Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

d ராஜினாமா நெருக்கடி?

எடுபடுமா மோடி முழக்கம்-


ஸ்ரீதேவியின் வேதனை வலி|
விகடன்
ஹைலைட்ஸ்vbdfabdxdndsftn
btgndkg
 Share

அன்பில் மகேஷுக்கு ராஜினாமா நெருக்கடி?எடுபடுமா மோடி


முழக்கம்-ஸ்ரீதேவியின் வேதனை வலி|விகடன் ஹைலைட்ஸ்

1
அன்பில் மகேஷ்

'கள்ளக்குறிச்சி டு கல்வி டிவி வரை


சொதப்பல்..!' - அன்பில் மகேஷுக்கு
ராஜினாமா நெருக்கடி?

பொதுவாக ஒரு அமைச்சர் ஏதாவது ஒரு பிரச்னை அல்லது


விவகாரத்தை தவறாக கையாண்டலோ அல்லது பணியில்
சொதப்பினாலோ அவரை ராஜினாமா செய்யக்கோரி
எதிர்க்கட்சியினர் தான் குரல் எழுப்புவார்கள். ஆனால் தமிழகத்தில்
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எதிராக
திமுக ஆதரவாளர்களிடமிருந்தே #Resign_AnbilMahesh என ட்விட்டரில்
கொந்தளிப்பு குரல்கள் எழுந்திருப்பதுதான் அந்தக் கட்சித்
தலைமையை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

சர்ச்சையைக் கிளப்பிய கல்வி டி.வி நியமனம்

* விவகாரத்துக்கு அடிப்படை காரணம், தமிழ்நாடு அரசு கல்வி


தொலைக்காட்சியின் முதன்மை செயல் அதிகாரியாக (CEO)
மணிகண்ட பூபதி என்பவர் நியமனம் செய்யப்பட்டதுதான்.

இந்த நியமனம் குறித்த அறிவிப்பு இரு தினங்களுக்கு முன்னர்


வெளியானபோதே,

* இது குறித்த முணுமுணுப்புகள் திமுகவினரிடையே, குறிப்பாக


ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திமுக
ஆதரவாளர்களிடமிருந்து எழுந்தது.

* " மணிகண்ட பூபதி ஒரு தீவிர வலதுசாரி ஆதரவாளர். கடந்த


காலங்களில் அவர் தனது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை பல
வழிகளில் வெளிப்படுத்தி உள்ளார். மேலும் திமுக-வுக்கு எதிராகவும்
பேசி உள்ளார்.

* கூடவே இவர் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு


ஆதரவான கருத்தியலைக் கொண்டவர். இவை எல்லாவற்றுக்கும்
மேலாக வலதுசாரி ஆதரவாளரான ரங்கராஜ் பாண்டே நடத்தும் யூ
டியூப் சேனலுக்கு எல்லாமுமாக இருப்பவர்.

* இவரை எப்படி திராவிட மாடல் ஆட்சி நடத்துவதாக


கூறுபவர்கள், கல்வி தொலைக்காட்சியின் முதன்மை செயல்
அதிகாரியாக நியமித்தார்கள்..?

வேறு திறமை வாய்ந்தவர்கள் இல்லையா?

* இந்த பதவிக்கு திறமை வாய்ந்த வேறு பலர் விண்ணப்பித்த


நிலையில், அவர்களை நேர்காணலுக்குக் கூட அழைக்காமல், எந்த
தகுதியின் அடிப்படையில் மணிகண்ட பூபதி நேரடியாக
நியமிக்கப்பட்டார்?

* தமிழக அரசின் கல்விக் கொள்கைக்கு ஆதரவான திறமையான


ஒருவர் கூடவா இந்தப் பதவிக்கு நியமிக்க தகுதி இல்லாதவர்களாக
உள்ளனர்? மொத்தத்தில் தமிழக அரசின் எல்லா முக்கியத்
துறைகளிலும் வலதுசாரி ஆதரவாளர்கள் ஊடுருவி
வருகின்றனர்.

இதற்காகவா நாங்கள் தேர்தல் நேரத்தில் பாஜக உள்ளிட்ட


வலதுசாரியினருக்கு எதிராக களமாடி திமுக ஆட்சியைப் பிடிக்க
துணை போனோம்..?

'ஆரம்பம் முதலே சொதப்பல்'

'அன்பில் மகேஷைப் பொறுத்தவரை அவர் கல்வி அமைச்சராக


பதவியேற்றபோது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. தலைமைக்கு
நெருக்கமானவர். அதனால் உடனுக்குடன் பேசி, வேண்டிய
திட்டங்களை விரைவாக செயல்படுத்துவார். பள்ளிக்கல்வித்
துறையில் காணப்பட்ட தேக்க நிலைக்குத் தீர்வு ஏற்படும். அரசு
பள்ளிகளின் தரம் மேம்படும்' என்றெல்லாம் எதிர்பார்த்தோம்.

ஆனால்,

* அன்பில் மகேஷ் உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் ரீதியில்தான்


செயல்பட்டுக்கொண்டிருக்கிறாரே தவிர, அமைச்சருக்கான
செயல்பாட்டில் பெரிய பெர்ஃபாமென்ஸ் எதையும் காட்டவில்லை.

அதுதான் போகிறது... பிரச்னையில்லாமாலாவது செயல்படுகிறாரா


என்றால் அதுவும் இல்லை.

* பல அரசு பள்ளிகளில் இன்னும் பாடப்புத்தகங்களே


கொடுக்கப்படவில்லை. 'இல்லம் தேடி கல்வி திட்ட'த்திலும்
சொதப்பினார்.
* கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரத்தில் அவர்
செயலற்றுப்போய் இருந்தது அரசுக்கு எத்தகைய நெருக்கடியைக்
கொண்டு வந்தது என்பது ஊருக்கே தெரியும்.

இதோ...

* இப்போது கல்வி தொலைக்காட்சியின் சிஇஓ


நியமனத்திலும் திமுகவினரின் மனம் புண்படும்படி
நடந்துகொண்டுள்ளார்..." என்றெல்லாம் கொதிப்புடன் கருத்துகளைப்
பதிவிட்டனர்.

கொதிப்பில் தள்ளிய விளக்கம்

இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில்


மகேஷிடம், இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப்
பதிலளித்த அன்பில் மகேஷ்,

* " ஒருவர் எந்த அமைப்பை சேர்ந்தவர் என்பது முக்கியம் இல்லை.


அவரின் செயல்பாடுகள் மூலமாகதான் பார்க்கவேண்டும்.

* இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டபோது கூட இது


மாதிரியான பல சர்ச்சைகள் எழுந்தது அதையெல்லாம் தகர்த்து
தற்போது அந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது"
என்றார்.

அவ்வளவுதான் கொதிப்பின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர் திமுக


ஆதரவாளர்கள். " இதெல்லாம் முதலமைச்சருக்கு தெரியாமல்
நடக்கிறதா..? முதலமைச்சர் அடிக்கடி சொல்லும் சமத்துவமும்,
சமூகநீதியும் மணிகண்ட பூபதி போன்றவர்களின் தலைமையின்
கீ ழ்தான் மலரப்போகிறதா..? கல்வி துறையும் ,செய்தி மற்றும்
ஔிபரப்பு துறை போன்றவையெல்லாம் யார் கட்டுப்பாட்டில்
உள்ளது.

ட்ரெண்டான #Resign_AnbilMahesh

பாண்டேவிடம் கருத்துகேட்குமளவுக்கு தமிழக கல்வி அமைச்சர்


திறமையற்று இருப்பது தமிழகத்திற்கு மிகவும் ஆபத்து. அவர்
உடனே ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இது
விஷயத்தில் தலையிட வேண்டும்..." என்பது போன்ற
கருத்துகளுடன் #Resign_AnbilMahesh என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில்
இன்று ட்ரெண்டானது.

* இந்த ஹாஷ்டேக்கை ட்ரெண்டாக்கியது திமுக ஆதரவாளர்கள்


ஒருபுறம் என்றால், தீவிர திமுவினரும் இதில் பங்கேற்றதாகத்தான்
ட்விட்டர் ட்ரெண்டிங்கின் போக்கை அவதானிப்பவர்களும், பல்வேறு
கட்சிகளின் ஐடி விங்கைச் சேர்ந்தவர்களும் கூறுகின்றனர்.

* பொதுவாக ஒரு ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகிறது


என்றால், அது யாரால் அதிகம் பகிரப்படுகிறது என்பதை கட்சிகளின்
ஐடி விங்கில் இருப்பவர்கள் எளிதில் கண்டறிந்துவிடுவார்கள். திமுக
ஆதரவாளர்களின் கருத்துகள் ட்விட்டர் தளத்தில் பகிரங்கமாகவே
காணப்படுகிறது.

நிறுத்தப்பட்ட நியமனம்

இவையெல்லாம் திமுகவுக்கு மிகுந்த தர்மசங்கடமான,


நெருக்கடியான நிலையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்த
தகவல்கள், முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டு
செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்தே கல்வி தொலைக்காட்சியின் முதன்மை


செயல் அதிகாரி (CEO) நியமனம் நிறுத்தி
வைக்கப்படுவதாக இன்று அறிவிப்பு வெளியானது. மேலும்,
பதவியேற்க வேண்டாம் என மணிகண்ட பூபதிக்கு வாய்மொழி
உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், இதிலெல்லாம் சமாதானமாகாத திமுக ஆதரவாளர்கள், "


நியமனத்தை நிறுத்தி வைத்தால் மட்டும் போதாது... ரத்து
செய்யவேண்டும்" என வலியுறுத்தி வருகின்றனர்.

திமுக-வைப் பொறுத்தவரை எதிர்க்கட்சிகளின் அரசியலை


எதிர்கொண்டு சமாளித்து விடும். ஆனால், கொள்கைக்கு மாறான
அரசியலை நோக்கித் திரும்பும்போது திமுக ஆதரவாளர்களே அந்தக்
கட்சியை பின்னியெடுப்பதுதான் திமுகவுக்கே இருக்கும் பிரத்யேக
நெருக்கடி!

You might also like