விரும்பிடு விஞ்ஞானம்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

விரும்பிடு விஞ்ஞானம் !

உலகத்தை ஆழ்வது விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்றால் அது மிகையாகாது. விஞ்ஞானத்தின்


விந்தையால் உலகம் சுருங்கி கைக்குள் அடங்கி விட்டது. நாளுக்கு நாள் விஞ்ஞானத்தின் விந்தை
வளர்ச்சி கண்டு வருகின்றது.விஞ்ஞானத்தின் விந்தையால் மனித வாழ்வியலானது எண்ணற்ற
மாற்றங்களும்⸴ முன்னேற்றங்களும் அடைந்துள்ளன. சாத்தியமற்றது எனக் கருதப்பட்டது எல்லாம் இன்று
சாத்தியமாகி வருகின்றன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே விஞ்ஞானம் வளர ஆரம்பித்து விட்டது. கைவினை வரலாறே


விஞ்ஞானத்தின் வரலாறாக வளர ஆரம்பித்தது எனலாம்.பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு
தீக்கற்களால் ஆக்கப்பட்ட கருவியே முதன் முதலில் உருவாக்கப்பட்ட கருவியாகும். கற்களாலும்⸴
எலும்புகளால் கருவிகள் வடிவமைக்கப்பட்டன.

குறிப்பாக ஆயுதங்கள் எலும்புகளாலும்⸴ கொம்புகளாலுமே வடிவமைக்கப்பட்டன. விஞ்ஞான


வளர்ச்சியானது கிரேக்கர் கால விஞ்ஞானம்⸴ சீனர் கால விஞ்ஞானம்⸴ அரேபியர் கால விஞ்ஞானம்⸴
மத்தியகால விஞ்ஞானம்⸴ மறுமலர்ச்சிக் கால விஞ்ஞானம்⸴ தற்கால விஞ்ஞானம் எனப் பல வரலாற்று
் ியை காட்டி வருகின்றது.
வளர்ச்சி காலகட்டங்களை கண்டு இன்றுவரை பிரமிக்கத்தக்க வளர்சச

இன்றைய விஞ்ஞானமும்⸴ தொழில்நுட்பமும் முன்புகாலத்தில் இல்லாத வகையில்


முன்னேறியுள்ளன. கல்லை உரசித் தீயைக் கண்டுபிடித்ததிலிருந்து ஆரம்பமான மனிதனின்
கண்டுபிடிப்புகள் இன்று வானளாவிய ரீதியில் வளர்நது
் மண்ணுக்கும்⸴ விண்ணுக்கும் இடையில்
விந்தைகள் புரிகின்றன. கல்வித் துறையில் விஞ்ஞானத்தின் பங்கு அளப்பரியதாகும் . நவீன கற்பித்தல்
யாவும் விஞ்ஞானத்தின் விந்தைகளேயாகும்.

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் கையடக்கத் தொலைபேசி⸴ கணினி⸴ வானொலி போன்ற


கண்டுபிடிப்புகள் கல்வித் துறைக்கு பெரிதும் பயனளிக்கின்றன. இவற்றின் மூலம் நவீன கல்வி
முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர்களின் அறிவாற்றல் விருத்தியடையச்
செய்யப்படுகின்றது.

மருத்துவத் துறையில் இதன் பங்களிப்பானது போற்றுதற்குரியதாகும். குணப்படுத்த முடியாத


நோய்களைக் குணப்படுத்தக் கூடிய மருத்துவ கருவிகள்⸴ உபகரணங்கள்⸴ சிகிச்சை முறைகள் போன்றன
உதவுகின்றன.விண்வெளிப் பயணங்களும்⸴ கோள்கள் வளிமண்டலங்கள் பற்றிய ஆராய்சச
் ிகளும்
விஞ்ஞானத்தின் விந்தைகளாகும். இயற்கை அழிவுகளை முன்கூட்டியே தடுத்து உயிர்களை
பாதுகாப்பதும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களாலேயாகும்.

விஞ்ஞானத்தின் விந்தைகள் யாவும் வியப்பிற்குரியது. மனித வாழ்வியலோடு


பின்னிப்பிணைந்து தவிர்க்க முடியாததுமாக விஞ்ஞானம் இரண்டறக் கலந்துள்ளது .எனவே
விஞ்ஞானத்தின் சரியான பாவனை⸴ சரியான திசையை நோக்கிய நகர்வு போன்றன உலகில்
தொடர்ச்சியான நிலவுகைக்கு உறுதுணையாக அமையும்.

You might also like