதழில் முழுக்கட்டுரையும் படித்து பிரமிக்க வைக்கும்
படங்களையும் கண்டு மகிழுங்கள்.

நல்ல கவிதை தந்த கவிஞர் முனைவர் அனந்துக்கு பாராட்டுகள்.

அடுத்து வரப்போறவர் கவிஞர் அபுல் கலாம் ஆசாத்.

பொறியியல் பட்டதாரி ( திறந்த வெளி பல்கலைக் கழகத்தில்)

மேலாளர் வேலை, பொறியியல் பிரிவு - சவூதி அரேபியாவில் மிட்சுபிஷி நிறுவனத்தில்.


43 வயது இளைஞரான இவர்,
'உள்ளத்தனையது உயர்வு' என்று நம்பும் இவரை, அறிந்தவர்களோ அறியாதவர்களோ
அனைவரையும் வாழ்க்கையில் முன்னேற மறைமுகமாக உழைத்து உதவி வருகிறார்,
கலக்கல் கவிதைகளால் மட்டுமல்ல, எலிவேட்டர் எஸ்கலேட்டர் துறையில் வடிவமைப்பு/
கட்டுமான டிசைன் பணியினால் !

திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றார்கள்.


*குடும்பம் சென்னையில், இவர் சவூதி அரேபியாவில்.* !

(இப்ப புரியுதா எப்படி இவரால் 'உல்லாச உலகம் உனக்கே சொந்தம்,


நீ செய்யடா செய்யடா, ஜல்சா செய்யடானு' பாடிட்டு
எப்பவும் எல்லாக்குழுக்களிலும் உறுப்பினராக
இருக்க முடிகிறதென்று ! (:-) ) வருடம் இரண்டு முறை இவர் சென்னை
செல்ல, குடும்பத்தினர் வருடாவருடம் பள்ளி விடுமுறையில் இவரிருக்குமிடம்
வந்துவிடுவார்களாம்.

பொதுத் தொண்டாக ஜித்தா நகரில் துறைமுகப் பகுதி,


தொழிற்பேட்டை பகுதிகளில் இருக்கும் வருமானம் குறைந்த
தமிழ் நண்பர்களுக்கு கணினி சொல்லித்தருவது, ஆங்கிலம்
பேசக் கற்றுத்தருவது போன்ற சிறு பணிகள்.

ஜித்தா தமிழ்ச் சங்கத்தில் சுறுசுறுப்பான உறுப்பினர்.

மற்றபடி இணையத்தில் கானா, கவிதை, சினிமா என்று


கலக்குகிறார்.

இவரோட தலைப்பு என்ன? 'நானாக நானிருந்தால்'

சாப்பிடற 'நான்'னு நெனச்சிட்டு,


'நான்' சொல்வதாக,

பிசைந்து கசக்கி அறைந்து நசுக்கிட்டு


பின்னர் உருட்டி மெலிதாக இட்டிட்டு
பானையில் சுட்டு அடுக்கிய பாவிகாள் !
தின்னவன் திட்டா திருந்திடவே சூடாக
தட்டிலிட்டால் என்ன கேடு?

என்று எழுதி சகஹ்ருதயர்களிடம் மொத்து வாங்கினேன்.


"நீங்க எங்கியோ போய்ட்டீங்க சார். ஆனா, 'நான்' என்றால் அகந்தை, செருக்கு" என்றார்கள்.

இப்ப இவர் தலைப்பு 'நானாக நானிருந்தால்'?

அகந்தையும் நானே
செருக்கும் நானே ன்னு விவகாரமா ஆயிடுமா?

ஆசாத்பாய் என்ன சொல்றாரு பார்க்கலாம்.

கவிஞர் ஆசாத்துக்கு அழைப்பு

ஆசாத்பாயீ ! தும்கோ மேரா சலாம்


இதர் ஆவோனா, கரம் கானா தேனா

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
*******************************************************
பார்வையாளர் 1: அதென்ன பிட் நோட்டிசு ?

பார்வையாளர் 2: கவிஞர் அனந்த் எழுதிய கடினமான பாடல்னு தலைவர்


சொன்னாரே, அது திருவெழுக்கூற்றிருக்கையாம். அது
பத்தின குறிப்பு. படிக்கிறேன் கேளு.

திருஎழு கூற்று இருக்கை என்பது ஏழு 'அறைகளை'க் கொண்ட அமைப்பில்,


ஒன்றிலிருந்து ஏழுவரை உள்ள எண்களைக் கொண்ட சொற்கள் முறையாக
ஏறியும் இறங்கியும் வருமாறு எழுதப்படும் கவிதையைக் குறிக்கும். இப்பாடலில்
காணும் எண்ணமைப்பும் யாப்பமைதியும் அருணகிரியார், திருஞான சம்பந்தர்
ஆகியோரின் திருவெழுகூற்றிருக்கைகளைப் பின்பற்றியது.
திருஎழு கூற்று இருக்கை என்பது ஏழு 'அறைகளை'க் கொண்ட அமைப்பில்
எழுதப்படும் கவிதையாதலின், அதன்படி, ஒரு தேர்/கோபுர வடிவில்: 1, 1 2 1,
12321, 1234321, 123454321, 12345654321, 1234567654321 என்று
எண்குறிப்புக் கொண்ட சொற்கள் அமைந்துள்ளன. அகத்தியர் குழுவின்
புகைப்படப் பகுதியின் கடைசியில் (படம் 27) கவிஞர் அனந்த் எழுதிய இப்பாடலின்
தேர்வடிவமைப்பைக் காணலாம்.

பார்வையளர் 1: ம்..ம்..இலக்கணக்குறிப்பைக் கேட்கும் போதே எனக்கு முடி கொட்டிடுத்து.


இது மாதிரி நாம எப்ப எழுதி....
=============
11.
இறை வணக்கம்
----------

அவனே தலைவன் அவனே துணைவன்


.இவனின் மனதுள் இன்கவி தோன்றிட
அறிவைத் தருவோன் அகிலம் ஆள்வோன்
.செறிவாய் நிறைந்த செம்மொழி யெடுத்து
நானெனைப் பாட நல்லருள் புரிவோன்
.வானுறை வல்லோன் வையத் ததிபதி
பேரினைச் சொல்லிப் பெரியவர் முன்கவி
.கூறிட வந்தோன் குரலிது வன்றோ!

கவியரங்கத் தலைவருக்கு
----------------

எல்லே பெரியவ ரென்றோர் பெயருடன்


.என்1 னில் துவங்கும் என்னருந் தலைவ! [1.என்=N]
சொல்லில் நகையின் சுவையைக் கலந்து
.சொந்தத் தமிழர் சுற்றும் இணையத்
துள்ளில் சிரிப்பொலி யுரக்கக் கேட்கும்
.உணர்வைத் தந்திடு முற்றவர் நீரே!
நானாய் வந்தேன் நற்செவி யுண்ணும்
.நானாய்:)2 இருப்பேன் நற்கவி தருவேன்! [2.நான்=ரொட்டி]

அவையோர்க்கு
----------

ஆயிரம் அரங்கங் கண்டிருப் போரே


.ஆசாத் தென்ன அருந்தமிழ்க் கவியா?
ஆயினும் அவனை அவைமுன் னிறுத்தி
.அகவல் பாடி ஆட்டம் போட
மேடை தந்தீர் மெய்யிது சொல்வேன்
.மேதினி யில்நான் கவிஞன் என்னும்
சாடை கொள்வேன் சந்தம் பயில்வேன்
.சான்றோர் மன்றிற் சாற்றிடு வேன்கவி!

கவிதை
-----

நானே நானா யாரோ தானா


மெல்ல மெல்ல மாறி னேனா
= கவிஞர் வாலி

நானென் பதுவும் தானாய் வருமோ


.நமக்குள் ளுண்டோ நற்சுயம் பொளியும்
நானென் பதுவென் நண்பர் கூட்டம்
.நடக்கும் முறையில் கொண்ட தாக்கம்!
சூழல் வழியே சுழன்று கொள்ளும்
.சுயநலக் காரச் சிந்தைக் குள்ளே
வாழும் வழியில் வென்றிட மரண
.வாயில் செல்வது 'நான்'தா னென்பேன்!

பணியில் பயின்ற சிகப்புச் சிந்தையைப்


.படுக்கையில் வீழ்த்திக் கழுத்தை நெறித்து
இனியென் வங்கிக் கணக்கை நிரப்ப
.இனிதே 'நான்'ஒரு மரணம் கொண்டேன்!
நானாய் நானும் இருந்திருந் தாலோ
.நம்தொழி லாளர் கூட்டத் துள்ளே
தேனைச் சேர்க்கும் வண்டா யுழைத்துத்
.தெறிக்கும் வேர்வையில் குளித்திருப் பேனே!

வயிற்றை இறுக்கி உடலை முறுக்கும்


.வாஞ்சையை நண்பர் மனதில் விதைக்க
பயிற்சியில் திளைத்த 'நான்'ஓர் இளைஞன்
.பறக்கும் சிறகோ தோள்களில் தஞ்சம்!
நாவும் ருசியும் காதல் கொண்டதும்
.நாடித் தாடியில் 'நான்'தொலைந் ததுவே
தாவும் குரங்காய்த் தரிக்கா திருந்தால்
.திண்தோள் நானாய்த் திகழ்ந்திருப் பேனே!

எனக்குள் நானே யென்னைத் தேடும்


.ஏகாந் தப்பொரு ளறியேன் இன்னும்
கணக்குப் பார்த்தால் கடைநிலை ஊழியன்
.கடைசியில் 'நான்'என் றெதுவும் உண்டோ!
முடிக்கும் முன்னே முன்னவை யோரே
.முழுதா யொருவரி முறைமை சொல்வேன்
வடிக்கும் இக்கவி வரியில் 'நான்'ஒரு
.வகையில் நானாய்த் தானிருந் தேனே!

அன்புடன்
ஆசாத்
=========
ஆசாத் கவிதை தந்த சிந்தனை:

நானாக நானிருக்க விட்டி டாமல்


நானென்றே வேடங்கள் என்னில் ஏறும்
தானாக ஒன்றென்னைக் கவிஞன் என்னும்,
சரியில்லை, சோம்பேறி என்னும் ஒன்று
ஏனோதான் மற்றவர்கள் என்னில் ஏறி
என்முகத்தை மறைக்கின்றார், உண்மை 'நான் யார்?"
நானாக நானிருந்தால் இந்த நேரம்
நான்விட்டு நானாக இருந்தி ருப்பேன்

தேடுகிறேன் தேடிக்கொண்டிருக்கும் போதே


திசையெட்டும் மனம்பறக்கும், , கட்டிப் போட்டால்
கூடுவிட்டுக் கூடுசெலும், பதிவெல்லாமும்
கொண்டுவந்து முன்போடும், மயக்கும், எந்தப்
பாடுபட்டுப் பார்த்தாலும் ,அந்தப் பாவி
பறக்கிறதே என்செய்ய? ஐயா அந்த
வீடுதொட்டுப் பார்ப்பதெப்போ? நான்யார் என்னும்
விளக்கத்தைக் காண்பதெப்போ?, நான் தான் நானா?
இலந்தை
=========
கேள்வி மிகவும் பெரிது -- விடை
கிடைத்தல் மிகவும் அரிது
நானெ னுமொரு தேடல் -- அழகாய்
நண்பர் தந்தார் பாடல்

பசுபதி
===============
அன்புள்ள ஆசாத்
தனக்குள் தன்னைத் தேடும் ஒருவன்
தவிக்கும் வகையைத் தரமாய்த் தெருட்டி
மனக்கு கைக்குள் வருடி என்றன்
வடிவம் அறிய வைத்தீர் நன்றி!

அனந்த்
=============
' நாவும் ருசியும் காதல் கொண்டதும்
நாடித்தாடியில் 'நான்' ( ரொட்டி?) தொலைந்ததுவே'

முடிபுகள்:
1 தாடி அவ்ளோ பெரிசு
2 தொலஞ்சு போற அளவுக்கு நான் ரொட்டி அவ்ளோ சின்னது. நாவால் தேட
முடியாது.
விரல் தேவை.

உவமைகூடக் கொஞ்சம் உதைக்கிறது. ருசியில்லாமல் நாவு இருக்கலாம்.


நாவு இல்லாமல் ருசி ஏது? இதில் காதலன் யார்? காதலி யார்?

என் சின்ன மூளைக்கே நல்ல வேலை கொடுத்த வேதாந்தக் கவிதை.


வாழ்த்துகள்!

எம்மாரார்
===========
அழகான கவிதைகளை ஆசாத் தந்தார்
அகவலெனும் விதமென்றே இங்கு சொல்லி
இளகுமனம் கொண்டதுதான் நானாய் நானும்
இருப்பதுவா என்றொன்று எழுந்ததென்னுள்

நானாக நானிருந்த காலமென்ன


நடந்துகொண்டே அதைப்பற்றி யோசிக் கின்றேன்
தேனாக இனித்துவிடும் இளம்பரு வம்தான்
நானாக நானிருந்த பருவம் அன்றோ..

வெள்ளைநிற மனங்கொண்டு எல்லோ ரிடமும்


வேஷமெதும் கட்டாத அந்தக் காலம்
மெல்லமெல்ல எப்படித்தான் மாறிப்போச்சு
மேகம்வந்து மனத்திரையை மறைக்கலாச்சு..

எல்லோரும் அப்படித்தான் மாற்றம் கொள்வார்


என்பதுதான் இவ்வுலக ந்¢யதியாமோ?.
கள்ளமுண்ட நெஞ்சங்கொண்டு வாழ்ந்தால் தானா
அவனியிலே வாழ்வதற்குத் தகுதியாமோ.?.
அன்புடன்
சி.க
================
சந்த வசந்தக் கவியரங்கம் 14

கவிஞர் ஆசாத்துக்கு பாராட்டு

எல்லோரும் நானைத் தேட வைத்து விட்டார் ஆசாத்.

'நானி' ருந்ததே நான்தான் அறிவேன்


'நான்'தான் 'அவனை' மறைத்து வைத்தது
'நானை' நானும் களைய எஞ்சிய
'நானி'ல்லா நான்தான் 'அவனா'?
நல்ல கவிதை தந்த கவிஞர் ஆசாத்துக்கு பாராட்டுகள்.

அடுத்து வரும் கவிஞர் செளந்தர்

முழுப்பெயர்:: சௌந்தரராஜன்; சொந்த ஊர்: தஞ்சை மாவட்டம்-திருமணஞ்சேரி; பிறந்தது


(ஸ்ரீரங்கம்),
பள்ளிப்படிப்பு-9 வரை (கும்பகோணம்), 10,11+கல்லூரிப் படிப்பு (மயிலாடுதுறை) (உ..ய்ய்ய்ய்ய்ய்
விசில் சத்தம், தலிவரிட்டேருந்துதான்) பொறியியல்-M.I.T Chromepet
மனைவி, இரு மக்கள்.

தமிழில் ஆர்வம்
மயிலாடுதுறையில்- தருமை ஆதீனம், அன்பநாதபுரம் அறக்கட்டளை, சமரச சன்மார்க்கம்-முதலிய
அமைப்புக்கள் நடத்திவந்த தமிழரங்குகள், வாரியார், கீரன் (முனிசிபல் உயர்நிலைப் பள்ளி-
எங்கள் பள்ளி
மாணவர்), கி.வா.ஜ, கிரிதாரி ப்ரஸாத் முதலிய பெரியவர்களின் சொற்பொழிவுகளில் ஈடுபாடு;
கல்லூரிப் பேராசிரியர்கள், மற்றும் அறிஞர்கள் பங்கேற்கும் பட்டி மன்றம் முதலிய தமிழ்
ஆர்வத்தை! த்
தூண்டின.

அலுவல்: பொறியாளர்-BHEL, Reliance


சாதனை:
பள்ளி, கல்லூரிகளில்- SSLC, Bsc, MIT-யில் முதலிடம். 3 தங்கப் பதக்கங்கள்
Reliance Polyester கம்பனியில் வேலை செய்த பொழுது, DuPont அமெரிக்கத் தொழில்நுட்பக்
கம்பனியிலிருந்து வந்த வல்லுநர்கள், பல வருடங்கள் கழித்து வேறு வேலையில் இருந்த இவரை
USA -க்கு
விருந்தினராக அழைத்துச் சென்று அங்கேயே வேலையும் கொடுத்தார்கள். அங்கே 6 ஆண்டுகள்
இருந்துப்
பின்னர் கனடா குடியேற்றம்.

புலம் பெயர்ந்தது- USA (NJ) (1993-99), Canada(1999-). Engineer in Power


Generation; Canada-வில் Toronto-நகரில் பேராசிரியர்கள் பசுபதி, அனந்த் இவர்களின்
நட்பு
மீண்டும் தமிழ் ஆர்வத்தைத் தூண்டியது. பசுபதியிடம்- கவிதை எழுதுவது எப்படி என்று பயின்று
வருகிறேன்.
இலந்தையின் விருத்தம் எழுத வருத்தம் எதற்கு-தொடரின் மூலம் விருத்தப்பாவின் இலக்கணமும் படித்து
வருகிறார்.

மகன் Masters in Engineering at U of T; மகள் Bachelors at U of Waterloo.

இவரோட கவியரங்கத் தலைப்பு 'பறவையாக நானிருந்தால்'

லாஸ் ஏஞ்சலஸ் போக்குவரத்தில் தெருக்களில் கார்கள் ஆமையாக ஊரும் போது எல்லோரும்


பறவையாக இருந்தால் இந்த டிராபிக்ல மாட்டிக்காம பறந்துடலாம் என்றே எண்ணுவார்கள்.
நினைச்சா வேற நாட்டுக்கே போயிடலாம். விசா, பாஸ்போர்ட்னு நச்சு இல்ல. பறவையிலும் வாகனப்
பறவைகளான கருடன், மயில்னா கூடுதல் பாதுகாப்பு. கோழி, வான்கோழினா வம்புதான். பீனிக்ஸ்
ஓகே.
இவர் என்னவோ ?

வாங்க கவிஞர் செளந்தர், பறந்து வருக, பாடல் தருக !

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
*******************************************************
12.
சந்தவசந்தக் கவியரங்கம்-14
[இதுவாக நானிருந்தால் என்ற வரிசையில்]

பறவையாக நானிருந்தால்
பட்சிராஜன் வாழ்த்து

செருவதனில் கட்டுண்ட செல்வ ரவர்தம்


வருத்தங்கள் தீரவே வந்தாய்-திருவே
குருவாயூர் அப்பன் கொடியில் அமரும்
கருடனே என்னையும் கா

தலைவர் வணக்கம்

இதுவாக நானிருந்தால் என்னவாகும் என்றே


பொதுவாகச் சொல்லுதல் போதா-புதுமை
ததும்பும் தலைப்பினைத் தந்தீர் சுவாமி
பதுங்கிடும் என்னையே பார்த்து

பறவையாக நானிருந்தால் பாரினிலே வண்ணச்


சிறகடித்து வானில் திரிந்தே-சிறக்கும்
திறமுடைத் தீந்தமிழ்ப் பாவலர் உம்மைப்
பிறழாமல் வாழ்த்துவன் யான்

அவை வணக்கம்

தனித்தனியே நண்பர் தலைப்பெடுத்துப் பாடிக்


கனிக்கொத்தாய்க் காப்பியங்கள் தந்தார்-நுனிப்புல்
நனிமேயும் நானிங்கே ஞாலங்கொள் உம்மை
இனிதே வணங்குவேன் இன்று
(மேற்கண்ட பாக்கள் அனைத்தும் ஒருவிகற்ப நேரிசை வெண்பாக்கள்)
-------------------------------------------------------------------------------
குறிப்பு:
பறவையாக நானிருந்தால் என்னும் வினா சில நூற்றாண்டுகளுக்கு முன்பே
எழுந்தது.
குலசேகர ஆழ்வார் இந்த வினாவிற்கு விடை தருகிறார்.

ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்


ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்
கூனேறு சங்கம் இடத்தான்றன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

[குருகு- நாரை]

இந்தப் பாடலையே எனது ஊக்கமாய்க் கொண்டு இப்பாடல்களை எழுதினேன்.


பறவையா நானி ருந்தால் என்பதை அலகிட்டுப் பார்த்தால் விளம்-மா-தேமா
என்ற
அமைப்பு கிடைக்கிறது. இதே அமைப்பில் எழுதிய விருத்தம்
------------------------------------------------------------------------------
பறவைகள் பலவிதம் (அறுசீர் விருத்தம்)

முதலைவாய்ப் பட்ட யானை


. . முதல்வனை விளித்துச் சோரக்
கதறிடும் களிறைக் காக்கக்
. . கண்ணனும் கருணை யாலே
பதறியே திகிரி ஏந்திப்
. . பரிவுடன் கடுகி யேக
உதவிடும் கருடப் புள்ளாய்
. . உத்தமன் தாங்கிச் செல்வேன்...(1)

முழவொலி மேக மெங்கும்


. . முழங்கிடும் வேளை தன்னில்
பழமுதிர் சோலை யொன்றின்
. . பைம்புனல் மடுவி னோரம்
குழலினைக் கையி லேந்தும்
. . கோகுலக் கண்ணன் முன்னே
அழகொளிர் தோகை மின்ன
. .ஆடுமோர் மயிலு மாவேன்...(2)

மென்னடை பயிலும் அன்னம்


. . வெண்ணிறச் சிறக டிக்கும்
தென்னையும் கமுகும் ஓங்கும்
. . தேம்பொழில் அரங்கம் தன்னுள்
அன்புடை அடியா ரோடே
. . ஆங்கொரு குயிலு மாகிப்
பொன்னடி புந்தி வைத்தே
. . புனிதனைக் கூவி நிற்பேன்...(3)

நெடியவன் கமலத் தாள்கள்


. . நெறிமையால் நினைய வல்லார்
முடியணி பீலி தன்னில்
. . முழுமையா மூழ்கிப் போவர்
அடியவர் அவரே பற்றி
. . அடிமைபூண் டுய்ந்து வாழும்
குடியெலாம் துயிலெ ழுப்பக்
. . கூவிடும் கோழி ஆவேன்...(4)

நாலுபேர் சொல்லக் கேட்டும்


. . நல்லதை அறிய வொண்ணார்
போலுமே விழித்து நோக்கிப்
. . பொய்தனைப் பிரித்துக் காண
ஏலுமா என்னால் என்றே
. . ஏங்கியே தளரும் போழ்தில்
பாலுடன் கலந்த நீரைப்
. .பகுத்திடும் அன்னம் ஆவேன்...(5)

காதலர் தனித்தி ருந்துக்


. . கருத்தினில் கலந்த போதும்
நாதனைப் பிரிந்து சென்ற
. . நாயகி நலிந்த போதும்
ஆதரம் பெருக வேண்டி
. . அன்னமும் குருகு மாகி
வேதனை விலகி யோட
. . விரைந்துநான் தூது செல்வேன்...(6)

இலக்கினைத் தவற விட்டே


. . எங்கிலும் திரிந்து நோக்கித்
துலங்கிடும் பாதை யொன்றைத்
. . துருவனும் தாரா நிற்க
நிலமதைத் தேடி யெங்கும்
. . நீள்கடல் நடுவே நின்றுக்
கலங்கிடும் மாலு மிக்கோர்
. . கலங்கரை விளக்கம் ஆவேன்...(7)

கண்ணிலே கருணை பொங்கும்


. . கருத்தினில் வாய்மை தங்கும்
தண்புனல் தன்மை சேரும்
. . தாயகத் தந்தை காந்தி
அண்ணலின் அடியைப் பற்றும்
. . அமைதியின் சின்ன மாகும்
வெண்புறா வடிவு தாங்கி
. . விண்ணிலே வெற்றி கொள்வேன்...(8)
பூரண அறிவு யாவும்
. . புத்தகம் தருவ துண்டோ?
சாரமாய்ப் பொருள னைத்தும்
. . சாத்திரம் சொல்வ துண்டோ?
ஆரிடம் சென்று கற்பேன்
. . அனைவரும் வியக்கும் வண்ணம்
தோரணக் கூடு வேயும்
. . தூக்கணாங் குருவி ஆக?...(9)

நானி லத்தில் பறவையென


. . நானி ருந்தால் இன்றொருநாள்
தானி யங்கள் தேடியெங்கும்
. . தவித்து நானும் திரிந்தொழியேன்
மீனி னங்கள் துள்ளிவரும்
. . மேலைக் கடலின் மீதினிலே
வானி லெங்கும் பறந்துசென்று
. . வைய மெல்லாம் கண்டிடுவேன்...(10)

சௌந்தர்
========
திருக்குருகூர் நம்பியென தெய்வமாக் கவி எழுதி
திருக்குருகூர்த் தம்பியெனப் பெயர் பெற்றீர் சௌந்தரரே!
திருக்குருகூர்தவிர பெரும் திருவடியை வாகனமாய்த்
திருக்குருகூர்ப் பெருமாளும் ஏன் உகந்தான்? தெரிகிறது!

ராஜரங்கன்
==============
தானொரு பறவை என்ற
. தலைப்பில் பாடச் சொன்னால்
கானடா கவிதை வானைக்
. கலக்கினார் குயிலாய்ச் சௌந்தர் !

பசுபதி
==========
அன்புள்ள சௌந்தர்,
வெண்பாவிலும் விருத்தத்திலும் நல்ல ஆளுமை பெற்றிருக்கிறீர்கள்.
அறுசீர் விருத்தம் தங்குதடையின்றிச் செல்கிறது.
"தோரணக் கூடு வேயும்
. . தூக்கணாங் குருவி ஆக?."
மிக அருமை.

பறப்பதில், தரையில் மேய்ந்து


பரிவதில்., வான ளந்து
சிறப்பதில், எங்கெல் லாமோ
திரிவதில், அங்கங்கங்கே
கொறிப்பதில், இயற்கை யோடே
கொழிப்பதில், கவிஞன் கூடப்
பறவையைப் போல்தான், நல்ல
பாடலும் பறவைதானே!

இலந்தை
===========
அன்புள்ள சௌந்தர்: வழக்கம்போல உங்கள் கவிதையில் காணும் கருத்தழகும்
ஆற்றொழுக்கான நடையும் நெஞ்சை அள்ளுகின்றன.

அந்தர வெளியி லாடும்


.அழகிய புட்கள் யாவும்
சு(சௌ)ந்தர வடிவம் கொண்டு
.சுகம்தரல் இங்குக் கண்டேன்
அனந்த்
==========
அன்பின் சௌந்தர்,

அருமையான இசையோட்டம் இயல்பாய் வந்து விழுந்திருக்கிறது.


நான் பெரிதும் ரசித்தவற்றை என் வழமைபோல் விட்டுவைக்கிறேன்.

பறவையாய் நானிருந்தால்
இசைநயம் தப்பாமல்
சிந்தனைச் சிறகடிப்பேன் என்று
சத்தமாய்ச் சொல்கிறது கவிதை

அன்புடன் புகாரி
===========
ஆடிடும் மயில்நீரென்றால் ஆங்கொரு மங்கை யாக

பாடுவேன் கண்ணன் முன்னே பாங்குடன் மயக்கத் தானே....

ஊடிடும் தென்றல் வந்து உணர்வினைத் தீண்ட வானில்

கூடிடும் மேகக்கூட்டம் கொணர்நத


் ிடும் மழையை நன்றாய்..

அழகிய பாடல்கள் செளந்தர். நன்றி

அன்புடன்

சி.க.
=========

சந்த வசந்தக் கவியரங்கம் 14

கவிஞர் செளந்தருக்கு பாராட்டு.

இன்றைய ஸ்பெஷல்,
இறா, புறா, சுறா, விறா னு மிலிடரி ஓட்டல் மெனு மாதிரி

கருடன், மயிலு, குயில், கோழி, அன்னம், புறா, நாரை,


தூக்கணாங்குருவினு ,அருமையா பாடி அசத்திட்டீங்க.

காத்தவன் படைத்த சீவனில் பறவைகள்


மூத்ததேயாம் மக்கட்கு என்று காட்டிட்டாய் !
நானிலப் பறவை எல்லாம் உம்மையே
நாத்தழும் பேறிட வாழ்த்துமே !
(இரு விகற்ப வம்பா)

சிறந்த கவிதை படைத்த கவிஞர் செளந்தருக்கு வாழ்த்துகள்.

அடுத்து வருபவர் கவிஞர் முனைவர் ரங்கராஜன்

கவிஞர் முனைவர் எம் ஆர் ரங்கராஜன், கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.


மரபிசை, ஜெர்மன், ரஷிய மொழிகளில் டிப்ளமா வாங்கியிருக்கிறார்.
40 வருட கணித பேராசிரியராக இருந்து ஓய்வுக்குப் பிறகு செய்திதொடர்பு/மேலாண்மை
கல்லூரியில் முதல்வராக சில காலம் பணியாற்றியவர்.

இலக்கிய ஆர்வம் உள்ளவர். இந்து நாளேட்டின் நூல் விமரிசகராக


முப்பது வருடப்பணி.க்குப் பிறகு, தற்போது இந்தியன் எக்ஸ்பிரசில்
இசைக்கச்சேரி , நடன நிகழ்ச்சிகள் விமரிசகராக இருக்கிறார்.
பள்ளி நாட்களில் இசை, பட்டி மன்றம், நடிப்பு எல்லாவற்றிலும் கலந்து கொண்டு
பரிசுகள் பெற்றவர். தேவாரப்பாடல் போட்டியில் திருப்பனந்தாள் மடத்திலிருந்து
முதல் பரிசு வென்றவர். பள்ளி பட்டி மன்ற விவாதத்துக்கு பாரதியாரின் 'ஞானரதம்'
பரிசாக கிடைத்தது.

மூன்று வருட காலம் இந்திய ஹை கமிஷன் சார்பில் தென்னமெரிக்காவில் உள்ள


கியானாவில் கழித்திருக்கிறார். அங்குள்ள இந்திய கலாசார மையத்தின் இயக்குநராக
தேர்வு செய்யப்பட்டு, அங்கிருந்த புலம் பெயர்நத் நம் மக்களுக்கு பாடல்கள் மூலம் தமிழ்
கற்பித்த சாதனையை நினைவு கூர்கிறார்.

ஐம்பது வருடமாக எழுத்தில் ஆர்வம். இவரது சிறுகதைகள் பிரபல இதழ்களில்


வெளியாகி, சிறுகதைக் கொத்தாகவும் மலர்ந்துள்ளது. தேசீய நூல் கழகத்துக்கு
பிற மொழி நூல்களை தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்திருக்கிறார்.
மூதறிஞர் ராஜாஜியின் வாழ்ககை
் வரலாறை இளைஞர்களுக்கான
ஒரு சிறு நூலாக எழுதியிருக்கிறார். இவர் ஒரு சிறந்த கவிஞரும் கூட என்பதை நாம்
அறிவோம். இவரது ஆங்கில, தமிழ்க்கவிதைகள் அச்சேறியுள்ளன.

தெய்வீகப்பாடல்கள், பஜனை இசையில் இவருக்கு ஈடுபாடு அதிகம். ரிஷிகேசத்தில்


தங்கியிருந்த சுவாமி சிவானந்தர், குரல் வளம் மிக்க இவரது பஜனை இசையில் மயங்கி
'சங்கீர்த்தன ரத்னா' என்ற விருதை அளித்தாராம்.
இவர் சில மரபிசை பாடல்களும் இயற்றியுள்ளார்.

பூரணம் விசுவநாதனின் நாடகக்குழுவில் இருந்திருக்கிறார். இவரே குறுநாடகங்கள்


எழுதி இயக்கிய அனுபவமும் உண்டு.

குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் காரியரிசியாக இருந்து சிறந்த பணிக்கு


கேடயம் வாங்கியுள்ளார்.
இவரது மகளும் மருமகனும் இர்வைன் என்ற லாஸ் ஏஞ்சலிஸின் புறநகர்ப் பகுதியில்
இருக்கிறார்கள்.

மொத்தத்தில் இவர் ஒரு சமன்பாடு.


கணிதம் + பாட்டு + எழுத்து + படிப்பு + நடிப்பு கலவை !

'இன்னும் கொஞ்சம்' என்ற SVKA கவியரங்கில் கலக்கியிருக்கிறார்.


கொஞ்சம் கொசுறாக ஒரு காட்டு.
:
"சின்னப் பெயரன் பெயர்த்தி வந்து
கன்னத் தோடு கன்னம் வைத்து
உன்னி முத்தம் தரவே சொல்வேன்
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்

பச்சைப் புடவை இடுப்பில் நெளிய


கச்சை யசைவில் காமன் ஒளிய
இச்சைக் கிளியாள் ஈர உதட்டில்
இச்சொலி வேண்டிய தின்னம் கொஞ்சம் !"

இந்தக் கவியரங்கத்தில் இவர் தலைப்பு 'இளைஞனாக நானிருந்தால்' !


இவர் என்ன எழுதுவார்? கணக்கு வாத்தியார் வேற.
'ஜின் ஜனக்கு ஜனக்கு
நா சொல்லித் தாரேன் கணக்கு' ம்பாரோ? (:-)
(எங்க ஊரு பாட்டுக்காரனில் ராமராஜன்)

கவிஞர் முனைவர் ரங்கராஜரே வாரும் !

கவிதைக்கு இல்லை பஞ்சம்


துடிக்கிறது எங்கள் நெஞ்சம்
அடைந்தோமே நாங்கள் தஞ்சம்
பாடிமகிழ்வி யுங்கள் கொஞ்சம்
(அடிமறி மண்டில T ராஜேந்தர்ப்பா !)

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
**************************************************
பார்வையாளர் 1: பாவிலக்கணத்துல தலிவர் தேறிட்டார் போல இருக்கே/
அடிமறி மண்டிலமாமே...பலே..பலே

பார்வையாளர் 2: இது பெரிய்ய விசயமா? அடி மறி மண்டிலம்னா பாட்டுல


வரிகள் வரிசையை எப்படி மாத்திப் போட்டாலும் பொருள் மாறாதாம்...அவ்வளவுதான்
இவருக்கு புரிஞ்சிருக்கு போல..

13.
கவி அரங்கம் -14 நான் இளைஞனாக இருந்தால் -ராஜரங்கன்

( முன் குறிப்பு : தலைவர் சாமி பாவின் பெயரை எழுதச் சொன்னார். எனக்கு


இலக்கணம்
தெரியாது. நெடுநேரம் யோசித்தபின் தூங்கிப்போனேன். சொப்பனத்தில்
முழத்தாடி முனிவர்
ஒருவர் தோன்றி பின் வருவது ' கொத்ஸூ புளிப்பப்பா' என்ற வகை என்று
உபதேசித்து
மறைந்தார். அதையே கொள்ளவும்)

இறை வணக்கம்

கிழவன் வேடம் தாங்கிக் காதலி


கிண்டலைச் சுண்டலாய் ஏற்ற
பழஞ்சிவப் பரமா! சிவகுரு முருகா! *
பத்தனென் பாவையும் ஏற்பீர்!

* 'குமாரசம்பவம்' காவியத்தில் காளிதாசன் சிவன் எப்படிக் கிழசன்யாசி வேடத்தி


ல் சென்று
பார்வதி தவத்தைக் கலைக்க முயலுகிறார் என்று வருணிப்பான். வேலன் வி
ருத்தனாகி வள்ளி
கரம் தொட்டது தெரிந்ததே.

அரங்கத் தலைவருக்கு வாழ்த்து

பேரிளம் பெண்ணெனும் பருவம் அறிவோம்.


பேரிளம் சாமி நாதா! வாழி!
ஆரிவ்வரங்கில் கிழவர்? அறியேன்.
அறுபது? எழுபது? எண்பது? சொல்வீர்!

நான் இளைஞனாக இருந்தால்

இளைஞனாக இருந்தாலாவது?
இன்னா இன்ஸல்ட்! அதுவும் எனக்கு!
இளையவனே நான். இளைத்தவன் இல்லை.
இல்லாள் சான்றை வாங்கித் தரவா?

இரண்டொரு கற்பனை சொல்லி அமைவேன்.


இருமல் வருது..லொக் லொக் என்று.
திரைப்படம் பார்த்தே சிவக்கும் கண்ணர்
தீர இளைஞர் ஆவது எப்படி?

ஜீன்ஸ் போட்டு சிகரெட் சுண்டி


ஜில்லெனும் விஸ்கி ஸோடா உறிஞ்சி
'மூன்ஸ் வாக்'கில் மைக்கேல் ஜான்ஸன் *
( * இந்த வெள்ளைக் கருப்பானந்த ஸ்வாமியின்
தாக்கல் இந்தியத் திரையுலகத்தில் இன்னும் ஒரு
நூற்றாண்டிருக்கும்)
முடிச்சு அவிழ்த்து வீசிய 'கோட்'டைத்

தாவி எடுத்துத் தலையில் தரித்துத்


தாண்டவம் ஆடும் இளைஞர் கூட்டம்!
கோவில் காளை பசுக்களைத் துரத்திக்
கொட்டம் அடிக்கும் குஷியில் அவர்கள்!

முன்வால் ஆட்டிப் பின்னால் அசைத்து


மூச்சை இழுத்து வயிற்றைச் சுருக்கித்
தன் முன் தள்ளி எதிரில் ஆடும்
தனவதி இடையில் முட்டும் இளைஞர்!

பாரிஸ், லண்டன், லாஸ் ஏஞ்சலிலே


பாப் டான்ஸ் ஆடும்போதும் பின்னால்
தாரை, உருமி, நையாண்டி மேளம்
தாளம் ஒலிக்கத் தனித் தமிழ்ப் பாடல்!

( இது வேறு சந்தம்)

'கும்தலக்கடி கும்மா இச்சு கொடுத்துப் பாரு சும்மா!'


'கோணக் கொண்டைக்காரீ உன்னைக் காண வந்தேன் மாரீ!'
'குந்தடி குந்தடி காமாச்சி நல்லாப் பந்தடி பந்தடி பக்குவமா!'
'குலுக், குலுக்..விலுக்,விலுக்.. அஸக் லக்கடி அஸக் '

( பழைய சந்தம்)

இப்படிப் பாட்டு, இங்கிலீஷ் பெயர்கள்.


இன்னம் நரம்பு சுண்டும் நடனம்.
குப்பையைக் கொண்டு கோபுரம் ஏற்றி
கூகைக் கூவலை இன்னிசையாக்கி

மயங்கும் இளைஞர் மம்முத ராசர்


மத்தியிலே போய் மாட்டத் தேவையா?
தயக்கம் வருது! அதனால் இனிமேல்
தடியை ஊன்றுவேன்! முதுமையே தேவலை!

ராஜரங்கன்
==================
ஊன்று கோலிலும்
சான்று தருகிற
ஆன்ற புலவர்
தோன்றும் இளைஞர்

இலந்தை
==========
கருமால் மருகன் கடைக்கண் வீச்சோ?
சரளத் தமிழில் சரமாம் சொற்கள்
நரம்பில் இளமை; நடனச் சந்தம் ;
அரங்கில் தந்தார் அரச ரங்கர்

பசுபதி
=====
ராஜரங்க அறிஞரே,
சில சமயங்களிலே எனக்கு என் உடல் இளமையாக இருக்கக்
கூடாதா என்ற ஏக்கம் வரும்.
இனிமேல் வராது!
சிரிப்புக் கவிதை கொடுத்து என்னை சிந்திக்கவும் வைத்தீர். நன்றி!
அன்புடன்,
ஆர்.எஸ்.மணி
===========
அரசரங்கர் அவிழ்த்துவிட்டார் பாட்டு
அதனுள்நல்ல சரக்கையெல்லாம் போட்டு
... சரசமொன்றே இளமையென்று
... விரசம்விலை விற்பவர்க்குப்
பரிசளித்தார் பாரும்ஒரு 'வேட்டு'!

..அனந்த்
=
சந்த வசந்தக் கவியரங்கம் 14

கவிஞர் முனைவர் ரங்கராஜனுக்கு பாராட்டு

சிரித்க வைத்து எம்மைச் சிறையில் இட்டீர் !


நல்ல கருத்துகள் சொன்னீர்.

மூத்த அணிலும் முக்கி மரமேற


மூலையில் குட்டியும் அஞ்சி முடங்குமே
பித்தம் இயலாமை மூப்பு அனைத்தும்
தத்தம் மனத்தே தாம்.
(இரு விகற்ப வெண்பா)
(உரை: அதாவது என்ன சொல்ல வரேன்னா மூப்பை பொருட்படுத்தாது
வயசான அணில் உழைக்கும், இளம் அணில் நம்மால ஆகாதுனு சோம்பி
படுத்துரும்...எல்லாத்துக்கும் மனம் தான் காரணம்)

சிந்திக்க சிரிக்க வைத்த கவிஞர் முனைவர் ரங்கராஜனுக்கு பாராட்டுகள்.

அடுத்து வருபவர் கவிஞர் சேவியர்.


'என்னைப் பற்றிச் சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை' என்று அடக்கமாகச்
சொல்லிக் கொள்ளும் இவர் சாதனைகளைப் பாருங்கள்.

மூன்று புத்தகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.


1. ஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும். டிசம்பர் 2001 ல் வெளியானது.
120 பக்க கவிதைப் புத்தகம்
2. மனவிளிம்புகளில் - ஏப்ரல் 2002 ல் வெளியானது. 120 பக்க கவிதைப் புத்தகம்
3. சேவியர் கவிதைகள் - காவியங்கள் - உலக தமிழ்மொழி அறக்கட்டளை வெளியீடு. முழுக்
கவிதைகளின் தொகுப்பு. 960 பக்க பெரிய கவிதைத் தொகுப்பு.
4. நில்... கவனி... காதலி... காதல் குறுங்கவிதைகளின் தொகுப்பு

இவர் பள்ளி கல்லூரிகளிலும், கல்லூரிகளுக்கு இடையேயான கவிதைப் போட்டிகளிலும் ஏராளமான


பரிசுகள் வாங்கியதுண்டாம்.

திண்ணை, அம்பலம், தமிழோவியம், நிலாச்சாரல், திசைகள், சிங்கை இணையம், காதல்.காம்,


குவியம் போன்ற இணைய இதழ்களிலும், குமுதம், கல்கி, இலக்கியபீடம்,தென்றல் மற்றும் சில
சிற்றிதழ்களிலும் கவிதைகள் வெளியாகியுள்ளன.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், எழுத்தாளர் சுஜாதா ( புது நானூறு ), கவிஞர்கள்


நா.முத்துகுமார்,
யுகபாரதி, பாவண்ணன், வைரமுத்து போன்றோரின் பாராட்டுக்களை கவிதைகள்
சம்பாதித்திருக்கின்றன
என்பதே ஒரு சந்தோசமான செய்தி.

இந்தக் கவியரங்கில் கவிஞர் சேவியருக்கு தலைப்பு : "பெண்ணாக நானிருந்தால்..."

இதைப் படித்தவுடன் எனக்கு ஒரு பழைய ஜோக் நினைவுக்கு வந்தது.


பள்ளியில் கால் பந்தாட்டம் நடக்கிறது. ஒரு பார்வையாளர் பக்கத்துல இருக்குற
இன்னொருத்தர்கிட்ட சொல்றார் "அந்த சிகப்பு சட்டை போட்ட பையன் ஆட்டம்
சரியில்ல.. சொதப்பறான்"
அவருக்கு கோவம் வந்துட்டது. "உமக்கு கண்ணு தெரியல. அது பையன் இல்ல பொண்ணு.
அது என் பெண்ணாக்கும்..இவ்வளவு ஆடறாளேனு போகாம..."

"சாரி நீங்கதான் அவளோட அப்பானு எனக்கு தெரியாது. மன்னிச்சிருங்க"

" யோவ், கிண்டலா?நான் அப்பாவா? நான் அம்மாவாக்கும்....பேண்ட் போட்டிருந்தா


என்னா வேணா நெனச்சிக்கறதா?"

சேவியர் என்ன பண்ணப் போறாறோ....


ஆண்களுக்கு ஏதாவது உரிமை கிடைக்குமா? வயத்துல அடிக்காம பாத்துப் போட்டுக்
கொடுங்க....சார்...மேடம்...

தாயாய்த் தமக்கையாய்த் தாரமாய்த் தாங்குவீரோ


நாவால் எரித்து நங்கையரில் பேயாய்
நாடாண்டு ஆடவரை நசுக்கி நகுவீரோ
நாடினேன் நவிலுமும் பா.

வாங்க கவிஞர் சேவியர், உங்கள் கவிதையைத் தாருங்கள்.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
**************************************************************
பார்வையாளர் 1: அடுத்து எல்லே ராம்னா வந்திருக்கணும்...

பார்வையாளர் 2: சேவியர் முன்னமே வந்திருக்க வேண்டியது. லீவுல போயிட்டாரு,


தவிர எல்லே ராமுக்கு ஒரு பிரச்னை. "சர்வாதிகாரியாக நானிருந்தால்?" னு எழுதப்போக,
"ஓகோ, உங்களுக்கு அவ்வளவு தெனாவெட்டா"னு வீட்ல கேட்க, இவர்,
இல்லம்மா, உனக்குத்தான் அதிகாரம்.. சும்மாதான். ஒரு பேச்சுக்குதான்..சாரி..
ஒரு பாட்டுக்குதான்.." என்று அனுமதி கேட்டிருக்கிறாறாம். ரெண்டு நாளில
அனுமதி கிடைச்சிடலாம்.
===============

14.
அவை வணக்கம்.

சிரித்தல் ஒரு நிலை


சிரிக்க வைத்தல் ஒரு கலை.
அக் கலையும் வாய்த்திருக்கும்
இத் தலைவருக்கு
என் பணிவான முதல் வணக்கம்.

ஒரு மன்னிப்பு விண்ணப்பம்

'தவிர்க்க முடியாத காரணங்களால்'


என்பதை மட்டும்
தவிர்க்க முடிவதேயில்லை என்னால்.
தலைபோகும் அவசரங்களால் தான்
என்னால்
தலைகாட்ட முடியவில்லை
அடிக்கடி.
தயை கூர்ந்து மன்னிப்பீராக.

பெண்ணாக நானிருந்தால்...

அட...
நினைத்தே பார்த்ததில்லையே
பெண்ணாக நானிருந்தால்

என் நீள்காதின் நுனியிலும்


கூர் மூக்கின் முதுகிலும்
தங்கத்தின் சிரிப்பைத்
தொங்க விட்டிருப்பேனோ ?

சலூனுக்குள் புறங்காலால்
புறக்கணித்துத் தள்ளியக்
கால்நூற்றாண்டுத்
தலைமயிரைத்
தைலத்தால் தாலாட்டியிருப்பேனோ ?

என்
ஐந்து நிமிட ஆடைத்தேர்வை
அரை நாள் என்றாக்கி,
நான்கு நிமிட ஒப்பனையை
நாள்கணக்கில் நீட்டித்திருப்பேனோ ?

அழகுமீசை ஆண்களையெல்லாம்
புருவத்தால் புரட்டிப் போட்டு
பொழுதெல்லாம் புன்னகைத்து
வாலிபரிடம் வாலாட்டியிருப்பேனோ ?

இல்லை,
கனவுகளுக்குத் தாழ்ப்பாள் போடும்
என்
நிறத்துக்காகவே
நிராகரிக்கப் பட்டிருப்பேனோ ?

இப்படியெல்லாம்
நான் நினைத்தே பார்த்ததேயில்லையே !

வயிற்று வாழ்க்கையை
ஓர் அழுகையுடன் முடித்து வைக்கும்
மழலையை,
வயிற்றுப் பிழைப்பைக் காரணம் காட்டி
மரணப் பள்ளத்தாக்கில்
எறிந்து விடும் நிகழ்வுகளும்,

மோகத்தீயின் வெப்பத்தை
ஓலைப்பாயின் முதுகில் விரித்து
தவறிப்போகும் நாளில்
மொட்டுக்கு மலர்வளையம் செய்ய
கருக்கலைப்புக் கூடத்தில்
ஒப்பந்தம் இடும் நிகழ்வுகளும்,
உடலின் வளர்ச்சிக்கும்
மனதின் கிளர்ச்சிக்கும்
காதலென்னும் பெயரைச் சூட்டி
தனியறைகளில்
தூக்கிட்டுக் கொள்ளும் நிகழ்வுகளும்

வரவேற்பறையில் எறியப்படும்
நாளேடுகளில்
ஈரமாய் பிசிபிசுக்கையில்
இப்படி இருந்திருக்க மாட்டேனென்று
நினைத்ததுண்டு.

நகர இடமில்லாத
நகரப் பேருந்தில்
நகரும் கைகளை ஒடிக்கத்
திராணியின்றித் தவிக்கின்ற,

புத்தாடை போட்டுவரும்
கைம்பெண்களின் காதுகளுக்குள்
'யாரைப்பிடிக்கவோ'
என்று குரலெறியும்
குரல்வளைகளைக் குதறும்
வலிமையின்றிக் குனிகின்ற,

துப்பவும் முடியாமல்
தப்பவும் முடியாமல்
தொண்டையில் மாட்டிய தூண்டில்களாகும்
ஆசிரியர்களின்
சில்மிசச் சீண்டல்களை
அவ?தைப் புன்னகையுடன்
எதிர்கொள்கின்ற,

அகிலத்து வாழ்க்கை
அமிலத்து வாழ்க்கையாகாமல்
தடுக்க வேண்டுமென
நினைத்ததுண்டு.

எண்ணியதை விடுத்து
இப்போது எண்ணுகிறேன்.

கவிதைகளை
மரியாதைப் பீடத்தில் வைத்துக்
கிரீடம் சூட்டிக்
கெளரவிக்கும் நான்,

அங்கக் கவிதைகளே
தங்கக் கவிதைகளெனும்,
சமீபத்தியப்
பெண்கவிகள் பட்டியலில்
நிச்சயமாய்
இருந்திருக்க மாட்டேன்.


அன்புடன்
சேவியர்

15.
முதற்பாதி நகைச்சுவையோடும் பிற்பாதி துயரச்சுவையோடும் அமைந்த நல்ல கவிதை.
ஸாரிகாக்களும் ஸ்டீஃபானிகளும் பெண்களாகப் பிறந்து எதை எதிர்கொண்டார்கள்?
என்ன பாவம் செய்தார்கள்?

கொஞ்சம் தீ,கொஞ்சம் குளிர்சந்தனம், கொஞ்சம் தேன்,கொஞ்சம் எட்டிக்காய்


ரசம்,கொஞ்சம் நகைப்பு, கொஞ்சம் வெடிப்பு எல்லாம் கலந்தவள் பெண் என்று ஒரு
அறிஞர் சொன்னார். ( அதாவது- நான்தான்!
ஹி ஹி!). அந்தக் கலவையை அழகாகச் சித்திரிக்கிறீர்கள். வாழ்த்து.

ராஜரங்கன்
==========
சிரிப்பு ஊட்டி, சோகம் தந்து, சிந்திக்க வைக்கும் உன்னதமான
கவிதை!

பாராட்டுகள்!!

அன்புடன்,
ஆர்.எஸ்.மணி
=============
பெண்ணாக நானிருந்தால்

இப்படி இருக்க மாட்டேன்


என்பதில் பெண்கள் பாடு
செப்பியே முத்தாய்ப்பாய் ஓர்
செய்தியும் சொல்லிவிட்டார்
இலந்தை
============
சேவியர்:
பெண்ணென்று பூமியில் பிறந்துவிட்டால் - படும்
பீழையைக் கண்டு கொதிக்கும் உங்கள்
எண்ணத்தைத் தீட்டிய வேகத்திலே - உமது
ஏற்றத்தைக் காட்டிடும் பாடல் இது.

அன்புடன்
அனந்த்
============
'மங்கை'யாய்ச் சேவியர் வந்தார்
அங்கதம் சீற்றம் கலந்தார்
'அங்கப்பா' வழியில் போகாமல்
'தங்கப்பா' ஒன்று தந்தார் !

பசுபதி
==============
சந்த வசந்தக் கவியரங்கம் - 14

கவிஞர் சேவியருக்கு பாராட்டு


ஒரு நெருக்கடியான சூழலில், தந்தையின் உடல் நிலம் கவலைக்கிடமாய்
இருக்கும் நேரத்தில், நம் வேண்டுகோளுக்கு இணங்கி, நம்மை மகிழ்விக்கக்
கவியரங்கத்தில் கலந்து கொண்டு, கவிதை கொடுத்துச் சிறப்பித்த
கவிஞர் சேவியருக்கு மனமார்ந்த நன்றி.

கருக்கலையேன் தூக்கில் துவளேன் சின்னசிசு


உருக்குலையேன் என்று உரைத்த கருத்தில்
மேருவாய் நின்றீர் நமது பெண்டிற்கும்
ஏறுமோ இச்சொல் மனத்தே..

இனிய கவிதை கொடுத்த கவிஞர் சேவியருக்கு பாராட்டுகள்.

மக்கள் தொகையில் பெண்கள் தொகை அதிகம். அதாவது அவர்கள் ஒற்றுமையாக


இருந்தால் அவர்களே ஆட்சியில் இருக்கலாம். இப்பவும் அப்படித்தானே என்கிறீர்களா?
சரி விடுங்கள். எல்லே ராம் இன்னும் இரண்டு நாள் கேட்டார். (சர்வ அதிகாரம்
இல்லியா, fine print எல்லாம் படிச்சுப் பார்க்கணும்மாம் ! அவளன்றி ஓரணுவும்
அசையுமோ!)

அடுத்து வருபவர் கவிஞர் முனைவர் முனைவர் கண்ணன்

(ஆமய்யா, எழுத்துப்பிழை இல்லை. இரண்டு முனைவர் பட்டங்கள் பெற்றவர். பாசுர மடல்,


ஆன்மீகத்
தேடல்களால் இவருக்கு இணையத்து முனிவர் என்ற பட்டமும் உண்டு)(:-)

தமிழக திருப்புவனம் (பழைய இராமனாதபுரம் மாவட்டம்; மதுரைக்கு கிழக்கே 12 மைல்)


கிராமத்தில்
பிறந்த நாராயணன் கண்ணன் மதுரைப் பல்கலைக் கழகத்தில் உயிர் வேதியியலில் (Biochemistry)
முனைவர் பட்டமும், ஜப்பானிலுள்ள எஹிமே பல்கலைக்கழகத்தில் சூழல் வேதியியலில்
(ecotoxicology) முனைவர் பட்டமும் பெற்றவர். உடலின் நாளமில்லாச் சுரப்பிகளும், வானம்
பாடிக் கவிஞர்களும்
தன்னை கவிதை எழுத வைத்ததாகக் கூறும் இவர், கல்லு¡ரி மாணவனாக இருந்த போது எழுதிய கவிதைகள்
"கணையாழி" யில் பிரசுரமாகின. முதல் சிறுகதை 1978-ல் "குங்குமம்" இதழில் வெளியாகியது.
அகில இந்திய வானொலியில் தமிழில் அறிவியல் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் பொறுப்பை சில
ஆண்டு
காலம் வகித்த இவர், கலைக்கதிரில் விஞ்ஞானக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
"சுபமங்களா"வுடனான
தொடர்பின் காரணமாக இவரது படைப்பாற்றல் மீண்டும் பொலிவு பெற்றுக் கவிதைகள், கட்டுரைகள்,
சிறுகதைகள் தொடர்ந்து வெளி வந்தன. கணையாழி, இந்தியா டுடே ஆகிய பத்திரிகைகளில்
இப்போதும்
இவரது ஆக்கங்களைக் காணலாம். ஐரோப்பியப் புகலிலக்கியப் படைப்பாளிகளின் தொடர்பால் இவரது
ஆக்கங்கள் ஐரோப்பாவிலும் வெளியாகின்றன. எழுத்து, இசை, சிற்பம், அறிவியல், மெய்யியல்
தத்துவம், அழகியலில் ஈடுபாடு காட்டும் கண்ணன், கீல் (ஜெர்மனி) நகரிலுள்ள ஆல்பிரெக்ட்
கிறிஸ்டியன்
பல்கலைக் கழகத்தில் சூழலியல் விஞ்ஞானியாகப் பணியாற்றுகிறார்.

முனைவர் கண்ணன் சரளமும், வளமிக்க தமிழ்ச் சொல்லாட்சியும், கவர்ச்சியான குரலும்,


விஷய ஞானமும் உள்ள சிறந்த பேச்சாளர். சில வருடங்கள் முன்பு நடந்த
மலேசிய தமிழ் கணினி மானாட்டில், பழஞ்சுவடியின் செய்திகளை ஸ்கேனர்
என்னும் மின் வருடி மூலம் சேமிக்கலாம் என்ற கருத்தைக் கண்ணன் சொன்னதும்,
மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு எழுந்து இவர் முயற்சிக்கு ஒரு துவக்கு தொகையாக
10,000 யுஎஸ் டாலர்களுக்கு ஒரு காசோலையை அங்கேயே அளித்தார்.
கண்ணன் பேச்சை மேலும் கேட்க விட்டால் எங்கே அமைச்சர் தன் சொத்தையே
இவருக்கு எழுதி வைத்து விடுவாரோ என்று அஞ்சி, அமைச்சரின் மனைவி
அமைச்சரை நல்ல வார்த்தை சொல்லி வெளியே அழைத்துப்
போய்விட்டதாகச் சொல்வார்கள்.. 'முதுசொம்' என்ற அமைப்பைத் தோற்றுவித்து பழய
இலக்கியங்களை மின்பதிவாக சேர்க்கும் சீரிய பணியில் இவர் ஈடுபட்டுள்ளார். அதில்
லாவணி, தாவணி என்று ஏதோ இதுவரை சிறிதளவே வருடியிருந்தாலும்
பெரியதாக எதாவது செய்ய வேண்டும் என்ற அவாவுடன் உழைத்து வருகிறார்.

இவரது எழுத்துகளில், இவரது பாசுர மடல்கள் உயர்ந்த இடத்தை வகிக்கின்றன.


இதில் இவரது ஆன்மீக தேடலும் புரிதலும் புலப்படுவது கண்கூடு.
கண்ணன் படைப்புகள் கட்டப்பட்டிருக்கும் உரல்:
:http://www.angelfire.com/ak/nkannan/contents.html
படித்து இன்புறுங்கள். இவரது வலைப்பதிவும் சுவையான செய்திகளடங்கியது.

கவிஞர் முனைவர் கண்ணனுக்கு தலைப்பு 'கடவுளாக நானிருந்தால்...'


அனியாயமா இருக்கே? கடவுளுக்கு வந்த சோதனையைப் பாரும்.
அவனவன் பிருந்தாவனத்தில் புல்லாயிருக்கணும், கல்லா இருக்கணூம்,
கோயில்ல படியா இருக்கணும், கொடியில குருகா இருக்கணூம்னு எளிமையா
வின்ணப்பம் போடறச்ச இவர் தானே கடவுளாயிருக்கணும்னு.........
இது கடவுளுக்கே பொறுக்குமா? விடுவாரா?

புடத்தி லிட்ட பொன்னாக பாடல்கள் வடித்தனை


தடங்க லில்லா ஓட்டத்தில் தமிழுரையே தந்தனை
கடவு ளாக நீரிருக்க கண்ணனுமே விடுவனோ
கடவு ளாக நீரானால் மடலுமாரே தீட்டுவார் !
(மா-மா-காய்-காய்-விளம் என்றமைந்த பத்து சீர் விருத்தம்)

கவிஞர் முனைவர் நா. கண்ணன் வாரும், நெஞ்சம் நிறைய கவிதை தாரும்.

கண்ணைத் தொறக்கணும் சாமி


கையை புடிக்கணும் சாமி
கவிதை தரணும் சாமி
கரையேத்தணூம் சாமி

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
*******************************************************
பார்வையாளர் 1: தஞ்சை சரஸ்வதி மகால் பழஞ்சுவடி காப்பகத்துல
கண்ணனை சுவடியப் பார்க்கவே விடலியாமே?

பார்வையாளர் 2: ஆமாய்யா, இவரு போய் ஸ்கேன் பண்ணிட்டா


காப்பதற்கு தேவையில்லாம இந்தக் காப்பகமே போயிடுமே. அனாவசியமா
கவர்மெண்டு வேலை போயிட்டா ? அதான் தானும் படிக்காம,
படிக்கிறவனையும் விடாம சுவடியை புதையல் காக்கிற பூதமாக் காத்துக்கிட்டு,
இத்தனை இருக்கு, அத்தனை இருக்குனு கணக்கு காட்டிக்கிட்டு காலத்தை
கழிச்சிட்டு இருக்காங்க.
====================

16.
கடவுளாய் நானிருந்தால்...
சந்த வசந்த 14 கவிரங்கில் நா.கண்ணன்

வாழ்த்து

திரளும் கூட்டமதில்*
திம்மென்று படுத்துறங்கும்
விண்ணளந்த பெருமாள் வந்திங்கு
கண்ணளக்க வேண்டுமய்யா
கருத்துடனே கவி சமைக்க!

[* நாராயணன் =
நீதான் நித்ய வஸ்துக்களின்
திரளுக்கு ஆதாரம்
நீயே நித்ய வஸ்துக்களில்
நிரந்தரமாய் வாழ்பவன்]

[நான் உன்னை யன்றி இலேன் கண்டாய் நாரணனே!


நீ என்னையின்றி இலை - திருமழிசை ஆழ்வார்]

அவை வணக்கம்:

செஞ்சொற் கவிகாள்!
செவ்விய மனத்தாள்!
வஞ்சிப்பா கலிப்பா
வகையான இலக்கணம்
கிஞ்சித்தும் அறிந்தேனில்லை.
எஞ்சிய பா வகையுள்
இன்னும் இடம் பெறா வசனகவிதை
உரைவீச்சு என்னுமோர் சொற்கட்டு கொண்டு
மிஞ்சிய பொழுதில் சஞ்சாரம் செய்ய
விஞ்சும் வித்தகர்க்கு
விநயமுடன் விண்ணப்பம்.

தலைவா போற்றி!

எல்லே (ஆ!) சாமி


சொன்னாரென்றால்
சொல்லே போன கிழமும் சிரிக்கும்
¦(க)சால்லு ¦(க)சால்லு என்று.
வல்லோர் அரங்கத்து
அவைத் தலைவா!
வணக்கம் வக்கனையற்று.

*****************************
பா(b)வம்

முண்டாசு தலைக்கட்டி
முகத்தில்கரிக்கோடிட்டு
நெஞ்சை நிமிர்த்திப் பாடும்
சின்னஞ்சிறார் போன்றே
கண்ணன் கடவுளாய் பாவித்து
கவி செய்வதிங்கே!

*******************************

கடவுளாய் நானிருந்தால்
கடுகுக்குள் காரம் போல்
சொல்லுக்குள் சுவை கூட்டி
வானவில்லின் வளைவிற்குள்
வண்ணம் இரண்டு சேர்க்கலாம்.
எட்டுக்கால் பூச்சியின்
எட்டில் இரண்டு கழிக்கலாம்.
தாய்மையின் அழகைத்
தரமுடனே கூட்டலாம்.
ஆழ்வார்கள் பன்னிரண்டை
ஆயிரத்து மூவராக்கி
அறுபத்துமூவரை
அறுபதினாயிரமாக்கலாம்!
கள்ளமில்லாப் பிஞ்சு உள்ளம்
கனியாமல் காக்கலாம்.
பூக்களின் கூட்டதைப் பெருக்கி
பட்டாம்பூச்சிக்கு பரத்துவம் தரலாம்.

கடவுளாய் நானிருந்தால்
சக்கரையின் சுவை கூட்டி
சக்கரை வியாதி ஒழிக்கலாம்.
கல்லுக்குள் தேரை போல்
சொல்லுக்குள் சுரம் வைத்து
சுந்தரமாயக் குரல் தரலாம்.
கணக்கு எல்லோருக்கும் வரவைத்து
கணக்கு வாத்தியார் கூட்டதை ஒழிக்கலாம்:-)
ஓவியத்தைப் பேச வைக்கலாம்
ஒழியாத வயதைக் குறைத்து
ஓடியாட வைக்கலாம்.

கடவுளாய் நானிருந்தால்
செல்பேசி வழியாய் ஒலி, ஒளி மட்டுமேன்?
ஒட்டு மொத்த உடம்பையே அனுப்பலாமென விதி வைப்பேன்.
வரவின்றிச் செலவு செய்யும்
வயதைக் கொஞ்சம் கூட்டுவேன்.
வாலிப, வயோதிக நண்பர்களே! எனக்கூவும்
காளிமுத்து கோஷ்டியை சலாம் கொடுத்து அனுப்பிவிட்டு
கஷாயமில்லாமலே கன்னிப்பெண் சுகம் கூட்டுவேன்.
யயாதிக்கு தந்த வரம்
யாவருக்கும் தந்துவிட்டு
கற்பைக் கழட்டிவைத்து
கண்ணன் கண்ட சுகம்
அண்டத்தில் அனைவருக்கும்
பொதுவென வைப்பேன்.
காதல் சுகமெனக் காட்டும்
கனவுத்தொழிற்சாலை சினிமா வாழ்வை
சாஸ்வதமாக்கி கன்னிப்பெண்களை
கனவுடன் உலவ வைப்பேன்.

பிரிதலைத்தவிற்கலாம்
பிரிந்தவர் கூடலாம்
மறைந்தவர் மறுபடி
மண்மீது தோன்றலாம்

காற்றாடும் மனதைக் கட்டிப்போடலாம்


சோற்றோடும் சுகத்தோடும்
செகத்தினை வைக்கலாம்.

வேறு....

கடவுளாய் நானிருந்தால்
பூமியைச் சமன் செய்யலாம்
கோணலைத்திருத்தி
நட்டக்குத்தாய் ஓட வைக்கலாம்.
பின் பருவ காலங்கள் மாறும்
வசந்தருது நிலவும்
கார்கால மேகமும்
இலையுதிர் நிறமும்
பனியின் சருக்கலும்
இல்லாமலே போகும்.
பூமி கொஞ்சம் கோணலாய்
ஓடினால் என்ன வந்ததது?
நிமிர்த்தி வைத்து
இழப்பதென்ன?
ஹைகூ கவிதை போய்விடும்
எனும் போது
சீர்மையில் இல்லை
ஆக்கம்
சிறிது பிறழ்வு பட்டு
வாழ்வதிலும்
வளமையுண்டு காண்.

கடவுளாய் நானிருந்தால்
கொல்லும் கொடுமையை நிறுத்தி
அன்பில் செழித்திடும் வையமென ஆக்கலாம்.
கொல்லுதல் இல்லையெனில்
மன்னுயிர் பெருகுமே?
வையம் நிறைந்து
வான் வெளி தேடுமே?
கொன்றால் பாவம்தான்..ஆனால்
அதைத் தின்றால் தீரும்!
தின்னும் வெற்றிலை பருகு நீர்
உண்ணும் சோறென உள்ளுள்
புகுந்து உரு மாற்றம் செய்வது
எவ்வளவோ தேவலைதான்.

அண்டத்தின் சூட்சுமங்கள்
அதிகமாய் அறிந்ததில்லை.
தேனுக்குள் சுவையில்லை
சுவைக்கும் மூளைக்குள் தானுண்டு
என்பது போல் பல சூட்சுமங்கள்.
வெளியும் வளையும், காலமும் வளையும்
என்பது போல் சூட்சுமங்கள்.
ஆயிரம் அணுவுலைச் சூரியன்
அண்ட பிரம்மாண்டத்தில்
அடிபடும் சுட்டைக்காய் என்பது போல் சூட்சுமங்கள்.
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத்தருவதுபோல்
உயிர் வேதிமத்தின் பிளவில் சூடுதரும் சுகத்தை வைத்து...
பிரம்ம இரகசியங்கள் பலப்பலவாய் விரியும்

உள்ளுக்குள் உறங்கும் சிம்மம்


கள்ளன், சித்தன்
கனவு நிலை என்றில்லாமல்
தொட்ட தூணிலே துகள் பலவாய்
பிரிந்து மீண்டும் பட்டவர்த்தனமாய்
வந்துடல் பிளந்து நின்றால்
பகலலாம் பதிவுசாய்
கடவுளாய் நானிருந்தால்....

வேறு.....

கடவுளாய் நானிருந்தால்?

கிளுகிளுப்பூட்டும் தலைப்பு!
இரணிய கசிபுவாக நானிந்திருந்தால்.

ஆம்.

ஆசையூட்டும் தலைப்பு
மாபலியாய் நானிருந்தால்.

ஆம்.

மகிழ்வூட்டும் தலைப்பு
மாமன்னன் இராவணணாய் நானிருந்தால்.

ஆனால்..

நானோ வேறொரு ஆசாமி...

அதிகாரத்துவம் தொலைந்து
உலகின் கடைசி மையம் சுருங்கிக் குறையும்
வரை தவமிருக்கக் காத்திருக்கும்
வேறொரு ஆசாமி.
ஆளும் சக்தி
அதற்கொரு பெயர்
ஆண்டவன்
என்று
அறிவிலியொருவன்
சொல்லிப்போக
நாடெல்லாம்
மாபலியாய்
இரணியணாய்
இராவணனாய்
பல்கிப் பெருகி
பரிதவித்துச்
செத்தனர்
பண்டை
முன்னோர்
பலர்.

ஆனால் நான் அவனில் ஒருவனா?

இல்லை!
நான் வேறொரு ஆசாமி.

சக்தி, சக்தி சொல்லடா


முக்தி செல்லும் வழியடா!
என முண்டாசுக்கவி சொன்னாலும்
சக்தி சும்மாய் வருவதில்லை.
சக்தியுள்ளவன்
சலம்ப வேண்டிய அவசியமே இல்லையே!
சக்தியுடன் ஒட்டிக்கொண்டு
பிறந்த உடன் பிறப்பு...
பொறுப்பு அன்றோ!

சக்தி வேண்டும், ஆனால்


பொறுப்பு வேண்டாம்
என்றால்
வெற்பு முறிந்து
பொடிப்பொடியாவது போல்
சக்தி முறிந்து சவமாகக் கண்டோம்.

வேறு....

நான் கடவுளானால் என்று


தலைப்புத் தந்து எம் அறிவுமதிகளுக்கு
வாய்ப்பில்லாமல் செய்துவிட்டனர்.
கடவுள் பொய். கடவுளைப் பிறப்பித்தவன் மனிதன்
என்று சொல்லமுடியாமல் போச்சே!
இருந்தாலும் நாத்திக நண்பன் கூவுகிறான்
நான் கடவுளானால் முதல் ஒழிப்பு
இந்தக் கடவுள்தானென்று!
இதுவொரு அபத்தவாதமென்றாலும்
பொருள் இல்லாமல் இல்லை.

எத்தனை வியாபாரம் கடவுள் பெயரால்?


இழப்பது வெறும் மயிர்தான் ஆனால்
லாபம் நல்லதொரு வாழ்வு
ஆயிரம் அடியார் பாதம் தாங்க
கடவுளுக்கே சபலம் தரும்
கனிவான வாழ்வு.
பொடியன்களெல்லாம் கிளம்பிவிட்டார்கள்!
புராணங்களைத் திருத்தி
புண்ணியத்துவம் பெற்று
அடியார் போல் காட்சி தந்து...

ஊழல் பெருகிவிட்ட சமூகத்தில்,

கடவுள் உண்டென்றென்றாலும் காசு


இல்லையென்றாலும் காசு..

அடடா!

நான் கடவுளானால்?
கடவுளை வைத்துக் கொள்ளவா?
இல்லை வைத்துக் கொல்லவா?

ஆங்...புத்தன் அதைத்தானே செய்தான்.


புத்தமௌனம்
இருப்பதை இல்லையென்று சொல்வதா?
இல்லையென்பதை இல்லையென்று சொல்வதா?
வைத்துக் கொல்வது இதுதானோ?

இருந்தாலும் இந்தத்தலைப்புத் தந்தவர் ஒரு


இராமானுச அடியார்தான் :-)
கடவுள் வேறு, நான் வேறா?
நானறிவேன், நீ அறியாய் எனும்
அத்வைதம் தெரியாதா அவருக்கு?
மாங்காய் மடையா! குழுவில் மாத்வரும் உண்டென்று
மண்டையில் அடிக்கிறான் மற்ற நண்பன் :-)

நான் கடவுளானால்?
கேள்விக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும்
முரண்பாடு எது?
நான் முதன் மந்திரியானால்
இது செய்வேன், அது செய்வேன்!
என்பது போல்தான் இதுவுமா?
குறையிருக்கும் இடத்தில்தானே
ஒரு புதுத்தேவை வருகிறது!
கடவுள் ஏன் குறையுடையவனானான்?
மானுட வாழ்வின் புதிர்களில் இதுவுமொன்று.

மனிதனாய் நானிருந்து கடவுளாய் சிந்திப்பது போல்


கடவுளாய்த் தானிருந்து மனிதனாய் சிந்திக்கவில்லையே அவன்.

எதிலாவது ஓர் வழி வைத்தானா?


ரோமுக்குப் பல வழி என்பதுபோல்
பரமுக்திக்கும் பலவழியென்றான்.

மேற்கே கிருத்தவம், இசுலாம்.


புனிதப்போர்களில் சாக்காடுட்டோர்
புனிதமில்லாப் போர்களில் மாண்டோரிலும் அதிகம்!
கிழக்கே பௌத்தம், சமணம், வேதம், சாக்கியம்,
பைரவம், சைவம், வைணவம், சூர்யம்
காணாதிபத்யம், சைவ சித்தாந்தம்
இன்னபிற கலவைகள்!

காதல் வைத்தான்
காதலில் தோல்வி வைத்தான்
மணம் வைத்தான்
மண(ன)முறிவு வைத்தான்
உறவு வைத்தான்
உறவில் பிரிவு வைத்தான்.
வாழ்வு வைத்தான்
வாழ்வில் மரணம் வைத்தான்.
நெஞ்சு வைத்தான்
நெஞ்சு நிறைய நேசம் வைத்தான்
ஆனால் நெஞ்சிலே குறை வைத்தான்
குறை வழியே முறிவு வைத்தான்.

ஏதாவது ஒழுங்காகச் செய்தானா?


உலகங்கள் கோளமென்றால்
எரி கற்களை சமனற்றுச் சுற்ற வைத்தான்
பரிணாமம் ஒன்று வைத்தான்
பாதியாய் மனிதம் வைத்தான்
உடலென்ற பொறி வைத்தான்
பொறிக்குள் குறை வைத்தான்
மனது வைத்தான்
மனத்துள் அசைவு வைத்தான்
காவி உடை கொடுத்தான்
காவிக்குள் காமம் வைத்தான்
பெருத்த உயிர் படைத்தான்
பேரழிவை உடன் வைத்தான்.

வேறு....

வருபவர்க்கு வழங்க வள்ளல் வையமுண்டு


எடுக்க, எடுக்க குறையா வளமுண்டு அவள் கருவரையில்.
ஆயினும் கால் வயிற்றுக்கு கஞ்சிக்கு வழியில்லாமல்
வாடி உயிர்விடும் வழிநடை மனிதர்கள்.
காமப் பிசாசிற்கு கஞ்சி ஊற்றிக்காணாமல்
கன்னிகள், பிஞ்சுகள், பாலகர்
பாலியல் வல்லுறவிற்குப் பலியாவதேன்?
போர்கள் ஏன்?
மொழிதான் வாழ்வா?
இனம்தான் எல்லாமா?
எல்லைகளை பகுத்தவன் யார்?
நிறத்தைக் கொடுத்தவன் யார்?
தேசியம் உண்மையா? இல்லை
சாதிதான் உண்மையா?
வர்க்கபேதம் வந்ததேன்?

கேள்விகள் கற்பனைக்கு வித்திடுகின்றன.


சொர்க்கத்தில் பேதம் கிடையாது!
சொர்கக ் ம் போக பாவம் செய்தல் கூடாது!
பாவ மன்னிப்பு உண்டு
அதற்கொரு விலையுமுண்டு!
அடுக்கடுக்காய் கேள்விகள்
அடுக்கடுக்காய் சொர்க்கங்கங்கள்.
பைசாச லோகம், பித்ரு லோகம்,
திரிசங்கு சொர்க்கம், இந்திரலோகம்,
வைகுந்தம், கைலாசம்,
நித்தியசூரிகள், திருநாடு
அடுக்குகளுக்குப்பின்
அமைதியாய் சலமற்று
அப்பிரமம்.

அப்படியே இருந்திருக்கக்கூடாதா?
இருந்திருந்தால்
இந்தக் கன்மம் ஏன்?
யோகம் ஏன்?
பகவான் ஏன்?
பாகவதன் ஏன்?
நாயகன் ஏன்?
நாயகி ஏன்?

கடவுளாய் நான் வந்து என்ன புதிதாய்


சாதிக்கப் போகிறேன்?

கடவுளாய் நானானால்?

வாலைத்தின்னும் பாம்புக் கேள்வியிது!

விடை காண முடியா விஷமக் கேள்விது


விடை சொல்ல முடியா வித்தகக் கேள்விது

எல்லோரும் போய் கண்ணாடி பாருங்கள்!


கோதைக்குக் காட்டியவன்
வள்ளலாருக்குக் காட்டியவன்
நமக்குக் காட்டாமல் விடுவானா?

விடலாம்...

அதனால்?

கவியரங்கம் நடத்தலாம்
சும்மா இருக்கும் சங்கை
சுகமாக ஊதலாம்.
கவிதை இயற்றலாம்
களிதட்டுச் செய்யலாம்.
கேளிக்கை முடிந்தவுடன்
கேள்வி நேரம் முடிந்தவுடன்
பாதித்தூக்கத்தில்
பரிதவித்து விழித்து நின்றால்
பௌயமாய் வந்து நிற்கும்
பதில் தெரியாக் கேள்வி
ஒன்று
.....
எற்றைக்கும்
ஏழேழ் பிறவிக்கும்.
......
எம் உற்றம் யார்?
உறவு யார்?
அப்பன் யார்?
அம்மா யார்?
அடிமடியை அரவணைத்து
அழுந்தத்தூங்கும்
அவள்(ன்) யார்?

பரவஸ்து
கேள்வியாய்
கேள்விக்குள் பதிலாய்
கற்பப்பை முட்டையாய்
முடங்கிக் கிடக்கும்
முதலும் முடிவுமாய்
முடிவுறும்
இம்
முற்றுப்
புள்ளி
போ
ல்
.
========
கேள்விமேல் கேள்வி கேட்டு
பதிலைத் தேடி நாமெல்லாம்
நம்மையே தின்ன வைத்தீர்
கலியுக கண்ணனாரே!

மனிதன் படைத்த கடவுள்


மனிதனுக்கே புதிர்.
எல்லாம் படைத்த இறைவன்
அவனுக்கே புதிர்.

அன்புடன்,
ஆர்.எஸ்.மணி
=======
எத்தனை கேள்விகள்?, எத்தனை விடைகள்
எத்தனை எத்தனை முரண்களின் தொகுதி
வித்தக மாகவே விளம்பின சிலவாம்
வேதனை பொங்கிட விடுத்தன சிலவாம்
அத்தனின் நாடகம் அறிபவர் யாரே
ஆடலின் இடையொரு அசைவரு நிலைபோல்
அவனெனும் பாவனை அவனிலை எனவோ?
மத்தினை எடுத்துயர் தயிரினைக் கடைந்தால்
வருகிற வெண்ணையாய் வந்தது பாடல்.

வாழ்க!

இலந்தை

==========
கண்ணக் கடவுளே!

இப்போ திருக்கும் இறையால் இயலாத


செப்படி வித்தையெல்லாம் செப்பினீர்! - இப்படி
ஆகுமென்று முன்பே அறிந்தன்றோ அக்கடவுள்
ஏகினான் கண்மறைவாய் இன்று!:)

அனந்த்
=========
சந்த வசந்தக் கவியரங்கம் - 14

கவிஞர் முனைவர் கண்ணனுக்கு பாராட்டு

பாடி அசத்திவிட்டீர்கள்.

நீங்களே கடவுளானா , சனங்க உங்க கண்ணில பட்சணத்தை சும்மா காட்டிட்டு


தாங்களே கொட்டிக்கிறாங்க என்ற கோபத்தில்,

சீடை முறுக்கு சுட்டி அதிரசம்


ஆடைத் தயிரோடு வெல்லச் சீடையும்
சாடையாகக் காட்டிடும் மக்காள்!- தாருமே
வாடையேனும் பார்க்கவொரு விள்ளல்.

என்று பாடுவீர்கள் என்று நினைத்தேன்.


ஆனா பெரிய விசயமா சொல்லிட்டீங்க.

கால்கை உடலில் கண்ணொடு வாயென


காற்றடைத்த கூட்டில் பலவுமிட்டுக் கட்டி
இயக்கும் மூளையில் கேள்வியும் ஒன்று
பதித்தான் 'யார்நீ' எனவே.

ம்..ம்..

காளிங்கன் மீதன்றும் கால்வண்ணம் மட்டுமா


காட்டும் விரலில் தூக்கிய கைவண்ணம்
வாயில் உலகம் சொல்லில் நாவண்ணம்
பாவண்ண மும்பார்த்தோ மிங்கு.

அருமையான கவிதை தந்த கவிஞர் முனைவர் கண்ணனுக்கு பாராட்டுகள்.


மலேசியாவில் நடக்க இருக்கும் தமிழ் கணினி மானாட்டுக்கு கலந்து கொள்ள
இருக்கும் உங்களுக்கு சந்த வசந்தந்தின் வாழ்த்துகள்.

அடுத்து வருபவர் கவிஞர் சின்னக்கண்ணன்


இவரது புனை பெயர்கள் : கே.ஆர்.ஐயங்கார், சேவியர் தாசன், மேனகா விS வாமித்ரன்..
சின்னக்கண்ணன் என்பது அவையடக்கமாய்ச் சூட்டிக் கொண்டது. கண்ணன் ராஜகோபாலன்
இயற்பெயர். ( அப்பா..... ஒரு ஆளுக்கு அஞ்சு ஓட்டு. கலைஞர் கூட்டணி எப்படி ஜெயிச்சிதுனு
இப்பத்தான்யா புரியிது)(:-)

எழுதியது என்று பார்த்தால் 30 க்கும் மேற்பட்ட சிறுகதைகள்(நிறைய திண்ணையில்


வெளிவந்திருக்கின்றன), சில பல கவிதைகள்.ராகாகியில் கட்டுரை விமர்சன முயற்சிகள், தினம்
ஒரு கவிதையில்
பூமாலை தொடுத்த பாமாலை (திருப்பாவைத் தொடர்) கொஞ்சம் கதைக்கலாம் வாங்க என்னும்
தொடர்(பிடித்த
கதை நாவல்களைத் தொகுக்கும் முயற்சி)
படித்தது பிஎஸ்ஸ.¢.கணிதம், சிஏ.இண்ட்டர்.
சிறுகதை கட்டுரை மரபு புதுசு என்றே கவிதைகள் முயற்சி செய்தே பார்த்திருக்கும்
இவருக்கு நகைச்சுவை எழுத நிறைய விருப்பம்.

மஸ்கட்டில் தற்சமயம் வேலை (அக்கவுண்டிங்). பிறந்தது வளர்ந்தது படித்தது மதுரை


பின்னர் துபாயில் வேலை- அங்கே பன்னிரு ஆண்டுகள்
பின்னர் இரண்டரை வருடம் அமெரிக்காவில் ஃப்ளோரிடா மானிலத்தில்..
சலித்துச் சென்னையில் சிலநாள் இருந்து அலுத்து இப்போது மஸ்கட்..

இவரோட தலைப்பு 'பூவாக நானிருந்தால்..'

மென்மையான தலைப்பு....

புவியில் கவிகள் அரங்கத்து சின்னப்


பூமாலையாய் வந்த சின்னக் கண்ணா
பூவில் பூகம்பம் புயலும் வருமோ
பூசைக்கு வந்த வாச மலரோ
பூவின் வாசம் எங்களுக்கு தெரியுமோ
போகப் போக தானே புரியுமோ
பாவும் தரவே இங்கு வாரும்.

வாங்க கவிஞர் சின்னக் கண்ணன், வந்து கவிதை தாரும்.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
===============
17.
கடவுள் வாழ்த்து

வரமெனவே மனிதவுரு வையகத்தில் பெற்றவெனை


தரத்துடனே தமிழ்க்கவிதை தரச்சொல்லிக் கேட்டுவிட
சரம்சரமாய்க் கவிகோர்க்கச் சிறுவன்நான் சிரந்தாழ்த்திக்
கரங்குவித்து வணங்கிடுவேன் கணபதியே அருள்புரிவாய்.

தலைவர் வணக்கம்

மனதிலுள்ள துயரெல்லாம் மறைந்து போகும்


மாமனிதர் சாமியவ்ர் எழுத்தைக் கண்டால்
கணப்பொழுதில் வயிற்பிடித்துக் குலுங்க வைத்து
கண்களிலே நீர்கூட்டி நகைக்க வைப்பார்

கனமான தலைப்பெனக்குக் கஷ்ட மென்றே


காரியமாய்ப் பூவென்று கொடுத்து விட்ட
குணமான தலைவருக்கு வணக்கம் சொல்லி
குவிந்திருக்கும் பூங்கொத்தைக் கையில் வைப்பேன்.

அவை வணக்கம்

மொட்டாக இருந்தவெனை மலரவைத்த நல்மனிதர்,


பட்டாக பளபளக்க நெய்துவிட்ட ஆசான்கள்,
சிட்டாக வந்திருக்கும் சிங்கார ஆர்வலரைத்
தட்டாமல் தலைதாழ்த்தி வணங்குகிறேன் வாழ்த்துவிரே..

*****************
பூவாக நானிருந்தால்
*****************

பூவாக நானிருந்தால் எந்த வண்ணம்


புவனமி தில் பிறந்திருப்பேன் என்ற எண்ணம்
பாவாகப் புனைகின்ற இந்த வேளை
பாலகனென் பிழைகளைநீர் பொறுக்க வேண்டும்

ஆவாரம் பூவென்றும் அல்லி என்றும்


அழகழகுப் பூக்களுண்டு உலகந் தன்னில்
பாவாகச் சொல்வதற்குக் கொஞ்சம் பூக்கள்
பக்குவமாய்த் தொடுத்துத்தான் பார்ப்பேன் இன்று

**
மல்லிகைப் பூவாய் நானிருந்தால் - எழில்
மங்கையர் தலையில் வீற்றிருப்பேன்.- மணம்
கொள்ளையாய் வீசி வாலிபர்தம் - நெஞ்சம்
கொந்தளிக்க வைத்தே நின்றிருப்பேன்.- ஆனால்
இந்தப் பூவினில் குறையுமுண்டு - மதன்
உற்சவத்தில் அது நசுங்கிவிடும் - எனில்
மல்லிகைப் பூவா வேண்டாமே - வேறு
நல்ல பூவினைப் பார்த்திடலாம்...
**

மென்மையெனும் உணர்வதனைச் சொல்வதற்கு


மாந்தர்கள் இதனைத்தான் சொல்லிச்செல்வர்
தன்மையிலே அழகான பூவென்றாலும்
தொட்டாலே வாடிவிடும் இந்தப்பூதான்

ஆதலினால் சொல்லிடுவேன் நானுமிங்கே


அனிச்சமலர் போலப்பிறப் பெடுக்கமாட்டேன்..
வேதனையாம் கோழைத்தனம் கொண்டுநெஞ்ச்ம்
வெம்புகின்ற பூவெல்லாம் எனக்கு வேண்டாம்..
**

ஆசைகொண்டு அழைக்கவைக்கும் திரவியங்கள்


அழகாக இப்பூவில் எடுப்பார் நன்றாய்
ஓசையெதும் செய்யாமல் சிரித்தே நிற்கும்
உவப்பான ரோஜாதான் வேறுஎன்ன

ஆனாலோ இதனிடமும் குறையு முண்டு


ஆழமுள் காம்பினிலே மறைந்தி ருக்கும்
வீணாக மற்றவரை நோக வைக்கும்
பூவாக ஒருபொழுதும் மாறமாட்டேன்..

**
குண்டுகுண்டுக் காய்களாய் மாற்றங்களைக்
கொள்கின்ற இந்தப்பூ பரவாயில்லை
கண்நிறைக்கும் கோலங்கள் கொண்ட பெண்கள்
கண்நிறையும் கோலங்கள் தெருவில் இட்டு

திண்ணென்றே இப்பூவை நடுவில் வைத்து


தள்ளிநின்று அவ்வழகைப் பார்ப்பர் அன்றோ
விண்ணோக்கிப் பார்த்திருக்கும் பூசணி யின்பூ
விகசித்தே அமர்ந்திருக்கும் வாயில் தோறும்

இருந்தாலும் பூசணிப்பூ பாவம்தானே


ஏனென்றால் ஒருமாதப் பொழுதுமட்டும்
விருப்பமாய் வாச்ல்மட்டும் வைத்திருப்பர்
வேறுஏதும் உபயோகம் ம்ஹீம் இல்லை.
***

வாசமிலா பூவென்றால் வேப்பம்பூதான்


உள்ளத்தின் தலைவாயில் வ்ந்துநிற்கும்
பாசமுடன் புதுவருடப் பிறப்பில்தானே
பச்சடியை வைத்துவிட்டுக் கொண்டாடிடுவர்

பசப்பெல்லாம் தெரியாத இந்தப்பூவும்


கசப்பாக வாய்மாற்றி வயிற்றை ஆற்றும்
பொசுக்கென்றே சொல்லிடுவேன் பூவை யர்கள்
சூடாத இப்பூவாய் மாறமாட்டேன்..
**
கலகலப்பாய்ச் சிரித்துநிற்கும் கன்னியரின் செவ்விதழின்
வ்ழவழப்பும் வாய்ச்சிவப்பும் கொண்டுநின்றே கூந்தலிலே
பளபளப்பாய் இருளிலேஓர் சூரியன்போல் மின்னுவது
சலசலக்கும் கனகாம்பர மலரென்றால் மிகையில்லை..

வழக்கம்போல் இந்தப்பூ என்க்குவேண்டாம்


வாசமிலை என்று சொல்லி ஒதுக்கலாந்தான்
பழக்கமாக இறைவனுக்குப் பூஜைசெய்ய
பயனாக இந்தப்பூ ஆகாதன்றோ..

**
எப்போதோ பூப்பூக்கும் அத்தி என்று
ஏற்றமுடன் எனையுரைத்தார் அறிஞர் அன்று
தப்பில்லை என்றாலும் தயக்கம் உண்டு
தரமான பூதானா அந்தப் பூவும்

குப்பென்றே வாசனையை வெளியில் விட்டு


குவிந்திருக்கும் மொட்டிலின்று மலர்ந்திடாமல்
சப்பென்றே சோம்பலுடன் மெல்லப் பூக்கும்
அத்திப்பூ வாகநானும் இருக்க் மாட்டேன்...

**

சந்தங்கள் துள்ளிவரும் சிறப்பான இவ்வரங்கில்


சஞ்சலங்கள் இல்லாமல் சொல்லிடுவேன் யானுமின்று
எந்தப்பூவாய் இருந்தாலும் ஏழுமலை வசித்திருக்கும்
எழிற்கொஞ்சும் வேங்கடவன் காலடியில் நான்கிடப்பேன்..

அன்புடன்
சின்னக் கண்ணன்..

===========
தரமிகு மலர்கள் எடுத்தார்;
. சாற்றினார் நிறைகள் குறைகள்;
பரமனை மனதில் வைத்தார்
. பாமாலை தொடுத்து முடித்தார்.

பசுபதி
========
குறையே இல்லாப் பூ உண்டா?
கொட்டாத் தேனி தானுண்டா?
கறையே இல்லா நிலவுண்டா
கண்ணீர் இல்லா விழி உண்டா?
நிறையே வேண்டின் ஏதோ ஓர்
நெருடல் இன்றிக் கிட்டாது
உறையைப் பார்த்து மயங்காமல்
உள்ளே பார்த்தால் உயர்வுண்டு.

இலந்தை
=============
'பூ..ஈதென்ன?' என யார் சொல்வார்? வாசப்
பூத்தொடுத்து வழங்கிட்ட பொலிவு! இங்கு
பூந்தோட்டமாய் சந்த வசந்தக் கூட்டம்
பூசிக்கும் கலைமகளின் மார்பில் ஆரம்!

வாழ்த்துகள்!

ராஜரங்கன்
========
அன்புள்ள சி.க

அரும்பாகி மொட்டாகி அன்றலர்ந்த எழில்காட்டிச்


சுரும்பினங்கள் மயங்கிடவே சுகந்தங்கள் மெலவீசி
ஒருநாளே வாழ்ந்தாலும் உய்ந்திடவோர் வழிகாட்டித்
திருவடிகள் சேர்ந்துவிடும் சிறந்தநல் பூவினங்கள்
நன்று சொன்னீர்கள். வாழ்த்துகள்.

மலையும்,காடும் நிறைந்து மனித நடமாட்டம் இல்லாத மலைமீது குடிகொண்ட வேங்கடவன், மரம்,


செடி,
கொடிகளிலிருந்து சிந்திக் கிடக்கும் பூக்களைத் தனக்கே அர்பப் ணித்ததாக உவந்து ஏற்று
மகிழ்ந்திருப்பதை நம்மாழ்வார் எடுத்துச் சொல்கிறார்

சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து


அந்தமில் புகழ்க் காரெழில் அண்ணலே!

சௌந்தர்
======
கள்ளமிலா மலர்களில்நாம் காணுகின்ற குறைகள்நம்
உள்ளமதன் ஊனமன்றோ? உள்ளபடிப் பார்க்கையிலே
புல்லையும்தன் அடியாரின் பூசைக்கு ஏற்குமந்த
நல்லவனின் நோக்கினிலே நம்குறைகள் நிறைவாமே!
இறைவனின் காலடியில் இருப்பதற்கு விரும்பிஇந்த
குறையில்லாத் தத்துவத்தைக் கூறிவிட்டீர் குறிப்பாக!

அனந்த்
===========

18.
நடந்தும் நடக்காத ஒரு பேட்டி

இரவு எட்டரை மணி இருக்கும்.


தொலைபேசி ஒலிக்கிறது.
அந்தப் பக்கத்தில் இதுவரை கேட்காத ஒரு குரல்.

குரல்: ஹலோ! ஆர்.எஸ்.மணியா?

நான்: ஆமாம். நீங்கள் யார் பேசுகிறீர்கள்?

குரல்: நான்தான் சவநி பேசுகிறேன்.

நான்: சவநியா? அப்படி எனக்கு யாரையும் தெரியாதே!

சவநி: உமக்கு என்னைத் தெரியாமல் இருக்கலாம்.


ஆனால் எனக்கு உங்களை நன்றாகத் தெரியும்.
நான்தான் சந்த வசந்த நிருபர். சுருக்கமாக சவநி.

நான்: ஓ! அப்படி ஒருவர் இருப்பதாக எனக்குத் தெரியவே


தெரியாதே!

சவநி: உமக்கு எல்லாம் தெரியும் என்று யாரும் சொல்ல வில்லையே!

நான்: (மௌனம்)

சவநி: அது சரி! கவியரங்கம் 14-லில் கலந்து கொள்ளாமல்


ஊரை விட்டே ஓடுகிறீர்களே! கொடுத்த தலைப்பில்
பாட்டெழுதத் தெரியவில்லையா?

நான்: அதெல்லாம் ஒன்றுமில்லை. பாட்டெழுதத் தெரியாமல்


நான் ஓடுகின்றேன் என்று யார் சொன்னார்கள்?
சவநி: யார் சொன்னாரா? நீங்கள்தானே அன்று கவிஞர் புகாரியிடம்
சரவணபவன் சிற்றுண்டிசாலையில் "ஐயா! கஷ்டமான தலைப்பைக்
கொடுத்துவிட்டார் தலைவர்" என்று சொன்னீர்கள்?

நான்: அது உங்களுக்கு எப்படித் தெரியும்?

சவநி: நான் பக்கத்து மேசையில் மசால் தோசை சாப்பிட்டுக்


கொண்டிருந்தேன். நீங்கள் கவனிக்க வில்லையா?

நான்: அங்கு வருபவர்களெல்லாம் மசால் தோசை முழுங்கும்போது


உங்களைத் தனியாக எப்படி கவனிக்க முடியும்?

சவநி: அது போகட்டும். என் கேள்விக்கென்ன பதில்?

நான்: உன் பார்வைக்கென்ன பொருள்?

சவநி: என்ன சொல்கிறீர்கள்?

நான்: Never mind! பழைய சினிமா பாட்டு lyrics நினைவுக்கு வந்தது.

சவநி: நான் உங்களை எடை போட்டது சரிதான்!

அது கிடக்கட்டும். விஷயத்திற்கு வருகிறேன்.


கவியரங்கத்தில் நீங்கள் கலந்து கொண்டால்
தலைவர் உங்களைப் பற்றி சில செய்திகளை
வாசகர்களுக்குச் சொல்ல ஆசைப் படுவார்.
அதுவாவது உங்களுக்குத் தெரியுமல்லவா?

நான்: நன்றாய்த் தெரியும். ஆனால் நான்தான் கவியரங்கத்தில்


கலந்து கொள்ளப் போவதில்லையே!

சவநி: அதுதான் எனக்கும் தெரியுமே!


அதனால்தான் அந்தக் கேள்விகளை நானே கேட்டு
இன்றைய செய்தி சேகரிப்பை நிரப்பிக் கொள்ளலாம்
என்று பார்க்கிறேன்.

முதல் கேள்வி, நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்?

நான்: (சத்தம் போட்டு) ஹலோ! ஹலோ!!

சவநி: (அவரும் சத்தமாக) நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்?

நான்: (இன்னும் சத்தமாக) ஹலோ! ஹலோ!! ஹலோ!!!

சவநி: (சிறிது நேர அமைதிக்குப் பின், கொஞ்சம் எரிச்சலோடு)


உங்கள் பட்டங்கள் ......... please!

நான்: சின்ன வயதில் நிறைய என் கையால் செய்தே விட்டிருக்கிறேன்.


கை மாஞ்சா, காத்தாடி மாஞ்சா எல்லாம் போட்டிருக்கேன்.
அந்த காலத்திலே மெட்ராஸிலே வளர்ந்தவனாச்சே!

சவநி: அதை நான் கேட்கவில்லை ஐயா!


சரி விடுங்க.......மறுபடியும் கேட்டால் உங்கள் காது மீண்டும்
மந்தமாகி விடும்.

உங்கள் வாழ்க்கையிலே உருப்படியா என்ன பண்ணியிருக்கீங்க?

நான்: அதையேன் கேக்கிறீங்க! சின்ன வயசிலே எங்கப்பா அடிக்கடி


என்னைப் பார்த்து " நீ உருப்படியா என்ன பண்ணப் போறே?"ன்னு
கேட்பார். "அதுக்கு என்ன அர்த்தம்?"னு கேட்டா போட்டு அடிப்பார்!
அவர் ஒரு பள்ளிக்கூட வாத்தியார். உங்களுக்குத்தான் தெரியுமே,
நம்ம ஊர்லே, அந்தக் காலத்திலே வாத்தியார் கிட்டே கேள்வி
கேட்டா அடிதான் விழும்னு!

அன்றையிலிருந்து இன்றுவரை 'உருப்படி'ன்னா என்னன்னே எனக்குத்


தெரியாது.

சவநி: ('சரியான சாவு கிராக்கி' என்று முணுமுணுத்து விட்டு)


சரி, சரி! ஊருக்குப் போயிட்டு வாங்க. எப்போ திரும்பி வரதா
உத்தேசம்?

நான்: கவலைப் படாதீங்க! நாலே மாசத்திலே ஓடி வந்து விடுவேன்!

சவநி: ஆஹாங்!
நிதானமாய் ஆறு மாதம், ஒரு வருஷம் வேண்டுமானாலும் தங்கி விட்டு வாங்க.
நீங்க வரலையேன்னு இங்கே யாரும் கவலைப் பட மாட்டாங்க!

நான்: இதைச் சொன்னதற்கு ரொம்ப சந்தோஷம்.


என்னைப் பத்தி யாராவது கவலைப் பட்டா
நான் ரொம்ப வருத்தப் படுவேன்.

"மகுடியாய் நான் இருந்தால்" என்கிற தலைப்பைத் தலைவர்


எனக்குத் தந்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாத விஷயமாக
இருக்காது. அதைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் போனால்
மரியாதையில்லை.
ஒரு சில வரிகளில் சொல்லி விடுகிறேன்,
இப்போதிருக்கிற என் நிலைமைக்குத் தகுந்த மாதிரி!

சவநி: அந்த சிரமம் எல்லாம் ஏன் எடுத்துக் கொள்ளுகிறீர்கள்!

நான்: இதில் எனக்கென்ன சிரமம்?


கேட்கப் போவது நீங்களும் ச.வ. அங்கத்தினர்களும்தானே!

சவநி: இந்த பேட்டியே நான் நினைத்ததைவிட நீளமாகப் போய்விட்டது.


உங்கள் கவிதையை சுருக்கமாக முடித்துக் கொள்ள முடியுமா?

நான்: தாராளமாக! கேளுங்கள் என் சிறு கவிதையை.


கேட்டபின் என் கற்பனை வளத்தையும் புரிந்து கொள்வீர்கள்.

-----------------------------------------------------------

"மகுடியாய் நான் இருந்தால்!"

மகுடியாய் நான் இருந்தால்......

பாம்பாட்டி பையினுள்ளே
சுகமாய் நான் படுத்திருப்பேன்.

சுற்றிலும் கூட்டம் சேர்ந்து


கைத்தட்டல் எழுப்பி விட்டால்
பாம்பாட்டி கையில் எடுத்து
என்னுள்ளே மூச்சை விட்டால்
என் உடம்பின் ஓட்டை வழி
இசையினை நான் பொழிந்திடுவேன்.
செவிட்டுப் பாம்பு மெல்ல மெல்ல
பெட்டி விட்டு வெளியே வந்து
முதலாளி குத்த குத்த
சோம்பலை முறித்துக் கொண்டு
என் எதிரே படமாடி
என் அசைவை ரசித்த பின்னர்,
தட்டினிலே அங்குமிங்கும்
காசுகள் விழுந்த பின்னர்
பைக்குள்ளை போய் விழுந்து - என்
உறக்கத்தைத் தொடர்ந்திடுவேன்.

அன்புடன்,
ஆர்.எஸ்.மணி
=================
அன்புள்ள மணியவர்களே,
உங்கள் இசையிலும், நகைச்சுவையிலும் மகுடி கேட்ட நாகம் போல் மயங்கிக்
கிடக்கிறோம். எப்படியோ மகுடிக்கவிதை வந்துவிட்டது.
மகுடி என்பது இசையின் ஸ்தூல வடிவம்.
பெட்டிக்குள் அடங்கிக் கிடக்கும். எடுத்துவிட்டால் இசை பொழியும்.
அடிவயிற்றிலிருந்து எழுந்து வரும் உயிர்மூச்சல்லாவா அதில் இசையாகப் பொழிகிறது.
அதை ரசிக்கவும் தூண்டுதல் வேண்டும். இல்லையென்றால் எல்லோரும் பாதி செவிடர்கள்
தான். தூண்டப்பட்டு அந்த இசையைக் கேட்டால் பாம்பு மட்டுமா ஆடும்..
பாம்பின் ஆட்டம் அந்த இசைக்குக் கிடைக்கும் பாராட்டு. அதை
விலை மதிப்பிட்டுக் காசுகளைப் போடும் போது மகுடி பெட்டிக்குள் அடங்கி விடுகிறது.
கருத்து நிறைந்த கவிதை .
இலந்தை
========
மகுடிக்கும் பாம்பிற்கும் ஒரு காதல்
மணிக்கும் இசைக்கும் ஒரு காதல்
நமக்கும் மணிக்கும் ஒரு காதல்.
நான்கு மாதம் கழித்துத் தொடர்வோம்.
ச.வ.-வில் அன்று ,
சா.வா.ச் சந்த வசந்தத்தில்.

பசுபதி
===========
செவியில்லாப் பாம்பதுவே சீறுவதை விட்டொழித்து
செவிமடுத்துக் கேட்குங்கால் சிறகடித்துப் பறப்போமே
கவியுன்றன் மகுடிவழி காதருகே ஒலித்திட்டால்
புவியினிலே ஒருபாடல் புதுவிதமாய்ச் சொன்னீர்கள்!

சௌந்தர்
==============
மணி;
சவனி நிருபர் புடைசூழ
...சந்த வசந்தக் கவியரங்கில்
பவனி வரும்உம் அழகினைநான்
..படித்தேன், பார்த்தேன், பயனுற்றேன்!

இலந்தை; உங்கள் விளக்கம் மிக அருமை.


அனந்த்
========
கவிஞர் சின்னக் கண்ணனுக்கு பாராட்டு

சின்னக் கண்ணன் 'பூ' வைப்பத்தி பாடினவுடனே


அரங்கத்தில் சலிப்பு, கொந்தளிப்பு.
வெறுப்பு, உப்பு, துவர்ப்பு, புளிப்பு, உறைப்பு.
காழ்ப்பு, வம்பு, தும்பு, வெம்பு எல்லாம்
தூபம் போட்டு வாழப்பூவை கொம்பு சீவியது.

வாழப்பூ கோபத்துடன் "என்னப்பு..... இப்படி பாடிட்ட,


நான் உனக்கு இளக்காரமா போயிட்டனா,
'ஏன் நீ வாழப்பூவா இருக்க விரும்பலே'ன்னு கத்தி பாடியது,

கூந்தலிலே சூடாப்பூ கொஞ்சமும் வாசமின்றிப்


பந்தலில் தொங்கும் அலங்கரிப்பு கூம்பி
இடையும் பெருத்தால் கசப்போ பசியை
அடைக்கும் எனையே விரும்பு..

அன்பு, பண்பு, மாண்பு, மரபு எல்லாம்


சமாதானம் பண்ணி அவரு வேங்கடவன் காலில்
விழறதா இருக்காரு, அவரு வாழப்பூவாயிட்டா வேங்கடவன்
கால விழுந்தா என்னாகும்?

ஈரடியால் மூவுலக ளந்தான் திருவடியில்


வீழ்ந்திட பாதமும் தாங்குமோ யிப்பேரிடி?
சீரடியு மாகுமே சிவந்தெனத் தேறியே
சீற்றம் தணியும் சிறிது,

என்று கெஞ்சிய பிறகு . அடங்கியது சலசலப்பு !

நல்ல பாடல் கொடுத்த கவிஞர் சின்னக் கண்ணனுக்கு பாராட்டுகள்.

************************************************************
அடுத்து யாரைக்கூப்பிடலாம். தலைவர் சுற்றும் முற்றும் பார்க்க
மேடையில் இருந்த கூடையின் மூடி திறக்க மகுடியொன்று
எழுந்தது.

பாம்புப் பிடாரன் எங்கே பாம்பு எங்கே என்பார்


ஆட்டுவோன் ஓசைபெற்று ஆடும் பாம்புமொன்று
அவர்கூட்டுக்குள்ளே ஆடுவதறியார் என்று நகைத்தே
தலையசைத்தாடு ஆடு பாம்பே நீயும்......

மகுடி பாடுவதாக நல்ல பாடல் கொடுத்த மணி சாருக்கு நன்றி சொல்லி,


அவரது இந்தியப் பயணம் இனிதாக அமைய இவ்வரங்கம் வாழ்த்துகிறது.

**********************************************
கவிஞர் கஜனுக்கு சந்தவசந்தக் கவியரங்கின் இனிய திருமண வாழ்த்துகள்.
அவர் இப்பொழுது தேனிலவில் இருக்கிறார் என்று எண்ணுகிறேன்
(அவருடைய கவியரங்கத் தலைப்பு 'நிலவாக நானிருந்தால்' (:-)
'வாராயோ வெண்ணிலாவே' பாடிட்டு, ஒரு பொடி நடையா நிலவுக்கே போய்
பார்த்து அப்புறமா கவியரங்குக்கு வருவாரா தெரியாது).

கவியரங்கில் அவர் கலந்து கொள்ள இயலுமா என்றும் தெரியவில்லை.


அவருக்கு நான் அனுப்பிய தனிமடல்களுக்கு இதுவரை பதில் இல்லை.

புஹாரி, லாஸ் ஏஞ்சலஸ் ராம் வேலைப்பளுவில் நேரம் கிடைக்காமல்


இன்னும் கொஞ்சம் அவகாசம் கேட்கிறார்கள்.

அதனால் ஹரிப்ரசன்னாவை அழைக்கப் போகிறேன். கவிஞர் ஹரி கிருஷ்ணன்,


கவிஞர் புஷ்பா கிறிஸ்டி, கவிஞர் வீர ராகவன், கவிஞர் வாசுதேவன் தயாராக இருங்கள்.
என்னுடன் தனி மடலில் தொடர்பு கொள்ளுங்கள்.
*******************************************************
கவிஞர் ஹரப்பிரசன்னாவுக்கு அழைப்பு

அடுத்து வரப்போகிறவர் ஒரு இளைஞர். இவர் துபாயில் வேதியியல் வல்லுநராய்


வேலை செய்கிறார். நவீன கதைகள்,
கவிதைகளில் இவருக்கு நாட்டமாம். ஜெயமோகன், ஜெயகாந்தன், சுஜாதா,
லா.ச.ர. இவருக்கு பிடித்த எழுத்தாளர்கள். பாரதி கவிதைகளைப் படிப்பது
பிடிக்குமாம்.

இவரே நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறார்.

ஆனால் தன் பெயருக்கு முன்னால் கவி, கவிஞர் என்ற அடைமொழி வேண்டாம் என்று
குழந்தை போல் அடம் பிடிக்கிறார். (:-)

இவர் தலைப்பு என்ன ? 'குழந்தையாக நானிருந்தால்...'

குழந்தை கவிதானே?

தவழ்தலால் தழுவழலால் கண்கள் அலைதலால்


தாயை இறுக்கிப் பிடித்தலால் தாவுதலால்
பார்த்தோர் மகிழ்ந்திடும் சேட்டையால் பகர்வீரே
பாரில் குழந்தையும் ஓர்கவி !

இவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

ஹரப்பிரசன்னா வாருங்கள், வந்து உங்கள் கவிதை தாருங்கள் !

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
*************************************************************
பார்வையாளர் 1: ஏன் தலிவரு வெண்பால தப்பு இருக்குனு கவிஞர்கள்
சொல்றதில்ல? மரியாதையினாலா, பயத்திலயா?

பார்வையாளர் 2: ஒண்ணா ரெண்டா எடுத்துச் சொல்ல? இதுக்கே தனியா ஒரு கவியரங்கம்


போட்டுடலாம்னுதான்..
=========

19.
உலகிற் கருள்வான் உண்மைகளில் வாழ்வான்
நலமே தருவான் நாராயணா போற்றி

எல்லை கடந்தும் என்னெதிரே நிற்கும்


எல்லே வணக்கம் எல்லார்க்கும் வணக்கம்.

=============================================
கடந்தஎன் வாழ்ககை
் யில் கூடாமல் போன
தடங்களைத் தேடியும் தோண்டியும் மீட்டு
வடம்பிடிக்கப் போகிறதிக் குஞ்சு, கனவின்
படம்பிடிக்கப் போகிறதிப் பிஞ்சு
==============================================

குழந்தையாக நானிருந்தால் கொஞ்சிவிளை யாட


மழலைசொல் பேசி மயக்கித் திரிந்திட
பஞ்சால் வனைந்த பொதுக்குழந்தை போலல்ல,
நெஞ்சுள் நெருப்புடன் நான்

கனவு அம்மா
=============

அன்போ டுணவதனை ஊட்டிடும் அம்மாநில்


என்கை எனக்குண் டெனுமுண்மை ஊட்டிடு
தன்செயல் தான்செய்யும் தன்மை உணர்த்தியே
அன்பிற் குமிடோர் அணை

அன்பைக் குறைத்தும் அறிவுரை கூட்டியும்


பின்னாளில் என்னுள்ளே பேதைமை போகச்செய்
அன்பதிகம் உள்சென்றே அச்சம் விதைத்திடும்
தன்மை உணர்ந்து தவிர்

எல்லையுடன் அன்புசொல் எல்லையுடன் அன்புசெய்


எல்லை கடந்திடும் ஏதும் அலைக்குதென்னை
எல்லையில் அன்பையுன் உள்ளுக்குள் வைத்திடு
சொல்லாத அன்பும் சுகம்

கனவு அப்பா
============

கடமை உணர்த்து கடுஞ்சொல் குறைத்து


மடமை உணர்த்தலாம் மெல்லச் சொல்லியும்
உன்னையே வார்த்தென்னில் ஊற்றிட எண்ணாமல்
என்னுள்ளே என்சுயம் ஏற்று

அதிகமாய்க் கொஞ்சிடும் அப்பாவுன் கோபம்


கொதிக்கும் மறுமுகம் கொல்லு வதுணர்
சிரிப்புடன் தப்புகளைச் சுட்டித் திருத்தி
விரிவானில் தூக்கியென்னை வை

கனவு நண்பர்கள்
================

நட்புக் கடலுக்குள் நன்மை பலவுண்டு


தட்பவெப்ப சூழல் தடமாறும் போதிலே
கட்டிப் பிடித்துக் கடைத்தேற்றும் தெய்வமென
நட்பினை நம்புகிறேன் நான்

(ஆனாலும்...)

நட்பதனை முன்வைத்து நல்வார்த்தை சொல்வதாய்


திட்டியே பேசித் திருத்த வாராமல்
சொன்ன அறிவுரையைச் சொல்லிய நேரமற;
பின்னர தெந்திடற் பந்து.

(பின்னர தெந்திடற் பந்து = பின்னர் அது என் திடல் பந்து)

ஏற்றாலும் சொன்னசொல் எதிர்த்தாலும் இன்முகம்


பெற்ற சிலைபோல் பழகி இருந்திடு
சொல்லியவை இப்புறமும் சேர, பொழியட்டும்
மெல்லியப் பாச மழை

கனவு ஆசிரியர்கள்
==================

அன்பாகச் சொல்லி அரவணைக்கப் பார்த்திடுவீர்


தன்செயல் தேர்ந்திடும் தன்மையிலாப் பிஞ்சை
மணிப்பிரம்பால் வீசியே வைதால், அறிவீர்
பிணியாம் பெருமைப் பணிக்கு

கிருஷ்ணா என் கனவுகள் நிகழச்செய்


=====================================

குழந்தையென் சொப்பனங்கள் கேட்டியா? காதில்


விழுந்ததைக் கேட்டசைந்து வாராமல் அய்யர்
அரும்பாட்டில் சொல்வண்ணம் ஆடி வராமல்
"கிருஷ்ணாநீ பேகனே பா "

(ஆடாது அசங்காது வா கண்ணா - ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்)

கருத்துப்பிழைகள், பொருட்பிழைகள், சொற்பிழைகள் மற்றும் லாஜிக் இடித்தல் போன்ற


குற்றங்களைத் (குழந்தைதானே.. இருக்கத்தான் செய்யும். :-) ) திருத்தித் தரவும்.
இதை விடக்கூடுதல் எழுதியிருக்கலாம்தான். ஆனாலும் இதற்கே முழி பிதுங்கிவிட்டது.

நான் எழுதியது நன்றாக இருந்தால் மட்டும், சமர்ப்பணம்: பசுபதி அவர்களுக்கு.

அன்புடன்
பிரசன்னா
============
கண்ணன் கட்டுண்டான் கல்லுரலில் - பிர
சன்னன் கட்டுண்டார் வெண்டளையில் ! :-))

அழகாய் அமைத்தார் ஹரி.

பசுபதி
========
குழந்தையின் கனவுகள் கொள்ளை அழகுகள்!

அனந்த்
=========
பெற்றோர்க்கும் மற்றோர்க்கும் பிள்ளை அறிவுரைகள்
கற்றாய்ந்து சொன்ன கவி

இலந்தை
===========
அன்பின் பிரசன்னா,

=============================================
கடந்தஎன் வாழ்ககை
் யில் கூடாமல் போன
தடங்களைத் தேடியும் தோண்டியும் மீட்டு
வடம்பிடிக்கப் போகிறதிக் குஞ்சு, கனவின்
படம்பிடிக்கப் போகிறதிப் பிஞ்சு
==============================================

சொல் நயம் கூட்டிய அழகு வரிகள்

வயது முதிர முதிரத்தான் அறிவுரை கூறும்


ஆவல் பொங்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
வித்தியாசமாக நீங்கள் குழந்தையானதும் அறிவுரைகளை
அள்ளி வழங்குகிறீர்கள்

வாழ்த்துக்கள், பலவும் ரசித்தேன்.

அன்புடன் புகாரி
===========
கவிஞர் ஹரப்பிரசன்னாவுக்கு பாராட்டுகள்

அருமையாக எழுதியிருக்கிறீ£ர்கள். நீர் கவிஞரேதான்.

அப்பனும் அம்மையும் ஆசிரியர் நண்பர்


அனைவருமே கேட்டு மகிழ்ந்தா ரப்பா !
அறிவுரை நல்கினாய் அணைப்பார் உன்னை
அருமைக் குழவி யாய்.
நல்ல சொல்லாட்சி.

> அன்பிற் குமிடோர் அணை


> சொல்லாத அன்பும் சுகம்
> உன்னையே வார்த்தென்னில் ஊற்றிட எண்ணாமல்
> என்னுள்ளே என்சுயம் ஏற்று
> கொதிக்கும் மறுமுகம் கொல்லு வதுணர்
> சிரிப்புடன் தப்புகளைச் சுட்டித் திருத்தி
> மணிப்பிரம்பால் வீசியே வைதால், அறிவீர்
> பிணியாம் பெருமைப் பணிக்கு
'என் திடல் பந்து' (The ball is in my court க்கு நல்ல தமிழாக்கம் !)

சந்த வசந்தத்துக்கு கிடைத்த இன்னொரு இளம் கவிஞர் இவர்.

கவிஞர் ஹரப்பிரசன்னாவுக்கு நம் பாராட்டுகள்.

அடுத்து வரும் கவிஞர் முனைவர் இர. வாசுதேவன்.


இவரும் சந்த வசந்தத்துக்கு புதியவர்.

இவரது புனைப்பெயர்: இரவா- கபிலன்


கல்வி: தமிழ் இலக்கியம் (B.Litt): (M.A.) (M.Phil.)
ஆய்வுக்கட்டுரை" திருவிளையாடல் புராணத்தில் கலைக் கூறுகள்".
தமிழ் மருத்துவ இலக்கியங்கள் (Ph.D.)

இவர் தன்னைப் பற்றி சொல்லிக்கொள்வது:

பணி: இந்திய ரிசர்வ் வங்கி (அந்நியச் செலாவணித்துறை), சென்னை.


துணைவியர்: தமிழ் இலக்கியம், தமிழ் மருத்துவ இலக்கியம், தமிழச்சி ஒருத்தி.
மகவு: கவிதை, ஆய்வுக்கட்டுரை, ஒன்பது வயதில் ஆண் மகன்.
தொழில்: செயலாளர், தமிழ் மன்றம், ரிசர்வ் வங்கி, சென்னை.
துணைத் தொழில்: பட்டி மன்றம், கருத்தரங்கம். சொற்பொழிவு.
வேட்கை: சாகும் வரை தமிழ் படித்தே சாதல்.
இழப்பு: இளமையில் கல்.

மின்சுவடி குழுமத்தில் நல்ல கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழறிஞர்.


இலக்கியவாதி..கவிஞர்..

சந்த வசந்தக் கவியரங்கில் இவர் தலைப்பு என்ன? 'மந்திரவாதியாய் நானிருந்தால்...'

தொப்பிக்குள் தோண்டி முயலும் எடுப்பீரோ


தப்பாமல் மாங்காய் தருவீரோ தொக்கரைக்க
அப்பா உரைத்திடு அஞ்செழுத்து என்பீரோ
செப்பும் சபையிலே வந்து.

இவர் என்ன சொல்கிறார் கேட்கலாம்.


கவிஞர் முனைவர் வாசுதேவன் வாரும், வந்து கவிதை தாரும்....

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
******************************************
பார்வையாளர் 1: கவிஞர்களை வரிசை மாத்தி அழைக்கிறாங்க போல இருக்கே..

பார்வையாளர் 2: ஆமா. சிலருக்கு பணிச்சுமை. சிலருக்கு உடல் சுகவீனம்.


அவங்க வசதிப்படி மாத்திட்டாங்க போல...
========

20.
சந்த வசந்தக் கவியரங்கம் ('மந்திரவாதியாய் நானிருந்தால்')
எழுதியவர் கவிஞர் முனைவர் வாசுதேவன்:

அவைக்கு வணக்கம்:

முகத்தை மறைத்தாலும்
மதியின் தண்ணொளியை
அகத்தால் உணர்வோரே!
அயலில் இருந்தாலும்
சுகத்திற் கிதமான
சொந்த பந்தங்களே!
வகைத்தத் தமிழ்க்கவியாய்
வானின் வழி வருவேன்! 1.

சுவைத்தே உள்வாங்கிச்
சுவையில் திளைப்போரே!
அவைக்குத் தலைமையாய்
அமர்ந்தே இருப்போரே!
துவைத்து வெளுப்பாக்கிப்
பிழிந்து கிழிப்போரே!
நகைத்துச் சுவைப்போரே!
வணங்கி மகிழ்கின்றேன்! 2.

மந்திர வாதியாய் நானிருந்தால்:


***************************
நான், அவளிடம்:

கிழக்கு ஒளி கிழித்துக்


கிளர்ந்து கதிரோனும்
விழிக்கும் வேளையில் நான்,
வெளியில் உலவி வந்தேன்!
அழுக்கு நிறத்திருளை
அழிக்க வருங்கதிரை
இழுத்து அணிந்தது போல்
இளைஞி ஒருத்தி வந்தாள்! 3.

கட்டி வைத்திட்ட
கனக மலர்க்கொம்பு!
தொட்டால் துவண்டுவிடும்
தோகைக் கொடி இடுப்பு!
பட்டுப் பள பளப்பு!
பசுமைத் தள தளப்பு!
எட்டி நின்றாலும்
இழுக்கும் மணத்தொகுப்பு! 4

காற்றின் அலைபோல
அசையும் பருவக் கொடி!
நூற்கும் கவிதையும்
நுகரும் மனத்தின் நெடி!
போற்றும் குலத்தின் கொடி
புகழும் தமிழின் செடி!
ஆற்றுப் படையின் படி
அவளின் வனப்பு, அப்படி! 5.

பார்த்தால் பசி தீரும்!


பகைத்தால் பழி சேரும்!
சேர்த்தால் புகழ் சேரும்!
சிரித்தால் நோய் தீரும்!
சேர்த்து அரவணைத்தால்
அமுதம் கரை புரளும்!
சேர்த்த இதழ் இணைந்தால்
சிந்தை குளிர் காணும்! 6.

ஏட்டில் எழுதாத
இதயத் துடி துடிப்பு!
பூட்டும் மனச் சிறையில்
புலர்ந்த புது வடிவம்!
வாட்டும் இளந்தென்றல்
வதைக்கும் பனிச் சாரல்!
காட்டு மலர்க் குன்றைக்
கண்டேன், மனம் துடித்தேன்! 7.

நான், அவளிடம்:

எட்டி நிற்கின்றாய்
இமையின் குளிர்ச் சாரல்!
கட்டிக் கரும்பே! நீ, என்,
கவிதைப் பூச்சரமே!
அட்டி எனக்கில்லை,
சை தடையில்லை!
கிட்ட வேண்டும்! நீ, தமிழாய்க்
கிளைக்க வேண்டும்! என்றேன்.8

அவள்:

இமைக்கப் பட படத்தாள்!
இதயம் துளைத்திட்டாள்!
இமையா விழியால் என்
எழிலை அளவெடுத்தாள்!
அமைதி ஓவியமாய்
அறிவைச் சோதித்தாள்!
சமையா பொற்கோயில்
சிலையாய் நின்றிட்டாள்! 9.

வெட்டிச் சிதையாமல்,
வீழ்ந்து சிதராமல்,
ஒட்டி உறவாடி
ஓடும் நதி யாளைத்
தொட்டு அரவணைத்தேன்!
தோகை இதழ் நனைத்தேன்!
தொட்ட விரலுக்குள்
தோயும் இசையானாள்! 10.

ஊற்றெடுக்கும் கவிதை - நீ,என்


உடனிருக்கும் போது! உயிரும்,
சேர்த்திருக்கும் உடலை - நீயும்
சேர்ந்திருக்கும் போது! உன்னைப்
பார்த்திருக்கும் போது - கண்ணில்
படர்ந்திருக்கும் வாழ்வு! தென்றல்
காற்றடிக்கும் போது, இன்பக்
கலிதொகையே வா! என்றேன். 11.

அவள் சொன்னாள்:

வெட்டிப் பயல் போல


வீரத் திமிர் பிடித்துக்
கட்டு குலையாத
கனவு காண்கிறாயோ?
எட்டிப் பழுத்தாலென்?
ஈயாதார் வாழ்ந்தாலென்?
கொட்டிப் பதர் எல்லாம்
கோபுரமாய் வதெப்போ? 12.

எனது மனம் விருப்பம்


என்ன என்றறியா
உனது கனவை மட்டும்
உளறிக் கொட்டினையோ?
கனவு கண்டு விட்டால்
காதல் விளைந்திடுமோ?
மனது விருப்பறியார்
மனிதர் வதுண்டோ? 13.

வானை வளைப்பானை
மணலைத் திரிப்பானை
மானக் கடல் நீரைக்
குடிப்பேன் என்பானை
வானச் சந்திரனை
வாட்டி உதைப்பானை
நானும் விரும்பேனே!
நனவில் நினையேனே! 14.

புகழை அறியாத
புலையந்தனை விரும்பேன்!
இகழும் தொழிலுடைய
இறைவன் தனை வேண்டேன்!
அகழும் குணத்தானை
அருளும் மனத்தானை
இகத்தில் பரத்தி லுந்தான்
என்றும் நினையேனே! 15.

குட்டிச் சுவரோரம்
குந்தி அழுகின்ற
மட்டிப் பயலை நான்
மறந்தும் நினையேனே!
சட்டிச் சோற்றுக்காய்
சாகும் பிண்டத்தை
எட்டி நில்லென்பேன்!
என்றும் நினைத்திடேன்! 16.

மந்தை மாடுகளாய்
மனிதப் பிணங்களாய்
சொந்த அறிவில்லாச்
சோம்பல் சொரி நாயை
எந்தத் தமிழச்சி
இசைந்து விரும்பிடுவாள்?
கந்தல் புராணத்தைக்
காதல் புரிந்திடுவாள்? 17.

நான்:

என்று மொழிந்த தனால்


இதயம் சுக்கானேன்!
ஒன்றி, இவள் இருந்தால்
உலகம் தனை வேண்டேன்!,
நின்று போராடும்
நிலமை வளர்ந்தாலும்
வென்று, இவள் கரத்தை
வீறாய்ப் பற்றிடுவேன்! 18.

இந்த உறுதியுடன்
இதயம் புகுந்தாளை
சொந்த உயிராளைச்
சூழ்ந்து, குறைகேட்டேன்!
எந்த மாதிரி நான்
இருக்க! சொல்லென்றேன்!
அந்த மாதிரி நான்
ஆக அருள்! என்றேன்! 19.

மேடு பள்ளத்தில்
மேதினியின் கள்ளத்தில்
காடு மேடுகளாய்க்
கவிழ்ந்த உலகத்தில்
வீடு மனை யெங்கும்
விளங்கும் பேதத்தில்
பீடு நடை யுடையப்
பெண்ணாள் கிடைப்பாளோ?

வண்டி இழுத்தாலும்
வயலில் உழுதாலும்
குன்றின் மலை உடைத்துக்
கூழில் உழன்றாலும்
நொண்டிக் குதிரை போல்
நொடிந்து மடிந்தாலும்
ஒண்டி உயிரோம்பி
உயிரில் இணைந்திடுவேன்! 21.

வானக் கூரையிலும்
வாய்க்கால் வரப்பிலும்
நாணிக் குறுகுறுத்து
நடக்கும் பாதையிலும்
வீணாய்ப் பிறப்பொடுத்து
விழலாய் இருந்தாலும்
மானமுடன் வாழ்ந்தால்
மன்னி கரம் பிடிப்பேன்! 22.

முள்ளாய் முளைத்தாலும்
முசுடு விளைந்தாலும்
செல்லாக் காசான
சீலம் மிகுந்தாலும்
எல்லா இகழ்ந்தாலும்
இகழ்வு நிகழ்ந்தாலும்
சொல்லச் சுகமாகும்
சுகந்த மணம் நுகர்வேன்! 23.

என்றே என்மனத்தின்
எண்ணம் உரைத்திட்டேன்!
அன்ன நடையாளும்
அமுத மொழியாளும்
சொன்ன மொழி கேட்டுச்
சுருண்டு விழுந்திட்டேன்!
கன்னல் மொழியாளும்
கணையாய்ச் சுட்டாளே! 24.

அவள் சொன்னாள்:

குறள் வெண்பா

உரம்வேண்டும் உள்ளத்தில், ஊன்றுகோல்


போன்ற
வரனானால் வேண்டுவேன்! வா. 25.

உலகே எதிர்த்தாலும் உள்ளங் கலங்கா


மலையை வேண்டுவேன். வா. 26.

சிற்பி மயனழைத்துச் சீமைச் சிறப்புடைய


கற்ப நகரமைத்து வா! 27.

காட்டுக் களவன் தனைப்பிடித்துக் காவலை


நாட்டி, மணமுடிக்க, வா! 28.

உரனற்ற ஊமைகளை ஊரார்தனைக் காக்கும்


அரணை விரும்புவேன் வா! 29.

மதியை மதியாதார் வாசல் மிதியா


பதியை மணமுடிப்பேன் வா! 30.

எங்கே இருக்கிறான்! எங்கும் இருக்கிறான்!


எங்கள் இறையனா,நீ ? வா. 31.

தண்ணீரும் காவிரியும் தார்வேந்தன் மண்டலமும்


கண்ணீரில்! காத்திடலாம் வா! 32.

அன்னை தமிழ்காத்தல் ஆன்றோர் வழிவாழ்தல்


முன்னோர் புகழ்கிடைக்கும் வா! 33.

ஒப்பனை செய்தபின்பு எண்ணெய்த்தேய்த் துக்குளிக்க


ஒப்ப வழிகொண்டு வா!. 34.

வெய்யல் வெளிச்சத்தில் காற்று மழைபொழிந்தே


உய்யும் வரந்தர, வா 35.

ஞாயிறு கோள்நடுவில் நஞ்சை நடவுநட


நேய உழவு உழ வா. 36.
வான வளநிலத்தில் தஞ்சைக் களஞ்சியமாய்க்
காணும் அறிவிருந்தால் வா! 37.

சீன மொழிபோலச் செம்மைத் தமிழ்முறையை


ன கணினியொடு வா! 38.

மின்னும்விண் மீன்நிலத்தை ஆய்ந்தறியும் வல்லாண்மை


கொண்டென்னைக் கைப்பிடிக்க வா! 39.

வெண்பா:

காவிரி தென்பெண்ணை பாலாறு கண்டதோர்


வையை பொருநை நதியுடைய மன்னவனே!
கங்கை யமுனை கிருஷ்ணா புணர்ந்தபின்னே
பொங்கும் மணமுடிக்க வா!. 40.

நான்:

கண்டேன்! கனிர சத்தை!


காதற் களஞ்சி யத்தை,
உண்டால் வாழ்வு! இல்லை
யென்றால் சாவு! என்று
கொண்டேன் முடிவு! என்னைக்
கொல்லும் நினைவு! அந்த
வண்டார்க் குழலி தன்னைக்
கண்ட விளைவும் ஈதோ? 41

என்றும் அவளுடனே
இருக்கத் துடிக்கின்றேன்!
கண்ட கணம் முதலாய்க்
கலங்கித் தவிக்கின்றேன்!
என்றும் காணாத
இனிய மொழியமுதை
வென்றால் வாழ்வுண்டு,
வீழ்ந்தால் விடிவில்லை! 42.

வானம் அழைக்கிறது!
வையம் எரிக்கிறது!
கான மழை காணா
கழனி போலானேன்!
தேனும் கசப்பாச்சே!
திங்கள் சுடலாச்சே!
போனால் போகட்டும்
போடா, என்பேனே? 43.

உலகம் கிடைத்தாலும்
ஒன்றும் பயனில்லை!
பலபேர் உறவானார்
பாசம் பயனில்லை!
நிலையா அன்பாலே
நிலைத்தது தான் என்ன?
மலையாய் இருந்தேனே!
மண்ணாய்ப் போனேனோ? 44.
மனத்தின் தவிப்புக்கு
மருந்தும் தருவார் யார்?
கனத்த மனத்துக்கு
கனிவைப் தருவார் யார்?
வினைக்கு வினை போல
விளக்கின் ஒளி போல
எனக்கும் அருள் செய்ய
ஏந்தல் வரக் கண்டேன்! 45.

அற்றம் பார்த்தி ருக்கும்


இருளைப் போன்றி ருந்தார்!
கற்ற மந்திரத்தால்
காயாய்க் கனிந்தி ருந்தார்!
வெற்றித் திமி ரத்தை
வெறித்தப் பார்வையைப்
பற்றி நடந்து வந்தார்,
பார்த்தோர் கதி கலங்க! 46.

இரண்டு முறை வணங்கி,


இதயச் சுமந்தி ருந்த
திரண்ட எண்ணத்தில்
தீயாய்ப் படிந்திருந்த
உரலின் இடைக் கிடந்து
உடைந்த கதை சொன்னேன்!
பரந்த அறிஞர் போல்
பாச மொழி பகர்ந்தார்! 47.

மந்திரவாதி சொன்னார்:

மலையைக் கடு காக


மாற்ற வழி சொல்வேன்!
சிலையை மலை யாகச்
செய்யும் முறை சொல்வேன்!
உலையும் எரி மலையும்
ஒடுங்கும் மந்திரத்தால்!
கலையைத் தரு கின்றேன்!
கற்க, நீ, வா! என்றார். 48.

வானை வளைக்கலாம்!
வையம் படைக்கலாம்!
தேனைச் சுவைப்பது போல்
தீயைச் சுவைக்கலாம்!
பானை இல்லாமல்
பந்தி வைக்கலாம்!
வீணை இல்லாமல்
விரலால் இசைக்கலாம்! 49.

நதியை இணைக்கவும்
நாட்டைப் பிடிக்கவும்
மதியே இல்லாத
இரவைப் படைக்கலாம்!
விதிக்கும் விதியாக
விண்ணில் பறக்கலாம்!
அதிரும் உலகத்தை
ஆட்டிப் படைக்கலாம்! 50.

எண்ணம் எலாம் நடக்கும்!


எரிக்கும் சூரியனில்
வண்ணக் கூன் நிலவில்
வாகாய் நடந்திடலாம்!
வெண்ணெய் இருக்கையில்
வீணாய் அலைவாயோ?
கண்ணை ஏமாற்றும்
பெண்ணை நம்பாதே! 51.

நானும், எனது ஆசைக் கனவும்:

நெஞ்சத் தவிப்பெல்லாம்
நிற்க! மனத்துக் குள்ளே
கொஞ்சம் நம்பிக்கை
குருத்து வளர்ந்தது!
வஞ்சிக் கொடியாளை
வாழ்க்கைத் துணையாக்கப்
பஞ்சாய்ப் பறந்து நான்,
படிக்கத்தான் வேண்டும்! 52.

இந்திர சந்தி ரர்கள்


இருந்த போதிலும்
தந்திர வித்தை கற்றே
தலைவர் என வந்தார்!
எந்திரக் கலையு மில்லா
இயங்குந் தலைகள் எல்லாம்
மந்திரச் சொற்க ளாலே
மயங்கச் செய்திட்டார்! 53.

பண்டிதன் ஆனால் என்ன?


பாவலன் ஆனால் என்ன?
முண்டமே! போடா! என்னும்,
மூதுரை வழங்கும் நாட்டில்
கண்டவர் ஏச்ச லுக்கும்
கடையெனக் கழித்த லுக்கும்
விண்டவர் இல்லை! ஆக,
விளங்கிட வேண்டு மானால், 54.

மந்திர வித்தை வேண்டும்!


மாபெரும் கலையைக் கற்றுத்
தந்திர வாதி ஆகித்
தந்தனத்தோம் என்று பாடி
இந்திர வேந்தன் போலே
இன்பத்தில் கிளுகிளுப்பேன்!
எந்தமிழ்க் கூடந் தன்னில்
ஏறுபோல் நடை நடப்பேன்! 55.

எனது முடிவு:

மயங்காத மனிதரை
மயங்கச் செய்தாலும்
முயங்கா தமிழ் முரசை
முழங்கச் செய்தாலும்,
தயக்கந் தானுண்டு!
தானைத் தமிழ்க் குலத்தின்
இயக்கக் கொள்கைக்கு
இழுக்கே மந்திரமும். 56.

மந்திரமுங் காலே!
மதியோ முக்காலே!
தந்திரத்தால் எல்லாம்
சாதித்தால் கூட
தன் + திறத்தால் செய்யும்
சாதனையே நிலைக்கும்!
மந்திரத்தால் பழுக்கும்
மாங்காய் சுவைத்திடுமோ? 57.

drvasudevan@vsnl.net
erava_kabilan@yahoo.com

=========
மந்திர வாதி கபிலர்
. மறைவாய் அரங்கினில் நுழைந்தார்!;-))
சுந்தரச் சொற்கள் தூவிச்
. சுகமாய் நெடுங்கவி தந்தார் !

பசுபதி
=======
அன்பின் டாக்டர் வாசுதேவன்,

திராவிடகால கவிதைகள் என்பார்கள். அந்த பாணியில் இருக்கிறது


இந்தக் கவிதை. மேடையில் ஏறி வாசிக்கத் துவங்கினால் பல காதுகளை
எளிதில் சம்பாதித்துவிடும் இக்கவிதை.

சில உவமைகள் அபாரம். இசைநயம் மிக்க நடை.

அன்புடன் புகாரி
========

கரவா அன்பே
உரமாய் அமைய
இரவா- கபிலன்
வரவால் மகிழ்வோம்!

சுந்தரி அணைப்பைத்
தந்திடும் வழிதான்
மந்திர மில்லை
தன்திறம் என்றார்!

அன்புடன்
அனந்த்
==========
கவிஞர் கபிலனுக்குக் கனிவான வரவேற்பு

மூன்று கவிதைகளின் முடிச்சாய்த் தொடர்ந்தகவி


கேட்டதென்ன கேட்கக் கொடுத்ததென்ன
மந்திர வாதிவந்து மாயம் விளைத்ததென்ன
கபிலன் கவிதையெனும் கானாறு, பற்பலவும்
தன்மேல் சுமந்து தடதடென ஓடியது.

இலந்தை
==========

கவிஞர் முனைவர் வாசுதேவனுக்கு பாராட்டு

'இதாண்டா கவிதை' என்பது போல நமக்கு நல்லதொரு


நீண்ட கவிதை விருந்து கொடுத்தார். முனைவர் வாசுதேவன்.

மந்திரத்தை நம்பாதே , உன் கையால் உழைத்தே உயர் என்று


சொல்லிவிட்டார்.

எட்டி எகிறிப் பறிக்காது கோலாலே


சுட்டி செபித்தால் விழுந்திடுமோ சட்டியினில்
மாங்காய் மசக்கையைத் தீர்க்க ? மறவாதீர்
தாங்கும் உழைப்பே உயர்வாய்.

நல்ல கவிதை கொடுத்ததற்கு கவிஞர் முனைவர் வாசுதேவனுக்கு


பாராட்டுகள்.
*******************************************************
கவிஞர் சேவியரின் தந்தை காலமான செய்திக்கு இவ்வரங்கம்
தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கிறது.
***********************************************************************************
**************

அடுத்ததாக வரும் கவிஞர் எல்லே ராம் (என். ராமச்சந்திரன்)

தஞ்சை மாவட்டம் நல்லத்துக்குடி கிராமத்தில் பிறந்தவர்.


பிசிக்ஸ் பட்டதாரி. கம்ப்யூட்டர் சயின்ஸ் , நெட்வொர்க்கிங்கில்
தேர்ச்சி;
சென்னைத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்; திரைப்பட நடிகர்
(எங்கேயோ கேட்ட குரல், பன்னீர் புஷ்பங்கள், ஜீன்ஸ்);
லாஸ் ஏஞ்சலஸ் தமிழ்ச்சங்கத்தின் நிரந்தரத் தலைவர் (மூன்று முறை
தேர்தல் வைத்தும், தேர்தலுக்கு சிலரே வந்து சமூசா தின்று டீ குடித்துவிட்டு,
'இந்த வேலை எவனுக்கு வேணும், நீயே இரு' என்று போய்விடுகிறார்கள்); பல
நகைச்சுவை நாடகங்களை தயாரித்து நடித்தும் உள்ளார்; இவர் நாடகங்களும்
அதற்கு வீட்டில் ஒத்திகைகளும் பிரச்னை இல்லாமல் நன்றாக நடக்க, இவர் தன்
துணைவியாரையும் நாடகங்களில் பங்கேற்ப வைப்பதுண்டு.
கவிஞர். "ப்ரிய ஸகி" என்ற கவிதைக்கொத்தை எழுத்தாளர் சுஜாதா தலைமையில்
வெளியிட்டுள்ளார்;
இவரது எழுத்துகள் விகடன், குமுதம், கலைமகள், மற்றும் இணைய
பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளன.
கம்ப்யூட்டர் நெட்வொர்க் கம்பெனி தொடங்கி தன் மகனுடன்
நிர்வகித்து வருகிறார்.
இவர் தன்னைப் பற்றிச் சொல்வது......

என்னைப் பற்றி நானே ...(லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்)


--------------------------------------

எல்லேவில்லோன் பற்றி
எதுவுமே தெரியாதவர்கள்
இனிமேல் தெரிந்துகொண்டு
ஆகப்போவது ஏதுமில்லை

இதுவரை தெரிந்தவர்களைத்
தேடித்தேடிப் பிடித்தாவது
தெரிந்து கொள்ளுங்கள்
தெளிவு பெறுங்கள்

என்றெல்லாம் இறுமாப்பாக
ஏதேனும் இவன் சொல்வானோ
என்று எதிர்பார்ப்பவர்கள்
ஏமாந்தே போவார்கள்

ஏனென்றால், நான்

கொஞ்சம் சித்தன்
கொஞ்சம் பித்தன்
கொஞ்சம் கவிஞன்
கொஞ்சம் ரசிகன்

கொஞ்சம் நடிகன்
கொஞ்சம் நாடகன்
கொஞ்சம் கணிஞன்
கொஞ்சம் வணிகன்

கொஞ்சம் பக்தன்
கொஞ்சம் புத்தன்
கொஞ்சம் சூரியன்
கொஞ்சம் சந்திரன்

மொத்தத்தில்...

எல்லாமே கொஞ்சம் தான்


கொஞ்சம் கொஞ்சம் தான்
வளர்வதற்கு வாய்ப்பு
நிறைய இருக்கிறது

வணங்குகிறேன் சபையோரே!

இவர் தலைப்பு 'சர்வாதிகாரியாக நானிருந்தால்...'

கவிஞர் எல்லே ராம் வருக, உம் கவிதை தருக !

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

***************************************

பார்வையாளர் 1: எல்லே ராம் கவிதைக் கொத்து போட்டிருக்காராமே


தலிவர் என்ன போட்டிருக்காராம்?

பார்வையாளர் 2: கத்தரிக்கா கொத்சு கூட போட்டதில்லையாம்.

21.
'சர்வாதிகாரியாக நானிருந்தால்?'
-------------------------------------------
(லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்)

அழுக்குக்கரை வேட்டியில்
அரைக்கிலோ எண்ணெய்ச்சிக்கோடு
அக்குளில் சிவப்புத்துண்டால்
ஆனந்தமாய் நான் சொறிந்தபடி

தூணில் சாய்ந்திருந்தால்
கானம் இசைத்திருந்தால்
வீணே படுத்திருந்தால்
ஆஹா பொறுக்குமோ சந்தவசந்தம்?

அவசரமாய் எழு சீக்கிரம்


அல்வா கிளறியது போதும்
பொட்டலம் கட்டிப்போடென்று
மிரட்டுகிறார்கள் விரட்டுகிறார்கள்
தர்ம அடியாம் எழுதாவிட்டால்
ஆட்டோ வருமாம்
ஆசையாய்த் தட்டுமாம்

ஃபாஸ்டஃ
் பூட் காலமய்யா
நளபாகம் என்ன செய்யும்?
தலைப்பை அவர்களே
தருவார்களாம்
கலப்பையை மட்டும்
நான் ஓட்டினால் போதுமாம்

அடுப்பில்
அண்டா கொதிக்கிறது
ரசம் பதைக்கிறது
ஆங்காங்கே அரிக்கிறது
சொறியவும் நேரமில்லை
செப்புகிறேன் அவசரமாய்

----------------------------

மூத்தோனுக்கும்
மூப்பில்லா
வசந்த இளைஞருக்கும்
முதற்கண்
என் வணக்கம்
---------------------------

'சர்வாதிகாரியாக நானிருந்தால்?'

நான் சொல்லுவது இருக்கட்டுமய்யா


நாடென்ன சொல்லுமிதற்கு
நாமெல்லாம் தெளிவோமென்று
நண்பர்களை முதலில் கேட்டேன்

"எலுமிச்சை தலையில் தேய்


எரவாடிக்கு வேண்டிக்கொள்
வைத்தீஸ்வரனும் பரவாயில்லை
பைத்தியம் தெளிந்துவிடுமெ"ன்று
பகர்ந்தார்கள் கொடியவர்கள்

மங்கை பகர்வாள் உண்மையென்று


மாண்புமுகு மனையாளைக் கேட்டேன்

சிந்திய மூக்கும் சிவந்த கோபமுமாய்


வெடித்துக் குமுறினாள் வேகமாக:
"இப்போது மட்டுமென்ன
இங்கே ஜனநாயகமா?
எனக்குத்தான் நாதியுண்டா?
எல்லாம் என் தலையெழுத்து
எப்போதும் கொத்தடிமை
நாற்பது கிலோவுக்குமேலெனக்கு
நகையுண்டா நட்டுண்டா?
நல்ல காக்ராவில்
நாலைந்து டஜன் தானுண்டா?
ஆயிரம் ஜோடிக்கு மேல்
எனக்குத்தான் செருப்புண்டா?
சர்வாதிகாரி நீர் என்பதில்
சந்தேகம் வேறொரு கேடா?
சாட்சிக்கு வேண்டுமானால் என்
சொந்தங்கள் கூப்பிடவா?"
சதாய்த்தாள் கொதித்தாள்
என் சந்திரபாய் ஜக்குமுகி
பயம் கலந்த பணிவன்புடன்
நான் ஜகா வாங்கினேன்

பணியகத்தில் கேட்டால்தான்
பதில் கிடைக்கும் இதற்கென்று
பகர்ந்தேன் பண்பான
பல தொழிலாளிகளிடமும்

"எப்போது? ஏனிது? எவன் சொன்னது?


பாஸ், நீங்களா? சர்வாதிகாரியா?"
பதறித்தான் போனார்கள் என்
கண்ணின் கருமணிகள்

"சொன்னவன் யார்? சொல்லுங்கள் சீக்கிரம்


அவன் வாயில் போடவேண்டும்
அரைக்கிலோ சர்க்கரை
அப்புறம் தேன் பால்
அப்படியே சிங்கிள் மால்ட்"
ஒரே குரலில் ஓநாய்கள்
பணியிடத்துக் கருங்காலிகள்

உண்மை தெரிய
ஒரே வழிதான் இருக்கிறது

கண்ணாடி முன் நின்றேன்


காதலாகிக் கசிந்துருகினேன்
நரைதெரியா அழகு நண்பா
சிரிக்காமல் சொல்லப்பா
இருந்திருந்து உனக்கென்ன
இருபத்தி ஐந்திருக்குமா?

கண்ணாடி நண்பன்
கண்சிமிட்டிச் சொல்வான்:

சர்வாதிகாரியாக நீயிருந்தால்
ஐம்பதாயிரம் கோடிச்செலவில்
அணைகளோடு நதியிணைப்போ
வெளிநாட்டு மருமகளோ
உள்நாட்டு தாடிச்சிங்கமோ
ஊர்வலமோ வெடிகுண்டோ
அரசியலோ அடிதடியோ
ஒன்றுமே இருக்காதப்பா

பசியோ பட்டினியோ
ஜாதிச் சண்டைகளோ
சாலைகளில் நெரிசலோ
மறந்தே போகுமப்பா

சாலையில் துப்பினால்
நீ கசையடிப்பாய்
ஜிப்பைத் திறந்தாலே
கத்திரி போடுவாய்

சாம்பார் வரும் குழாய்களில்


சட்னி வரும் வீடு தேடி
அனைவருக்கும் பிரியாணி
அவ்வப்போது பொட்டலங்கள்
குழைந்த வயிறுகள்
கும்மென்றாகி விட்டால்
கூப்பாடு குறைந்து விடும்
ஊர்வலங்கள் தூங்கிவிடும்
குறட்டை ஓங்காரத்தில்
அமைதிப்புறா அசைந்தாடும்
நாடே அயர்ந்துவிடும்

சாயங்காலவேளைகளில்
ஊரெங்கும்
உற்சாகம் ஊற்றெடுக்க
உடனே நீ வழி செய்வாய்
சிங்காரச் சென்னையில்
சிருங்காரமும் ரீங்காரமிடும்

ஓடிப்போய் உடனே சொல்லி


ஊரைக்கூட்டியொரு பேட்டி கொடு
பேப்பரைப் பார்க்காதே
தாப்பரைச் சீண்டாதே
அம்மா போல் சீறாதே
அம்மம்மா உன் புகழ்
அகிலமெல்லாம் பரவிவிடும்
அனைவருமே சிரிப்பார்கள்
என்றான்
என் நல்ல நண்பன்

(லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்)


________________________________
:)))))))
'ராம ராச்சிய'த்தில் 'ராங்க்'ஏதும் இல்லாம
சேமம் மிகுந்திருக்கச் செனங்களெல்லாம் சிரிக்கிறதெ
கண்ணாடிச் சினேகிதரு கண்சிமிட்டிச் சொன்னதைப்போய்
உண்மையென நம்புவமா ஒளறல்இன்னு ஒதுக்குவமா?
என்னமோ போங்க! எல்லேராம் வக்கணையாச்
சொன்ன விதத்திலெயே சொக்கிநாமும் நிக்குறந்தான்! :))

... அனந்த்
==========
ராமா! உன்ராஜ்யக் கதைஅன்று -- எல்லே
. ராமின்அதி காரக் கவியின்று !
ஆமாம், நகைச்சுவை இருவருக்கும் - வீட்டில்
. அகப்பட்ட குடும்பச் சொத்தாமோ?

பசுபதி
==========
நகைச்சுவை இழைந்தோட பாரதியின்

வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்=இங்கே


வாழும் மனிதருக்கெல்லாம்
என்ற கொள்கையைப் பிரதிபலிக்கிறது உங்கள் பாடல்

நன்று
இலந்தை
=========
( ப்ரேம முதித ..... ராம ராம ராம் என்ற ஸத்யசாயீ பாபா குழுவினரின் பஜனை
மெட்டில் பாடவும்)

சிரிக்கவைத்தாய்! வயத்து வலி! ராம ராம ராம்! எல்லே ராம ராம ராம்!
சின்னக் காசித் துண்டணிந்தாய்! ராம ராம ராம்! எல்லே ராம ராம ராம்!
சொரியும் சுகம் யாரறிவார்? ராம ராம ராம்! எல்லே ராம ராம ராம்!
சொர்க்கமல்லோ அந்தக் கணம் ! ராம ராம ராம்! எல்லே ராம ராம ராம்!

குடும்பத்தலைப் பதவி கொள்ள ராம ராம ராம்! எல்லே ராம ராம ராம்!
கொடுத்தாள் ஆத்துக்காரி சாவி ராம ராம ராம்! எல்லே ராம ராம ராம்!
அடுப்பு ஏத்து! அப்பம் சுடு! ராம ராம ராம்! எல்லே ராம ராம ராம்!
ஆண்கள் கதி இதுதானப்பா ராம ராம ராம்! எல்லே ராம ராம ராம்!

ராஜரங்கன்
==============

சந்த வசந்தக் கவியரங்கம் 14

கவிஞர் எல்லே ராமுக்கு பாராட்டு

இலவச மதிய உணவு, இலவச பல்பொடி


எல்லாத்தையும் தூக்கி அடிச்சிட்டார்
குழாய்ல சாம்பார் வரும்னு...ரெண்டு நாள்
முன்னால எழுதியிருந்தா தமிழக முதல்வர்
இந்த யோசனையை பிபிசி தாபர்
நேர்காணல்ல அறிவித்திருப்பார் !

பாக்கெட்டுச் சாராயம் பதமான ஊறுகாயும்


பக்கிட்டு சாம்பார் பிரியாணி பாயசம்
படைக்கக் கிடைக்குமே வாக்குமிங்கு, தாபர்
மடையா எனக்கார் நிகர்?

னு கத்தியிருப்பார்.

குழாய்ல வந்தாலும் சிலருக்கு பிரச்னை இருக்கும்.

வெந்திட்ட சோத்து மலையில் குழிவெட்டி


வீராணம் கட்டியோர் வேகாரோ வெந்து ?
குழாயில் சாம்பார் குழிநிரப்பல் எக்காலம் ?
கும்பிடுவோம் தாருங்கள் லாரியில்.

நல்ல கவிதை தந்த லாஸ் ஏஞ்சலஸ் ராமுக்கு பாராட்டுகள்.


*****************************************

அடுத்து க(வி)தைக்க வருகிறவர் புஷ்பா கிறிஸ்டி.

இவர் பிறந்தது இலங்கை..கிளிநொச்சியில்


வளர்ந்து படித்தது... கொழும்பில்
உயர்கல்வி.பி.எ S.சி.. பெங்களூரில்
கனடாவில் கால்பதித்தது.. 1989
கனடாவில் கற்றது.. M.C.S.E.
பணி .... வங்கியில்
இவருக்குபிடித்தது... பிறரை அன்பு செய்தல்.பெரியோரைக் கனம் பண்ணி உதவுதல்;
இரத்த தானம் செய்தல்,கவிதை, கதை எழுதுதல்..புகைப்படம், தொலைக்காட்சி பார்த்தல்...
இவர் தன் குழந்தைகளுக்கும் உணவுடன் கவிதையும் ஊட்டுகிறார். அவர்களும்
மழலைக் கவிதைகள் எழுதுகிறார்கள்.
இவர் படைப்புகள் திண்ணை, பதிவுகள், குவியம், தமிழோவியம், மரத்தடி,
உயிரெழுத்தில் வெளியாகியுள்ளன.

( பெரியோரை 'கனம்' பண்றதுன்னா சாப்பாடு போட்டு பெருக்க வைக்கிறதா,


இல்ல மண்டையில தட்டி வீங்க வைக்கிறதா... புரியலீங்க)(:-)

இவர் தலைப்பு 'ஆணாக நானிருந்தால்'

பெண்களெல்லாம் மாறியிங்கு ஆணாகி விட்டால்


பெருகுவது எப்படி உலகமும்? பெற்றெடுப்பார்
பரிந்தூட் டுவாரும் யாரிங்கே ? எங்களுக்குப்
புரிந்திடத் தாரும் பதில்.

கவிஞர் புஷ்பா கிறிஸ்டி வாருங்கள், குழந்தைகளோடு வந்து கவிதை தாருங்கள்.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
*****************************************************************
பார்வையாளர் 1: கவிஞர் எல்லே ராம், தலிவரோட தம்பியாமே.

பார்வையாளர் 2: அப்படியா ? அப்பவே நினைச்சேன், ஏதோ பேரு குளறுபடியில


தலிவரு நைசா தானும் கவிஞர்னு உள்ள புகுந்திட்டார்னு.

22.
இறைவணக்கம்

இணையற்ற இறைவனின்
திருவடி தொழுது
இதயத்து எண்ணங்ககளை
இறைவனிடம் கொடுத்து
கவலையற்ற மனதுடன்
களத்தில் இறங்குகின்றேன்

தலைவர் வணக்கம்

நகைச்சுவையை
நலம் விசாரித்து
கவிதையுலகில்
காவியம் படைக்க
படைத்தலைவனாகப்
பொறுப்பேற்று
பண்போடு அழைத்திட்ட
அன்பான தலைவர்க்கு
சின்னவள் இவளின்
சிரம்கவிழ்ந்த வணக்கங்கள்

அவை வணக்கம்

தாளாத தலைவலி
என்றாலும் சந்தவசந்த
சொந்தத்தில் சங்கமிக்க
இந்தக் கவியரங்கில்
பிந்தி வந்து நுழைகின்றேன்
கனிவுடன் உங்கள் முன்
என் கவி சமர்ப்பிக்கின்றேன்
களை களைந்து பிழை பொறுத்து
கவி ஏற்றிடுவீர் கவிஞர்களே1
ஆணாக நானிருந்தால்.....

அடிக்கடி நான் எண்ணுவதுண்டு


அம்மா என்னைப் பெற்றபோது
ஏனென்னை ஆணாகப் பெறவில்லையென்று?

ஆண்குழந்தை என்றவுடன்
பெருமை கொள்ளும் பெற்றோரும்
சாண்பிள்ளை என்றதும்
ஆண்பிள்ளை என்ற பெருமை பெற்று
வலம் வந்திருப்பேன் பலம் பெற்றிருப்பேன்

தலைப்பிள்ளை ஆணென்றால்,
வரவேற்குமிடங்களில், திருமணவீட்டில்,
சாமத்திய வீட்டில்,
அம்மாவுக்கும் முதலிடம் என்னால்.....

விளையாட்டை வாழ்வாக்கி,
விளையாடி மகிழ்வேன்.
காலைத் தூக்கி, ஆடிக் களித்து
நடனம் புரிவேன்

பெண்களை ரசித்திடுவேன்
எண்களை சுழற்றியே,
தொல்லைபேசி, தொல்லைப்படுத்திடுவேன்...

இரவில் தனியே அலைந்து திரிவேன்


பகலில் நன்கு தூங்கி வழிவேன்

ஒரே பெண்ணைத் திருமணம் செய்வேன்


நிச்சயம், ஒரேயொரு பெண்ணையே,
நிச்சயமாய், சத்தியமாய் ஒரு பெண்ணையே
திருமணம் செய்வேன்

எனக்கேற்ற துணையாக அவள் மாறும்போது


அவளுக்கேற்ப என்னை மாற்றி நடந்திடுவேன்

பெற்றெடுக்கத் தேவையில்லை நான்


பேணி வளர்க்கவும் தேவையில்லை
பெற்ற தாய் செய்யும் கடமைகளை
பெருமையாய்ப் பேசியே நான்
மற்றவர் முன்னிலையில்
மகுடம் சூடிடுவேன்

சவரம் எடுத்திருப்பேன் - தினம்


தாடி, மூக்கு காது முடி களைந்திருப்பேன்
(நல்ல வேளை பெண்ணாய்ப் பிறந்தேன்
பெரிய வேலை குறைந்தது. கடவுளுக்கு நன்றி)

கோபத்தைக் குறைத்திடுவேன்
பாவத்தைக் குறைத்திடுவேன்
மகளுக்குக் காட்டும் மலையளவு அன்பில்
மகனுக்கும் ஒரு கடுகளவு தந்திடுவேன்
என் பெயர் சொல்ல வந்த பெருமகனென்றவனைப்
பேணி வளர்த்திடுவேன், அவன் பெருமை பேசிடுவேன்
அடிக்கடி அடித்து, திட்டி துன்புறுத்த மாட்டேன்
படிக்கும் மனைவியைப் பார்த்துப் பார்த்து
(பொறாமைப்பட்டாவது)
நானும் படித்து என் அறிவைக் கூட்டிடுவேன்

ஆணென்ற அகங்காரம் மறந்திடுவேன்


பெண்ணுக்கு சமபங்கு அதிகாரம் தந்திடுவேன்
அன்னையர் சமூகத்திற்கு அன்பைச் சொரிந்திடுவேன்
அவர்க்கு தேவையெனில் அடிக்கடி உதவிசெய்வேன்

மனைவி செய்யும் மகிமையுள்ள கடமைகட்கு


மகிழ்வுடனே உடனுக்குடன் நன்றி சொல்வேன்...
மறந்து போன நல்ல நிகழ்வுகளை
மறக்காமல் தினசரி குறிப்பில் வைப்பேன்

மனைவி, மக்கள் பிறந்த தேதி முக்கிய நாட்கள்( என் வீட்டு விலாசம் போன்ற)
அத்தனையும் என் ஞாபகத்தில் சேகரித்து வைத்து
அடிக்கடி அவர்களுக்கு பரிசு கொடுப்பேன்..

இன்னும் எத்தனையோ, இன்னும் என்னென்னவோ


அப்பாடா நல்லவேளை
ஆணாகப் பிறக்க்வில்லை..
பெண்ணாய் நான் பிறந்து
ஆணின் கடமைகளைச் செய்து வரும் எனக்கு
இனித் தனியாய்
எதற்கு ஒரு ஆண்வேடம்.?
போதும் இந்த பெண்பிறப்பு...
மகிழ்ச்சியான வாழ்வே போதும்.. போதும்..

புஷ்பா கிறிஸ்ரி
=============
இதோ மகள் செசிலின் கவிதை..

ஆணாகப் பிறந்தால்...
ஆடிப் பாடி
காலைத்தூக்கி
ஓடியாடி விளையாடி
உலகைச் சுற்றி வலம் வருவேன்
நீளமுடியைத் தூக்கி எறிந்து விட்டு
கட்டை முடியுடன்,
கட்டை உடையுடன்
பெட்டைகளை கேலி செய்து
சட்டைகளைத் துறந்து போட்டு
இஷ்டத்துக்கு ஊரைச் சுற்றி
காரை வேகமாக செலுத்தி
படிப்பை விட்டு
பட்டம் விடுவேன்....
அப்பாவின் பெயரோடு
என் பெயர் மாறாமல்
என்றென்றும் வாழ்ந்திடுவேன்

எண்ணம்: செசில் கிறிஸ்ரி


ஆக்கம் : புஷ்பா கிறிஸ்ரி
=============
இதோ மகன் பஸ்ரனின் கவிதை..

பெண்ணாக நானிருந்தால்...

அம்மாவை விடவும்
தங்கையையும்
அப்பாவையும் கொஞ்சிமகிழ்வேன்..
அப்பாவின் இராட்சியத்தில்
நானே மகாராணி

நீள முடிவைத்து
விதம் விதமாய் உடை மாற்றி
பாவாடை சட்டை போட்டு
அழகான நகை போட்டு
இதமாக அழகு காட்டி
அம்மாவிடம் சமையல் கற்று
அப்பாவுக்கு உணவு தருவேன்

நடனம் கற்றிடுவேன்
நல்ல பெண்ணென்று பேரெடுப்பேன்
தினமும் பாடம் படித்து
பல்கலைக் கழகம் புகுந்து
நல்லவளாய் வாழ்ந்திடுவேன்..

கல்யாணத்தன்று என்
அப்பாவைப் பிரிவதை
எண்ணியெண்ணி
இப்போது அழுதிடுவேன்
வரப்போகும் கணவனிடம்
என் கனவுகளை அடகு வைத்து
அழுது வடித்திடுவேன்

(நல்ல வேளை தப்பித்தேன்..


ஆணாகப் பிறந்துவிட்டேன்)

எண்ணம்: பஸ்ரன் கிறிஸ்ரி


ஆக்கம்: புஷ்பா கிறிஸ்ரி
===============
வேதனையாய் இருந்தாலும் விருப்பமின்றி முடிதன்னைக்
காதளவாய்க் கத்தரித்துக் கால்சொக்காய் போட்டாலும்
மாதரார் மாட்சியென்றும் மங்காத மனங்கொள்வோம்
கீதங்கள் பாடிடுவோம் கீர்த்திகளும் சேர்த்திடுவோம்

சௌந்தர்
===========
புஷ்பா க்ரிஸ்டியின் கவிதையின் கருத்து,அவர்தம் சிந்தனை நன்று.

யோகியார்
==========
:" ஆணாக நானிருந்தால்" கிடைக்கும் சுதந்திரமும், கிடைக்காத பேறுகளும்
கூறிக் கவிதை செய்திருந்தார் சகோதரி. துடிப்பான அவரது குழந்தைகளைத்
தொரோந்தோவில் பார்த்தேன்
அவர்கள் சிந்தனைகள் புஷ்பாவின் எழுத்தில் சுடர்கின்றன.
வாழ்க!

இலந்தை
======
ஒரு துரட்டியில் மூன்று மாம்பழங்கள்! புஷ்பாவினால் மட்டுமே சாத்தியமாகும் மந்திரக்
காட்சி!
குடும்பப் படையல் சுவையாய் உள்ளது! வாழ்த்துகள்!

ராஜரங்கன்
================
23.
கவிஞர் புஷ்பா கிறிஸ்டிக்கும் அவர் குழந்தைகளுக்கும்
பாராட்டு

பாலூட்டல் சோறூட்டல் அன்பூட்டல் பண்பூட்டல்


பாசமூட்டல் பருப்பூட்டல் படிப்பிலே நாட்டமூட்டல்
பல்லூட்டல் கண்டிட்ட பாருளோரே பாலர்க்குப்
பாவூட்டும் தாயுமிங்கே பாருமே.

கவிஞர் புஷ்பா கிரிஸ்டி, ஆண்களுக்கு அழகாக பட்டியல் போட்டீர்கள்

ஒருத்தியையே இல்லாளாய்த் தேர்ந்து எடுத்து


ஒருக்காலும் கோபம் வராது இருந்து
அருமை மகனை அடிக்காது போற்றி
படித்த மனைவிபால் பொறாமை தவிர்த்து
வெடிக்கும் அகங்காரம் முற்றும் மறந்து
வேலைகள் சமமாய்ப் பங்கிட்டு அன்புடன்
மேன்மையாய் நன்றிகள் மாண்புடன் சொல்லி
மென்மையாய் அனைவரையும் பாராட்டி வாழ்

இந்தப் பட்டியலில் கோபம் தவிர்க்கிறதுதான் ரொம்பக் கடினம்.(:-)

சந்த வசந்தக் கவியரங்கில் கவிதைகளூடே வாழ்வியல் நெறிகளும் வருவது


ஒரு கூடுதல் மகிழ்ச்சியளிப்பதாகும்.

நல்ல கவிதை கொடுத்த கவிஞர் புஷ்பா கிறிஸ்டிக்கும் அவரது


குழந்தைகளுக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள். அவரது தலை நோவு உபாதைகள்
விரைவில் குணமடைய சந்த வசந்தக்கவி அரங்கின் பிரார்த்தனைகள்.

**********************************************************

அடுத்து வருபவர் கவிஞர் வித்யா ஜெயராமன்

இவர் தன்னைப் பற்றிச் சொல்வது ----

மூன்று வருடமாய் அமெரிக்காவில் டெட்ராய்ட் நகரில்


வசிக்கிறேன். .அதற்குமுன் கோவை , பெங்களூர்..
தொழில் : எல்லோரும் செய்யும் எலித்தொழில் (software) தான்..
மாணவி : எம்.பி.ஏ, வாழ்க்கை
பேராசிரியர் பசுபதியின் பெருமுயற்சியால் மரபிலக்கியம் (http://www.marabilakkiam@
yahoogroups.com ) மற்றும் மாகாலிட் (http://www.macalit@yahoogroups.com)
மூலமாக கவிதை எழுதும் எண்ணம் பிறந்தது.
ஆர்வங்கள்: சங்கீதப் பித்து குறிப்பாக முத்துஸ்வாமி தீஷிதர் பாடல்கள்
(குருகுஹா.ஆர்க் ; http://www.guruguha.org) என்ற வலைத்தளம் நடத்துகிறேன்.
மற்ற ஆர்வங்கள்.. தத்துவம்,மொழியியல் (கிரேக்கம், சமஸ்கிருதம்)

இவரோட தலைப்பு 'நதியாக நானிருந்தால்....'

மலையில் பிறந்து தரையினில் தாவி


அலைந்து திரிந்து கடலில் தொலையுமுன்
காய்ந்த தரிசின் குறையும் களைவீரோ
பாய்ந்து பகரு மிங்கு.

கவிஞர் வித்யா ஜெயராமன் வருக, வந்து கவிதை தருக....

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
*********************************************************
பார்வையாளர் 1: கவிஞர் தன் தலைவலிக்கு மாத்திரை சாப்பிடலாமே.

பார்வையாளர் 2: தலிவர் வந்ததிலேருந்து அரங்கில ஒரு மாத்திரை பாக்கி


இல்லாம எல்லாம் வித்துப் போச்சாம்..முன்னயே தெரிஞ்சிருந்தா நானே
ரெண்டு பாட்டில் தலைவலி மாத்திரை வாங்கி காசு பண்ணிருப்பேன்.
===========
தலைநோவு உபாதைகள் குறைய வெளியில்
விலைகொடுத் துவாங்க வேண்டா மருந்தை
நிலைமாறிய யோகத்தை கொண்டால் முற்றிலும்
தொலைந்து போகுமே இவ்வினை!

நிலைமாறிய யோகம் - சர்வாங்காசனம்!

இராசேந்திர சோழன்!
==============

24.
அழைப்பு விடுத்த அவைத்தலைருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
இங்கே துவே என் முதல் முயற்சி அதனால் பேரியோர்கள்
பிழை பொறுத்துத் திருத்த வேண்டுகிறேன்.பாவகைகளைக் குறித்திருக்கிறேன்.அதிலும்
தவறுகள் இருந்தால் இரண்டு தட்டுத் தட்டி (கீபோர்டில் ) திருத்துங்கள்..

நன்றி.
வித்யா.

நதியாக நானிருந்தால் :

கடவுள் வாழ்த்து
(கலிவிருத்தம்)
மூலனை சீலனை முப்புர மூர்தத
் ியாம்
காலனைக் காலினால் காத்தவன் பாலனை
வேலனை வெப்பமாய் வெற்பதைக் கொன்றதோர்
பாலனைப் பார்தனில் போற்றியே வாழ்த்துவோம்

அவைவணக்கம்:
(வெண்பா)

ஆன்றோர் நிறைந்த அவைதனில் என்தனைப்


போன்றோர் படுபிழை போக்கித் திருத்தவும்
என்றும் அழகாய் எழுதிட வாழ்த்தவும்
மன்றம் பணியும் மனம்.

அவைத்தலைவர் வணக்கம்:

இவ்வளவு எழுதவே
இந்த முறை திண்டாட்டம்
அவைத்தலைவர் வணக்கம்
அடுத்தமுறை வரும்.
அதுவரை சொல்வேன்
ஆயிரம் வணக்கங்கள்.
நதியாக நானிருந்தால்
--------------------
(நிலை மண்டில ஆசிரியப்பா)

கடற்கரை ஓரம் கடலலை ஈரம்


சுடரொளி சூரியன் சுருங்கும் வேளை
ஒவென சமுத்திரம் ஓலமாய் அழுதது
தூவெண் மணலால் துடைத்ததன் விழிகளை
வாட்டுமுன் துயரை வாரிதி சொல்லெனக்
கேட்டதும் கூறிக் கரைந்தது கேவியே

சமுத்திரம்:

நதிகள் என்னை நாடியே வந்தபின்


கதியிலா நீசக் கடலென உப்பென
கேலியாய்ப் பேசியே கேவலப் படுத்தின
நாலிடம் சென்றிட நடந்திட நகர்ந்திட
பருகவே தண்ணீர் பாங்காய்த் தந்திட
பெருகும் பயிர்களைப் பேணிக் காத்திட
இ தற்கென வாழ்வதே இ யற்கை நீர்நிலை
எதற்குன் வாழ்வென எள்ளியே நகைத்தன

நதியாய் இஇ ருந்தால் நன்றாய் இ ருக்கும்


விதியெனைப் படைத்த வினோதம் இ வ்விதம்
விழியில் நீருடன் விசும்பும் எனக்கு
வழிநீ சொல்வாய் வளநதி ஆகவே.

நான்:

கண்ணே கடலே கலங்கிட வேண்டாம்


கண்கள் திறந்து காட்சிகள் பார்ப்பாய்

மாறும் எழிலா மாறா நிலையா?


ஆறுகளைக் காட்டுவேன் அதன்பின் சொல்வாய்

உடலின் பாவம் ஊறிய நதிதான்


கடலே அவள்தான் கங்கைக் கன்னி

நடந்தாய் வாழியென நற்கவி சொன்னான்


கிடந்தாள் இ ன்று கீறலாய்க் காவிரி

நான்முகன் புதல்வனோ நமனாய் வெள்ளமாய்


வான்முகம் உயிர்களை வரிசைப் படுத்துவான்

நருமதை வந்தாள் நன்றாய்ப் பார்ப்பாய்


தருமமாய் சாயக் கழிவை ஏந்துவாள்.

சக்கரை உப்பு சர்வமும் அவசியம்


அக்கரை பச்சை அதைநீ அறிந்துகொள்

ஆற்றாது அழுத ஆழியும் சிரித்தது


பற்றியே அலையால் பாதம் நனைத்ததே.
-------
வித்யா ஜெயராமன்
=======
கலிவிருத்தம், வெண்பா, கவிநதி ஓடும்
நிலைமண் டிலமென நேராய்- அலைகடல்
ஆற்றாமை போக்கி அளித்தார் நதிதோன்றும்
ஊற்றாகி உள்ளம் உணர்ந்து.

நதிபலவும் கூடி நடப்பதால் அன்றோ


கதிபெறும் அந்தக் கடல்?

செந்தமிழைப் போற்றிச் சிறப்புறவே வாழ்த்துமிந்தச்


சந்த வசந்தத் தளம்

இலந்தை
=============
உள்ளப் பா உணர்ச்சிப் பா உண்மை நிறுவும் பா
உங்கள் பா உவப்பை ஊரெங்கும் பரப்பும் பா
பள்ளத்தை மேடாக்கிப் பார்க்கிறேன் என்னும் பா
பாகுப் பா. வெல்லம்மா! பாசமாய் வாழ்த்துகிறேன்!

ராஜரங்கன்
===========
வித்யா:
கழிவை ஏற்கும் நதியைக் காட்டி,
விழியில் தன்னுடல் வெள்ளம் பாயப்
பழியைச் சுமந்தேன் பார்எனும் கடலின்
அழுகை நிறுத்திய அழகை ரசித்தேன்!

மனத்தை அள்ளும் அழகுப் படைப்பு! பாராட்டுகள்!


அனந்த்
============
அன்பினிய வித்யா ஜெயராமன்,

நதியும் கடலும் நடத்திய உரையாடலை


ஓர் ரசிகனாய்க் கேட்டேன்

அன்புடன் புகாரி
==============
வித்யா,

உங்கள் கவிதைக்குப் பாராட்டுகள்.

நதியெல்லாம் நாட்டில் நலிவடைந் தக்கால்


விதியாம் நமதென்று வீணே இருக்கும்
மதியில்லா மாந்தரைத் தட்டி எழுப்பப்
புதியதாய்ச் சொன்னீர் புரிந்து

ஆறெலாம் ஆற்றல் இழந்துத் திசைவேறாய்


மாறிப்போய் வற்றியே மாசுபட்டுப் போனாலும்
பாடுபட்டுப் பாரிதனைப் பத்திரமாய்க் காத்திடவே
நாடுவாய் நாள்தோறும் நயந்து

சௌந்தர்
=======

சந்த வசந்தக் கவியரங்கம் 14

கவிஞர் வித்யா ஜெயராமனுக்கு பாராட்டு.


அருமையாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துகள். பாராட்டுகள்.

கடல் கரிப்பு பற்றி நீங்கள் எழுதியது பார்த்தவுடன் நினைவு வந்தது.


ஒரு உலக சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாடு மானாட்டில் ஒவ்வொரு
தேச உறுப்பினரும் கடல் நீர் சுத்தமாக இருக்க தத்தம் நாட்டில்
தாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைச் சொன்னார்களாம்.

ஆலைக்கழிவை கடலில் கலப்பதைத் தடை செய்தோம் என்றார் அமெரிக்கர்.


எண்ணெய்க் கசிவே இல்லாத கப்பல்களில் எண்ணெய் ஏற்றிச் செல்கிறோம்
என்றார் கனடியர். கடல் மாசில் உள்ள வேதிப்பொருளைத் தின்று அழிக்கும்
பாசியைக் கண்டுபிடித்து கடலில் போட்டோம் என்றார் ஜப்பானியர்.
இந்தியர் பெருமையுடன் சொன்னார், "எளிய வழியில் கடலில் சுத்த நீர் அதிகரிக்க
வழி செய்தோம், எங்கள் நாட்டு நதி நீரை யாரும் பயன் படுத்தாமல் கடலில்
கலக்கவிட்டு" !

நல்ல கவிதை கொடுத்த கவிஞர் வித்யா ஜெயராமனுக்கு வாழ்த்துகள்.


****************************************************************
கவிஞர் புகாரிக்கு அழைப்பு

அடுத்து வருபவர் கவிஞர் புகாரி

இவர் கனடாவில் டொராண்டோ நகரில் வாழ்கிறார். கணினித்தொழில்.


'வெளிச்ச அழைப்புகள்', 'அன்புடன் இதயம்' என்ற இரு கவிதை
நூல்கள் வெளியிட்டுள்ளார். 'பச்சை மிளகாய் இளவரசி' என்ற
கவிதை நூல் அச்சில் உள்ளது. இவரது படைப்புகள் குமுதம்,
அமுதசுரபி மற்றும் பல இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன.
இவர் வலைத்தளத்தில் http://www.anbudanbuhari.com மிக நேர்த்தியான
புகைப்படங்களுடனும் கூடிய அழகிய கவிதைகளுள்ளன. சந்தம்,
கருத்து, துள்ளல், எளிமை கொண்ட இவரது கவிதைகள் இணையக்
குழுமங்களில் பல ரசிகர்களை இவருக்குப் பெற்றுத் தந்துள்ளன.
பெரும்புலவர்களின் பாராட்டும் கிடைத்துள்ளது. இவர் மூச்சில், பேச்சில்,
வாழ்வில் எல்லாமே கவிதை.
எச்சரிக்கை ! கனடாவாசிகள் கவனிக்க: இவருக்கு கார்
ஓட்டும் போதும் கவிதைதானாம் ! 'சிவப்பில் நின்று பச்சையில் பாய்வேனோ,
சிவப்பும் பச்சையும் சிறுவர்க்கு, கலர் விளக்கும் கவிஞனைக் கட்டுமோ' என்று
கார் ஓட்டிகொண்டே எழுதிக் கொண்டு போவராம்.
வீட்டிலும் எல்லோரையும் போல 'சாப்பாடு போடு' என்று கேட்காமல்
அதையும் கவிதையில் சொல்வாரோ ?

வயிறு பசிக்குது
வட்டிலில் சோறிட்டு
வஞ்சனையின்றி நெய்யூற்றி
வதக்கிய கறிகாய்களுடன்
வெங்காயத் துவையலுடன்
வெண்டைப் பொறியலிட்டு
வேகவைத்த முட்டையுடன்
வெந்தியக்கீரை பருப்புடன்
வத்தல் குழம்போடு
வட்டக்கிண்ணியில் பாயசம்
விரா,சுறா,இறா,புறாக் கறியுடன்
வெள்ளாட்டு வறுவலுடன்
வெண்ணிறத் தயிரோடு
பொன்னிறப் பூரிகள்
வாட்டிய சப்பாத்திகளோடு
வடைகளும் குவித்து
வேகமாய்வா முறுவலோடு,
வைத்தியன் எடையைக்குறையென
வேண்டினதால் வேறேதும்
வேண்டவே வேண்டாமெனக்கு
விடியும் வரைக்கும் !

இவரது தலைப்பு 'நீராக நானிருந்தால்...'

நானும் 'போர்'அடித்து ஓய்ந்தேன்.


'நீர்' வரவில்லை.
'நீர்' ஒளிந்ததேன்?
'நீர்' அரிதானதேன்?
'நீர்' வரத் தாமதமேன்?
'பணி'ச் சுமையோ?
'பனி'ச் சுமையோ?
கடலில் ஆவியாகி
காற்றில் மேகமாகி
குளிர்ந்து தூறலாகி
சிறுதுளி சேர்ந்து
மலைவழி தவழ்ந்து
நிலமதில் வந்திட்டு
இடமது தேடினீரோ?
வாரும் வேகமாய்
வந்து கொட்டும்
அரங்கம் நனையும்
நும்கவி மழையால் !

கவிஞர் புகாரி வருக, கவிதை தருக !

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

25.

(தமிழ்த்தாய்க்கு)
.

விற்பனர்க்கும் அற்புதமே
முற்றுமுதற் கற்பகமே
சிற்றருவிச் சொற்பதமே
சுற்றுலக முற்றுகையே

வெற்றிநிறைக் கற்றறிவே
நெற்றிவளர் பொற்றழலே
உற்றதுணைப் பெற்றுயரப்
பற்றுகிறேன் நற்றமிழே

(நன்றி: தமிழரங்கம், டொராண்டோ)

(கவியரங்கத் தலைவருக்கு)
.

உடம்புக் கடலடியில்
தேனமுதம் ஆட்டி
நரம்பு ஓடைகளில்
ஆயுளலை கூட்டி
மனதின் மாளிகையில்
ஒட்டடையும் ஓட்டி
உயிரின் காற்றுக்குள்
பேரடர்வை ஊட்டி

பூத்தூவிப் பூத்தாடும்
சிரிப்பென்ற நர்த்தனம்
பூத்தவிடம் முடங்காமல்
மணம்வீசும் அற்புதம்

வீடெங்கும் துயரமுட்கள்
விழுந்தே இறைந்திருக்க
வீதியெங்கும் மயக்கநெடி
விசமாய் நிறைந்திருக்க

நகைச்சுவைத் தேன்தீபம்
நகக்காம்பில் ஏற்றி
பகைக்கின்ற நெஞ்சினிலும்
பதமாய்க் குளிரூட்டி

நாளுக்கும் பொழுதுக்கும்
நிறமேற்றும் கலைஞர்கள்
வாழ்வளிக்கும் சிகரங்கள்
தாய்ப்பால் போன்றவர்கள்
.

எல்லே நகைச்சுவையே வேறு


சொல்லே இல்லை சுவாமி
உள்ளே வெள்ளமாகி வருகிறது
கள்ளே மயங்குமொரு வாழ்த்து

(கவிதை)

நீராக நானிருந்தால்
.

நீராக நானிருந்தால்
நீண்டதோர் கவிபொழிவேன்
வேரோடு உயிராகும்
உயர்வினைப் பாடிவைப்பேன்

வேறென்ன சாதிப்பேன்
வேறெவர்தான் சாதிப்பர்

என் அழுக்கைக் களையவே


எனக்கொன்றும் சக்தியில்லை
ஊருலக அழுக்கையெல்லாம்
கழுவும் தூய்மை ஊற்றாகும்

நீராக நானிருந்தால்
வேறென்ன சாதிப்பேன்
விதையோடு முளையாகும்
உயர்வினையே பாடிவைப்பேன்

என்னுள் எரியும் நெருப்பையே


எனக்கணைக்க வழியில்லை
வீரிட்டெழும் எந்நெருப்பையும்
விருட்டென விழுங்கிப்போகும்

நீராக நானிருந்தால்
வேறென்ன சாதிப்பேன்
வானேறி தலைமுட்டும்
உயர்வினையே பாடிவைப்பேன்

என்னுயிர் காக்கவே
எனக்குத் திராணியில்லை
மண்ணுயிர் அனைத்தையும்
மடியிட்டுக் காக்கின்ற

நீராக நானிருந்தால்
வேறென்ன சாதிப்பேன்
வளம்பேணி நிலம்பாயும்
உயிர்வினையே பாடிவைப்பேன்
.

குடுவை நீந்தும் தங்கமீனைக்


கண்கள் தழுவும் போதெலாம்
பொறாமையே எனக்குள் குதிக்கும்

கடல் நடுவே திமிங்கிலம்


ராசநீச்சல் இடும்போதெல்லாம்
உள்ளாசை கிளர்ந்து என்
உயிர்சுட்டே கொதிக்கும்

நீர் வாழ்வே சுகமென்று


உள்ளுதடுகள் படபடக்கும்
.

உயிர் மூலக்கூர்
பரிணாம வேர்
மரணமற்ற நீர்

உறைந்தாலும் உருகும்
ஆவியாகிக்
கரைந்தாலும் சேரும்

நானோ
மரணமுத்திரை குத்தப்பட்ட
சின்னஞ்சிறு காற்றுக் குமிழ்

நெடுநேரம் நீரில் மிதக்கவே


சுழலும் நினைப்பொழித்து நாளும்
ஆசைப்புயல் வீசும் நீர்நேசன்

எப்பானமும் நிராகரித்து
நிறமில்லா நீர்ப்பானம் பருகத்தானே
தாகமாகித் தவிப்பேன் பொழுதும்

நீர் தேடி நீர் தேடி


நொடிதோறும்
நெருப்பாகி எரிவேன்

அடடா இன்று
நானே நீராகிப் போனால்...
மிதப்பேனோ எனக்குள் நானே
பருகுவேனோ என்னை நானே
தாகமாவேனோ எனக்காக நானே

ஓ....
அது ஓர்
ஞானக் கீர்த்தியல்லவா
எனில் நான் ஞானியாகிறேனா?

ஞானியாய் நானிருந்தால் என்ற


புதுத் தலைப்பல்லவா
வந்தேறிவிட்டதிப்போது
.

நீராக நானிருந்தால்
நீண்டதோர் கவிபொழிவேன்
வேரோடு உயிராகும்
உயர்வினையே பாடிவைப்பேன்
.

அடியாழ் நிறைத்து நீர் நான்


நிலம் காதலிக்கும்
நிச்சயத்தை...

நிலத்தோடு நின்று
நெருப்பைக் காதலிக்கும்
உண்மையை...

நிலத்தோடும்
நெருப்போடும் சேர்ந்து
காற்றைக் காதலிக்கும்
நிரந்தரத்தை...

அந்தக் காற்றோடும் கலந்து


ஆகாயம் காதலிக்கும்
சத்தியத்தை...

நெஞ்சு நீர்பொழியச்
சொல்லிவைப்பேன்

ஆம் மானிடா
பொறாமையில்லா இதயக் காதல்
பொய்மையில்லாப் புனிதக் காதல்
பஞ்சபூதக் காதல்

ஐவரும் ஐவருக்குள்ளும் ஐவரையும்


அன்றாடம் காதலித்தே
இந்தப் பிரபஞ்சம் ஆகிறோம் என்று
உரத்த குரலில் உற்சாகமாய்ச்
சொல்லிவைப்பேன்

எங்களுக்குள் பிறப்பாகி
ஏங்கி அலைந்தாடும் மானிடா
சற்றும் தாமதியாமல்
உண்மைக் காதல்வளர்

எல்லோரையும் எந்நாளும்
இன்பமாய்க் காதலி
எனக்கே சொந்தமென்று
சுருங்கிச் சாகாமல்
சுதந்திரமாய்க் காதலி

அதுவே பஞ்சபூத இயற்கை


இந்தப் பிரபஞ்சக் கொள்கை
என்று சொல்லிவைப்பேன்
.

நீரென்ற நானன்றோ
உயிர்களின் பிறப்புப்பை
தாயின் கர்ப்பப்பையும் - கடலைச்
சுருக்கியதோர் வடிவல்லவா

வெளியேறி நிலம் வீழும்


வேதனைப் பொழுதெல்லாம்
அழுகின்றாய் மானிடா நீ

மீண்டும் நீ நீரில் நீராகும்


ஜென்மம் எங்கே என்றுதானே
கதறுகின்றாய் - அதுவரை
அழுகையைத்தானே தினம்
அடையாளமாக்கிக் கொண்டாய்

கண்ணீர்க் கயிறு திரிக்கும்


காரணம் அறிவாயா
அது என்னோடு உன்னை
மீண்டும் பிணைக்கும்
நீர்ப்பாசத்தின் முயற்சி

நீர் என்ற சுவனத்திலிருந்து


வெளியெறியப்பட்ட பாவமே
நீருக்குள் நீராகி என்றுதான்
நீ நீயாகிப் போவாயோ மீண்டும்

அதுவரைக்கும் நீயோர்
நிலவாழ்ப் பிணம்தானே
.

எத்தனைக் கூர்வாளால்
எப்படி வகுந்தாலும்
விலகுவதில்லை நீர்
கலைவதில்லை நெருப்பு
அகலுவதில்லை காற்று
பிரிவதில்லை ஆகாயம்

நிலமோ விலகும் - பொழுதும்


கலையும் அகலும் பிரியும்

ஆகையினாலேயே மனிதன்
நிலம் வாழ்கிறான் - என்றும்
விலகிச் சாகிறான்

சற்றே மாற்றி சிந்திக்கவும்


சட்டென்று மறுதலிக்கும் பிறப்பை
மண்ணில் கொளுத்திவிட்டு
நீருக்குள் வா
நீ நீராக வா என்றே
செல்லிவைப்பேன்
.

இந்தக் கதை கேட்டாயோ


என்னுயிரே

பழந்தமிழ் திருடிய
திருடனாம் நான்
பரிகாசம் செய்கிறார் தமிழர்

அமுதத் தமிழ்மேல் - அந்த


ஆகாயத்திற்கே அடங்காப் பசி

நினைத்து நினைத்து நெருப்புக்கோ


நித்திரை கிடையாது

தொட்டுத் தழுவாமல் காற்றுக்குச்


சிறகுகள் வெடிப்பதில்லை

அந்தத் தீந்தமிழை
பழந்தமிழ்த் தித்திப்பை
தழுவிப் பார்க்கும் ஆசை
எனக்கும் இருக்காதோ
கிறுக்கர்களே

அள்ளிக்கொண்டுபோய்
ஆழத்தில் வைத்து
ஆழமாய் வாசிக்கிறேன்
ஓலைத் தமிழை

அவ்வமுதத் தமிழ்போல்
இன்னுமின்னும் படைக்காமல்
தொலைந்ததே தொலைந்ததே என்றே
புலம்புகிறார் வக்கற்ற இளந்தமிழர்

நீரல்ல நீரல்ல தவறினை


இழைத்ததும் இழைப்பதும்
நீர்தான் நீர்தான் தமிழரே நீரேதான்
என்றே சொல்லிவைப்பேன்
.

நானே உயிரானேன் உனக்குள்


என்னையே திருடனென்கிறாயே
நன்றி நொடிந்த தமிழா

நான் தினம் உன்னை


வைது வசைபாடுகிறேன் வந்துபார்
ஒவ்வோர் கரையிலும் அலைகளாய்
என்றே சொல்லிவைப்பேன்
.

கர்னாடகாவில் துளிவளர்க்காமல்
இனி தஞ்சாவூரில் வேர்விட்டு
ஒவ்வோர் தமிழனின் வீட்டுக்குள்ளும்
ஓடிவரலாம்தான் நான்

உன் சோம்பேறித்தனத்தைச்
சொறிந்துவிட்டு மேலும்
சரிந்துபோகச் செய்ய
சம்மதமில்லை தமிழா எனக்கு
உன் தமிங்கிலம் விட்டுத்
தமிழ்பாடு - நான்
தானாய் வருவேன் தாளகதியோடு
என்று பாடிவைப்பேன்
.

உப்பை உதறிவிட்டு
ஒவ்வோர் முறையும் நான்
உன் மண்தேடி வரும்போதெல்லாம்
எது உன் வீடென்ற அடையாளத்தை
வெட்டிச் சாய்த்துவிட்டு - நீ
மொட்டையாய் நிற்கிறாயே
நானென்ன செய்வதாம் நீயே சொல்

பச்சைமரக் கூட்டம் கூட்டி


இச்சையுடன் இலைச்சாமரம் வீசாமல் - என்
பொன்மடிசுரந்து நீருதிருமோ மூடா
.

கும்பகோணக் கொடுமையில்
பசித்திருந்தது நெருப்பல்லடா
ஊழல்

உறங்கிப்போனது நானல்லடா
நேர்மை

எங்களைக் குறைசொல்லி மேலும்


உங்களைத் தாழ்த்தாதீர் புண்களே

இலங்கை இந்தியச் சிற்றிடையில்


ஓர் ஒட்டியாணம் கேட்டு
பாரதி நாவையே அசையச்செய்தேனே
அசைந்தீரா அற்பங்களே

குடையென்ற குத்தீட்டிகளால்
குதறிக்கிழிக்காதிருந்தால்
உழவனின்
ஒவ்வோர் குரலுக்கும் பொழிவேனே

பயிர்நலம் பேணுபவன் நில்லென்றால்


வாசுகியின் வாளியைப்போல்
பாதி வழியிலேயே வீழாமல் நிற்பேனே

நீர் நட்சத்திரங்களாய் உருவெடுத்து


ஒவ்வோர் வீட்டுக் கூரையுள்ளும்
குளிர் நிறைத்துப் பிரகாசிப்பேனே

சந்திரனில் குடியேறி
மனிதா நீ இங்கேயும் வாழவாவென்றே
வரவேற்றிருப்பேனே

எந்தக் கோள் சென்றாலும்


அந்தக் கோள் வாசலில்
உனக்கு முன்சென்று நான்
ஆரத்தி எடுப்பேனே என்றெல்லாம்
சொல்ல்லிவைப்பேன்
.
உயிர் தந்தேன் உடல் தந்தேன்
உணவும் தந்தேன் - வேறு
என்னதான் தரவில்லை நான்

நானில்லா முத்தமுண்டா
சேர்க்கையுண்டா இல்லை
உயிர்க்கும் கருதானுண்டா

நானே நானாகி
நானுள் நான் வார்த்து
நீந்துகிறேன் நான் நீயாய்

இன்னும் போதாமனமா
பாழும் மானிடா கேள்

இனி...

உடலழுக்கைக் கழுவவரும்
உயிர்களின்
உள்ளழுக்கையும் கழுவுவேன்

......நீ எனக்குள் இறங்கு

எனக்குள் மூழ்கி
என்னையே சுவாசிக்க
உயிர்கள் அத்தனைக்கும்
நீர்ச்சுவாசம் வழங்குவேன்

......நீ எனக்குள் இறங்கு

கண்ணீர்ச் சந்துகளில்
ஓடுவது தவிர்த்து
வேறு எங்கும் நான்
ஓடிவருவேன்

......நீ எனக்குள் இறங்கு

நஞ்சேறும் வஞ்சக மூளையில்


இரத்தமாய் வசிப்பதைத் தவிர்த்து
வேறு எங்கும் நான்
வசிப்பேன்

......நீ எனக்குள் இறங்கு

உயிர்கள் அனைத்தும்
என் பிள்ளைகளே என்பதால்
என் தாய்மை துறவாமல்
செல்லமாய்த் தலாட்டி
நிம்மதிக்குள் பாதுகாப்பேன்

......நீ எனக்குள் இறங்கு

ஆம் மானிடா
உதயத்தையே நீ நாடு
உன் தாயிடமே வந்து சேரு

......நீ எனக்குள் இறங்கு!

அன்புடன் புகாரி

பி.கு:

கவிஞர்களின் சிறப்பான விமரிசனங்களுக்காகக்


காத்திருக்கிறேன்

======
புகா ரிடையே பொழியும் தமிழில்
புகாரியை கணடுள்ள போது - ஆகா
உரைப்பேன் அவர்தந்த ஒப்பற்ற காட்டல்
தரத்தில் முன் நிக்கத் தகும்.

காட்டல் : சிற்றிடை ஒட்டியானம்

கஜன்
========
>ஓ....
அது ஓர்
ஞானக் கீர்த்தியல்லவா
எனில் நான் ஞானியாகிறேனா?

>நானோ
மரணமுத்திரை குத்தப்பட்ட
சின்னஞ்சிறு காற்றுக் குமிழ்

ஆழமிகு அழகு வரிகள்..ஒரே கவிதையில் இத்தனை பரிமாணங்களா?

வித்யா
======
அடடா இன்று
நானே நீராகிப் போனால்...
மிதப்பேனோ எனக்குள் நானே
பருகுவேனோ என்னை நானே
தாகமாவேனோ எனக்காக நானே
A thirst for the best
நானோ
மரணமுத்திரை குத்தப்பட்ட
சின்னஞ்சிறு காற்றுக் குமிழ்
muthirai
மண்ணில் கொளுத்திவிட்டு
நீருக்குள் வா
நீ நீராக வா என்றே
செல்லிவைப்பேன்
That is why ashes are immersed in water. The ultimate is mixing with
water.
அள்ளிக்கொண்டுபோய்
ஆழத்தில் வைத்து
ஆழமாய் வாசிக்கிறேன்
ஓலைத் தமிழை
அவ்வமுதத் தமிழ்போல்
இன்னுமின்னும் படைக்காமல்
தொலைந்ததே தொலைந்ததே என்றே
புலம்புகிறார் வக்கற்ற இளந்தமிழர்
a good thiught
.உயிர் தந்தேன் உடல் தந்தேன்
உணவும் தந்தேன் - வேறு
என்னதான் தரவில்லை நான்
நானில்லா முத்தமுண்டா
சேர்க்கையுண்டா இல்லை
உயிர்க்கும் கருதானுண்டா
நானே நானாகி
நானுள் நான் வார்த்து
நீந்துகிறேன் நான் நீயாய்
niirillai enRal 'niirillai"
any thing done without a paticipation of water is incomplete.
a "dhanam" given with sprinkling of water is only accepted.
கண்ணீர்ச் சந்துகளில்
ஓடுவது தவிர்த்து
வேறு எங்கும் நான்
ஓடிவருவேன்
If water does not dwell inside the eyes it is a disease.
Tear is a boon. water should not leave it.
Perhaps it may not be a cause to ooze out as an expression of sorrow.
.நீ எனக்குள் இறங்கு!
that is the ultimate.

Water has flown from Buhar's lyre


carrying with it a tinge of fire
Ramasami
I have moved to New Jersey and at present I have no facilty to type
with tamil font. Hence the English)
=============================
கடலை போடும் விடலைப் பருவம் கடந்து வந்தது அண்மையில், ஆனால்
கனலைத் தேக்கிக் கங்கை உமிழும் கண்கள் படைத்தாய்! கவிஞர் கோவே!
சுடுகிற நெஞ்சம் தமிழின் பெயரால் சூது செய்யும் இழிஞரைத் தாக்கும்.
சுயநம்பிக்கைக் கலங்கரை விளக்கம் சோதி காட்டி உன்னை அழைக்கும்.

நீளம், ஆழம் இரண்டும் அமைந்த நீலக் கடலை உன் கவி ஒக்கும்


மீள மொழியின் பற்று மிகுந்திட மீகாமன் போல் உன் பணி செய்வாய்!
கோள உலகில் கோணல் புத்தி கொண்டோர் பலரை ஒதுக்கித் தள்ளி
கோபுர தரிசனம் காண்பாய்! உனக்குக் கொடுத்துவைக்கும் மேலும் உயர்வு!

ராஜரங்கன்
=======================
அடடே! என்ன கவி வீச்சு!என்ன ஒரிஜினாலிடி!
சொற்கள் அத்தனையும்,சிந்தனைத் தேனில் முக்கி,கவி வானை நிறைத்து,
சொற்பந்தலாகத் தூவி விட்டிருக்கிறார் எம் அன்பு புஹாரி.
எல்லா வரிகளும் அழகிய வரிகளே!வாழ்க!
யோகியார்
=============
அன்புள்ள புகாரி: இன்றுதான் நேரம் கிட்டியது. உங்கள் 'நீரைப் பருகி மகிழ்ச்சி
வெள்ளத்தில் பாதி மிதந்தும் பாதி மூழ்கியும் 'ஊஞ்சலிக்கிறேன்'. நீர் ஒரு கவிமழை,
பழையதை அடித்துக்கொண்டு போகாத புது வெள்ளம், கற்பனை ஊற்று என்ற'வாறு'
கூறிக்கொண்டே போகலாம்.....
அனந்த்
================
புகாரி,

டொரோண்டோ கவியரங்கின் போது இலந்தையார் 'நானேதானயிடுக' என்ற தலைப்பில் ஒரு கவிதை


எழுதியதைப் பற்றிச் சொன்னார். இப்பொழுது உங்கள் கவிதை 'நீரேதானாயிடுக' என்ற பெயரில்!

எளிதான* சொற்கொண்டே
. . ஏற்றங்கள் சொன்னீர்
களிப்புடனே நீரேதான்
. . கவிதையொன்று தந்தீர்
ஒளிமுதலாம் ஐம்பூதம்
. . உயர்வுகளும் சொன்னீர்
உளிவைத்துச் செதுக்காமல்
. . உன்னதமாய்த் தந்தீர்

* நீர்மை என்றால் எளிமை என்ற பொருளும் உண்டல்லவா!

சௌந்தர்
===========

சந்த வசந்தக் கவியரங்கம் - 14

கவிஞர் புகாரிக்கு பாராட்டு

ஊற்றாய் வருமா ? ஒருதுளி யாவது


தூற்றலாய் வந்திங்கு தாகமும் ஆற்றிடதா?
எட்டுத் திசையும் பார்க்கப் பொழிந்தீரே
கொட்டும் நயாகரா போல்.

நீராக நீரானால் நிலமெல்லாம் நீரினிலே


நிச்சயம் மூழ்கி விடும் !

அருமையான கவிதை தந்த புகாரிக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்.

நீருக்குதான் வானத்தைப் பார்க்க வேண்டுமா? நிலவுக்கும்தான்,

கவிஞர் கஜனுக்கு அழைப்பு

அடுத்து வருபவர் கவிஞர் கஜன். கஜன் என்பது புனைப்பெயர்.


இயற்பெயர் ஜெயக்குமார். பொறியியல் கற்றவர்.
கவிதைகள், மு.வ. வின் கதைகள் பிடிக்கும்.
சமீபத்தில் திருமணமானவர். இதுவரை இணையக்
குழுமங்களில் நிறையக் கவிதைகள் எழுதிக் கலக்கினவர்..
(இனிம எப்படினு தெரியாது ; பானை பிடித்தவள் அனுமதி
இருந்தால் இவர் பாட்டு எழுதலாம், இல்லாவிட்டால் வீட்டில்
பாட்டு வாங்குவதோடு மகிழ வேண்டியதுதான்) (:-)

இவர் தன்னைப் பற்றி சொல்லிக் கொள்வது:

மண்தொட்டேன் யாழிலே ; வைத்தபெயர் ஜெயக்குமார்


கண்ணிமையாய் காக்கும் அருகுக் கணபதியால்
நன்றாகக் கற்கவே நாடினேன் இந்துவை ;
கண்டி வளாகத்தில் கற்றது எஞ்சினியர்

முவவின் கதைகளில் மூழ்கிய துண்டு


கவிதை பலதால் கவரப்படல் உண்டு
அவலம் பலதால் ஆழிகள் தாண்ட
சவரம் எடுக்காமல் சதிப்பதோ சஞ்சலங்கள்
இணைய வழியிலே ஈடற்ற ஆசிரியர்
துணையால் படித்துத் தொடரும் மரபு
புனைப்பெயர் க f னென புத்தியில் பட்டதை
முனைவேன் எழுத்திலே முட்டாளாய் நானிருந்தும்

[அருகுக் கணபதி: எங்களை என்றும் காக்கும்


அருகிலுள்ள அங்குசபாச பிள்ளையார்
கண்டி வளாகம் : பேராதனைப் பல்கலைக்கழகம்
ஆழி தாண்டல் - புலம் பெயர்தல் (migration) ]
----------------------------------------------------------------------
சந்த வசந்தக் கவியரங்கில் இவர் தலைப்பு 'நிலவாக நானிருந்தால்'...

என்ன செய்யப் போகிறாரோ?

விண்ணோடும் முகிலோடும் விளையாடும் கதை சொல்வாரோ


மண்ணவர் சொல்லும் காதல் கதை கேட்க வருவரோ
கண்ணெதிரில் தேய்ந்து வளரும் வித்தை காட்டுவோரோ
விண்வெளியில் மிதக்கும் வெறும்பாறை என்பாரோ?
வெண்மதிக்கே புலம்பெயர வாவென அழைப்பாரோ ?

நிலாக் கவிஞரே
நில்லாமல் ஓடி வாரும்,
உலாப்போய் ஒளியாது
உடனே வாரும்
கவியரங்கக் குழந்தைகள்
கண்ணுக்கு மை வேண்டாம்
காதுக்கு கவிதை தாரும்

கவிஞர் கஜன் வாரும், வந்து கவிதை ஒளி வீசும்.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
=================

26.
கணபதி துணை
========

சிந்தித் *திருப்பதும் சீராய்ச் செயற்படலும்


புந்தியில் போற்றலும் பொங்கிடும் - வெந்ததலை
தாழ்த்தித் தலையிலே *குட்டிக் கணபதியை
வாழ்க்கையில் என்றும் வணங்கு

தமிழ் வணக்கம்
===========
மண்ணினது மைந்தர்நாம் மண்ணவர் *யாரிங்கே ?
விண்தானும் வீழும் எம் வெற்றியிலே - விந்தையின்றி
அங்கும் அரங்கேறும் நல்லகவி ஆற்றலில்
தங்கும் *தரமாய்த் தமிழ்

தலைவர் வணக்கம்
===========
தட்டும் எழுத்தில் தரமான கேலியால்
பட்ட மரமும் பளிக்குமே - பட்டியிலும்
சொட்டுகள் சிந்தும் சுவாமித் தலைவரே
வட்டியுடன் வந்தனம் இங்கு
அவை வணக்கம்
==========
மணவாழ்வு என்றுரைக்க வாழ்த்தும் அவையே
*கனமாக்கி விட்டீர் களிப்பில் - கணணியிலே
அண்ணணாய் நண்பனாய் ஆசானாய் உள்ளோரே
எண்திசையில் வந்தனம் இங்கு

நிலவாக நானிருந்தால்
==============

கிட்ட முடியாமல் கெஞ்சும் குழந்தைக்கும்


நட்ட நடுஇரவில் நாயாய் அலைவோர்க்கும்
குட்டிக் கதையில் குழாவும் வயதினர்க்கும்
*கட்டிட மில் லாது கருகும் இரவலர்க்கும்
எட்டாத தூரத்தில் ஏகாந்தம் செய்வோர்க்கும்
பட்ட நாட்டிலும் பௌர்ணமி பார்ப்போர்க்கும்
வட்டிக்கு வாங்கியதால் வாழ்வு இழந்தோர்க்கும்
முட்டாள் பணியால் முதுகுவலி பெற்றோர்க்கும்
வட்ட வடிவத்தில் வானத்தில் வந்துதிக்கும்
மட்டற்ற சக்தி மதியாய் இருந்தால்

முழுநிலவு தொட்டு முகம்மலரும் பிஞ்சு


அழுகின்ற *வேளை அருகில் இருந்து
வழுதில்லா உள்ளம் வருந்தாமல் செய்வேன்
வழுக்கி விழுந்து வருத்தம் பெறமுன்
குழந்தையை அள்ளிக் குதூகலம் ஊட்டி
எழுகின்ற போதும் இனிதாய் அணைத்துக்
குழவிகள் யாவரையும் கொண்டனைத்துப் பாரில்
எழிலும் திகழ இனிமை தருவேன்

களைக்க *உழைத்துக் கடினதாய் வாழ்வு


திளைத்துப்பின் தேனாகத் தித்திக்க என்றும்
கிளைகள் பலதாய் கிளிச்சோலை செய்து
களங்கள் நிறையக் களிக்கத் தருவேன்
இளைத்த இரவலர்க்(கு) இல்லாமை என்ற
வளமற்ற போக்கையும் வையகத்தில் நீக்கிடுவேன்

சிக்கிடச் செய்திடும் சீரற்ற வேலையில்


முக்கிப் பணியிலே முட்டாளாய் உள்ளோர்க்கு
தக்க சமயத்தில் நல்ல தரணியாய்
நிக்க வருவேன் நிலவாக நானிருந்தால்

திங்களொன்றில் சீராகத் தேய்ந்தாலும் அங்கங்கே


சங்கடம் என்றால் சடுதியாய் வந்துநின்று

o ( அமாவாசை அகன்று வளர்கை காட்டல் )

கங்குல் பொழுதில் கழியும் தினமென


அங்கே அமாவாசை அற்று வளர்ந்திடுவேன்

**அந்திகணச் சிந்தனையால் அந்தணர் மந்திரத்தில்


சொந்தங்கள் வந்திருக்கத் **தொந்தரவுக் குந்தலிலே
வெந்தஎன்னை முந்தியவள் விந்தைமிகு சுந்தரியை
சந்திக்கத் தந்துவிட்ட சந்திரனாய் வந்தால்

கடல்தாண்டி வேலை கனடா என் றாக


நெடுநேரப் பேச்சிலே நித்தம் கதைத்து
மடலில் முகம்காட்டி வந்தன்பு செய்து
இடைஞ்சல் புரிந்திடும் என்றன் மனையாள்
வடிவமும் கண்டிட வானத்தில் ஏறி
திடமாய் உறைந்திடும் செய்தியும் சொல்வேன்

வளர்பிறை பின்னரோ வாடும் பிறையும்


வளர்கையில் போலியாய் வாழும் வடிவம்
தளர்ந்த தமிழர் சமூகம் கிழக்கில் ;
அளவற்ற முன்னேற்றம் ஆங்கே விடையாய்
வெளிவானில் விண்நோக்கி வெற்றிநடை மேற்கில் ;
*வெளிநாடு போன்றே விஞ்ஞானம் செய்து
களிப்பில் தமிழால் கனிந்திருக்கும் சூழல்
வளம்பெறச் செய்வேன் மதியாய் இருந்தால்

தமிழைச் சுவைக்கத் தரணியில் எங்கும்


அழகு நிகழ்வுகள் ஆண்டில் பலதாய்
கழகம் *நடத்திக் களித்து மகிழ்ந்து
பழுத்த கலைகள் பரப்பும் நிலைகள்
வழுவில்லாச் சுற்றம் மலர்ந்து சிறந்து
மொழியிலே நாமே முதலிடம் என்று
விழிகள் வியப்பில் விளங்கத் திகழ
புழுவுடன் பூக்களும் போற்றி இருக்க
வழியும் செய்து வதனத்தில் வாழ்த்திப்
பொழிவேன் மலர்கள் புகழ்நிலை கிட்டிட

முற்றும்

கவிவடிவம் பற்றி :
அமாவாசை, வள்ர்பிறை,பௌர்னமி, தேய்பிறை என்பதை
விளக்க கண்ணி அடிகள் எனண்ணிக்கையில் 10, 8,6,4,2,0,2,4,6,8,10
என்றமைத்தேன்
சுழற்சியைக் காட்ட கிட்ட என்று தொடங்கி கிட்டிட என்று
முடித்தேன்

சில விளக்கங்கள் :

**அந்திகணச் சிந்தனையால் : அந்தியிலே செயவதென முடிவாக்கப்பட்ட என்


திருமணம் என்பதால்
**தொந்தரவுக் குந்தலிலே : மண்வறையில் தொடர்ந்து அமர்ந்திருந்த என்
கடின அனுபவம் கருதி

நீண்ட கவியை நீர்பின்னே நிலவாகத் தந்தேன்


வேண்டி நிற்பேன் மீண்டும் மன்னிப்பு
தீண்டிய அடிகளில் திருத்தத்தை, பாவெழுதத்
தூண்டும் பெரியோரே சொல்லித் த்ருவீரோ ?

பங்குபற்றலுக்கு இடமளித்த தலைவருக்கு நன்றிகள்

அன்புடன்
கஜன்
============
அன்பின் கஜன்,

கவிதைக்குப் பாராட்டுகள்

உலகின் துன்பம் களைந்திடுவான்


. . உயிரின் தொகுதி விளக்கிடுவான்
கலைகள் கொண்டே வளர்ந்திடுவான்
. . காதல் களிப்பு கூட்டிடுவான்
நிலவைப் பாடினோர் பலருண்டு
. . நிலவே ஆனதும் இவரன்றோ!
இலங்கை தந்த இளங்கவிஞர்
. . எழிலாய்த் தந்தார் நற்கவிதை

சௌந்தர்
============
அன்பு கஜன்:
"..விந்தைமிகு சுந்தரியை சந்திக்கத் தந்துவிட்ட சந்திரனாய் வந்தால் ..."

தேனிலவுக் காலத்தில் தேர்ந்தெடுத்தீர் இங்கொரு


பாநிலவை; உம்முடைய பாவையவள் - வானில்உமை
நாடோறும் காண்பதற்கு நல்லதோர் உத்தியிது
கூடுநாள் ஓடிவரும் காண்!

..அனந்த்
===============
சந்திரானம்(இந்தச் சொல் சரிதானா என்று தெரிந்தவர்கள் சொல்லவேண்டும்) என்று ஒரு
உணவு உண்ணும் முறை உண்டு.அமாவாசை அன்று பட்டினி. அடுத்தநாள் ஒரு கவளம்.
இரண்டாவதுநாள் இரண்டு கவளம். இப்படிக்கூட்டிக் கொண்டேபோய்
பௌர்ணமி அன்று 15 கவளங்கள். அடுத்தநாள் 14 இப்படிக்குறைந்துகொண்டே வந்து
அமாவாசை அன்று பட்டினி .
இப்படி விரதம் இருப்பவர்கள் இருக்கிறார்கள்
அதைப்போலப் பாடலை அமைத்திருக்கிறார் கஜன்.
தொடக்கம் முழுநிலவைப் போல அழகு.
நல்ல உத்தி.
தமிழ் இலக்கியத்தில் இதை ஒரு புது முயற்சியாகக் கொள்ளலாம்.
இந்த அமைப்புக்கு 'மதிப்பா' என்ற பெயர் மதிப்பாகக் கொடுக்கலாம்.

இலந்தை
=======

நிலாப்பாலொளியில் நனைந்தேன் நண்பர் கஜன்

அன்புடன் புகாரி
=============
சந்த வசந்தக் கவியரங்கம் 14

கவிஞர் கஜனுக்கு பாராட்டு

பாடல் வடிவம், பொருளுடன் அருமையாய்


அமைந்த கவிதை தந்த கவிஞர் கஜனுக்கு
பாராட்டுகள், வாழ்த்துகள்.

அந்தி கணச்சிந்தை வந்து தந்திடவே


நொந்திட்டு பந்தலில் பந்தமொடு குந்தியும்
சந்திரன் தேய்வும் திரும்ப நிறைவுமிங்கு
சந்தமொடு தந்தீர் சிந்தாய்..

நல்ல கவிதை கொடுத்த கவிஞர் கஜனுக்கு பாராட்டுகள்.

-----------------------------------------------------------------------------------
------------------------

அடுத்து வரும் கவிஞர் ஹரி கிருஷ்ணன்


கவிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு அழைப்பு

அடுத்து வரும் கவிஞர் ஹரி கிருஷ்ணன். சென்னைவாசி.


எழுத்தாளர், அறிஞர், கவிஞர், ஆசிரியர், மரபிலக்கியக்குழுமம்
படைத்தவர், பல கவியரங்குகளில் பங்கேற்றவர், மேடையில் கொடுத்த
சொல்லை வைத்து உடனே கவி புனைந்தவர், சிறுவயதிலேயே
சித்திர கவி (இங்க ஒத்து மிகுந்தா என்னை மொத்துவார்) படைத்தவர்,
கம்ப ராமாயணம், திருக்குறள், பாரதி பாடல் , வாழ்க்கை பற்றி
ஆய்வுக் கட்டுரைகள் புனைந்தவர். தற்போது நூல்கள் அச்சேற்றும்
பணியில் ஆழ்ந்திருப்பவர்.

கவிஞர் ஹரிக்கு அரங்கத் தலைவர் விடுத்த வேண்டுகோள்

நங்கநல்லூர் விட்டீர்; அண்ணநூரில் வாழ்வீ£ர்;


தங்கநிகர் எழுத்தால் தாரிணியில் உயர்ந்தீர்;
பொங்கும் கடலாய் மரபோசை கண்டீர்;
மங்காத புகழ் கொண்டீர்

தெள்ளுதமிழ்க் கம்பன் கதையை விரித்துரைத்தீர்


வள்ளுவன் சொல்லை விரிவாக விண்டுவைத்தீர்
ஓசைநய மீசையான் பாட்டிசைத்தீர்; பறப்பதெங்கே
ஓசையிலா காலச் சிறகோடு?

தட்டெழுத்தில் வேகம் அமைந்தீர் இருமொழியும்


இட்டமாய்க் கற்றீர் ; இலக்கணத்தில் ஒப்பிலீர்;
கட்டத்தில் சொற்கவியு மிட்டிட்டீர் ; போவதெங்கே
சட்டமான காலச் சிறகுடன்.

சினமடக்க வல்லீர்; கடுஞ்சொல் தவிர்த்தீர்;


இனமறிந்த இன்சொலீர்; புன்னகை பூண்டீர்;
கடுஞ்சொலாலே காதம் நகர்வீ£ரே; என்னென்ன
காண்பீர் கனமில் சிறகோடு.

சொல்லின் செல்வ ! வருமின் கவிதருமின் !


அல்லின் ஆரே சொல்லவும் வல்லாரோ
காலச் சிறகின் தன்மையும் மேன்மையும்
ஞாலத்தில் யாமும் அறியேம்...

'அரங்கம் வருவேன் அஞ்சற்க' என்று


தரங்கம் அதிரவே சொல்லிய அச்சொல்லும்
சொல்லன்றோ ? அரங்கத் தலைவனுக்கு மின்று
சொல்லொணாச் சந்தோச மன்றோ ?

எலியை எடுமின்; ஏவுமின் அரங்கத்து;


ஒலியின் வேகத்தில் ; சரங்கள் வலித்து;
யாதே இலக்கமும் ஆகும் இதற்கென;
யாமெலாம் போற்றி மகிழ.

சந்த வசந்தக் கவியரங்கில் கவிஞர் ஹரியின் தலைப்பு "காலச்சிறகுடன் நானிருந்தால்..."

கவிஞர் ஹரி கிருஷ்ணரே வருக, பறந்து வந்து கவிதை தருக.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
=================
சாமியாரின் சீடனெனில் சவுரியங்கள் பல உண்டு
மாமிகள் முன் வந்து மண்டியிட்டால் ஆனந்தம்.
சாமியெல்லே பாராட்டில் சத் சீடனாய் இணைந்தேன்
சந்தக் கஜன் அரிக்குச் சன்மான வாழ்த்துகளாம்!
கஜன்பாடல் கனியென்றால் சர்க்கரை தர வருவார்
நிஜயோகி அரியென்பார். நிச்சயம் அவர் இளைய
புஜத்தில் புறப்பட்டு விரலோடி வரப்போகும்
கஜலான கவிதையினை அனுபவிக்கக் காத்திருப்போம்!

ராஜரங்கன்
==================
27.
அனுமனை எழுப்பிய ஜாம்பவானின் மொழிகளை அப்படியே எனக்கு வரவேற்பாக்கிய எல்லே சாம்பனே!
வணக்கம். நீர் ஜாம்பவான்தான். நான்தான் அனுமனில்லை. :-)

சந்த வசந்தக் கவியரங்கம்.


தலைமை: திரு எல்லே சுவாமிநாதன்.
(17 அக்டோபர் 2004)

காலமொரு அண்டவெளி காட்டும் திசைக்கெல்லாம்


மூலம்காண் என்று முகிழ்தத
் வனே - நீலக்
குருகதன்மேல்; நெஞ்சுள் குகனாகி நிற்பாய்
வருகதிராய் என்னுள் மலர்ந்து.
>o0o<

ஐயாநான் தாமதித்தேன்; அன்றாடம் இக்கதைதான்.


வையாதீர்; நெஞ்சிலருள் வைத்திருப்பீர் - பொய்யாமல்
சொல்லெடுத்துக் காலம் சுருக்கிட்டு வந்திருக்கேன்
எல்லே சுவாமிக்காய் இன்று.

நட்புக்குள் கூடி நடந்திருக்கும் மின்னரங்கில்


உட்புக்கு வந்துள்ளேன் உம்மோடு - தொட்டுக்
கதைசொல்லிச் சற்றே கனல்பரப்பி மீண்டும்
விதைநோக்கிச் செல்வேன் விரைந்து.
>o0o<

காலச் சிறகுடன் நானிருந்தால்....

இந்தவரி முதலெழுத்தைத் தொடங்கும் போது


இருந்ததொரு கணமெங்கே? இந்தச் சொல்லைச்
சிந்தனையில் நான்கண்ட போதில் வந்து
சிந்திப்போய் மறைந்திட்ட கணமும் எங்கே?
விந்தைமிகும் நதியொன்றின் அலைகள் போல
மீளாமல், கரைவந்து மோதி மோதி
சந்தடிக ளேதுமின்றிச் சுவடொன் றின்றி
சட்டெனவே மறைகின்ற கணங்கள் எங்கே? (1)

காலமெனும் அலையற்ற கடலுக் குள்ளே


ககனமெனும் அகண்டவெளி மிதக்கு தாமா?
காலநதி கணக்காக அடிகள் வைத்துக்
ககனத்தை அளவெடுத்துக் கடக்கு தாமா?
நீலம்போய்க் கருப்பான வானுக் குள்ளே
நீச்சலிட்டுக் காலநதி செல்லு தாமா?
ஆலம்போய்க் கருப்பான கண்டத் துள்ளே
அசையாமல் அதுநிற்கக் கற்ற தாமா? (2)

எத்தனைநாள் என்மனத்தைத் தோண்டிப் பார்த்து


எனக்குள்ளே விடைகாணத் தேட்டம் கொண்டு
புத்திமனம் சித்தமுடன் புலனுள் எல்லாம்
புடம்போட்டுப் புடம்போட்டுப் புகுந்து பார்த்து
கத்திமுனைக் கூர்போல ஈரும் என்று*
கவிவாக்கில் முளைத்தசொலைப் பகுத்துப் பார்த்து
பித்துற்று நின்றதன்றி முடிவோ இன்னும்
பிடிக்குள்ளே சிக்காமல் நிற்கின் றேனே. (3)

(* நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்


வாள துணர்வார்ப் பெறின் - குறள்)

கரைவந்து மோதுகின்ற அலையை எல்லாம்


கடலுக்குள் திருப்பிவிடக் கற்றேன் இல்லை;
விரைத்தெழுந்து நிற்கின்ற மரத்தை எல்லாம்
விதைக்குள்ளே மடித்துவைக்கக் கற்றேன் இல்லை;
நுரைபொங்கக் கறந்தபாலை முலையில் மீண்டும்
நுழைப்பதற்கு வழியொன்று தெளிந்தேன் இல்லை.
கருவாகித் துயில்வதற்கும் கற்றேன் இல்லை.
காலத்தின் சிறகிருந்தால் அதைத்தான் செய்வேன். (4)

முன்நோக்கிப் பறப்பதற்குச் சிறகெ னக்கு


முளைத்தெழும்ப வேண்டாம்போ! காலம் என்றும்
முன்நோக்கிப் போகையிலே எதற்காய் இன்னும்
முடுகிப்போய் அதன்கதியை மாற்ற வேண்டும்?
பின்நோக்கி என்வாழ்வில் மீண்டும் சென்று
பிழைதிருத்தி வருமளவு வலிமை கொண்ட
தன்நோக்குச் சிறகுகளைத் தந்தால் போதும்
சாரத்தைக் கூட்டவழி கண்டு கொள்வேன். (5)

பிழைதிருத்த மட்டுமல்ல; பின்னொன் றுண்டு.


பின்னிணைப்பாய்ச் சிலகணங்கள் மீண்டும் வேண்டும்.
நழுவினன்பார் கருவிருந்து மண்ணின் மீது
நானந்தக் கண(ம்)மீண்டும் வாழ வேண்டும்.
தழுவினள்பார் தாயென்னைக் கையில் தூக்கி,
சற்றேனும் அக்கணத்துள் நிற்க வேண்டும்.
முழுதான நட்புக்குள் பள்ளி சென்று
மூழ்கிவிட்ட கணமெல்லாம் மீண்டும் வேண்டும். (6)

முதன்முறையாய் அவளைநான் பார்த்த வேளை;


முதல்பார்வை, முதல்முத்தம் கொண்ட வேளை;
புதியதொரு உயிரெம்மில் துளிர்த்த வேளை;
பூத்துளிபோல் பிள்ளையினைக் கண்ட வேளை
நிதமென்றன் தோள்மீது செல்லம் ரெண்டு
நிம்மதியாய்த் துயின்றகணம் மீண்டும் வேண்டும்.
மதியத்தைத் தொடுமளவும் வந்த வாழ்வில்
மறுபடியும் ஓர்முறைநான் வாழ்தல் வேண்டும். (7)

தருவாயா அச்சிறகை எனக்கோர் நாளில்?


சத்தியமாய் ஓர்நாள்தான்; தருவேன் மீண்டும்.
விரைவாகப் பின்னோக்கிப் பறந்த பின்னர்
வெள்ளத்தில் பின்நீச்சல் போட்ட பின்னர்
கரைந்துருகி உன்னிடமே வந்து நிற்பேன்;
கண்சிமிட்டும் நேரந்தான்; தாராய் என்றால்,
குறையொன்றும் எனக்கில்லை போய்யா போபோ!
கொடுத்திருக்கும் கற்பனையே போதும் என்றும்! (8)

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
===============
ஹரி:
அற்புதமாய்க் கவிசமைத்தீர் அசர வைத்தீர்!
... அலையில்லாக் காலநதி அதனுள் சென்று
முற்பிறவி வேண்டுமெனக் கேளா(து) என்றன்
.. முதல்கணங்கள் வேண்டுமெனக் கேட்ட பாங்கும்
கற்சிலையுள் மறைந்திட்ட கடவுள் போலக்
... காலத்துள் ஒளிந்திருக்கும் காட்சியெல்லாம்
விற்பனமாய் உம்கவியில் விண்டபாங்கும்
... விந்தைஅதைப் படித்திட்ட நேரம் பொன்னாம்!

.....அனந்த்
(அத்தனையுமே அழகு வரிகள் என்பதால் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல
இயலாமல் ஆக்கியது பற்றிச் சற்று கோபத்துடன்!:)
==========
அன்புள்ள ஹரி !

விஸ்கிப் போத்தலைப் புதைத்து வைத்து நெடு நாள் கழித்து எடுத்தால்தான் சுவை


அதிகம் என்று சொல்வார்கள். ( சத்தியமாக நான் அதெல்லாம் தொட்டதே இல்லை!
கேள்விப் பட்டதே!) அது போல் நாங்கள் ஹரி கவிதைக்குக் காத்திருந்தது
வீண்போகவில்லை!
அற்புதம்!
'காலப் பறவை சிறகொலி எந்தன் காதி விழுகிறது' என்றொரு கவிதை எழுதி கவி
அமுதத்தில் ஒரு சமயம் வெளியிட்டேன். அது நினைவுக்கு வருகிறது. பாராட்டுகள்!

ராஜரங்கன்
===============
பற்றுதமிழ் பௌர்ணமியாய் பொலிவு காட்டி
. . படைக்கின்ற கவியினிலே அழகு கூட்டி
அற்புதமாய் அதனிடையே கருத்து மாலை
. . அச்சடித்த சொல்லாலே சிறகு கொண்டு
கற்றறிய வேண்டுமந்தக் காலத் திற்கும்
. . கடந்துவிட்ட சிறந்த அந்தக் கணங்க ளிற்கும்
நிற்குமொரு எழிலான சித்தி ரத்தை
. . நெஞ்சத்தில் ஏற்றிவிட்டீர் நிலையாய் இங்கு

மயங்கிய படியே ஒருமையி லுரைத்தமைக்கு மன்னிப்பு கோரிய வண்ணம்


அன்புடன் தம்பி கஜன்
============
குறையொன்றும் இல்லாத கண்ணன் பேரைக்
. கொண்டகவி அரிகிருஷ்ணன் அரங்கில் வந்தார்
சிறகொன்றால் காலகதிப் பயணம் சென்று
. சிறப்பான கற்பனையில் படகு விட்டார்.
நிறைவுதந்த குடும்பத்தார் மகிழ்ந்த ளித்த
. நினைவலையில் மூழ்கியொரு கவிதை தந்தார்!
திறமையுடன் அவர்படைத்த விருத்தம் எட்டில்
. தெறித்தனநல் முத்தெனவே வன்னச் சொற்கள்!
பசுபதி
=======
அன்புள்ள ஹரி,

கவியரங்கம் தொடங்கிய நாள்தொட்டே உங்கள் இடுகையை எதிர் நோக்கி இருந்தேன்.


இன்று உங்கள் கவிதையைப் படித்து ரசித்தேன்.

ஆலின் இலையில் வளர்ந்தவனாம்


. . அரியின் பெயரே கொண்டவராம்
ஆலைக் கரும்பின் சுவையுடனே
. . அருமைக் கவிதை தந்தவராம்
காலச் சிறகின் துணையுடனே
. . கடந்த காலம் பின்சென்றுக்
கோலக் கனவாம் நினைவலையில்
. . கொள்ளை இன்பம் கொள்பவராம்

சௌந்தர்
===========
காலச் சிறகு தாம்பெற்றுக்
கதித்துச் சென்று பின்னோக்கி
ஆல வட்டம் போடுகையில்
யாது காண வேண்டுமெனக்
கோல மாக ஓர்கவிதை
கொடுத்தார் கவிஞர் ஹரிகிருஷ்ணன்
சால நல்ல கவிதையினைத்
தந்த கவிஞர் வாழியவே!

இலந்தை
======
அன்பு ஹரியாரே,

கொடுத்திருக்கும் கற்பனையே போதும் போதும்

அடடா அபாரம்!!!

என்னை வாழ்விப்பதும் அதுதான் அதுதான்


எவரையும் வாழ்விக்கும் அதுதான் அதுதான்

அன்புடன் புகாரி
==========

சந்த வசந்தக் கவியரங்கம் 14

கவிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு பாராட்டு

வரம்வாங்கிப் பின்னோக்கிப் போனபின் இவரும்


கரம்நீட்டி என்னோக்கி விழைவார் விரைவாய் ?
உருவமாய் ஈன்றாள் ஈன்றகணம் நாடியதில்
மேருவாய் உயர்ந்தார் மனத்தில்.

பல் வேறு பணிகளிடையே நேரம் ஒதுக்கி சந்த வசந்தக் கவியரங்கத்தில்


கலந்து கொண்டு அருமையான கவிதை படைத்த கவிஞர் ஹரிக்கு
பாராட்டுகள் வாழ்த்துகள்.

அடுத்து வரும் கவிஞர் இராம.கி.

காரைக்குடி அருகே கண்டனூர் என்ற சிற்றூரில் பிறந்தவர்.


இளமையிலேயே தேவாரப் பாடல்கள், கம்பன் விழா
நிகழ்ச்சிகள், பாவலேறு பெருஞ்சித்திரனாரின் 'தென்மொழி'
இவற்றால் தமிழார்வம் மிக்கவராய்த் திகழ்ந்தார்.

இந்திய நுட்பியல் கழகத்தில் முதுநுட்பியல் படித்தவர்.


தமிழறிஞர். சிந்தனையாளர்.
ஆங்கிலத்தின் தாக்கத்தால் தமிழின் தூய்மை கெடுவதையும்
தமிழ்ச்சொற்கள் வழக்கொழிந்து போவதையும் சாடும் இவர்,
தமிழ் பிழைக்க, தழைக்க அனைவரும் தூய தமிழ் எழுத வேண்டும்
என்ற கொள்கையுள்ளவர்.

வடமொழி வந்தக்கால் வாடிட்ட மொழியை


வளம்பெறக் காத்த சமயக் குரவர்,
கவியரசு கம்பர், மறைமலையாய், இன்று
புவியில் தமிழ்காக்கும் ராமகி !

இவரோட தலைப்பு என்ன?

'முதல்வராய் நானிருந்தால்'

என்ன செய்யப் போகிறாரோ ?

இலஞ்சத்தை இல்லாமல் ஒழித்தேன்; தந்தேன்


கலங்காதீர் கையூட்டெனும் தூய தமிழ்ச்சொல் !
தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பஞ்சமேயில்லை;
கர்நாடகத்துக்கு தமிழ்நாடு என்றே பெயர் சூட்டி !
தமிழ் கற்காச் சிறுவர்க்கு ஆறு மாதம் சிறை !
ஆங்கிலப்பள்ளிக்கு அனுப்பும் பெற்றோருக்கு ஆறுவருடம் சிறை !
தவறு செய்தால் தமிழில் கூவித் திருத்தும் கணினி !
Si ரிப்பவர்க்கு இனி சிரச்சேதம் !

என்ன செய்யப் போகிறாரோ ?

அய்யா கவிஞர் இராமகி வருக, கவிமழை பொழிக.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
===============
28.
அன்பிற்குரிய சந்தவசந்தத்தாருக்கும், தலைவருக்கும்

என் வணக்கம். வழக்கமான முறையில் நான் இங்கு வரவில்லை. பொறுத்துக் கொள்ளுங்கள்.

...................................................................................
.........

"ஆயா, வீதியெல்லாம் ஒரே கூட்டமாப் போகுது; கையிலே கொஞ்சப்பேரு வேறே


தலகாணி, பாயெல்லாம் சுருட்டி வச்சுக்கிட்டுப் போறாக! எங்கே போறாக, ஆயா?"

"அட மக்குப்பயலே, இது தெரியலியா உனக்கு? மகார்நோன்புப் பொட்டல்லே கண்ணகி -


கோவலன் கூத்து இன்னைக்கித் தொடங்கப் போகுதுடோய்"

நீட்டி முழக்கிப் பழக்கப் பட்டவள் என் ஆத்தாளுக்கு ஆத்தாள்.

"சோழராசாவோட பெரிய ஊரு காவிரிப் பூம்பட்டினம். அங்கே நாடுவிட்டு நாடுபோய்


கொண்டுவிக்கிறவகள்லே. சாத்தப்பன்கிறவர் ரொம்பப் பெரிய ஆளு. அவரோட பையன்
கோவாலனுக்கு, இதே மாதிரிப் பெரிய வளவு மாணிக்கம் பொண்ணு கண்ணாத்தாவைக்
கல்யாணம் பண்ணி வச்சாக! வாக்கப் பட்ட பொம்பிளையை மாமனாரும், மாமியாரும்
வேறெ வச்சாக; அதென்னவோ கொஞ்ச நாளைக்கப்புறம் கண்ணாத்தா
சொகமே காணலை! அவளுக்கு வாய்ச்ச ஆம்படையான் கல்யாணம் பண்ண கொஞ்ச
நாள்லெ கூத்தியாள் வீடே கதின்னு கிடந்தான்; மாணிக்கம் பொண்ணுக்கு ஒரு பொட்டு,
புழுப் புறக்கலே; சீரு செனத்தி போட்டுக்கலே; நாளெல்லாம் புருசங்காரன் திரும்பி
வந்துருவான்னு காத்துக் கிடந்ததுதான் மிச்சம்; மாமனார், மாமியாருக்கும்
என்ன சொல்றதுன்னே தெரியலை; சொத்து, பத்தெல்லாம் தாசிமடிலே கொட்டிக்
கரைஞ்சு சீரழிஞ்சுது குடும்பம். பின்னாடி புத்தி வந்து புருசங்காரன் கண்ணாத்தா
வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

இனிப் பட்டினத்துலே இருக்கவேணாம், பங்காளிகளும், தாயபுள்ளைகளும், பக்கத்து


வீட்டுக்காரவுகளும் பலவிதமாப் பேசுவாக, அதனாலே மருதைக்குப் போயிருவோம்,
பொண்டாட்டி கொலுசை வித்துப் பொழச்சிக்கலாம்னு இளசுகள் ரெண்டும் புறப்பட்டாக;
ஆனா, மருதையிலே விதி விளையாடிருச்சு; அங்கே தங்க ஆசாரி பண்ணின
சூழ்ச்சிலே கோவலனைச் சிக்க வச்சி அவன் உசிரைக் காலன் கொண்டுக்கிணு போனான்.
கட்டளை போட்ட பாண்டியராசா தப்புச் செய்ஞ்சாருன்னு சொல்லி, அவருக்கு முன்னாடிக்
கொலுசை உடைச்சா கண்ணாத்தா; எல்லாரும் உக்கார்ந்திருக்கிற சவையிலே முத்துத்
தெறிக்கிறதுக்கு மாறா மாணிக்கப் பரல் தெறிச்சுது; தப்பைப் புரிஞ்சுக்கின இராசாவும்
இராணியும் அங்கேயே உசுரை விட்டாக! அதுக்கப்புறமும் கண்ணாத்தாவுக்கு கோவம்
அடங்கலே! ஆம்படையானைப் பறிகொடுத்ததாலே மருதை ஊரையே எரிச்சு
மானத்துக்குப் போய்ச் சேர்ந்தா! அவளுக்கு வந்த ரோதனை யாருக்குமே வரப்படாதப்பா!

அப்பறம் இதைக் கேட்ட சேர மகாராசா திகைச்சுப் போனாரு! பத்தினிக்கிக் கோவம்


வந்தா, பாராளும் அரசு கூடப் பத்தி எரிஞ்சிரும்னு அவருக்கு புரிஞ்சுது. எப்பேர்க்கொத்த
பத்தினிப் பொண்ணு எங்க நாட்டுலே வந்து சேர்ந்தான்னு சொல்லி அவளுக்குப்
பொங்கலிட்டுப் படையல் வச்சு, வடக்கே இமயமலைலேர்ந்து கல்லெடுத்துக்
கொண்ணாந்து, மஞ்சணமிட்டு, முழுக்காட்டிக் கோயில் கட்டிக் கொண்டாடினாரு.

நாட்டரசங்கோட்டை கண்ணாத்தா கோயில் கூட அந்த நினைப்புலே தாண்டா கட்டிருக்கு.

இந்தக் கதைதான் பத்துநாளைக்கி இராத்திரி முழுக்க விடிய விடியக் கூத்தா நடக்கும் . பார்க்கணும்னா
சினேகிதக் காரங்களோட நீயும் போய்ப் பாரேன்."

என்றாள் என் ஆயாள். முதன்முதல் சிறிய அகவையில் இதைக் கேட்ட எனக்கு, எங்கள்
ஆயாளின் மூக்கோசைப் பேச்சில், கதை சற்றும் விளங்கவில்லை தான். இருந்தாலும்
நண்பர்களோடு போனேன். அரசியற் கூத்தின் ஆரம்பக் காட்சி, திமிகிட.....திமிகிட என்ற
சத்தத்தோடு, இறைப்பாட்டு முழங்க, சந்திர சூரியர்களையும், மழையையும் வணங்கித்
தொடங்கியது.

புகார்நகர வீதியில் இந்திர விழாவுக்கு முன்னால், மன்னன் கிள்ளிவளவன் இரவு நேரத்தில்


நகரச் சோதனை செய்கிறான். கூடவே அவனுடைய அமைச்சன் அருகில் போகிறான்.

"மந்திரி! நாடெல்லாம் எப்படி இருக்கு? மாதம் மும்மாரி மழை பொழியுதா?"

"சோழ மகராசா ஆட்சியிலே மழைக்கு என்ன குறை ராசா, மழை நல்லாவே பொழியுது?"

"காவிரி, வெண்ணாறு, குடமுருட்டி, கொள்ளிடம், தென்பெண்ணை, பாலாறு, கால்வாய்கள்


எல்லாத்திலும் தண்ணீர் ஓடுதா?"

"மகாராசா, உங்க ஆட்சிலே கட்டிவச்ச குளம், ஏரி, கால்வாய், இதுக்கெல்லாம்


குறையேது, மகராசா? தண்ணி நல்லாவே ஓடுது இன்னம் பத்து வருசத்துக்கு பஞ்சம்கிறதே
நம்ம நாட்டுலே இருக்காது"

"சாலைகள்லே வழிப்போக்கர்கள் பயமில்லாமப் போக முடியுதா?"

"ராசா, உங்கள் படைதான் ஊரெங்கும் காவல் காக்குதே, பின்னெ மக்கள் பயப்படத்


தேவையில்லீங்களே? சாவடிகள் எல்லாத்துலேயும் அன்னதானம் ஒழுங்கா நடக்குது.
வணிகச் சாத்துகள் ஒழுங்காப் போய் வந்துக்கிட்டு இருக்கு."

"ஊரில் பிள்ளைகுட்டிகள் படிக்கிறதுக்கு கல்விச்சாலைகள், மருத்துவத்துக்கு ஆதூல


சாலைகள் எல்லாம் ஒழுங்கா நடக்குதா, இல்லை பணமில்லாமல் சிரமப் படுதா?"

"இல்லை, மகராசா, ஒரு குறையும் இல்லை, நல்ல காரியம் செய்யுறதுக்கு எவ்வளவோ


செல்வந்தர்கள் முன்வர்றாங்க. உங்களோட ஒரு ஆணை போதுமே, இதெல்லாம்
செய்யுறதுக்கு."

"அப்ப, இந்திர விழா எப்போ ஆரம்பிக்குது?"

நாடகத் தனமான இந்தத் தொடக்கக் காட்சிக்கு அப்புறம் கூத்துப் போய்க்கொண்டே


இருந்தது. இந்தக் காட்சி எந்தக் கூத்தானாலும் முதலில் இருந்திருக்கும் தான்; என்ன,
அரசனின் பேர் மட்டும் கொஞ்சம் மாறி யிருக்கும். (இதுவரை நான் பார்த்திருக்கும்
நாலைந்து கூத்துக்களில் கோவலன் - கண்ணகி கூத்தை முதலில் பார்தத ் தால்,
எனக்கு இப்படி ஓர் நினைவு ஆழப் பதிந்திருக்கிறது. அவ்வளவுதான்.)
அரசு - நாடு - ஆட்சி என்று எண்ணும் போது, கூத்தில் வந்த அந்த முதல்காட்சி
இன்றைக்கும் முகமையாக எனக்குத் தோற்றம் அளிக்கிறது. நாட்டை ஆளுதல் என்பதை
இப்படித்தான் எளிய முறையில் அன்றும் பார்த்தார்கள்; இன்றும் பார்க்கிறோம். ஆனால்
என்ன, உள்ளே இருக்கும் சூக்குமம் புரியாமல் பார்க்கிறோம்
.........

அன்றைய அரசனுக்கு மாறாய் இன்றைய முதலைமைச்சு என்று எண்ணிக் கொண்டு இனிப்


படியுங்கள்.

இது அது ஆகுற்ற கனவு இங்கே வெண்கலிப்பாவில் விரிந்து வருகிறது. (இய்>இய்து>இது)

(இய்யதாகுற்ற >இய்யதாகுத்த>யதார்த்த; இய்யதாகல் = இயல்வாகல் = யதார்த்தமாதல்)


...................................................................................
...............

இய்யதாகு முதலமைச்சன்

அரசொன்றில் முதலமைச்சாய் ஆவதெனில் எளிதாமோ?


அரசியலில் மற்றவரை அழிக்காமல் ஆளாமோ?

ஆளுவதும் பொருதுவதும் அடுத்தடுத்த நடைமுறைகள்;


நீளனைத்தும் செய்தபின்தான் நெடுங்கட்சித் தலையானேன்;

பார்ப்பதற்கோ நான்எளிமை; பலக்குறுத்தல்(1) அடிப்புறத்தில்;


வேர்த்துவிட மற்றவரை விரட்டுவதில் மேலாளன்;

தடந்தகை(2)யும், வழிதகை(3)யும், தரவுகளின் செயல்தகை(4)யும்


உடன்தெரிந்து உழுவதிலோ உள்ளார்ந்த கோடலன்(5)நான்;

எனைமிகுத்து எவனுமிங்கே அதிகாரி, அமைச்சனிலை;


எனைத்தவிர்த்து எவனுமிங்கே எழுந்திருக்க முடியாது;

எனைவிடுத்து ஒருபயலும் இடைநுழைந்து செயலாற்றான்;


எனைவிடுத்த எல்லோரும் தொண்டரெனப் படுவார்கள்;

இந்தநிலை கொண்டபின்தான் இந்நிலத்தில் முதலமைச்சாய்


எந்தவொரு தலைவனுமே இருந்திடுவான் இயல்பாக!

நானென்ன விதிவிலக்கா? நான்சிங்கச் சொப்பனம்தான்;


நான்விழிக்க மறந்தாலோ, நட்டாற்றில் கவிழுதற்கு,

இரண்டே நுணுத்தம்(6)தான்; இப்புலத்தில் இதுநியதி;


அரண்டுவதும் அரட்டுவதும் அன்றாடம் செய்பணிகள்;

அரசியலில் இதுவெல்லாம் அமைவதுதான் விளையாட்டு;


அரசியலில் அதனால்தான் அத்தனைபேர் நுழைகின்றார்;

முதலமைச்சாய் ஆனமுதல், மும்முனைப்பாய் வரும்தேர்தல்


விதப்புகளில் வென்றிடவே வினைகின்ற பரபரப்பை,

நானுலகில் இருக்குமட்டும் நாளும்தான் மறப்பேனோ?


நானிலத்தில் நல்லரசை நாடுவதும் அப்புறம்தான்;

இத்தனையும் சொன்னதனால் இவன்தன்னைப் பேணியென


வித்தகமாய் நினைப்பீர்கள்; இருந்தாலும் வெள்ளந்தி

நிலையாளன் நானல்லன்; நீளுலகில் தற்பேணல்


குலையாது கொள்ளுவதும் குமுகத்தில் தவறாமோ?
சொந்தநலம் பார்ப்பவனும், சூழ்தேர்வில் வெல்லுதற்காய்,
அந்தந்தப் போதுகளில் அளவாகச் செய்வதுதான்;

குமுகத்தில் அதுநலமா, கொள்கேடா எனக்கேட்டால்,


"அமைவதெலாம் ஊழ்வினையால் ஆழ்த்துவந்து உருட்டாதோ?"

"அரசியலில் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆகாதோ?"


அரசியலின் அடிப்படையே இதுவறிந்த பின்னேதான்

"கல்லென்ற நெஞ்சமிது கனியாது" எனநீவீர்


சொல்லிடவே எழுந்தாலும் சொல்லுவது என்கடமை;

நான்கடுசு; இருந்தாலும் நான்மனிதன்; எனக்குள்ளும்


தேன்சுரக்கும்; சிலபோது திருவினைகள் செய்வேன்தான்;

நீர்வளமா? வேளாண்மை? மரம்வளர்ப்பா? கட்டுமானச்


சீரமைப்பா? செழுங்கல்வி? மருத்துவமா? சிறுசிறிதாய்

அரசினுடை நிர்வாக அமைப்புச்சீர் நடவடிக்கை?


உரசிவிட என்தடங்கள் ஊன்றிடுவேன்; வியந்தீரோ?

இப்படியாய் இருகலவை இயன்றவன்தான் முதலமைச்சன்;


தப்படியைப் போடாமல், தடுமாற்றம் அடையாமல்

செப்புவது ஐந்தாண்டில் செய்யநினைக் கும்செயல்கள்;


இப்புலத்தில் இவைசெய்தால் எம்பருவம் பத்தாண்டு.

நீர்வளம்

வளநாட்டை வானத்தின் மேலிருந்து பார்க்கும்போழ்,


அளவைந்தில் ஒருபாகம் அம்மெனவே சொல்வகையில்

நீர்வளத்தைக் கூட்டுவதே நெடுநாளாய் என்கனவு;


ஆர்வலர்கள் சேர்ந்துவரின் அத்தனையும் மெய்யாகும்;

ஆறோடும் படுகைகளில் ஆங்காங்கே தடுப்பணைகள்,


நீர்கசியும் குட்டைகளும், நிலைப்பதற்கு வழிசெய்வேன்;

தடம் அகல்ந்த கொள்ளிடத்தில், தண்பொருநை, வைகையினில்,


இடம்போட்டு நிலமகழும் ஏமாற்றை நிறுத்திடுவேன்;

பாசனத்திற் கேற்றபடிப் பண்ணுதற்கும் வழிசெய்வேன்;


பாசனங்கள் ஒருங்கிணைக்க வாய்ப்புக்கள் பெருக்கிடுவேன்;

நிலத்தடிநீர் குறையாமல் நிலைப்பதற்கும் முறைசெய்வேன்;


சிலதுளிகள் எனச்சேர்த்தால் பலவெள்ளம் பெருக்கெடுக்கும்;

சேமுறுத்திய குடிநீரும்,
சாக்கடை மாசெடுப்பும்:

குடிப்பதற்கு ஒழுங்கான குடிநீரே இல்லாமல்


தடுக்கின்ற மாசொழித்து, தாகத்தைப் போக்கிடுவேன்.

பருநிலத்தில் சேமுற்ற குடிநீரை(7)ப் பகிர்ந்தளித்து


தருவதற்குத் தூம்புகளை(8)த் தடம்பதிப்பேன்; அதனோடு

பாதாளச் சாக்கடைகள் பள்ளுதற்கும் வழிசெய்வேன்;


ஆதாரச் சென்னையிலோ அந்நீரைச் சேகரித்து,
மூன்றாட்டாய் இழுத்துவைத்து(9) முன்னாலே விழுத்துறுத்தி(10),
சேர்ந்தாட்டு உயிர்வேதிச் செய்முறையில்(11) மாசெடுத்து,

எதிரூட்டோ(12), மின்னிளக்கி எடுவித்தோ(13), துளித்தெடுத்தோ(14),


விதவிதமாய் முயன்றிடுவேன்; வேண்டுவது நந்நீரே!

வேளாண்மை / மர வளர்ப்பு:

மாநிலத்தின் நிலப்பரப்பில் மூன்றிலொன்று காடானால்,


நானிலத்தில் நமைவெல்ல யாருமிங்கே வரமாட்டார்;

மேற்குமலைச் சரிவுகளில் மிகுமரங்கள் நட்டிடுவேன்;


தாக்குமந்தக் கருவைமரத்(15) தடவேரைக் கில்லிடுவேன்;

பார்க்கின்ற இடமெல்லாம் பரம்பரையாய் வருமரங்கள்


வேர்கொள்ள விளைத்திடுவேன்; வியன்காடு பெருகட்டும்.

தாளடியில் நெல்லின்றி தரம்குறையாக் கோதுமையை(16)


நீள்பயிராய் ஆக்கிடுவேன்; நீர்த்தேவை குறையாதோ?

எங்கெல்லாம் புழுதி எடுத்தெறிந்து பறக்கிறதோ(17),


அங்கெல்லாம் அதைத்தடுத்து அடக்கின்ற வகையினிலே

மண்வளங்கள் பெருக்கிடுவேன்; மரம்புதர்கள், செடிகொடிகள்


நண்ணுதற்கு வழிசெய்வேன். நானிலம் பின் செழிக்காதோ?

அடிக் கட்டுமானம்(18):

அடிக்கட்டு மானத்தில் அதிசிறந்த மாநிலமாய்


கொடிகட்டிப் பறப்பதற்கு கூட்டாகச் செயல்முடிப்பேன்.

நகர்ச்சாலை, நெடுஞ்சாலை, நாலிரண்டில் ஒழுங்கை(19)யென


அகலிட்டுச் செய்தால்தான் அடர்துரக்கு(20) இருக்காது;

மூன்றுமணி நேரத்தில் சென்னைமுதல் திருச்சிவரை;


தாண்டிஒரு மணிநேரம் தடம்பெயர்ந்தால் மதுரைநகர்;

ஏழுமணி நேரத்தில் எங்குமரி முனைசெல்ல,


ஆலநெடுஞ் சாலைகளை அமைத்திடவே வழிவகுப்பேன்;

குமுகத்தில் எங்கிருந்தும் கூடுதொலைத் தொடர்புகொள


குமுனேற்ற ஏந்துகளை(21) கொண்டுவந்து குவித்திடுவேன்

கல்வி:

வதிகின்ற தமிழ்நாட்டில் வாழுகின்ற இளஞ்சிறுவர்


பதினாறு அகவுவரை இனிப்படிப்பர் தமிழில்தான்;

ஆனாலும் தெளிவாக ஆங்கிலத்தில் ஆளுதற்கு


வேணுகின்ற வழிமுறைகள் விரிவாகச் செய்திடுவேன்;

மாநிலத்துப் பள்ளியெலாம், மடிக்குழையோ(22), மற்றதுவோ,


மாநிலத்தில் ஒருபாடத் திட்டத்தில் மாற்றிடுவேன்

எந்தவொரு பிள்ளையுமே ஈரயிர மாத்திரி(23)க்குள்


அண்டிப் படிப்பதற்கு ஆவனதாய்ச் செய்திடுவேன்;

மாநிலத்தின் வரும்படியில் ஆறே விழுக்காடு


தானாக்கி கல்விக்கே தரமுயர வழிசெய்வேன்.

கல்லூரிப் படிச்செலவு கடுசாகிப் போனாலும்


பள்ளிப் படிச்செலவு பாடாக விடமாட்டேன்.

பொதுவிடத்தில் தமிழ்புழங்க புதுஆணை பிறப்பிப்பேன்;


எதுவேனும் கட்டுறுத்தல்(24) தேவையெனில் இயற்றிடுவேன்;

மருத்துவம்:

அடிப்படையாய் மருத்துவங்கள் அய்ந்தயிர மாத்திரி(25)யில்


தொடுப்பதற்கு வழிசெய்வேன்; தொண்டார்வப் படைபோல

அடுக்கடுக்காய் மருத்துவர்கள் அமைவதற்கும் வழிசெய்வேன்;


இடுக்கண்கள் எழுகாமல் இதன்செலவை ஏற்றிடுவேன்.

அரசு நிர்வாகம்:

அன்றாட வாழ்க்கையிலே அரசின் குறுக்கீடு


குன்றுதற்கு வழிசெய்வேன்; கூடிவரும் துறைகளெலாம்

குழுமாக்கிப்(26) பணியாற்ற கூடவொரு முயற்சிசெய்வேன்


பழுவான பணியாளர் பத்திலொரு பங்காக்கி

அரசின் பணச்சுமையை அதிரடியாய்க் குறைத்திடுவேன்;


அரசுத் துறைகளெலாம் ஆங்காங்கே நகர்மாற்றி

சென்னைச் சுமைகுறைப்பேன்(27); சீரமைப்பை ஒழுங்குசெய்வேன்;


சென்னையொரு அரசாளும் நகரென்று அமையாது;

சட்டத்தின் பேரவையும் ஆளுநரின் இருக்கைமட்டும்


இட்டதுபோல் சென்னையிலே இருந்திட்டால் தாழ்வில்லை;

சென்னையெனும் நகரினிமேல் வணிகத்தால் பெயர்பெறட்டும்;


சென்னைக்கு வளர்ச்சியினி அரசியலால் வாராது;

அரசுச் சீரமைப்பு:

அறுபத்தைந் தகவையின்பின் யாருமினித் தேர்தலிலே


உறுவதற்கு முடியாமல் ஓய்வுபெற வழிசெய்வேன்;

இனித்தேர்தல் நிற்பவர்கள் ஈரைந்து ஆண்டின்மேல்(28)


முனைந்துவர முடியாமல் போவதற்கும் சட்டம்வரும்.

..........................

திடீரென்று நான் விழித்தேன் ......

என் புயவுக்(29) கனவு வியந்தோடியது.

இதுவரைக்கும் வந்திருந்த கனவெங்கே நீண்டிருக்கும்?


இதன்நிகழ்ப்பு யாரறிவார்? என்றாலும் எண்ணுதற்கு

வாய்ப்பளித்த கவியரங்கத் தலைவருக்கு என்வணக்கம்;


நோய்ப்பட்ட(30) எனைத்தூண்டி துவளாமல் சிலசொல்லிப்

பங்கெடுக்க வைத்த அவர் பண்பிற்கு என்நன்றி!


இங்குற்ற பாவலர்கள் எத்தனையோ கனவுகளை
சொல்லி நெகிழவைத்த சுற்றிடையே என்றனையும்
புல்லி யணைத்ததற்குப் புலனறிந்து வணங்குகிறேன்;

கொள்ளுவதோ, கூறிட்டுத் தள்ளுவதோ, மாறாக


விள்ளுவதோ உங்களுடை வேட்பு.

அன்புடன்,
இராம.கி.

1. பலக்குறுத்தல் = complication
2. தடந்தகை = strategy
3. வழிதகை = tactics
4. செயல்தகை = operationality
5. கோடலன்>கௌடில்யன் = சாணக்கியன்
6. நுணுத்தம் = minute
7. சேமுற்ற குடிநீர் = safe drinking water
8. தூம்பு = tube
9. மூன்றாட்டு இழுத்துவைப்பு = tertiary treatment
10. விழுத்துறுத்தல் = filtration
11. உயிர்வேதிச் செய்ம்முறை = biochemical process
12. எதிர் ஊட்டு, எதிர் ஊடுகை = reverse osmosis
13. மின்னிளக்கி எடுவித்தல் = electro - dialysis
14. துளித்தெடுத்தல் = distillation
15. கருவை மரம்; இங்கு வேலிக்கருவை = Julia Flora; மேற்கு ஆத்திரேலியாவில் இருந்து
கொண்டுவந்த இந்தமரம் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் மரபு சார்ந்த மரங்களை
வளரவிடாமல் தான்வளர்ந்து சீரழிக்கிறது. இதை ஒழித்தால் தான் மரவளம் திரும்பக்
கிடைக்கும்.
16. தாளடிக்குக் கோதுமைப் பயிரீடு என்பது தஞ்சைத் தரணியில் இப்பொழுது
சொல்லப்பட்டுவரும் பரிந்துரை. தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் காரணத்தால் இது
நல்லது என்று வேளாணியலார் சொல்லுகிறார்கள்.
17. நீர்வளம் குறைந்த காரணத்தால் புழுதி பறக்கிறது. தமிழ்நாடு சிறக்க இது
மாறவேண்டும். செடி,கொடி,புதர்கள் மண்டினால், மண்வளம் கூடி இந்தநிலை மாறும்.
18. அடிக்கட்டுமானம் = infrastructure
19. நாலிரண்டு ஒழுங்கை = எட்டு ஒழுங்கை = eight lane
20. அடர் துரக்கு = heavy traffic
21. குமுனேற்ற ஏந்துகள் = communication facilities.
22. மடிக்குழை = matriculation
23. ஈர் அயிர மாத்திரி = 2 kilo meter
24. கட்டுறுத்தல் = control
25. அய்ந்து அயிர மாத்திரி = 5 kilo meter
26. குழுமாக்கல் = corporatization; this does not mean privatization
27. அரசுத் துறைகள் மாநிலத்தின் மற்றநகர்களுக்கு இடம் மாற்றப் பட்டு, சென்னைநகர்
அரசாங்கநகர் என்ற பெயர் மாறவேண்டும். நெதர்லாந்தில் இப்படித்தான் நடக்கிறது.
ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு நகரில் இருக்கும். நுட்பியல் பெருகிப் போன இந்தக்
காலத்தில் இது எந்த வாய்ப்புக் குறைச்சலையும் ஏற்படுத்தாது. ஆனால் அதிகாரம் என்பது
அகலப் படுத்தப்படும். சென்னைநகர் அளவிற்கு மீறி வளராது.
28. பத்தாண்டிற்கு மேல் யாரும் அரசில் பங்கு பெறமுடியாது.
29. புயவு = power
30. சிலநாட்களாய் கணியின்முன் அமர்ந்து தட்டச்சுவது சரவலாய் இருக்கிறது.
தலைச்சுற்று, கிறுகிறுப்பு போன்றவை கூடுதலாய் இருக்கின்றன. சிந்தனை நகர
மறுக்கிறது. இருந்தாலும் முனைவர் சுவாமிநாதனின் தூண்டுதல் இந்தப் பாவரங்கில்
பங்குகொள்ள வைத்தது.
=================

கதைசொல்லி, கதைதந்த கருத்தைச் சொல்லி


கண்ணாத்தா கண்ணகியின் வரவு சொல்லி
பதவிக்கு முதல்வரென வந்து செய்யும்
பணியெல்லாம் கற்பனையூர் தனில் ந டக்கும்
விதமாக விரும்பும்வகை எடுத்துச் சொல்லி
வித்தகமாய் புதுச்சொற்கள் விவரம் சொல்லி
இதமாக இப்படித்தான் வேண்டும் என்றே
எண்ணிடவே இராம கி கவிதை கண்டோம்

இயல்பாகும் முதலமைச்சர் கடுமை யாக


இருந்தாலும், அணைகட்டி, நீரைத் தேக்கி
செயல் ஊக்கி, கல்விக்கு தேவை எல்லாம்
சிறப்பாக்கி, சாலைகளை விரிவு செய்து
துயர்தீர மருத்துவத்தைத் துரித மாக்கி
தூய்மையுடன் அரசு நிர் வாகம் மாற
அயராது தாமுழைத்து, புதுமை செய்யும்
ஆர்வத்தை விளக்கமாய் எடுத்துச் சொன்னார்

தலைச்சுற்று, கிறுகிறுப்பு, கணினி முன்னே


தட்டச்சுச் செய்கையிலே சரவல், எங்கோ
நிலைப்பட்டு நிற்கின்ற சிந்தை எல்லாம்
நிம்மதியைக் குலைத்தாலும், தேகம் சோர்வின்
வலைப்பட்டுப் போனாலும் தலைவர் சொன்ன
வார்த்தைக்கு மதிப்பளித்துக் கவிய ரங்கில்
பலப்பட்ட கவிதையினை நல்கி யுள்ள
பாங்கதனை மகிழ்வோடு போற்றுகின்றோம்

இலந்தை
=============
இராமகியை முதல்வரென எம்மவர் ஏற்பாரேல்
வராதோ 'இராம'ராஜ்யம் ? வாழ்வுவளம் பெருகாதோ?

பசுபதி
==============
சந்த வசந்தக் கவியரங்கம் 14

கவிஞர் இராம. கி. க்கு பாராட்டு

கோவலன் கூத்தோடு நாட்டு நடைமுறை இருக்க வேண்டிய


முறையை எடுத்துரைத்தீர். நல்ல பல தமிழ்சொற்களையும்
கொடுத்தீர். தெளிவான சிந்தனை. அருமையான நடை.

கல்வி நிலவளம் நீர்வளம் பெருகி


மெல்லவோர் மாற்றம் விளையவே நல்லவழி
சமைத்தீரே நானுமிங்கு வேண்டிடுவேன் ஆண்டவனை
அமைச்சராக உம்மை ஆக்க.

நல்ல கவிதை கொடுத்த கவிஞர் இராம.கி. க்கு வாழ்த்துகள், பாராட்டுகள்.

கவிஞர் வீர ராகவனுக்கு அழைப்பு

அடுத்து வரும் கவிஞர் வீர ராகவன்

சென்னையில் நங்கநல்லூர் வாசி.


நல்ல நினைவாற்றலும் குரல் வளமும் வாய்ந்தவர். சமுதாயத்திற்கும் தமிழ்
இலக்கியத்திற்கும்
முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக தொண்டு புரிந்து வரும் கவிஞர்.
இருநூறுக்கும் மேலான கவிதைகள், மூன்று நாடகங்கள், ஆறு வானொலி நிகழ்ச்சிகள்
படைத்து,சில நாடகங்களின் நடித்து, பல பரிசுகள் பெற்று, "இலக்கிய காவலர்",
"பாரதி புரஸ்கார்"எனும் பட்டங்கள் பெற்றவர். இவருடைய பல கவிதைகள் திறனாய்வு
செய்யப் பட்டுள்ளன.பெட்ரோல் பம்ப் ஊழியர்கள், விற்பனை ஊழியர்கள், மாணவர்கள்
மற்றும் முதல் நிலையில் உள்ள இளைஞர்களுக்கு சுய மேம்பாடு, மற்றும் திறன் வளர்த்தல்
பயிலரங்குகள் நடத்தி வருகிறார்.

கவியரங்கத்துல இவரோட தலைப்பு என்ன ? 'மிருகமாக நானிருந்தால்'

என்னது ? மிருகமாவா?

இதுல ஏதாவது வசதி உண்டா?

பேருந்தில் இடமும் கிடைக்கும்; தலைவராகும்


பேறும் கிடைக்குமே; தீவனத்து ஊழலாலே
ஊறும் வராதே; எளிதாமே வாக்குசின்னமும்;
ஊர்வாக்கு எல்லாம் உமக்கே.

ஏதாவது பிரச்னை இருக்குமோ?

பாதி மனிதன் பாதி மிருகம்


பாதிதூணி லிருந்து கிழித்த சேதிகளே
பீதி கொடுக்கும்; முழுசாய் மிருகமானால்
மீதி எதுவும் மிஞ்சுமோ?

என்ன சொல்லப் போகிறாரோ?

கவிஞர் வீரராகவரே வாரும், வந்து உம் கவிதையைக் கொடும்.

****************************************************
பார்வையாளர் 1: சந்த வசந்தக் கவியரங்கக் கவிதைகளை
கவிஞர்களை விட்டு வாசிக்க சொல்லி ஒலிநாடாவில் பதிய
வைத்து இணையத்தில் போடலாம்னு முனைவர் கண்ணன்
யோசனை சொல்லியிருக்காரே..

பார்வையாளர் 2: நல்ல யோசனைதான். தாரளமா பண்ணலாம்.


ஆனால் 'தலிவர்' தானும் கவிதைனு ஏதோ ஒண்ணு
படிக்கற வேதனையப் பொறுத்துக்கணுமேன்னு நினைச்சாதான்
வயத்தைக் கலக்கறது....
=======
29.

***************************************************
Santhavasantham@yahoogroups.com
SVKA. - 14. Vote of Thanks
சந்த வசந்தக் கவியரங்கம் - 14. தலைவர் நன்றியுரை

இந்தக் கவியரங்கில் 22 கவிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


23 வதாக 'மிருகமாக நானிருந்தால்' என்ற தலைப்பில் வர வேண்டிய
கவிஞர் வீரராகவனின் கவிதை தவிர்க்க முடியாத காரணங்களால் வராமல்
போய்விட்டதும், நேரம் இருந்தால் கலந்து கொள்வதாய்
வாக்களித்திருந்த சில கவிஞர்கள் வரமுடியாமல் போனதும் வருத்தமே.

இதில் பங்கு கொண்டு சிறப்பித்த அனைத்து கவிஞர்களுக்கும், தேவைப்பட்ட போது


உதவிகள் செய்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அடுத்து வரும் கவியரங்கம் கவிஞர் செளந்தர் தலைமையில் நவம்பர் 15 முதல்


தொடங்குகிறது. அதிலும் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டிக் கொண்டு
விடை பெறுகிறேன். கவிதைகளைப் படித்து ஒவ்வொரு கவிதைக்கும் தங்கள்
பாராட்டு/விமரிசனங்களை எழுதுங்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
அப்படி எழுதுவது கவிஞர்களுக்கு ஒரு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தரும்
என்பதோடு, தங்கள் படைப்பு படிக்கப்படாமலே போய்விட்டதோ, தான் செலவழித்த
நேரமும் முயற்சியும் வீணோ என்ற ஐயத்தை உண்டாக்குவதுடன், 'என்னத்தை
எழுதி என்ன பயன்' என்கிற மனச்சோர்வையும் தராமல் இருக்கும்.

வணக்கம்.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

******************************************************************
பார்வையாளர் 1: அப்பாடா...ஒரு வழியா முடிச்சாரு..இன்னும் போயிக்கிட்டே
இருக்குமோனு பயந்தேன்... ஜார்ஜ் புஷ், டோனி ப்ளேர், வீரப்பன், ராமதாஸ்,
காடுவெட்டி குரு எல்லாம் இதுல பங்கேற்க வரதா இருந்தாங்களாமே..

பார்வையாளர் 2: நல்ல வேளை ஒலிவாங்கியைக் கழட்டி, கதவை உடைச்சு கூட்டம்


வெளிய போச்சு...இல்லாட்டி நாம் பயித்தியம் பிடிச்சு பாயை சுரண்டிக்கிட்டு
இருப்போம் இப்ப...ஆமா இத்தனை கவிஞர்ல யாருக்கு உன் ஓட்டு?

பார்வையாளர் 1: வீர ராகவனுக்குதான் ! மத்தவங்க வெளியில் போக வழி தெரியாம


முழிச்சிட்டு இருக்கறச்சே, எப்படி மாயமா மறைஞ்சு தப்பிட்டார் பாரு...கிளம்பு..
போகலாம்.. வயித்துக்கு கொஞ்சம் போட்டுக்கிட்டு அடுத்த கவியரங்கத்துல பார்க்கலாம்.

~*~o0O0o~*~

You might also like