தமிழ்மொழி ஆண்டு 4

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 9

தேசிய வகை தம்புசாமிப்பிள்ளை தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர்

SJK(T) THAMBOOSAMY PILLAI,KUALA LUMPUR

கல்வித் தவணை இறுதித் தேர்வு 2022/2023
UJIAN AKHIR SESI AKADEMIK (UASA) 2022/2023
தமிழ்மொழி / Bahasa Tamil ஆண்டு 4
நேரம் : 1 மணி 15 நிமிடம்

பெயர் : _______________ வகுப்பு : ____________

பிரிவு அ : செய்யுளும் மொழியணி, இலக்கணம் (10 புள்ளிகள்)

1. கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டச் சொல் காட்டும் வேற்றுமை
உருபைத் தெரிவு செய்க.

முகிலன் தம்பியை விளையாட அழைத்தான்.

A. மூன்றாம் வேற்றுமை உருபு

B. இரண்டாம் வேற்றுமை உருபு

C. நான்காம் வேற்றுமை உருபு

D. முதலாம் வேற்றுமை உருபு

2. கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு

செய்க.

A. அந்தப் பையன் என் நண்பன்.

B. நீ நேற்று எங்கு சென்றாய் ?

C. காவியா பூனையை துரத்தினாள்.

D. சுமதி அம்மாவுக்கு பரிசு கொடுத்தாள்.

1
3. வாக்கியத்தில் விடுபட்டச் சரியான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.

குமரன் கடுமையான காய்ச்சலினால் பள்ளிக்குச் செல்லவில்லை.

____________________ அவன் பாடங்களைச் செய்து விட்டான்.

A. ஆகவே

B. ஆதலால்

C. ஆனாலும்

D. அதற்காக

4. சரியான நிறுத்தற்குறிகளைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A. பொறுமை என்பது பெண்களுக்கு மட்டுமன்று ; ஆண்களுக்கும்

தேவை ?
B. வாழ்வு இரு கூறுகளைக் கொண்டது : ஒன்று உயிர் வாழ்வு,

மற்றொன்று உடல் வாழ்வு.

C. தொல்காப்பியம் நம் பழந்தமிழ் நூலாகும்.

D. ‘அப்பா, நீங்கள் கூறியபடியே நான் செய்கிறேன்,’ என்றான் கவின்.

5. கேட்கும்படி + பணித்தார் = கேட்கும்படி பணித்தார்

எழுதும்படி + சொன்னார் = எழுதும்படி சொன்னார்

மேற்கண்ட சொற்குவியல் காட்டும் வலிமிகா விதியைத் தெரிவு செய்க.

2
A. எது என்னும் வினாச் சொல்லுக்குப்பின் வலிமிகாது

B. ‘படி’ சேர்ந்துவரும் சொல்லுக்குப்பின் வலிமிகாது

C. சில,பல என்பனவற்றுக்குப்பின் வலிமிகாது

D. அவை,இவை,எவை என்பனவற்றுக்குப் பின் வலிமிகாது

6. கீழ்க்காண்பனவற்றுள் பிழையான இணை எது?

A. உலகநீதி உலகநாத பண்டிதர்

A
B. வெற்றி வேற்கை அதிவீரராம பாண்டியன்

C. நாலடியார் சமண முனிவர்

D. மூதுரை பாரதியார்

7. கீழ்க்காணும் திருக்குறளில் கருமையாக்கப்பட்டச் சொல்லின் பொருளைத்

தெரிவு செய்க.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும் .

A. வானத்தில்

B. உலகத்தில்

C. வானுலகில்

D. வீட்டில்

3
8. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மூதுரையின் உவமையை விளக்கும் படத்தைத்

தெரிவு செய்க.

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

என்று தருங்கொ லெனவேண்டா - நின்று

தளரா வளர்த்தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தாந்தருத லால்.

A. C.

B. D.

9. நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

மேற்கண்ட வரி, நல்வழியின் இறுதி அடியாகும். நல்வழியின் மூன்றாவது

வரியைத் தெரிவு செய்க.

A. ஆனமுதலில் அதிகஞ் செலவானால்

B. நல்லார் எனதாம் நனிவிரும்பிக் கொண்டாரை

C. நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு

D. எல்லார்க்கும் கள்ளனாய் 4ஏழ்பிறப்புந் தீயனாய்

10. கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

சிவாவும் சக்தியும் சிறுவயதிலிருந்தே இணைப்பிரியா

நண்பர்கள். வயது அறுபதைக் கடந்த பின்னும்
சிறுவயதில் நடந்த பசுமையான நினைவுகள் இன்னும்
அவர்கள் மனத்திலிருந்து அழியவில்லை.

A. நகமும் சதையும் போல

B. மலரும் மணமும் போல

C. காட்டுத் தீ போல

D. சிலை மேல் எழுத்துப் போல

பிரிவு ஆ :கருத்துணர்தல் (10 புள்ளிகள்)

கேள்வி 1: கீழ்க்காணும் பாடல் பகுதியை வாசித்துக் கேள்விகளுக்குச்
சரியான பதிலைத் தெரிவு செய்க. (5 புள்ளிகள்)

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே !

நம் நாடு எனும் தோட்டத்திலே,

நாளை மலரும் முல்லைகளே!

பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்;

அறிவூட்டும் தந்தை நல்வழிகாட்டும் தலைவன்;

துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று;

உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று !

5
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே !

கிளி போல பேசு இளங்குயில் போல பாடு

மலர் போல சிரித்து நீ குறள் போல வாழு

மனத்தோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்

மெய்யான அன்பே தெய்வீகமாகும்.

இயற்றியவர் : கவிஞர் வாலி

1. இப்பாடலை இயற்றியவர் யார் ? (1 புள்ளி)

_________________________________________________________________
_________________________________________________________________

2. இப்பாடல் யாருக்காகப் பாடப்பட்டது ? (1 புள்ளி)

_________________________________________________________________
_________________________________________________________________

3. பெற்றோர்கள் பிள்ளைகளை எவ்வாறு அரவணைக்கின்றனர் ? (2 புள்ளி )

_________________________________________________________________
_________________________________________________________________

_________________________________________________________________

4. உண்மையான அன்பு எப்படிப்பட்டது ? (1 புள்ளி )

_________________________________________________________________
_________________________________________________________________

6
கேள்வி 2 :

கீழே கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற பதிலை எழுதுக. (5 புள்ளி )

சீருடை முகாமில் கீழே விழுந்து உன் நண்பருக்குக் காலில் காயம்

ஏற்பட்டுவிட்டது. அச்சூழலில் நீ என்ன செய்வாய் ?

________________________________________________________________

பிரிவு இ (10 புள்ளிகள்)

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளினால் ஏற்படும்
நன்மைகளை விவரித்து ஒரு பத்தியில் எழுதுக.

7
.________________________________________________________________

பிரிவு ஈ (20 புள்ளிகள்)

கொடுக்கப்பட்டுள்ள கட்டுரை தலைப்புக்களில் ஒன்றைத் தெரிவு செய்து 50
சொற்களுக்கும் குறையாமல் கட்டுரையை எழுதுக.

8
1. நான் ஓர் உணவுத் தட்டு

2. உன் பிறந்தநாள் விழாவுக்கு உன் மாமாவை அழைக்க ஒரு கடிதம் எழுதுக.

- முற்றும் -

தயாரித்தவர் சரிப்பார்த்தவர் உறுதிப்படுத்தியவர்

___________ ____________ ________________
திருமதி.ஏ.நிர்மலா நிர்வாகத் துணைத் தலைமையாசிரியர்
பாட ஆசிரியர் தலைமையாசிரியர்

You might also like