Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

மலேசிய ,சிலாங்கூர் மாநில தலைமையாசிரியர் மன்றமும்

கனடா, உதயன் வார இதழும் இணைந்து படைக்கும்


மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான
நாவன்மை நிகழ்ச்சி
2023 அரங்கம் 1

1. மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் இந்நாவன்மை நிகழ்ச்சி இயங்கலை


வழி நடத்தப்படும். தேர்நதெ
் டுக்கப்பட்ட ஆறு ஆற்றல்மிகு மாணவர்கள் தங்கள்
நாவன்மைத் திறனைக் காட்டுவர்.
2. இந்நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று மலேசிய நேரப்படி
இரவு 7:00 மணிக்கு நடைபெறும். மாணவர்கள் மாலை 6:30 மணிக்கெல்லாம் பகிர்வு
செய்யப்படும் இயங்கலை இணைப்பில் இணைந்து தயார்நிலையில் இருக்க வேண்டும்.
3. கொடுக்கப்படும் தலைப்பில் மாணவர்கள் 5 – 6 நிமிடம் வரை உரையாட வேண்டும்.
4. மாணவர்கள் தங்களின் உரையாடலை மனனம் செய்து படைக்க வேண்டும். எழுதியதைப்
பார்த்து வாசிக்கக் கூடாது.
5. இந்நிகழ்ச்சி மலேசியத் தமிழ்ப்பள்ளி 6 -ஆண்டு மாணவர்களின் குரலாக அமையும்.
இந்நாவன்மை நிகழ்ச்சி ஒரு போட்டி நிகழ்ச்சியன்று.மாணவர்களின் பேச்சுத் திறனை
வெளிப்படுத்த அமைக்கப்பட்ட ஒரு களமாகும்.
6. பங்கேற்கும் மாணவர்களை இயங்கலை நிகழ்ச்சியில் இணைய அப்பள்ளியின்
தலைமையாசிரியர்,ஆசிரியர், பெற்றோர்களின் துணையுடன் தயார் செய்தல் வேண்டும்.
7. தேர்வு செய்யப்படும் பள்ளி இந்த இயங்கலை நாவன்மை நிகழ்ச்சியின்
நெறியாளர்களான மாணவர்களைத் தயார் செய்ய வேண்டும்.
8. மேலும் இந்நிகழ்ச்சியை விளம்பரம் செய்ய மின்பதாகையைத் தேர்வு செய்யப்படும்
பள்ளியின் மாணவர்களே தயார் செய்தல் வேண்டும். இதனை பொறுப்பேற்கும்
பள்ளியின் தலைமையாசிரியர் புலனத்தில் பகிர்ந்து உதவுதல் வேண்டும்.
9. முழுமையாக மாணவர்களைக் கொண்டு நடத்தப்படும் இந்நாவன்மை நிகழ்ச்சி பற்றிய
செய்திகள் கனடா , உதயன் வார இதழில் வெளிவரும். மேலும் இந்நிகழ்ச்சி பற்றிய
செய்திகள் மலேசிய நாளிதழிலும் வெளியிடப்படும்.இதன் பொறுப்பாளர்
ஊடகவியலாளர் ஐயா நக்கீரன் அவர்கள்.
10. நாவன்மை நிகழ்வில் பங்கேற்கும் அனைத்து
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்,
தலைமையாசிரியர்களுக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.

நாவன்மை
பாகம் 2
அரங்கம் 1

திகதி : 25.6.2023
நாள் : ஞாயிறு
தலைப்பு : மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் சமூக
வலைதளங்கள் பெரிதும் உதவுகின்றன.

You might also like